Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

தங்க இதயம்

பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

28 ஜனவரி 2023

2,300 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்து நாகரிகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்த பதின்ம வயது சிறுவன் ஒருவரின் உடல் தங்க இதயத்துடன் பதப்படுத்தப்பட்டிருப்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14 அல்லது 15 வயதில் இறந்ததாகக் கருதப்படும் இந்த சிறுவனின் உடல் 1916ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டு, கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்சியகத்தில் டஜன் கணக்கான மம்மிகளுடன் வைக்கப்பட்டிருந்தது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உடல் வல்லுநர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், கெய்ரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஹர் சலீம் தலைமையிலான குழு சிடி ஸ்கேனரை பயன்படுத்தி மம்மியை ஆய்வு செய்தபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது. இந்த உடலில் 21 வகையான 49 தாயத்துகள் இருந்தது இந்தச் சோதனையில் தெரியவந்துள்ளது. அதில், பெரும்பாலானவை தங்கத்தால் ஆனவை. இதன் காரணமாகவே இந்த மம்மிக்கு `தங்க பையன்` என்று பெயரிட்டதாக ஃப்ரென்டியர்ஸ் இன் மெடிசின்(Frontiers in Medicine) என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையில் சலீம் கூறியுள்ளார்.

மறைந்திருந்த பொக்கிஷம்

ஆரோக்கியமான பற்கள் மற்றும் எலும்புகள் கொண்டுள்ள இந்தச் சிறுவனிடம் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது எந்தவித நோய் பாதிப்பும் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை.

மேலும், உயர்தரம் வாய்ந்த பதப்படுத்தல் செயல்முறை மூலம் அவரது உடலின் எச்சங்கள் பதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஸ்கேன் முடிவுகள் இந்தச் சிறுவன் உயர்வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை உறுதிசெய்துள்ளது. அந்த இளைஞனின் உடலை மூடியிருந்த உறைக்குக் கீழே இரண்டு விரல்கள் அளவிற்கு நீளம் கொண்ட ஒரு பொருள் முன்தோல் நீக்கப்படாத ஆண்குறிக்கு அருகில் இருந்தது. மேலும், வாயில் ஒரு தங்க நாக்கு இருந்தது.

மறைந்திருந்த பொக்கிஷம்

பட மூலாதாரம்,COURTESY SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

மறுபிறவியில் பாதுகாப்பு மற்றும் சக்தி கிடைப்பதற்காக இறந்தவர்கள் சடலத்தின்மீது தாயத்துகளை வைக்கும் பண்டைய எகிப்தியர்களின் சடங்கை சலீம் நினைவுகூர்ந்தார். இறந்தவருக்கு மறுபிறவியில் பேசும் திறன் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக தங்க நாக்குகள் வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். தெற்கு எகிப்தின் எட்ஃபு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தாலமிக் கால பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் (கி.மு. 332-30) கருதப்படும் இந்த மம்மி, பிரிட்டிஷ் ஹோவர்ட் கார்ட்டரால் கிங்ஸ் பள்ளத்தாக்கில் துட்டகாமனின் கல்லறை கண்டுபிடிக்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. இந்த எச்சங்கள் இரண்டு சவப்பெட்டியால் பாதுகாக்கப்பட்டிருந்தன. உட்பகுதி மரத்தால் செய்யப்பட்டிருந்தது. வெளிப்புறத்தில் கிரேக்க மொழியில் எழுத்துகள் இருந்தன. அதோடு, அதன் தலையில் தங்க முகமூடியும் இருந்தது.

முறையாக ஆய்வு செய்ய வேண்டும்

இந்தக் கண்டுபிடிப்பை பல புதிய கண்டுபிடிப்புகளுக்கான முன்னோட்டமாக சலீம் கருதுகிறார். ``19 மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எகிப்தில் நடந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பண்டைய உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவற்றில் பல இன்னும் திறக்கப்படாமல் சவப்பெட்டிகளுக்குள் உள்ளன" என்கிறார் சலீம். '`1835ஆம் ஆண்டு கெய்ரோவில் தொடங்கப்பட்ட எகிப்து அருங்காட்சியகம் இது மாதிரியான கண்டுபிடிப்புகளின் களஞ்சியமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதன் அடித்தளம் முறையாக ஆய்வு செய்யப்படாமல் அல்லது காட்சிப்படுத்தப்படாமல் பல தசாப்தங்களாக பூட்டிவைக்கப்பட்டிருக்கும் இது போன்ற மம்மிகளால் நிறைந்துள்ளது,`` என்றும் அவர் கூறினார்.

மம்மி

பட மூலாதாரம்,SN SALEEM, SA SEDDIK, M. EL-HALWAGY

கடந்த காலங்களில், மம்மிகளில் இருந்து கவச உறைகள் அகற்றப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக அவை சிதைக்கப்பட்டதாக சலீம் கூறுகிறார். ஆனால், தற்போதுள்ள கம்ப்யூட்டட் டோமோகிராஃபி (computed tomography) நுட்பம், மம்மிகளை சேதப்படுத்தாமல் ஆய்வு செய்ய ஒரு சிறந்த கருவியாக மாறும் என்றும், இது பண்டைய கால மனிதர்களின் ஆரோக்கியம், நம்பிக்கைகள் மற்றும் திறன்கள் குறித்து கூடுதலாக ஆராயவும் உதவும் என்கிறார் சலீம். "கம்ப்யூட்டட் டோமோகிராஃபி கதிரியக்க துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஒரு படத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இதன் மூலம் உடலின் சிறு பகுதிகளின் நூற்றுக்கணக்கான கணிப்புகளை ஒன்றிணைத்து முழுமையான முப்பரிமாண மாதிரியை உருவாக்க முடியும்" என்றும் சலீம் கூறுகிறார்.

தங்க இலையால் மூடப்பட்ட மம்மி

சக்காரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

4,300 ஆண்டுகளாக திறக்கப்படாத சவப்பெட்டியில் இருந்து தங்க இலையால் மூடப்பட்ட மம்மி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழனன்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஹெகாஷெப்ஸ் என்ற மனிதரின் எச்சமான இந்த மம்மி, இதுவரை எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான மற்றும் அரசர் அல்லாதவரின் சடலமாகக் கருதப்படுகிறது. இது, தெற்கு கெய்ரோவில் சக்காரா என்ற இடத்தில் அமைந்துள்ள ஓர் இடுகாட்டில் 15 மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது. அங்கு வேறு மூன்று கல்லறைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரகசியக் காப்பாளரின் கல்லறை. பண்டைய நெக்ரோபோலிஸில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளில் மிகப் பெரிய மம்மி, க்னும்ட்ஜெடெஃப் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. இவர் பாதிரியார் மற்றும் அரண்மனைகளின் மேற்பார்வையாளர்.

மற்றொரு கல்லறை மெரி என்பவருக்குச் சொந்தமானது. இவர் அரண்மனையில் ரகசியக் காப்பாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர். மற்றொரு கல்லறை நீதிபதியும் எழுத்தாளருமான ஃபெடெக் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. இதுவரை கண்டெடுக்கப்பட்டதில் மிகப்பெரிய மம்மிகளாக கருதப்படும் பல மம்மிகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்லறைகளோடு மண்பாண்டங்கள் உட்பட பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எகிப்தின் முன்னாள் தொல்லியல் துறை அமைச்சரும் தொல்லியல் ஆராய்ச்சியாளருமான ஜாஹி ஹவாஸ், இவை அனைத்தும் கிமு.25 முதல் 22 காலகட்டத்தைச் சேர்ந்தது என்கிறார்.

"அரசர்களை அவர்களைச் சுற்றியுள்ள மக்களுடன் இணைப்பதால் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது," என்கிறார் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட மற்றொரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலி அபு தேஷிஷ். சக்காரா 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பரபரப்பாக இயங்கிய இடுகாடாகும். யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அங்கீகாரம் பெற்ற இந்தத் தளம், பண்டைய எகிப்து தலைநகர் மெம்பிஸில் அமைந்துள்ளது. ஸ்டெப் பிரமிடு உட்பட ஒரு டஜனுக்கும் மேலான பிரமிடுகள் இங்கு உள்ளன. தெற்கு எகிப்திய நகரமான லக்சரில் ரோமானிய காலத்தைச் சேர்ந்த ஒரு முழுமையான குடியிருப்பு நகரத்தைக் கண்டுபிடித்ததாக வல்லுநர்கள் கூறியதற்கு மறுநாள், இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களது சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அண்மைய ஆண்டுகளில் பல முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்புகளை எகிப்து அறிவித்துள்ளது. இந்தாண்டு திறக்கப்பட உள்ள பிரமாண்ட எகிப்து அருங்காட்சியகம், 2028ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 30 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது. ஆனால், விரிவான ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாமல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஊடக கவனம் பெறும் கண்டுபிடிப்புகளில் எகிப்து கவனம் செலுத்துவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c9wrzlx81jgo

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை இப்பொழுது அந்தப் பையன் நானாகவும் இருக்கலாம் .......காரணம் என் மனசு முழுக்க தங்கமாக இருப்பதுபோல் உணர்கிறேன்.......!  😁

நன்றி ஏராளன் ........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

ஒருவேளை இப்பொழுது அந்தப் பையன் நானாகவும் இருக்கலாம் .......காரணம் என் மனசு முழுக்க தங்கமாக இருப்பதுபோல் உணர்கிறேன்.......!  😁

நன்றி ஏராளன் ........!

அண்ணை அம்மாவா ஆத்துக்காறியா தங்கமே என்று கூப்பிடுவாங்க?!

  • கருத்துக்கள உறவுகள்

3300 வருசத்துக்கு முன்னர், எகிப்தினை ஆண்ட 3ம் ராமெசேஸ் மன்னரின் பதப்படுத்தப்பட உடல் கண்டெடுக்கப்பட்டபோது, எகிப்திய ஜனாதிபதி, பிரெஞ்சின் ஜானதிபதியுடன் செய்துகொண்ட உடன்படிக்கை ஒன்றின் படி, மம்மி பாரிஸ் கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உள்ளானது. 3ம் ராமெசேஸ் மன்னரின், அந்த மம்மியின் பதப்படுத்தலில், அதனது மூக்கினுள் மிளகு திணிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

இதுவே, தமிழனின் மிளகு, 3300 வருடங்களுக்கு முன்னர் ஏற்றுமதி ஆகி இருந்தது என்பதன் மிக முக்கிய ஆதாரம்.

ஏனெனில், சங்கத்தமிழ் என்று, 2300 வரை இருந்த தமிழர் வரலாறு, கீழடி ஆய்வின் மூலம், 2600 வருடங்கள் என்று பின்னோக்கி நகர்கிறது. ஆனால் 3300 வருட இந்த சான்று, தமிழரிடம் இல்லாத வரலாறை சொல்கிறது. 5000 வருடங்கள் பின்னோக்கியும் செல்லக்கூடும். யாருக்கு தெரியும்.

விபரம் சொல்லும் கீழே உள்ள லிங்க், இந்திய அரசின் உத்தியோகப்பூர்வமானது.

என்ன விடயம் என்றால், தமிழனின் வியாபாரத்தினை இல்லாத இந்தியா செய்ததாக சொல்கிறார்கள்.

https://indianculture.gov.in/food-and-culture/spices-herbs/black-pepper-king-spices#:~:text=There is a narrative about,how old this spice is!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்து  பட்டுப் பாதை என்று அழைக்கப் பட்ட மத்திய ஆசியாவினூடாக நகர்ந்த வர்த்தகப் பாதையின் மேற்குக் கிளைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது.  தென்னாசியாவில் உருவான தாவரமாக இருந்தாலும், மிளகு இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருந்தது, பின்னர் சீனாவிற்கும் பரவியிருந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம்.

https://en.unesco.org/silkroad/countries-alongside-silk-road-routes/egypt

  • கருத்துக்கள உறவுகள்

நாம, ஆராய்ந்து எழுதிய இந்திய மத்திய அரசுக்கும், IIT Bombay கும், Indira Gandhi National Open University கும் பாடம் எடுப்போமில்ல... 🤦‍♂️ 😎😁

போர்த்துக்கேயர், தமிழரிடம் இருந்து கொண்டுபோன மிளகு, மாம்பழம் இப்ப பெருமளவில் பிரேசில் நாட்டில் விளைவிக்கப்படுகிறது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

நாம, ஆராய்ந்து எழுதிய இந்திய மத்திய அரசுக்கும், IIT Bombay கும், Indira Gandhi National Open University கும் பாடம் எடுப்போமில்ல... 🤦‍♂️ 😎😁

போர்த்துக்கேயர், தமிழரிடம் இருந்து கொண்டுபோன மிளகு, மாம்பழம் இப்ப பெருமளவில் பிரேசில் நாட்டில் விளைவிக்கப்படுகிறது. 

பாடம் எடுப்பது கேட்கும் செவியுள்ளோருக்கு மட்டுமே, அதனால் தான் உங்களை மேற்கோள் காட்டாமலே  எழுதியிருக்கிறேன் மேலே😎. நீங்கள் குறிப்பிட்ட 3 மூலங்களில் "தமிழரின் மிளகு" என்று ஆய்ந்து எழுதியிருந்தால் அறியத் தாருங்கள், பேசலாம்.

போர்த்துக்கேயர் தமிழரைச் சந்தித்தது எகிப்திற்கு மிளகு (கரு மிளகு?) போய் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்தால், "மிளகு தமிழருடையதா?" என்ற நியாயமான கேள்வி எழத் தான் செய்யும்!

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவாதம் செய்வதற்கு என்றே இங்கு பலர் கிளம்பி, ஓடி வருகிறார்கள்..🤦‍♂️

இந்திய மத்திய அரசு, தெளிவாக கேரளா என்று சொல்கிறது. கொஞ்சமாவது தமிழன் வரலாறு புரிந்தால், சேர, சோழ பாண்டியர்களில், சேரர்கள் தான் இன்றய கேரளாகாரர்கள் என்பது புரியும். இதனையே மத்திய அரசு சொல்கிறது. அவர்களுக்கு பாடம் எடுக்க, நமக்கு பட்டுப்பாதை உதாரணம். 

அட. அட.... சரிதான்... 😁

கேரளத்தின் பேறாரின் கரையின் முசிறி துறைமுகம் ஊடாக மிளகு வியாபாரம் நடந்தது என்றும், சங்கத்தமிழ் நூல்களில், சுமார் 22 கவி வரிகளில், 3ல் மிளகு என்றும், 19ல் மிளகினை கறி என்றும் சொல்லட்டுள்ளது. 

விசயம் புரிந்து கருத்தாடினால் நல்லது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

படபடக்காதீர்கள் நாதம்😂, கேரளக் கரைக்கு வந்த அரேபிய வியாபாரிகளால் மிளகு போயிருக்கலாம். ஆனால், கேரளக்கரை மிளகு தான் எகிப்தில் கிடைத்த மிளகென்று எப்படிப் பாலம் போட்டீர்கள்? முடியாதல்லவா? அதனால் தான் நிபுணர்கள் இதை மேலும் ஆராயும் வரை "தமிழரின் மிளகென்று சொல்ல முடியாது" என்றேன்.
 
நேரடியாக அறியக் கூடிய ஒரு முறை இருக்கிறது. அந்த ராம்சிஸ் 2 இன் மூக்கில் கிடைத்த கரு மிளகை DNA sequencing செய்யலாம். அப்படியே 2600 ஆண்டுகள் கடந்து கீழடியில் கிடைக்கப் போகும் மிளகின் கரு அமிலத்தையும் DNA sequencing செய்யலாம். இரண்டையும் SNP அடிப்படையில் ஒப்பிட்டால், ஒற்றுமை தெரிந்து விடும். இப்படி யாராவது செய்திருக்கிறார்களா? செய்யவில்லையென்றால் செய்ய வேண்டும். அது வரை கிழக்கிலிருந்து சென்ற மிளகு என்று மட்டும் தான் சொல்ல முடியும், மேலதிக எதுவும் கற்பனையாக மட்டுமே இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

அட, இதை இந்திய மத்திய அரசுக்கு சொல்லி விட்டால், ஆயிரம் பொற்காசு கிடைக்குமே. 😲

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Nathamuni said:

3ம் ராமெசேஸ் மன்னரின், அந்த மம்மியின் பதப்படுத்தலில், அதனது மூக்கினுள் மிளகு திணிக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

எழுதும் போது, நினைத்தேன். வந்து இப்படி எழுதுவீர்கள் எண்டு... 😁

உங்கை ஒருத்தர், மிளகுக்கே DNA செய்வினை, சூனியம் செய்யனுமாம் எண்டு ஐடியா சொல்லுறாரே... 😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, Nathamuni said:

எழுதும் போது, நினைத்தேன். வந்து இப்படி எழுதுவீர்கள் எண்டு... 😁

உங்கை ஒருத்தர், மிளகுக்கே DNA செய்வினை, சூனியம் செய்யனுமாம் எண்டு ஐடியா சொல்லுறாரே... 😜

அந்த மனிசனை விடுங்கோ....அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கே போய் ஆராய்ச்சி செய்யுதுட்டு வந்த ஆள் மாதிரி கதைப்பார் கண்டியளோ :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

அந்த மனிசனை விடுங்கோ....அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கே போய் ஆராய்ச்சி செய்யுதுட்டு வந்த ஆள் மாதிரி கதைப்பார் கண்டியளோ :rolling_on_the_floor_laughing:

இந்த விசயமெல்லாம் செவ்வாய்க்குப் போகாமலே பேசக் கூடிய விடயங்கள் தான், ஆனால் நீங்கள் கையில் இருக்கிற போனுக்குள்ளேயே போய்த்தேட மாட்டியளே? அப்ப நாதம் காதில் பூ வைப்பாரா இல்லையா?😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

நான் சொல்லல.....சிங்கனுக்கு உறைப்பு விசயத்திலை ஆரோ செய்வினை செய்து போட்டாங்கள் எண்டு :rolling_on_the_floor_laughing:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

அது பரவாயில்லை.... மிளகு தமிழர்களிடம் மட்டுமே இருந்தது என்று பிபிசி முதல் ஏபிசி வரை டாக்குமெண்டரி போடுகினம்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களில் சேரரின் வழித்தோன்றலான மலையாளிகள். இந்த அஞ்சாப்பு விளக்கமே இல்லாமல், தமிழர் மிளகு எண்டு போட்டிருக்கே எண்டால் எனனத்தை சொல்லுறது?

தமிழகம் எங்கும் விளைந்த மிளகு, அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், மலேயர், சியாமியர் (தாய்) என்று, தமிழகத்துக்கு வந்து மிளகு உள்பட வாசனை திரவியங்கள் வாங்க வந்துள்ளனர். கொலம்பஸ் கிளம்பியதும்,  போர்த்துக்கேயர் வந்ததும், மிளகை தேடி. 

இதனை, இந்திய அரசின் தளம் சொல்கிறது என்றாலும், பெரிசு, முசிறிக்கொண்டு விதண்டாவாதம் செய்யிறன், முயலுக்கு மூண்டு கால் தான் என்று நிக்குதப்பா. 😅

சீனாக்காரர், அல்லைபிட்டியில், தாங்கள் 11ம் நூறாண்டில் அங்கை தங்கி இருந்து யாவாரம் பார்த்தோம் எண்டு வந்து நிண்டு கிண்டினார்களே. இவர், அவையளிடம் மிளகு இருந்திருக்கலாமாம்.

மிளகின் பிரச்சனை, நாம் பாவிக்கும் அந்த மிளகு பருப்புகளை போட்டு விளைவிக்க முடியாது. அதுவே இவ்வளவு பேரும் தமிழரிடம் ஓடி வந்ததுக்கு காரணம். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி  எல்லா திரிக்குள்ளு,ம்  புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵

பாவம் மனுசன் என்ன சோலியோ :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

அது பரவாயில்லை.... மிளகு தமிழர்களிடம் மட்டுமே இருந்தது என்று பிபிசி முதல் ஏபிசி வரை டாக்குமெண்டரி போடுகினம்.

பண்டைய தமிழ் மூவேந்தர்களில் சேரரின் வழித்தோன்றலான மலையாளிகள். இந்த அஞ்சாப்பு விளக்கமே இல்லாமல், தமிழர் மிளகு எண்டு போட்டிருக்கே எண்டால் எனனத்தை சொல்லுறது?

தமிழகம் எங்கும் விளைந்த மிளகு, அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், மலேயர், சியாமியர் (தாய்) என்று, தமிழகத்துக்கு வந்து மிளகு உள்பட வாசனை திரவியங்கள் வாங்க வந்துள்ளனர். கொலம்பஸ் கிளம்பியதும்,  போர்த்துக்கேயர் வந்ததும், மிளகை தேடி. 

இதனை, இந்திய அரசின் தளம் சொல்கிறது என்றாலும், பெரிசு, முசிறிக்கொண்டு விதண்டாவாதம் செய்யிறன், முயலுக்கு மூண்டு கால் தான் என்று நிக்குதப்பா. 😅

சீனாக்காரர், அல்லைபிட்டியில், தாங்கள் 11ம் நூறாண்டில் அங்கை தங்கி இருந்து யாவாரம் பார்த்தோம் எண்டு வந்து நிண்டு கிண்டினார்களே. இவர், அவையளிடம் மிளகு இருந்திருக்கலாமாம்.

மிளகின் பிரச்சனை, நாம் பாவிக்கும் அந்த மிளகு பருப்புகளை போட்டு விளைவிக்க முடியாது. அதுவே இவ்வளவு பேரும் தமிழரிடம் ஓடி வந்ததுக்கு காரணம். 

😎ஆறாம் வகுப்பு பாசான நாதத்திற்கு இன்னும் நான் சொன்னது விளங்கவில்லை  (நான் அஞ்சாப்பு என்பதாலோ தெரியேல்ல!)

மூக்கில் இருந்த மிளகு எங்கிருந்தும் வந்திருக்கலாம். இட்லி , ரசம், சாம்பாரு, கறி, மிளகு எல்லாம் தமிழனுடையது என்று உரிமை கோர கோராவில் வரும் தகவல்கள் போதாது சீனியர் (ஆறாம் வகுப்பு, ஒரு லெவல் கூடவெல்லோ!😉).

எனவே, அந்த மூன்று ரசிகர்களின் காதிலயும் பூந்தோட்டம் வையுங்கள் - மிச்ச பேர் உங்களை விட பல கிளாசுகள் மேல் என்பதால் பார்த்து அணுகுங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

பூக்கூடை, பூந்தோட்டம் இருக்கட்டும். அடுத்தவர் காதில, வெறும் காத்தை ஊதாமல், தமிழரை தவிர வேறு யாரிடம், மிளகு இருந்தது எண்டதை ஆதாரத்தோட சொல்லுங்க.

அதை விட்டுட்ட, சாப்பாடு செமிக்க, சும்மா வேற யாரிடமாவது மிளகு இருந்திருக்கலாம் எண்டு அலம்பறை பண்ணப்படாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன்ரை சாப்பாடு பழஞ்சோறு மட்டும் தானா? ஓ மை காட்....:beaming_face_with_smiling_eyes:

யுவர் ஆனர் புட்டு என்னமாதிரி???? ஆர்ரை வழித்தோன்றல்  :rolling_on_the_floor_laughing:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Golden tongue Mummy: தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.