Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு

By SETHU

01 FEB, 2023 | 12:16 PM
image

உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து தான் சிந்திப்பதாகவும் உக்ரேன் விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தராக செயற்பட விரும்புவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். 

ரஷ்யாவுடன் இஸ்ரேல் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான சிரியாவின் வான் பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் ரஷ்யா கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு நெத்தன்யாஹு நேற்று அளித்த செவ்வியொன்றில், ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கத் தொழில்நுட்பத்துடனான அயர்ன்டோம் வான் பாதுகாப்பு பொறிமுறை போன்றவற்றை உக்ரேனுக்கு இஸ்ரேல் வழங்குமா என கேட்கப்பட்டது.

அப்போது, நிச்சயமாக நாம் இதை ஆராய்கிறோம்' என நெத்தன்யாஹு பதிலளித்தார். 

இஸ்ரேலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆர்டிலெறிகளை யுக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக நெத்தன்யாஹு கூறினார்.

அதேவேளை, யுக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படும், ஈரானினால் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை தான் இங்கு பட்டியலிடப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

குறைந்த விலை ஆளற்ற விமானங்களை, உக்ரேன் மீதான படையெடுப்புக்காக ரஷ்யாவுக்கு ஈரான் விற்பனை செய்ததாக யுக்ரைனுக்கும் மேற்குலக நாடுகளும் கூறுகின்றன. ஆனால், இதை ஈரான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர், உத்தியோகபூர்வமற்ற வகையில் மத்தியஸ்தர் பாத்திரம் வகிக்குமாறு தான் கோரப்பட்டதாகவும், ஆனால், அப்போது தான் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்ததால் அதை தன்னால் செய்ய முடியவில்லை எனவும் எனவும் நெத்தன்யாஹு கூறினார். 

எனினும், சம்பந்தப்பட்ட தரப்புகளும் அமெரிக்காவும் கோரினால் அதை தான் ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/147172

 @வாலி 

@வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு

குடுக்காமல் விடுறது தான் நல்லது கண்டியளோ....அவ்வளவுக்கு ஊழல் லஞ்சம் எக்கச்சக்கமாம்......இத நான் சொல்லல.....:cool:

உக்ரைன்: ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ரெய்டுகள்
உக்ரைன் புதிய சோதனைகள் மூலம் நாட்டில் ஊழலுக்கு எதிரான அதன் ஒடுக்குமுறையை தொடர்ந்தது. ஒரு மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, ஒரு தன்னலக்குழு மற்றும் முன்னாள் மந்திரியின் வீடுகள் மற்றும் தலைநகர் கீவில் உள்ள வரி அலுவலகங்கள் புதன்கிழமை சோதனை செய்யப்பட்டன.

உக்ரேனிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கட்சியின் பிரிவுத் தலைவர் டேவிட் அராகாமியா, கோடீஸ்வரர் இகோர் கொலோமொய்ஸ்கி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ஆர்சன் அவகோவ் ஆகியோரின் வீடுகள் சோதனை செய்யப்பட்டதாக ஆன்லைன் சேவைகளில் எழுதினார். மேலும், சுங்கத்துறை நிர்வாகமும் பணி நீக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட பிரதிநிதிகளும் புலனாய்வாளர்களின் வருகைகளைப் பெற்றுள்ளதாக அராச்சமியா கூறினார்.

உக்ரேனிய இராணுவத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல துணை அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கடந்த வாரம் ராஜினாமா செய்தனர் அல்லது நீக்கப்பட்டனர்.

 

Ukraine: Razzien im Kampf gegen Korruption

Die Ukraine hat mit neuen Razzien ihr Vorgehen gegen die Korruption im Land fortgesetzt. Dabei wurden Angaben eines hohen Behördenvertreters zufolge am Mittwoch die Wohnhäuser eines Oligarchen und eines ehemaligen Ministers sowie Steuerbüros in der Hauptstadt Kiew durchsucht.

Der Fraktionsvorsitzende der Partei von Präsident Wolodymyr Selenskyj im ukrainischen Parlament, David Arachamia, schrieb in Onlinediensten, dass unter anderem die Häuser von Milliardär Igor Kolomoisky und Ex-Innenminister Arsen Awakow durchsucht worden seien. Zudem sei die Leitung der Zollbehörde entlassen worden. Auch hohe Vertreter des Verteidigungsministeriums hätten Besuch von Ermittlern erhalten, teilte Arachamia mit.

Infolge eines mutmaßlichen Korruptionsskandals in der ukrainischen Armee waren vergangene Woche mehrere Vize-Minister, Gouverneure und hochrangige Beamte zurückgetreten oder entlassen worden.

https://www.bild.de/news/2022/news/russland-krieg-gegen-ukraine-aktuell-im-liveticker-79328978.bild.html#63da67fe8c29c712b983eba2

  • கருத்துக்கள உறவுகள்

போர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.