Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம்: உதட்டோடு உதடு சேரும் அந்த முதல் முத்தம் நமக்குச் சொல்வது என்ன?

7 மணி நேரங்களுக்கு முன்னர்
முத்தம்

பட மூலாதாரம்,STRELCIUC DUMITRU / GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

காதல் திரைப்படங்களால் உந்தப்பட்டதாலோ அல்லது இவர்தான் நமக்கான நபர் என்று அறிவதற்கு சிறந்த வழியாக இருப்பதாலோ, முதல் முத்தத்தின் மீது நாம் அதிக மதிப்பு வைக்கிறோம். முத்தமிடுதல் ஏன் அவ்வளவு சிறந்தது?

முதல் காரணம், குழந்தையாகப் பிறந்ததில் இருந்தே உதட்டின் மூலம் தொடுவது நமக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. தாய்ப்பால் அருந்தும் காலம் முதலே நம்முடைய உதடு இத்தகைய பழக்கத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் பழக்கம் மீது மனிதர்களுக்கு இயல்பாகவே விருப்பம் ஏற்படுவதற்கு ஏற்ப நாம் சில மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளோம் என்ற பார்வையும் உள்ளது.

ஏனெனில், நாம் பரிணாம வளர்ச்சி அடைவதற்கு முன்பு, தாய்ப்பால் ஊட்டும் காலத்திற்கு முன்பு, தாய் முதலில் உணவைத் தன் வாயால் மென்று அதைக் குழந்தைக்குத் தன் வாயாலேயே ஊட்டுவார். ப்ரீமாஸ்டிகேஷன் (premastication) என இது அழைக்கப்படுகிறது. இது, மனிதக்குரங்கு இனத்தில் நன்கு அறியப்பட்ட பழக்கமாக உள்ளது.

 

இரண்டாவதாக, நம் உடலில் உணர்திறன் அதிகம் உள்ள பகுதி உதடு. அதை நாம் ஆடையால் மூடுவது இல்லை.

மானுடவியல் அறிஞர் வில்லியம் ஜான்கோவியாக் கூறுகையில், "நாம் அதிகமான ஆடைகளை அணியும்போது நாம் அதிகமாக முத்தமிடுகிறோம். குறைவான ஆடைகளை அணியும்போது குறைவாகவே முத்தமிடுகிறோம்," என்றார்.

பழங்குடியினரின் முத்தம்

ஆனால், இதற்கு ஒரு சுவாரஸ்யமான விதிவிலக்கு ஒன்று உள்ளது. நாம் வேட்டையாடி உணவு சேகரிக்கும் சமூகமாக இருந்தபோது முத்தமிடுதல் குறித்த சான்றுகள் இல்லை. ஆனால், விதிவிலக்காக ஆர்க்டிக் பிரதேசத்தில் வாழும் இன்யூட் பழங்குடியினர் (inuit) உள்ளனர்.

வேட்டையாடி உணவு சேகரிக்கும் சமூகமாக, அவர்களிடத்தில் மட்டுமே முத்தமிடும் பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 'ஓசியானிக் முத்தம்' (Oceanic kiss) எனப்படுகிறது. அதாவது, மூக்கோடு மூக்கை உரசி முத்தமிடுவது, உதட்டோடு உதடு அல்ல.

முத்தம்

பட மூலாதாரம்,TIM ROBBERTS / GETTY IMAGES

ஏன் அவ்வாறு செய்கின்றனர்?

மற்ற பகுதிகளில் உள்ள வேட்டையாடி உணவு சேகரிக்கும் பழங்குடியினர் ஆடைகளை அணிவதில்லை. இதனால், உடலின் வேறு எந்தப் பகுதி மூலமாகவும் அவர்களால் சிற்றின்பத்தை அனுபவிக்க முடியும். மாறாக, ஆடைகளை அணியும்போது சிற்றின்பத்திற்காக நாம் தொட்டுணரக்கூடிய பகுதியாக நமது முகம் மட்டுமே உள்ளது. இன்யூவட் பழங்குடியினர் ஆடைகளை அணிகின்றனர்," என்கிறார்.

கடைசியாக, முத்தமிடுவதற்கு பரிணாம நோக்கம் இருந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும்போது வாசனை மூலம் அவர்களின் நடத்தை குறித்த குறிப்புகளைப் பெறுகிறோம். இந்தக் கடைசி காரணமே, உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுவது ஏன் பொதுவான மனித நடத்தை இல்லை என்பதை உணர்த்துகிறது.

ஒட்டுமொத்த கலாசாரங்களில் பாதிக்கும் குறைவான கலாசாரங்களிலேயே உதடுகளின் மூலம் முத்தமிடுகின்றனர் என ஓர் ஆய்வு கூறுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள 168 கலாசாரங்களில் 46% கலாசாரங்களில் மட்டுமே காதல் நோக்கத்துடன் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுகின்றனர் என, வில்லியம் ஜான்கோவியாக் கண்டறிந்துள்ளார்.

முத்தம்

பட மூலாதாரம்,TARA MOORE / GETTY IMAGES

"முத்தமிடுவதைத் தவிர்த்தும் கூட மனிதர்கள் சிற்றின்பத்தை அடைவதற்குப் பல வழிகள் உள்ளன என்பதைத்தான் இது காட்டுகிறது. பெரும் சிக்கல் நிறைந்த சமூகத்தில் முத்தமிடும் வழக்கம் அதிகம் இருப்பதைக் காணலாம்," என்கிறார், வில்லியம்.

3,500 ஆண்டுகள் பழமையான இந்து வேத சமஸ்கிருத நூல்களில் முத்தமிடும் பழக்கம் குறித்த சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

முத்தம் தொடர்பான விநோத பழக்கங்கள்

'தி சயின்ஸ் ஆஃப் கிஸ்ஸிங்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஷெரில் ஆர். கிர்ஷென்பௌம் கூறுகையில், "உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் பழக்கம் பல கலாசாரங்களில் உள்ளது. டார்வின் குறிப்பிட்ட 'மலேய் முத்தத்தில்' (Malay Kiss) பெண்கள் தரையில் அமர்ந்தும் ஆண்கள் ஒருவிதத்தில் தொங்கிக்கொண்டும், ஒருவரையொருவர் நுகர்ந்து பார்ப்பார்கள். தன் துணையின் வாசனையை அறிவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

முத்தம்

பட மூலாதாரம்,MALTE MUELLER / GETTY IMAGES

என்னுடைய ஆய்வுக்காக நான் சென்ற பகுதிகளில் ட்ரோப்ரியண்ட் தீவுகளில் ஒரு விநோத பழக்கம் இருந்தது. காதலர்கள் இருவரும் அமர்ந்துகொண்டு, நெருக்கமாக உணரும்போது ஒருவரையொருவர் தங்கள் கண் இமைகளை லேசாக கொறிக்கின்றனர். இதை நம்மில் பலரும் 'ரொமாண்டிக்' என நினைக்க மாட்டோம். ஆனால், அது அவர்களின் யுக்தியாக உள்ளது.

ஒருவரையொருவர் நெருக்கமாக, அவர்கள் மீதான நம்பிக்கையை உணரும் ஒன்றாக இது உள்ளது. இது நம்பிக்கை மற்றும் பிணைப்பு சார்ந்து. நம் அன்புக்குரியவர்களை நோக்கி நெருக்கமாக ஆக்குவதே இந்தப் பழக்கங்களின் பொதுவான நோக்கமாக உள்ளது," எனத் தெரிவித்தார்.

மற்ற உயிரினங்கள் முத்தமிடுவதில்லையா?

உதட்டோடு உதட்டை அழுத்தி முத்தம் கொடுப்பது மனிதர்களுக்கே உரிய பழக்கமாக உள்ளது. முத்தமிடுதல் பரிணாம வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது எனில், ஏன் பெரும்பாலான விலங்குகளிடையே நாம் அந்தப் பழக்கத்தைப் பார்ப்பதில்லை?

முத்தம்

பட மூலாதாரம்,ANAKIN TSENG / GETTY IMAGES

சில பறவைகள் காதல் உறவில் தங்கள் அலகுகளை உரசிக்கொள்ளும். பெரும்பாலான பாலூட்டி இனங்கள் நுகர்வதன் மூலம் தன் நண்பர் அல்லது எதிரியை அடையாளம் காணும். சில விலங்கினங்கள் மட்டுமே உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடுகின்றன.

மனிதர்களின் நுகரும் திறன் பல பாலூட்டி இனங்களைவிட மிகவும் குறைவானதால்கூட இது இருக்கலாம். நுகரும் திறன் அதிகமாக இருப்பதாலேயே, முகத்தோடு முகத்தை அழுத்தாமலேயே விலங்குகள் மற்றவற்றின் வாசனையை அறிகின்றன.

ஆனால், ஒருவரின் வாசனையை அறிவதற்கு மனிதர்கள் அவர்களுக்கு மிக நெருக்கமாகச் செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்காக மனிதர்கள் முத்தமிட ஆரம்பித்தனர்.

ஆனால், ஏன் சில கலாசாரங்களில் மனிதர்கள் முத்தமிடுவதில்லை? நாம் எப்போதும் முத்தமிடுவதைத் தொடர்கிறோமா?

ஷெரில் ஆர். கிர்ஷென்பௌம் கூறுகையில், "பல்வேறு காரணங்களுக்காக உலகம் முழுவதுமே முத்தமிடும் பழக்கம் தோன்றி மறைந்திருப்பதைக் காணலாம். சில நோய்களைத் தவிர்ப்பதற்காக முத்தமிடும் பழக்கம் மறைந்திருக்கலாம். நோய்க்கிருமிக் கோட்பாடு வருவதற்கு முன்பாகவே உடல்நலமில்லாமல் போவதைத் தவிர்க்க முத்தமிடுவதைத் தவிர்த்திருக்கலாம்.

அரசர்கள் பலர் மக்கள் முத்தமிட்டுக் கொள்வதற்குத் தடை விதித்திருந்தனர். ஏனெனில், முத்தமிடுவது மக்களுக்கானது அல்ல, அது ஒரு சலுகை என அந்த அரசர்கள் கருதினர்.

ஆனால், நோய்கள், தடை என எந்தக் காரணத்துக்காக முத்தமிடும் பழக்கம் மறைந்தாலும், அது மீண்டும் தோன்றியிருக்கிறது.

'பிபிசி ரீல்ஸ்' (BBC Reels) பகுதிக்காக வில் பார்க் தயாரித்த காணொளியின் அடிப்படையில் எழுதப்பட்டது.

https://www.bbc.com/tamil/science-64621848

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம்: உதட்டோடு உதடு சேரும் அந்த முதல் முத்தம் நமக்குச் சொல்வது என்ன?

பூவும் சொக்கிளேற்ம் வாங்கோணும்....:face_blowing_a_kiss:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/2/2023 at 03:13, குமாரசாமி said:

பூவும் சொக்கிளேற்ம் வாங்கோணும்....:face_blowing_a_kiss:

வாங்கின பூவும் சொக்கிளேற்றும் கொடுத்தாச்சோ அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

வாங்கின பூவும் சொக்கிளேற்றும் கொடுத்தாச்சோ அண்ணை?!

வருசா வருசம் வாங்கிக்குடுத்தே கந்தறுந்து போய் நிக்கிறன்...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

வருசா வருசம் வாங்கிக்குடுத்தே கந்தறுந்து போய் நிக்கிறன்...:rolling_on_the_floor_laughing:

வாங்கினவைக்கு மகிழ்ச்சி தானே அண்ணை? 
அப்ப கவலையை விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஏராளன் said:

வாங்கினவைக்கு மகிழ்ச்சி தானே அண்ணை? 
அப்ப கவலையை விடுங்கோ.

வாங்கினவைக்கு மகிழ்ச்சி
ஆனால்
கல்லா என்ரை எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

வாங்கினவைக்கு மகிழ்ச்சி
ஆனால்
கல்லா என்ரை எல்லோ?

அப்ப உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா?! வாங்க முதலே சிந்தித்து இருக்கவேணும்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதட்டில் முத்தம்: காதலர்களின் இந்த முத்தம் அன்பின் வெளிப்பாடா? பாலுணர்வைத் தூண்டவா?

உதடுகளில் முத்தமிடும் பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 மே 2023
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

உதடுகளில் முத்தமிடும் பழக்கம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்களிடையே வெகு இயல்பாகக் காணப்படும் பழக்கமாக உள்ளது. ஆனால் உண்மையில், இந்த பழக்கம் நம்மிடையே எப்போதுமே இருந்து வந்த பழக்கமா, அல்லது அண்மைக்காலத்தில் தோன்றிய பழக்கமா என்பது குறித்த தெளிவான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

முத்தமிடுவதற்கான காரணங்கள் நாம் நினைப்பது போல் எளிதானவை கிடையாது. அவை மிகவும் சிக்கலானவை.

இந்தப்பழக்கம் இந்தியாவில் கிமு 1500க்கு முன் தோன்றியிருக்கலாம் என இதுவரை நம்பப்பட்டு வருகிறது. ஆனால், சயின்ஸ் இதழில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தக் கருத்துக்கு எதிரான ஏராளமான உண்மைகள் நமக்குக் கிடைத்துள்ளன.

இந்த கட்டுரையின் படி, சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தற்போதைய ஈராக் மற்றும் சிரியாவில் இருந்த பண்டைய மெசபடோமியாவில் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் தோன்றியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன்படி, பாலுணர்வை அதிகரிக்கும் விதமாக இது போன்ற உதடுகளில் முத்தமிடும் பழக்கம், இதுவரை நாம் நினைத்து வந்த காலத்துக்கும் 1000 ஆண்டுகள் பழமையானது.

நாம் ஏன் முத்தமிடுகிறோம்?

ஒருவர் நமக்கு சரியான துணையாக இருப்பாரா என்பதை அறிவதில் உதடுகளில் முத்தமிடுதல் பெரும் பங்காற்றுவதாக பரிணாம மானுடவியலாளர்கள் கருதுகின்றனர். உதடுகளில் முத்தமிட்டுக்கொள்ளும் போது, உமிழ்நீர் மற்றும் மூச்சுக் காற்று மூலம் பல சமிக்ஞைகள் பகிரப்படுவதாகவும், இதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் ஏற்ற துணைகளா என்பது அறியப்படுகிறது என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.

இரண்டு பேருக்கு இடையே மிகவும் நெருக்கமான அன்புப் பிணைப்பை உருவாக்கவும், பாலுணர்வுகளைத் தூண்டவுமே உதடுகளில் முத்தமிடும் பழக்கம் உதவுவதாக மற்றுமொரு காரணம் சொல்லப்படுகிறது.

மனிதப் படைப்புடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள சிம்பன்சி குரங்குகளிடமும் இது போல் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் காணப்படுகிறது. இந்த உண்மை, உதடுகளில் முத்தமிடும் பழக்கம், மனிதர்களிடையே தோன்றிய காலத்துக்கும் முற்பட்டது என்ற உண்மையை நமக்குப் புரியவைக்கிறது.

பண்டைய மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் எழுத்துகளைக் கண்டுபிடித்த காலத்திலேயே எகிப்தில் வாழ்ந்த மக்களும் எழுதக் கற்றுக்கொண்டிருக்கலாம்.

மிகப்பழமையான மெசபடோனிய எழுத்துப் பிரதிகள், தற்போதைய ஈராக்கின் தென்பகுதியில் உள்ள உருக் நகரில் கிமு 3200ல் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த எழுத்து முறை க்யூனிஃபார்ம் என அழைக்கப்படுகிறது. இவை ஈரமான களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய மாத்திரை போன்ற கட்டிகளில் முக்கோண வடிவில் பொறிக்கப்பட்டன. உண்மையில் இந்த எழுத்துகள், பிற எந்த மொழியுடனும் தொடர்பில்லாத சுமேரிய மொழியில் சில தகவல்களை வெளிப்படுத்தும் பிரதிகளாக உருவாக்கப்பட்டன.

உதடுகளில் முத்தமிடும் பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிற்காலத்தில், பழங்கால செமிட்டிக் மொழியான அக்காதிய மொழியில் எழுத அந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

நமக்குத் தெரிந்த ஆரம்ப கால மொழியில் எழுதப்பட்ட நூல்கள் நிர்வாக நடைமுறைகள் மற்றும் பல்வேறு அதிகார நிலைகளைக் குறிக்கும் நூல்களாக இருக்கும் நிலையில், பின்னர் படிப்படியாக பொதுமக்கள் அந்த மொழியை மற்ற தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தவும் பயன்படுத்திக்கொண்டனர். அதற்கான எழுத்துமுறைகளும் உருவாகின.

கிமு மூன்றாம் மில்லினியத்தின் முதல் பாதியில், மத நம்பிக்கை சார்ந்த கதைகள் மற்றும் மந்திரங்களை எழுதுவதற்கு மட்டுமே இந்த மொழி எழுத்துககள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் பின் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தகவல்களைத் தெரிவிக்கவும் இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

இவற்றில் ஒரு சில மிகப்பழமையான எழுத்துகளில், உதடுகளில் முத்தமிடுவது பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கிமு 2500 முதல் ஏராளமான கதைகளில் கடவுள்கள் இது போல் முத்தமிட்டுக் கொண்ட தகவல்களும் கிடைக்கின்றன.

முத்தமிடுவது குறித்த முதல் ஆதாரம்

இது போன்று நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான மெசபடோமிய களிமண் உருவத்தில் க்யூனிஃபார்ம் எழுத்துமுறையில் எழுதப்பட்ட பிரதி ஒன்றில் இரண்டு தெய்வங்கள் உதடுகளில் முத்தமிட்டது மற்றும் பாலுறவில் ஈடுபட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அது:

'...நின்ஹர்சாக் என்ற பெண் தெய்வத்துடன் அந்த கடவுள் உடலுறவு வைத்துக்கொண்டார். அவர் அந்த பெண் தெய்வத்தை முத்தமிட்டார். அந்த பெண் தெய்வத்தின் வயிற்றில் 7 இரட்டையர்களின் விந்தணு மூலம் ஒரு கருவை அவர் உருவாக்கினார்.'

பிற்காலத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக கிடைத்த எழுத்துப் பிரதி ஒன்றில், முத்தமிடுவது என்பது பாலுறவைத் தூண்டுதல், குடும்ப உறவுகளை வெளிப்படுத்துதல், நட்புணர்வை வெளிப்படுத்துதல் போன்ற பல்வேறு நிலைகளில் பொதுமக்களிடையே சர்வசாதாரணமாக மூன்றாவது மில்லீனிய காலத்தின் இறுதியில் இருந்தே நடைமுறையில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

உதடுகளில் முத்தமிடும் பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிட்டுக்கொள்வது முகம் சுளிக்கும் செயலே என்றாலும், திருமணமான ஜோடிகள் முத்தமிட்டுக்கொண்ட நிகழ்வுகள் பழங்காலத்திலேயே நிகழ்ந்துள்ளன.

தரமான நடத்தையை உறுதி செய்ய ஒவ்வொரு சமூகத்திலும் சில விதிகள் உள்ளன. இதே போன்ற விதிகள் பழங்காலத்திலும் பரவலாக இருந்துள்ளன.

முத்தமிடும் பழக்கம் ஒற்றை இடத்திலிருந்து தோன்றியதா?

இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் பழங்காலத்திலேயே நடைமுறையில் இருந்தது என்பதை பல ஆதாரங்கள் காட்டுகின்றன.

மனிதர்களிடையே முத்தமிடும் பழக்கம் எப்போது தோன்றியது என்பது குறித்து ஏற்கெனவே நாம் அறிந்திருந்தவற்றை இந்த ஆதாரங்கள் மாற்றியமைத்துள்ளன.

கிமு 1500ல் இந்தியாவில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி ஒன்றில், முத்தமிடும் பழக்கம் இந்தியாவில் இருந்து ஒரு கலாச்சாரப் பகிர்வாக மேற்குலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெசபடோமியாவில் கிடைத்துள்ள ஆதாரங்களின் படி, இந்தத் தகவலை நாம் மறுக்கமுடியும்.

உதடுகளில் முத்தமிடும் பழக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலுணர்வைத் தூண்டும் முத்தம் குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்களை ஆராய்ந்தால் அது பல சமூகங்களில் பல நிலைகளில் தோன்றியிருக்கலாம் என்றே தெரியவருகிறது.

அதே நேரம் உதடுகளில் முத்தமிடும் பழக்கம் முதன்முதலாக எங்கு தோன்றியது என ஒரே ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க விரும்பினால், அது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, வரலாற்றுக்கு முந்தைய காலங்களை ஆராய்ந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

முத்தமிடுவது குறித்த வரலாறு குழப்பமானது

தற்போதைய மானுடவியல் ஆய்வு ஒன்றின் படி, பாலுணர்வைத் தூண்டும் விதத்தில் முத்தமிடுவது உலகளாவியது அல்ல என்பது புலனாகிறது. இருப்பினும் சிக்கலான படிநிலைகளைக் கொண்டிருந்த சமூகங்களிலும் இது போன்ற முத்தமிடும் பழக்கம் இருந்ததை பழங்காலத்தில் எழுதப்பட்ட பிரதி ஒன்று நமக்கும் காட்டுகிறது.

இந்நிலையில், தொடக்க காலத்தில் எழுதவே தெரிந்திருக்காத சமூகங்களில் இதே போன்று முத்தமிடும் பழக்கம் இருந்ததா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

சில சமூகங்களில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் முத்தமிடும் பழக்கங்கள் இல்லாவிட்டாலும், கலாச்சார தொடர்புகள் முழுவதும் அந்தப் பழக்கம் பழங்காலத்தில் உலகம் முழுவதும் பரவலாக இருந்திருக்கவேண்டும் என நாம் வாதிட முடியும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆராய்ச்சிகளின் படி, உதடுகளில் முத்தமிடும் பழக்கம் உலகளாவியது அல்ல எனக் காட்டினாலும், ஏன் அனைத்து சமூகங்களிலும் இந்த முத்தமிடும் பழக்கம் இல்லாமல் போனது என்பது உள்ளிட்ட ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கேள்விகள் எழும்.

நமக்கும் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவென்றால், முத்தமிடும் கலாச்சாரமும், வரலாறும் ஒரு சிக்கலான விஷயமாக இருக்கும் நிலையில், இது குறித்து இன்னும் பல புதிய தகவல்களைத் தேட வேண்டியிருக்கிறது என்பதே.

https://www.bbc.com/tamil/articles/c6pl48yeyg2o

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/2/2023 at 03:13, குமாரசாமி said:

பூவும் சொக்கிளேற்ம் வாங்கோணும்....:face_blowing_a_kiss:

கடையில விற்கவா அண்ண

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடையில விற்கவா அண்ண

இல்லை ராசன்....என்னோடை வேலைசெய்யிற கலகல மணிகளுக்கு குடுக்க....:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

இல்லை ராசன்....என்னோடை வேலைசெய்யிற கலகல மணிகளுக்கு குடுக்க....:rolling_on_the_floor_laughing:

பல்லுப்போன கிழவிகள்  தானே ?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

பல்லுப்போன கிழவிகள்  தானே ?🤣

இல்லை.....கட்டுப்பல்லு :hurra:

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.