Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Eppothum Thamizhan said:

அஸ்வின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வரும்போதே தெரிந்துவிட்டது தோல்விதான் என்று. படிக்கலும் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர் இல்லை. இருவரும் சேர்ந்து 30 பந்துகளை வீணடித்து 21 ஓட்டங்களே எடுத்தார்கள். சங்ககாராவுக்கு மற கழண்டுபோச்சு போல கிடக்கிது.😡

ப‌டிக‌ல் இர‌ண்டு ம‌ச்சிலும் சுத‌ப்ப‌ல் விளையாட்டு ந‌ண்பா................இவ‌ருக்கு ப‌தில் இன்னொரு வீர‌ரை தெரிவு செய்வ‌து அணிக்கு ந‌ல்ல‌ம்..........................

  • Replies 1.8k
  • Views 111.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
(5.2/20 ov, T:205) 46/2

RCB need 159 runs in 88 balls.

Current RR: 8.62
 • Required RR: 10.84
 • Last 5 ov (RR): 42/2 (8.40)
forecasterWin Probability:RCB 9.18%  KKR 90.82%

சுவியண்ணா இன்றும் முதல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
(7.5/20 ov, T:205) 54/4

RCB need 151 runs in 73 balls.

Current RR: 6.89
 • Required RR: 12.41
 • Last 5 ov (RR): 39/4 (7.80)
forecasterWin Probability:RCB 2.08%  KKR 97.92%
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த உறவுகளே நான் இப்பொழுது மாட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறேன்......பெங்களூர் பொங்குமா தொங்குமா என்று சில மணித்துளிகளில் தெரிந்து விடும்......இதுவரை 54/4.....7.4 ......!  😂

kkr சக்கரவர்த்தி பின்னி எடுக்கிறான்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

அன்பார்ந்த உறவுகளே நான் இப்பொழுது மாட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறேன்......பெங்களூர் பொங்குமா தொங்குமா என்று சில மணித்துளிகளில் தெரிந்து விடும்......இதுவரை 54/4.....7.4 ......!  😂

kkr சக்கரவர்த்தி பின்னி எடுக்கிறான்.......!  👍

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்

இறந்தாலும் ஆயிரம் பொன்.

யார் வென்றாலும் நீங்க முதல்வர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

டூ பில‌ஸ்சி நான‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்தார்

போர‌ போக்கை பார்த்தா இந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ஓட்ட‌த்தை வ‌ங்க‌ளூர் த‌க்க‌ வைக்கும் போல் இருக்கு........................

  • கருத்துக்கள உறவுகள்
(11.3/20 ov, T:205) 83/6

RCB need 122 runs in 51 balls.

Current RR: 7.21
 • Required RR: 14.35
 • Last 5 ov (RR): 31/4 (6.20)
forecasterWin Probability:RCB 0.47%  KKR 99.53%
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓவருக்கு 12க்கு மேல் அடிக்க வேண்டும் இவர்கள் அதுக்கு சரிவர மாட்டார்கள் .....!  😂

84/7.....12.2....!

ஷாருக்கான் வெரி ஹாப்பி அண்ணாச்சி .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்இப்பவே புள்ளிகளை வழங்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

ஒரு ஓவருக்கு 12க்கு மேல் அடிக்க வேண்டும் இவர்கள் அதுக்கு சரிவர மாட்டார்கள் .....!  😂

84/7.....12.2....!

ஷாருக்கான் வெரி ஹாப்பி அண்ணாச்சி .....!  😂

த‌லைவ‌ரே சும்மா இருங்கோ 
மைதான‌த்தில் அடிக்க்க‌ ஆட்க‌ள் இல்லை............இன்னும் கைவ‌ச‌ம் இர‌ண்டு விக்கேட் தான் இருக்கு
இண்டையான் விளையாட்டில் கொல்க‌ட்டா ரென்ச‌ன் இல்லாம‌ மாபெரும் வெற்றி...................
உங்க‌ட‌ ஆத்தில் மீண்டும் அடை ம‌ழை தான்

வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே.....................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ரே சும்மா இருங்கோ 
மைதான‌த்தில் அடிக்க்க‌ ஆட்க‌ள் இல்லை............இன்னும் கைவ‌ச‌ம் இர‌ண்டு விக்கேட் தான் இருக்கு
இண்டையான் விளையாட்டில் கொல்க‌ட்டா ரென்ச‌ன் இல்லாம‌ மாபெரும் வெற்றி...................
உங்க‌ட‌ ஆத்தில் மீண்டும் அடை ம‌ழை தான்

வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே.....................

பையா தலைவர் மாறித் தானே பதிந்துள்ளார்.

எங்களோடு சேர்ந்த அவருக்கும் முட்டை தான்.

ஆனாலும் முதலாவதாகவே நிற்பார் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா தலைவர் மாறித் தானே பதிந்துள்ளார்.

எங்களோடு சேர்ந்த அவருக்கும் முட்டை தான்.

ஆனாலும் முதலாவதாகவே நிற்பார் என எண்ணுகிறேன்.

நான் நினைச்சேன் த‌லைவ‌ர் ச‌ரியா க‌ணித்தார் என்று

அவ‌ருக்கும் முட்டை

நான் உந்த‌ 6புள்ளிய‌ விட்டு வில‌கிறேன் இல்லை தொட‌ர்ந்து 6புள்ளியோட‌ நிக்கிறேன்

புல‌வ‌ர் அண்ணா மெது மெதுவாய் மேல‌ வ‌ருவ‌து ம‌கிழ்ச்சி............................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ரே சும்மா இருங்கோ 
மைதான‌த்தில் அடிக்க்க‌ ஆட்க‌ள் இல்லை............இன்னும் கைவ‌ச‌ம் இர‌ண்டு விக்கேட் தான் இருக்கு
இண்டையான் விளையாட்டில் கொல்க‌ட்டா ரென்ச‌ன் இல்லாம‌ மாபெரும் வெற்றி...................
உங்க‌ட‌ ஆத்தில் மீண்டும் அடை ம‌ழை தான்

வாழ்த்துக்க‌ள் த‌லைவ‌ரே.....................

பையா உங்களின் அன்பு என்னைப் புல்லரிக்க வைக்குது......இன்று காலை ஒரு நண்பரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்தேன். அப்பாவும் அவர்கள் சொன்னவர்கள் நின்று நாளைக்கு போங்கோ என்று "கெடுகுடி சொற்கேளாது" தானே, நானும் வீட்டில் வேலை இருக்கெண்டு சொல்லி வந்து இந்த விளையாட்டைப் பார்த்து அவிஞ்சு போனேன்......ஆயினும்  கவலையில்லை.யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

பையா உங்களின் அன்பு என்னைப் புல்லரிக்க வைக்குது......இன்று காலை ஒரு நண்பரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்தேன். அப்பாவும் அவர்கள் சொன்னவர்கள் நின்று நாளைக்கு போங்கோ என்று "கெடுகுடி சொற்கேளாது" தானே, நானும் வீட்டில் வேலை இருக்கெண்டு சொல்லி வந்து இந்த விளையாட்டைப் பார்த்து அவிஞ்சு போனேன்......ஆயினும்  கவலையில்லை.யார் வென்றாலும் மகிழ்ச்சிதான்......!  😂

எந்த லிங்கில் இப்போ பார்க்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

எந்த லிங்கில் இப்போ பார்க்கிறீர்கள்?

wepcric கில்தான். பையன் போட்ட லிங்க்......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி  7 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களுடன் சுருண்டது.

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 07 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 14
2 அஹஸ்தியன் 14
3 எப்போதும் தமிழன் 14
4 கிருபன் 14
5 தமிழ் சிறி 12
6 சுவைப்பிரியன் 12
7 நில்மினி 12
8 பிரபா 12
9 நந்தன் 10
10 ஏராளன் 10
11 நுணாவிலான் 10
12 நீர்வேலியான் 10
13 வாத்தியார் 8
14 ஈழப்பிரியன் 8
15 நிலாமதி 8
16 குமாரசாமி 8
17 கல்யாணி 8
18 முதல்வன் 8
19 பையன்26 6
20 கறுப்பி 6
21 வாதவூரான் 6
22 புலவர் 4
23 கோஷான் சே 4
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி ஏப்ரல் 07 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

 

10)    ஏப்ரல் 07, வெள்ளி   19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  - லக்னோ

LSG  எதிர்  SRH

 

14 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  வெல்வதாகவும்   09 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

பையன்26
சுவி
தமிழ் சிறி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
நிலாமதி
புலவர்
நில்மினி
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
சுவி 14

 

நான்கு பேர் ஒரே புள்ளிகள் எடுத்தாலும் முதல் பதிந்தபடியால் சுவியர் முதலமைச்சர்.

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
10th Match (N), Lucknow, April 07, 2023, Indian Premier League
 
(6/20 ov, T:122) 45/2

Super Giants need 77 runs in 84 balls.

உந்த  Jaydev Unadkat ஐ ஏன் தான் டீமில் வைத்திருக்கிறாங்களோ தெரியேல்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
(7.6/20 ov, T:122) 63/2

Super Giants need 59 runs in 72 balls.

Current RR: 7.87
 • Required RR: 4.91
 • Last 5 ov (RR): 34/2 (6.80)
forecasterWin Probability:LSG 97.62%  SRH 2.38%
 
5 minutes ago, Eppothum Thamizhan said:
LIVE
10th Match (N), Lucknow, April 07, 2023, Indian Premier League
 
(6/20 ov, T:122) 45/2

Super Giants need 77 runs in 84 balls.

உந்த  Jaydev Unadkat ஐ ஏன் தான் டீமில் வைத்திருக்கிறாங்களோ தெரியேல்லை!!

இடது கைப்பந்து வீச்சாளராக இருப்பதால் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் அணிக்கு ‘ஆட்டம் காட்டிய’ க்ருனால் பாண்ட்யா – அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்

க்ருனால் பாண்டியா
7 ஏப்ரல் 2023, 16:22 GMT
புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்க லக்னௌ அணியும் முதல் வெற்றியை ருசித்தாக வேண்டிய கட்டாயத்தில் ஐதராபாத் அணியும் இருந்ததால் போராட்டம் முதல் இன்னிங்ஸிலேயே கடுமையாக இருந்தது.

ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். மைதானம் சவாலானதாக ஒருபுறம் இருந்ததோடு, லக்னௌ அணியின் சாமர்த்தியமான பந்துவீச்ச்ல் மிகவும் திணறிய ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்தது.

தொடக்க பேட்ஸ்மேன்களாக மயங்க் அகர்வால், அம்மோப்ரீத் சிங் களமிறங்கினார்கள். கைல் மேயர்ஸ் முதல் ஓவரை வீச வந்தார்.

அம்மோல்ப்ரீத் சிங் பவர் பிளேவின் தொடக்கத்திலேயே தனது அதிரடியைக் காட்டத் தொடங்கினார். ஹைதராபாத் அணிக்கான தொடக்கம் நன்றாகவே இருந்தது. ஆனால், அதேநேரத்தில் க்ருனால் பாண்ட்யாவும் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை அசர வைத்தார்.

 

இரண்டாவது ஓவரில் ஜெய்தேவ் உனாத்கத் பந்துவீச்சில் மிட் ஆஃபில் அதிரடியாக சிக்சர் அடித்து ஹைதராபாத் அணிக்கான சிக்சர் கணக்கைத் தொடங்கி வைத்தார் அம்மோல்ப்ரீத். மூன்றாவது ஓவரில் மயங்க் க்ருனால் பாண்ட்யா வீசிய பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே மார்கஸ் ஸ்டாய்னிஸ் கைக்கு கேட்ச் கொடுத்து மயங்க் வெளியேறினார்.

 

களத்தில் அம்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி இருவரும் நின்று விளையாடி, பவர் பிளே இறுதியில் ஹைதராபாத் அணியின் ரன் கணக்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், ஹைதராபாத் லக்னௌவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. சன்ரைசர்ஸின் இன்றைய பேட்டிங் சுமாராகவே இருந்தது.

அதன் விளைவாக, 8வது ஓவரை வீச வந்த க்ருனால் பாண்ட்யாவிடம் அம்மோல்ப்ரீத் சிங், எய்டன் மர்க்ரம் இருவரும் அடுத்தடுத்து வீழ்ந்து வெளியேறினார்கள்.

க்ருனால் பாண்ட்யா அந்த ஓவரில், அடுத்தடுத்து எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே மிக முக்கியமானது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 26 பந்துகளில் 31 ரன்களை அடித்திருந்த அம்மோல்ப்ரீத் சிங் விக்கெட்டை எடுத்தது மட்டுமின்றி, மிக முக்கிய விக்கெட்டான மார்க்ரமையும் வீழ்த்தி ஆட்டத்தின் திசையையே மாற்றிவிட்டார்.

கேப்டன் களமிறங்கியது ஹைதராபாத் அணிக்கு ஓர் ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையை மார்க்ரமை டக் அவுட்டாக்கி உடைத்தார் க்ருனால் பாண்ட்யா.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அவரைப் போலவே, 9வது ஓவரை வீசிய லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய், ஹேரி ப்ரூக் விக்கெட்டையும் வீழ்த்தி ஹைதராபாத்தை தவிக்கவிட்டார். ஹைதராபாத் பத்து ஓவர் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிபாதி களத்தில் இருந்தார்கள்.

பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்த வீரர்களான மார்க்ரம், ஹேரி ப்ரூக் போன்றோர் ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் வெளியேற்றப்பட்டது எதிர்பார்க்கப்படாத ஒன்று. லக்னௌ தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்களான மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் இன்று இடம்பெறவில்லை என்றாலும், க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் திறமையாகச் செயல்பட்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

க்ருனால் பாண்ட்யா, மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டரை உடைத்துவிட்டார். 12 ஓவர் இறுதியில் 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களை ஹைதராபாத் எடுத்திருந்தது.

டாட் பால்கள் அதிகம் விழாமல் ஹைதராபாத் அணி சிங்கிள்ஸ் எடுக்க அதிகம் முயன்றிருக்க வேண்டும். எதிரணியின் பந்துவீச்சு, பவுண்டரிக்கு பந்துகளை விரட்டும் வாய்ப்பைத் தரவில்லை என்னும்போது, டாட் பால்கள் விழாமலாவது தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

எஸ்ஆர்ஹெச்சின் ரன் ரேட் மிக மோசமான நிலையில் இருந்தது. க்ருனால் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமின்றி ரன் ரேட்டையும் கடுமையாகக் கட்டுப்படுத்தினார். குறிப்பிடத்தக்க வகையில் அவர் வீசிய கடைசி ஓவரில் ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

மூன்றாவது ஓவரில் 6 ரன்களை கொடுத்து மயங்க் அகர்வாலின் விக்கெட்டை எடுத்தார். அவர் வீசிய 5வது ஓவரில் அம்மோல்ப்ரீத் சிங் இரண்டு பவுண்டரி ஷாட்களை அடித்தார். அந்த ஒரு ஓவரில் க்ருனால் 9 ரன்களை கொடுத்தார். அதுவே ஏழாவது ஓவரில் 2 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமித் மிஷ்ரா களமிறங்கியுள்ளார். ஆனால், அவரது ஃபார்ம் நன்றாக உள்ளது என்பதை, யஷ் தாக்கூர் பந்துவீச்சில் ராகுல் திரிபாதி அடித்த பந்தை கேட்ச் பிடித்து நிரூபித்தார். அவரைத் தொடர்ந்து ஹைதராபாத் அப்துல் ஷமாதை களமிறக்கியது.

ஆனால், 18வது ஓவரில்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைத் தொட்ட ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை ஒளி நெடுந்தொலைவில் மங்கிக்கொண்டே இருந்தது. நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தரையும் 19வது ஓவரில் அமித் மிஷ்ரா வெளியேற்றினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

களமிறங்கிய ஆதில் ரஷீத், அமித் ரஷீத் பந்துவீச்சில் பவுண்டரி ஷாட் ஒன்றை அடித்து தனது ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால், அதே ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்திக் காட்டினார் மிஷ்ரா.

கே.எல். ராகுல் 19வது ஓவரை வேகப்பந்துவீச்சாளருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் சுழற்பந்துவீச்சாளருக்கு கொடுத்து ஆதில் ரஷீத் உட்பட இரண்டு விக்கெட்டுகளை அந்த ஓவரில் எடுத்தார். அமித் மிஷ்ராவை இறக்கிய வேலையை அவர் செய்த்விட்டார். அடுத்ததாக அவருக்குப் பதிலாக ஆயுஷ் பதானி இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார்.

20வது ஓவரில் பந்துவீசிய உனாத்கத், களமிறங்கிய வேகத்தில் உம்ரான் மாலிக்கை திருப்பி அனுப்பினார். 120க்கும் மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் அவர் குறைந்தபட்சம் 120 வரைக்குமேனும் எஸ்.ஆர்.ஹெச்-இன் ரன் கணக்கை கொண்டு செல்ல வாய்ப்பிருந்தது. அதற்கு ஏற்றாற்போல் அப்துல் ஷமாத் அணியின் ரன் கணக்கை 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுக்க வைத்தது. இந்த 21 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஹைதராபாத் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை வழங்கவும் வாய்ப்புள்ளது. லக்னௌ அணிக்கு 122 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ce74j6xn1jdo

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
10th Match (N), Lucknow, April 07, 2023, Indian Premier League
 
(16/20 ov, T:122) 127/5

Super Giants won by 6 wickets (with 24 balls remaining)

  • கருத்துக்கள உறவுகள்

சில‌ நாட்க‌ள் 6புள்ளியோட‌ நின்றேன்

இர‌ண்டு கூடுத‌ல் புள்ளி கிடைச்ச‌தையிட்டு ம‌கிழ்ச்சி................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணி  8 விக்கெட்டுகளை இழந்து 121 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  16 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 16
2 அஹஸ்தியன் 16
3 எப்போதும் தமிழன் 16
4 கிருபன் 16
5 தமிழ் சிறி 14
6 சுவைப்பிரியன் 14
7 பிரபா 14
8 நில்மினி 12
9 நந்தன் 12
10 ஏராளன் 12
11 நுணாவிலான் 12
12 குமாரசாமி 10
13 கல்யாணி 10
14 நீர்வேலியான் 10
15 வாத்தியார் 8
16 ஈழப்பிரியன் 8
17 பையன்26 8
18 நிலாமதி 8
19 வாதவூரான் 8
20 முதல்வன் 8
21 கறுப்பி 6
22 புலவர் 4
23 கோஷான் சே 4
  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 16

முதலமைச்சரே வாழ்த்துக்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.