Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளொரு கோலம் நாளொரு கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆளொரு கோலம் நாளொரு கதை

வ. திருநாவுக்கரசு

கிழக்கை மீட்டது போல் வடக்கையும், மீட்போம், வன்னிப் பிராந்தியம் முழுவதையும், விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அண்மையில் கல்கிரியாகமயில் ஊர்காவற் படையினர் பயிற்சி பெற்று வெளியேறும் வைபவத்தில் சூளுரைத்தவர் என்பதை சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதனை மறுதலிக்கும் விதத்தில் அதன் பின்னர் வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம, வடக்கு மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகயிருப்பதாக மலேசியா சென்றிருந்த போது கூறிவைத்தார்.

வடக்கில் போர் நடத்த இராணுவம் விரும்பவில்லை. வன்னியைக் கைப்பற்றவும் தாம் விரும்பவில்லை. அது நடைமுறைச் சாத்தியமுமில்லை என்ன சென்ற ஜூன் மாதம் பாதுகாப்பு செயலாளர் முன்வைத்த 7 அம்சத் திட்டமொன்றில் பகிரங்கப்படுத்தியிருந்தார். விடுதலைப் புலிகளை அழித்தே தீருவோம் என அவர் அதற்கு முன்பு பிரகடனப்படுத்தியிருந்ததை நோக்குமிடத்து, வடக்கில் யுத்தம் நடத்தவோ வன்னியைக் கைப்பற்றவோ விரும்பவில்லையென கூறுவதன் அர்த்தம் தான் என்ன என்பதே அன்று எழுந்த வினாவாகும். எதிரியைத் திசை திருப்பும் தந்திரோபாயமாக அவர் அதனைக் கூறியிருக்கிறார் போலும். எனவே தான், சென்ற வார இறுதியில் சிலாவத்துறையில் ஆரம்பித்த வலிந்த தாக்குதல், மற்றும் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா அதே சமயம் வன்னிக்கு மேற்கொண்ட திடீர் விஜயம், பாதுகாப்புச் செயலாளர் கல்கிரியாகமயில் கூறியவாறு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய நிலையில் சிலாவத்துறைப்பகுதி கைப்பற்றப்பட்டுள்ளது என்ற அறிவித்தலும் எதிர்பார்க்கப்படாததொன்றல்ல. அரசாங்கம் தனது பிரசார யுத்தத்தையும் வெகுதீவிரமாக நடத்தி வந்துள்ளதையும் யாரும் அறிவர்.

இதற்கு சற்று முன்னதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க முக்கியஸ்தர் அபயசிங்கவை ஜனாதிபதி ராஜபக்ஷ கிளிநொச்சிக்கு தூதனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி பதவியேற்ற கையோடு தான் நேரடியாக வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துப் பேசவும் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார். 22 மாதங்கள் கழிந்து இன்று வரையும் உபயோகமானதொரு அரசியல் தீர்வுத் திட்டத்தினை ஜனாதிபதி ராஜபக்ஷ முன்வைக்கவில்லை. மாறாக, மிக அலட்சிய மனோபாவத்துடன், 2 தசாப்தத்துக்கு மேலாக குப்பைத் தொட்டியில் இடப்பட்டிருந்த மாவட்ட சபை தீர்வுத் திட்டத்தை முன்வைத்து ஒற்றையாட்சி முறைமையையும் மாற்ற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்குமிடத்து இராணுவத் தீர்வைத்தவிர அரசாங்கத்திடம் வேறு எந்த எண்ணமும் இல்லை என்பதையே காணமுடிகிறது. ஏனென்றால், இன்று குறிப்பாக யாழ்.குடாநாட்டை எடுத்துக் கொண்டால், அ9 பாதையை ஒரு வருடத்துக்கு மேலாக மூடிவைத்து, உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பாரிய பற்றாக்குறைகளை ஏற்படுத்தி, வெள்ளையராட்சியின் கீழ் அன்று தென்னாபிரிக்காவில் நிலவிய இன ஒதுக்கல் (Apartheid) பாணியிலான இராணுவ அடையாள அட்டை முறை அமுல் நடத்துவதெல்லாம் மக்களை அடிமைப்படுத்தும் செயல்களாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. அரசாங்கம் பதவியைத் தக்க வைப்பதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அதேவேளை கிழக்கைப் பொறுத்தவரை நில அபகரிப்பு மற்றும் சிங்கள மயமாக்கல் நடவடிக்கை கச்சிதமாக செயற்படுத்தப்படுவதைக் காணலாம்.

சர்வதேச சமுகத்துடன் மல்லுக்கட்டல்

மறுபுறத்தில் அரசாங்கத்தின் இராணுவ அணுகுமுறை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகம் விசனம் தெரிவிப்பதைச் சாடுவதில் அரசதரப்பில் உச்சமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சென்ற வாரம் அரசாங்கத்தின் சமாதான செயலகத்தின் (Scopp) புதிய தலைவர் ரஜிவ விஜேசிங்க பிரித்தானிய அரசாங்கம் மீது கண்டனம் தெரிவித்திருந்ததை நோக்கலாம்.

2005 நவம்பரில் பதவிக்குவந்த கையோடு ஜனாதிபதி ராஜபக்ஷ இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிக்கு கை கொடுக்குமாறு விசேடமாக பிரித்தானியா சென்று முன்னாள் பிரதமர் ரொனி பிளயரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையடுத்து பிளயருக்கு மிக நெருக்கமானவரும் வட அயர்லாந்து சமாதான முயற்சியில் பழுத்த அனுபவம் வாய்ந்தவருமாகிய போல் மேர்ஃபியை பிளயர் அனுப்பி வைத்தார். மோஃபி இங்கு வருகைதந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், யுத்தம் பிரச்சினைக்கான தீர்வுக்கு இட்டுச் செல்லாதென திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் பிரித்தானிய அமைச்சர் கலாநிதி கிமி ஹவல்ஸ் ஒரு தடவைக்கு இரு தடவைகள் இலங்கை வந்து, ஜனாதிபதி ராஜபக்ஷ அடங்கலாக சில முக்கியஸ்தர்களை சந்தித்து,மேர்ஃபியின் முன்னைய விஜயத்தின் போது கூறியவற்றையும் நினைவூட்டியிருந்தார். அத்தோடு, மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதன் அவசியத்தையும், தமிழரின் அபிலாசைகளை வழங்கவல்ல அரசியல் தீர்வை நோக்கி விரைந்து நகர வேண்டிய கடப்பாட்டையும் வலியுறுத்தினார். அவ்வாறாகவே, நாடு மென்மேலும் பின்னடைவதிலிருந்து காப்பாற்ற முடியுமென்றும் ஹவல்ஸ் கூறிவைக்கத் தவறவில்லை.

மேலும், விடுதலைப்புலிகள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கெதிராக சில சட்ட நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளது. இவற்றையெல்லாம் கிஞ்சித்தும் பின்னோக்கிப் பார்க்காமல், மிக அண்மையில் சமாதான செயலக தலைவர் பதவியேற்றவராகிய ரஜிவ விஜேயசிங்க, பிரித்தானிய அரசாங்கள் இலங்கையில் ஆட்சி மாற்றம் செய்ய,அதாவது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அகற்றி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.அரசாங்கமொன்றினை பதவியிலமர்த்த முனைவதாக குற்றம் சுமத்தியிருந்தார். மேலும், மனித உரிமைகள் விடயத்தைப் பொறுத்தவரை, இலங்கை அரசாங்கத்தை தாக்குவதற்கு சக்திவாய்ந்தவொரு பிரசார யுத்தி கையாளப்படுவதாகவும் மேற்கு நாட்டு மனித உரிமை அமைப்புகள் ஐ.தே.க.வுடனும் விடுதலைப்புலிகளுடனும் சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதாகவும் விஜேய சிங்க கூறியுள்ளார். மற்றும் சர்வதேச நீதி விசாரணை ஆணைக்குழு (ICJ) சர்வதேச நெருக்கடிகள் குழு (ICG) போன்ற அமைப்புகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. விஜேசிங்கவின் கூற்றுகள் தொடர்பாக வெளிநாட்டமைச்சர் தெளிவுபடுத்துவாரென தகவல் துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கூறியுள்ளார். இவ்வாறான முறையில் ஆளொரு கோலமும் நாளொரு கதையுமாகவே நாட்டு நடவடிக்கைகள் குறிப்பாக, இராஜதந்திர விடயங்கள் அணுகப்படுகின்றன என்பது மிகுந்த கவலைக்குரியதாகும்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி தொடர்பாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு (APRC)குறிப்பாக, ஜே.வி.பி, ஜே.எச்.யூ.போன்ற அமைப்புகளின் பேரினவாத நிலைப்பாடு காரணமாக தள்ளாடித் தள்ளாடிச் செல்லும் நிலையில் நேற்றுமுன்தினமும் நேற்று (செவ்வாயும்) மீண்டும் கூடப்போவதாக அறியப்பட்டது. இனப்பிரச்சினை விடயமானது இந்த நாட்டில் ஆகக் கூடுதலாக இழுத்தடிக்கப்பட்ட விடயமாகும். தற்போது ஒற்றையாட்சியா, சமஷ்டி முறைமையா என்ற கேள்வியோடு கயிறிழுப்பு நடைபெறுகிறது.

1972 இல் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் அரசியலமைப்பு விவகாரங்களுக்கான அமைச்சராயிருந்த லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) தூண்களில் ஒருவராகிய கொல்வின் ஆர்.டி.சில்வாவின் நெறிப்படுத்தலில் தான் முதன் முதலாக ஒற்றையாட்சி முறைமை அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. அந்த முடிச்சையே இன்றைய ல.ச.ச.க. தலைவரும் அமைச்சருமாகிய திஸ்ஸ விதாரண அவிழ்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றார். ஒற்றையாட்சி முறைமையின் கீழ் கூடுதலான அதிகாரப் பரவலாக்கம் செய்ய இடமுண்டு என அமைச்சர் விதாரண முன்பு பாராளுமன்றத்தில் கூறியிருந்தவர். அடுத்தது ஒற்றையாட்சி, சமஷ்டி என்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கைவிட்டு வடக்கு, கிழக்குக்கு அதிகளவு சுயாட்சியதிகாரம் வழங்குவதே அவசியமென இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு அமைச்சருமாகிய டியூ குணசேகர கூறியுள்ளார். மற்றும் 2000 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட யோசனைகளில் கூறப்பட்டது போல, ஒரு நாடு- ஒரு மக்கள் ( one country- one people) என்பதையும் கவனத்தில் கொள்ளலாமென அவர் அண்மையில் `டெயிலி மிரர்' ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். இதுவும் ஒரு வகையில் ஒற்றையாட்சியை மருவிய சித்தாந்தம் ஆகும். இலங்கை ஒரு பல்லின , பல் கலாசார அதாவது பன்மை வகையான (Pluralist)நாடு என ஏற்று அவ்வடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்கட் பிரிவினரின் அடிப்படையில் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டுமே ஒழிய, ஒரு நாடு- ஒரு மக்கள் கோட்பாடு இன்று ஏற்புடையதல்ல.

சந்திரிகா மீள் பிரவேசம்

முன்னாள்ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நீண்ட இடைவேளைக்குப் பின் இலங்கை திரும்பி அரசியலில் மீள் பிரவேசம் செய்துள்ளார். ஐ.தே.க- சு.க.ம. கூட்டமைப்பினை அவர் ஏற்கனவே வாழ்த்தியிருந்தவர். அத்தோடு, சென்ற வாரம் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தனியாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பின்னர் மங்கள சமரவீர, ஷ்ரீபதி சூரியாராச்சி , ரிரான் அலெஸ் மற்றும் சில பிரமுகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சென்ற வார இறுதியில் நடைபெற்றதாதிய ஷ்ரீல. சு.க. வின் 46 ஆவது ஆண்டு மாநாட்டுக்குத் தான் சமுகமளித்து வாழ்த்துத் தெரிவிக்க எண்ணியிருந்த போதும் தமக்கெதிராக காலங்காலமாக வசைபாடியவராகிய ஜேர்.ஆர்.பி.சூரியப்பெருமவை பிரதம விருந்தினராக அழைத்தபடியால், தான் பங்குபற்றுவதை விலக்கியுள்ளதாக சந்திரிகா தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர வழிநடத்தும் சு.க. (மக்கள் பிரிவு) வையும் அரவணைத்துக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சு.க.வுக்கும் எவ்வாறு வாழ்த்துக் கூற அவர் எண்ணியிருக்க முடியும்? சந்திரிகா அம்மையார் மங்கள சமரவீர மற்றும் சூரியாராச்சி ஆகியோரைச் சந்தித்தபோது, சுதந்திரக் கட்சியை காப்பாற்ற அறிவு மிக்க தலைவர்கள் தேவையென குறிப்பிட்டுள்ளார். கட்சியைக் காப்பாற்றுவதற்கு என்ன தேவை என்றாரே தவிர,நாட்டைக் காப்பாற்ற என்ன தேவை என்று அவர் கூறவில்லை. அதாவது, இரு பிரதான ஆளும் கட்சிகளின் எல்லாத் தலைவர்களும் கட்சி நலன் கருதி தமது வாக்கு வங்கியையும் அடுத்த தேர்தல் பற்றியும் மட்டுமே சிந்தித்துச் செயற்பட்டனரே தவிர, நாட்டு நலன் பற்றி எந்தவொரு தலைவராவது உண்மையாகச் சிந்திக்கவில்லை என்பதை அடித்துக் கூறலாம். இதன் மூல விசையான சிங்கள பேரினவாதிகளில் எடுப்பார் கைப்பிள்ளையாக அரசாங்கங்கள் செயற்பட்டு வந்துள்ளமையால் நாடு பின் தங்கியுள்ளதுடன் இன்று சர்வதேச ரீதியில் மதிப்பிழந்தும் நிற்கிறது. இதனை இன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நன்றாக உணர்ந்து செயற்படுவதே அதன் கடப்பாடும் சாலச்சிறந்ததும் ஆகும். அதனை விடுத்து, அலன்ரொக் , ஜோன் ஹோம்ஸ், கரெத் ஈவான்ஸ் போன்றோரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அல்லது பயங்கரவாதிகள் என பழி சுமத்துவது முற்றிலும் வேண்டத்தகாதது ஆகும்.

-தினக்குரல்

இந்த ஆய்வாளர்களை முதலில் கிளைமோர் வச்சு கொல்லணும் இவங்களே சும்மா சனத்தை உசுப்பேத்திறது பிறகு அது போட்டுது இது போட்டுது அது இராணுவ முக்கியத்துவமில்லை அது இல்லை என சமாளிக்கின்றது அதுமட்டுமல்ல நடந்தது என்ன வாங்குங்கள் ............. நாம் சொன்னது நடந்திருக்குது என ஒரு தலைபில முழு புழுடா விடுறது ஆய்வு எழுதும் அறிஞர்களே சும்மா மக்களை உசுப்பேத்துவதை நிறுத்தி உண்மைகளை சற்று ஆராயுங்கள் நீங்கள் ஆராயும் திசையில் புலிகளின் ராஜதந்திரம் இல்லை

ஈழவன் இதைத் தான் நானும் சொல்கிறேன் இந்த ஊசுப்பேத்துற வேலையை முதலில குறைச்சாலே எங்கட சனத்தில கொஞ்சப்பேராவது தப்புவினம்.

கட்டுரையாளரை குறைசொல்லி பயன் இல்லை. அவர் வெளிநாடுகளில் அசைலம் அடிப்பதற்கு கதை சொல்வது போல் காரண, காரியங்கள், மேற்கோள்கள், சான்றுகளுடன் தனது வாதத்தை முன்வைத்து உள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் ஊடகவியளாளர்கள் இவ்வாறு உளவியல் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது, அதாவது ஒரு இராணுவ அதிகாரியோ அல்லது அரசியல் வாதியோ மலசலம் கழிக்கபோனாலும் அதற்கு ஒரு காரணத்தை கண்டுபிடிக்க முயல்வது தவிர்க்க முடியாதது.

எல்லாம் நன்மைக்கே! :D

இது நன்மையல்ல ஞானி நான் இந்த கட்டுரையாளரை சொல்லவில்லை இந்ததளம் முக்கியமானது இதில் இவ்வளவு பலம் அது இது புலிகள் நீச்சயம் விடமாடீனம் மிக் ஊர்தி மலசலம் கழிக்க வன்னியில் இறங்கியது அது இது என எமது ஊடகவிஒயளாளர்கள் என தம்மைதாமே கூறிகொள்ளும் அரைவேக்காடுகள் மக்களின் மனத்தில் ஒரு நம்பிக்கையை அல்லது மக்களை உசுப்பேத்து விடுகின்றார்கள் அதே நிலையில் அந்த தளத்தை புலிகள் புவியியல் ராஜதந்திர நகர்வுகள் மூலம் பின்வாங்கும் போது அதுக்கு ஒருகாரணம் சொல்வார்கள் முதலில் இவர்கள் திருந்தவேன்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.