Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் - ஜனாதிபதி

Published By: PRIYATHARSHAN

20 MAR, 2023 | 10:51 PM
image

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும்  பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு  பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு  அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

நீட்டிக்கப்பட்ட  கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.

அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. 

இந்த மாத தொடக்கத்தில்,  சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக  இலங்கைக்கு  பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட  அதன்  உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின்  நிதி உத்தரவாதம் கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு  தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட ஊடக அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

“இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்திற்கு  இதனை விட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும்  பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு  பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு  அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் எங்கள் கடன் வழங்குபவர்களுடனும் நாங்கள் நடத்திய அனைத்து  பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

“கடந்த ஜூலை மாதம்  நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில்  இருந்து, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, நிலையான கடன் நிலையை அடைவதே எனது முன்னுரிமையாக இருந்தது. அதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்தோம்.

ஆனால், நமது சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்தவும், பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களை பாதுகாக்கவும், ஊழலை  முற்றாக ஒழிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, சர்வதேச அளவில்  கவர்ச்சிகரமான  பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை  உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.

நமது நாட்டிற்கான இந்த நோக்கை  அடைவதற்கு  சர்வதேச நாண நிதியத்தின்  திட்டம் மிகவும் முக்கியமானது.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கும் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்புபட்டிருக்கிறோம்.   மேலும்  எங்கள் பணி முன்னோக்கிச் செல்லும் சூழலில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும்  மேம்படுத்தவும்  எமது கடன் வழங்குநர்களை ஊக்குவிக்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கும் இன்றியமையாததாக இருக்கும். மேலும் முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் திறமைகளுக்கு இலங்கை ஒரு  ஈர்ப்புள்ள  நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022 செப்டெம்பர் 1 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை, நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஊடாக அனுசரணை வழங்கும்  நான்கு வருட வேலைத் திட்டத்திற்காக  அதிகாரிகள்  மட்ட உடன்படிக்கையை மேற்கொண்டது.

0.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான  இந்தத் திட்டத்தின் ஊடாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் இலங்கையின் நிதிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் அதேவேளையில்  முழுமையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில் இருந்து, இலங்கை அரசாங்கம், நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்  தொடர்பில்  பங்குதாரர்களை அறிவூட்டவும்,  வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் கூட்டங்களை நடத்தியது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின் கீழ் முதலாவது தவணையாக சுமார் 0.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/151004

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் ....உங்களுக்கு உழைத்து சாப்பிடும் எண்ணமே இல்லையா ...
எப்ப பாரு யாரிடம் கையேந்தலாம் என்று ஒரு தட்டை காவிக்கொண்டு,
அதில பிச்சை விழும்போது செலிபிரேஷன். 
G7 இல் இப்பதான் நாட்டை இணைத்துப்போட்டு வாறன் என்ற கணக்கா கௌரவ ஹைகோர்ட் வேற.
இந்த எம்.பி, மந்திரி மண்ணாங்கட்டிகளின்  செல்வாக்கு, பரிந்துரை மூலம் அரச உத்தியோகம் பெற்றவர்களுக்கெல்லாம் தேடி தேடி சூடு விழுகுதாமே. 
ஊரிலிருந்து பட்சி சொல்லுது        

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஏய் ....உங்களுக்கு உழைத்து சாப்பிடும் எண்ணமே இல்லையா ...
எப்ப பாரு யாரிடம் கையேந்தலாம் என்று ஒரு தட்டை காவிக்கொண்டு,
அதில பிச்சை விழும்போது செலிபிரேஷன். 
G7 இல் இப்பதான் நாட்டை இணைத்துப்போட்டு வாறன் என்ற கணக்கா கௌரவ ஹைகோர்ட் வேற.
இந்த எம்.பி, மந்திரி மண்ணாங்கட்டிகளின்  செல்வாக்கு, பரிந்துரை மூலம் அரச உத்தியோகம் பெற்றவர்களுக்கெல்லாம் தேடி தேடி சூடு விழுகுதாமே. 
ஊரிலிருந்து பட்சி சொல்லுது        

அட அதாவது பரவாயில்லை. 

இப்ப என்னடாவெண்டால் அடுத்த பத்து வரியத்துக்கு கடன் கொடுத்த எவரும் காசை திருப்பிக் கேட்கக் கூடாதாம்  ( 10 years Moratorium on foreign loans requested ) .. 🤫 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: ரூ.24 ஆயிரம் கோடி கடன் வழங்க ஐ.எம்.எஃப் சம்மதம் - இனியாவது பொருளாதார சிக்கல் தீருமா?

இலங்கை மத்திய வங்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு, இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கைக்கு பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட அதன் அதிகாரபூர்வ கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதம் கிடைத்தது.

 

சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது. முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதி எவ்வாறான நன்மைகளை அளிக்கும்?

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி பணத்தை வைத்து, ஒன்றும் செய்ய முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

எனினும், இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு வேறு இடங்களில் கடனை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.

''இந்த பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு கடன்களை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கைக்கு வேறு இடங்களில் கடனை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் பூட்டு போடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் ஊடாக, அந்த பூட்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 300 மில்லியன் டாலர் தான் முதலில் கிடைக்கும். அந்த 300 மில்லியனை வைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தலாம். அதேநேரத்தில் இன்னும் 7 பில்லியன் அளவிலான கடன் வேறு வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கின்றார்கள்.

வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை மீள செலுத்துவதற்கு காலம் இருக்கின்றது. அந்த கடனை மீள செலுத்தும் காலத்திற்கு இடையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறார்கள்" என அவர் கூறுகின்றார்.

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐ.எம்.எஃ ப் கடன் தொகையை எவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்?

''இதை கொடுப்பதற்கான காரணம் என்னவென்று சொன்னால், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இருக்கின்றார்கள். விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், சாதாரண மக்களுக்கு தமது வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது. அவ்வாறான மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையிலான திட்டத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்த முடியும். அது தவிர, இறக்குமதி செய்வதற்கு பணம் இல்லாத போது அதற்காக அதனை பயன்படுத்த முடியும். அந்த மாதிரியான திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், ஒரு மாதத்திற்கு பெட்ரோலுக்கு மாத்திரமே இறக்குமதி செய்ய 300 மில்லியன் செலவிடப்படுகின்றது.

இந்த திட்டத்தை 6 மாதத்திற்கு கொடுக்கின்றார்கள். இந்த தொகையை கொடுப்பதனால், பெரிதாக நன்மை ஏற்பட போவதில்லை. நன்மை என்னவென்று சொன்னால், நாங்கள் இலங்கைக்கு கடன் கொடுக்கின்றோம், இலங்கை கடன் மறுசீரமைப்புக்கு தயாராகியுள்ளது, இலங்கைக்கு கடன் கொடுக்க முடியும் என்கின்ற அனுமதியை சர்வதேச நாணய நிதியம் கொடுத்துள்ளது. அது தான் முக்கியம்" என மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக இனி கருதப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கடனுதவி தொடர்பில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதை அடுத்து, இலங்கை வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

''சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதன்படி இலங்கை வங்குரோத்தான நாடாக இனி கருதப்படாது. அதனால், இனிமேல் வழமையான கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் திறன் எமக்கு கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணியை, அதிகரித்துக் கொள்வதுடன், அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாவுக்குத் தேவையான பொருட்கள் மீதான இறக்குமதித் தடைகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும். நாம் இந்த இடத்திலிருந்து எதிர்கால பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் இரு தலைவர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விடயம் தொடர்பில் முழுமையான உரையொன்றை நாடாளுமன்றத்தில் நாளை ஆற்ற எதிர்பார்க்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்க்கின்றேன்" என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி
 
படக்குறிப்பு,

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

"ஐ.எம்.எஃப் திட்டம் முழுமை பெற சாத்தியம் இல்லை "

நான்கு கட்டங்களாக வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவித் திட்டம் முழுமை பெறுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற கடனுதவி தொடர்பான அனுமதி குறித்து, பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்த தருணங்களில் இதுவரை காலம் மொத்தமாக 17 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை கடந்த காலங்களில் நாடிய 16 தடவைகளில், 9 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை இடைநடுவில் இலங்கை நிறுத்திக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கேள்வி :- இதுவரை காலம் இலங்கை எத்தனை தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது?

பதில் :-16 தடவைகள் நாடியுள்ளோம். இது 17வது தடவை.

கேள்வி :- இந்த 16 தடவைகளும் சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கிய உதவித் திட்டத்தின் ஊடாக, இலங்;கை முன்னேற்ற பாதையை நோக்கி நகர்த்துள்ளதா?

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி
 
படக்குறிப்பு,

எம்.கணேசமூர்த்தி, மூத்த விரிவுரையாளர், பொருளியல் துறை. கொழும்பு பல்கலைக் கழகம்

பதில் :- ''இந்த 16 தடவைகளில் 9 தடவைகள் இடைநடுவில் கைவிட்டுள்ளோம். இடைநடுவில் கைவிடுவது என்றால், சரி என ஒப்புக் கொண்டு, இரண்டு தவணை வரும் வரை பார்த்துக்கொண்டிருப்பது. அது வந்ததற்கு பிறகு, நிலைமை சீரடைந்ததற்கு பிறகு எங்களால் செய்ய முடியாது என்று அப்படியே விட்டு விடுவது. கடந்த தடவைகளில் அது தான் நடந்துள்ளது. மிக பெரும்பாலான தடவைகளில் அவ்வாறு தான் நடந்துள்ளது. ஆனால், இது இலங்கைக்கே மட்டுமான ஒன்று கிடையாது. இலங்கை மட்டுமே முடியாது என்று சொன்னது கிடையாது. பணம் இல்லாத போது, டாலர் இல்லாத போது வேறு வழியில்லாமல்; ஏதோ ஒரு வகையில் இந்த மாதிரியான நெருக்கடி வரும் போது, ஐ.எம்.எப்பிடம் நாடுகள் சென்றுள்ளன. ஆனால், நிலைமைகள் ஓரளவு சீரடைந்ததற்கு பிறகு இடைநடுவில் கைவிட்டுள்ளன. ஏனென்றால், ஐ.எம்.எப்பின் நிபந்தனைகள் மிக மிக வலிமையுடையவை. சாதாரண பொதுமக்கள் மட்டும் இல்லை, மத்திய தர வகுப்பு, ஏனைய தரப்பு என அனைவருக்கும் மிக மிக மோசமான வலியை கொடுக்கும். ஆகவே, இதை தொடர்ந்துக்கொண்டு செல்வதென்பது அரசியல் ரீதியாக மிகவும் சவாலான விடயம். எந்தவொரு அரசுமே அவ்வாறு செய்ய விரும்பாது. நாட்டை மேல் நிலையில் தூக்கி நிறுத்துவதற்காக அரசியல் ரீதியாக அரசியல்வாதிகள் தற்கொலை செய்ய விரும்பமாட்டார்கள். ஆகவே, இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை கூட, ஒன்மே செய்ய முடியாத காரணத்தினால் அவ்வாறான ஒரு உறுதிமொழியை கொடுத்து விட்டு, இடைநடுவில் இதனை கைவிடும் சாத்தியமே அதிகமாக காணப்படுகின்றது. இதனை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்வது மிக மிக கடினம். இந்த கொள்கைக்கு எதிராக நாட்டிலே தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது நீண்ட காலத்திற்கு செல்வது என்பது நிச்சயமாக நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை."

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்ற நாடுகள் தொடர்பிலும் மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெளிவூட்டினார்.

''சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்ற நாடுகளில் 50 சதவீதமான நாடுகள் தான் ஓரளவிற்கு, அந்த கொள்கைகள் வெற்றியளித்துள்ளன. அடுத்த 50 சதவீதமான நாடுகளில் இந்த கொள்கைகள் மிக பெரிய தோல்வியை தான் சந்தித்துள்ளன. இலங்கையும் உட்பட பல நாடுகள் தோல்வியை தான் சந்தித்துள்ளன. ஐ.எம்.எப்பின் நிகழ்ச்சி திட்டங்களை அமல்படுத்திய நாடுகளில் 50 சதவீதமான நாடுகளின் தான் அது ஓரளவிற்கு வெற்றியளித்துள்ளதே ஒழிய, முற்று முழுதாக 100 சதவீதமோ, 90 சதவீதமோ வெற்றியளித்ததாக தெரியவில்லை. சில நாடுகளில் அந்த கொள்கைகள் மக்கள் மத்தியில் சமூக ரீதியிலான எதிர்பாராத பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே அதனுடைய வெற்றி தோல்வி என்பது எதிர்வரும் காலங்களில்; இலங்கை அரசாங்கம் எப்படி கொண்டு நடத்தப் போகின்றது?, அதனூடாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா?, அந்த வளர்ச்சியின் நன்மைகள் மக்களை சென்றடையுமா? என்பதை அடிப்படையாக வைத்து தான் பார்க்கப்பட வேண்டும்" என மூத்த விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் என்ன சொல்கின்றது?

இலங்கைக்கு ஐ.எம்.எப். கடனுதவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பீட்டர் பவர்

சர்வதேச நாணய நிதியத்தினால் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பீட்டர் பவர், இலங்கைக்கு தமது நிறுவனம் கடனுதவி வழங்கியமை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 2.276 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

''சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ சபையினால் இலங்கைக்கு 2.276 பில்லியன் அமெரிக்க டாலரை 48 மாதங்களில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார பிரச்னைக்கு தீர்வாக இதனை பார்க்க முடியும். இந்த கடனுதவித் திட்டத்தின் ஊடாக உடனடியாக 330 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிதியானது விலையை ஸ்திரப்படுத்தல், அந்நிய செலாவணி இருப்பதை அதிகரித்தல், பணவீக்கத்தினால் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை குறைத்துக்கொள்ளுதல், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இயலுமையை இதனூடாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்" என அவர் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cnlxjx5qz5zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம் - அரசாங்கம்

Published By: DIGITAL DESK 5

21 MAR, 2023 | 11:43 AM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் போது முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாது ஏமாற்றியுள்ளோம்.

எனினும் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. எனவே நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியத்துடனான எந்தவொரு நிபந்தனைகளையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது. இணக்கப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் அவை அனைத்தும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அரசியலமைப்பிற்கமைய நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமே காணப்படுகிறது.

இந்த கடனுதவி திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில் , கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படவுள்ள 48 மாதங்களும் யார் ஆட்சி செய்தாலும் , எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய அதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வதேசத்துடன் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியத்துடன் கையெழுத்திடப்படவுள்ள ஒப்பந்தத்தில் காணப்படும் நிபந்தனைகளுக்கு எதிர்ப்புக்கள் காணப்பட்டாலும் அல்லது அவற்றை ஏற்றுக் கொண்டாலும் அது தொடர்பில் சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் தத்தமது நிலைப்பாடுகளை அறிவிக்குமானால் அது சிறந்ததாகும். அத்தோடு இது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியிருக்கின்றோம். ஆனால் இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. இதற்காக அரசியல் வேறுபாடுகள் இன்றி தேசிய ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும். அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாணய நிதியத்தினால் நீடிக்கப்பட்ட கடன் வசதித்திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் டொலர் வழங்கப்படும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீது ஏற்படும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கி , உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன்களாக இவ்வருடத்திற்குள் 7 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறும்.

நாணய நிதியத்தின் கடனுதவி திட்டத்தினை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளன. அவை தொடர்பில் விரைவில் நாட்டுக்கு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னரே அவற்றை வெளிப்படுத்த முடியும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட உரை நிகழ்த்துவார்.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த முழுமையான பொறுப்புக்கள் நாட்டு மக்களுடையது. வேலைத்திட்டங்களை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாவிட்டால் , நாடு பாரிய நெருக்கடிகளையே எதிர்கொள்ளும். நாட்டை நேசிக்கும் மக்கள் அதைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குவார் என்று நம்புகின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டில் காணப்படும் நிபந்தனைகளில் ஒன்று ஊழல் , மோசடிகளை ஒழிப்பதற்கான சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/151027

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

330 மில்லியன் டொலர் முதலாம் கட்ட நிதி இருதினங்களில் வழங்கப்படும் - சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவிப்பு

Published By: T. SARANYA

21 MAR, 2023 | 04:50 PM
image

(ந.தனுஜா)

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் நிதி இன்னும் இருதினங்களில் இலங்கைக்கு வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்திவரும் மிகவும் சவாலான பொருளாதார கொள்கைசார் மறுசீரமைப்புக்களைப் பாராட்டியுள்ள நாணய நிதிய அதிகாரிகள், இம்மறுசீரமைப்புக்கள் மற்றும் வரியறவீடு என்பன வறிய, பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை இழிவளவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின்கீழ் 48 மாதகாலத்தில் சுமார் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்டது.

அதனையடுத்து கடந்த 6 மாதகாலமாக சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதன் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்ட ஆவணம் நேற்று திங்கட்கிழமை (20) நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை ஆராய்ந்த பணிப்பாளர் சபை, எதிர்வரும் 48 மாதங்களில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர்களை (சுமார் 3 பில்லியன் டொலர்) வழங்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் பணிப்பாளர் சபையின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்கும் நோக்கில் இலங்கை நேரப்படி செவ்வாய்கிழமை (21) காலை 8 மணிக்கு (வொஷிங்டன் நேரப்படி 20 ஆம் திகதி இரவு 10.30 மணி) வொஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதிய ஆசிய, பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கிளைத்தலைவர் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினர். 

அவர்கள் வெளியிட்ட கருத்துக்களின் சுருக்கம் வருமாறு:

இலங்கையின் பொருளாதாரக்கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு எதிர்வரும் 48 மாதகாலத்தில் 2.286 பில்லியன் டொலர்களை (சுமார் 3 பில்லியன் டொலர்கள்) வழங்குவதற்கு நாணய நிதியப் பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளது.

கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான கொள்கைத்தீர்மானங்கள் மற்றும் பொருளாதார அதிர்வுகளின் விளைவாக இலங்கை தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

இந்நெருக்கடியின் காரணமாக இலங்கை மக்களின்மீது, குறிப்பாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலும், வெளியக நிதியீட்டலில் நாடு எதிர்கொண்டிருக்கும் தாமதம் தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதியானது, இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கான தீர்வை நோக்கிய மிகமுக்கிய நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது.

அதேவேளை அனுமதியளிக்கப்பட்டுள்ள நிதியில் முதலாம் கட்டமாக 330 மில்லியன் டொலர்கள் உடனடியாக (ஓரிரு தினங்களில்) இலங்கைக்கு வழங்கப்படவிருப்பதுடன், இது ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்ட வெளியகத்தரப்பினரின் நிதியுதவிக்கான ஊக்கியாக அமையும்.

மேலும் நீடித்த நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களின்போது நாம் வலுவான கொள்கை உருவாக்கத்துக்கு முன்னுரிமையளித்துள்ளோம்.

அதன்படி முறையான வருமான அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு, நிதிக்கட்டமைப்புக்களின் மறுசீரமைப்பு, அத்தியாவசிய பொதுச்செலவினங்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய அரசின் இயலுமையை உறுதிப்படுத்தும் வகையில் செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய வலுசக்தி (எரிபொருள்) விலையிடல் முறைமை, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கான நிதியியல் இயலுமையை நிலைநாட்டுதல் உள்ளடங்கலாக கடன்மறுசீரமைப்பின் ஊடாக பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தல், விலை உறுதிப்பாட்டை மீளக்கட்டியெழுப்புவதுடன் செயற்திறனான நாணயமாற்று விகிதத்தின்கீழ் வெளிநாட்டுக்கையிருப்பை வலுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியில் நிதியியல் துறை முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் நிதியியல் துறை ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான கொள்கை உருவாக்கம், ஊழல்மோசடிகளைக் கையாள்வதற்கும் பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவான வகையிலான கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.

இத்தகைய சவாலான கொள்கைசார் செயன்முறைகளை இலங்கை ஏற்கனவே அமுல்படுத்த ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இலங்கை அரசாங்கமும், பொதுமக்களும் இம்மறுசீரமைப்புக்களின் அமுலாக்கத்தை மேலும் விரிவாகத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டியது அவசியமாகும்.

அதேவேளை இப்பொருளாதார மறுசீரமைப்புக்களால் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களை உரியவாறான நடவடிக்கைகள் மூலம் இழிவளவாக்கவேண்டும்.

அதற்கமைய சமூகப்பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.

அதேபோன்று வரி மறுசீரமைப்புக்கள் செயற்திறனான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவை உயர்வருமானம் பெறுவோரின் வலுவான பங்களிப்பை (பொருளாதாரத்துக்கான) உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. மேலும் வரிவருமானத்தை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதுகாக்கும் அதேவேளை பொருளாதார வளர்ச்சிக்கு நேயமான முறையில் முன்னெடுக்கப்படவேண்டும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பொதுக்கடன்கள், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 128 சதவீதமாகக் காணப்பட்டமையானது அதன் நிலையற்றதன்மையை வெளிப்படுத்துகின்றது. இலங்கை அதன் அனைத்து வெளியகக்கடன்வழங்குனர்களுக்கும் கடனைத் திருப்பிச்செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது. எனவே இவ்விடயத்தில் கடன்வழங்குனர்களிடமிருந்து பெறப்படவேண்டியிருந்த கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான 'நிதியியல் உத்தரவாத' நிபந்தனை தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் கடன்வழங்குனர்களும் மிகநெருக்கமான ஒன்றிணைந்து செயற்படுவதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாததாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் பிரகாரம் கடன்வழங்குனர்களை ஒருங்கிணைப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை நாணய நிதிய அதிகாரிகள் இலங்கைக்கு வழங்குவர்.

மேலும் ஊழலை இல்லாதொழிப்பது, நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் மிகமுக்கியமாக நிறைவேற்றப்படவேண்டிய காரணிகளாகும். அந்தவகையில் பொதுநிதி முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும், ஊழலுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கையில் நிலவும் ஊழல்மோசடிகள் மற்றும் நிர்வாகக்குறைபாடுகளைக் கண்டறிவதுடன், அவசியமான பரிந்துரைகளை வழங்கும் நோக்கிலான மிகவும் ஆழமான 'நிர்வாக ஆய்வொன்றை' சர்வதேச நாணய நிதியம் முன்னெடுத்துவருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தினால் 'நிர்வாக ஆய்வு செயன்முறைக்கு' உட்படும் முதலாவது ஆசியநாடு இலங்கையாகும். இந்த முக்கிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்புக்களுடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் தயாராக உள்ளது என்று தெரிவித்தனர்.

அதேபோன்று இலங்கையின் பொருளாதாரக்கொள்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், இலங்கை அதன் கடன்மறுசீரமைப்பு செயன்முறை உத்தியை எதிர்வரும் ஏப்ரல்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு இலங்கையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களைப் பிற்போடுமாறு தாம் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர்கள், நாட்டின் தேர்தல் செயன்முறையில் தாம் தலையிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

https://www.virakesari.lk/article/151076

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே....

மதிப்பபுக்குரிய,

பங்ளாகளாதேஸ் நிதியமைச்சருக்கு, உடனடியாக கட்டு சோறோட, அடுத்த பிளேனைப் பிடித்து கொழும்பு வந்து, அழுது, குளறி உங்க காசை வாங்கிக் கொண்டு ஓடுங்கோ.

இரண்டு நாள் பொறுத்துப் போவம் எண்டால், கதை கந்தல்.

பசில், மகிந்தா கம்பனி, ரணிலுக்கு ஆப்படிக்க முன்னம், விரைந்து வரவும்.

அப்படியே, இந்த கடதாசி எழுத உதவின, பெற்றோல் கான் காரருக்கு, புல்லா பெற்றோல் நிரப்பி விடவும்.

இப்படிக்கு

பச்சைக்கிளி

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தற்போதேனும் ஆதரவளியுங்கள் - எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை - உரையின் முழுவடிவம்

22 MAR, 2023 | 04:14 PM
image

கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டதிட்டங்களையும் பின்னணியையும் ஏற்படுத்தி, நாடு கட்டியெழுப்பப்படும். இலங்கை, பொருளாதார தொங்கு பாலத்தை கடக்க தான் செயல்பட்டதை இன்று சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலன்  மக்களுக்கு விரைவில் கிடைக்கும் என்பதுடன்  சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நிதானமாகச் செயல்பட்ட மக்களுக்கு நன்றிகள் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.  

கடந்த காலத்தை விமர்சிப்பது தனது பணியல்ல என்றும், நாட்டை கட்டியெழுப்புவதே தனது பணி எனவும்  வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த கால தவறுகள் மீண்டும் ஏற்படாத வகையில்  சட்டதிட்டங்கள் மற்றும் பின்னணியை வகுத்து, எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று (22) காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றாமல், ராஜபக்ஷவினரைக் காப்பாற்றுவதே தனது நோக்கம் என்று பலர் குற்றஞ்சாட்டினாலும், இலங்கை கடினமான தொங்கு பாலத்தைக் கடக்க தான் பணியாற்றியதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் ஜனாதபதி தெரிவித்தார்.

தான் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற நேசத்துக்குரிய நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக மேலும் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த கால அனுபவங்கள் பலவும் அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பெற்றுக்கொள்வது தாய்நாட்டை மீண்டும் உயர்த்துவதற்கான சந்தர்ப்பம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதன் ஊடாக நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப புதிய பாதை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பணவீக்கம் காரணமாக முழு சமூகமும் எதிர்கொண்டுள்ள அழுத்தங்கள் தொடர்பில் தமக்கு சரியான புரிதல் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சிரமங்கள் தற்காலிகமானவை என்றும், தற்போதைய முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கான பலன்களை மக்கள் விரைவில் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து சிரமங்களையும் அழுத்தங்களையும் தாங்கிய  நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழுமையான உரை  பின்வருமாறு,

 

“சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை எங்களால் பெற முடிந்தது என்பதை இந்த கௌரவ சபைக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன். அரச நிதியின் அனைத்து அதிகாரங்களும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்திற்கு  வழங்கப்பட்டுள்ளன. எனவே, இன்று IMF உடன்படிக்கை ஆவணத்தை சமர்ப்பித்து, இந்த பாராளுமன்றத்தில் நாம் பெற்றுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி பற்றிய முதல் உத்தியோகபூர்வ அறிக்கையை இந்த சபையில் சமர்ப்பிக்கிறேன்.

பற்றி எரிந்துகொண்டிருந்த ஒரு நாட்டையே ஜூலை 9 ஆம்  திகதி நான் பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த நாடு. நாளைய தினம் குறித்து கடுகளவும் நம்பிக்கை இல்லாதிருந்த நாடு.  வங்குரோத்தடைந்துவிட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்த நாடு. பணவீக்கம் 73 சதவீதமாக உயர்ந்திருந்த நாடு. எரிபொருள், எரிவாயு வரிசையில் மக்கள் பல நாட்கள் அவதிப்பட்ட நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு.  ஒரு நாளைக்கு பத்து - பன்னிரெண்டு மணி நேரம் மின்சாரம் தடைபட்டிருந்த நாடு.

விவசாயிகளுக்கு உரம் கிடைக்காமலிருந்த நாடு. சட்டம் ஒழுங்கு பின்பற்றப்படாத நாடு. அரச அலுவலகங்கள் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு, வெளியாட்கள் அதில் குடியேறியிருந்த நாடு. ஒவ்வொரு இடத்திலும் குண்டர்கள் தாக்குதல் நடத்திய நாடு. எதிர்தரப்பினரின் வீடுகளை எரிக்கும் நாடு. நெடுஞ்சாலையில் மக்கள் கொல்லப்பட்ட நாடு.

இவ்வாறான பின்னணியில் பொறுப்பை ஏற்க எவரும் விரும்பவில்லை. சிலர் பின்வாங்கினார்கள். சிலர் ஜாதகம் பார்க்க நேரம் கேட்டார்கள். சிலர் நழுவிச் சென்றனர். சிலர் பயந்தார்கள். அவர்களில் யாரும் பொறுப்பை ஏற்க முன்வராத நிலையில் என்னிடம்  பொறுப்பேற்குமாறு  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

எந்த நிபந்தனையுமின்றி இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இருக்கவில்லை. எனக்கென்று எம்.பிகள்   யாரும் இருக்கவில்லை. ஆனால் இவை எதுவும் இல்லாவிட்டாலும், எனக்கு ஒரே ஒரு பலம் இருந்தது. நான் பிறந்து, வளர்ந்து, படித்த எனது  நேசத்துக்குரிய நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது. அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் எனக்கு பல கடந்தகால அனுபவங்கள் இருந்தன.

2001இல், நாட்டின் பொருளாதாரம்  மறைப் பெறுமானமாக வீழ்ச்சியடைந்திருந்தது.  ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வர என்னால் முடிந்தது. அதுமட்டுமல்லாமல், டோக்கியோ உதவி மாநாட்டின் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை என்னால் பெற முடிந்தது.

துரதிர்ஷ்டவசமாக, அதன் பின்னர் ஆட்சியைப் பொறுப்பேற்றவர்கள் அந்தப் பணத்தை சரியாகப் பயன்படுத்தவில்லை. 2015இல் நான் பொருளாதாரத்தை பொறுப்பேற்ற போது அது பலவீனமான நிலையில் இருந்தது. ஆனால், 2018இல், பட்ஜெட்டில் முதன்மையான  மேலதிகத்தை  எட்ட முடிந்தது. பல்வேறு சலுகைகளை வழங்கியும் சுமார் 106% சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம்.

இந்த கடுமையான சவாலை ஏற்கும்போது, கடந்த கால அனுபவங்கள் மூலம் பெற்ற நம்பிக்கை மட்டுமே எனக்கு இருந்தது. நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் சவாலை ஏற்றுக்கொண்டேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையுடன், இளைஞர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப எங்களுக்கு ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் எமது தாய்நாட்டை  கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்த கடன் வசதியின் கீழ், 4 ஆண்டுகளில் சுமார் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள்  உதவியைப் பெறுவோம். அதன்முதல் தவணையின்  கீழ்  330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கிறது. உலக வங்கி மற்றும் ஏனைய கடன் வழங்குபவர்களிடமிருந்து  மேலும் 7 பில்லியன் டொலர் துரித  கடன் உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

IMF நீடிக்கப்பட்ட கடன் வசதியை நெருப்பு வட்டியுடன் கூடிய மற்றொரு கடன் என்று சிலர் விபரிக்கிறார்கள். இந்தப் பணத்தில்  நாட்டின்  முழுக் கடனையும் அடைக்க முடியாது என்று கூக்குரலிடுபவர்களும்இருக்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள் அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. அல்லது அப்பாவி மக்களை பொய் சொல்லி ஏமாற்றி அரசியல் ஆதாயங்களை பெற்றுக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

IMF நீடிக்கப்பட்ட கடன் என்பது வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க வழங்கப்படும் வசதியாகும். அதற்கான தளமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் மீண்டும் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இலங்கை இனி வங்குரோத்தடைந்த  நாடாக இருக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது. எமது உள்நாட்டு வங்கிகளுக்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள் எங்கள் கடன் பத்திரங்களை மதிக்கின்றன. ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து மிகக் குறைந்த வட்டியில் கடன் உதவி பெறுவதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இலங்கை மீது நம்பிக்கை வைப்பர். பரந்த அளவிலான சர்வதேச வாய்ப்புகளுக்கான கதவுகள் எங்களுக்காக திறக்கப்படும். வலுவான புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் தயாராகி வருகிறது.

அது மட்டுமின்றி, இந்த உடன்படிக்கையின் மூலம் நமது நாட்டின் நிதி ஒழுங்குச் சட்டமாக்கப்படும். ஊழலைத் தடுக்க புதிய கடுமையான சட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் இலங்கையில் இதுவரை இல்லாத புதிய நிதிக் கலாசாரம் மற்றும் ஊழல் அற்ற சூழல் உருவாக்கப்படும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

எமது நாட்டைப் பற்றி சர்வதேச நாணய நிதியம் முடிவெடுக்கும் முன்னரே நாட்டை முழுமையாக முடக்க சிலர் முயற்சித்தனர். இடைவிடா வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து, பொருளாதாரத்தை சீரழித்து நாட்டை அராஜகமாக்க திட்டமிட்டனர். நாசவேலை மூலம் IMFஒத்துழைப்பை தடுக்கலாம் என்று நினைத்தனர். சில அரசியல் குழுக்கள், சில தொழிற்சங்கங்கள்,  சில   ஊடகங்கள்  இதற்காக கடினமாக உழைத்தன. நாடு ஸ்திர நிலையில் இல்லை என்பதால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காது என்றும் கூறினர்.

உள்ளூராட்சித்  தேர்தல் நடத்தப்படாததால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி  கிடைக்காது என்று கூறினர். இப்படியான பொய்களைப் பரப்பி நாட்டு மக்களை வீதிக்கு இறக்க முயற்சித்தனர்.

எனினும், இந்த நாசகார செயற்பாடுகளை பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கவில்லை, தனிப்பட்ட அரசியல் அதிகார நோக்கங்களுக்காக நாட்டின் முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவிக்க பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை, அவர்கள் நாட்டுக்காக பொறுப்புணர்வோடு செயற்பட்டனர். பல்வேறு சிரமங்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில், அவை அனைத்தையும் சகித்துக்கொண்டு, துன்ப, துயரங்களைத் தாங்கிக் கொண்டு நிதானமாகவும், பொறுமையாகவும் பெரும்பான்மையான மக்கள் செயற்பட்டனர்.  சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு அவர்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது. எனவே முதலில் இந்நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விடயத்தில் எங்கள் அதிகாரிகள் இரவு பகலாக கடுமையாக உழைத்தனர். சிலர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர்.  அமைச்சர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். இச்சபையின் உறுப்பினர்கள் பலர் அதற்கு ஆதரவளித்தனர். சிலர் பகிரங்கமாகவும் பலர் இரகசியமாகவும் ஆதரவளித்தனர். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கு எங்களின் முக்கிய கடன் வழங்குநர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர். வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவளித்தன. வெளிநாட்டு அரச தலைவர்கள், அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், அதிகாரிகள் என பலரும் எங்களுக்கு உதவினார்கள். அவர்கள் அனைவருக்கும் இலங்கையின் மரியாதைக்குரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நாம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம், மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இங்குதான் நமது வெற்றிக்கான அடிப்படை இருக்கிறது. இவற்றில் சில மறுசீரமைப்புகளை, 2022 இடைக்கால வரவுசெலவுத்திட்டம் மற்றும் 2023 வரவுசெலவுத்திட்டங்களில் முன்மொழிந்து ஏற்கனவே செயல்படுத்தி வருகிறோம். நாங்கள் இன்னும் பல மறுசீரமைப்புகளை  அறிமுகப்படுத்துவோம். அவற்றுள், சில முக்கியமான விடயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

மேலும், நாம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றதும், எதிர்காலத்தில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ள மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்தும் இந்த கௌரவ சபைக்கு தெரிவிக்க எதிர்பார்க்கின்றேன்.

 

அரச வருமானத்தை அதிகரிக்கும் திட்டம்

 

* 2025 ஆம் ஆண்டுக்குள் முதன்மை பற்றாக்குறையை மொத்தத் தேசிய உற்பத்தியில் 2.3% ஆக மாற்றுவதே எமது இலக்காகும்.

 

* இலங்கை அரசாங்கத்தின் வருமானம் தற்போது மொத்தத் தேசிய உற்பத்தியில் 8.3% ஆகும். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நமது அரசின் வருமானம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. இதனால்தான் 2026 ஆம் ஆண்டுக்குள் அரச வருமானத்தை மொத்தத் தேசிய உற்பத்தியில் 15% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

 

* துறைவாரி வரிச் சலுகைகள் இல்லாமல் கூட்டிணைக்கப்பட்ட வருமான வரி விகிதம் இப்போது 30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

* வட் வரியை 8% சதவீதத்தில் இருந்து 15% சதவீதமாக உயர்த்த நாம் நடவடிக்கை எடுத்தோம். வட் வரிக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்குகளை படிப்படியாக குறைக்கவும், வட் வரி திரும்ப செலுத்துவதை துரிதப்படுத்தவும்,  எஸ்-வட் முறையை இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

* 2025 இல், குறைந்தபட்ச வரி விலக்குடன், சொத்து வரி முறைக்குப் பதிலாக செல்வ வரியொன்றை விதிக்கவும், பரிசு மற்றும் பரம்பரை சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

அரச செலவு முகாமைத்துவம்

 

* முறையான செலவு முகாமைத்துவம் மூலம் அரச செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

* பணவீக்கத்திற்கு ஏற்ப, ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை சமநிலை செய்யும் எதிர்பார்க்கப்படுகின்றது.  ஆனால் முதன்மை வரவு செலவுத்திட்டக்  கையிருப்பு வரம்பிற்குள் இந்த மாற்றங்கள் செய்யப்படும்.

 

அரச நிறுவனங்கள் மற்றும் வலுசக்தி விலை நிர்ணயம்

 

* எரிபொருளின் விலை நிர்ணயம் செய்வதை, அரசியல் அதிகார மட்டத்தில் இருந்து முற்றாக நீக்கப்படும். 2018 விலை சூத்திரத்தின் படியே எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது.

 

 * எதிர்கால செலவு மதிப்பீட்டை கணக்கில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார விலையை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பாரியளவில் நஷ்டத்தை சந்தித்து வரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஸ்ரீலங்கா விமான சேவை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்களின் இருப்பு நிலைகள் மறுசீரமைக்கப்படும். காலாவதியான இறையாண்மை பிணைகளின் பேரில் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் தொகையை  இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய  கடன் தொகையாக மாற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும்.

 

விலை நிலைத் தன்மை மற்றும்  நிதிக் கொள்கை

 

• பணவீக்க விகிதத்தை மீண்டும் 4% மற்றும் 6%க்கு கொண்டு வர  நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பணவீக்கத்தை கணிசமான அளவில் குறைக்க முடிந்துள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்க மதிப்பிற்குக் குறைப்பது எங்கள் இலக்கு.

 

* இந்த திட்டங்களை செயல்படுத்தும் போது, பணம் அச்சிடுவது படிப்படியாக குறைந்துவிடும். இதனால் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, கடன் பெற்றுக்கொள்ளாமல் வருமானத்தை ஈட்டிக்கொள்ள திறைசேரிக்கு நேரிடும்.

 

* தற்போதுள்ள அந்நியச் செலாவணி, கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் படிப்படியாக நீக்கப்பட்டு, அந்நியச் செலாவணி சந்தையின் செயல்பாடுகள், சந்தை அளவுகோல்களின் அடிப்படையில் தீர்மானிக்க அனுமதிக்கப்படும்.

 

*  தீர்மானிக்கப்பட்ட இலக்குகளின்படி, மத்திய வங்கி வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க வெளிநாட்டு நாணயம் கொள்வனவு செய்யப்படும். 

 

நல்லாட்சி

 

உள்ளூர் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அரசாங்கத்தின் பலவீனங்கள் குறித்த  IMF அறிக்கை ஒன்றைத் தயாரிக்கிறது. ஊழலைத் தடுப்பது தொடர்பாக அரசு மற்றும் நிறுவன கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய இதனால் வாய்ப்பு ஏற்படும்.

 

*  ஐ.நா சாசனத்தின் பிரகாரம்  ஊழல் எதிர்ப்பு சட்டம் தயாரிக்கப்படும்.

 

*  இழந்த சொத்துக்களை மீட்பதற்கான ஏற்பாடுகள்   2024 ஆண்டு மார்ச் மாத்ததிற்குள் சட்டக் கட்டமைப்பில் சேர்க்க  எதிர்பார்க்கிறோம்.

 

* வலுவான நிதிக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய அரச நிதி முகாமைத்துவச் சட்டம் உருவாக்கப்படும்.

 

* சலுகை வரி அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நபர்கள், வரிச்சலுகை, வரித் தீர்வைப் பெறும் நிறுவனங்களின் பட்டியல் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்தப்படும். பாரியளவிலான  பொது கொள்முதல் ஒப்பந்தங்களின் விவரங்களும் பகிரங்கப்படுத்தப்படும்.

 

வளர்ச்சி

 

* சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புடைய திட்டங்களிலுள்ள  சீர்திருத்தங்கள் மூலம் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் வர்த்தக சீர்திருத்தங்கள் தொடர்பான செயற்பாடுகள், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள், திறன் மேம்பாடு, எரிசக்தி துறை மறுசீரமைப்பு ஊடாக செயல்திறனின்மையையும் செலவினங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பிலும்   இங்கு கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

 

எதிர்கால  நடவடிக்கை

 

* IMF திட்டத்தைத்திற்கு அப்பால் சென்ற, பல் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம். பொருளாதாரத்தைத் திறப்பதன் மூலமும், டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமும் நிலையான மறுமலர்ச்சியை அடைவதும், நடுத்தர மற்றும் நீண்ட கால  உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதும் இதன் நோக்கமாகும்.

 

* அதே நேரத்தில், இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். நாங்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த அதே நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களுடன் திறந்த மற்றும் வெளிப்படைத் தன்மையுடனும்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.

 

* கடனைத் திருப்பிச் செலுத்துதல் தொடர்பில் ஏற்படுத்திக்கொண்ட விதிமுறைகள் குறித்து இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், அனைத்து இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அதைப் பற்றி தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் திறந்த முறையொன்றை பின்பற்றுகிறோம். ஏனைய வெளிநாட்டு கடன் வழங்குநர்களின் விடயத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் நியாயமான முறையில் மறுசீரமைப்பை மேற்கொள்வது எமது எதிர்பார்ப்பாகும்.

 

* எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கு ஒரு பகிரங்க  கடிதத்தை அனுப்பியதன் மூலம் நான் தெரிவித்தது போல், எந்தவொரு வழங்குநர்களுக்கும் கூடுதல் கரிசனை செலுத்துவதில்லை. அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துகின்றோம். நாங்கள் இதுவரை அவர்கள் அனைவருடனும் வெளிப்படையாகவும் நட்பாகவும் பணியாற்றுவோம். எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து பணியாற்றுவோம். 

 

எங்கள் கடன் நிலை குறித்து தொடர்ந்து அறிக்கைகள் வெளியிடப்படும். நாட்டின் கடன் பற்றி எந்த தகவலும் மறைக்கப்பட மாட்டாது.

 

கௌரவ சபாநாயகர் அவர்களே,

 

நாங்கள் கடினமான காலத்தைக் கடந்து வருகிறோம், வரிச்சுமையால் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை நாம் அறிகின்றோம். பணவீக்கத்தால் ஒட்டுமொத்த சமுகமும் பாதிக்கப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் இந்த நேரத்தில் நாம் தற்போது செயல்படுத்தி வரும் கொள்கைகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது.  நாம் எதிர்கொள்ளும் கசப்பான உண்மை இதுவாகும்.

 

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நாங்களும் சர்வதேச நாணய நிதியமும் நடவடிக்கை எடுப்போம். முதல் பரிசீலனை வரும் ஜூன் மாதம் நடைபெறும். தற்போதைய வரி முறையை திருத்துவது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட முன்மொழிவுகளை திறைசேரி தயாரித்து வருகிறது. மேலும், பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். அவர்கள் அனைவருடனும் கலந்துரையாட நாம் எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னரே பொதுவான உடன்பாட்டை நாம் எட்ட முடியும்.

 

ஜூன் மாத மதிப்பாய்வின் போது இந்த வரி திருத்தங்களை எங்கள் திட்டத்தில் சேர்க்க IMF உடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதுமட்டுமல்லாமல், காலத்திற்கேற்ப ஏனைய கொள்கை ரீதியிலான திருத்தங்கள் குறித்தும் நாம் ஆலோசிப்போம்.

 

இவை உணர்ச்சிகளாலும் போராட்டங்களாலும் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இப்பிரச்சினைகள் விழிப்புணர்வோடு, அக்கறையோடும், புத்திசாலித்தனத்துடன் தீர்க்கப்பட வேண்டும்.

 

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நாம் கடினமான காலங்களை கடந்து வருகிறோம். ஆனால் எங்களின் சிரமங்களும், துன்பங்களும் தற்காலிகமானவை. தற்போதைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பின் பலனை விரைவில் நாம் பெறுவோம். நாளை நாட்டைக் கையேற்கும் இளைஞர்களுக்காக, நமது எதிர்கால சந்ததியினருக்காக இந்த அர்ப்பணிப்பை நாம் செய்ய வேண்டும்.

 

இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு முறையான நிதி ஒழுக்கத்துடன் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தினால், நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான பொருளாதார அடித்தளம் உருவாகும். நாம் இந்தப் பாதையை விட்டு விலகினால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததைவிட மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படும்.

 

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் மீதான பாராளுமன்ற விவாதத்திற்கான திகதியை மார்ச் மூன்றாவது வாரத்தில் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்போது உங்கள் கருத்துக்களையும் உங்கள் அனைவரின் ஆதரவு தருமாறு கௌரவ சபையில் கேட்டுக்கொள்கிறோம்.

 

மற்றுமொரு முக்கியமான விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். IMF உடன்படிக்கையில் மாத்திரம் நாங்கள் திருப்தி அடைய முடியாது. இது பயணத்தின் முடிவு அல்ல. இது மற்றொரு நீண்ட பயணத்தின் ஆரம்பம் ஆகும். இப்போது நாம் நமது முயற்சியுடன் அந்த வழியில் செல்ல வேண்டும்.

 

நாங்கள் நமது கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடனை மறுசீரமைக்க வேண்டும். அத்துடன் நாட்டின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வழிகளை உருவாக்க வேண்டும்.

 

உலக சந்தையில் மட்டுமின்றி நமது பிராந்திய சந்தையிலும் நமது பங்கை விஸ்தரிக்க வேண்டும். பாரிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையை அச்சமின்றி, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

 

இவை அனைத்தும் எளிதான இலக்குகள் அல்ல. ஆனால் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும். இது கடினமானதொரு பயணம். அந்த கடினமான பயணத்தில் நாம் கவனமாக பயணிக்க வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். முதலாவதாக, இரண்டாவது, மூன்றாவதாக, நாட்டைக் கட்டியெழுப்புவது மட்டுமே எங்களின் இலக்கு. அப்படிச் சிந்தித்தால் இந்தப் பாதையில் வேகமாகவும் வெற்றிகரமாகவும் பயணிக்கலாம்.

 

கௌரவ சபாநாயகர் அவர்களே,

 

IMF உடன் நாங்கள் செய்த திட்டத்தை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்க வேண்டும். ஆனால் நமது பலம் மற்றும் உறுதியைப் பொறுத்து மூன்றிலிருந்து மூன்றரை வருடங்களில் அதனை செய்து முடிக்கலாம். நாம் அதற்கு முயற்சிக்கலாம். இதற்காக கடினமாக உழைப்போம்.

 

இங்கே நாம் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். முதலாவதாக, சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்பு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக, ரூபாயை வலுப்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் முறையான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 

மூன்றாவதாக, ஊழலுக்கு எதிரான சட்டங்களை உடனடியாக இயற்றி செயல்படுத்த வேண்டும். நீதியமைச்சர் இதற்கான சட்டமூலத்தை விரைவில் சமர்ப்பிப்பார்.

 

நான்காவதாக, சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய ஏனைய கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றைக் கண்டறிந்து சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும்.

 

கௌரவ சபாநாயகர் அவர்களே,

டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் எமது நாடு வெளிநாட்டு கடன்கள் எதுவும் பெறவில்லை. பிற்காலத்தில் நம் நாட்டின் வருமானத்தில் செலவுகளை செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கி நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு பாரம்பரியம் உருவானது.

 

அந்த பாரம்பரியம், புற்று நோயாக மாறியதால் இன்று நாம் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நாம் எல்லா நேரத்திலும் கடன் வாங்க முடியாது. கடன் பெறாத தேசமாக மாற நாம் பாடுபட வேண்டும். அதற்காகவே, இந்த இக்கட்டான காலத்திலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இதுவரை நாம் எடுத்துள்ள அனைத்து கடன்களையும் நாம் செலுத்தி முடிக்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் சரியாகத் தொடர்ந்தால், அந்த நிலையை அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

 

அந்தக் கடனைச் செலுத்திய பின்னர், நாட்டின் செலவினங்களைச் சமாளிக்கும் வருமானத்தை உருவாக்கும் வலிமையைப் பெற வேண்டும். முயன்றால் அதனை நம்மால் செய்ய முடியும். அந்த வழியை நாம் பின்பற்றினால், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2048 இல் நம் நாட்டை உலகில் அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்ற முடியும்.

 

இங்கு இன்னுமொரு விடயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தேரவாத பௌத்த நாடுகள் எப்போதும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளதாக சமீபத்தில், ஒரு கருத்து வெளியிடப்பட்டது. 

 

இப்போது தாய்லாந்து இந்த கருத்தை உடைக்க போராடுகிறது. உலகின் தேரவாத மையமாகக் கருதப்படும் நாமும் அந்தக் கருத்தை தகர்த்தெறிய பாடுபட வேண்டும். ஒரு தாயின் பிள்ளைகளாகிய நாம் ஒருமனதாக முயற்சி செய்தால் அந்தக் கருத்தை உடைக்க முடியும். உலகின் பொருளாதார மையமாக இலங்கையை மீண்டும் பிரபலமாக்க முடியும்.

 

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நான் முதலில், பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரினேன். ஆனால் எனக்கு அந்த ஆதரவு கிடைக்கவில்லை. அதன் பின்னர் நான் ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதும், எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரினேன். ஆனால் கிடைக்கவில்லை. வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் கேட்டேன். எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

 

தற்போதைய பாராளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன். ஆனால் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

 

அந்த சந்தர்ப்பங்களில், அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி ஆதரவளிக்க மறுத்துவிட்டனர். எனது நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றார்கள். தேசிய பட்டியலிலிருந்து பிரதமரை நியமிக்க முடியாது எனக் கூறினார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதல்ல, ராஜபக்ஷாக்களைக் காப்பாற்றுவதே எனது நோக்கம் என்றார்கள். கடினமான தடையை கடக்கப்போவது இலங்கை அன்னை அல்ல நாமல் ராஜபக்ஷ தான் என்றார்கள்.

 

ஆனால், இலங்கை அன்னையை பொருளாதார தொங்கு பாலத்தைக் கடக்கச் செய்ய நான் பாடுபட்டுள்ளதை சர்வதேச சமூகம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

 

எதிர் தரப்பு குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. கடந்த காலத்தை விமர்சிப்பது என் வேலையல்ல. எதிர்காலத்தை உருவாக்குவதே எனது பணி. கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாத வகையில் சட்டங்களையும் விதிகளையும் மற்றும் பின்னணியையும் ஏற்படுத்தி, எதிர்காலத்தை உருவாக்கவே முயற்சிக்கின்றேன். இதற்காக அர்ப்பணிப்பேன். செயற்படுவேன்.

 

இந்த நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் இணைந்து கொள்ளுமாறு இன்றும் எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் நான் வாதிடவில்லை. என்னை விமர்சித்தபோது அதற்கு பதிலளிக்க முயற்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் அப்படிச் செய்யவில்லை. உங்கள் அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைக்கவும். உங்கள் அதிகாரம் குறித்து சிந்திக்கும் முன், நாட்டைப் பலப்படுத்துவது பற்றி சிந்தியுங்கள். ஏனைய  அரசியல் கருத்துக்களில் சம்பிரதாயமான முறையில் செயற்படுங்கள். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில், நிலையான அரசியல் கட்டமைப்பிலிருந்து வெளியே வாருங்கள். பொருளாதாரத்தை உயர்த்த இந்த முயற்சிக்கு ஆதரவு தாருங்கள். ஏனைய விடயங்களின் போது நாம் எதிரணியில் நிற்கலாம். ஆனால் இந்தப் பணிகளின் போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 

 

மீண்டும் அந்தக் கோரிக்கையை வைக்கிறேன். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப IMF உடன்படிக்கையை செயல்படுத்த தற்போதேனும் உங்கள் ஆதரவை வழங்கவும். இந்தப் பணியில் அனைவரும் கைகோர்ப்போம்.

https://www.virakesari.lk/article/151184

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் இலங்கைக்கான நிரந்தர 'பிணையெடுப்பு' அல்ல - உள்நாட்டு, வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டு

Published By: NANTHINI

25 MAR, 2023 | 08:00 PM
image

 

(நா.தனுஜா)

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம் ஒரு 'பிணையெடுப்பு' (பெயில்-அவுட்) அல்ல. இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படுமே தவிர, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு வழங்கப்படமாட்டாது.

எனவே, நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இந்த உதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளியல் நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்ததைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளியல் அமைப்புக்களும், பொருளாதார நிபுணர்களும் இதுபற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

'அட்வகாட்டா' அமைப்பு

இலங்கைக்கான 17ஆவது உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை வழங்கியுள்ள அனுமதி வெறும் ஆரம்பம் மாத்திரமேயாகும். கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அல்லது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக கையிருப்பு பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உதவுவதே நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்றிட்டம் ஒரு 'பிணையெடுப்பு' (பெயில்-அவுட்) அல்ல. மாறாக இச்செயற்றிட்டத்தின் ஊடாக இலங்கை பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை மீளக் கட்டியெழுப்பப்படும். இது இலங்கை இருதரப்பு, பல்தரப்பு மற்றும் நிதியியல் சந்தைகளை நாடுவதற்கு உதவும். 

எது எவ்வாறிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்றிட்டம், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வினை வழங்காது.

ஆகவே, தற்போது சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைத் தொடர்ந்து முதலாவது கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதனையடுத்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான மதிப்பீடு மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்றிட்ட நிபந்தனைகள் என்பன பகிரங்கப்படுத்தப்படும். எஞ்சிய நிதி சுமார் 4 வருடகாலத்தில் வழங்கப்படும்.

இருப்பினும், அது நாணய நிதியத்தின் நிபந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருக்கிறது. இருப்பினும், இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதைத் தடுப்பதற்கும் பொருளாதார மீட்சியிலிருந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கும் இவ்வுதவிச் செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு அப்பால் அவசியமான பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று 'அட்வகாட்டா இன்ஸ்டியூட்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

'வெரிட்டே ரிசேர்ச்' அமைப்பு

வழமையாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்கள் பிரச்சினையின் அறிகுறிகளை தணிப்பதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்படும். மாறாக, அது அப்பிரச்சினைக்கான  அடிப்படை காரணத்துக்கு தீர்வினை வழங்காது. அதேபோன்று இலங்கையை பொறுத்தமட்டில், இங்கு அடிப்படை பிரச்சினை நிர்வாகத்திலும், ஊழல் மோசடிகளிலுமே இருக்கின்றது என்பது தற்போது சர்வதேச நாணய நிதியத்துக்கும் ஏனைய அனைத்து தரப்பினருக்கும் தெளிவாக புரிந்திருக்கிறது. 

இருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய செயற்றிட்டம் இப்பிரச்சினையை கையாள்வதற்கு தவறியிருக்கிறது என்று 'வெரிட்டே ரிசேர்ச்' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஷான் டி மெல் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளியலாளர் ஸேர்கி லேனோ

இலங்கைக்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருப்பதுடன், முதற்கட்டமாக சுமார் 330 மில்லியன் டொலர்களை உடனடியாக வழங்கியுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்றுக்கையிருப்பில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதுடன் அது அத்தியாவசிய பொருட்களின் உயர்வான இறக்குமதிக்கும், அதனைத் தொடர்ந்து மீட்சிக்கும் பங்களிப்பு செய்யும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் பொருளியலாளர் ஸேர்கி லேனோ தெரிவித்துள்ளார்.

பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க்

இலங்கைக்கு அடுத்துவரும் 4 வருட காலத்தில் 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கான உதவிச் செயற்றிட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்திருக்கிறது. 

கடந்த 1965ஆம் ஆண்டிலிருந்து இலங்கை 16 முறை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது. அவை அனைத்தும் தோல்வியடைந்திருக்கின்றன. 

இலங்கைக்கு மீண்டுமொரு கடன் தேவையில்லை. மாறாக, கடந்த 1884 - 1950 வரையான காலப்பகுதியில் நடைமுறையில் இருந்ததைப் போன்ற 'நாணயச்சபை' முறைமையே இலங்கையின் தற்போதைய தேவை என்று அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/151403

  • கருத்துக்கள உறவுகள்

இனியென்ன, காசு வந்திட்டுது தேர்தலை நடத்துவோமா? தமிழருக்கு எதிரான ஆட்டத்தை தொடங்குவோமா? இனிப்பு வழங்கி கொண்டாடுவோமா? ஏதோ சந்திர மண்டலத்துக்கு விண்கலம் அனுப்பின மாதிரி கதையளக்கிறார், வந்தது கடன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்துக்கு மீண்டும் செல்லாதவகையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய வேண்டும் - அலிசப்ரி

Published By: DIGITAL DESK 5

27 MAR, 2023 | 05:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்துக்கு மீண்டும் செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும்.

இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியுமாகும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

வறிய மக்களுக்கு வழங்கிவைப்பதற்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகளை விநியோகிக்கும் ஆரம்ப நிகழ்வு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில்  ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பரிஸ் சமூகம் உட்டப உலக நாடுகள் எமக்கு உதவியாக இருந்தது.

இந்த உதவி கிடைத்த பின்னர் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், ஜனரஞ்கமற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படுகிறது. நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துக்கு 16தடவைகள் சென்றிருக்கிறோம். தற்போது 17ஆவது தடவையாகவே சென்றிருக்கிறோம். 

அதனால் இதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை நாங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லாதவகையில் எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் எங்களுக்கு முன்னிருக்கும் சவாலாகும். அதனை எங்களால் செய்ய முடியும். 

ஏனெனில் 1991இல் இந்தியாவும் இவ்வாறாதொரு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருந்தது. என்றாலும் அவர்கள் கட்சி, நிறம் பேதங்களை மறந்து அவர்கள் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ததன் மூலம் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டார்கள். 

அதனால் நாங்கள் அரசியல் கட்சி பேதங்களை மறந்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட்டாமல் எங்களாலும் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும். 

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தொடர்ந்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. அதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து எமக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

அதனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியின் மூலம்  இலங்கை வங்குராேத்து என்ற அந்த அடையாளத்தை எமக்கு நீக்கிக்கொள்ள முடிந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

என்றாலும் இது ஆரம்பமாகும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய நடவடிக்கை எடுத்தால் மீண்டும் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டி ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/151492

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.