Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டெரிக்கும் வெயில் : பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

முடிந்தவரை வீட்டிற்குள் அல்லது மூடிய பகுதிகள் அல்லது நிழலான பகுதிகளில் இருக்கவும், குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகளைப் பயன்படுத்தவும், குளிக்கவும் அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும், வெளிர் நிற, வெளிர் பருத்தி ஆடைகளை அணியவும், சூரிய ஒளியில் இருந்து உடலைப் பாதுகாக்க தொப்பி அணியவும். குடை பயன்படுத்தாவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

https://thinakkural.lk/article/247594

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ள காடுகளை அழித்து, வீடு வெளியே தெரிய வேண்டும்  என்பதற்காக மரங்களை தறித்து, வீதிகள் அகலமாக்குதல் எனும் பெயரில் வீதியோர மரங்களையும் தறித்தெடுத்தால் வெட்பம் கூடாமல் என்ன செய்யும்?

இப்படியான வீதியோரங்களும் சோலைகள் கொண்ட வீடு மனைகளும் இருந்தால் வெட்பம் என்ன செய்யும்?

best-nature-desktop-hd-wallpaper | Tamizhin Nadhi!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

முடிந்தவரை வீட்டிற்குள் அல்லது மூடிய பகுதிகள் அல்லது நிழலான பகுதிகளில் இருக்கவும், குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகளைப் பயன்படுத்தவும், குளிக்கவும் அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும், வெளிர் நிற, வெளிர் பருத்தி ஆடைகளை அணியவும், சூரிய ஒளியில் இருந்து உடலைப் பாதுகாக்க தொப்பி அணியவும். குடை பயன்படுத்தாவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

என்னதொரு முட்டாள்த்தனமான ஆலோசனை?
வீட்டுக்கு வீடு மரங்கள் நடுங்கள்,மரங்களை அரச அனுமதியின்றி தறிப்பது சட்ட விரோதம் அறிக்கை விடுங்கள் நாடும் திருந்தும் மக்களும் திருந்துவார்கள்.

செய்தார்கள் செய்தும் காட்டினார்கள். ஆதாரம் இதோ↓

உலக குளிர்மையாக்குதலுக்கு  இவர்களிடம் பாடம் படிக்க வேண்டும். ↑

  • கருத்துக்கள உறவுகள்

நீர் நன்கு அருந்த வேண்டும். தொப்பியை விட குடை நல்லது. ஆகவும் அவிஞ்சு கொட்டினால் மின்விசிறியின் கீழ் ஒதுங்குவதும் சுகம் தான். துணிக்கடைகளில் நிற்கும்போது மின்விசிறியே தஞ்சம். மரநிழல் கிடைத்தால் அதிசயம் தான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும்

Published By: T. SARANYA

05 APR, 2023 | 11:26 AM
image

இன்று ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று (05) தல்பே, வலிப்பிட்டிய மற்றும் திஹகொட  ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/152160

  • கருத்துக்கள உறவுகள்

சில  இடங்களில் தார் உருகுவதை காணக்கூடியதாக உள்ளது படம் கிடைத்தால் இணைக்கிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சில  இடங்களில் தார் உருகுவதை காணக்கூடியதாக உள்ளது படம் கிடைத்தால் இணைக்கிறேன் 

வீட்டிற்குள்ளயே இருக்க முடியாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

வீட்டிற்குள்ளயே இருக்க முடியாதாம்.

பகல் இரண்டு மணிக்கு கடல் கரை பக்கம் சென்று இருப்பன் நல்ல காற்று பொழுதும் நகரும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெப்பநிலை அதிகரிக்கும் - பிராந்திய வளிமண்டல திணைக்கள பொறுப்பதிகாரி

Published By: T. SARANYA

07 APR, 2023 | 11:48 AM
image

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் சூரியன் உச்சம் கொடுக்க உள்ள நிலையில் வெப்பநிலை 35 பாகையை தாண்டும் என யாழ். பிராந்திய வளிமண்டலத் திணைக்களப் பெறுப்பதிகாரி தர்மலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சூரியன் வட துருவ நோக்கிய பாதையில் கடந்த 5ஆம் திகதி இலங்கையின் தெற்கு பகுதியான அம்பாந்தோட்டைப் பகுதியில் உச்சம் கொடுத்த நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் யாழ் மாவட்டத்திற்கு உச்சம் கொடுக்க உள்ளது.

தற்போது யாழ் மாவட்டத்தின் வெப்பநிலை 34 பாகையை தாண்டியுள்ள  நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர்  35 பாகையை தாண்டும். 

இவ்வாறான நேரங்களில் யாழ். மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் இடி மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

யாழ் மாவட்டத்தில் உச்சம் கொடுக்கும் சூரியன் எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை கடுமையான வெப்பம் நிலவுகின்ற நிலையில்  எதிர்வரும் மே மாதம் முதல் திகதி வரை வெப்பநிலை தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/152336

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வானிலை ! அதிகரிக்கும் வெப்பம் ! நல்லூர், பரந்தன், சுண்டிக்குளத்தில் சூரியன் உச்சம் !

15 APR, 2023 | 07:14 AM
image

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (15ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானதுதென்கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகள் சாதாரண அலையுடன்காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

https://www.virakesari.lk/article/152869

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் சூரியன் கடுமையாக சுடும் !

நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவுகிறது. கடும் வெப்பம் காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மொனராகலை, கிழக்கு வடமத்திய மாகாணங்கள் மற்றும் கிளிநொச்சி, குருநாகல், ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் முதலின பகுதிகளில் இன்று கடுமையான வெப்பம் நிலவும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/249220

  • கருத்துக்கள உறவுகள்

🌝 சூரியன்… சுத்தி, சுத்தி… 💫 தமிழர் பகுதியில்தான் நிற்கிறார் போலை… 🌞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவதானம் ! வெப்பமான காலநிலை சில நாட்களுக்கு தொடரும்....

Published By: VISHNU

16 APR, 2023 | 01:01 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் கிழக்கு மற்றும், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிகழும்.

குறித்த மாகாணங்களில் மனிதர்களால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்தப்படும் மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த வெப்பமான காலநிலை சில நாட்களுக்கு தொடரும். இந்நிலையில் இந்த காலகட்டத்தில் நீரிழப்பு போன்ற நிலைமைகள் ஏற்படலாம். வெப்பமான காலநிலையில்  நிலவும்; இடங்களில் வேலை செய்பவர்கள்; போதுமான நீரை அருந்த வேண்டும்.

மேலும் முடிந்தளவு நிழலில் ஓய்வெடுக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

வாகனங்களில் செல்பவர்கள் சிறு குழந்தைகளை தனியாக வாகனங்களில் விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய நாட்களில் வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நிலவும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக விலங்களுக்கான தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

இதன்போது போதுமான நீரினை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் அவற்றை மூடப்பட்ட கூடாரங்களில் நிறுத்தவேண்டும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/152929

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

🌝 சூரியன்… சுத்தி, சுத்தி… 💫 தமிழர் பகுதியில்தான் நிற்கிறார் போலை… 🌞

சூரியன் உச்சத்திலிருப்பதால் தமிழர்களுக்கு நன்மைகள் பல விளையும்😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினமும் 3 லீற்றருக்கும் அதிகமாக நீர் அருந்துங்கள் - வைத்தியர் யமுனாநந்தா

Published By: DIGITAL DESK 5

17 APR, 2023 | 11:54 AM
image

தினமும் மூன்று லீற்றருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால் , உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும். அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். 

தினமும் 3 லீற்றர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரிப் பழம் போன்றவற்றை உண்ணுங்கள் என வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/152979

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக வெப்பம் மரணத்தையும் ஏற்படுத்தலாம் ! அவதானத்துடன் செயற்பட வேண்டும் - சிரேஷ்ட பேராசிரியர் இந்திக கருணாதிலக

Published By: DIGITAL DESK 5

17 APR, 2023 | 12:42 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலை குழந்தைகள் , முதியவர்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வெயிலில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுகிறது. 

அதிக வெப்பத்தை உள்ளீர்த்தலால் ஏற்படக் கூடிய நீர்சத்து குறைபாடானது மரணத்தையும் ஏற்படுத்தக் கூடியது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தற்போது நிலவும் மிகவும் வெப்பமான காலநிலை குழந்தைகள் , முதியவர்கள் மற்றும் அதிகளவில் வெயிலில் அன்றாட செயற்பாடுகளில் அல்லது தொழிலில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே இந்தக் குழுவினர் அநாவசியமாக வெயிலில் செல்வதை நிச்சயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் உள்ளிட்ட ஏனைய அனைவரும் இவ் அதிக வெப்பத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஆடைகளை அணியும் போதும் இள நிறத்தில் அணிவது பொறுத்தமானதாகும். அத்தோடு அதிகளவில் நீர் அருந்துதல் மிக முக்கியத்துவமுடையதாகும். எனவே நாளொன்றுக்கு சுமார் இரண்டரை லீற்றர் நீர் அருந்துதல் பொறுத்தமானது.

நீர் ஆகாரங்கள் அல்லது நீர் தன்மையுடைய உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமே தவிர , குளிர் பானங்களை அளவுக்கதிகமாக அருந்துவது பொறுத்தமற்றது. இதன் காரணமாக ஏனைய பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். அதிக வெப்பம் காரணமாக மயக்கம் , சோர்வு மற்றும் வாந்தி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்படக் கூடும். திடீரென இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக வைத்தியர்களை நாட வேண்டியது அவசியமாகும்.

அதிக வெப்பம் காரணமாக நீர்சத்து குறைபாடு ஏற்படும் போது மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. எனவே குழந்தைகள் , முதியோர் , நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சகலரும் தமது சுகாதார நிலைமை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/153000

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கை

குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்கள் வெப்பத்தினால் பாதிக்கப்படலாம், சோர்வு மற்றும் வெப்பம் அல்லது வெயிலில் தொடர்ந்து
செயற்படுவது வெப்ப தாக்கத்திற்கு வழிவகுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் நீரேற்றமாக இருக்கவும், ஓய்வெடுக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“வெளிப்புற தொழிலாளர்கள் தங்கள் கடினமான செயற்பாடுகளை குறைக்கவும், நிழலைக் கண்டறியவும், நீரேற்றத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மனித உடலில் உணரப்படும் நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.

https://thinakkural.lk/article/249374

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக வெப்பநிலையால் ஏற்படும் நோய்களைத் தவிர்ப்பதற்கான சுகாதார பணியகத்தின் அறிவுறுத்தல்கள்

இந்த நாட்களில் அதிக வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1. தாகம் எடுக்கா விட்டாலும் முடிந்தவரை அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். ( வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 லிற்றர் தண்ணீர் குடிக்கவும்)

2. தண்ணீருக்கு பதிலாக இனிப்பு பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும்.

3. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியில் இருக்கும் நேரத்தை குறைக்கவும்.

4. முடிந்தவரை வெளிர் நிற வெளிர் பருத்தி ஆடைகளையே அணியவும்.

5. வெளியில் செல்லும் போது கூடுமானவரை குடைகள் மற்றும் தொப்பிகளைப் பயன்படுத்துதல்.

6. வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இந்த நிலையில் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர், எனவே அவர்களுக்கு சிறப்பு கவனிப்பு வழங்கப்பட வேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் (குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில்) நிலவும் மிகவும் வறண்ட காலநிலையால் இந்த அபாயம் அதிகரிக்கிறது .

இந்த உயர் வெப்பநிலை காலத்தில் தங்களின் நலனுக்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் மேற்கண்ட விஷயங்களை கவனித்துக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கூறுகிறது.

https://thinakkural.lk/article/249710

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவும் வெப்பமான காலநிலை மாத இறுதி வரை நீடிக்கலாம்!

hot-weather.jpg

நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (20) அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக அந்த திணைக்களத்தின் ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்ற பணிப்பாளர் அனுஷ வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த மாகாணங்களுக்கு மேலதிகமாக மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களும் தண்ணீர் அருந்துவது அத்தியாவசியமானது என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுப்பும் பெற்றோர், குறைந்த இரண்டு தண்ணீர் போத்தல்களையேனும் அவர்களுக்கு கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன், காலை 10 மணி முதல் மாலை 3 வரையான காலப்பகுதியினும், அதிகளவில் வெளியில் நடமாடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கோரியுள்ளது.

https://thinakkural.lk/article/249921

அதிக வெப்பமான காலங்களில் பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்கலாமே?! 8.30 தொடக்கம் 2.30 வரை அல்லது 9 தொடக்கம் 3 வரை. மதிய உணவையும் கொண்டுவரச் சொல்லவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக வெப்ப நிலையுடனான காலநிலை குறித்து வைத்திய நிபுணர் ரூபி ரூபன் விடுத்துள்ள எச்சரிக்கை  

Published By: NANTHINI

21 APR, 2023 | 05:51 PM
image

 

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக மனநலம் சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இந்த வெப்ப காலநிலை மே மாத இறுதி வரை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (21)இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அதிக வெப்ப நிலை காரணமாக குறிப்பிட்ட சில நோய் நிலைமைகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, மனநலம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறான நோய்கள் ஏற்படும்போது மக்கள் வன்முறையை நோக்கி தூண்டப்படக்கூடும். 

வன்முறை எண்ணங்களால் வெவ்வேறு குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

வழமையான வெப்ப நிலையை விட ஒரு பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரிக்கும்போது மனநலம் தொடர்பான நோய் நிலைமைகள் 2 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.

எனவே, அதிகளவில் நீர் அருந்துதல், அநாவசியமாக வெயிலில் செல்வதை தவிர்த்துக்கொள்ளல் உள்ளிட்டவற்றை சகலரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/153408

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக மனநலம் சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் தெரிவித்துள்ளார். 

விசேட வைத்திய நிபுணர்…. “ரூபி ரூபன்”  சிங்களவரா, தமிழரா…
ஆணா.. பெண்ணா… என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வித்தியாசமான பெயர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.