Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 - 20 உலகக்கிண்ணச் செய்திகள்.

Featured Replies

  • தொடங்கியவர்

முதல் முறையாக இந்தச் சுற்றுப் போட்டியில் Bowl out முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படப் போகிறார்.

  • Replies 63
  • Views 8.9k
  • Created
  • Last Reply

இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது... :)

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு அடி விழுந்தது கடைசி நிமிடத்தில் சிம்பாப்வே வெற்றி

[14 - September - 2007] [Font Size - A - A - A]

`ருவென்ரி - 20' உலகக்கிண்ணத் தொடரில் முதல் `ஷொக்'- சிம்பாப்வேயை குறைத்து மதிப்பிட அவுஸ்திரேலியாவுக்கு சரியான `அடி' கிடைத்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. 21 வயதான பிராண்டன் ரெய்லர் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க, இளம் சிம்பாப்வே அணி `உலக சாம்பியனை' வென்று புதிய வரலாறு படைத்தது.

`ருவென்ரி - 20' உலகக்கிண்ணத் தொடரில் நேற்று முன்தினம் கேப்டவுனில் நடந்த `பி' பிரிவு லீக் போட்டியில் `உலகச்சாம்பியன்' அவுஸ்திரேலிய அணி, சிம்பாப்வேயை சந்தித்தது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய கப்டன் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். முதல் ஓவரிலேயே அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிகும்பரா பந்தில் அனுபவ ஹைடன் (4) வெளியேறினார். இவரது அடுத்த ஓவரில் `ஆபத்தான' கில்கிறிஸ்ட் (4) நடையைக் கட்டினார். அணியை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட கப்டன் பொண்டிங் (8) ஏமாற்றினார். பின்னர் ஹசி (15) ரன் அவுட்டானார். இப்படி முன் வரிசை தகர்ந்து போக, அவுஸ்திரேலியா 9.2 ஓவரில் வெறும் 48 ஓட்டங்கள் எடுத்து தத்தளித்தது.

இதற்குப் பின் சைமண்ட்ஸ், ஹார்ட்ஜ் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முயன்றனர். சிம்பாப்வே வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிரட்ட, இவர்களால் வாணவேடிக்கை காட்ட முடியவில்லை. சைமண்ட்ஸ் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தார். கடைசிக் கட்டத்தில் பிரட் லீ அதிரடியாக 12 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பொறுப்பாக விளையாடிய ஹார்ஜ் 35 ஓட்டங்களுடன் (2 பவுண்டரி, 2 சிக்ஸ்) ஆட்டமிழக்காமலிருந்தார்.

இலகுவான இலக்கை விரட்டிய சிம்பாப்வேக்கு சிபாண்டா, பிரண்டன் ரெய்லர் இணைந்து அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். இவர்கள் விரைவாக ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலியா அதிர்ந்து போனது. இந்த நேரத்தில் சிபாண்டா 23 ஓட்டங்களுக்கு (5 பவுண்டரி) ஆட்டமிழக்க சிக்கல் ஆரம்பமானது.

சிபா (15), தைபு (0), மட்சிகென்யரி (3) வரிசையாக வெளியேறினர். 11.5 ஓவரில் சிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் அசத்தலாக ஆடினார் பிரண்டன் ரெய்லர்.

கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் எடுத்தால் சிம்பாப்வே வெற்றி என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. பிராக்கன் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பிரண்டன் ரெய்லர். பின்னர் 5 ஆவது பந்தை இவர், விக்கெட் கீப்பருக்கு பின்பாக தட்டிவிட, `லெக் பைஸ்களாக' மேலும் 4 ஓட்டங்கள் கிடைக்க, வெற்றி வசமானது.

சிம்பாப்வே அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்து `திரில்' வெற்றி பெற்றது, பதற்றப்படாமல் ஆடிய பிரண்டன் ரெய்லர் 60 ஓட்டங்களுடன் (4 பவுண்டரி, 2 சிக்ஸ்) ஆட்டமிழக்காமலிருந்தார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

`பி' பிரிவில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான இங்கிலாந்து `நல்ல போர்மில்' உள்ளது. இப்போட்டியில் தடுமாறினால் அவுஸ்திரேலியா லீக் சுற்றோடு வெளியேறும் அபாயமுள்ளது. தற்போது மெக்ராத் இல்லாததால் மிகவும் பலவீனமாக காட்சியளிக்கிறது, தவிர அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள் என்பதால் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்க முடியவில்லை. இது `ருவென்ரி -20' போட்டிகள் இளமைக்கான ஆட்டம் என்பதை அழுத்தமாக நிரூபித்துள்ளது.

thinakural.com

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர்சனின் அபார ஆட்டத்தால் சிம்பாப்வே ஐம்பது ஓட்டங்களால் தோல்வி

[15 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ]

பீற்றர்சன் தூள் கிளப்ப இங்கிலாந்து அணி சிம்பாப்வேயை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நேற்று முன்தினம் `பி' பிரிவில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து, சிம்பாப்வே அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது.

இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் மேடி (14), பிரயார் (20) இருவரையும் விரைவில் வெளியேற்றி சிம்பாப்வே அசத்தியது. அதிரடி வீரர் டைட் வந்த வேகத்தில் `டக்' ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் பீற்றர்சனுடன், கப்டன் கொலிங்வூட் ஜோடி சேர்ந்தார். சிம்பாப்வே பந்து வீச்சை வெளுத்து வாங்கிய பீற்றர்சன் 27 பந்துகளில் `ருவென்டி௨0' போட்டியில் தனது முதல் அரைச்சதம் கடந்தார்.

தொடர்ந்து விளாசிய இவர் டபேவ்வா வீசிய 13 ஆவது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 100 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பீற்றர்சன் வெளியேறினார். இவர் 4 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 37 பந்தில் 79 ஓட்டங்கள் எடுத்தார். கொலிங்வூட் 37 ஓட்டங்களுக்கு (2 சிக்சர், 1 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பிளின்டாப் 13, ஓவைஸ் ஷா 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் குவித்தன.

கடின இலக்கை நோக்கி ஆடிய சிம்பாவேக்கு சிபான்டா (29), டெய்லர் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 47 ஓட்டங்கள் எடுத்த டெய்லர் இரண்டாவது அரைச்சதம் எடுக்கும் வாய்ப்பை 3 ஓட்டங்களில் நழுவவிட்டார். அடுத்து வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற சிம்பாப்வே 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் அந்த அணியுடன் சிம்பாவேயும் `சுப்பர் 8' சுற்றுக்குள் நுழைந்துவிடும். மாறாக அவுஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் `ரன்-ரேட்' கணக்கிடப்படும். எனவே, இந்தப் பிரிவில் `ரன்-ரேட்' முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/9/15/...s_page36102.htm

  • கருத்துக்கள உறவுகள்

சாதனையின் மத்தியில் இலங்கை அணி கென்யா அணியை வீ ழ்த்தியது

[16 - September - 2007] [Font Size - A - A - A]

உலக கிண்ண 20/20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை - கென்ய அணிகளிடையே நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி சாதனைகள் மத்தியில் 172 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ஓட்டங்களைப் பெற்று, 20/20 கிரிக்கெட் சரித்திரத்தில் புதிய சாதனையை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியது. இந்த சாதனையை இலங்கை அணி தற்போது முறியடித்துள்ளது.

இலங்கை அணியின் சார்பில் சனத் ஜெயசூரிய அதிரடி ஆட்டமாக 44 பந்துகளை சந்தித்து 88 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 9 பவுன்டறிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். குமார் சங்ககார, 30 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் மஹேல ஜெயவர்தனவும் 65 ஓட்டங்களைப் பெற்றார். இவர் 50 ஓட்டங்களை 21 பந்துகளில் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ஜெகன் முபாரக்கும் தனது அதிரடி துடுப்பாட்டத்தினால் 13 பந்துகளை சந்தித்து ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கென்ய அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 88 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியைத் தழுவியது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக, சனத் ஜெயசூரிய தெரிவு செய்யப்பட்டார்.

இந்திய அணி வெற்றி

இந்திய, பாகிஸ்தான் அணிகளிடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில், இறுதியில் இந்திய அணி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உத்தப்பா 50 ஓட்டங்களைப் பெற்றார். முகமட் அஸ்பு சிறப்பாக பந்துவீசி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ஓட்டங்களைப் பெற்றது. இறுதி ஒரு பந்துவீச்சில், பாகிஸ்தான் அணி ஒரு ஓட்டத்தைப் பெற்றால் வெற்றி பெற்றுவிடும், என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தபோது, வீரர் முஸ்பக குல்ஹக் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இவர் 53 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் சம ஓட்டங்களைப் பெற்றமையினால், வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதற்காக, இரு அணிகளுக்கும், விக்கெட்டை நோக்கி பந்தை வீசும்படி தலா 5 பந்து வீச்சுகள் வழங்கப்பட்டன.

இதில் இந்திய வீரர்கள் வீசிய முதல் 3 பந்துகளும் விக்கெட்டை வீழ்த்தியது. பாகிஸ்தான் வீரர்கள் வீசிய 3 பந்துகளும் விக்கெட்டில் படாததினால், 3-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் இந்தியா வெற்றிபெற்றது.

இதனால், டி-பிரிவில் 1 ஆவது அணியாக இந்தியாவும், 2 ஆவது அணியாக பாகிஸ்தானும் தெரிவு செய்யப்பட்டு, 2 ஆவது சுற்று ஆட்டத்தில் பங்குபற்றும் தகுதியை இரு அணிகளும் பெற்றன.

http://www.thinakkural.com/news/2007/9/16/...s_page36190.htm

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி அபார ஆட்டம் ஏழு விக்கெட்டால் நியூசிலாந்து தோல்வி

[16 - September - 2007] [Font Size - A - A - A]

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் `ருவென்ரி 20' உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தனர். அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் டெய்லர் அதிகபட்சமாக 62 ஓட்டங்களை எடுத்தார். இதில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் டில்ஹார பெர்னான்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சனத் ஜயசூரியவின் அதிரடி விளாசலின் உதவியுடன் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.

இதில் சனத் ஜயசூரிய 3 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை பெற்றதுடன் மஹேல ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை எடுத்தார்.

நியூசிலாந்து சார்பாக பந்துவீச்சில் டேனியல் விட்டோரி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://www.thinakkural.com/news/2007/9/16/...s_page36192.htm

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் நுனாவிலான் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். கலைஞன் தொடர்ந்து 2ம் இடத்தில் இருக்கிறார். 3ம் இடத்திற்கு வெண்ணிலாவும் , 4ம் இடத்திற்கு யமுனாவும், 5ம் இடத்துக்கு யாழ்கவியும் முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=344662

சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் தொடர்ந்து நூனாவிலான், கலைஞன் ஆகியோர் முதல் , இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். இம்முறை 3ம் ,4ம், 5ம் இடத்தை யமுனா, யாழ்கவி, ஜனார்த்தனன் ஆகியோர் கைப்பற்றி உள்ளார்கள். விபரம் http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=344669

நேற்று நடைபெற்ற போட்டிகளின் முடிவில் நுனாவிலான் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 2ம் இடத்தை யாழ்கவி கைப்பற்றியுள்ளார். 3ம்,4ம், 5ம் இடத்தில் கலைஞன், கந்தப்பு, யமுனா ஆகியோர் இருக்கிறார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=344703

நேற்று நடந்த போட்டியில் இலங்கையணியை 33 ஓட்ட வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அணி வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாக். அணி 20 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்கு 189 ஓட்டங்களைப் பெற்றது.

அடுத்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 156 ஓட்டங்களை மட்டுமே பெற்று மண்கவ்வியது.

ஜானா :D:(

5 போட்டியாளர்கள் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று சரியாகப் பதில் அளித்தார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=344940

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணையத்தளத்தில் எங்கே இலவசமாக நேரடி ஒளிபரப்பை பார்க்கமுடியும்??? ஏற்கனவே தந்த இணையத்தளத்தில் பார்க்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே இலவசமாக நேரடி ஒலிபரப்பை பார்க்கலாம்.

http://www.bollym4u.com/ch2.htm

இண்டைக்கு பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவ வெண்டிட்டாங்கள் போல இருக்கு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை , பங்களாதேசத்தை 64 ஓட்டங்களால் வென்றுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்க அணியின் வெற்றி தொடர்கிறது இங்கிலாந்து அணி 19 ஓட்டங்களால் தோல்வி [18 - September - 2007] [Font Size - A - A - A] `ருவென்ரி-20' உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி இங்கிலாந்தை தோற்கடித்துள்ளது. 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் `சுப்ப -8' ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சுற்றில் விளையாடத் தகுதி பெற்ற 8 அணிகளும் இ, எவ் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. `இ' பிரிவில் இந்தியா, தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளும், `எவ்' பிரிவில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகளும் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் `இ' பிரிவில் தென் ஆபிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. மொர்கல் 20 பந்தில் 43 ஓட்டங்களும் (4 சிக்சர், 3 பவுண்டரி), மார்க் பவுச்சர் 29 ஓட்டமும் எடுத்தனர். பிராட் 3 விக்கெட்டும், பிளின் டொப் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டமே எடுக்க முடிந்தது. இதனால் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியடைந்தது. ஓவேஷ் ஷா 31 பந்தில் 36 ஓட்டங்கள் (2 சிக்சர், ஒரு பவுண்டரி), பிரையர் 32 ஓட்டங்களும் எடுத்தனர். பொலக், மொர்கல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். மொர்கல் ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார். தென் ஆபிரிக்கா தனது அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்தை நாளை புதன்கிழமையும், இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை இன்றும் எதிர்கொள்கின்றன. http://www.thinakkural.com/news/2007/9/18/...s_page36310.htm`சுப்ப-8' இன் முதல் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்திடம் 10 ஓட்டங்களால் தோல்வி [18 - September - 2007] [Font Size - A - A - A] 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. முதலாவது 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென் ஆபிரிக்காவில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இதில், லீக்குடன் 4 அணிகள் வெளியேறிவிட்டன. `சுப்பர் - 8' சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகள் இ, எப் என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இ பிரிவில் தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்திய அணிகளும், எப் பிரிவில் பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். சுப்பர் - 8 சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. தொடக்க ஆட்டத்தில் `இ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய - நியூசிலாந்து அணிகள் ஜொகனஸ்பேர்க்கில் சந்தித்தன. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி கப்டன் தோனி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக வின்சென்ட்டும், மெக்குலமும் களமிறங்கினார்கள். 2 ஆவது ஓவரில் வின்சென்ட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆர்.பி.சிங் பந்தில், தினேஷ் கார்த்திக்கிடம் பிடி கொடுத்த வின்சென்ட் 3 ஓட்டங்கள் எடுத்தார். இதன் பின் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. 2 ஆவது விக்கெட்டுக்கு இறங்கிய புல்டான் 21 ஓட்டங்களிலும், மெக்குலம் 31 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 45 ஓட்டங்களிலும், ரோஸ் டெய்லர் 11 ஓட்டங்களிலும், ஸ்ரைரிஸ் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் 13 ஓவர்கள் வரை ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 5 ஆவது விக்கெட்டாக ஸ்ரைரிஸ் ஆட்டமிழந்த போது நியூசிலாந்து அணி 12.4 ஓவர்களில் 91 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 6 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த சகலதுறை வீரர்களான கிரேக் மக்மில்லன். ஜேக்கப் ஓரம் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. எல்லோரது பந்து வீச்சையும் சின்னா பின்னமாக்கினார்கள். யுவராஜ்சிங் வீசிய 16 ஆவது ஓவரில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உட்பட 25 ஓட்டங்கள் விளாசினார்கள். ஷ்ரீசாந்த் வீசிய 18 ஆவது ஓவரில் 3 சிக்சர்கள் பறந்தன. இதனால் நியூசிலாந்து அணி எதிர்பார்த்ததை விட அதிக ஓட்டங்கள் எடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 190 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து எடுத்த அதி கூடிய ஓட்டம் இதுவாகும். இதற்கு முன் 2004-05 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 170 ஓட்டங்கள் எடுத்ததே அதிக பட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மக்மில்லன் 23 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ஓட்டங்களும், ஓரம் 15 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 35 ஓட்டங்களும் கப்டன் வெட்டோரி 5 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ஓட்டங்களும் எடுத்தார்கள். கடைசி 5 ஓவரில் நியூஸிலாந்து அணி 78 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஆர்.பி.சிங், ஹார்பஜன்சிங் தலா 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர். இந்திய அணி 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி யது. ஓவருக்கு 9.51 ஓட்டங்கள் வீதம் தேவைப்பட்டது. கௌதம் கம்பிர், விரேந்திர ஷேவாக் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். அணியின் நிலைமையை உணர்ந்து அதிரடியை வெளிப்படுத்தினர். கடந்த ஆட்டத்தில் ஏமாற்றிய ஷேவாக் இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை நோகடித்தார். பந்துகள் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறந்தன. 4.1 ஓவர்களில் இந்திய அணி 50 ஓட்டங்களைக் கடந்தது. ஷேவாக்கின் ஆட்டத்தை பார்த்தபோது இந்திய அணியின் வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்பு தென்பட்டது. 5.5 ஓவர்களில் இந்திய அணி 76 ஓட்டங்களை எட்டிய போது முதல் விக்கெட் பிரிந்தது.17 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ஓட்டங்கள் விளாசிய ஷேவாக், ஓரம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உத்தப்பா (0 ஓட்டம்), நியூசிலாந்து கப்டன் வெட்டோரி பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் நின்ற கம்பிர் ஷேவாக் விட்ட பணியை கச்சிதமாக தொடர்ந்தார். இறுதியில் கம்பிர் 33 பந்துகளில் 5 பவுண்டரி,2 சிக்சருடன் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில், வெட்டோரி பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின் இந்திய அணியின் ஓட்ட வேகம் சரிந்தது. துணைக் கப்டன் யுவராஜ்சிங் 5 ஓட்டங்களில் (7 பந்து), ஆட்டமிழந்தது இந்தியாவுக்கு நெருக்கடியை அதிகப்படுத்தியது. பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்த கப்டன் தோனி, அவசரப்பட்டு ஓடி அவுட்டாக ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. தோனி 20 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 24 ஓட்டங்கள் எடுத்தார். பதான் (11 ஓட்டங்கள்), தினேஷ் கார்த்திக் (17) ஓட்டங்கள் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கிலெஸ்பி பந்து வீசினார். இந்தியாவிடம் ஒரு விக்கெட் கைவசம் இருந்தது. ஷ்ரீசாந்த் 2 பவுண்டரி அடிக்க இந்திய அணியால் இந்த ஓவரில் 12 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ஷ்ரீசாந்த் 10 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 19 ஓட்டங்களும், ஆர்.பி.சிங் ஒரு ஓட்டமும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. நியூசிலாந்து தரப்பில் கப்டன் வெட்டோரி பந்து வீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. 20 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்த அவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்த 2 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். இந்திய அணி 19 ஆம் திகதி இங்கிலாந்தையும், 20 ஆம் திகதி தென் ஆபிரிக்காவையும் சந்திக்கிறது. http://www.thinakkural.com/news/2007/9/18/...s_page36308.htm

யாழ்களப்போட்டியில் 2ம் இடத்தில் மறுத்தான். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=345351

யாழ்களப் போட்டியில் மீண்டும் முதலிடத்தில் கலைஞன். 4ம் இடத்திற்கு யமுனா முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=345502

  • தொடங்கியவர்

சிங்கத்தின் இரத்தங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டன

அவுஸ்திரேலியர்கள் 10 விக்கெற்றுகளினால் இலகுவாக வெற்றி பெற்று சிங்கள அணியை வீட்டுக்கு அனுப்பினர்

சிங்கள அணி 101/10

அவுஸ்திரேலியா 101/0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதியாட்டத்திற்கு Pakistan - Australia அணிகளே செல்லும்!!! Australia இறுதியாட்டத்தில் வெற்றி பெறும்.

இறுதியாட்டத்திற்கு Pakistan - Australia அணிகளே செல்லும்!!! Australia இறுதியாட்டத்தில் வெற்றி பெறும்.

நம்ம தலை சொன்னா சரியா தான் இருக்கும்......... :P

யாழ்களப் போட்டியில், நேற்றைய போட்டிகளின் முடிவில் யமுனா, மணிவாசகன், ஈழப்பிரியன் ஆகியோர் தங்களது இடங்களில் இருந்து முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=345854

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தெரிவு பெற்றுள்ளது

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட

20 ஓவர்களில்

5 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.

188 -5

இந்திய அணி வெற்றி[/sup]

ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட

20 ஓவர்களில்

7 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

தேவப்ரியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.