Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிவடக்கு தையிட்டியில் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரை : மக்கள் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் எத்தனையோ விகாரைகள் இருக்க, இங்கே வந்து, தங்கள் சொந்த  நிலங்களை இழந்து தவிக்கும் இடங்களில் வழிபட்டால் நேரே முக்தியடைந்து விடுவார்களோ? இதுதான் புத்தரின் கருணை காருண்யமோ?  உண்மையிலேயே புத்தர் ஒரு கடவுளாக இருந்திருந்தால், அவர் போதித்தவை பின்பற்றப்படும், அவர்மேல் பக்தி, பயம் இருக்கும். ஆனால் இங்கோ, அவரது போதனைக்கு எதிர்மாறானவையே நடக்கிறது. அதில் எங்கே புனிதம் உண்டு? புத்தமதத்தின்மேல் வெறுப்பே ஏற்படுகிறது. பாராளுமன்றத்தில் கூவுவதை விடுத்து சிங்கள மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். அதை செய்யவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

நாம் எல்லோரும் அதைப்பேசவேண்டிய காலம் மீண்டும் வரும். சிங்களவரே அதை உருவாக்கித் தருவார்கள். அதுவரை அந்த உணர்வுடன் நாம் இருக்கவேண்டும். 

நாடு இன்னும் வங்குரோத்து அடையவேண்டும், சிங்கள இனவாதிகள் அரசமடத்தினர் மக்களால் அடித்து விரட்டப்படவேண்டும், புத்தமதம் இல்லாது ஒழிய வேண்டும், அப்போ சாத்தியமாகும். ஆனால், நம் பக்கம் உள்ள பலரும் வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

நாடு இன்னும் வங்குரோத்து அடையவேண்டும், சிங்கள இனவாதிகள் அரசமடத்தினர் மக்களால் அடித்து விரட்டப்படவேண்டும், புத்தமதம் இல்லாது ஒழிய வேண்டும், அப்போ சாத்தியமாகும். ஆனால், நம் பக்கம் உள்ள பலரும் வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும்.

இதற்கான சாத்தியம் சிங்கள மக்கள் மனம் திருந்தினால் ஒழிய நடக்கப்போவதில்லை. எம்பக்கம் உள்ளவர்கள் நச்சுப் பாம்புகள். ஒருவரையும் நம்ப இயலவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் மனந்திருந்த இனவாதிகள் விடமாட்டார்கள், இராணுவ  இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள். காலிமுகத்திடலில் ஒரு புள்ளி ஆரம்பித்தது, அவர்களை அடக்கி தமிழரின் பக்கம் திசை திருப்பி விட்டது அரசு. ஆனாலும் அது முன்பு போல் பத்தி எரியவில்லை, அமைதி காக்கிறது. ஒன்று; அது தமிழருக்கு சாதகமாகிவிடும் என்கிற அச்சமாகவுமிருக்கலாம் இருந்தாலும் இதுவே ஒரு நல்ல ஆரம்பம் என்றுதான் சொல்லவேண்டும். ஒருநாள் இது உடைத்து வெளியேற வாய்ப்புமிருக்கு அரசு தன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு ; 09 பேர் கைது

Published By: DIGITAL DESK 3

23 MAY, 2023 | 02:46 PM
image

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை, அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விகாரைக்கு சற்று தூரத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். 

அதன் போது அங்கு வந்திருந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர். 

அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர். 

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/155957

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இவ்விடத்தில் சட்டவிரோதமான முறையில் கூட முடியாது. அதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு பணித்தனர். 

எங்கள் காணிகளில் நாங்கள் நிற்பது சட்ட விரோதம், தங்களுக்கு சொந்தமில்லாத காணிகளில் விகாரை அமைப்பது என்ன நிஞாயம்?

 

7 hours ago, ஏராளன் said:

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனியார் காணி ஒன்றில் நின்றிருந்த வேளை அவரை வலுக்கட்டாயமாக தூக்கி அக்காணியில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

அங்கிருந்த ஒரு ஊடகவியலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது; யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அது உறுதிப்படுத்தப்படாத செய்திகள் என அறியக்கிடக்கிறது. பாருங்கள் நம்ம ஊடகங்களை! இதுவே தெற்கு ஊடகங்களாயிருந்தால்; செய்தி எப்படி பரப்பப்பட்டிருக்கும்?

7 hours ago, ஏராளன் said:

அதனை மீறி அங்கு நின்றவர்களை சட்டவிரோதமான முறையில் கூடி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றனர் எனும் குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர். 

யார் யாரின் அமைதிக்கு, எங்கிருந்து பங்கம் விளைவிக்கின்றனர்? நல்லிணக்கம், பொது அமைதி, சமாதானம் இவற்றை கெடுப்பவர்கள், அதை ஏற்படுத்த வேண்டியவர்கள்! இல்லாத ஒன்றை மற்றவர்மேல் சுமத்துகின்றனர்.

எந்த ஒரு போராட்டத்திலும் ஆர்பாட்டமில்லாமல் அறிக்கை கந்தனாய் இல்லாமல் மக்களோடு மக்களாக குரல் கொடுப்பவர் செ. கஜேந்திரன். அவரோடு இன்னும் ஒருவர் பெயர் தெரியவில்லை, குடும்பி மலையில் எதிர்ப்பை வெளியிட்டபோது கைது செய்யப்பட்டார். அப்போது அவர் சொன்னது, "எங்களைப்பற்றி கவலைப்படவேண்டாம் போராட்டத்தை முன்னெடுங்கள்." என்கிறார். அவர்களுக்கும் அவர்களோடு தோள் கொடுத்து அயராது உழைப்பவர்களுக்கும் பாராட்டுக்கள்!

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்ட விரோத விகாரையை அகற்றக் கோரி போராட்டம்!

Published By: DIGITAL DESK 5

03 JUN, 2023 | 01:42 PM
image
 

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 ஆவது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்டம் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் யாழ். மாவட்ட மாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடக பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

20230603_101857.jpg

20230603_101845.jpg

20230603_101931.jpg

20230603_101833.jpg

20230603_101931.jpg

 

20230603_102013.jpg

20230603_101758.jpg

20230603_102304.jpg

https://www.virakesari.lk/article/156844

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி போராட்டம் தொடர்கிறது

Published By: VISHNU

03 JUL, 2023 | 01:47 PM
image
 

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை - திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமான 3வது கட்ட போராட்டத்தின் இரண்டாவது நாள் போராட்டம் திங்கட்கிழமை (03) ஆரம்பமாகியுள்ளது.

VideoCapture_20230703-125715.jpg

இன்றையதினம் போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

ஞாயிற்றுக்கிழமை (02) போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஞாயிறு இரவு போராட்டக்காரர்கள் பாதுகாப்பற்ற புதருக்கு அருகாமையிலேயே உறங்கினர்.

VideoCapture_20230703-125654.jpg

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டக்காரர்களுக்கு பலாலி பொலிஸார் பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலையும் இடர்களையும் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் போராட்டம் தொடர்கிறது.

VideoCapture_20230703-125657.jpg

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரரும் நாடாளுமன்ற உறுப்பினராமான செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

VideoCapture_20230703-125708.jpg

அந்தவகையில் இந்த போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு சமூக அக்கறையுள்ள அனைத்து அனைவரையும் அழைத்து நிற்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

VideoCapture_20230703-125632.jpg

VideoCapture_20230703-125641.jpg

VideoCapture_20230703-125625.jpg

https://www.virakesari.lk/article/159119

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.