Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணிப்பூரில் 'கண்டவுடன் சுட உத்தரவு', மாநிலம் முழுவதும் ஊரடங்கு - என்ன நடக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • பதவி,குவஹாத்தியிலிருந்து பிபிசி இந்திக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநில காவல்துறையுடன் இணைந்து பல இடங்களில் வன்முறையை கட்டுப்படுத்தியதாகவும், கொடி அணிவகுப்புகளை நடத்தியதாகவும் ராணுவம் முன்னதாக கூறியிருந்தது.

மாநிலம் முழுவதும் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு மொபைல் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தப்பரவலான வன்முறை தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்களில், பல இடங்களில் வீடுகள் தீயில் எரிவதைக் காண முடிகிறது. சுராசந்த்பூரில் ஒரு ஆயுதக் கடைக்குள் சிலர் புகுந்து துப்பாக்கிகளைக் கொள்ளையடிப்பதை ஒரு வீடியோவில் காணலாம்.

 

இருப்பினும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அத்தகைய படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள் எதையும் பிபிசி உறுதிப்படுத்தவில்லை. இந்த வன்முறையில் இதுவரை குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமையன்று மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங்கிடம் பேசினார். மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து அவர் கேட்டறிந்தார்.

இதற்கிடையில் மணிப்பூர் முதலமைச்சர் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைதி காக்குமாறு மாநிலத்தின் எல்லா சமூகத்தினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,GOVERNMENT OF MANIYUR

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்து இந்த வன்முறைச்சம்பவத்திற்கு கவலை தெரிவித்துள்ளார். "இது அரசியலுக்கான நேரம் அல்ல. அரசியலும் தேர்தலும் காத்திருக்கலாம். ஆனால் நமது அழகிய மாநிலமான மணிப்பூரைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தீவைப்பு தொடர்பான சில படங்களை பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை டேக் செய்து, "மணிப்பூர் எரிகிறது, தயவுசெய்து உதவுங்கள்" என்று எழுதியுள்ளார்.

எதிர்ப்புக்கும் வன்முறைக்கும் என்ன காரணம்?

பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.

மத்திய அரசின் பரிசீலனைக்கும் இதை அனுப்புமாறு நீதிமன்றம் தனது உத்தரவில் கேட்டுக் கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் புதன்கிழமையன்று தலைநகர் இம்ஃபாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்போது வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.

சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, சேனாபதி, உக்ருல், காங்போகபி, தமெங்லாங், சந்தேல் மற்றும் தெங்னௌபால் உள்ளிட்ட எல்லா மலை மாவட்டங்களிலும் இத்தகைய பேரணிகள் நடத்தப்பட்டன.

டார்பாங் பகுதியில் நடந்த 'பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு' பேரணியில் ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு பழங்குடி குழுக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,AVIK

பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் விஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் நடந்துள்ளன. தலைநகர் இம்ஃபாலில் இருந்து பல வன்முறை சம்பவங்கள் வியாழக்கிழமை காலை வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிகளில் தற்போதைய நிலைமை குறித்து பிபிசியிடம் பேசிய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், "தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வியாழக்கிழமை காலைக்குள் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது," என்றார்.

“ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினரின் உதவி மே 3 மற்றும் 4 இரவுகளில் கோரப்பட்து. அதன் பிறகு எங்கள் வீரர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சுமார் 4,000 கிராம மக்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு மாநில அரசின் பல்வேறு வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க கொடி அணிவகுப்பு நடத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

“இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படை, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட எல்லா சமூகங்களிலிருந்தும் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை வெளியேற்றுவதற்காக ஒரே இரவில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன,” என்று லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறினார்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,AVIK

மெய்தேயி சமூகத்திற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே என்ன தகராறு?

மணிப்பூரின் மக்கள் தொகை சுமார் 28 லட்சம். இதில் மெய்தேயி சமூகத்தினர் 53 சதவிகிதம் உள்ளனர். இந்த மக்கள் முக்கியமாக இம்ஃபால் பள்ளத்தாக்கில் குடியேறியுள்ளனர்.

மெய்தேயி சமூகத்திற்கு பட்டியலில் பழங்குடியினரின் அந்தஸ்து அளிக்கப்படுவதை எதிர்க்கும் குக்கி அமைப்பு, பல பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய ஒரு இனக்குழு ஆகும்.

மணிப்பூரில் பொதுவாக மலைப்பகுதிகளில் வாழும் பல்வேறு குக்கி பழங்குடியினர் தற்போது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவிகிதமாக உள்ளனர்.

மெய்தேயி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தங்கள் சேர்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்று மலைப் பகுதிகளில் குடியேறிய இந்தப் பழங்குடியினர் கூறுகிறார்கள், பெரும்பாலான இடஒதுக்கீட்டை மெய்தேயி மக்கள் எடுத்துக்கொண்டுவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

மணிப்பூரில் நடந்த சமீபத்திய வன்முறையானது, மாநிலத்தின் சமவெளிகளில் வசிக்கும் மெய்தேயி சமூகத்திற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே நிலவும் பழைய இனப் பிளவை மீண்டும் திறந்துள்ளது.

"மாநிலத்தில் இந்த வன்முறை ஒரு நாளில் வெடித்தது அல்ல. மாறாக பல விஷயங்கள் தொடர்பாக பழங்குடியினரிடையே முன்பே கோபம் நிலவி வருகிறது. மணிப்பூர் அரசு போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது," என்று மூத்த செய்தியாளர் பிரதீப் ஃபன்ஜோபம் கூறினார்.

"இது தவிர, வனப்பகுதிகளில் பல பழங்குடியினர் ஆக்கிரமித்துள்ள நிலங்களும் அவர்களிடமிருந்து மீட்கப்படுகின்றன. இதில் குக்கி பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறை வெடித்த இடம் சூராசந்த்பூர் பகுதி. குக்கிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இந்த எல்லா விஷயங்கள் தொடர்பாகவும் அங்கு பதற்றம் ஏற்பட்டது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் ராணுவம் அமைத்துள்ள தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மெய்தேயி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து அளிக்கும் கோரிக்கை குறித்த சர்ச்சை

"நீதிமன்றம் மாநில அரசுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கியது. ஏனெனில் மணிப்பூரில் உள்ள மெய்தேயி சமூகத்தினர் நீண்ட காலமாக எஸ்டி அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த கோரிக்கையின் பேரில் மெய்தேயி சமூகமும் பிளவுபட்டுள்ளது. இதில் சிலர் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றனர். சிலர் எதிராகவும் உள்ளனர்." என்று பிரதீப் ஃபன்ஜோபம் குறிப்பிட்டார்.

" மணிப்பூர் பட்டியல் பழங்குடியினர் கோரிக்கை கமிட்டி, மாநில அரசிடம் கடந்த 10 ஆண்டுகளாக இந்தக்கோரிக்கையை விடுத்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த அரசும் இந்தக்கோரிக்கை தொடர்பாக எதுவும் செய்யவில்லை. எனவே மெய்தேயி பழங்குடியினர் குழு நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் இந்தக் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கத்தொடங்கியது,” என்றார் அவர்..

மெய்தேயி சமூகத்திற்கு, எஸ்சி மற்றும் ஓபிசியுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் கிடைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் மெய்தேயிகள் எல்லாவற்றையும் அடைய முடியாது. மெய்தேயிகள் பழங்குடியினர் அல்ல. அவர்கள் SC, OBC மற்றும் பிராமணர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

மெய்தேயி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்கினால் தங்கள் நிலங்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால்தான் தங்கள் இருப்புக்கு ஆறாவது அட்டவணை வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலேயே மலைப்பாங்கான பகுதிகளுக்குச் சென்று குடியேற முடியாது. குக்கி மற்றும் எஸ்டி அந்தஸ்து கொண்ட பழங்குடியினர் இம்ஃபால் பள்ளத்தாக்கில் வந்து குடியேறலாம். இப்படிச் செய்தால் தங்களிடம் வாழ நிலம் இருக்காது என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,BBC / DILEEP SHARMA

 
படக்குறிப்பு,

யும்னம் ரூப்சந்திர சிங் - மூத்த பத்திரிக்கையாள

"பழமையான தகராறு"

"மணிப்பூரில் உள்ள தற்போதைய முறையின்படி, மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பாங்கான மாவட்டங்களில் குடியேற முடியாது. மணிப்பூரின் 22,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 முதல் 10 சதவிகிதம் மட்டுமே சமவெளிகள்," என்கிறார் மணிப்பூரைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் யும்னம் ரூப்சந்திர சிங்.

"மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமவெளிகளுக்குச் செல்லலாம். ஆனால் மெய்தேயி மக்கள் அங்கு குடியேற முடியாது என்பது மெய்தேயி சமூகத்தின் மிகப்பெரிய புகார். வயல் வெளிகளில் பட்டியல் பழங்குடியினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பல விஷயங்களில் மோதல் உள்ளது." என்றார் அவர்.

"எஸ்டி அந்தஸ்து வழங்குவது குறித்த உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மெய்தேயி சமூகத்தினருக்கு எஸ்டி அந்தஸ்து வழங்க நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. உண்மையில் மலைவாழ் மக்கள் மற்றும் சமவெளிப்பகுதி மக்களுக்கிடையிலான தகராறு மிகவும் பழமையானது. இந்த வன்முறை தவறான தகவலை பரப்பியதன் விளைவாக ஏற்பட்டதாகத் தெரிகிறது." என்று யும்னம் ரூப்சந்திரா கூறினார்.

மெய்தேயி இனத்தை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வேலைகள், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் வரிச்சலுகைக்கு மட்டுமல்ல. இந்தக் கோரிக்கை அவர்களின் பாரம்பரிய நிலம், கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக செய்யப்படுகிறது என்று மெய்தேயி மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து கோரி நீதிமன்றத்திற்கு சென்ற மணிப்பூரின் பட்டியல் பழங்குடியினர் கோரிக்கைக் குழு தெரிவித்தது.

https://www.bbc.com/tamil/articles/ckdyj9xl2n9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Manipur Violence: கண்டதும் சுட உத்தரவு… Internet முடக்கம்… களத்தில் இறங்கிய ராணுவம்… என்ன நடக்கிறது?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழப்பு

Published By: RAJEEBAN

07 MAY, 2023 | 12:09 PM
image

மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது.

 

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் எஸ்.டி. அந்தஸ்து கோரும் மேதே சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்குடி மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். 

 

இதன் காரணமாக கடந்த 3-ம் தேதி மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. அந்த மாநிலத்தில் 10 மலைப் பகுதி மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் மேதே சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. 

இதற்கு பதிலடியாக மேதே சமுதாய மக்களும் வன்முறையில் இறங்கினர். மாநில போலீஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டது.

manipur_unrest.jpg

கடந்த 4 நாட்களில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுமார் 20,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 3-ம் தேதி முதல் இதுவரை கலவரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் நாசமாகி உள்ளன.

 

மணிப்பூரில் ஜிரிபாம் பகுதியை சேர்ந்த 1,100 பேர் அண்டை மாநிலமான அசாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து குகி பழங்குடியினத்தை சேர்ந்த முங்பு கூறும்போது, “கடந்த 4-ம் தேதி காலையில் எங்கள் பகுதியை வன்முறை கும்பல் தாக்கத் தொடங்கியது. வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வேறு வழியின்றி சுமார் 1,100 பேர் அங்கிருந்து தப்பி அசாமில் தஞ்சமடைந்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

 

 

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. மணிப்பூரில் பதற்றம் நீடிப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் நீட் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ராணுவம், துணை ராணுவம், போலீஸாரின் நடவடிக்கைகளால் மணிப்பூரில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது என்று மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:

 மணிப்பூர் கலவரத்தில் நாகா, குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்களுக்கு தொடர்பிருப்பதாக மாநில போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில் சாய்டோன், டார்பாங் ஆகிய பகுதிகளில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு நடத்திய என்கவுன்ட்டர்களில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

கலவரத்தின்போது பாதுகாப்பு படைகளின் ஆயுதங்களை ஒரு தரப்பினர் சூறையாடிச் சென்றனர். அந்த ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

மணிப்பூரின் மோரே நகரில் சுமார் 20,000 தமிழர்கள் வசிக்கின்றனர். அந்த மாநிலத்தில் தற்போது வெடித்திருக்கும் கலவரத்தில் மோரே நகரம் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. அந்த நகரில் இருந்து சுமார் 2,000 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு மோரேவில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/154691

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Manipur Violence: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை... 10,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் கலவரத்தின் தற்போதைய நிலவரம்: 7 கேள்விகள், 7 பதில்கள்

மணிப்பூர் கலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஹீரோக்லியன் கிராமத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து எழும் புகைக்கு அருகே நிற்கும் இந்திய ராணுவ வீரர்.

9 மே 2023

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு ஏற்பட்ட கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தபட்சம் 52 பேர் கொல்லப்பட்டனர். 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

மியான்மரின் எல்லையில் உள்ள மாநிலத்தில் மே 3 அன்று பழங்குடியினர் குழுக்கள் பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான Meitei உடன், பொருளாதார நன்மைகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பாக மோதலில் தொடங்கியது.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தெய் சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பழங்குடியினரும், மெய்தெய் சமூகத்தினரும் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியது வன்முறையாக மாறியது.

இந்த வன்முறை மாநிலம் முழுவதும் பரவி வாகனங்கள், வீடுகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. ஏன் இந்த வன்முறை என்பதைப் புரிந்து கொள்ள 7 கேள்விகளையும், அவற்றிற்கான பதில்களையும் தெரிந்து கொள்வோம்.

1. மணிப்பூரின் புவியியல் மற்றும் சமூக அமைப்பு என்ன?

மணிப்பூர் கலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மணிப்பூரில் நடந்த வன்முறை

மணிப்பூரின் மக்கள்தொகை சுமார் 30 முதல் 35 லட்சம் வரை இருக்கும். இங்கு மெய்தெய், நாகா மற்றும் குகி என்ற மூன்று பெரிய சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.

மெய்தெய் சமூகத்தினரில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். அவர்களில் இஸ்லாமியர்களும் இருக்கின்றனர். மெய்தெய் சமூகத்தின் குடிமக்களின் விகிதம் மக்கள்தொகையில் அதிகமாக உள்ளது. நாகர்கள் மற்றும் குக்கிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 60 பேரில் 40 பேர் மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மீதமுள்ள 20 பேர் நாகா மற்றும் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை, மணிப்பூரின் முதலமைச்சர்களாக பதவி வகித்த 12 பேரில், இருவர் மட்டுமே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்.

மணிப்பூரின் புவியியல் அமைப்பு ஒரு கால்பந்து மைதானம் போல் உள்ளது. இம்பால் பள்ளத்தாக்கு அந்த கால்பந்து மைதானத்தில் உள்ள விளையாடும் இடத்தைப் போன்றது.

விளையாட்டு மைதானத்தின் நான்கு புறமும் உள்ள பார்வையாளர் அமரும் இடங்களைப் போன்று இந்த மாநிலத்தைச் சுற்றிலும் மலைப்பாங்கான பகுதி உள்ளது. மாநிலம் முழுவதும் 10 சதவீத நிலங்கள் மெய்தெய் சமூகத்தினர் வசம் உள்ளன.

இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தெய் சமூகத்தினர் பெரும்பாலான எண்ணிக்கையில் வசிக்கின்றனர். மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள 90 சதவிகித நிலங்கள் பழங்குடியினர் வசம் உள்ளன.

2. உண்மையில் எதிர்ப்பும் வன்முறையும் ஏன் ஏற்பட்டன?

மணிப்பூர் கலவரம்
 
படக்குறிப்பு,

போராட்டக்காரர்கள் திரண்டிருந்த காட்சி

மணிப்பூரில் 34 பழங்குடியினர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் நாகா மற்றும் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மாநிலத்தில் பெரும்பான்மையாக அதாவது 64 சதவீத மக்கள்தொகை கொண்ட மெய்தெய் சமூகம், பட்டியல் பழங்குடி அந்தஸ்து கோருகிறது. இந்தக் கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்த நிலையில், மெய்தெய் சமூகத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

அதில் கடந்த மாதம் உயர்நீதிமன்றம் அளித்த புதிய தீர்ப்பால் இடஒதுக்கீடு விவகாரம் மீண்டும் விவாதத்துக்கு வந்தது.

மணிப்பூர் உயர் நீதிமன்றம், ஏப்ரல் 19 அன்று தனது உத்தரவில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் உள்ள மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் நிலையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், இதை பரிசீலிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தலைநகர் இம்பாலில் இருந்து 65 கிமீ தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தின் டோர்பாங்கில் கடந்த 3-ம் தேதி அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் பேரணிக்கு ஏற்பாடு செய்தது.

'ஆதிவாசி ஏக்தா மார்ச்' என்ற பெயரில் இந்த பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் வன்முறையும் தொடங்கியதாக கூறப்படுகிறது.

சுராசந்த்பூர் மாவட்டத்தைத் தவிர, சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சண்டேல் மற்றும் தெங்னௌபால் உள்ளிட்ட அனைத்து மலைப்பகுதிகளிலும் இத்தகைய கூட்டங்களும் அணிவகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

மணிப்பூர் கலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தீ வைப்பு சம்பவம்

ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, டார்பந்தில் இதேபோன்ற அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் திரண்டபோது பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது.

விஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன, தலைநகர் இம்பாலில் அதற்கடுத்த நாள் வன்முறை வெடித்தது. பிபிசியிடம் பேசிய ராணுவ பிஆர்ஓ லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், “இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" என்றார்.

கடந்த வியாழக்கிழமை காலை வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் இருந்து இதுவரை 4000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.

ராவத்தின் கூற்றுப்படி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அனைத்து சமூகங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3. மெய்தெய் சமூகத்திற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே உள்ள முரண்பாடு என்ன?

மணிப்பூர் மக்கள்தொகை 30 வட்சம் - 35 லட்சம். இதில் மெய்தெய் சமூகத்தினர் 64 சதவீதமாக உள்ளனர். இவர்கள் இம்பால் பகுதியில் வசிக்கின்றனர்.

மெய்தெய் சமூகத்தை ஒரு பட்டியிலின பழங்குடியாக அறிவிப்பதை எதிர்க்கும் பழங்குடியினரில் குகி என்ற ஒரு குழுவும் உள்ளது. இதில் பல பழங்குடியினர் அடங்குவர்.

மணிப்பூரின் முக்கிய மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினரின் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் ஆகும்.

எனவே, மெய்தெய் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கினால், அந்த சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் பலனடைவார்கள் என்பதால், அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் என மலைவாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மணிப்பூரில் நடந்த சமீபத்திய வன்முறை சம்பவங்கள், மாநிலத்தின் சமவெளிகளில் வாழும் மெய்தெய் குழுவிற்கும் மலைவாழ் பழங்குடியினருக்கும் இடையே பழைய வகுப்புவாத மோதலை மீண்டும் கிளப்பியுள்ளது.

1949 இல் மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்ததற்கு முன்பு, ஒரு பட்டியல் பழங்குடி என்ற அந்தஸ்து இருந்ததாகவும், இருப்பினும், இணைப்புக்குப் பிறகு அது முடிவுக்கு வந்ததாகவும் மெய்தெய் இனத்தினர் கூறுகின்றனர். மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து பெரிய அளவிலான சட்டவிரோத குடியேற்றத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

4. மெய்தெய் சமூகத்திற்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதில் சர்ச்சை ஏன்?

நீதிமன்றம் மாநில அரசுக்கு ஒரு கருத்தை அளித்துள்ளது. ஏனெனில் மணிப்பூரில் மெய்தெய் சமூகத்தினர் நீண்ட காலமாக பழங்குடியினர் அந்தஸ்து கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கை மெய்தெய் குழுவை பிளவுபடுத்தியுள்ளது. மெய்தெய் மக்களில் ஒரு பகுதியினர் இக்கோரிக்கையை ஆதரிக்கின்றனர். சிலரிடம் எதிர்ப்பு இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் பிரதீப் பன்ஜோபம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “பட்டியலின பழங்குடியினர் கோரிக்கைக் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ஆனால் இந்த கோரிக்கையை எந்த அரசும் நிறைவேற்றவில்லை. அதனால் இந்தச் சமூகம் நீதிமன்றத்துக்குச் சென்றது.

இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதன் காரணமாக அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் மணிப்பூர் போராட்டத்தை தொடங்கியது.

மெய்தெய் சமூகம் ஏற்கனவே பிற பட்டியலின சமூகங்களுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகம் கூறுகிறது.

இந்நிலையில் மெய்தெய் சமூகத்தினர் அதனையும் பெற முடியாது என்றும், அவர்கள் பழங்குடியினர் அல்ல என்பதுடன், எஸ்சி, ஓபிசி மற்றும் பிராமணர்களுக்கான சமூக அந்தஸ்த்தையே பெறமுடியும் என பழங்குடி சமூகம் கூறுகிறது.

மணிப்பூர் கலவரங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

வன்முறைக் காட்சிகள்

மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளித்தால், அது பழங்குடியினர் நிலங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் அதனால் அவர்களை ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகம் கூறுகிறது.

மெய்தெய் சமூகத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளுக்கு செல்ல முடியாது என்றும், ஆனால் குகி மற்றும் எஸ்டி அந்தஸ்து கொண்ட பழங்குடியினர் இம்பாலில் வந்து வாழமுடியும் என்றும் கூறினார்.

மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து அளித்தால் தங்களுக்கு வாழ இடம் இல்லாமல் போய்விடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூகத்தினர் கூறுகின்றனர்.

5. தவறான தகவல் மற்றும் வதந்திகளால் வன்முறை தூண்டப்பட்டதா?

மணிப்பூர் கலவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மணிப்பூரில் காணப்பட்ட காட்சி

மணிப்பூரின் மூத்த பத்திரிகையாளர் யும்னம் ருப்சந்திரா சிங் பேசுகையில், "மணிப்பூரில் உள்ள தற்போதைய அமைப்பைப் பார்க்கும்போது, மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்குச் சென்று வாழ முடியாது என்றும், 22 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே சமவெளிப்பகுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மெய்தெய் இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீதிமன்றத்தை நாடிய குழுவின் கூற்றுப்படி, அவர்களின் கோரிக்கை வேலை, கல்வி அல்லது வரி விலக்கு மட்டுமல்ல. பூர்வீக நிலம், கலாசாரம் மற்றும் பாரம்பரிய அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ரூப்சந்திரா பேசியபோது, பழங்குடியினர் அந்தஸ்து விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கவேண்டும் என புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

உண்மையில் மலை மற்றும் பள்ளத்தாக்கு மக்களுக்கு இடையேயான தகராறு மிகவும் பழமையானது மற்றும் உணர்வுப்பூர்வமானது. நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பொய்யான வதந்திகள் பரவியதால் தான் வன்முறை வெடித்துள்ளது என்றார்.

6. முதல்வர் பிரேன் சிங் ஏன் விமர்சனத்திற்கு உள்ளானார்?

வன்முறைக்குப் பின்னால் வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மணிப்பூர் அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, முதல்வர் பிரேன் சிங், அபின் சாகுபடியை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்பதாகவும், இந்த முயற்சி வெற்றி பெற்றால், அது பழங்குடியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மியான்மர் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக மணிப்பூருக்கு வந்து குடியேறுபவர்களுக்குத் தடை ஏற்படும் என்றும் இது தொடர்பான அச்சத்தின் காரணமாக அவரைப் பதவியில் இருந்து அகற்ற சதி நடப்பதாகவும் தெரிய வருகிறது.

7. இதுவரை எத்தனை பேர் உயிர் இழந்திருக்கிறார்கள்?

இடஒதுக்கீடு பிரச்னையில் தொடங்கிய மோதலில் இதுவரை 52 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cxe77n81ypko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் வன்முறையின் விளைவுகளை அனுபவிக்கும் சாமானிய மக்கள்- கள நிலவரம்

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ராகவேந்திர ராவ்
  • பதவி,பிபிசி செய்தியாளர், மணிப்பூர்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

மணிப்பூரின் சமீபத்திய வன்முறையின் விளைவு இது.

சொந்த வீட்டை இழப்பதன் வலி என்ன என்பது பசந்தா சிங்கின் கண்களில் தெளிவாகத் தெரிகிறது.

பசந்தா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மணிப்பூரின் சைகுல் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அங்கு அவர் மளிகை கடை நடத்தி வந்தார்.

மாநிலத்தில் சமீபத்தில் வன்முறை வெடித்தபோது தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்ற அவர் தன் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

தலைநகர் இம்ஃபாலின் பங்கேய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிவாரண முகாமின் ஒரு மூலை மட்டுமே கடந்த பல நாட்களாக, அவர்களின் வசிப்பிடமாக மாறியுள்ளது.

வீட்டை விட்டு ஓடும்போது உடலில் அணிந்திருந்த ஆடைகளும் சில நகைகளும் மட்டுமே இந்தக் குடும்பத்தின் எஞ்சிய சேமிப்பு.

நன்றாக ஓடிக்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கை திடீரென அழிந்து போனதன் வலி, அவர்கள் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது.

“நாங்கள் சைகுலில் வாழ்ந்தபோது, எங்கள் பிள்ளைகளிடம் எல்லாம் இருந்தது. அவர்களிடம் சைக்கிள், பொம்மைகள், புத்தகங்கள் இருந்தன. இங்கு வந்ததில் இருந்து என் மகன், ’அப்பா, நான் கால்பந்து விளையாடப்போக வேண்டும், என் ஷூ எங்கே என்று கேட்கிறான். என் சிறிய பொம்மை கார் எங்கே என்று கேட்கிறான். திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறான். என் இதயம் வலிக்கிறது,” என்று பசந்தா சிங் கூறுகிறார்.

 

'இது உள்நாட்டுப் போர்'

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு

பசந்தா மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர், அவர் வாழ்ந்த சைகுல் பகுதியில் குகி பழங்குடியினர் அதிகம் உள்ளனர்.

 

வன்முறை தொடங்கிய உடனேயே தனது குகி நண்பர்கள் சிலர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அவர் கூறுகிறார்.

 

"நாங்கள் ஓடத்தானே வேண்டும், உள்நாட்டுப் போர் நிகழ்கிறது. எங்களால் சாமான்கள் எதுவும் கொண்டு வர முடியவில்லை. என் மகனின் செருப்புகளை கூட என்னால் கொண்டு வர முடியவில்லை. எந்த ஆடை அணிந்திருந்தோமோ அவற்றுடன் வந்து விட்டோம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

பசந்தா சிங் சோகத்தாலும் கவலையாலும் சூழப்பட்டுள்ளார்.

“இரண்டு குழந்தைகளுக்கு நான் எப்படி கல்வி அளிப்பேன். சம்பாதிக்க எந்த ஆதாரமும் இல்லை. பணமும் இல்லை. ஒரு வீடு கூட இல்லை. எவ்வளவு காலம் இங்கே இருப்போம்? இங்கே தங்கவில்லை என்றால் எங்கே போவது? நாள் முழுவதும் இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார் அவர்.

வன்முறை தொடங்கியபோது தனது கடையை பூட்டியதாகவும், ஆனால் கோபமடைந்த கும்பல் பூட்டை உடைத்து தனது கடையை சூறையாடியதாகவும் பசந்தா கூறுகிறார்.

 

பசந்தா சிங் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ள நிவாரண முகாமில் சுமார் 200 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

இவர்களுக்கு போர்வைகள், விரிப்புகள், பாய்கள், உடைகள் மட்டுமின்றி உணவுப் பொருட்களும், மருந்துகளும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

 

“துப்பாக்கிச் சண்டை எங்களுக்கு வேண்டாம். எங்கள் வாழ்வில் நிறைய இழப்புகள் நடக்கின்றன. மிகவும் கஷ்டப்படுகிறோம்,” என்று பசந்தா சிங் கூறினார்.

'எங்கள் கிராமம் எரிக்கப்பட்டது'

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு

பசந்தா உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய அதே சைகுல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில் பி.கின்லால் தனது குடும்பத்தினருடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

 

கின்லால் இந்திய ராணுவத்தில் இருபது வருடங்கள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.

 

தனது கிராமம் எரிக்கப்பட்டதாகவும் அதனால் நிவாரண முகாமில் தங்க நேர்ந்ததாகவும் அவர் கூறுகிறார்.

 

“நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறியவுடன், அந்த மக்கள் இருபது நிமிடங்களில் உள்ளே நுழைந்தனர். அதன் பிறகு கிராமத்தை எரிக்க ஆரம்பித்தனர்,” என்று பி கின்லால் கூறுகிறார்.

 

கிராமத்திலிருந்து தப்பிய கின்லால் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு நாள் காட்டில் ஒளிந்து கொண்டனர்.

“வீடு எரிக்கப்பட்ட பிறகு எங்களுக்கு வேறு எந்த ஆதரவும் இல்லை. பின்னர் ராணுவம் எங்களை இங்கு அழைத்து வந்தது,” என்றார் அவர்.

 

பசந்தா சிங்கின் குடும்பத்தைப் போலவே, பி கின்லாலின் குடும்ப உறுப்பினர்களும் வீட்டை விட்டு ஓடியபோது எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை.

"நாங்கள் அணிந்திருந்த உடைகளுடன் காட்டுக்குள் ஓடிவிட்டோம்,” என்று அவர் கூறினார்.

 

“இங்கே தூங்குவது சிரமமாக உள்ளது. சாப்பாட்டு பிரச்சனை உள்ளது. குழந்தைகள் அழுகிறார்கள். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அவருக்குக்கொடுக்க மருந்து இல்லை. தாயின் உயிர் பறிபோகுமோ அல்லது குழந்தையின் உயிர் போய்விடுமோ என்று தெரியவில்லை. அரசு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறது? நாங்கள் வெளிநாட்டவர்களா?,” என்று கின்லால் வினவினார்.

 

குகி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் கின்லால். மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தன் வீட்டை எரித்ததாக அவர் கூறுகிறார்.

 

“அரசு எங்கள் பெற்றோர். இதில் யாருடைய தவறு, என்ன காரணத்திற்காக இந்த சண்டை நடந்தது என்பதை அரசு பார்க்க வேண்டும். எதற்காக வீடு எரிந்தது, எதற்காக கிராமம் எரிக்கப்பட்டது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமானியர்கள் கஷ்டப்பட்டிருக்கக் கூடாது.” என்றார் அவர்.

 

அரசு தனது மக்களைக் கவனிக்காமல், மக்களை சாவதற்கு விட்டுவிட்டால், பிறகு எப்படி அமைதி ஏற்படும் என்று கின்லால் வினவினார்.

“மக்களின் இதயங்களில் பழிவாங்கும் உணர்வு ஏற்படும்,” என்கிறார் அவர்.

வன்முறை வெடித்தது ஏன்?

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு

மணிப்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை அறுபதுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்துள்ளனர்.

 

மாநிலத்தின் செல்வாக்கு மிக்க மெய்தேயி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையே இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம் என்று நம்பப்படுகிறது.

 

மணிப்பூரில் உள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், மெய்தேயி சமூகத்திற்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் குகி பழங்குடி மக்கள்.

 

மெய்தேயி சமூகம் ஏற்கனவே வளமும், செல்வாக்கும் கொண்டதாக உள்ளது என்றும், அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால், பழங்குடியினருக்கு கிடைக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் குறைவது மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாகக் ஆக்கிரமிக்கப்படும் என்றும் பழங்குடியினர் கூறுகின்றனர்.

 

மே 3ஆம் தேதி சுராசந்த்பூரில் மெய்தேயி சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டபோது, இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த தகராறு, வன்முறை மோதலாக மாறியது.

 

மணிப்பூரின் மலைப் பகுதிகளில், குகி பழங்குடியின மக்கள் அதிகமாகவும், மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர். இதேபோல், இம்ஃபால் பள்ளத்தாக்கில், குகி சமூக மக்களை விட மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

 

குகி மற்றும் மெய்தேயி சமூகங்களின் கிராமங்கள் ஒன்றுக்கொன்று சிறிது தொலைவில் அமைந்துள்ள பல பகுதிகளும் உள்ளன.

 

வன்முறை தொடங்கியவுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், எந்த சமூகம் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த சமூகம் குறைந்த எண்ணிக்கையிலான சமூகத்தைக் குறிவைத்தது.

 

இதன் விளைவாக, மெய்தேயி மற்றும் குகி ஆகிய இரு சமூகத்தினரின் நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சாம்பலாயின.

 

வன்முறை அதிகரித்ததால், மெய்தேயி ஆதிக்க பகுதிகளைச் சேர்ந்த குகி பழங்குடியினரும், குகி ஆதிக்க பகுதிகளைச் சேர்ந்த மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

 

நிலைமை மோசமடைந்து வருவதைக் கண்டு, மாநிலத்தில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டபோது, அவர்கள் இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்றனர்.

 

இப்போது இந்த ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது வீடுகளுக்கு திரும்ப அழைத்துச் செல்வது நிர்வாகத்தின் முன் பெரும் சவாலாக உள்ளது.

 

நூற்றுக்கணக்கான மக்கள் வாகனங்களில் அடைக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படும் காட்சிகளை மாநிலத்தின் பல பகுதிகளில் பார்க்க முடிகிறது.

சுராசந்த்பூரில் கள நிலவரம்

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு

இந்த வன்முறை தொடங்கிய சுராசந்த்பூரில் இன்னும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

 

இருபத்தி ஆறு வயதான சின்லியன்மோய்க்கு சுராசந்த்பூரில் நடந்த வன்முறையின்போது காலில் தோட்டா பாய்ந்தது.

“என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மணிப்பூரில் நிலைமை நன்றாக இல்லை. இங்கே நாங்கள் பிரவாசி(வெளியாள்) என்று அழைக்கப்படுகிறோம். ஆனால் நாங்கள் பிரவாசி அல்ல. எங்கள் முன்னோர்கள் இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். பழங்குடிகளுக்கு எதிரான பாகுபாடு எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அது அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

 

சுராசந்த்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் நாற்பது பேருக்கு குண்டு காயங்கள் இருந்ததாக இங்குள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் புல்லட் காயங்களால் இறந்தனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரான நியாங்கோய்சிங் மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல முயன்றபோது ஏற்பட்ட குண்டு காயங்களால் உயிரிழந்தார்.

 

அவரது சகோதரரான போமிங்தாங், தனது சகோதரியை இழந்த துக்கத்தில் உள்ளார்.

 

“மாநிலத்திலும் பாஜக ஆட்சி இருக்கிறது, மத்தியிலும் பாஜக ஆட்சி இருக்கிறது. இந்த வன்முறையை ஆரம்பத்திலேயே நிறுத்தியிருக்கலாம். இந்தப் படுகொலைகளை ஒரே நாளில் தடுத்து நிறுத்தியிருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

 

சுராசந்த்பூரில் பெரும்பாலும் குகி பழங்குடியினர் வாழ்கின்றனர். இந்த வன்முறைக்கு மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மறுபுறம், மெய்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குகி பழங்குடியினருக்கு எதிராக அதே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் உண்மை எங்கோ மறைந்துவிட்டது. பழங்குடி சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் அல்லாத சமூகங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக இருந்த அவநம்பிக்கையின் இடைவெளி இந்த வன்முறையால் ஆழமடைந்துள்ளது என்பது நிதர்சனம்.

ஆயுதங்களுடன் இரவு முழுவதும் ரோந்து

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு

இம்ஃபால் நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள புகாவோ பகுதியில் இந்த அவநம்பிக்கையின் ஒரு காட்சி காணக்கிடைத்தது.

 

இங்கு இரவு வந்தவுடன் மெய்தேயி சமூகத்தினர் ஆயுதங்களுடன் ஒன்று கூடுகிறார்கள்.

இங்குதான் தௌனோஜாம் ரபியை சந்தித்தோம்.

“குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இரவில் எங்களைத் தாக்குவார்கள் என்று நாங்கள் பயப்படுகிறோம். அதனால்தான் எங்கள் வீடுகள் எரியாமல் காப்பாற்ற இங்கு வந்துள்ளோம். எங்களுக்கு அதிக பாதுகாப்பு இல்லை. ஆனால் எங்கள் வீடுகளை காப்பாற்ற நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். இந்த நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்றால் மேலும் பல உயிர்கள் பலியாகும்,” என்று அவர் கூறினார்.

 

மணிப்பூரில் வன்முறை உச்சத்தில் இருந்த நேரத்தில் பல இடங்களில் காவல் நிலையங்களில் இருந்த அரசு ஆயுதங்களை மக்கள் கொள்ளையடித்ததாக சில செய்திகள் வந்தன.

 

புகாவோ பகுதியில் இரவு முழுவதும் தங்கள் கிராமத்தை காத்துக்கொண்டிருந்த மெய்தேயி மக்கள், காவல் நிலையங்களில் இருந்து ஆயுதங்களை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.

“எங்கள் கிராமங்கள் தாக்கப்பட்டபோது, எங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நிர்வாகத்திடம் கெஞ்சினோம். ஆனால் யாரும் வரவில்லை. எனவே ஆயுதம் ஏந்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் அல்லது உங்கள் ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள் என்று நாங்கள் போலீஸாரிடம் சொன்னோம்,” என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஒருவர் தெரிவித்தார்.

 

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளதாகவும், அரசு தங்கள் பாதுகாப்பை உறுதி செய்தால் இந்த ஆயுதங்களை திருப்பித்தர தயார் என்றும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

“எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இருக்கவில்லை. எங்கள் அருகில் காவல் நிலையம் உள்ளது. போலீஸ் இங்கு வரவில்லை. சண்டையை போலீஸ் நிறுத்தியிருக்கலாம். போலீசார் அதை செய்யவில்லை,” என்று புகாவோவில் வசிக்கும் டபிள்யூ ஓபன் சிங் கூறுகிறார்.

அச்சம் நிறைந்த சூழல்

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு

மாநிலத்தின் பல பகுதிகளில் அச்சச் சூழல் நிலவுகிறது. மக்கள் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள், பரஸ்பர நம்பிக்கையின்மை தெளிவாகத் தெரிகிறது.

 

இம்ஃபாலின் லாங்கோல் பகுதியில் பல சமூகங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இன்று அங்கு பதற்றத்துடன் கூடிய அமைதி நிலவுகிறது. இந்தப் பகுதியில் பாடசாலை ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.

 

தங்கள் பகுதியில் ஏன் வன்முறை ஏற்பட்டது என்பதை இந்த மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்த நேரத்திலும் தங்கள் வீடுகள் குறிவைத்து தாக்கப்படலாம் என இவர்கள் அஞ்சுகின்றனர்.

 

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் சாதி அல்லது சமூகத்தின் பெயரை ஒரு காகிதத்தில் எழுதி வீட்டு வாசல் கதவுகளில் ஒட்டியுள்ளனர்.

 

இப்படி சாதியை அறிவிப்பதன் மூலம் ஒருவேளை தங்கள் வீடுகளைக் காப்பாற்ற முடியும் என்றும், கும்பல் தாக்குதல் நடத்தினால் சாதியின் பெயரைப் படித்தபிறகு வீட்டை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

'குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்'

மணிப்பூர் வன்முறை, ஊரடங்கு

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து உண்மையைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் அரசு கூறியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடும் அறிவித்துள்ளது.

 

“யாரும் சண்டையையோ மோதலையோ விரும்பவில்லை. நாங்கள் தேவைக்கு அதிகமாகவே அனுபவித்துவிட்டோம். இரு தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மக்களுக்கும் சொந்தமான ஏராளமான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன,” என்று சுராசந்த்பூரில் உள்ள குகி மாணவர்கள் அமைப்பின் தலைவர் சன்சாங் வைஃபாய் தெரிவித்தார்.

 

அதே நேரத்தில், சமீபத்திய நிகழ்வுகளால் பழங்குடி சமூகங்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது.

 

“முக்கிய பிரச்சனை நிலம். இது தவிர மணிப்பூரில் பழங்குடியினரிடம் பாகுபாடு காட்டப்படும் விஷயமும் முக்கியமானது. ஆதிக்கம் செலுத்தும் மெய்தேயி சமூகத்தில் இருந்து முற்றிலும் பிரிந்து செல்ல வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் எங்களுக்கு தனி நிர்வாகம் கிடைக்கும்,” என்று ‘தி ரிஸர்ச் அண்ட் ப்ரிசெர்வேஷன் ஆஃப் ஸோ ஐடெண்டிடீஸ்’ அமைப்பின் தலைவர் கின்ஸா வோல்சோங் தெரிவித்தார்.

இத்தனைக்கும் மத்தியில், பசந்தா சிங், பி கின்லால் போன்ற ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கு ஏன் இப்படி நேர்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

“எங்கள் தவறு என்ன. நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. இந்த சண்டையை சீக்கிரம் முடியுங்கள். எங்களைப் போன்றவர்கள் அவர்கள் தரப்பிலும் இருப்பார்கள்,” என்று பசந்தா சிங் கூறுகிறார்.

 

மறுபுறம், "இரு தரப்பிலும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று பிகின்லால் கேட்டுக்கொண்டார்.

 

நிச்சயமற்றதன்மை நிறைந்த எதிர்காலம் மற்றும் நீதி கிடைக்குமா? ஆயிரக்கணக்கான மக்களின் மனதில் இந்த எண்ணங்கள்தான் இப்போது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/cd1r59lzgj5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரில் மீண்டும் மோதல்.. பொலிஸ் கமாண்டோ ஒருவர் பலி..!

Published By: RAJEEBAN

12 MAY, 2023 | 01:43 PM
image

மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூரில் குகி இனத்தவர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் கமாண்டோ ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் அண்மையில் மாற்று சமூகத்தினருக்கு பழங்குடியினர் என்று சான்றளிக்க பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. வீடுகள், கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு, இராணுவமும் களமிறக்கப்பட்டது.

இந்நிலையில் காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது குகி சமூகத்தைச் சேர்ந்த போராளிக் குழுவினர் ஒரு கமாண்டோவை சுட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் சிலர் காயமடைந்தனர். அங்கு துணை இராணுவப்படையினர் சென்று காயமடைந்த கமாண்டோக்களை மீட்டனர்.

இதனிடையே தாங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்கள் வீட்டு கதவுகளில் மக்கள் பெயர்களை ஓட்டி வருகின்றனர். தாக்குதல்களை தவிர்க்கவே இத்தகைய உத்தியை பயன்படுத்துவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அமைதி திரும்பிய மணிப்பூரில் தற்போது மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் அங்கு நிலைமை சிக்கலாகியிருக்கிறது.

https://www.virakesari.lk/article/155116

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத்தோடு அணுகுவது பலவீனமல்ல - மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு அரணாக நிற்கும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை

27 JUN, 2023 | 02:25 PM
image
 

மணிப்பூரில் கலவரக்காரர்களுக்கு ஆதரவாகப் போராடும் பெண்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதாபிமானத்தோடு தாங்கள் அணுகுவதை தங்களின் பலவீனமாகக் கருதி பெண்கள் கலவரக்காரர்களை ஆதரிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

manipur_women1.jpg

மே மாதம் தொடங்கி.. கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் மாநிலம் வன்முறை பூமியாகப் பற்றி எரிகிறது. காரணம் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். இதில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குகி பழங்குடியினர். கடந்த மே மாதம் முதன்முதலாக நடந்த அமைதிப் பேரணியில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி இரண்டு மாதங்களாகிறது.

ஏன் எதிர்ப்பு? மணிப்பூரின் மேதேயி மக்கள், பெரும்பான்மை இனத்தவர். இவர்கள் மாநிலத்தின் சமவெளிப் பகுதிகளில் வசிக்கிறார்கள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இவர்களின் கொடியே அங்கு பறக்கிறது. மணிப்பூரின் புவியமைப்பை பொறுத்தளவில், சமவெளியின் பங்கு குறைவாகவும், மலைப்பாங்கு அதிகமாகவும் கொண்டுள்ளது. மலைப்பாங்கு நெடுக, குகி மற்றும் நாகர் பழங்குடி மக்களே வசிக்கின்றனர். 32 உட்பிரிவுகளைக் கொண்ட குகி மக்கள், மேதேயி மக்கள் அளவுக்கு முன்னேற வாய்ப்பின்றி பின்தங்கியே உள்ளனர்.

 

இந்நிலையில் மேதேயி மக்களின் பட்டியலின உரிமை குரலுக்கு, குகி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே சகலத்தையும் ஆக்கிரமித்து முன்னேறி இருக்கும் மேதேயி மக்கள், பழங்குடி பட்டியலுக்குள் வந்தால் தாங்கள் மேலும் நலிவடைந்துவிடுவோம் என அச்சம் தெரிவிக்கின்றனர் குகி மக்கள். இதுதான் இரு தரப்பினருக்கும் இடையேயான போராட்டத்துக்குக் காரணம்.

ஆயுதக் குழுக்களுக்கு கேடயமாக: இந்நிலையில் இந்தப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் பல செயல்படுகின்றன. இவர்கள்தான் வன்முறைக்கும் காரணமாக இருக்கின்றனர். இவர்களைக் கைது செய்தால் கலவரத்தைக் கட்டுப்படுத்தலாம் என்பதே ராணுவம், துணை ராணுவம், காவல்துறை என அனைத்து பாதுகாப்புப் படைகளின் ஒற்றை வலியுறுத்தலாக இருக்கிறது. ஆனால், இதற்கு தடையாக இருக்கின்றனர் பெண்கள்.

 

கலவரக்காரர்களை காக்கும் பெண்கள்: மணிப்பூரில் கேஒய்கேஎல் (Kanglei Yawol Kanna Lup) என்ற ஆயுதக் குழுவைச் சேர்ந்த 12 பேரை ராணுவத்தினர் கைது செய்தனர். ஆனால் அதனை எதிர்த்து பெண்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அமைதியை நிலைநாட்டும் பணிகளை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டதால் ராணுவம் கைது செய்த 12 பேரை மீண்டும் ஒப்படைத்தது. இந்நிலையில், நேற்றிரவு இந்திய ராணுவத்தின் தி ஸ்பியர் கார்ப்ஸ் படைப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் களத்தில் கலவரக்காரர்களுக்கு அரணாக இருக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அதற்கு, மணிப்பூர் பெண்களின் அமைதிப் போராட்டத்தின் உண்மைப் பின்னணி என்று தலைப்பிட்டுள்ளது.

மனிதாபிமானம் பலவீனம் அல்ல: அந்த வீடியோவில், கடந்த சனிக்கிழமை இத்தாம் பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அசாம் ரைஃபில்ஸ் படைப்பிரிவினர் தளவாடங்களுடன் சென்று வரக்கூடிய முக்கியப் பாதை புல்டோசர் கொண்டு தோண்டப்படுகிறது. அதற்கு அரணாக பெண்கள் நிற்கின்றனர். அதேபோல் கார், ஆம்புலன்ஸ், டிராக்டர் எனப் பல வாகனங்களில் பெண்கள் புடைசூழ நடுவில் கலவரக்காரர்கள் ஆயுதங்களுடன் பத்திரமாக இத்தாமில் இருந்து வெளியேறுகின்றனர். இப்படி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே பெண்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களை நாங்கள் மனிதாபிமானத்தோடு அணுகுகிறோம். அதனால் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை.

 

பாதுகாப்புப் படையினரை தடுப்பது என்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விடாமல் தடுக்கும் குற்றமும் கூட. ஆகையால் இரவு பகலாக மணிப்பூர் அமைதிக்காகப் போராடும் படைகளுக்கு உதவும்படி அனைத்துத் தரப்பு மக்களையும் ராணுவம் கேட்டுக் கொள்கிறது. மணிப்பூருக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/158695

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் பெண்களுக்கு இது மூன்றாவது போர் - ராணுவத்தை எதிர்த்து நிற்கும் 'மகளிர் படை'

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கை கோரி தீப்பந்தங்களுடன் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி,பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ ஒன்றை இந்திய ராணுவம் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இரண்டு நிமிடம் 14 விநாடிகள் கொண்ட அதில் நிராயுதபாணிகளான பெண்கள் ஒரு பரபரப்பான தெருவில் ராணுவ வீரர்களை எதிர்த்து வாக்குவாதம் செய்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு சாலையில் மண் தோண்டும் ஓர் இயந்திரத்தைச் சுற்றி பெண்கள் கூடியிருந்ததும், சொகுசு கார்கள் அந்தச் சாலையில் சென்றுகொண்டிருந்த காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இரு சமூகங்களுக்கு இடையே தொடங்கிய வன்முறைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிகின்றன. பெரும்பான்மையான மெய்தேய் மற்றும் பழங்குடி குகி சமூகங்களுக்கு இடையிலான மோதல்களில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 

இந்த வன்முறையால் 60,000 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். பெரும்பான்மை மெய்தேய் சமூகத்தினரும் குகி இன மக்களும் வாழும் மணிப்பூரில் பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படை வீரர்கள் இருந்தபோதிலும், இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

வன்முறையாளர்களை பெண்கள் காப்பாற்றுகிறார்களா?

 

ஆழமான பிளவுகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையற்ற நிலை காணப்படும் மணிப்பூர் பள்ளத்தாக்கில் அமைதியை மீட்டெடுப்பது மெதுவான மற்றும் கடினமான பயணம் என்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

'மணிப்பூர் பெண்கள் தலைமையிலான போராளிகள் அமைதியான முறையில் களத்தில் நிற்கின்றனர் என்ற கட்டுக்கதையை முறியடிக்கும் காட்சிகள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெண்களுக்கு எதிரான சில ஆச்சரியமேற்படுத்தும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.

"வன்முறையில் ஈடுபடுபவர்கள் தப்பி ஓட உதவுகிறார்கள்" என்பது தான் பெண் எதிர்ப்பாளர்கள் அதில் முக்கிய குற்றச்சாட்டாக இடம்பெற்றுள்ளது.

வன்முறையாளர்கள் பலதரப்பட்ட வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் தப்பிச் செல்ல இப்பெண்கள் உதவுவதாகவும், மண் தோண்டும் இயந்திரங்களைக் கொண்டு பாதுகாப்புப் படையினரின் பாதைகளில் பள்ளங்களை உருவாக்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க இரவும் பகலும் பணியாற்றி வரும் பாதுகாப்புப் படையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 2004ஆம் ஆண்டு ராணுவத்துக்கு எதிராகப் போராடிய பெண்கள் தங்கள் ஆடைகளைக் களைந்து உலகையே திகைப்படையச் செய்தனர்

இரண்டாவது வீடியோ, கிளர்ச்சியடைந்த பெண்களின் குழுவிற்கும் ஒரு பொறுமையான ராணுவ வீரருக்கும் இடையிலான பதற்றமான உரையாடலைக் காட்டுகிறது.

"அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் இங்கிருந்து போகலாம்," என்று ஒரு பெண் அந்த ராணுவ வீரரிடம் கூற, மற்ற பெண்கள் அவரைச் சுற்றி கூடி நின்றனர்.

ராணுவம் கடந்த வாரமும் இதேபோல் ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தது.

அதில், வன்முறையாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்த நேரத்தில், மணிப்பூர் தலைநகர் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் சுமார் 1,500 பெண்கள் ராணுவ வீரர்களைச் சூழ்ந்துகொண்டு 12 வன்முறையாளர்களை விடுவித்ததாகத் தெரிவித்திருந்தது.

சுமார் 33 லட்சம் மக்கள் வாழும் மணிப்பூரில், 6% பேர் இந்த மாவட்டத்தில்தான் வசிக்கின்றனர்.

மெய்ரா பைபிஸ் என்ற மகளிர் அமைப்பு

கொந்தளிப்பில் சிக்கித் தவிக்கும் மணிப்பூர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படைகளுக்கு சவால் விடும் பெண்களில் பலர் மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

'தீப்பந்தம் ஏந்திய பெண்கள்', 'இமாஸ்' அல்லது 'மணிப்பூரின் மாதாக்கள்' எனப் பல பெயர்களில் இந்த மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். 2004ஆம் ஆண்டில், 32 வயது பெண் ஒருவரை துணை ராணுவப் படையினர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றம் சாட்டி, இந்தப் பெண்கள் ஒரு போராட்டம் நடத்தினர்.

தலைநகர் இம்பாலில் உள்ள ஒரு ராணுவ முகாமிற்கு வெளியே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, 'இந்திய ராணுவம் எங்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நடத்துகிறது' என்ற பதாகையை ஏந்தி நிர்வாணமாக அவர்கள் நின்றது உலகையே திகைக்க வைத்தது.

மெய்ரா பைபிஸ் அமைப்பில் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த பெண்களே பெரிதும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் பொதுவாக திருமணமான பெண்களாகவும், 30 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்த மகளிர் அமைப்பில் இணைந்து அவர்கள் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டதால் அவர்களை 'கட்டமைப்புடன் கூடிய பாதுகாப்புப் பணியாளர்கள்' என வரலாற்றாசிரியர் லைஷ்ராம் ஜிதேந்திரஜித் சிங் கூறுகிறார்.

இந்த மெய்ரா பைபிஸ் அமைப்பு, கடந்த 1900களின் முற்பகுதியில் உருவானதாகக் கருதப்படுகிறது. அந்தக் காலகட்டங்களில் 17 முதல் 60 வயதுடைய ஆண்களுக்கு சம்பளம் எதுவும் தராமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் அவர்களைக் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தினர்.

இதைக் கண்டித்து அப்போது ஒரே மாதிரியான எண்ணம் கொண்ட ஏராளமான பெண்கள் ஒன்றிணைந்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்திக் காட்டினர். இதிலிருந்துதான் மெய்ரா பைபிஸ் அமைப்பு தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மணிப்பூர் வன்முறை காரணமாக 60,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறிய நிலையில், முகாம் ஒன்றில் அமர்ந்திருந்த பெண்

கடந்த 1949இல் மணிப்பூர் இந்தியாவுடன் இணைந்ததில் இருந்து, மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் எதிர்ப்பு குறித்து இடைவிடாத பிரசாரம் மேற்கொண்டதற்காக பொதுமக்களிடையே முக்கியத்துவம் பெற்றனர்.

"இணக்கமாக இருப்பது மற்றும் பிடிவாதமற்ற தன்மையுடன் அவர்கள் செயல்பட்டு வருவதால் அவர்கள் சமூகம் தொடர்பான எந்தவொரு பிரச்னையிலும் தலையிட முடிகிறது.

இது, 'மெய்ரா பைபிஸ் அமைப்பு பெண்களின் பிரச்னைகளுக்காக மட்டும் போராடும் அமைப்பு' என்ற நிலையிலிருந்து, 'அனைத்து பிரச்னைகளுக்காகவும் போராடும் அமைப்பு' என்ற நிலைக்கு எடுத்துச் செல்கிறது," என்று மணிப்பூரில் பெண்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யும் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தின் ஸ்ருதி முகர்ஜி குறிப்பிடுகிறார்.

கடந்த 1980இல் இன மோதல் மற்றும் வன்முறையில் மணிப்பூர் சிக்கித் தவித்தபோது, அமைதியை மீட்டெடுத்ததில் இந்தப் பெண்கள் பெரும் பங்காற்றினர். 1958ஆம் ஆண்டில், இந்தியா சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) இயற்றியது.

பாதுகாப்பு வீரர் ஒருவர் தவறுதலாக அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு குடிமகனைக் கொன்றுவிட்டால் அவரை இந்தச் சட்டம் பாதுகாக்கிறது. ஆனால் இந்தச் சட்டத்தை அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்காகவே கருதி, அப்பாவிப் பொதுமக்களை பல சந்தர்ப்பங்களில் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

 

மணிப்பூரில் 1979 முதல் 2012ஆம் ஆண்டு வரை பாதுகாப்புப் படையினரால் போலி என்கவுன்டர்கள் மூலம் 1,528 பேர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டனர். 1980ஆம் ஆண்டில், மெய்ரா பைபிஸ் அமைப்பினர் ஒரு காவல் நிலையத்திற்கு பேரணியாகச் சென்று, அங்கு தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபரை விடுதலை செய்தனர்.

மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள், அவர்கள் வசித்த பகுதியில் இரவு நேரத்தில் பாதுகாப்புப் படையினர் சில இளைஞர்களைக் கைது செய்ய முயன்றபோது, "இரவு முழுவதும் எரியும் தீப்பந்தங்களுடன் அங்கேயே இருந்து அந்தக் கைது நடவடிக்கையைத் தடுத்தனர்.

அப்போது மின்கம்பங்களைத் தட்டி, அல்லது மூங்கில் கம்புகளை தரையில் தட்டி பலத்த ஓசை எழுப்பி பாதுகாப்புப் படையினருக்கு எதிராக காவலில் நின்றார்கள்," என்று லைஷ்ராம் ஜிதேந்திரஜித் சிங் கூறுகிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சியால் கொதித்தெழுந்த மணிப்பூர் மாநிலத்தில், மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆழமாக வேரூன்றிய பகை உணர்வு நீடிக்கிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறைகளை அடுத்து, உள்ளூர் காவல்துறையின் அதிவிரைவுப் படையைச் சேர்ந்த மூன்று காவலர்கள் வீடுகளுக்குத் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வன்முறையாளர்கள் சில கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியபோது, ஒரு சமூகத்தினுடைய விசுவாசத்தின் காரணமாக சில துணை ராணுவ வீரர்கள் இதுபோன்று சட்டவிரோதமாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ராணுவத்துக்கு எதிராகத் திரும்பிய பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பெண்களால் நடத்தப்படும் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய சந்தை ஒன்று இம்பாலில் செயல்பட்டு வருகிறது

மெய்ரா பைபிஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோங்கம் ஜாய்மாலா, "ராணுவத்தின் செயல்பாடுகளில் பெண்கள் மகிழ்ச்சியடையவில்லை" என்கிறார்.

"மலைப்பகுதியில் மறைந்திருக்கும் ஆயுதம் ஏந்திய குகி இன குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினரால் இதுவரை தடுக்க முடியவில்லை. அதனால் பள்ளத்தாக்கில் அவ்வப்போது பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது போன்ற குற்றவாளிகளை பாதுகாப்புப் படையினர் மட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

மேலும் மலைப்பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் நாங்கள் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாட்டோம்," என்று அவர் கூறுகிறார்.

அமைதிக்கான வடகிழக்கு இந்திய பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பினாலக்ஷ்மி நேப்ரமும் இதேபோன்ற கருத்தை முன்வைக்கிறார்.

"பாதுகாப்புப் படைகளின் ஒரு பிரிவினர் வேண்டுமென்றே பிரிவினையையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்த முயல்கிறார்கள். இதனால்தான் மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் மணிப்பூரை பாதுகாக்கும் உணர்வுடன் களத்தில் இறங்கியுள்ளனர்," என்று அவர் கூறுகிறார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம்,ANI

 
படக்குறிப்பு,

டெல்லி ஜந்தர் மந்தரில் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பகிர்வதற்குப் பதிலாக, மெய்ரா பைபிஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ராணுவம் தன்னுடைய "தைரியத்தைக் காட்டியிருக்க வேண்டும்" என்று நெப்ராம் கூறுகிறார்.

அதோடு மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குகி இன பெண்களுடன் இணைந்து பணியாற்றி அமைதியை மீட்டெடுக்க ராணுவம் உதவ வேண்டும் என்றும் நெப்ராம் கூறுகிறார். "மணிப்பூர் பெண்களைச் சேர்க்காமல், மாநிலத்தில் நிலையான அமைதியை மீட்டெடுக்க முடியாது."

ஆனால் சிலர் அதை மறுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. தாய்வழி சமூகமாக இல்லாவிட்டாலும், மணிப்பூரில் எப்போதுமே பெண்கள் பொது விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர்.

இம்பாலில், தெற்காசியாவிலேயே மிகப் பெரிய பெண்கள் சந்தையையும் அவர்கள் நடத்தி வருகிறார்கள். ஆயுதப்படைகளின் அட்டூழியங்களை எதிர்த்து, இரோம் ஷர்மிளா என்ற சமூக ஆர்வலர் 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தார்.

இம்பாலில் உள்ள மருத்துவமனை அறையில் ஆயுதம் ஏந்திய காவலர்கள், செவிலியர்களுக்கு இடையே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவர் மனம் தளராமல் தமது போராட்டத்தைத் தொடர்ந்தார்.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம்,ANI

இது மட்டுமின்றி, சுற்றுப்புறங்களில் எப்போதும் தாக்குதல்கள், மோதல்கள் நிகழும் ஆபத்து உள்ள போதிலும், உள்ளூர் பெண்கள் இப்போது ரோந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மணிப்பூரில் உள்ள பெண்கள் 1904 மற்றும் 1939ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக 'நுபி லான்' அல்லது பெண்கள் போர் என அழைக்கப்படும் இரண்டு பெரிய தாக்குதல் நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

"மணிப்பூரின் தீப்பந்தப் போராளிகளுக்கு இது மூன்றாவது போர் நடவடிக்கை என்பதுடன், இது தைரியமான பெண்களின் ஒரு போர் நடவடிக்கை என்பதே உண்மை" என்கிறார் நேப்ராம்.

மெய்ரா பைபிஸ் அமைப்பினர் அமைதியை நாடுகின்றனர் என்கிறார் ஜாய்மாலா.

"எங்கள் விவசாயிகள் தங்கள் வயல்களுக்குச் செல்ல முடியாத நிலையில், எங்கள் பெண்கள் சந்தைக்குச் செல்ல முடியாத நிலையில் எங்கள் பிழைப்பைத் தொடர முடியாத அளவுக்கு ஒரு முற்றுகையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்."

https://www.bbc.com/tamil/articles/cge17glp21go

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rahul Gandhi Manipur Visit: கதறி அழுத மக்கள்; ஆரத்தழுவிய ராகுல். மணிப்பூர் பயணத்தில் நடந்தது இதுதான்

இந்தியாவை உலுக்கிய மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்டவுடன் சுடும்படி சொன்னது பாதிக்கப்படட குக்கி இனத்தவரை. மட்டரப்படி இந்த அநியாயத்தை செய்தது மோடியும், அங்குள்ள முதலமைச்சரும்தான். உலகம் அறிந்த உண்மை. மனித மிருகங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

c6489c90-173f-11ee-8cae-4785e93eadf1.jpg

நான் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது செய்யாததையா இப்ப செய்துவிட்டார்கள்?

இந்தளவிலாவது விட்டுவிட்டார்களே என்று சந்தோசப்படுங்க.

எதுக்கும் உங்களை சந்தோசப்படுத்த ஒரு அறிக்கை விடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் எப்போது குஜராத் அமைச்சரானார் ?😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

ஈழப்பிரியன் எப்போது குஜராத் அமைச்சரானார் ?😀

அக்கா இது மோடியின் மைன் வைஸ்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரில் நடந்த புதிய மோதலில் 17 பேர் காயம்: உயிரிழந்த 35 பேரை ஒரே இடத்தில் அடக்கம் செய்யும் முடிவு தள்ளிவைப்பு

04 AUG, 2023 | 11:15 AM
image
 

இம்பால்: மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் உடல்களை ஓரே இடத்தில் அடக்கம் செய்யும் முடிவு உயர் நீதிமன்ற உத்தரவு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

மணிப்பூரில் மைத்தேயி இனத்தவர்கள் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த மே 3-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இந்த கலவரத்தில் உயிரிழந்த குகி-ஜோமி இனத்தைச் சேர்ந்த 35 பேரின் உடல்களை பாதுகாத்து வைத்துள்ளனர். சுராசாந்த்பூர் மாவட்டம் ஹாலாய் கோபி கிராமத்தில் உள்ளஒரு இடத்தில் அந்த 35 பேரின்உடல்களை மொத்தமாக நேற்று அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் தலைமையிலான அமர்வு நேற்று காலை 6 மணிக்கு விசாரணை நடத்தியது. இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள்இ இந்த விவகாரத்தில் இப்போது உள்ள நிலை தொடர வேண்டும் என மத்திய மாநில அரசுகள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உத்தரவிட்டனர். இந்த மனு குறித்த விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த உத்தரவின்படி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

இதனிடையேஇ குகி சமுதாயத்தினர் சங்க கூட்டமைப்பான இண்டிஜெனஸ் டிரைபல் லீடர்ஸ் போரம் (ஐடிஎல்எப்) வெளியிட்ட அறிக்கையில்இ “கலவரத்தில் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் மொத்தமாக அடக்கம் செய்வது தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சக அதிகாரிகளுடன் புதன்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிகாலை 4 மணிவரை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உடல்களை அடக்கம் செய்ய உள்ள இடம் சட்டப்படி ஒதுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. மாநில முதல்வரும் இதே உறுதியை அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கையை 5 நாட்களுக்கு தள்ளி வைத்துள்ளோம்.” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே உடல்களை அடக்கம் செய்ய திட்டமிட்டிருந்த கிராமத்தை ஒட்டியுள்ள விஷ்ணுபூர் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே பதற்றம் நிலவியது. பாதுகாப்புப் படையினர் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் திரண்டனர். அவர்கள் தங்களை உடல் அடக்கம் நடைபெறும் கிராமத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தினர்.

தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற இவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காங்வாய் பூகாக்சாவ் ஆகிய 2 இடங்களில்ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயம்அடைந்தனர். பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

மீண்டும் ஊரடங்கு: இந்த மோதலைத் தொடர்ந்து கலவரம் பரவும் என கருதிய அதிகாரிகள் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நேற்று பகலில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.

https://www.virakesari.lk/article/161599

  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூர் பொலிஸ் ஆயுதகிடங்கில் இருந்து கரவரம் செய்வோர் ஆயுதங்களை பொரும் தொகையாக கொள்யைடித்து இப்போது ஆயுதகிடங்கு ஒன்றுமில்லாமல் வெறுமையாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரிய மனித அவலத்தை மோதி அரசு மூடி மறைக்கிறது.

வெளிச்சக்திகள் பின்னால் இயங்குகிறார்கள் என்று சப்பைக்கட்டு வேறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரம்: 3 பேர் சுட்டுக்கொலை; ஊரடங்கு தளர்வு வாபஸ்

05 AUG, 2023 | 09:34 AM
image
 

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம் நடந்துள்ளது. கலவரத்தால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இது குறித்து பிஷ்ணுபூர் காவல்துறை தரப்பில், "மத்தியப் படைகளின் பாதுகாப்பு வளையத்தில் இருந்த பாதுகாப்புப் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குவாக்டா பகுதிக்குள் கலவரக்காரர்கள் நுழைந்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியைத் தாண்டி வந்த சிலர் மைத்தேயி மக்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் மூண்டுள்ளது. இதில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். குகி சமூகத்தினர் வீடுகள் பல எரிக்கப்பட்டுள்ளன. சம்பவ பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று ஆயுதப் படைகளுக்கும் மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் 17 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று வெடித்தக் கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுதவிர கங்வாய், போக்சாவ் பகுதிகளில் ஏற்பட்ட கலவரங்களை அடக்கப் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். மைத்தேயி சமூகப் பெண்கள் சோதனைச் சாவடியைத் தாண்டிய நுழைய முயன்றதால் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுக்ளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.

https://www.virakesari.lk/article/161662

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணிப்பூரில் 75 பேருக்கு ஒரு பாதுகாப்பு வீரர் பணியில் இருந்தும் வன்முறைகள் இன்னும் தொடருவது ஏன்?

மணிப்பூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இந்தியா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகின் பார்வையே தற்போது மணிப்பூரின் மீது பதிந்துள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், தீபக் மண்டல்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 8 ஆகஸ்ட் 2023, 05:05 GMT

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தொடங்கிய வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை வீரர்கள் 40,000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களில் ராணுவ வீரர்கள், அதிகாரிகள், அஸ்ஸாம் ரைஃபிள் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர் உள்ளிட்ட பல்வேறு படைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை சுமார் 33 லட்சம். சராசரியாகப் பார்த்தால் 70 முதல் 75 பேருக்கு ஒரு பாதுகாப்புப் படை வீரர் என்ற எண்ணிக்கையில் அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது போல் அதிக எண்ணிக்கையிலான படையினர் பயன்படுத்தப்பட்டும் வன்முறைகள் முடிவுக்கு வந்தபாடில்லை.

கடந்த இரண்டு - மூன்று நாட்களில் நடந்த புதிய வன்முறைகளில் மட்டும் 6 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய வன்முறைகளில் விஷ்ணுப்பூர் அருகே உள்ள க்வாட்டாவில் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையாளர்கள் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தாக்கிக்கொள்கின்றனர். இது போன்ற ஆயுதங்கள் அங்குள்ள காவல் தலைமை அலுவலகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவர 40,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே, தாக்குதல்தாரிகள் பள்ளத்தாக்கிலும், மலைப்பகுதியிலும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகின் பார்வையே தற்போது மணிப்பூரின் மீது பதிந்துள்ளது. மணிப்பூரில் நடந்துவரும் இனக்கலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் ஏராளமாக எழுதப்பட்டு வருகிறது.

இரண்டு பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக ஜுலை 19-ம் பயங்கர வீடியோ காட்சிகள் வெளியான பின்னர் சர்வதேச ஊடகங்களின் மணிப்பூர் குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்து தான் பிரதமர் நரேந்திர மோதி மணிப்பூர் வன்முறைகள் குறித்து முதன்முதலாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

அப்போது அவர், "இந்த நாட்டுக்கு அவமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் எந்த நிலையிலும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பமுடியாது," என்று தெரிவித்தார்.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய குகி சமூகத்தினரும் இருப்பதே தற்போதைய வன்முறைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது. மூ

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 160 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோரின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

பல முறை ரத்தம் சிந்தப்பட்ட நிலையிலும் வன்முறைகள் முடிவுக்கு வருவது போல் தோன்றவில்லை. வெள்ளிக்கிழமையன்று விஷ்ணுப்பூர் அருகே உள்ள க்வாட்டா பகுதியில் மெய்தேய் இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட பின்னர் இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கடந்தும் வன்முறைச் சம்பவங்கள் இன்னும் ஏன் தொடர்கின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த இந்த மக்கள் மீது வாள்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களுடைய தலைகள் துண்டிக்கப்பட்டன. பின்னர் அவர்களுடைய உடல்கள் எரிக்கப்பட்டன.

இரு சமூகத்தினரின் பகுதிகளுக்கு இடையே ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி அப்பகுதியில் மெய்தேய் மற்றும் குகி சமூக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதைக் குறைக்கும் முயற்சிகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் மணிப்பூரில் மனித உரிமைச் செயல்பாட்டாளரான கே.கே. ஓ'நெயில், "குகி சமூகத்தினர் வசிக்கும் மலைப்பகுதிகளைத் தவிர்த்துவிட்டு பள்ளத்தாக்கில் இந்த பாதுகாப்பு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன," எனத்தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த பாதுகாப்பு மண்டலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான நிலப்பகுதிகள் அடங்கியுள்ளது ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அந்த நிலங்களில் நெற்பயிர்கள் விளைந்துள்ளன. அந்த நிலப்பரப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கே அறுவடை செய்ய முடியாமல் மெய்தேய் மக்கள் தவிக்கின்றனர்.

அந்த நிலப்பரப்பில் குகி இனத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்த நிலப்பரப்பிலும் தற்போது வன்முறைகள் வெடித்துள்ளன. இது தான் தற்போதைய கலவரங்களுக்குக் காரணமாக உள்ளது.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.

இது குறித்து மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஓ'நெயிலிடம், 33 லட்சம் பேர் வாழும் ஒரு மாநிலத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டும் ஏன் வன்முறைகள் தொடர்கின்றன என நாங்கள் கேட்டபோது, "உண்மையில் அரசியலில் இருந்து பிரிக்கப்படும் வரை, இந்த வன்முறைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது 40 ஆயிரம் என்பதைவிட ஒரு லட்சம் பாதுகாப்புப் படையினரைக் குவித்தாலும் வன்முறைகள் கட்டுக்குள் வராது," எனத் தெரிவித்தார்.

ஆனால், அமைதியை ஏற்படுத்த மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏன் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை?

இதற்குப் பதில் அளித்த ஓ'நெயில், "அரசியல் தலைவர்களை மாற்றுவதன் மூலம் அமைதி கிடைக்கும் என்பதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை. அமைதியை நிலைநாட்டுவதற்கு தற்போதைய அரசு ஒரு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பலவீனமானவையாக இருக்கின்றன. வன்முறைகளைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் முடிவெடுக்கத் தெரியாதர்களும் இடம்பெற்றுள்ளனர்," என்றார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து பைரென் சிங்கை அகற்றினால் தான் இந்த வன்முறைகள் முடிவுக்கு வருமா?

இதற்குப் பதில் அளித்த ஓ'நெயில், "மாநிலத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தும் தேவை உள்ளது. இதைத் தவிர வேறு வழிகள் இல்லை. மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினரிடையே வன்முறைகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கவேண்டும்," என்றார்.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சமவெளியும், மலைப்பகுதியும் வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் வன்முறைகள் குறித்து பிபிசி செய்தியாளர் நிதின் ஸ்ரீவஸ்தவா களத்திலிருந்து நேரடியாக தகவல்களை அளித்துவருகிறார்.

நாங்கள் அவரிடம் இதே கேள்வியை முன்வைத்து, பாதுகாப்புப் படையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஏன் வன்முறைகள் தொடர்கின்றன எனக்கேட்டோம்.

இதற்குப் பதில் அளித்த அவர், "இதற்குப் பதில் வேண்டுமென்றால், முதலில் மணிப்பூரின் புவியியலை நன்கு புரிந்துகொள்ளவேண்டும். மாநிலத்தின் மலை மற்றும் சமவெளிப்பகுதிகளில் குகி மற்றும் மெய்தேய் மக்கள் வாழும் நிலையில், இந்த இரண்டு நிலப்பரப்புகளும் அருகருகே அமைந்துள்ளன. மலைப்பகுதியில் குகி சமூகத்தினர் வாழ்ந்து வந்த நிலையில், சமவெளிப்பகுதியில் மெய்தேய் சமூகத்தினர் வாழ்ந்துவந்தனர். ஆனால் தற்போது இருபகுதிகளிலும் இரு சமூகத்தினரும் கலந்து வாழ்ந்துவருகின்றனர். மேலும் வெறும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருசமூகத்தினரின் நிலப்பரப்பும் பிரிக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளும் அருகருகே அமைந்துள்ளன. வன்முறைகள் முடிவுக்கு வராததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது," என்றார்.

வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினருக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித்தரப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் அதைச் செய்யமுடியவில்லையே?

இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த நிதின் ஸ்ரீவஸ்தவா, "கடந்த ஒன்றரை மாதங்களாக வன்முறைக் கும்பல்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்துவதில்லை. தடிகள் மற்றும் அதைப் போன்ற சில பொருட்களை எடுத்து வருகின்றனர். அந்த கும்பல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா என்றால் அப்படியில்லை. எப்போதெல்லாம் பாதுகாப்புப் படையினரின் கண் முன் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றனவோ, எப்போதெல்லாம் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றனவோ, எப்போதெல்லாம் பயங்கர கொள்ளை மற்றும் சூறையாடல்கள் நடக்கின்றனவோ அப்போது மட்டுமே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்த முடியும்," என்றார்.

மணிப்பூர் மாநில அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர ஏன் மாநில அரசால் முடியவில்லை?

இந்த கேள்விகளுக்குப் பதில் அளித்த போது, "இந்த வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர மணிப்பூர் அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏன் பலவீனமாக இருக்கின்றன என்பதை நாம் உற்றுநோக்கவேண்டும். வன்முறை வெடித்த போதே, அரசுப் பணிகளில் இருந்த மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினர் அவர்களுடைய பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். முஸ்லிம் மெய்தேய், நாகா மற்றும் தமிழர்கள் மட்டுமே தற்போது மணிப்பூர் அரசின் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். அதாவது அரசுத் தரப்பில் உறுதியான நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளும் நிலை தற்போது இல்லை என்றே சொல்லவேண்டும்," என ஸ்ரீவஸ்தவா பதில் அளித்தார்.

"அரசு நிர்வாகப் பணிகள் உறுதியாக மேற்கொள்ளப்படும் வரை அமைதியை நிலைநாட்டுவது மிகவும் கடினமான பணியாகவே இருக்கும். மாநில அரசின் நிர்வாகம் உறுதியான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போது தான் பாதுகாப்புப் படையினர் முழுமையாகச் செயல்படமுடியும்."

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மூன்று மாதங்களைக் கடந்தும் ஏன் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த வன்முறைகள் எப்படித் தொடங்கின?

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், மெய்தேய் மற்றும் குகி இனத்தவரிடையே நிலவும் பிரச்சினை என்பது பல தசாப்தங்களைக் கடந்தது. ஆனால், இரு சமுகங்களுக்கும் சொந்தமான நிலங்களை வாங்குவது குறித்த உரிமை தொடர்பாக அண்மைக்காலங்களில் இருதரப்புக்கும் இடையே புதிய பிரச்னைகள் எழுந்தன.

கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம், மலைப்பகுதியில் உள்ள சுரசந்த்பூர் மற்றும் நோனி மாவட்டங்களில் 38 கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக முதலமைச்சர் பைரென் சிங்கின் அரசு அறிவித்தது. இது குகி சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உரிய முன்னறிவிப்பின்றி அவர்களுடைய கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது அரசின் மாபெரும் தவறு என குகி சமூகத்தினர் வாதிட்டனர். இதற்கிடையே, இப்படி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பாப்பி எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க உதவும் பயிர்களை இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில அரசு அழித்தது.

இந்நிலையில், மெய்தேய் சமூக மக்கள் தங்களை பழங்குடியின மக்களாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் ஏப்ரல் 14-ம் தேதி மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், மெய்தேய் மக்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவும் குகி கமூகத்தினரிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவின் படி, மெய்தேய் மக்களை பழங்குடியின மக்களாக அறிவிக்கத் தேவையான நடவடிக்கைகளை 4 வாரங்களுக்குள் மாநில அரசு மேற்கொள்ளவேண்டும்.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மணிப்பூர் வன்முறையால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தியில், வன்முறைகள் தொடங்கிய மே 3-ம் தேதிக்கு முன்னரே, அதாவது கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சுரசந்த்பூரில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை ஒரு கும்பல் தீ வைத்துக் கொளுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உடற்பயிற்சிக் கூடத்தை அடுத்த நாள் முதலமைச்சர் பைரென் சிங் தொடங்கி வைக்கத் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 28-ம் தேதியன்று, நில ஆக்கிரமிப்பு அகற்றும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து குகி சமூகத்தினர் வனத்துறை அலுவலகத்துக்கு தீ வைத்தனர்.

அதன் பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மலைப்பகுதி கிராமங்களில் குகி சமூகத்தினரால் பேரணிகள் நடத்தப்பட்டன. அப்போது மெய்தேய் சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக்கூடாது என குகி சமூகத்தினர் வலியுறுத்தினர்.

ஆனால், அதையடுத்து மெய்தேய் சமூகத்தினரின் தீவிரச் செயல்பாட்டுக் குழுவான லிபுன் தரப்பிலும் பேரணிகளும், போராட்டங்களும் நடத்தப்பட்டன.

அதன் பின்னர் தான் மே 3-ம் தேதி முதல் இந்த வன்முறைகள் கட்டுக்கு அடங்காமல் பரவி, இந்த அளவுக்கு ரத்தவெறி கொண்ட தாக்குதல்களாக மாறின. இதில் இதுவரை 160 பேர் உயிரிழந்தனர். வன்முறைகளை இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

மணிப்பூர் வன்முறைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மே 3-ம் தேதி நடைபெற்ற பேரணியின் போது, இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. டார்பங் மற்றும கங்வாய் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாக அந்த புகார்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் மதியத்துக்குப் பின்னர் மெய்தேய் மக்கள் வசிக்கும் பகுதியான விஷ்னுபூரில் தேவாலயங்கள் கொளுத்தப்பட்டதாக புகார்கள் வரத் தொடங்கின.

அன்று மாலை மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினரிடையே பல பகுதிகளிலும் தாக்குதல்கள் தொடங்கின. அதன் பின்னர் மிகப்பெரிய கும்பல்கள், காவல் நிலையங்களில் இருந்து ஆயுதங்களைச் சூறையாடுதல் உள்ளிட்ட சம்பவங்களை சுரசந்த்பூர் மற்றும் சுற்றுப் புறங்களில் அரங்கேற்றின.

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் இரு தரப்பு மக்களும் ஒருவரது வீட்டுக்கு ஒருவர் தீ வைத்து கொளுத்த ஆரம்பித்தனர்.

மேலும் அப்போது, மெய்தேய் சமூக பெண்களை குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக வதந்திகள் பரவின. இதன் பின்னர் இரத்தக்களரி மேலும் அதிகரித்தது மற்றும் நிலைமை காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியது.

மாநிலத்தில் கடந்த மே 3ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை, இன்று 160 பேர் உயிரிழந்த பின்னரும் கட்டுக்குள் வராமல் தொடர்ந்து நீடித்துவருகிறது.

https://www.bbc.com/tamil/articles/cxrxwlg2994o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.