Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்தல் 

4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது 


https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/4-ஆளுநர்களை-இராஜினாமா-செய்ய-அறிவுறுத்தல்/150-316807

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்தல் 

4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது 


https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/4-ஆளுநர்களை-இராஜினாமா-செய்ய-அறிவுறுத்தல்/150-316807

 

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் மிகவும் துவேஷம் கொண்டவர். ரணில் 13 வது திருத்தத்தை அமுல் படுத்தவேண்டும் என்று கூறியபோது கடுமையாக எதிர்த்தவர். சரத் வீரசேகர, வீரவன்ச போன்றவர்களின் தீவிர ஆதரவாளர் 

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் நாளை நாடாளுமன்றத்தில்!!

கிழக்கு உட்பட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து 4 மாகாணங்களுக்கான ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது

கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த ஆளுநர்கள், மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படாமை காரணமாகவே விலக்கப்படவுள்ளனர்.

இதேவேளை பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் புதிய ஆளுநர்கள் விரைவில் பெயரிடப்படவுள்ளனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானின் பெயரும் பரிந்துரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331507

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 ஆளுநர்களை விரைவில் பதவி நீக்கம் செய்ய தீர்மானம் : புதிய ஆளுநர்களாக நவீன், செந்தில், சார்ள்ஸ், தயா ஆகியோரின் பெயர்கள் முன்மொழிவு!

Published By: Nanthini

14 May, 2023 | 11:11 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி அலுவலகத்தினால் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட நான்கு ஆளுநர்கள் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்யாவிடின், அவர்களை பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். 

ஏற்கனவே அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்துக்கு முன்பாக ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே போன்று குறித்த நான்கு ஆளுநர்களின் இடத்துக்கு புதிய ஆளுநர்களாக நவீன் திசாநாயக்க, செந்தில் தொண்டமான், தயா கமகே மற்றும் பி.எம்.எஸ். சார்ள்ஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல்  மாகாண ஆளுநர் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

அதேபோன்று குறித்த மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுவரையில் எவ்விதமான பதவி விலகலோ அல்லது ஆளுநர் பதவிகளில் மாற்றங்களோ ஏற்படவில்லை.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகாவிடின் அவர்களை அந்த பதவிகளிலிருந்து நீக்குவதற்கான 3 வழிமுறைகள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் குழு அமைத்து, குறித்த ஆளுநர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது முதலாவது வழிமுறையாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, ஜனாதிபதியின் குறித்த மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தல் ஆகும். 

மூன்றாவதாக, நிதி ஒதுக்கீடுகளை விடுவிக்காதிருத்தல் மற்றும் குறித்த ஆளுநர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்தல் போன்ற வழிமுறைகள் குறித்தே அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, 4 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் கூடிய விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த நியமனங்களை இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள ஜப்பான் விஜயத்துக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவுள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் மேலும் கூறினார்.

 

https://www.virakesari.lk/article/155223

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆளுநர்களாக 2 சிங்களவரையும், 2 தமிழரையும் நியமிக்க 
உத்தேசித்துள்ளார்கள் போலுள்ளது.
இப்ப... சோனகன், இருப்புக் கொள்ள  ஏலாமல்  ஓடித் திரியப் போறானே...
4 சிங்களவன் என்றால், மூடிக்  கொண்டு இருந்திருப்பான்.
இரண்டு தமிழரை சேர்த்தது... சோனகனுக்கு  வெறுப்பை ஏற்படுத்தும்.
சம்பந்தனிடம் கேட்டால்... ஒன்றை சோனகனுக்கு கொடுக்கச் சொல்வார். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய சிங்கள பெளத்த பெரும்பான்மை அரசின் அடிவருடிகளாக இருக்கும் ஆளுநர்களின் அதிகாரத்தைக் குறைத்து மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி.. மாகாண சபைகளுக்கான தேர்தல்களையாவது நடத்துவதுதான் குறைந்தளவு என்றாலும் சனநாயகம் ஆகும். மாறாக மாகாண சபைகளை மத்திய அரசின் ஏவலாளிகளாக ஆளுநர்களை வைச்சே நடத்துவது.. மத்திய அரசின் கெடுபிடி அரசியலாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

மத்திய சிங்கள பெளத்த பெரும்பான்மை அரசின் அடிவருடிகளாக இருக்கும் ஆளுநர்களின் அதிகாரத்தைக் குறைத்து மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கி.. மாகாண சபைகளுக்கான தேர்தல்களையாவது நடத்துவதுதான் குறைந்தளவு என்றாலும் சனநாயகம் ஆகும். மாறாக மாகாண சபைகளை மத்திய அரசின் ஏவலாளிகளாக ஆளுநர்களை வைச்சே நடத்துவது.. மத்திய அரசின் கெடுபிடி அரசியலாகும். 

உள்ளுராட்சி தேர்தலோ, மாகாண சபை தேர்தலோ இப்போதைக்கு நடைபெறாது. முதலில் ஜனாதிபதித்தேர்தல் நடை பெற போகின்றது. எனவேதான் ரணில் மாகாணசபையை தனது கட்டுப்பாடில் கொண்டு வந்து அதட்குரிய முன்னாதாயங்களை செய்வதட்காகவே ஆளுநர்களை மாற்ற முயட்சிக்கிறார். மற்றப்படி ஜனநாயகம், மாகாண சபைகளுக்கு அதிகாரம் என்பதெல்லாம் இவர்களது அகராதியில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

இந்த நிலையில், அறிவிக்கப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகாவிடின் அவர்களை அந்த பதவிகளிலிருந்து நீக்குவதற்கான 3 வழிமுறைகள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

ஓகோ..... ஆளுநர்கள் பதவி விலக மாட்டோம் என அடம் பிடிக்கிறார்களோ? அது தான் வடக்கு ஆளுநர் மும்முரமாக வேலை செய்வதாக பாவனை காட்டுகிறார். தெற்கில் அதிக பாதுகாப்பாம், ஆட்சி கவிழ்ப்பு என்றும் கதை அடிபடுகிறது. பொறியில் அகப்பட்ட சுண்டெலிகள் சும்மா இராது கண்டியளோ! இது கடந்தகால அனுபவமுங்கூட, சாதுமாதிரி இருந்த நரி இனித்தான் சுய ரூபத்தை காட்டப்போகிறார். எதற்கும் தமிழரின் மனதை வென்று தனது கட்டுக்குள் கொண்டுவந்தாற்தான் தான் பெற்றதை தக்க வைக்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு- கிழக்கு ஆளுநர்கள் உட்பட மூவர் மீது ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

8-11.jpg

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15.05.2023) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17.05.2023) நியமிக்கப்படவுள்ளனர் .

ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள்

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒஃப் த ஃப்லீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மேற்படி மூன்று ஆளுநர்களும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். மூவருக்கும் எதிராக அந்தந்த மாகாண மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் ஆளுநர் பதவி

மேலும், ஆளுநர்களை பதவி விலகும்படி கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோரினால் தமக்கு எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லையென நேற்று முன்தினம் கூட அறிக்கைகள் வெளியிட்டிருந்த நிலையிலேயே  ஜனாதிபதியினால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வடமாகாண ஆளுநராக ஜோன் அமரதுங்க தெரிவு செய்யப்படலாம் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் அல்லது முன்னாள் அமைச்சரான தயா கமகே தெரிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகின.

மேலும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் பெயரும்  வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=245622

 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கிருபன் said:

மூவருக்கும் எதிராக அந்தந்த மாகாண மக்கள் பிரதிநிதிகளால் தொடர்ந்தும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமா முறைப்பாடுகள் வைத்தனர்? 
மக்கள் முறைகேடுகள் நடந்துள்ளதாக சொல்லுகிறார்கள்.
அந்த முறைப்பாடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 
வெறுமனே பதிவியில் இருந்து இறக்கினால் மட்டும் போதாது. 
விசாரணை நடவாது என்று மட்டும் சொல்லலாம் .
அப்படி இலங்கையின் சூப்பர் ஸ்டாண்டர்ட் 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜாவும் கிழக்கு ஆளுநராக அனுராதா யஹம்பத்தும் வயம்ப ஆளுநராக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்த்க்கது.

https://athavannews.com/2023/1331895

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.