Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

6-A42-F308-B42-F-4166-AD35-F9067-F858289

அப்போதெல்லாம் “பெடியள், இங்கே கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள் அங்கே  கண்ணி வெடி வைச்சிருக்கிறாங்கள்என்று செய்திகள் வந்து போகும். எதிர்பார்த்த இலக்கு  வந்தால் பெடியள்களின் கண்ணி வெடிக்கும். அதுவே நீண்ட காத்திருப்பாக  இருந்தால் கண்ணியை எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள்.

இப்போ எல்லாமே மாறிப் போயிருக்கின்றன. “ பிக்குகள் அங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள். இங்கே புத்தர் சிலை வைச்சிருக்கிறாங்கள்என்று செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. பிக்குகள் வைத்ததை எடுப்பார்களா? இல்லை இதற்கு மேலேயும் வைப்பார்களாதெரியவில்லை.

நான் விடயத்துக்கு வருகிறேன்

கடந்த வருடம் தாயகம் போயிருந்தேன். பண்டாரவளை, அப்புத்தளை போய்ஏலாநீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு  கண்டி நோக்கிப் பயணிக்கும் போது சாரதி  லோகேஸ் ஒரு கோயிலுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தினார்.

“சீதை அம்மன் கோயிலை இந்திய அரசின் உதவியுடன் கொஞ்சக் காலத்துக்கு முன்னர் புதுசாக்கி இருக்கினம். கும்பிட்டு விட்டு வாறன்என்று சொன்னவர் கோயிலுக்குள் சென்று விட்டார்.

என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக நானும் கோயிலுக்குள் சென்றேன்.

78-EEC22-B-234-D-4-A4-A-B04-C-601-EE08-E

இராமாயணத்தை சுருக்கமாக சுவரில் எழுதி வைத்திருந்தார்கள்குரங்குகள் ஆங்காங்கே காணக் கிடைத்தன. பக்தர்கள் உடைக்கும் தேங்காய்கள் அவைகளுக்கு உணவாக இருந்தன. கோவிலுக்கு வெளியே  நதி ஓடிக் கொண்டிருந்து. நதிக்குப் பக்கத்தில் இருந்த கற்களில் ஆங்காங்கே பள்ளங்கள் இருந்தன. அதில் ஒன்றை தங்க நிறத்தில் வட்டமாக ஏறக்குறைய ஒரு பாதம் போல் உரு மாற்றி இருந்தார்கள். மரம் ஒன்றில் பக்தர்களின் வேண்டுதல்கள் முடிச்சுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

77-A56700-6778-4728-B87-A-5-D918-DC7-FFE

“இந்த மரத்தின் கீழ்தான் சீதை(அம்மன்) தங்கினவ. வேண்டுதல்களை எழுதி இந்த சீதை அம்மன் மரத்தில் கட்டினால் அது பலிக்கும்”  என்னருகே வந்த லோகேஸ் பக்தியோடு சொன்னார்.

“நீங்கள் கட்டவில்லையா? “ என்றேன்.

“பொதுவா பிள்ளை வரம் வேண்டித்தான் முடிச்சுகளைக் கட்டுறவையள். எனக்கு இன்னும் கல்யாணமே நடக்க இல்லையேலோகேஸ் சொன்னபோதுபிள்ளை வரம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு இன்னும் தெரியவில்லை என்று ஆச்சரியமாக இருந்தது.’

A9-F3-A9-CD-DC1-B-4-B29-849-C-0912108-DF

“அந்த நதியிலேதான் சீதை குளித்தவ. அந்தப் பள்ளங்களைப் பாத்தீங்களே? அது அனுமாரின் காலடிகள்” 

“அனுமார் காலடி ஒன்றுதானே இருக்கு”

“அனுமார் பறந்து வந்து அந்த இடத்தில் குதிச்சதாலை தான் அங்கே பள்ளம் வந்திட்டுது

நான் மேற்கொண்டு லோகேஸிடம் எதுவும் கேட்கவில்லை.

மீண்டும் கண்டி நோக்கிப் பயணம்.

“இந்தச் சீதை அம்மன் கோவிலை முத்திரையா சிறீலங்கா வெளியிட்டிருக்கு. இங்கை இருந்து கல் எடுத்து இராமர் கோயிலில் பதிக்க அயோத்திக்கு அனுப்பி இருக்கினம்…..” வழி நெடுக லோகேஸ் சீதை அம்மன் கோயிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வந்தான்.

‘சலசல என அமைதியாக நீர் ஓடிக் கொண்டிருந்த ஒரு அழகான இடத்தை அசோக வனமாக்கி அதை பின்னர் கோயிலாக மாற்றி பலருக்கு மூளைச் சலவை செய்து பணம் பார்க்கிறார்கள்’ இப்படி ஒரு நினைப்பு எனக்குள் வந்தது.

- கவி அருணாசலம்

 

 

 

  • Like 7
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோவில் கட்டுவது பணம் சம்பாதிக்கவும், பந்தா காட்டவும்தானே. இது புதிது இல்லையே.

கோவில்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் தினமும் பூஜையோடு நடந்தால் பிரயோசனமாக இருக்கும். ஆனால் அர்ச்சனைகள்தான் தினமும் நடக்கின்றன!

 

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன்........படங்கள் நன்றாக இருக்கின்றன.......!  👍

நன்றி கவி அருணாசலம்........!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2023 at 15:27, கிருபன் said:

அர்ச்சனைகள்தான் தினமும் நடக்கின்றன!

ஐயாருக்கு  வருமானம் தேவை எனவேதான் அர்ச்சனை செய்கிறார்  மக்கள் ஏன் செய்கிறார்கள்?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, Kandiah57 said:

ஐயாருக்கு  வருமானம் தேவை எனவேதான் அர்ச்சனை செய்கிறார்  மக்கள் ஏன் செய்கிறார்கள்?? 

அது மதங்களின்  Advertising department இன் திறமை.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.