Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று விக்கெட்டுகள் விழுந்ததும் ராகுலின் காதில் கோலி சொன்ன ரகசியம்

கோலி ராகுல

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 8 அக்டோபர் 2023
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக்கோப்பைத் தொடர் தொடங்கும் முன்புவரை இந்திய அணியின் மிகப்பெரிய கவலையாக இருந்தது, அணியில் நடுவரிசை பேட்டிங் குறித்துதான். அதிலும் 4,5-வது பேட்டர்கள் சரியாக அமையவில்லை என்பது பெரிய கவலையாக இருந்தது.

ஆனால் இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் “கிங்” கோலி, கே.எல்.ராகுல் இருவரும் வெளிப்படுத்திய பொறுப்பான பேட்டிங்கைப் பார்த்தபின், நடுவரிசை குறித்த கவலை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு நீங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாதாளத்தில் விழுந்த நேரத்தில் ஆகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்திய கோலியும், கேஎல்.ராகுலும் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். கோலி 85 ரன்கள், கே.எல்.ராகுல் 97 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டநாயகன் விருதும் கேஎல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 52 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி புள்ளிக்கணக்கை 2 என்று தொடங்கினாலும், எதிர்பார்த்த அளவு நிகரரன்ரேட் உயராமல் 0.883 என்ற அளவிலேயே இருக்கிறது. ஒருவேளை 200 ரன்கள் இலக்கை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 20 ஓவர்களில் சேஸிங் செய்திருந்தால், நிகர ரன்ரேட் எகிறியிருக்கும்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவுக்கு கைகொடுத்த சுழற்பந்துவீச்சு

இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். உலகிலேயே தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களை வைத்துள்ளோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அளவுக்கு பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்பதுதான் நிதர்சனம். குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் எந்த அணிக்கும் வரும் போட்டிகளில் சிம்மசொப்னமாக இருப்பார்கள். எந்த நாட்டிலும் தனது ஜம்பத்தை காண்பிக்கும், ஆஸ்திரேலிய அணி துணைக்கண்டத்தில் அதிலும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது, தன்னை அறியாமல் கட்டுண்டுவிடுகிறது. ஆஸ்திரேலிய அணியிலும் ஆடம் ஸம்பா இருந்தாலும், அவரின் பந்துவீச்சு இந்திய அணியிடம் எடுபடவில்லை.

2வதாக 2 ரன்களுக்குள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி, மிகப்பெரிய அழுதத்தில் இருந்தது. அந்த நேரத்தில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி, ராகுலின் ஆட்டம் ஆகச்சிறந்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இந்த இரு அம்சங்கள்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கேட்ச் விட்டதால் மேட்ச் காலி..!

விராட் கோலி 12 ரன்கள் சேர்த்திருந்த போது ஹசல்வுட் பந்துவீச்சில் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிப்பதில் அலெக்ஸ் கேரே, மார்ஷ் இடையே சரியான புரிந்துணர்வு இன்மையால் கேட்சை கோட்டைவிட்டனர். கிரிக்கெட்டில் “கேட்ச் லாஸ் மேட்ச் லாஸ்” என்பார்கள். அதுபோல, விராட் கோலிக்கு கேட்சை கோட்டைவிட்டதற்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய விலை கொடுத்துவிட்டது.

இதேபோல கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில், பாகிஸ்தான் அணி கோலிக்கு கேட்ச் விட்டதன் பலனை கடைசியில் அனுபவித்தது. அதேபோல இன்று ஆஸ்திரேலியாவும் அனுபவித்துள்ளது.

ஆஸ்திரேலியா தோற்றது ஏன்?

சென்னை ஆடுகளம் மெதுவானது, பந்து நின்றுதான் பேட்டருக்கு வரும். முதல் 10 ஓவர்கள் வரை பேட்டர் சமாளித்துவிட்டால் அதன்பின் ஆடிவிடலாம். ஆனால், வேகமான ஆடுகளில் விளையாடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் இந்த ஆடுகளத்தில் எதிர்பார்த்த ஷாட்களை ஆடமுடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்று வலுவாக இருந்தது. ஆனால், 30 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் இழந்தது. வேகப்பந்துவீச்சில் விளையாடிப் பழக்கப்பட்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் துணைக்கண்டத்தில் அதிலும் இந்தியாவில் விளையாடும்போது இயல்பாகவே சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள்.

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்கள்தான் இந்தியாவில் அதிகம் இருக்கின்றன என்பது தெரிந்தும், ஆடம் ஸம்பா என்ற தனி ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே ஆஸ்திரேலியா எந்த தைரியத்தில் அழைத்து வந்துள்ளது தெரியவில்லை.

சென்னையில் திடீரென இன்று இரவு லேசான பனிப்பொழிவு இருந்தது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சிரமத்தைஅளித்தது. அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்களான ஆடம் ஸம்பா, மேக்ஸ்வெல் ஆகியோரால் பந்தை இறுகப்பற்றி வீச முடியாத சூழல் ஏற்பட்டது. பனிப் பொழிவு காரணமாக நடுவர்கள் பந்தை இருமுறை மாற்றினர்.

சென்னையில் காற்றில் அதிகமாக ஈரப்பதம் இருந்தது, கடற்கரைக் காற்றின் ஈரப்பதம் ஆகியவை பந்துவீச்சாளர்கள் பந்தை இறுகப்பற்றி வீசுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் மேக்ஸ்வெல் ஆஃப்ஸ்பின்னும், ஆடம் ஸம்பாவின் லெக் ஸ்பின்னும் சிறிது கூட இந்திய பேட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கவில்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

173 டாட் பந்துகள்

இந்த ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலிய பேட்டர்கள் 173 டாட் பந்துகளை விட்டனர். அதாவது 28 ஓவர்களில் ரன் ஏதும் அடிக்காமல் பந்துகளை வீணடித்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடியதிலேயே 3வது மிக மோசமான இன்னிங்ஸ் இதுவாகும்.

டாட் பந்துகள் வழங்கிய வகையில், பும்ரா 41 பந்துகள், ஜடேஜா 38 பந்துகள், அஸ்வின் 32 பந்துகள், குல்தீப் 31 பந்துகள், சிராஜ் 26 பந்துகளை டாட்பந்துகளாக வீசினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மா டக் அவுட் ஆனது ஏன் ?

இந்திய அணியில் நடுவரிசை பேட்டிங் என்பது நீண்டகாலமாக இருந்து வரும் சிக்கலாக இருக்கிறது. 2019ம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடங்கிய இந்த பிரச்சினை, 2023 வரை ஓயவில்லை. யாரை நம்பி 4வது மற்றும் 5வது இடத்தில் களமிறக்குவது என்ற நிலை இருந்தது. ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா என பலரையும் களமிறக்கி பரிசோதித்தும் பயனில்லை.

2021, டிசம்பர் 9ம் தேதி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு பேட்டியில் கூறுகையில் “ இந்திய அணி 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் சூழலை எதிர்கொள்ளத் தயாராக நான் நடுவரிசையில் களமிறங்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இன்று அந்த சூழலும் வந்தது, கோலியும், கேஎல்.ராகுலும் காத்து நின்றார்கள். ரோஹித் இனி மகிழ்ச்சியோடு இருப்பார்.

ராகுலிடம் கோலி சொன்ன ரகசியம் என்ன?

ரன் ஏதும் எடுக்காமலேயே 3 வீரர்கள் அவுட் ஆன நிலையில், சிறிய ஸ்கோரை எட்டுவதற்கு தேவையான உத்தியை கோலியும் ராகுலும் களத்திலேயே வகுத்திருக்கின்றனர். இதை தனது பேட்டியின்போது ராகுல் தெரிவித்தார்.

"ஆட்டம் தொடங்குவதற்கு முன் கோலியுடன் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. குளித்துவிட்டு, ஃபீல்டிங் இன்னிங்ஸ் முடிந்து அரை மணி நேரம் வார்ம்-அப் செய்ய நினைத்தேன், ஆனால் நான் உடனடியாக உள்ளே வர வேண்டியிருந்தது. அப்போது நான் டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாட வேண்டும் என்று விராட் கூறினார். அணிக்காக இதை விளையாடுவதில் மகிழ்ச்சி. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் ஆதரவாக களம் இருந்தது." என்று ராகுல் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cpdv29gmyk7o

  • Replies 546
  • Views 32.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து வென்றாலும் நியூசிலாந்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன?

நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹைதராபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தினாலும், நியூசிலாந்து அணி அடுத்தடுத்துவரும் போட்டிகளில் தடைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஹைதராபாத்தில் நேற்று பகலிரவாக நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 223 ரன்களில் ஆட்டமிழந்து, 99 ரன்களில் தோல்வி அடைந்தது.

இது நியூசிலாந்து அணி பெறும் 2வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி 4 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட் 1.958 என்ற நிலையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 36 ரன்களையும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மிட்ஷெல் சான்ட்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 
நியூசிலாந்து, நெதர்லாந்து, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சான்ட்னரின் பந்துவீச்சில் நேற்றைய ‘ஹைலைட்’, நெதர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்ததுதான்

சான்ட்னர் பந்துவீச்சின் ‘ஹைலைட்’

உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து தரப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் சான்ட்னர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் சான்ட்னர். இதற்கு முன் நியூசிலாந்து தரப்பில் எந்தப் பந்துவீச்சாளரும் 5 விக்கெட்டுகளை வீழத்தியதில்லை.

ஆட்டநாயகன் விருது வென்ற சான்ட்னர் கடைசியில் களமிறங்கி 17 பந்துகளில் 36 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். பந்துவீச்சிலும் 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் சான்ட்னர் தனது அபார ஆட்டத்தின்மூலமும், பல்வேறு வேகங்களில் பந்து வீசியும் நெதர்லாந்து பேட்டர்களை திக்குமுக்காடவைத்தார்.

சான்ட்னரின் பந்துவீச்சில் நேற்றைய ‘ஹைலைட்’, நெதர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸை ஆட்டமிழக்கச் செய்ததுதான். சான்ட்னர் பந்தை டாஸ்செய்து ஆஃப் சைடு விலக்கி வீசனார், இதை எட்வார்ட்ஸ் கிராஸ்பேட் போட்டு அடிக்க முற்பட்டபோது, பந்து பேட்டில் எட்ஜ் எடுத்து சான்ட்னரிடமே கேட்சானது.

 
நியூசிலாந்து, நெதர்லாந்து, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் உற்சாகத்தையும், ஆட்டத்தின் முன்னெடுப்பையும் இழக்கவில்லை

‘கியரை’ மாற்றாத நெதர்லாந்து

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை தொடக்கத்தில் நெதர்லாந்தின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 3 மெய்டன்களை வழங்கியது. ஆனால், கடைசி 3 ஓவர்களில் 50 ரன்களை சேர்த்ததால்தான் 322 ரன்களை எட்டமுடிந்தது. நெதர்லாந்து தனது சேஸிங்கை மெதுவாகத் தொடங்கி அதேவேகத்திலேயே பயணித்ததே தவிர ரன்சேர்க்கும் கியரை கடைசிவரை மாற்றவில்லை. நெதர்லாந்து தரப்பில் ஆக்கர்மேன் அதிகபட்சமாக 69 ரன்கள் சேர்த்தார் மற்ற எந்தபேட்டர்களும் 30 ரன்களைக் கூட தாண்டவில்லை.

நியூசிலாந்து தரப்பில் 3 வீரர்கள் அரைசதம் அடித்தனர். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் (70), ரச்சின் ரவீந்திரா (51), டாம் லாதம் (53) ஆகியோர் முக்கியப் பங்களிப்பு செய்தனர். இதில் ரவீந்திரா அருமையான ஃபார்மில் இருந்து முதல் போட்டியில் சதமும், நேற்றைய ஆட்டத்தில் அரைசதமும் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் அசத்திய ரவீந்திரா 45 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

நெதர்லாந்து அணி ஒவ்வொரு போட்டியிலும் புதிய அனுபவத்தைக் கற்று வருகிறது. தொடக்கத்திலிருந்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய நெதர்லாந்து கடைசி டெத் ஓவர்களில் கோட்டைவிட்டதால்தான் நியூசிலாந்து 300 ரன்களுக்கு மேல்குவித்தது.

இருப்பினும் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் தங்களின் உற்சாகத்தையும், ஆட்டத்தின் முன்னெடுப்பையும் இழக்கவில்லை. இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றிக்காகப் போராடி வருகிறார்கள், என்றாலும் வரும் போட்டிகளில் பெரிய அணிகளுக்கு சவால்களை நெதர்லாந்து அளிக்கும்.

நியூசிலாந்து, நெதர்லாந்து, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘தவறுகளைத் திருத்திக் கொள்வோம்’

நெர்லாந்து கேப்டன் எட்வார்ட்ஸ் கூறுகையில் “நியூசிலாந்து அணியிடம் தரமான பந்துவீச்சு இருக்கிறது. 40 முதல் 50 ரன்கள் பாட்னர்ஷிப் வைத்துக்கொண்டு 320 ரன்களை சேஸிங் செய்வது கடினம். எங்கள் வீரர்களிடம் பேசுவேன், நிச்சயமாக அடுத்த ஆட்டத்தில் சாதகமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். எங்களின் தவறுகளை அடுத்த 7 ஆட்டங்களில் திருத்திவிடுவோம். எங்களைப் பொருத்தவரை அடுத்த ஆட்டத்தில், சிறப்பான பங்களிப்பை வழங்குவோம்,” எனத் தெரிவித்தார்.

 
நியூசிலாந்து, நெதர்லாந்து, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அடுத்த இரு போட்டிகளுக்கும் சிறந்த ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் சிக்கலில் நியூசிலாந்து அணி இருக்கிறது

நியூசிலாந்து அணி சந்திக்கவிருக்கும் பிரச்சினைகள் என்ன?

உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து 15 வீரர்களை அறிவித்தாலும், 12 வீரர்களுடந்தான் களமிறங்கியது. இதில் வில்லியம்ஸன், டிம் சவுதி, பெர்குஷன் ஆகியோர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருந்தனர். வெள்ளிக்கிழமை நடக்கும் ஆட்டத்தில் 15 வீரர்களும் தயாராகிவிடுவார்கள் என்று நம்பப்படும் நிலையில், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய வீரர்களை அடிப்படையாக வைத்து அணித் தேர்வை நியூசிலாந்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

வில்லியம்சன் முழுமையாக குணமடைந்து போட்டிக்குத் தயாராகிவிட்டார். பேட்டிங் வரிசையில் இவரது 3வது இடத்தையும் விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங், கான்வே இருவரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். 3வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திரா ஒரு சதம், அரைசதம் என சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜொலிக்காத யங், நேற்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். இந்த ஆண்டில் அவர் அடித்த 6வது அரைசதம். அதிலும் குறிப்பாக சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு யங் சிறப்பாக ஆடுவது அடுத்தப் போட்டிகளுக்கு இவரது தேவையை உறுதி செய்கிறது.

வில்லியம்ஸன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுழற்பந்துவீச்சு பூமி

மேலும், நியூசிலாந்து அடுத்த 2 போட்டிகளையும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் விளையாடுகிறது. இரு ஆட்டங்களிலும், சுழற்பந்துவீச்சாளர்களை அதிகம் கொண்ட வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவை தனது சுழற்பந்துவீச்சு மூலம் இந்திய அணி வீழ்த்தியது யாருக்கும் மறந்திருக்காது. அதனால், சென்னை ஆடுகளத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் தரமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள வில் யங் போன்ற தேர்ந்த பேட்டர்கள் நியூசிலாந்துக்கு அவசியம்.

எனவே, வில்லியம்ஸன் அணிக்குள் வந்தாலும், தொடக்க ஆட்டக்காரர்களை மாற்ற முடியாது. 3வது இடத்தை வில்லியம்ஸனுக்கு தர வேண்டும், ரவீந்திராவை 4வது இடத்தில் களமிறக்க வேண்டும். மேலும், மார்க் சாப்மேனை பெஞ்சில் அமரவைக்கவேண்டிய நிர்பந்தம் நியூசிலாந்துக்கு இருக்கிறது.

மிட்ஷெல் சான்ட்னர் நெதர்லாந்து அணிக்கு எதிராகக் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 36 ரன்கள் சேர்த்தார். இல்லாவிட்டால் நியூசிலாந்து 300 ரன்களைக் கடந்திருக்காது. அதிலும் பாஸ் டி லீட் ஓவரில் 18 ரன்களை சான்ட்னர் விளாசினார். இதனால் பேட்டிங் வரிசையில் 8-வது இடத்தை சான்ட்னர் உறுதியாக்கிவிட்டார்.

 
நியூசிலாந்து, நெதர்லாந்து, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் "அடுத்த ஆட்டம் சென்னையில் நடப்பதால் அந்த சூழலுக்கு ஏற்க நாங்கள் மாற வேண்டும்," என்றார்.

ப்ளேயிங் லெவனில் இருக்கப்போவது யார்?

இதனால், டிம் சவுதி, ஹென்றி, பெர்குஷன், டிரன்ட் போல்ட் ஆகியோரில் யாரை களமிறக்குவது என்ற இக்கட்டான நிலை நியூசிலாந்துக்கு ஏற்படும். ஹென்றி கடந்த 2 போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஃபார்மில் இருக்கிறார், 145 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கு பெர்குஷன் அவசியம், போல்ட், சவுதி இருவரும் தவிரக்க முடியாத பந்துவீச்சாளர்கள் என்பதால் யாரை தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் நியூசிலாந்துக்கு இருக்கிறது.

அடுத்துவரும் போட்டிகளில் நியூசிலாந்து அணி போல்ட், ஹென்றி தவிர்த்து, பெர்குஷன், சவுதி அல்லது நீஷம் ஆகியோரில் யாரேனும் இருவரைத் தேர்ந்தெடுத்து களமிறங்க வேண்டும். ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் பெர்குஷன் 145 கி.மீ. வேகத்தில் பந்துவீசி, பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை காண்பித்தாலும் விக்கெட் வீழ்த்தவில்லை. ஓவருக்கு 4 ரன்கள் வீதம்தான் பெர்குஷன் வழங்கினார். ஆனால், பேட்டிங் திறன் என்றவகையில், பெர்குஷனைவிட சவுதி மேலானவர். இதனால் சவுதிக்கு இடம் கொடுக்க பெர்குஷன் வழிவிட வேண்டிய நிலையில் இருக்கிறார்.

ஆதலால், அடுத்த இரு போட்டிகளுக்கும் சிறந்த ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுக்கும் சிக்கலில் நியூசிலாந்து அணி இருக்கிறது.

‘சென்னைக்கு தயாராக வேண்டும்’

நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறுகையில் “பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டோம், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ரவீந்திரா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டார். சுழற்பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். பெர்குஷன் திரும்பி வந்தது மகிழ்ச்சி. அடுத்த ஆட்டம் சென்னையில் நடப்பதால் அந்த சூழலுக்கு ஏற்க நாங்கள் மாற வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cw4jekz02wvo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசல், சதீர அபார சதங்கள், இலங்கை 344 ஓட்டங்கள் குவிப்பு:  பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 345

Published By: VISHNU

10 OCT, 2023 | 06:30 PM
image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத், ரஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் உலகக் கிண்ண கன்னிச் சதங்களைக் குவித்து இலங்கையை பலமான நிலையில் இட்டுள்ளனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 344 ஓட்டங்களைக் குவித்தது.

அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 65 பந்துகளில் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

உலகக் கிண்ணத்தில் அவர் குவித்த சதம், இலங்கைக்கான அதிவேக உலகக் கிண்ண சதமாகப் பதிவானது

இங்கிலாந்துக்கு எதிராக 2015 உலகக் கிண்ணப் போட்டியில் குமார் சங்கக்கார 70 பந்துகளில் குவித்த சதமே இலங்கைக்கான முன்னைய அதிவேக உலகக் கிண்ண சதமாக இருந்தது.

குசல் மெண்டிஸைத் தொடர்ந்து சதீர சமரவிக்ரம சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது கன்னிச் சதத்தைப் பெற்றார்.

ஆரம்ப வீரர் குசல் பெரேரா ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. (5 - 1 விக்.)

எனினும் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 102 ஓட்டங்களைப் பகிர்ந்து எதிரணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 69 பந்துகளில் 111 ஓட்டங்களைப் பகிர்ந்து  அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

குசல் மெண்டிஸ் 77 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 122 ஓட்டங்களைப் பெற்றார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் குவித்த 3ஆவது சதமாகும்.

சதீர சமரவிக்ரம 89 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 108 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனிடையே தனஞ்சய டி சில்வாவுடன் 5ஆவது விக்கெட்டில் 65 ஓட்டங்களை சமரவிக்ரம பகிர்ந்தார்.

தனஞ்சய டி சில்வா (25), தசுன் ஷானக்க (12), துனித் வெல்லாலகே (10) ஆகியோர் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.

பந்துவீச்சில் ஹசன் அலி 71 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

345 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.

https://www.virakesari.lk/article/166585

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதீஷா பதிரணா: ஐபிஎல் போட்டிகளில் பட்டை தீட்டப்பட்ட வீரர் இலங்கையின் தோல்விக்கு காரணமானது எப்படி?

பதிரணா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பதிரணா 9 ஓவர்கள் வீசி 90 ரன்களை வழங்கினார்

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில், பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் மற்றும் அந்த அணியின் அறிமுக வீரர் அப்துல்லா ஷஃபீக் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 345 ரன்களை சேஸிங் செய்து இலங்கை அணியை வீழ்த்தியது.

இலங்கை அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக தோனியால் பட்டை தீட்டப்பட்டதாக வர்ணிக்கப்பட்ட மதீஷா பதிரணாவின் பந்துவீச்சு உலகக் கோப்பையின் முதல் இரு போட்டிகளிலுமே மோசமாக இருந்தது. இது இலங்கை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.

பதிரணா 9 ஓவர்கள் வீசி 90 ரன்களை வழங்கினார். அதாவது, ஓவருக்கு 9 ரன்களை வழங்கியுள்ளார். உதிரிகள் கணக்கில் பதீரணா மட்டும் 9 வைடுகளை வீசியுள்ளார். ஆக மொத்தம் பதிரணா வழங்கிய ரன்கள் மட்டும் 99. அவர் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி இதில் 50 ரன்களைக் குறைத்திருந்தாலே பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று கருத முடிகிறது.

பதிரணா கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 வைடுகளை வீசியுள்ளார், வைடுகள் மூலம் மட்டும் 91 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை எந்த நாட்டு வீரரும் இந்த அளவு வைடுகளை வீசவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியிலும் அவர் 9 ஓவர்களில் 95 ரன்களை விட்டுக் கொடுத்தார். 5 வைடுகளை வீசியிருந்தார்.

இந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் சேர்த்தது. 345 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி 10 பந்துகள் மீதம் இருக்கையில், 345 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது.

 
இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாபர் ஆசம் சொன்னது என்ன?

பாகிஸ்தான் இந்த வரலாற்று சேஸிங்கைச் செய்தவுடன், கேப்டன் பாபர் ஆசம் மைதானத்துக்குள் ஓடிவந்து, ரிஸ்வானை கட்டி அணைத்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வெற்றிக்குப்பின் ஆசம் கூறுகையில், “ரிஸ்வான், அப்துல் இருவரும் விளையாடிய விதம், பார்ட்னர்ஷிப் அமைத்தது இலங்கை அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். முதல் உலகக் கோப்பையிலேயே ஷஃபீக் சிறப்பாக பேட் செய்திருக்கிறார். ரிஸ்வானும், அப்துலும் சேர்ந்து அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். நடுவரிசை வலுவடைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

345 ரன்களைச் சேஸிங் செய்து, உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது

பாகிஸ்தானின் வரலாற்றுச் சாதனை

உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை பாகிஸ்தான் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் 1992-ஆம் உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் எடுத்திருந்த 262 ரன்கள்தான். ஆனால், 345 ரன்களைச் சேஸிங் செய்து, உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் இடம் பெற்றுள்ளது. இது உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணியும் இதுவரை சேஸிங் செய்யாத இலக்காகும்.

இதற்கு முன் 2011-ஆம் ஆண்டு, மார்ச் 2-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக 328 ரன்களை அயர்லாந்து அணி சேஸிங் செய்ததே உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக இருந்தது.

அதை இப்போது பாகிஸ்தான் அணி முறியடித்திருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 8 முறை இலங்கை அணியுடன் மோதி அனைத்திலும் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சேஸிங் என்பது, 2022-ஆம் ஆண்டு லாகூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 349 ரன்களை சேஸ் செய்ததுதான்.

நடப்பு ஆட்டத்தொடரில், பாகிஸ்தான் அணி இதுவரை 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளைப் பெற்றாலும், அதன் நிகர ரன்ரேட் 0.927 புள்ளிகள் என்ற அளவிலேயேதான் இருக்கிறது. இலங்கை அணி 2 ஆட்டங்களிலும் தோற்று, 8வது இடத்திலும் நிகர ரன்ரேட் மைனஸ் 1.161 என்று அளவில் பின்தங்கியுள்ளது.

ஒரே போட்டியில் 4 சதங்கள்

இந்த ஆட்டத்தில் மட்டும் 4 சதங்கள் அடிக்கப்பட்டன. இலங்கை தரப்பில் குஷால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, பாகிஸ்தான் தரப்பில் முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக் ஆகியோர் சதம் அடித்தனர். உலகக் கோப்பைத் தொடரில் ஒரே போட்டியில் 4 வீரர்கள் சதம் அடித்தது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் ஒருநாள் போட்டியில் இருமுறை இதுபோன்று சம்பவம் நடந்துள்ளது.

2022-ஆம் ஆண்டு லாகூரில் ஆஸ்திரேலியாவோடு மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்களும், ஆஸ்திரேலியா தரப்பில் இரு வீரர்களும் சதம் கண்டனர். 2013-ஆம் ஆண்டு நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் இரு அணிகளிலும் சேர்த்து 4 பேட்டர்கள் சதம் அடித்தனர்.

 
இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆனால், முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக் ஆகியோரின் ஆட்டம் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கியது

கணிப்புகளைப் பொய்யாக்கிய ரிஸ்வான், ஷஃபீக்

“தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது, இதில் இலங்கை அணி நிர்ணயித்த 345 ரன்களை பாகிஸ்தான் எப்படி சேஸிங் செய்யப் போகிறது?” என்று சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் பறந்தன.

பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என்றே கணிப்புகள் வெளியாகின. இன்னிங்ஸின் முதல்பாதியில் இலங்கை அணியின் ஆதிக்கமே இருந்தது.

ஆனால், முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக் ஆகியோரின் ஆட்டம் இந்தக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கியது.

ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 131 ரன்களுடன்(8 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷஃபீக் 103 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்து(10 பவுண்டரி, 3 சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.

இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு, 156 பந்துகளில் 176 ரன்களைச் சேர்த்துப் பிரிந்தனர். 4-வது விக்கெட்டுக்கு சவுத் ஷகீலுடன் இணைந்த ரிஸ்வான் 68 பந்துகளில் 95 ரன்களைச் சேர்த்தார். மற்ற வகையில் பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக்(12), கேப்டன் பாபர் ஆசம் (10), சவுத் ஷகீல் (31) ரன்களைச் சேர்த்தனர். இப்திகார் அகமது 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 
இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அறிமுக ஆட்டத்திலேயே இதுவரை எந்த பேட்டரும் சதம் அடித்தது இல்லை. அப்துல்லா ஷஃபீக் தனது உலகக் கோப்பை அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து வரலாறு படைத்திருக்கிறார்

அறிமுகப் போட்டியிலேயே சதம்

இதில் அப்துல்லா ஷஃபீக் தனது உலகக் கோப்பை அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேய உலகக் கோப்பை அறிமுக ஆட்டத்திலேயே இதுவரை எந்த பேட்டரும் சதம் அடித்தது இல்லை. இதற்கு முன் உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் மோசின் கான் 1983-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 83 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. ஆனால், சதம் அடித்தது இல்லை. முதல்முறையாகச் சதம் அடித்து வரலாற்றில் ஷஃபீக் பதிவு செய்தார்.

அதுமட்டுமல்லாமல், ஃபக்கர் ஜமானுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அப்துல்லா ஷஃபீக், இதுவரை 8 ஏ லிஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பாகிஸ்தானின் முதல் தரப்பு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் உள்ளவர். ஆனால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை ஷஃபீக் இறுகப்பற்றி பக்கர் ஜமானுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளார்.

 
இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இலங்கை அணியின் வீரர்கள் இந்த ரன்களைத் தடுக்கத் தவறியதுதான் தோல்விக்கான முக்கியக் காரணம்

இலங்கை அணி எங்கே சறுக்கியது?

இலங்கை அணி மிகப்பெரிய ஸ்கோரை அடித்திருந்த போதிலும் வாய்ப்பைத் தக்கவைக்கத் தெரியாமல், தொடர்ந்து 2-வது தோல்வியைச் சந்தித்துள்ளது.

இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். இலங்கை அணியில் குஷால் மெண்டிஸ் (122), சதீரா சமரவிக்ரமா (108) பதும் நிசாங்கா (51) ஆகியோரைத் தவிர மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

இலங்கை அணி டெத் ஓவர்களையும் பயன்படுத்தத் தவறவிட்டது, இதனால் கூடுதலாக ரன் சேர்க்கும் வாய்ப்பை இழந்தது. டெத் ஓவர்களில் கடைசி 3 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே இலங்கை சேர்த்து, ஒட்டுமொத்தமாகக் கடைசி 10 ஓவர்களில் 61 ரன்களை மட்டுமே இலங்கை சேர்த்தது. ஆனால், பாகிஸ்தானோ 74 ரன்களைச் சேர்த்தது.

345 ரன்களைச் சேர்த்துவிட்டோம் எங்கே இந்த ஸ்கோரை பாகிஸ்தான் சேஸிங் செய்யப் போகிறது என்று குறைத்து மதிப்பிட்டு, கவனக்குறைவாகச் செயல்பட்டது வீரர்களின் பீல்டிங்கில் மெத்தனப் போக்கு, கேட்சுகளை நழுவவிட்டது தோல்விக்கான காரணமாகத் தெரிகிறது.

 
இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இலங்கை வீரர்கள் கேட்சுகளை நழுவவிட்டது தோல்விக்கான காரணமாகத் தெரிகிறது. ஹேமந்தா ஒரு கேட்சைத் தவறவிடும் காட்சி

தொடக்கத்தில் பாகிஸ்தானின் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து பந்துவீச்சை மாற்றி விக்கெட் வீழ்த்தத் தவறிவிட்டனர், ரன்களைக் கட்டுப்படுத்தவும் தவறிவிட்டனர்.

ரிஸ்வான்-ஷஃபீக் கூட்டணி 10 முதல் 20 ஓவர்களில் 62 ரன்களையும், 20 முதல் 30 ஓவர்களில் 70 ரன்களையும், 30 முதல் 40 ஓவர்களில் 99 ரன்களையும் கடைசி 10 ஓவர்களில் 74 ரன்களையும் குவித்தனர். இதன் மூலம் ஒவ்வொரு 10 ஓவர்களுக்குப் பின்னும் இலங்கையின் அணியின் பந்துவீச்சும், பீல்டிங்கும் எந்த அளவு மோசமடைந்தது என்பது தெரிந்து கொள்ள முடியும்.

அது மட்டுமல்லாமல் இலங்கை அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. தீக்சனா ஓவரில் ரிஸ்வான், ஷகீலுக்கு இரு கேட்சுகளை பீல்டர்களை கோட்டைவிட்டனர். கேட்சு வாய்ப்புகளை மட்டும் இலங்கை அணி தவறவிடவில்லை, வெற்றி வாய்ப்பையும் சேர்த்து தவறவிட்டது.

மோசமான பீல்டிங், ஓடியே எடுத்த 179 ரன்கள்

இலங்கை பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியவில்லை, ரன்கள் செல்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 345 ரன்களை சேஸிங் செய்த பாகிஸ்தான் பேட்டர்கள் கணக்கில் மொத்தம் 26 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்தான். அதாவது, 140 ரன்கள்தான்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக மட்டும் இரு ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 750 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியுள்ளதன் மூலம் அணியின் பந்துவீச்சு, பீல்டிங் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது தெரிகிறது.

மீதமுள்ள 205 ரன்களில் 26 ரன்கள் உதரிகள் போக, 179 ரன்களை பாகிஸ்தான் பேட்டர்களான ரிஸ்வான், ஷஃபீக் இருவரும் பெரும்பாலும் ஒரு ரன், 2 ரன்கள் என விக்கெட்டுகளுக்கு இடையே ஓடியே சேர்த்துள்ளனர்.

இலங்கை அணியின் வீரர்கள் இந்த ரன்களைத் தடுக்கத் தவறியதுதான் தோல்விக்கான முக்கியக் காரணம்.

 
இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதீரணா, 9 ஓவர்கள் வீசி 90 ரன்களை வாரி வழங்கினார். அதாவது, ஓவருக்கு 9 ரன்களை வழங்கியுள்ளார்

பதிரணாவின் அனுபவமற்ற ஆட்டம்

குறிப்பாக, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரணா, 9 ஓவர்கள் வீசி 90 ரன்களை வாரி வழங்கினார். அதாவது, ஓவருக்கு 9 ரன்களை வழங்கியுள்ளார். உதிரிகள் கணக்கில் பதீரணா மட்டும் 9 வைடுகளை வீசியுள்ளார். ஆக மொத்தம் பதிரணா வழங்கிய ரன்கள் மட்டும் 99.

பதிரணா கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 57 வைடுகளை வீசியுள்ளார், வைடுகள் மூலம் மட்டும் 91 ரன்களை வழங்கியுள்ளார். இதுவரை எந்த நாட்டு வீரரும் இந்த அளவு வைடுகளை வீசவில்லை.

பதிரணாவைத் தவிர இலங்கை அணியில் உள்ள மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக 6 ரன்களைத்தான் விட்டுக்கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் அனுபவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத பதிரணாவுக்கு வாய்ப்புக் கொடு்தது இலங்கை அணி கையைச் சுட்டுக்கொண்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

பதிரணா போன்ற அனுபவமற்ற பந்துவீச்சாளர்கள், அழுத்தம் நிறைந்த உலகக் கோப்பைத் தொடர்களில் நெருக்கடி தரக்கூடியவகையில் பந்துவீசுவது கடினம் என்று சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. பதிரணாவை சரியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் தோனி போன்ற கேப்டன் இருக்க வேண்டும். இந்த இரண்டுமே இலங்கை அணியிடம் இல்லை என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

இலங்கை அணி மட்டும் இந்த ஆட்டத்தில் 26 உதிரி ரன்களை வழங்கியுள்ளது. இதில் 25 வைடுகள், அதில் பதிரணா கணக்கில் மட்டும் 9 வைடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கூடுதலாக 4 ஓவர்களை வீசியிருக்கிறது இலங்கை. இந்த கூடுதல் ரன்களையும் பந்துகளையும் கட்டுப்படுத்தி இருந்தாலே பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும்.

ஆக மொத்தம் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு அந்த அணியின் பேட்டர்களின் முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், இலங்கை அணியின் மோசமான பந்துவீச்சும், பீல்டிங்கும் மற்றொரு காரணமாக அமைந்துவிட்டது.

 
இலங்கை, பாகிஸ்தான், கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தோல்விக்குப்பின் இலங்கை கேப்டன் ஷனகா, தங்களுடைய பந்துவீச்சாளர்களிடம் இருந்து அதிகமாக ஏதும் எதிர்பார்க்க முடியாது, என்றார்

‘வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம்’

தோல்விக்குப்பின் இலங்கை கேப்டன் ஷனகா கூறுகையில், “மெண்டிஸ் அருமையான ஃபார்மில் இருக்கிறார். சதீராவின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது, டெத் ஓவர்களில் நாங்கள் இன்னும் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாகச் சேர்த்திருக்க வேண்டும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், “பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஸ்லோவர் பந்துகள் சிறப்பாக வீசினர். எங்களுடைய பந்துவீச்சாளர்களிடம் இருந்து அதிகமாக ஏதும் எதிர்பார்க்க முடியாது. எளிமையான திட்டங்களுடன், களமிறங்கினோம், ஆனால் அதிகமான உதரிகளை வழங்கியிருக்கிறோம். துரதிர்ஷ்டமாக எங்களுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம்,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cxed30844nmo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானின் பெண் கிரிக்கெட் வர்ணணையாளரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

Published By: DIGITAL DESK 3

10 OCT, 2023 | 01:12 PM
image
 

இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்க சென்ற பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வர்ணணையாளரான ஜைனப் அப்பாஸை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்கும்,  சர்வதேச கிரிக்கெட் சபையில் (ஐ.சி.சி.,) குழுவில் பாகிஸ்தானின் ஜைய்னாப் அபாஸ்  இடம் பெற்றிருந்தார். 

இதற்காக கடந்த வாரம் இந்தியா வந்தார். இவர் ஐதராபாத்தில் பாகிஸ்தான்–நெதர்லாந்து பங்கேற்ற போட்டியை தொகுத்து வழங்கினார். 

அடுத்து இன்று நடக்கும் போட்டியில் பணியாற்ற இருந்தார்.  தவிர பெங்களூரு, சென்னை, ஆமதாபாத்திற்கும் செல்ல இருந்தார்.

ஆனால் இந்தியாவுக்கு எதிராக இணையதளங்களில், இவர் முன்பு தெரிவித்த கருத்துகள் வெளியாகின.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அவர் இந்தியாவை விட்டு துபாய் சென்றுவிட்டார் எனவும்  வட்டாரங்கள் தெரிவித்தன

பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணணையாளரார் மீது இந்திய வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், நாடு கடத்தப்பட்டதாக வெளியாகிய  செய்தியை மறுத்த ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜைய்னாப் நாடு கடத்தப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்,’ என தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166545

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பாகிஸ்தானின் பெண் கிரிக்கெட் வர்ணணையாளரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

Published By: DIGITAL DESK 3

10 OCT, 2023 | 01:12 PM
image
 

இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்க சென்ற பாகிஸ்தான் பெண் கிரிக்கெட் வர்ணணையாளரான ஜைனப் அப்பாஸை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிகளை தொகுத்து வழங்கும்,  சர்வதேச கிரிக்கெட் சபையில் (ஐ.சி.சி.,) குழுவில் பாகிஸ்தானின் ஜைய்னாப் அபாஸ்  இடம் பெற்றிருந்தார். 

இதற்காக கடந்த வாரம் இந்தியா வந்தார். இவர் ஐதராபாத்தில் பாகிஸ்தான்–நெதர்லாந்து பங்கேற்ற போட்டியை தொகுத்து வழங்கினார். 

அடுத்து இன்று நடக்கும் போட்டியில் பணியாற்ற இருந்தார்.  தவிர பெங்களூரு, சென்னை, ஆமதாபாத்திற்கும் செல்ல இருந்தார்.

ஆனால் இந்தியாவுக்கு எதிராக இணையதளங்களில், இவர் முன்பு தெரிவித்த கருத்துகள் வெளியாகின.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அவர் இந்தியாவை விட்டு துபாய் சென்றுவிட்டார் எனவும்  வட்டாரங்கள் தெரிவித்தன

பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணணையாளரார் மீது இந்திய வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், நாடு கடத்தப்பட்டதாக வெளியாகிய  செய்தியை மறுத்த ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜைய்னாப் நாடு கடத்தப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் அவர் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்,’ என தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166545

விளையாட்டிலும் அரசியல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை: ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சாதனைமேல் சாதனை - என்ன தெரியுமா?

உலகக்கோப்பை - இந்தியா vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

11 அக்டோபர் 2023, 16:04 GMT
புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

ரோகித் சர்மா ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் ரோகித் அடித்த ஏழாவது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் 6 சதங்கள் அடித்ததிருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக மிக விரைவான சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவின் 31வது சதமாகும்.

ரோகித் சர்மா இந்தப் போட்டியில் மேலும் இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

ஒருநாள் உலகக் கோப்பையில் மிகக் குறைவான இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.

இந்த சாதனையை உலகக் கோப்பையில் தனது 19வது இன்னிங்சில் நிகழ்த்தியுள்ளார்.

 
உலகக்கோப்பை - இந்தியா vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 19 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து இந்தியாவிற்கு 273 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ரோகித் சர்மாவின் சதத்தால், இந்திய அணி 18.4 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இந்தியாவின் முதல் விக்கெட்டாக இஷான் கிஷன் (47 ரன்) வீழ்ந்தார்.

சாதனை வீரரான ரோகித் சர்மா-

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசத்தலாக ஆடி சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிவெற்றி இலக்கை நெருங்குகையில் ஆட்டமிழந்தார். அவர் 84 பந்துகளில் 16 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்தார். அடுத்தாக களமிறங்கிய ஸ்ரேயாஸ், நட்சத்திர வீரர் கோலியுடன் நிலைத்து ஆடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கோலி 56 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயாஸ் 25 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி 35-வது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும். முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா அபாரமாக வென்றிருந்தது.

 
சாதனை வீரரான ரோகித் சர்மா-

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ்

முன்னதாக, ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ராவும் குல்தீப் யாதவும் சிறப்பாக பந்துவீசினர். பும்ரா 4 விக்கெட்டுகளையும், குல்தீப் அணித்தலைவர் ஹஷ்மதுல்லாவையும் வீழ்த்தினார். இருவரும் மிகவும் சிக்கனமாக பந்துவீசினர்.

ஆப்கானிஸ்தானுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடி 80 ரன்கள் அடித்தார். அஸ்மதுல்லா உமர்ஜாய் 62 ரன்கள் சேர்த்தார். இவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.

டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான விக்கெட் கீப்பர் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் நிதானமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்தனர்.

ஏழாவது ஓவரில், ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில், ஜாட்ரனை (22 ரன்கள்) விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் அற்புதமான கேட்ச் பிடித்து ஆப்கானிஸ்தானுக்கு முதல் அடியை கொடுத்தார்.

சாதனை வீரரான ரோகித் சர்மா-

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

13வது ஓவரில், ஹர்திக் பாண்டியா இரண்டாவது தொடக்க வீரரான குர்பாஸை (21 ரன்கள்) வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே, ஷர்துல் தாக்கூர் ஆப்கானிஸ்தானுக்கு மூன்றாவது அடியைக் கொடுத்தார்.

இதன் பிறகு, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடியும் அஸ்மதுல்லா உமர்ஜாயும் இணைந்து சிறப்பாக ஆடி நான்காவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தனர்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டனுக்கும் முகமது நபிக்கும் இடையே 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் இருந்தது, அதன் பிறகு ஆப்கானிஸ்தானின் விக்கெட்டுகள் தவறான நேரத்தில் விழத் தொடங்கின.

ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது.

சாதனை வீரரான ரோகித் சர்மா-

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பும்ரா மற்றும் குல்தீப் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு

ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவிற்காக சிறப்பாக பந்துவீசினார், அவர் போட்டியின் 7வது, 45வது, 46வது மற்றும் 49வது ஓவர்களில் நான்கு பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார்.

அவரது 10 ஓவர்களில், பும்ரா 40 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் பும்ராவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்காக மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக இருந்தவர் குல்தீப் யாதவ். குல்தீப் யாதவ் ஆரம்பத்திலேயே மிகவும் சிறப்பாக பந்துவீசினார். முதல் நான்கு ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் ஐந்தாவது ஓவரில் அஸ்மதுல்லா உமார்ஜாய் இரண்டு சிக்சர்களை விளாசினார். இதைடுத்து, அவருக்கு ஓய்வு கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா, 34வது ஓவரை வீச அவரை மீண்டும் அழைத்தார். அப்போது, அஸ்மதுல்லா மீண்டும் ஒரு சிக்சர் அடித்தார்.

அடுத்தடுத்த ஓவர்களில், குல்தீப் யாதவ் கவனமாக பந்துகளை வீசி கடைசி மூன்று ஓவர்களில் வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

குல்தீப் தனது 10வது ஓவரில் ஆப்கானிஸ்தான் கேப்டனின் விக்கெட்டை வீழ்த்தி, கடைசி ஓவர்களில் தனது சிறப்பான பந்துவீச்சுக்கான பலனைப் பெற்றார். அவர் போட்டியின் 43வது ஓவரில் குல்தீப் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார்.

சாதனை வீரரான ரோகித் சர்மா-

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

ரன்களை வாரியிறைத்த சிராஜ்

ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியின் போது பந்துவீச்சால் அசத்திய முகமது சிராஜ், இந்தப் போட்டியில் அதிக ரன்களை வாரிக் கொடுத்தார்.

சிராஜ் ஏழு ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளிலும் மொத்தம் 11 பவுண்டரிகள் அடிக்கப்பட்ட நிலையில், சிராஜின் பந்துகளில் மட்டும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 10 பவுண்டரிகள் அடித்தனர்.

https://www.bbc.com/tamil/articles/c72rmr3xkrlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விரைவிலேயே ஆட்டமிழப்பதை தவிர்க்க இந்திய வீரர்கள் பயன்படுத்திய புதிய உத்தி

ரோஹித் - கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா-ஆஃப்கானிஸ்தான் இடையே நேற்று (அக்ட்போபர் 11) நடந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தைக் காணும் ஆவலில் டெல்லி ரசிகர்கள் குழுமியிருந்தனர். ஆனால், ரோஹித் சர்மா அபாரமான தனது ஆட்டத்தின்மூலம் அவர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். இருப்பினும் விராட் கோலியின் பேட்டிங்கையும், அவரின் ரசிக்கத்தக்கச் செயல்களையும் ரசிகர்கள் கண்டுகளிக்காமல் இல்லை.

273 ரன்கள் எனும் இலக்கை 15 ஓவர்கள் மீதமிருக்கும்போதே, இந்திய அணி சேஸிங் செய்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.

 
இந்தியா, ஆஃப்கானிஸ்தான், கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

12 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை மாற்றிய கோலி

இது விராட் கோலி டெல்லியில் பங்கேற்கும் 2-வது உலகக் கோப்பைப் போட்டி. இதுவே அவரது கடைசி உலகக் கோப்பையாகக் கூட இருக்கலாம். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோலி, 20 பந்துகளில் 12 ரன்களுடன் ரசிகர்கள் முன் தலைகுனிந்து வெளியேறினார்.

ஆனால், இன்று விராட் கோலி களமிறங்கும்போதே கோலி, கோலி என்ற 32,000 ரசிகர்களின் கோஷத்துடன் களமிறங்கினார். 55 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிலும் அஸ்மத்துல்லா ஓமர்ஜாஸ் வீசிய ஓவரில் விராட் கோலி தன்னுடைய ‘பிராண்டிங் ஷாட்டான’, ‘ஸ்ட்ரைட் டிரைவில்’ ஷாட் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்தியா, ஆஃப்கானிஸ்தான், கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி 55 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

தொடக்க ஆட்டக்காரர் பணி ஏன் கடினமாகிவிட்டது?

அதேநேரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 6 பந்துகளைச் சந்தித்து கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் ரோஹித் சர்மா வெளியேறியதை இப்போட்டியில் சரிசெய்துவிட்டார். 30 பந்துகளில் அரைசதம், 63 பந்களில் சதம், 84 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாகப் பல அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்களின் பணி கடினமாகியிருக்கிறது. ஏனென்றால், தற்போது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ‘வெள்ளை கூக்கபுரா’ பந்துகள் தொடக்கத்தில் அதிகமாக ஸ்விங் ஆவதும், ‘நிப்பிங்’ ஆவதும் பேட்டர்களுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. கூக்கபுரா பந்து தேயும்வரை தொடக்க ஆட்டக்காரர்கள் கவனத்துடன் பேட் செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நிச்சயம் விக்கெட்டை இழக்க நேரிடும்.

அதனால்தான் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் முதல் பவுண்டரி அடிக்கச் சில ஓவர்களை எடுத்துக்கொண்டு, செட்டில் ஆனபின்புதான் பவுண்டரி அடித்தார். ஆனால், அதன்பின் ரோஹித் சர்மா ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டியில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை 100.68ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 111.58ஆகவும் வைத்துள்ளார்.

 

கவனமாக ஷாட்களை ஆடிய ரோஹித் சர்மா

ரோஹித் சர்மாவின் நேற்று 16 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடித்தார். ‘விக்கெட்டை இழந்துவிடக்கூடாது, நீண்டநேரம் பேட் செய்ய வேண்டும்’ என்ற கவனத்துடன் ஒவ்வொரு ஷாட்டையும் தேர்ந்தெடுத்து ஆடினார். அதிலும், அவர் எந்த திசையில் வலிமையாக இருப்பார் என்பதை தெரிந்துகொண்டு ஷாட்களை ஆடினார்.

ரோஹித் சர்மாவுக்கு ஸ்கொயர்லெக், லெக் சைட் பிளிக், லேட் கட், மிட்-ஆஃப் டிராப் கிளிக் போன்ற ஷாட்களில்தான் பெரும்பாலும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும், இந்திய அணியின் வலிமையை வெளிக்காட்டியது.

ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் பசல்ஹக் பரூக்கி வீசிய ஓவரில் லாங்-ஆன் திசையில் பவுண்டரி அடித்து ரோஹித் சர்மா தனது கணக்கைத் தொடங்கினார். பரூக்கியின் அடுத்த ஓவரில் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்த ரோஹித் சர்மா பந்துவீச்சாளருக்கு நெருக்கடி அளித்தார். அதிலும் மெதுவான பந்தை பரூக்கி வீசியபோது, ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடித்து தனது ஃபார்மை வெளிப்படுத்தினார்.

இந்தியா, ஆஃப்கானிஸ்தான், கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை எந்த இந்திய பேட்டரும் செய்யாத வகையில் அதிவேகமாக, 63 பந்துகளில் சதம் அடித்து ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்துள்ளார்

இத்தனை சாதனைகளா?

நவீன் உல் ஹக் பந்துவீச வந்தபோது, அவரின் பந்துவீச்சில் மொகிந்தர் அமர்நாத் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ரசிகர்களை நோக்கி ரோஹித் சர்மா சிக்ஸர் விளாசி புதிய சாதனையைப் படைத்தார். அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸர் அடித்த கிறிஸ் கெயிலின் (553) சாதனையை ரோஹித் சர்மா நேற்று முறியடித்தார். ஓமர்ஜாய் பந்துவீச்சில் ரோஹித் சர்மா தனது 4-வது சிக்ஸரையும், ரஷித் கான் பந்துவீச்சில் 5-வது சிக்ஸரையும் விளாசி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை எந்த இந்திய பேட்டரும் செய்யாத வகையில் அதிவேகமாக, 63 பந்துகளில் சதம் அடித்து ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்தார். அது மட்டுமல்லாமல் உலகக் கோப்பைத் தொடர்களில் அதிகமான சதம் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

அது மட்டுமல்லாமல் உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணி சேர்த்த முதல் 100 ரன்களில் அதிகமான பங்களிப்பு ரோஹித் சர்மா உடையதாக இருக்கும் வகையிலும் சாதனை படைத்தார். அதாவது, உலகக் கோப்பைத் தொடர்களில் முதல் 100 ரன்களை சேர்த்திருந்தால், அதில் அதிகபட்ச பங்களிப்பாக ரோஹித் சர்மா 79 ரன்கள் பங்களித்திருப்பார். இந்த அளவு ரன்கள் பங்களிப்பை இதுவரை எந்த இந்திய பேட்டரும் செய்தது இல்லை.

அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் அதிகமான ரன்களைக் குவித்த இந்திய பேட்டரும் ரோஹித் சர்மாதான். ஆனால், இந்த இன்னிங்ஸ் அல்லது நேற்றைய இரவு மட்டுமே ரோஹித் சர்மாவின் சாதனையை வெளிக்காட்டுபவை அல்ல.

 
இந்தியா, ஆஃப்கானிஸ்தான், கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தியா அணி விளையாடும் போட்டிகளைப் போல வேறு போட்டிகள் ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை

ரசிகர்களின் ஆதரவே சாட்சி

ரோஹித் சர்மாவின் சாதனை எத்தகையது என்பது ரசிகர்களின் கரகோஷத்தாலும், கோஷத்தாலும், கைதட்டல்களாலும் வரையறுக்கப்பட்டது.

உலகக் கோப்பை தொடங்கி ஒருவாரம் கடந்துவிட்டது. ஆனால், இந்தியா விளையாடும் போட்டிகளைத் தவிர்த்து, பி.சி.சி.ஐ நிர்வாகிகள் விரும்பும் அளவுக்கு எந்த மைதானத்திலும் ரசிகர்கள் வருகை இல்லை. இதன் மூலம், இந்தியா அணி விளையாடும் போட்டிகளைப் போல வேறு போட்டிகள் ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை என்பதையே காட்டுகிறது.

‘இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன்’

கேப்டன் ரோஹித் சர்மா தனது ஆட்டம் குறித்துப் பேசுகையில், டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பானது என்றும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் களமிறங்கியதாகவும் கூறினார்.

“ஆட்டத்தில் கவனத்தைச் செலுத்திவிட்டால், விக்கெட் மேலும் எளிதாக மாறிவிடும் என்று தெரியும். எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் மனநிலையை மட்டும் நாம் இழந்துவிடக்கூடாது என்பது முக்கியமாகும்,” என்றார்.

மேலும், “நான் டாப்-ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது எனக்கான பொறுப்புகள் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். நல்ல தொடக்கம் தேவை, குறிப்பாக சேஸிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்கள் அளிக்கும் நம்பிக்கையும் அடித்தளமும் அணியை நல்ல நிலையில் கொண்டு செல்லும், அடுத்துவரும் பேட்டர்களுக்கு சிரமமில்லாமல் இருக்கும். இதுபோன்ற நாள் எனக்கு அமைந்தால், மிகப்பெரிய ஸ்கோரை அடையமுடியும்,” எனத் தெரிவித்தார்.

 
ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இனி அடுத்துவரும் 5 வாரங்களும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்குச் சவாலகத்தான் இருக்கும்

கேப்டன் ரோஹித் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள்

இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பதில் இருக்கும் அழுத்தம், இந்தப் போட்டியில் தன் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் அனைத்தையும் தெரிந்தே ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் கவனமாக நகர்வை எடுத்து வைக்கிறார்.

இந்திய அணியில் திறமைவாய்ந்த பல வீரர்கள் வந்தாலும், சென்றாலும், கடந்த 10 ஆண்டுகளாக ஐ.சி.சி சார்பில் எந்த ஒரு கோப்பையையும் வெல்ல முடியாத வறட்சி நிலவுகிறது. கிரிக்கெட்டில் மிகப்பெரிய, மிகசக்திவாய்ந்த தேசத்திற்கு இந்த விஷயம் மட்டும் புரிந்துகொள்ள முடியாததாகி இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபின் ரோஹித் சர்மா பதில் அளிக்கையில் “நாங்கள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள். எங்கள் மீது எப்போதும் ஒருவிதமான அழுத்தம் இருக்கத்தான் செய்யும்,” எனத் தெரிவித்தார்.

இனி அடுத்துவரும் 5 வாரங்களும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்குச் சவாலகத்தான் இருக்கும். வரும் சனிக்கிழமை ஆமதாபாத்தில் பாகிஸ்தானுடன் மோதும் ஆட்டம் உச்ச கட்ட நெருக்கடியை ரோஹித்துக்கு ஏற்படுத்தும்.

ஆப்கானிஸ்தானுடன் பேட் செய்தபோது ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த சுதந்திரம், வெளிப்படுத்திய இயல்பான ஆட்டம் பாகிஸ்தானுடன் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/articles/cyd1nd1d87do

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவின் உலக கோப்பை கனவு இன்றுடன் காலி ஆகுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் கிருபன் இந்த முறை போட்டி வைக்கேல்ல 
 

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கிரிக்கட் பதிவுகள் நன்றி ஏராளன் ........தொடருங்கள்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
South Africa FlagSouth Africa                                 311/7
Australia FlagAustralia    (40.5/50 ov, T:312) 177

South Africa won by 134 runs

 

PLAYER OF THE MATCH
109 (106) & 2 catches
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நல்ல காலம் கிருபன் இந்த முறை போட்டி வைக்கேல்ல 
 

 

இப்போதுள்ள நிலமையை பார்த்தால் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான் அரை இறுதிக்கு செல்லுமோ என நினைக்கின்றேன். 

இந்த தடவை கிட்டத்தட்ட ஐபில் எல் போட்டி போல சுற்று வைக்கப்பட்டு உள்ளது. 

நெட் ரன் ரேட் மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் ஒரே புள்ளிகளை எடுக்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன. எனவே முதலில் வரும் முதன் நான்கு எனும் வகையில் பார்க்கும்போது நெட் ரன் ரேட் மற்றவர்களுக்கு இணையாக கிட்டவாக வரவேண்டும்.

கிருபன் போட்டி வைக்காவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்கள், ரசிகைகள் உங்கள் அபிப்பிராயங்களை பகிரலாமே. 

சிறீ காந்த், கோபிநாத் பங்குபெறும் ஒரு தொலைக்காட்சி உரையாடல் சிறிதளவு பார்த்தேன். சிறீ காந்த் பாகிஸ்தான் முன்னிலைக்கு வராது என்று கூறுகின்றார். அவுஸ்திரேலியா இந்தியா இறுதி ஆட்டம் விளையாடும் என்கிறார். 

இப்போதுள்ள நிலமையை பார்த்தால் எனக்கு என்னமோ அவுஸ்திரேலியா அரை இறுதிக்கு செல்லும்போல் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்த தோல்விகளால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்ன?

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு, இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணி இதுபோன்ற மோசமான ஆட்டத்தை எந்தத் தொடரிலும் வெளிப்படுத்தியதில்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

மோசமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, வீரர்கள் தேர்வில் குழப்பம், மோசமான பீல்டிங், கேட்சுகளை தவறவிடுவது என ஏராளமான சிக்கல்களுடன் ஆஸ்திரேலிய அணி இந்த உலகக் கோப்பைத் தொடரில் பயணித்து வருகிறது.

இந்தச் சிக்கல்களை விரைவாகச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் கம்மின்ஸ் இருக்கிறார். அப்படிச் செய்யாவிட்டால் அடுத்த சில போட்டிகளில் தோல்வியையே சந்திக்க நேரிடும்.

லக்னோவில் நேற்று நடந்த உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. 312 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 177 ரன்களில் தோற்றது.

 
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதள பாதாளத்தில் விழுந்த ரன்ரேட்

இந்தத் தோல்வியின் மூலம் ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன் நிகர ரன்ரேட் மைனஸ் 1.907ஆகச் சரிந்துள்ளது.

இதுவரை நடந்த உலகக் கோப்பைத் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி இந்த முறை போன்று மோசமாக விளையாடியதில்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்நாட்டின் இணையதளங்கள், நாளேடுகள் அனைத்தும் நேற்றைய தோல்வியைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஏற்கெனவே இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றிருந்த நிலையில், நேற்று 134 ரன்களில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.

அடுத்துவரும் போட்டிகள் மிகவும் முக்கியம்

இன்னும் 7 ஆட்டங்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு மீதம் இருக்கும் நிலையில், அடுத்துவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமாகும். இதில் குறிப்பாக வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா வென்றுவிடலாம் என்று வாதத்துக்கு வைத்துக்கொண்டால்கூட, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தோற்றாலும் அடுத்த ஆட்டத்தில் வென்று தன்னை தயார் செய்திருக்கிறது. இலங்கை அணியும் முதல் வெற்றிக்காக போராடி வருகிறது. ஆதலால், அடுத்துவரும் 4 போட்டிகள் ஆஸ்திரேலிய அணிக்கு முள்மீது நடப்பதுபோன்றுதான் இருக்கும்.

 
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் நேற்று 7 கேட்சுகளைத் தவறவிட்டனர். மிட்செல் ஸ்டார்க் கேட்சைத் தவறவிடும் காட்சி

கடைசி இடத்திற்குச் சென்ற கேட்ச் பிடிக்கும் திறன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது, தோல்விக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் நேற்று 7 கேட்சுகளைத் தவறவிட்டனர். 5 முறை உலகக் கோப்பை சாம்பியன்களான ஆஸ்திரேலியா இதுபோன்ற முக்கியத்துவம்வாய்ந்த ஆட்டத்தில் ஒரே போட்டியில் 7 கேட்சுகளைக் கோட்டை விடுவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலிக்குக் கேட்சை கோட்டை விட்டதற்கான விலையை கடைசியில் ஆஸ்திரேலிய அணி கொடுத்தது நினைவிருக்கும். இப்போது ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும், இங்கிலிஸ், மார்ஷ் உள்ளிட்ட வீரர்களின் பல கேட்சுகளைக் கோட்டை விட்டது, ரன்களையும் தடுக்கவில்லை, தோல்வியையும் தடுக்கவில்லை.

‘கேட்ச் லாஸ் மேட்ச் லாஸ்’ என்று கிரிக்கெட்டில் அழகாகச் சொல்வார்கள். இந்த உலகக் கோப்பையில் இந்த வார்த்தை ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பொருத்தமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 54% ஆகக் குறைந்து கடைசி இடத்தில் இருக்கிறது.

இதனோடு ஓப்பிடுகையில் இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 92% முதலிடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 91%-த்தில் 2வது இடத்திலும், நெதர்லாந்து 83%-த்தில் 3வது இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 80%-த்தில் 4வது இடத்தில்தான் இருக்கின்றன. 5முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் கேட்ச் பிடிக்கும் திறன் 54% குறைந்திருப்பது தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘விவரிக்க வார்த்தைகளே இல்லை!’

ஆஸ்திரேலியாவின் கேட்ச் பிடிக்கும் திறன் குறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்ஷன் வர்ணனையின்போது கூறுகையில் “ஆஸ்திரேலியாவின் மோசமான ஆட்டத்தைப் பற்றி பேச எனக்கு வார்த்தைகளே வரவில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் கேட்ச், பீல்டிங்கை நினைத்தாலே இருள் சூழ்கிறது,” என்றார்.

மேலும், “தங்களின் திறனை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். பீல்டிங் மற்றும் கேட்ச் பிடிக்கும் தரத்துக்காகவே உலக அளவில் ஆஸ்திரேலியா மதிக்கப்படும். துரதிர்ஷ்டமாக கேட்ச் பிடிக்கும் திறன் உலகத்தரத்துக்கு உயரவில்லை,” என காட்டமாக விமர்சித்தார்.

வீரர்கள் தேர்வில் குழப்பம்

இந்தியாவில் உலகக் கோப்பை நடக்கும் போது, இங்குள்ள மைதானங்கள் பெரும்பாலும் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பது அனைத்து அணிகளுக்கும் தெரிந்த விஷயம். ஆனால், ஆடம் ஸம்பா என்ற ஒரு ஸ்பெசலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளரை மட்டும் வைத்துக்கொண்டு ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையைச் சந்தித்து வருகிறது. ஆஸ்டன் அகர் ஏன் சேர்க்கப்படவில்லை, லாபுஷேனை சேர்க்கவேண்டிய நிர்பந்தம் என்ன போன்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பகுதிநேரச் சுழற்பந்துவீச்சாளராக மேக்ஸ்வெல் இருப்பது ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னர் இருப்பது போன்று ஆகாது என்றாலும் இரு போட்டிகளிலும் ஆடம் ஸம்பாவைவிட மேக்ஸ்வெல் சிறப்பாகவே பந்துவீசியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்கூட 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே மேக்ஸ்வெல் விட்டுக்கொடுத்தார்.

 
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய அணிக்குப் பின்வரிசையில் மிகவும் பலம் சேர்க்கும் பேட்டாரக இருந்தவர் அலெக்ஸ் கேரே

அலெக்ஸ் கேரே ஏன் நீக்கப்பட்டார்?

இப்படி சுழற்பந்துவீச்சாளர்கள் ஜொலித்துவரும் நிலையில் ஏன் ஆஸ்திரேலிய அணி 2வதாக முழுநேர சுழற்பந்துவீச்சாளர் அல்லது பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்யவில்லை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேலும், உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன் கடைசி நேரத்தில் அணியில் அலெக்ஸ் கேரேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஜோஷ் இங்கிலிஸ் சேர்க்கப்பட்டதும் தற்போது அந்த அணிக்குப் பாதகமாகி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்குப் பின்வரிசையில் மிகவும் பலம் சேர்க்கும் பேட்டாரக இருந்தவர் அலெக்ஸ் கேரே. ஆஸ்திரேலய அணிக்கு இக்கட்டான நேரத்தில் பல முறை சிறப்பாக ஆடி வெற்றியத் தேடித்தந்த அனுபவம் உள்ளவர். ஆனால், அலெக்ஸ் கேரேவை நீக்கிவிட்டு இங்கிலிஸை சேர்த்ததும் விவாதமாகி இருக்கிறது.

 
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருப்பது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது

ஹெட் திரும்புவாரா?

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாமல் இருப்பது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக இருந்து வருகிறது. தற்போது தொடக்க வீரராகக் களமிறங்கும் மிட்ஷெல் மார்ஷ், ஒன்டவுன் அல்லது 2வது வரிசையில் களமிறங்கி விளையாடக்கூடியவர்.

டிராவிஸ் ஹெட் இல்லாத நிலையில் தொடக்க வீரராக மார்ஷ் களமிறங்கியும் பெரிதாக ரன சேர்க்கவில்லை. டிராவிஸ் ஹெட் அணிக்குள் வந்தால், பேட்டிங்கிலும் வலு சேர்க்கும், பகுதி நேர சுழற்பந்துவீச்சாளராகவும் இந்திய ஆடுகளங்களில் செயல்படுவார்.

 
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு மூன்றாவது நடுவர் அளித்த இரு அவுட் முடிவுகளும் ஒரு காரணம் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது

சர்ச்சைக்குரிய அவுட்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு மூன்றாவது நடுவர் அளித்த இரு அவுட் முடிவுகளும் ஒரு காரணம் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்குரிய ‘உயிர் வாய்ப்பு’ (live chance) என்பது மிகக் குறைவு. தவறான முடிவுகள் ஆட்டத்தை திருப்பிவிடும், ஆதலால்தான் சந்தேகத்தின் பலன் பேட்டருக்கு சென்று சேர வேண்டும் என தார்மீக ரீதியாகக் கூறுவதுண்டு. ஒரு பந்துவீச்சாளருக்கு ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்கூட மற்றொருவாய்ப்புக் கிடைக்கும், ஆனால், தவறான முடிவால் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்துவிட்டால் அவருக்கான வாய்ப்பு அந்த நிமிடமே மறுக்கப்படுகிறது.

இந்த ஆட்டத்திலும் மூன்றாவது நடுவரின் முடிவு, ஸ்மித், ஸ்டாய்னிஷ் இருவரின் வாய்ப்பையும் பறி்த்துவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இருந்த மோசமான கட்டத்தில் ஸ்மித், ஸ்டாய்னிஷ் இருவரின் விக்கெட்டும் மிக, மிக முக்கியமானதாக இருந்தது. இருவருக்கும் 3வது நடுவர் ஒருவேளை அவுட் வழங்காமல் இருந்திருந்தால் ஆட்டம் வேறு திசையில் பயணத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

அதிலும், ரபாடா வீசிய பந்து ஸ்மித்தின் கால்காப்பின் மேல்புறத்தில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. ஸ்மித் க்ரீஸுக்கு வெளியே வந்துதான் கால்காப்பில் வாங்கினார். கிரீஸுக்கும் ஸ்டெம்புக்கும் இடையே சில அடி தூரம் இருக்கும்போது, பந்தின் நகர்வையு ம் கணக்கிலெடுக்க வேண்டும். ஆனால், பந்தின் நகர்வு ஸ்டெம்பின் நுனியில் பட்டுச் செல்வது போன்றுதான் மூன்றாவது நடுவர் ரிச்சார்ட் கெட்டில்பர்க் கணிப்புக் காட்சியில் தெரிந்தது.

ஏறக்குறைய ஸ்டெம்பின் உயர்த்துக்கு மேல் பந்து செல்வதுபோலத்தான் இருந்தது. ஒருவேளை ‘அம்பயர்ஸ் கால்’ வந்திருந்தால்கூட ஸ்மித்துக்கு நடுவர் அவுட் வழங்கி இருக்கமாட்டார். சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு வழங்க வேண்டும் என்ற தார்மீகத்தைப் பின்பற்றாமல் மூன்றாவது நடுவர் கெட்டில்பர்க் அவுட் வழங்க, ஸ்மித் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

 
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, கிரிக்கெட், உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்டாய்னிஷ் ‘லெக் சைடில்’ சென்ற பந்தை தட்டிவிடும்போது, அவரின் இடது கை பேட்டின் கைபிடியிலும், வலது கை பேட்டின் கைப்பிடியைப் பிடிக்காமல் இருந்தது

ஸ்டாய்னிஷ் ஆட்டமிழந்ததில் நடந்தது என்ன?

ஸ்டாய்னிஷ்க்கு அவுட் வழங்கிய 3வது நடுவர் கெட்டில்பர்கின் முடிவும் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

ஸ்டாட்னிஷ் ஆடிய ஷாட்டை ஆய்வு செய்த 3வது நடுவர், பந்து ஸ்டாய்னிஷின் பேட் கைபிடியில் பட்டுச் சென்றதை உறுதி செய்து அவுட் வழங்கினார். இதைச் சற்றும் எதிர்பாராத ஸ்டாய்னிஷ் அதிருப்தியுடன் சென்றார். களத்தில் இருந்த நடுவர் ஜோயல் வில்சன், ஸ்டாய்னிஷ்குக்கு அவுட் வழங்கவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா அப்பீல் செய்தவுடன் இந்த முடிவு வழங்கப்பட்டது.

உண்மையில், ஸ்டாய்னிஷ் ‘லெக் சைடில்’ சென்ற பந்தை தட்டிவிடும்போது, அவரின் இடது கை பேட்டின் கைபிடியிலும், வலது கை பேட்டின் கைப்பிடியைப் பிடிக்காமல் இருந்தது.

ஆனால், இரு கைகளும் கைப்பிடியைப் பிடித்துள்ளபோது பந்து கைப்பிடியில் அல்லது கையுறையில் பட்டு சென்று விக்கெட் கீப்பர் பிடித்தால்தான் ‘அவுட்’ என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், பேட்டின் கைப்பிடியைப் மட்டும் பேட்டர் பிடித்திருந்தபோது, பந்து கைப்பிடியில் அல்லது கையுறையில் உரசிச் சென்று விக்கெட் கீப்பர் பிடித்தால் அது ‘அவுட்’ இல்லை என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கிரிக்கெட் விதி 5.6.2-இன்படி, பேட்டர் கையில் அணிந்திருக்கும் கையுறையில் பந்து பட்டாலே அது பேட்டில் பட்டதாகவே கணக்கில் கொள்ள வேண்டும் எனத் தெரிகிறது.

மூன்றாவது நடுவர் கெட்டில் பர்க், 4வது நடுவர் கிரிஸ் பிரவுன் ஆகியோரின் முடிவுக்கு முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.

 

மோசமான பேட்டிங்

இவை மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணி இதுபோன்று மோசமான பேட்டிங்கையும் எந்த 40ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் வெளிப்படுத்தியதில்லை. அதிலும் 70 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற மோசமான நிலையை எட்டியதில்லை.

பீல்டிங்கில் கவனம் செலுத்தாது, கேட்ச் பயிற்சியில் தீவிரம் காட்டாதது, ஆடுகளத்தை தவறாகக் கணித்தது போன்றவை ஆஸ்திரேலிய அணியின் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

அதிலும் ஒருநாள் போட்டிக்கு கேப்டன் செய்யும் அனுபவம் இல்லாத கம்மின்ஸ், கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது. அடுத்துவரும் 7 போட்டிகளில் 4 போட்டிகள் மிகவும முக்கியமானவை, 7 போட்டிகளையும் வெல்வது அவசியம், ரன்ரேட்டும் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதால், அடுத்துவரும் ஒவ்வொரு ஆட்டமும் ஆஸ்திரேலியாவுக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் இருக்கிறது.

https://www.virakesari.lk/article/166747

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை: நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு புதிய சிக்கல் - வில்லியம்சன் என்ன செய்வார்?

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 7 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கேன் வில்லியம்ஸன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று, 78 ரன்கள் சேர்த்து விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

சென்னை சேப்பாக்கம் மைாதானத்தில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி.

முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. 246 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 42.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

நிகர ரன்ரேட் உயரவில்லை

நியூசிலாந்து அணிக்கு இது மூன்றாவது வெற்றி. தொடர்ந்து 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் நியூசிலாந்து இருந்தாலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் 1.604 என்று தென் ஆப்பிரிக்காவுக்கு கீழேயும், இந்திய அணிக்கு சற்று அதிகமாகவும் இருக்கிறது.

வங்கதேச அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி , இரு தோல்விகளுடன் 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் நிகர ரன்ரேட் மைனஸ் 0.699 ஆக இருக்கிறது.

நியூசிலாந்து அணியின் கடைசி இரு போட்டிகள் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணியுடனான போட்டி என்பதால் எளிதாக வென்றுவிட்டது, ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியிலும்கூட வெற்றி எளிதாகும். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு வெற்றி 8 ஓவர்கள் மீதம் இருக்கையில்தான் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அடித்த 280 ரன்களுக்கு மேலான ஸ்கோரை 36 ஓவர்களில் சேஸிங் செய்த நியூசிலாந்து அணி, நேற்று 245 ரன்களை சேஸ் செய்ய 42 ஓவர்களை எடுத்துக்கொண்டது.

அதனால்தான் நியூசிலாந்து அணி 3 வெற்றிகளைப் பெற்றபோதிலும் நிகர ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. ஆனால், தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகளிலேயே நிகர ரன்ரேட் 2.00க்கும் மேல் உயர்ந்துள்ளது.

 
நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்வரும் சவால்கள்

சென்னை ஆடுகளம் ஒரு காரணமாக இருந்தாலும், எதிரணியின் பந்துவீச்சு திறமை, ஃபீல்டிங், லைன் அண்ட் லென்த் பந்துவீச்சு போன்றவையும் நியூசிலாந்து அணியின் செயல்பாட்டை மதிப்பிடும்.

நியூசிலாந்து அணிக்கு அடுத்து வரக்கூடிய இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான ஆட்டம் சவால்கள் நிறைந்ததாக அமையும். அப்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் மீதான முழுமையாக மதிப்பீடு வெளிப்படும்.

வில்லியம்ஸன் பேட்டிங் எப்படி?

முழங்கால் காயம் காரணமாக கடந்த 7 மாதங்களாக விளையாடாமல் இருந்த கேப்டன் வில்லியம்ஸன் நேற்று முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடி நேற்று மிகவும் நிதானமாக பேட் செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்தில் அதேபோல் வெளிப்படுத்த முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, 9 ரன்னில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் கான்வேயுடன் சேர்ந்த வில்லியம்ஸன் மிக மந்தமாகவே பேட் செய்தார். வழக்கமான வில்லியம்ஸன் ஆட்டத்தைப் போன்று இல்லாமல் ஏதோ டெஸ்ட் போட்டியில் பேட் செய்வது போன்று அவரது ஆட்டம் அமைந்திருந்தது.

கான்வேயுடன் 82 ரன்கள் பார்ட்னர்ஷிப், டேரல் மிட்ஷெலுடன் சேர்ந்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், வில்லியம்ஸன் தரப்பில் பெரிதாக ரன்கள் சேரவில்லை. 107 பந்துகளில் 78 ரன்களுடன் ஸ்ட்ரைக் ரேட் 72 ஆகத்தான் வில்லியம்ஸன் வைத்திருந்த நிலையில் ரிட்டயர்ஹர்ட் முறையில் வெளியேறினார்.

 
நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிகவும் எளிதாக அடிக்கக்கூடிய இந்த ஸ்கோரை எட்டுவதற்கு வில்லியம்ஸன் எதற்காக இத்தனை மந்தமாக ஆட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏழு மாதங்களுக்குப்பின் சர்வதேச களத்துக்கு வந்துள்ள வில்லியம்ஸன், இன்னும் பேட்டிங்கில் முழு ஃபார்முக்குள் வரவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

அதேநேரம், டேரல் மிஷெல் களத்துக்கு வந்ததில் இருந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்து 43 ரன்களில் அரைசதம் அடித்தார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 67 பந்துகளில் 89 ரன்களுடன் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) டேரல் மிஷெல் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை ஆடுகளத்தில் இதுபோன்று அதிரடியாகவும் பேட் செய்ய முடியும் என்பதை மிஷெல் ஆட்டம் வெளிப்படுத்தியது.

டேரல் மிஷெல் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தை கேன் வில்லியம்சனால் வழங்க முடியவில்லை. வில்லியம்ஸன் மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்ப அவருக்கு இன்னும் போதுமான அளவு ஆட்டங்கள் தேவைப்படுகிறதா, போதுமான பயிற்சியின்றி, நேரடியாக சர்வதேச களத்துக்குள் வந்துவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

ரவீந்திராவுக்கு அழுத்தம்

ரச்சின் ரவீந்திரா குறைவான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுதான் உலகக்கோப்பைத் தொடரில் அறிமுகமானார். இளம் வீரரான ரவீந்திராவை தொடக்க வீரராக களமிறக்கி அவருக்கு அதிகமான அழுதத்தைத் திணித்து பேட்டிங் திறமையை குலைக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. அதனால்தான், நிலைத்து விளையாடக்கூடிய ரவீந்திரா, நேற்று விரைவாக ஆட்டமிழந்தார்.

வில்லியம்ஸன் ஏன் முயலக்கூடாது

ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் வாயுந்த வில்லியம்ஸன் தொடக்க வீரராக களமிறங்கி, தனது ஒன்டவுன் இடத்தை ரவீந்திராவுக்கு வழங்கியிருக்கலாம். கடந்த 2 போட்டிகளிலும் ரவீந்திரா ஒன்டவுன் வரிசையில் சதம், அரைசதம் என சிறப்பாக ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்காரர் என்னும் போது கணிக்கும் திறன், அனுபவம், பொறுமை, கவனம் தேவை, இவை வில்லியம்ஸிடம் இருக்கும்போது அவர் களமிறங்கியிருக்க வேண்டும்.

சர்வதேசஅனுபவம் இல்லாத ரவீந்திராவை களமிறக்கி நியூசிலாந்து அணி அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 

“பவுன்ஸர்” பெர்குஷன்

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு ஆறுதலான, சாதகமான அம்சம், பெர்குஷன் பந்துவீச்சு. கடினமான, பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் பெர்குஷன் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதை 2018ஆம் ஆண்டு, அபுதாபியில் நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் இமாம் அல் ஹக்-க்கு ஏற்பட்ட நிலைமையால் அறியலாம். 2019 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பெர்குஷனின் பவுன்ஸரை தாங்க முடியாமல் பின்பக்கமாக விழுந்ததும் நினைவிருக்கும்.

அதுபோன்ற துல்லியமான பவுன்ஸர், நெருக்கடி தரும் லைன், லென்த் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்திலும் பெர்குஷனிடம் இருந்தது. சராசரியாக 145 கி.மீ வேகத்தில் வீசும் பெர்குஷனின் பந்துவீச்சை கடினமான ஆடுகளத்தில் பேட்டர்கள் விளையாடுவது மிகக் கடினம். இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசிய பெர்குஷன் 49 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

சென்னை ஆடுகளம் கணிக்க முடியாத தன்மை கொண்டது என்பதால், கூடுதலாக சுழற்பந்துவீச்சாளருடன் வராமல் பெர்குஷனுக்கு வாய்ப்பளித்தார் வில்லியம்ஸன். அதற்கு ஏற்றாற்போல், போல்ட், பந்துவீச்சில் பந்துகள் ஸ்விங் ஆகி பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தியதைப் பார்த்த வில்லியம்ஸன், களத்தில் பெர்குஷனை பயன்படுத்தினா்.

அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. வங்கதேசத்தின் இரு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி, அந்த அணியின் பேட்டர்களை துல்லியமான பவுன்சர்களாலும், லென்த் பந்துவீச்சாலும் பெர்குஷன் திணறடித்தார்.

'ஷார்ட் பால்' முயற்சிக்கு நல்ல பலன்

ஆட்டநாயகன் விருது வென்ற பெர்குஷன் கூறுகையில், “நியூசிலாந்து ஆடுகளத்தைப் போல் இந்தியா இல்லை. ஆகையால், நாங்கள் நடுப்பகுதி ஓவர்களில் சிறிய மாற்றத்தை பந்துவீச்சில் செய்தோம்.

அதிகமான ஷார்ட் பந்துகளை வீசும் முயற்சிக்கு நன்கு பலன் கிடைத்திருக்கிறது. 3 ஆட்டங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். பேட்டர்களுக்கு வரும் போட்டிகளில் வித்தியாசமான நெருக்கடிகளை வழங்க முயல்வோம்,” எனத் தெரிவித்தார்.

 
நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெர்குஷன் முக்கியத் துருப்புச்சீட்டு

பெர்குஷன் பந்துவீச்சு குறித்து டிரன்ட் போல்ட் கூறுகையில், “காயத்திலிருந்து குணமடைந்து, முழுவீச்சில் பெர்குஷன் பந்து வீசியதைப் பார்த்தபோதும், அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

துல்லியத்தன்மை மாறாமல் பவுன்ஸர் வீசுவது, 150 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதும், லென்த்தில் வீசுவதும் பெர்குஷனின் சிறப்பு, அபாரமான திறமை கொண்டவர். பெர்குஷன் எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர், அவரின் பந்துவீச்சு வரும் போட்டிகளில் முக்கியப் பங்காற்றும்,” எனத் தெரிவித்தார்.

காயத்திலிருந்து குணமடைந்த பெர்குஷன் மீண்டும் இயல்பான ஃபார்முக்கு வந்துவிட்டது நியூசிலாந்து அணிக்குப் பெரிய பலம். ஆனால் கேப்டன் வில்லியம்ஸன் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்பது அவரின் பேட்டிங்கிலேயே தெரிந்தது.

இதே உடல்நிலையுடன் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடப் போகிறாரா அல்லது வில்லியம்ஸன் இளம் வீரர்களுக்கு வழிவிடுவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேப்பாக்கம் ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை

நியூசிலாந்து கேப்டடன் வில்லியம்ஸன் கூறுகையில், “எனக்கு ஏற்பட்ட காயம் விரைவில் குணமடைந்துவிடும் என நம்புகிறேன், முழங்கால் காயத்திலிருந்தும் மீண்டுவிட்டேன். எங்கள் அணி வீரர்கள் சிறப்பாகவே விளையாடி வருகிறார்கள்.

கடினமான ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். தேவைப்படும் நேரத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பதும் சிறந்த அணிக்கு ஆரோக்கியமானது. சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து, நன்கு ஸ்விங் ஆனது.

மோசமான ஆடுகளம் அல்ல, இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் ஆடுகளம். பெர்குஷன் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. நடுப்பகுதி ஓவர்களில் ஆடுகளத்தின் தன்மை மாற்றமடைந்து, வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் ஒத்துழைத்தது,” எனத் தெரிவித்தார்.

கணிக்க முடியாத அணி

வங்கதேசம் அணியைப் பொறுத்தவரை தொடக்க காலத்தில் இருந்து இப்போது வரை கணிக்க முடியாத அணியாகவே இருந்து வருகிறது.

வங்கதேச அணி எந்தப் போட்டியில் வெல்லும், எந்த அணியை வீழ்த்தும் என்று கணிக்க முடியாது. அதேபோலத்தான் இந்த உலகக்கோப்பைப் போட்டியிலும் வங்கதேச அணியின் செயல்பாடு அமைந்திருக்கிறது.

நியூசிலாந்தின் தொடர்வெற்றி தொடருமா? வில்லியம்ஸன் காயம் பின்னடைவா? சவால்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

டிஃபெண்ட் செய்யக்கூடிய ஸ்கோரா?

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் 250 ரன்கள் எடுத்தாலே அதை சேஸிங் செய்யவிடாமல் டிஃபெண்ட் செய்துவிடலாம். ஆனால், அதற்கு திறமையான பந்துவீச்சாளர்களும், கட்டுக்கோப்பான பந்துவீச்சும் அவசியம்.

இவையெல்லாம் வங்கதேசத்திடம் இருந்திருந்தால் நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து ஆட்டத்தை இன்னும் வெற்றிக்கு அருகே நகர்த்தியிருக்கலாம்.

வங்கதேச அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர்த்து வேறு எந்தப் பந்துவீச்சாளரும் கட்டுக்கோப்பாகப் பந்து வீசவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் துல்லியத்தன்மையுடன் பந்துவீசி இருந்தால், ஆட்டத்தின் முடிவு சுவற்றின் மீதான பூனைபோல் இருந்திருக்கும்.

முதல் 15 ஓவர்கள் முக்கியம்

வங்கதேச வீரர் நஜ்முல் ஷான்டோ கூறுகையில், “இந்த ஆட்டத்தில் எதிர்பார்த்த பேட்டிங் எங்களிடம் இல்லை. முதல் 15 ஓவர்களில் அதிகமான ரன் சேர்க்கும் அளவுக்கு எங்கள் பேட்டிங் மாறுவது அவசியம்.

சென்னை ஆடுகளத்தில் புதிய பந்தில் நன்கு பவுன்ஸ் ஆனது, பேட்டர்களுக்கு நெருக்கடியாக இருந்தது. மற்ற வகையில் ஆடுகளம் சிறப்பாக இருக்கிறது. டாப் ஆர்டர் பேட்டர்கள் இன்னும் பொறுப்புடன் பேட் செய்ய வேண்டும்.

கடந்த போட்டியைவிட இந்த ஆட்டத்தில் எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து இதுபோல் பந்துவீசினால், வெற்றி பெறலாம்,” எனத் தெரிவி்த்தார்.

https://www.bbc.com/tamil/articles/c88e7q5eeppo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்தியா; மீண்டு வந்த ஷுப்மன் கில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதிப்பாரா?

உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்தியா; மீண்டு வந்த ஷுப்மன் கில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதிப்பாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே பலத்த எதிர்ப்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் உருவாகிவிடும்.

அத போலவே, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டு அரங்கில் இன்று மதியம் நடைபெறும் இந்தப் போட்டியும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஏழு முறை விளையாடியுள்ளன. ஏழு முறையும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. அந்த சாதனையைத் தக்க வைத்துக் கொள்ளுமா இந்தியா அல்லது பாகிஸ்தான் அதை முறியடிக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் முன்பு பெற்ற வெற்றிகளிலேயே திளைத்திருக்க விரும்பவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாட வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வெற்றிபெற வேண்டும்,” என்றார்.

 
உலகக்கோப்பை: டாஸ் வென்ற இந்தியா; மீண்டு வந்த ஷுப்மன் கில் பாகிஸ்தானுக்கு எதிராக சாதிப்பாரா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஷுப்மன் கில் இந்த அணியில் இடம் பெற 99% வாய்ப்பு உள்ளது என ஏற்கெனவே தெரிவித்திருந்த ரோஹித் சர்மா, இன்று இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிவித்தார்.

டாஸ் இழந்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் , “நாங்கள் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருப்போம். இந்தியாவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.

முகமது சிராஜ் வீசிய 8வது ஓவரின் 2வது பந்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் கால்காப்பில் வாங்கி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். லோ-பவுன்ஸராக வந்த பந்தைத் தடுத்து ஆட ஷபீக் முற்பட்டபோது கால்காப்பில் வாங்கினார், மூன்றாவது நடுவரிடம் முறையிடாமல் அப்துல்லா வெளியேறினார்.

ஷுப்மன் கில் சாதிப்பாரா?

ஷுப்மன் கில் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவாரா எனப் பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.

ஓய்வுக்குப் பின்னர், தனது பயிற்சிகளை நரேந்திர மோதி விளையாட்டரங்கத்தில் மேற்கொண்ட அவர், இன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்த விளையாட்டரங்கில் அவர் விளையாடப் போகும் முதல் உலகக்கோப்பை ஒருநாள் போட்டி இதுவே. ஆனால் இந்த அரங்கம் அவருக்குப் புதிதல்ல. இதே அரங்கில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியும் ஆடியுள்ள கில், இரண்டு சதங்களை இந்த மைதானத்தில் அடித்துள்ளார்.

ஆமதாபாத்துக்கு வெளியிலும் ஷுப்மன் கில் சாதனைகளைப் படைத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 208 ரன்கள் பெற்று அசத்தினார். இதன்மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் இரட்டை சதங்கள் அடித்த இளம் வீரரானர்.

அது மட்டுமல்லாமல் இரட்டை சதங்கள் அடித்த ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அந்தப் போட்டியில் தொடர்ந்து மூன்று சிக்சர்கள் அடித்து அபாரமாக ஆடியிருந்தார் ஷுப்மன் கில்.

கில் 2023இல் 20 போட்டிகளில் 1230 ரன்கள் பெற்று 72.35 சராசரி ரன்ரேட் வைத்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஐசிசியின் அந்த மாதத்துக்கான சிறந்த ஆட்டக்காரராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

 

உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இதுவரை...

இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தானும் இந்தியாவும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்த்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் 1947இல் தனி நாடாக உருவானது முதலே இரு அணிகளும் களத்தில் போட்டியிட்டு வருகின்றனர். பிரிவினைக்குப் பிறகு 1950களில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு.

இன்று நடக்கும் போட்டி பிளாக்பஸ்டர் என விவரிக்கப்படுகிறது. 1,32,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் இந்தப் போட்டியைக் காண லட்சக்கணக்காண மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

பாகிஸ்தான் அணியில், பாபர் ஆசம், அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகர் அஹ்மத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரீதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி இதுவரை உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை மட்டுமே சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி சேஸிங் செய்து 6 விக்கெட்டில் வென்றது. அதன்பின் இந்த உலகக்கோப்பையில் சேஸிங் செய்ய இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் ரன்ரேட்டை எப்படி கட்டுப்படுத்துவது?

பாகிஸ்தான் அணி 275 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டாலே ஆட்டம் பரபரப்பாகச் செல்லும். உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் அணி 275 ரன்கள் அதற்கு மேல் அடித்து தோற்றது இல்லை, அந்த ரன்களை டிபெண்ட் செய்து வெற்றி கண்டுள்ளது. ஆதலால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 275 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பாக் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ரன்ரேட்டை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் அளித்த ஆலோசனையில், “பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ரிஸ்வான் இருவரும் ஸ்ட்ரைக்கை பெரும்பாலும் ரொட்டேட் செய்வதில்லை.

ரன்களை பவுண்டரி, சிக்ஸர்கள் மூலமே சேர்ப்பார்கள். ஆதலால், இருவரும் பேட்டிங் செய்ய வரும்போது, பவுண்டரிகளை இந்திய அணி கட்டுப்படுத்தினாலே, ரன்ரேட்டை இறுக்கிப் பிடிக்க முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறைத்து மதிப்பிடப்படும் பாபர் ஆசம்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திறமை எப்போதும் அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமை சுற்றியே உள்ளது. அவர் திறமையான வீரராக இருந்தாலும், அவர் எப்போதும், குறைத்தே மதிப்பிடப்படுகிறார். அவர் எப்போதும் தனது இன்னிங்ஸை அமைதியாகவும், மெதுவாகவும் நகர்த்துபவர்.

அவர் என்ன செய்கிறார் என்பதை எதிர் அணியினர் உணரும் முன்னரே அவரது ஸ்கோ் 50 அல்லது 60ஐ தாண்டியிருக்கும். பின், அவர் தன் விருப்பப்படி, பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிக்கத் தொடங்குவார்.

புதன்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷானுடன் இன்னிங்ஸை தொடங்குவார்.

ரோஹித் இதுவரையிலான ஆட்டங்களில் ரன் குவித்ததைப் பார்த்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் தனது தடையற்ற கவர் டிரைவ்கள், சிக்ஸர்கள் மற்றும் அச்சமற்ற புல் ஷாட்கள் மூலம் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பது தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் எளிதில் ஆட்டமிழந்தால், பாகிஸ்தான் அடுத்ததாக விராட் கோலியை எதிர்கொள்ள நேரிடும். கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக சதம் அடித்து இந்திய அணிக்கு பலம் சேர்த்தார் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி-ராகுல் இணை 200 ரன்கள் சேர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தைப் பல கோடி பேர் ஆன்லைனில் பார்த்தாலும், நேரடியாகவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணவுள்ளனர். எனவே ஆமதாபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி விளையாட்டு அரங்குக்கு அருகில் உள்ள சாலைகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெவ்வேறு ஊர்களிலிருந்து இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும்கூட ஆமதாபாத் வந்திருப்பதால் நகரின் ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

எப்போதும் உணர்வுப்பூர்வமாகவே பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி, இன்று ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையில்தான் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறப் போகிறது.

https://www.bbc.com/tamil/articles/cgxkl9x4kk9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Pakistan FlagPakistan           (30/50 ov) 156/3

India chose to field.

Current RR: 5.20  • Last 5 ov (RR): 31/1 (6.20)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs பாகிஸ்தான்: ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிய ஆட்டம் - என்ன நடந்தது?

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

14 அக்டோபர் 2023, 08:29 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிப் போனது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தானுக்கு வழக்கம் போல் கேப்டன் பாபர் ஆசம் - விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆபாத்பாந்தவன்களாக வந்து காப்பாற்றினர். ஆனால், இந்த ஜோடி பிரிந்த பிறகு ஆட்டம் தலைகீழாக மாறிப் போனது.

பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. முடிவில் பாகிஸ்தான் அணி 43-வது ஓவரிலேயே 191 ரன்களுக்கு ஆல்ஆகிவிட, எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ரோகித் அதிரடியால் சிரமமின்றி வெற்றி பெற்றது.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாறை இந்திய அணி இதன் மூலம தக்க வைத்துக் கொண்டது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் விக்கெட்டை வீழ்த்திய முகமது சிராஜ்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி விளையாட்டு அரங்கில் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் முன்பு பெற்ற வெற்றிகளிலேயே திளைத்திருக்க விரும்பவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் நன்றாக விளையாட வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி வெற்றிபெற வேண்டும்,” என்றார்.

 

ஷுப்மன் கில் இந்த அணியில் இடம் பெற 99% வாய்ப்பு உள்ளது என ஏற்கெனவே தெரிவித்திருந்த ரோஹித் சர்மா, இன்று இஷான் கிஷனுக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் இடம்பெறுவார் எனத் தெரிவித்தார்.

டாஸ் இழந்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் , “நாங்கள் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்திருப்போம். இந்தியாவில் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்றார்.

முகமது சிராஜ் வீசிய 8வது ஓவரின் 2வது பந்தில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் கால்காப்பில் வாங்கி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். லோ-பவுன்ஸராக வந்த பந்தைத் தடுத்து ஆட ஷபீக் முற்பட்டபோது கால்காப்பில் வாங்கினார், மூன்றாவது நடுவரிடம் முறையிடாமல் அப்துல்லா வெளியேறினார்.

பாகிஸ்தான் கேப்டன் அவுட்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ரிஸ்வான் இருவரும் 3வது விக்கெட்டுக்கு நங்கூரம் அமைத்து பேட் செய்தனர். பாபர் ஆசமும் நிதானமாக ஆடி இந்திய அணிக்கு எதிராக முதல்ஒருநாள் போட்டி அரைசதத்தை பதிவு செய்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

மிகவும் முக்கியமான, ஆபத்தான கூட்டணியை சிராஜ் தனது பந்துவீச்சில் பிரித்தார். சிராஜ் வீசிய பந்து தாழ்வாக வந்தது, அந்த பந்தை ஸ்டெம்புக்குள் விட்டு தாமதாக அடிக்க முயன்றபோது,க்ளீன் போல்டாகியது. இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தலைகீழாக மாறிய ஆட்டம்

இந்தியாவுக்கு எதிராக 7-வது போட்டியில் ஆடிய பாபர் ஆசம் முதல் அரைசதம் அடித்த திருப்தியுடன் அவுட்டாக, அதன் பிறகு அந்த அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

அடுத்த இரண்டாவது ஓவரில் சவுத் ஷகீலை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் காலி செய்தார். ஷகீல் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்திருந்தார். எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் இஃப்திகார் அகமதுவை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் குல்தீப். இஃப்திகார் 4 ரன்களே எடுத்தார்.

இந்திய அணியை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்த முகமது ரிஸ்வான் 34-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். அவர், ஜஸ்பிரித் பும்ரா கிளீன் போல்டாக்கினார். 58 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்திருந்த அவர் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். தனது அடுத்த ஓவரில் ஷதாப் கானை 2 ரன்களில் பும்ரா வெளியேற்றினார்.

30-வது ஓவரில் பாபர் ஆசம் மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழக்க, அடுத்த 5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 29 ரன்களை சேர்ப்பதற்குள்ளாக மேலும் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

36 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி 155 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 30-வது ஓவரில் பாபர் ஆசம் மூன்றாவது விக்கெட்டாக ஆட்டமிழந்ததுமே ஆட்டம் தலைகீழாக மாறிப் போனது. அடுத்து வந்த பாகிஸ்தான் வீரர்களால் களத்தில் நிலைத்து ஆட முடியவில்லை. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த 32 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 2 விக்கெட் என்று வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி பின்னர் 187-க்கு 9 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கடைசி விக்கெட்டுக்கு ஷாகின் ஷா அப்ரிடி - ஹரிஸ் ரஃப் இணை விளையாடியது. இந்த ஜோடியை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா எல்.பி.டபிள்யூ முறையில் பிரித்தார்.

பாகிஸ்தான் அணி 191 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணி கடைசி 36 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசத்திய பந்துவீச்சாளர்கள்

காயத்திற்கு சிகிச்சை பெற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் அசத்தினார். பந்துவீச்சுக்கு அனுகூலமாக இல்லாத ஆடுகளத்தில், 30 ஓவர்கள் வீசப்பட்ட பிறகு பழைய பந்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை அவர் நிரூபித்தார்.

சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தனது ரிஸ்ட் ஸ்பின் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்கிற்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை வீழ்ச்சியில் இருந்து மீண்டும் நிமிர விடாமல் செய்தார்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய 5 பேரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியா தரப்பில் பந்துவீசிய ஷர்துல் தாகூர் மட்டுமே விக்கெட் வீழ்த்தவில்லை. அவர் 2 ஓவர்களை வீசி 12 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில் அவுட்

192 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் - சுப்மான் கில் இருவருமே பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினர்.

டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ள சுப்மான் கில் 4 பவுண்டரிகளை ஓடவிட்டார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 11 ரன்களில் 4 பவுண்டரிகளுடன் 16 ரன்களை சேர்த்த அவர் ஷாகின் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ரன் குவிக்கும் மிஷின் என்று அழைக்கப்படும் கோலி களத்திற்கு வந்து கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார்.

ரோகித் சர்மா சரவெடி ஆட்டம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 63 பந்துகளில் சதம் அடித்து உலகக்கோப்பையில் சாதனை படைத்த ரோகித் சர்மா, அதே பார்மை பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடர்ந்தார். அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்த வண்ணம் இருந்தன.

மறுமுனையில் நின்றிருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசன் அலி பந்துவீச்சில் நவாஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார்.

36 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகவும் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், நல்ல பார்மில் இருந்த அவர், 86 ரன்களில் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 63 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்களையும, 6 பவுண்டரிகளையும் விளாசியிருந்தார்.

இந்திய அணி வெற்றிக் கோட்டை நெருங்கும் இந்த வேளையில் ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி விளையாடி வருகிறது.

இந்தியா vs பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றி இலக்கை எளிதில் எட்டிய இந்தியா

இந்திய அணி வெற்றிக் கோட்டை நெருங்கும் வேளையில் ரோகித் வெளியேற ஸ்ரேயாஸ் - கே.எல்.ராகுல் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணி 30.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஸ்ரேயாஸ் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாறை இந்திய அணி இதன் மூலம தக்க வைத்துக் கொண்டது.

10 ஓவர்களில் இந்தியா 79 ரன்

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த அணியும் செய்திராத ஒன்றை 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சாதித்துள்ளது. அதாவது, இன்றைய போட்டியில் இந்திய அணி 10 ஓவரிலேயே 79 ரன்களைக் குவித்துவிட்டது.1999-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு எந்தவொரு அணியும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் இவ்வளவு ரன்களைக் குவித்ததில்லை.

2003-ம் ஆண்டும் இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முதல் 10 ஓவர்களில் ரன்களைக் குவித்து மலைக்க வைத்துள்ளது.

இந்திய அணி முதலிடம்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய வெற்றியின் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அணிகளை வென்றுள்ளது.

நியூசிலாந்து அணியும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் இந்தியாவைக் காட்டிலும் சற்று பின்தங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

எட்டிப் பிடிக்க முடியாத குறைந்தபட்ச ஸ்கோர்

இந்த மைதானத்தில் குறைந்தபட்சமாக 196 ரன்கள் சேர்த்து மேற்கிந்தியத்தீவுகள் அணி டிஃபென்ட் செய்துள்ளது.

1988ம் ஆண்டு, ஜனவரி 7ம் தேதி நடந்த ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 197 ரன்களை துரத்திய இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்

இந்திய அணி இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 324 ரன்களை சேஸிங் செய்துள்ளது.

2002ம் ஆண்டு, நவம்பர் 15ம் தேதி நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் சேர்த்து. இந்த ஸ்கோரை 14 பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணி சேஸிங் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இதுவரை...

இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை பாகிஸ்தானும் இந்தியாவும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆஸ்த்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் 1947இல் தனி நாடாக உருவானது முதலே இரு அணிகளும் களத்தில் போட்டியிட்டு வருகின்றனர். பிரிவினைக்குப் பிறகு 1950களில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற சம்பவங்களும் உண்டு.

இன்று நடக்கும் போட்டி பிளாக்பஸ்டர் என விவரிக்கப்படுகிறது. 1,32,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில், அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததால் இந்தப் போட்டியைக் காண லட்சக்கணக்காண மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

பாகிஸ்தான் அணியில், பாபர் ஆசம், அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகர் அஹ்மத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரீதி, ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி இதுவரை உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை மட்டுமே சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி சேஸிங் செய்து 6 விக்கெட்டில் வென்றது. அதன்பின் இந்த உலகக்கோப்பையில் சேஸிங் செய்ய இருக்கிறது.

 
இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தைப் பல கோடி பேர் ஆன்லைனில் பார்த்தாலும், நேரடியாகவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணவுள்ளனர். எனவே ஆமதாபாத் நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நரேந்திர மோதி விளையாட்டு அரங்குக்கு அருகில் உள்ள சாலைகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. வெவ்வேறு ஊர்களிலிருந்து இந்திய ரசிகர்களும், பாகிஸ்தான் ரசிகர்களும்கூட ஆமதாபாத் வந்திருப்பதால் நகரின் ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.

எப்போதும் உணர்வுப்பூர்வமாகவே பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி, இன்று ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையில்தான் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறப் போகிறது.

https://www.bbc.com/tamil/articles/cgxkl9x4kk9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

117 பந்துகள் மீதமிருக்க பாகிஸ்தானை 7 விக்கெட்களால் வீழ்த்தியது இந்தியா

14 OCT, 2023 | 09:12 PM
image

(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சுமார் 90,000 இரசிகர்கள் முன்னிலையில் இன்று சனிக்கிழழை (14)நடைபெற்ற மிக முக்கிய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 117 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்களால் இந்தியா வெற்றியீட்டியது.

இந்திய அணியினர் சகல துறைகளிலும் பிரகாசித்து பாகிஸ்தானை விஞ்சும் வகையில் விளையாடி இந்த வெற்றியை ஈட்டினர்.

இந்த வெற்றியுடன்  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான   உலகக் கிண்ண வரலாற்றில்  8 - 0 என இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

மேலும் இந்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 3ஆவது தொடர்ச்சியான வெற்றியை இந்தியா ஈட்டியது.

ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ஜஸ்ப்ரிட் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என்பன இந்தியாவின் வெற்றியில் பெரும் பங்காற்றியிருந்தன.

அப் போட்டியில் பலம்வாய்ந்த பாகிஸ்தானை 191 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா 30.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியை ஈட்டியது.

பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஷுப்மான் கில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா திறமையாகத் துடுப்பெடுத்தாடி இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி இந்தியாவின் வெற்றியை இலகுபடுத்தினார்.

16 ஓட்டங்களைப் பெற்ற விராத் கோஹ்லியுடன் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்த ரோஹித் ஷர்மா, 3ஆவது விக்கெட்டில் மேலும் 77 ஓட்டங்களை ஷ்ரேயாஸ் ஐயருடன் பகிர்ந்தார்.

ரோஹித் ஷர்மா 63 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 6 பவுண்டறிகளுடன் 86 ஓட்டங்களை விளாசினார்.

அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

கே. எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த முக்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களுக்கு சுருண்டன.

 

பாகிஸ்தானின் துடுப்பாட்டம் ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தது. ஆனால், கடைசி 7 விக்கெட்களை 31 ஓட்டங்களுக்கு இழந்து சோடைபோனது.

அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் 8 ஓவர்களில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அப்துல்லா ஷபிக் 20 ஓட்டங்களுடனும் இமாம் உல் ஹக் 36 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (73 - 2 விக்.)

தொடர்ந்து அணித் தலைவர் பாபர் அஸாம், மொஹமத் ரிஸ்வான் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானை பலமான நிலையில் இட முயற்சித்தனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 155 ஓட்டங்களாக இருந்தபோது பாபர் அஸாம் ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தானின் சரிவு ஆரம்பித்தது. (153 - 3 விக்.)

பொறுமையாக துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 58 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சவூத் ஷக்கீல் (6), இப்திகார் அஹ்மத் (4), மொஹமத் ரிஸ்வான் (49), ஷதாப் கான் (2) ஆகிய நால்வரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (161 - 7 விக்.)

அவர்களைத் தொடர்ந்து மொஹமத் நவாஸ் (40, ஹசன் அலி (12), ஹரிஸ் ரவூப் (2) ஆகியோர் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷஹீன் ஷா அப்றிடி 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 35 ஓ32 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழத்தினர்.

ஆட்டநாயகன்: ஜஸ்ப்ரிட் பும்ரா.

https://www.virakesari.lk/article/166874

pt.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்துடன் பாகிஸ்தான் காலியா அல்லது மீண்டு எழுமா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்பிரித் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பந்துவீச்சாளர்

ஜஸ்பிரி்த் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சவால்விடும் பந்துவீச்சாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 15 அக்டோபர் 2023, 02:21 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறினார்…

“ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சுக்கு எப்படி சரியான பதிலடி கொடுக்கலாம்” என்று நினைக்கிறீர்கள் என்று வர்ணனையாளர் கேள்வி கேட்டார். அதற்கு ஆரோன் பின்ச் பதில் அளிக்கையில் “பேசாமல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள். அதுதான் பும்ராவுக்கு நாம் கொடுக்கும் பதிலடி. அதைத்தான் நான் செய்திருக்கிறேன்,” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

இந்திய அணிக்கு கிடைத்த கபில் தேவ், ஜவஹல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், ஜாகீர்கான், நெஹ்ரா போன்றவர்கள் வரிசையில் கிடைத்த பெரிய சொத்தாகவே ஜஸ்பிரித் பும்ராவை கருத வேண்டும்.

இந்திய அணியின் சொத்தாக பும்ராவை மட்டும்தான் கொண்டாட வேண்டுமா மற்ற வீரர்கள் இல்லையா என்று ரசிகர்கள் கேட்கலாம். இதற்கு பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று பும்ரா எடுத்த விக்கெட் ஒன்றே சாட்சி.

 

அதிகமாகச் சிரித்த “மோனோலிசா ஓவியம்”

பாகிஸ்தான் பேட்டர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை பும்ரா எடுத்தவிதம் இனிமேல் பல ஆண்டுகள், பல ஆயிரக்கணக்கான முறை பேசப்படும், ஆலோசிக்கப்படும், விவாதிக்கப்படும். அந்த அளவுக்கு யாராலும் மறக்க முடியாத பந்து என்றுதான் அதைக் கூற வேண்டும்.

பும்ரா வீசிய அந்தப் பந்தை வர்ணிப்பதாக இருந்தால் “அந்தப் பந்து ஒரு மோனோலிசா ஓவியம். மோனோலிசா ஓவியம் சற்று அதிகமாகச் சிரித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அந்த பந்தும் இருந்தது,” எனக் கூறலாம்.

எப்படி ஆட்டமிழந்தார் ரிஸ்வான்?

பும்ரா வீசிய அந்தப் பந்தில் சுழற்பந்துவீச்சைக் காட்டிலும் சற்று அதிகமான வேகம், கை மணிக்கட்டை சற்று சுழற்றிய சிறிய ஆஃப் கட்டர் அவ்வளவுதான். ரிஸ்வான் கண்களில் மண்ணைத் தூவிய அந்தப் பந்து, நேராக ஸ்டெம்பில் பட்டு விக்கெட்டை கழற்றியது.

பும்ரா வீசிய 34வது ஓவரில் முதல் 5 பந்துகள் நல்ல வேகத்தில் வந்தது. இதை வழக்கமான பந்து என நினைத்து ரிஸ்வான் ஆடினார். ஆனால், பும்ரா வீசிய கடைசிப் பந்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியேதான் சென்றது. ஆனால் திடீரென பந்து எப்படி பேட்டுக்கும், கால்காப்புக்கும் இடையிலான இடைவெளிக்கு உள்ளே வந்து தன்னை இப்படி ஏமாற்றிச் சென்றது என ரிஸ்வான் நினைக்கவில்லை.

பும்ரா வீசியது முழுக்க முழுக்க ஆஃப் கட்டர்தான். பும்ராவின் கைவீசிய வேகத்தில் மாற்றமில்லை, அதனால்தான் பந்து வந்த வேகத்தை ரிஸ்வானால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பும்ரா தனது பந்துவீச்சில் மாற்றம் செய்தது என்பது, கை மணிக்கட்டில்தான். பந்து கையைவிட்டு ரிலீஸ் ஆகும்போது, மணிக்கட்டை லேசாக சுழற்றிவிட்டார், அவ்வளவுதான். பந்து காற்றிலேயே வேகமாகச் சுழன்று சென்றது. ஆனால் தரையில் பிட்ச் ஆனவுடன் பந்து காற்றில் இருந்த வேகத்தைக் குறைத்துக்கொண்டு, ஆஃப் கட்டராக மாறி, ஸ்டெம்பை பதம் பார்த்தது.

ஜஸ்பிரி்த் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சவால்விடும் பந்துவீச்சாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுதான் ஹைலைட்ஸ்…

கடந்த இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் சோர்ந்தபோதெல்லாம் தூக்கி நிறுத்திய பேட்டர் முகமது ரிஸ்வான், இந்த ஆட்டத்திலும் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

ஆனால், பும்ராவின் அந்தப் பந்து “எப்படி தன்னை ஏமாற்றி, ஸ்டெம்பில் பட்டு போல்டாகியது?” என்பதை சில வினாடிகள் புரிந்து கொள்ளமுடியாமல், ரிஸ்வான் ஸ்டெம்ப் அருகே நின்றுவிட்டார்.

இதில் ஹைலைட்ஸ் என்னவென்றால், “ரிஸ்வான் பெவிலியன் திரும்பும்போது, பும்ராவின் பந்துவீச்சு செய்கையை தனக்குத்தானே செய்துகொண்டே சென்றதுதான் பும்ராவின் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறலாம்.”

 

பும்ரா வேகப்பந்துவீச்சாளரே இல்லை...

ஜஸ்பிரி்த் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சவால்விடும் பந்துவீச்சாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பும்ராவின் பந்துவீச்சு குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறுகையில், “பும்ரா வேகப்பந்துவீச்சாளர் வீசும் ஸ்லோ பந்து வீசாமல் இருக்கலாம். அவர் ஏறக்குறைய 122 கி.மீ வேகத்தில் ‘ஆஃப் ஸ்பின்’ வீசுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது,” என்று நேற்றைய பந்துவீச்சைக் குறிப்பிட்டார்.

பேட்டர்களை குழப்பும் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா தனது பந்துவீச்சில் வேகத்தைக் குறைத்து வித்தியாசமாகப் பந்துவீசி பேட்டர்களைக் குழப்புவது இது முதல்முறையல்ல. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷை இதேபோன்று “ஸ்லோவர் பால்” வீசி கால்காப்பில் வாங்கச் செய்து வெளியேற்றினார்.

அந்தப் போட்டியிலும்கூட பும்ராவின் கையை மட்டுமே பார்த்து பேட் செய்த மார்ஷ் பந்து பும்ராவின் கையில் இருந்து ‘ரிலீஸ்’ ஆகும் தருணத்தை கணிக்கத் தவறிவிட்டதால் விக்கெட்டை இழந்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும், பும்ராவின் ‘கை ஆக்ஸனையும்’, வேகத்தையும் மட்டுமே கணித்த ரிஸ்வான், பந்து ‘ரிலீஸ்’ ஆகும் தருணத்தை கணிக்கத் தவறியதே விக்கெட்டை இழக்கக் காரணம். பந்தை ‘ரிலீஸ்’ செய்யும் தருணத்தில்தான் பும்ரா தனது மந்திரக்கோலை பயன்படுத்தினார்.

என்ன சொல்கிறார் பும்ரா?

தனது பந்துவீச்சு குறித்து நேற்றைய போட்டிக்குப் பின் பும்ரா அளித்த பேட்டியில் “ஆமதாபாத் மைதானத்தில் நடுப்பகுதி ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டோம். அப்போது, ஜடேஜா வீசிய பந்து சற்று “டர்ன்” ஆனதைக் கண்டுபிடித்தேன், ஆனால், தொடர்ந்து ‘டர்ன்’ ஆகவில்லை, ஒரு சில இடங்களில் மட்டும் அது நிகழந்தது.

ஆதலால், நான் ‘ஸ்லோ பந்தாக’ வீசி பயிற்சி எடுத்தபோது பந்து நன்றாக ‘டர்ன்’ ஆனதை மனதில் வைத்துதான் இன்று பந்து வீசினேன்.

இந்த உத்தியைப் பயன்படுத்தும்போது, பேட்டர்கள் ரன் சேர்ப்பது கடினம், வழக்கமான பந்துவீச்சுக்கு இடையே இதுபோன்று ‘வேரியேஷனை’ காண்பித்தால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும் என்று ஊகித்தேன். பந்தை நன்றாகப் பிடித்துதான் பந்து வீசினேன். ஆனால், பந்து கையைவிட்டு ‘ரிலீஸ்’ ஆகும்போது, மாறுபடும்,” எனத் தெரிவித்தார்.

 
ஜஸ்பிரி்த் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சவால்விடும் பந்துவீச்சாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாற்றங்களுடன் வந்த பும்ரா

முதுகு வலி காயத்தால் கடந்த ஆண்டு ஓய்வில் சென்ற பும்ரா ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின்புதான் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அயர்லாந்து தொடருக்கு கேப்டனாக வந்தார்.

பும்ரா தனது ஓய்வுக் காலத்தில் தனது பந்துவீச்சில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதாவது பந்துவீச்சு ஆக்ஸன், பந்துவீசு வேகம் ஆகியவற்றில் மாற்றம் செய்து, பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோவர் பால் அதிகம் வீசுவது, ஸ்விங் செய்வது, யார்க்கரில் கவனம் செலுத்துவது, சீமிங் செய்வது, கட்டர்களை வீசுவது போன்ற நுணுக்கங்களில் கவனம் செலுத்தியுள்ளார்.

அதேபோல தேவைக்கு ஏற்றாற்போல் தனது வேகத்தை அதிகப்படுத்தும், குறைக்கும் நுட்பத்தையும் பும்ரா அறிந்துள்ளார். உதாரணமாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அயர்லாந்து பேட்டர் ஆன்ட்ரூ பால்பிரின் திடீரென பும்ரா பந்தில் பவுண்டரிகள் அடித்து அதிர்ச்சியளித்தார்.

அதற்கு முன்புவரை பும்ரா 129கி.மீ வேகத்தில் பந்து வீசியவர், திடீரென பந்துவீச்சின் வேகத்தை 140க்கு உயர்த்தி பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தினார்.

 

“சிம்மசொப்னமாக” பும்ரா

ஜஸ்பிரி்த் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சவால்விடும் பந்துவீச்சாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பைத் தொடரில்கூட இதுவரை பும்ரா 27 ஓவர்கள் வீசியுள்ளார். அதில் 91 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஓவருக்கு சராசரியாக 3.37 ரன்கள் மட்டுமே பும்ரா விட்டுக்கொடுத்து எக்னாமி ரேட்டை மிகக் குறைவாக வைத்துள்ளார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் தனது எக்னாமி ரேட்டை குறைவாக வைத்திருக்கும் பந்துவீச்சாளர் பும்ரா மட்டும்தான்.

விக்கெட் எடுக்கும் திறமை கொண்ட, ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடிய வல்லமை கொண்ட பும்ரா இந்திய அணிக்கு ஒரு மதிப்புமிகுந்த சொத்து என்பதில் ஐயமில்லை. அது ரன் சேர்க்கும் ஒரு பேட்டரைவிடக்கூட உயர்வாக இருக்கலாம். ஒரு பேட்டர் சொதப்பினால்கூட மற்றொரு பேட்டர் அந்த இடத்தை நிரப்பமுடியும், ஆனால், பும்ராவின் பந்துவீச்சு தனித்துவமானது.

பும்தா தனது முதுகுவலி சிகிச்சை, ஓய்வுக்குப்பின் பந்துவீச வந்ததில் இருந்து சர்வதேச அளவில் பேட்டர்களுக்கு பெரிய தொந்தரவுகளைக் கொடுத்து வருகிறார். தனது முதல் ஸ்பெலில் இருந்தே விக்கெட்டுகளை வீழ்த்தும் நோக்கில் பந்துவீசும் நுட்பத்தை பும்ரா கையில் எடுத்துள்ளார்.

பும்ரா என்றாலே ஸ்பெஷல்தான்

இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் மாம்பரே கூறுகையில், “பும்ராவுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கப்படுவது உண்மைதான். ஏனென்றால் அவர் வித்தியாசமான தனித்துவமான பந்துவீச்சாளர் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அவரது இடத்தை நிரப்புவதும் கடினம். அதநேரம் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் சமமான வாய்ப்பைஉ வேறுபட்ட சூழலில் வழங்கி வருகிறோம். அவர்கள் விளையாட்டிற்குள் என்ன கொண்டு வருகிறார்கள், எந்த நிலைகளில் அவர்கள் பந்து வீசினார்கள், எப்படி செய்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும்.

அவர்களுடன் ஆழ்ந்த ஆலோசனை செய்கிறோம் இது வழக்கமான நடைமுறைதான். எனக்கு பும்ராவை 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்து நன்கு தெரியும். அவரின் சீமிங், வேகம் அனைத்தையும் மாற்றி இருக்கிறேன். உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு மட்டும் பும்ரா முக்கியமானவர் அல்ல, அதையும் கடந்து முக்கியமானவர்,” எனத் தெரிவித்தார்.

 

யார் இந்த பும்ரா?

ஜஸ்பிரி்த் பும்ரா: சர்வதேச பேட்டர்களுக்கு சவால்விடும் பந்துவீச்சாளர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் கடந்த 1993, டிசம்பர் 6ஆம் தேதி ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா பிறந்தார். சீக்கிய குடும்பத்தில் பிறந்த பும்ராவுக்கு 7 வயதாகும்போதே அவரின் தந்தை ஜஸ்பிர் சிங் காலமாகிவிட்டார்.

அவரை சிறுவயதில் இருந்து கட்டுக்கோப்பாக வளர்த்தது அவரின் தாய் தில்ஜித் சிங்தான். பள்ளி தலைமை ஆசிரியரான தில்ஜித் சிங், பும்ராவுக்கு அனைத்து நிலைகளிலும் வழிகாட்டியாக இருந்தார். பும்ராவின் தந்தை ஒரு தொழிலதிபர்.

பும்ராவை கிரிக்கெட் விளையாட்டுக்குள் அனுப்ப அவரின் தாய் தில்ஜித் சிங்கிற்கு மனமில்லை. பும்ரா 14 வயதில் தனது விருப்பத்தையும், கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவையும் தாயிடம் தெரிவித்தார். முதலில் ஏற்க மறுத்த தில்ஜித் சிங், பின்னர் தனது மகனின் விருப்பத்தை ஏற்று, கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்தார்.

இதையடுத்து, குஜராத் கிரிக்கெட் அமைப்பு, கோடைகாலப் பயிற்சிக்கு பும்ராவை சேர்த்துக்கொண்டது. பும்ராவின் பந்துவீசும் பாணி, கையைத் தூக்கி, மணிக்கட்டிலிருந்து பந்துவீசும் வேகம் ஆகியவற்றைப் பார்த்து எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனுக்கு குஜராத் கிரிக்கெட் அமைப்பு அனுப்பியது.

இதையடுத்து 19 வயதுக்குட்பட்டோருக்கான குஜராத் அணியில் பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு பல போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசினார். 2013-14 சீசனில் விதர்பா அணிக்கு எதிராக குஜராத் மாநில அணிக்காக பும்ரா முதன்முதலில் களமிறங்கி ஒரே போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

தோனியை ஈர்த்த பும்ரா

கடந்த 2012-13ஆம் ஆண்டு நடந்த சயத் முஸ்டாக் அலி கோப்பையில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக குஜராத் அணியில் டி20 போட்டியில் பும்ரா அறிமுகமானார். அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல பும்ராவின் பந்துவீச்சு முக்கியக் காரணமாகியது.

ஐபிஎல் ஏலத்தில் பும்ரா மீது கவனம் திரும்பியது. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. தனது முதல் ஆட்டத்திலேயே ஆர்சிபி அணிக்கு எதிராக பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின்போது முகமது ஷமிக்கு திடீரென காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்குப் பதிலாக பும்ரா வரவழைக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்று இந்தியா வெல்ல பும்ரா காரணமாக அமைந்தார்.

அப்போது தோனியின் கவனத்தை ஈர்த்த பும்ரா, அதன்பின இந்திய அணிக்குள் உறுதியான இடத்தைப் பிடித்து டி20 உலகக் கோப்பைக்கான அணியிலும் தேர்வாகினார்.

இந்திய அணிக்குள் வந்த பும்ரா 57 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதுவரை 81 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பும்ரா 137 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றியுள்ளார். 62 டி20 போட்டிகளில் 74 விக்கெட்டுகளை பும்ரா சாய்த்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c72d9dd2ergo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - சீண்டிய ரசிகர்களுக்கு நவீன் உல் ஹக் தந்த பதிலடி என்ன?

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

15 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

உலகக்கோப்பையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 285 ரன் இலக்கை எட்ட முடியாமல் 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரணடைந்துள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியை ஆப்கன் வீரர்கள் சுருட்டியது எப்படி? அதிரடி வீரர்கள் நிறைந்த இங்கிலாந்து அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது எப்படி? இந்த தோல்வியால் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? ஐ.பி.எல். தொடரில் கோலியுடன் மோதியதால் ரசிகர்களின் சீண்டலுக்கு ஆளான ஆப்கன் வீரர் நவீன் உல்ஹக், அவர்களை வாயடைக்கச் செய்தது எப்படி?

டெல்லியில் இங்கிலாந்து - ஆப்கன் அணிகள் மோதல்

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. வங்கதேசத்திற்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் வந்திருந்த இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் மாற்றம் செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அணியோ நஜிபுல்லா ஜட்ரமை வெளியே உட்கார வைத்துவிட்டு, இக்ரம் அலிகில்லை அணிக்குள் கொண்டு வந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்சதுவீச்சை தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதியும் ஒருவேளை தான் டாஸ் வென்றிருந்தால் பந்துவீசவே முடிவு செய்திருப்பேன் என்றார். இந்த ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் குவித்தால் சிறந்ததாக இருக்கும் என்பது அவரது கணிப்பாக இருந்தது.

ஆப்கானிஸ்தான் சிறப்பான தொடக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹ்மத்துல்லா குர்பாசும் இப்ராஹிம் ஜட்ரனும் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் ஓவரை வீச வந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் முதல் பந்தை வீசுவதற்குள்ளாகவே 5 வைட் பால்களை வீசி ரன்களை வாரி வழங்கினார்.

குர்பாஸ் அதிரடி காட்டியதால் ஆப்கானிஸ்தான் அணி முதல் 5 ஓவர்களிலேயே 35 ரன்களை சேர்த்துவிட்டது. கிறிஸ் வோக்ஸ் பந்துகளை குர்பாஸ் அடிக்கடி பவுண்டரிக்கு ஓடவிட்டார். இதனால், வோக்சுக்குப் பதிலாக, ஐ.பி.எல்.லில் ரசிகர்களால் சுட்டிக் குழந்தை என்று அழைக்கப்படும் சாம் கர்ரனை பந்துவீச அழைத்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குர்பாஸ் அதிரடி அரைசதம்

ஆனால், குர்பாஸின் அதிரடியை இங்கிலாந்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சாம் கர்ரனையும் அவர் பதம் பார்த்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய குர்பாஸ் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த ஜட்ரன் நிலைத்து நின்று குர்பாசுக்கு கைகொடுத்தார். விக்கெட்டை வீழ்த்த முடியாமல் போராடிய இங்கிலாந்து அணிக்கு சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் பந்துவீச்சில் பலன் கிடைத்தது. நிதானமாக விளையாடிய ஜட்ரனை அவர் காலி செய்தார். ஜட்ரன் 48 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார்.

குர்பாஸ் ரன் அவுட்

ஜட்ரனைத் தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா நிலைக்கவில்லை. 3 ரன்களை ம்டடுமே எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரால் அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா குர்பாஸ் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆகிப் போனார்.

கடினமான ஒற்றை ரன்னை எடுக்க முயற்சிக்கையில் குர்பாஸை டேவிட் வில்லி ரன்அவுட் செய்தார். குர்பாஸ் 57 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடுன் 80 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால் வலுவான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான் நிலைமை மாறிப் போனது.

114 ரன்களில் முதல் விக்கெட் இழந்த ஆப்கானிஸ்தான் மேலும் 8 ரன்களை எடுப்பதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இங்கிலாந்துக்கு கைகொடுத்த சுழற்பந்துவீச்சு

தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக ரன் கொடுத்ததுடன் விக்கெட்டையும் எடுக்க முடியாமல் திணறினர். அந்தநேரத்தில், அடில் ரஷித் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அடுத்த சுழற்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த முடிவு செய்தார். ஜோ ரூட், லிவிங்ஸ்டன் ஆகிய பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்தினார். அதற்குப் பலனும் கிடைத்தது.

ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் நடுப்பகுதியில் அவர்கள் இருவரும் ஆர்ப்பாட்டமில்லாமல் பந்துவீசி முடித்தனர். ஜோ ரூட்டும், லிவிங்ஸ்டனும் 12 ஓவர்களை வீசி 37 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆப்கனுக்கு ரன் சேர்த்த இக்ரம் அலிகில்

ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஜோடியை இழந்த பிறகு தடுமாறிய நிலையில், பின்னர் வந்த விக்கெட் கீப்பர் இக்ரம் அலிகில் காப்பாற்றினார். அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்திய அவர் 66 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சாளர்களான ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களை எட்டியது. ஒரு பந்து மீதமிருந்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்துக்கு தொடக்கமே அதிர்ச்சி

ஆப்கானிஸ்தானுக்கு தொடக்கம் அமர்க்களமாக இருந்த நிலையில் இங்கிலாந்துக்கோ தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துவிட்டது. ஃபரூக்கி வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ஜானி பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

சிறிது நேரத்தில் மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் ஜோ ரூட், முஜீப் உர் ரஹ்மான் வீசிய பந்தை பேக்ஃபுட்டில் ஆட முயற்சிக்க ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அவருக்கு பக்கபலமாக யாரும் நின்று ஆடவில்லை. மற்ற அனைவருமே வருவதும் போவதுமாக இருந்தனர்.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நவீனுக்கு எதிராக முழக்கம் எழுப்பிய ரசிகர்கள்

ஐ.பி.எல்.லில் விராட் கோலியுடன் முட்டிக் கொண்ட ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கு எதிராக இன்றைய போட்டியிலும் ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பினர். முந்தைய இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் போது கோலியே கேட்டுக் கொண்ட பிறகும் கூட சமாதானமடையாத ரசிகர்கள், நவீன் பந்துவீச வந்ததுமே, கோலி, கோலி என்று முழக்கமிட்டனர்.

ஆனால், ரசிகர்களை வாயடைக்கச் செய்யும் விதமாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரை நவீன் உல் ஹக் கிளீன் போல்டாக்கி அசத்தினார். அடுத்து 5-வது விக்கெட்டாக லிவிங்ஸ்டனும் அவுட்டாக இங்கிலாந்து அணி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. அப்போது இங்கிலாந்து அணி 117 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன் வெற்றிக்கு இன்னும் 168 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வீண் போன இங்கிலாந்தின் நம்பிக்கை

ஆனாலும், நடப்புச் சாம்பியன், சமீபத்திய ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களை எளிதாக கடக்கும் அதிரடி சூரர்களைக் கொண்ட அணி என்று பெயரெடுத்த இங்கிலாந்து அணி எப்படி ஜெயித்து விடும் என்று அதன் ரசிகர்கள் நம்பினர். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

இங்கிலாந்து அணியின் பின்வரிசையை நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் காலி செய்தார். இதனால், இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களிலேயே 215 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால், 69 ரன் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்

இங்கிலாந்து அணிக்கு சிக்கல்

இங்கிலாந்து அணிக்கு நடப்பு உலகக்கோப்பையில் இது இரண்டாவது தோல்வியாகும். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோற்றிருந்த இங்கிலாந்து அணி அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை தோற்கடித்திருந்தது. தற்போதைய நிலையில் ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் அந்த அணி இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.

உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வர்ணிக்கப்பட்ட 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியின் நிலையோ பரிதாபமாக இருக்கிறது. இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் தோற்றுப் போன அந்த அணி வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cgl3v871z72o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை போல இலங்கை வீரர்கள் சரிந்தது ஏன்?

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடந்துவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் நேற்று (அக்டோபர் 16) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இதன்படி, ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக ஏழாவது முறையாக இலங்கையை வீழ்த்தியிருக்கிறது.

நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது அந்த அணியின் தோல்விக்கு காரணமானது.

ஒரு கட்டத்தில் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று கருதப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் இலங்கை விக்கெட்டுகளை சொற்ப இடைவெளியில் வீழ்த்தினார்கள்.

இதுவரை ஒரு வெற்றிகூட பெறாத இலங்கை அணி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் நெதர்லாந்துக்கு மேலே கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.

 

இலங்கை அணியில் மாற்றம்

லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் புதிய கேப்டன் குசல் மெண்டிஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

காயம் அடைந்த தசுன் ஷனகா மற்றும் மதீஷா பதிரணா ஆகியோருக்கு பதிலாக சாமிக்க கருணாரத்ன மற்றும் லஹிரு குமார அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இலங்கை, ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நல்ல முறையில் தொடங்கிய இலங்கையின் பேட்டிங்

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவர் சிறப்பாக ஆடி அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர்.

இலங்கை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே, மிட்செல் ஸ்டார்க்கிடம் ஒரு விக்கெட்டுக்கு கேட்ச் கொடுத்த பதும் நிசாங்கவுக்கு எதிரான மூன்றாவது நடுவரின் முடிவு ரத்து செய்யப்பட்டது.

அதன் பின்னர் குஷல் ஜனித் பெரேராவும், பதும் நிசாங்கவும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் நிதானமாக ஆடினர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 135 பந்துகளில் 125 ரன்கள் சேர்த்தனர்.

பதும் நிசாங்க 67 பந்துகளில் 61 ரன்களைப் பெற்றிருந்தபோது, பாட் கம்மின்ஸின் பந்து வீச்சில் வார்னரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 21 ஓவர்கள் 4 பந்துகளுக்கு 125 ரன்கள்.

இலங்கை இன்னிங்ஸின் 27வது ஓவரில் குஷல் ஜனித் பெரேரா 78 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸால் பௌல்ட் செய்யப்பட்டு இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அப்போது இலங்கையின் ஸ்கோர் 157 ரன்களாக இருந்தது.

 
இலங்கை, ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடைசி 8 விக்கெட்டுகளை இலங்கை அணி 52 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தானை போல சரிந்த இலங்கை

பெரேரா ஆட்டமிழந்த பின்னர், இலங்கை பேட்டர்கள் ரன்கள் குவிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.

பாகிஸ்தானுடனான கடந்த போட்டியில் சதம் அடித்த குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரை முறையே 9 ரன்களுக்கும் 8 ரன்களுக்கும் ஆடம் சம்பா ஆட்டமிழக்கச் செய்தார்.

அதன்பின் களம் இறங்கிய தனஞ்சய டி சில்வா, 7 ரன்களில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை இன்னிங்ஸ் 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்திருந்தது.

தனஞ்சய ஆட்டமிழந்த பிறகு, இரண்டு ரன்கள் எடுத்து துனித் வெல்லலா ரன் அவுட் ஆனார்.

அதன்பின் சமிக கருணாரத்ன இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து, இலங்கை அணியை மற்றொரு இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்.

அதைத்தொடர்ந்து சரித் சசங்க தனது ஆட்டத்தால் இலங்கை அணியை 200 ரன்கள் வரை கொண்டு வந்தார்.

எனினும் 43 ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் இலங்கை அணியினர் அனைவரும் 209 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

கடைசி 8 விக்கெட்டுகளை இலங்கை அணி 52 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.

 
இலங்கை, ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மார்னஸ் லபுஷாங்குடன் இணைந்து மிட்செல் மார்ஷ் இலங்கை பந்துவீச்சை எதிர்த்து வேகமாக ரன்களைச் சேர்த்தார்

ஆஸியின் வேகமானஆரம்பம்

210 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் லஹிரு குமார வீசிய முதல் ஓவரில் 15 ரன்களை எடுத்தனர்.

மார்ஷ் மற்றும் வார்னரின் வேகமான தொடக்கத்திற்கு தில்ஷான் மற்று மதுஷங்க முற்றுப்புள்ளி வைத்தார். 11 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார்.

வார்னர் ஆட்டமிழந்ததையடுத்து களம் இறங்கிய ஸ்டீவ் ஸ்மித், தில்ஷான் மதுஷங்கவின் பிடியில் சிக்கி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அப்போது, ஆஸ்திரேலியா 4 ஓவர்கள் முடிவில் 24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்ததையடுத்து களம் இறங்கிய மிட்செல் மார்ஷ், மார்னஸ் லபுஷாங்குடன் இணைந்து இலங்கை பந்துவீச்சை எதிர்த்து வேகமாக ரன்களைச் சேர்த்தார்.

மார்ஷை வீழ்த்திய சாமிகா

மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார், அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டத்தின் 15வது ஓவரில் 2 ரன்களுக்கு ஓட முயன்ற மிட்செல் மார்ஷை சாமிகா கருணாரத்ன ரன் அவுட் செய்தார்.

அப்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.

மார்ஷ் 52 ரன்களில் ஆட்டமிழந்தபோது, அவரும் மார்னஸ் லபுஷாங்கும் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்திருந்தனர்.

 
இலங்கை, ஆஸ்திரேலியா, உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இலங்கை பந்துவீச்சாளர்களில் தில்ஷான் மதுஷங்க மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்

ரன்களைக் குவித்த ஆஸ்திரேலியா

மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு களம் இறங்கிய ஜோஷ் இங்கிலீஷ் மற்றும் மார்னஸ் லபுஷாங் ஆகியோர் சிரமம் இல்லாமல் ரன்களைக் குவித்தனர்.

இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 158-ஆக இருக்கும் போது 40 ரன்கள் குவித்திருந்த மார்னஸ் லபுஷாங்கின் விக்கெட்டை தில்ஷன் மதுஷங்க வீழ்த்தினார்.

லபுஷாங் ஆட்டமிழந்ததையடுத்து களம் இறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலீஷ் இருவரும் விரைவாக ரன்களைச் சேர்த்தனர்.

இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 34 ரன்களைச் சேர்த்தனர். மேலும் 58 ரன்கள் எடுத்திருந்த போது, ஜோஷ் இங்கிலீஷின் விக்கெட்டை துனித் வெல்லாலகே கைப்பற்றினார்.

இந்நிலையில் 35 ஓவர்கள் 2 பந்துகள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இலங்கை பந்துவீச்சாளர்களில் தில்ஷான் மதுஷங்க மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

லஹிரு குமார 4 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்தது இலங்கைக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

டி20 போட்டிகளைப் போல வீழும் மிடில் ஆர்டர்

உலகக் கோப்பை போட்டிகளில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ச்சியடைவது பற்றி சமூக வலைத்தளங்களில் பெருமளவு விவாதங்கள் எழுந்திருக்கின்றன. 50 ஓவர் போட்டிகளுக்கு பல வீரர்கள் தயாராக இல்லாததும், அதற்கான உத்திகள் வகுக்கப்படாததும் முக்கிய அம்சமாக இருக்கலாம் என்று பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

"50 ஓவர்கள் பேட்டிங்கில் இன்னிங்ஸ் கட்டமைப்பது ஓர் முக்கியமான அம்சம். டி20 கிரிக்கெட்டுக்கு பழக்கப்பட்ட மிடில் ஆர்டர் வீரர்களுக்கு நிறைய நேரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை" என்று கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cn08k3z01d7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை: நெதர்லாந்து உடனான போட்டியில் தென் ஆப்பிரிக்கா செய்த தவறுகள்

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 17 நிமிடங்களுக்கு முன்னர்

கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டி என்றாலே, அதிர்ச்சிகரமான தோல்விகள், எதிர்பாராத வெற்றிகள், ஜாம்பவான்கள் என்று அறியப்பட்ட அணிகள் வீழ்த்தப்படுவது, எதிர்பாராத அணிகளின் போராட்டம் என்று சுவாரஸ்யத்திற்குக் குறைவின்றி இருக்கும்.

மூன்று நாட்களுக்கு முன் இங்கிலாந்து அணியை அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கியது ஆப்கானிஸ்தான். அந்தச் செய்தியின் பரபரப்பு அடங்குவதற்குள் தரமஷலாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ‘ஷாக்’ கொடுத்திருக்கிறது நெதர்லாந்து அணி.

நெதர்லாந்திடம் இரண்டாவது முறையாக தென் ஆப்பிரிக்கா தோல்வி

இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெரிய ஸ்கோர் என அடித்த தென் ஆப்பிரிக்கா, 245 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் வீழ்ந்தது அதிர்ச்சிக்குரியதுதான்.

கடந்த 2022ஆம் ஆண்டு, அடிலெய்டில் நடந்த டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 13 ரன்களில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது. அதன்பின், உலகக்கோப்பையில் 2வது முறையாக நெதர்லாந்திடம் தோல்வி அடைந்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

நெதர்லாந்து அணி நிர்ணயித்த 246 ரன்கள் இலக்கை சேஸிங் செய்ய முடியாமல், தென் ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

 
நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தத் தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணியின் நிகர ரன்ரேட் 2 என்ற நிலையில் இருந்து குறைந்து, 1.385 ஆகச் சரிந்துவிட்டது.

மீண்டும் பழைய நிலையா?

இந்தத் தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணியின் நிகர ரன்ரேட் 2 என்ற நிலையில் இருந்து குறைந்து, 1.385 ஆகச் சரிந்துவிட்டது. ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்தில் நன்றாகச் செயல்பட்டு பின்னர் கேலி செய்யப்படும் வகையில் தோல்வியடையும் நிலைக்கு மாறுவது வாடிக்கையாகி வருகிறது.

அது இந்த உலகக்கோப்பையிலும் தப்பவில்லை. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி பெற்ற முதல் உலகக் கோப்பை வெற்றி இது.

தென் ஆப்பிரிக்காவின் தவறுகள்

நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது எனக் கூறுவதைவிட, தென் ஆப்பிரிக்க அணியின் அடுக்கடுக்கான தவறுகள்தான் நெதர்லாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது என்று கூறலாம்.

நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்யன் தத், மெர்வி, மீக்கீரன் ஆகியோர் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை திணறவிட்டனர். சூழலையும், ஆடுகளத்தின் தன்மைமையையும் பயன்படுத்தி வெற்றியைத் தங்கள் வசம் இழுத்து வந்தனர்.

இதில் 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து 23 ஓவர்கள்தான் பந்து வீசினர். அதில் டாட் பந்துகள் மட்டும் 83 பந்துகள். அதாவது 23 ஓவர்களில் 13 ஓவர்களில் ரன் ஏதும் வழங்கவில்லை. இதுபோன்ற கட்டுக்கோப்பான பந்துவீச்சுதான் தென் ஆப்பிரிக்க பேட்டர்களை திணறவைத்தது.

முன்னாள் கேப்டன் கபில் தேவ் முன்னர் அளித்திருந்த பேட்டியில், “உலகக்கோப்பை கிரிக்கெட் வெற்றி என்பது வீரர்களின் திறமையை கணக்கில் எடுக்கும்போது, எந்தவொரு அணி குறைவான தவறுகளைச் செய்கிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது,” என்று தெரிவித்திருந்தார். அந்த வார்த்தை நெதர்லாந்து அணிக்கு நேற்று பொருத்தமாக இருக்கும்.

 

கேப்டன் பவுமாவின் மோசமான முடிவுகள்

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்றதில் இருந்து தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததே தோல்விக்கு முக்கியக் காரணம்.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, டாஸ் வென்றதில் இருந்து தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததே தோல்விக்கு முக்கியக் காரணம்.

தரம்ஷலா மைதானம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமானது. ஆனால், கூடுதல் வேகப்பந்தவீச்சாளராக கூட்ஸியை சேர்த்தது தேவையற்றது. அதற்குப் பதிலாக ஷாம்சியை சேர்த்திருந்தால் சுழற்பந்துவீச்சால் இன்னும் 40 ரன்கள் குறைவாக நெதர்லாந்தை வென்றிருக்கலாம்.

இந்த ஆட்டத்தில் ரபாடா, இங்கிடி, கூட்ஸி மூவருமே சராசரியாக 6 ரன்கள் வழங்கினர். இதில் மார்கோ ஜான்சன் மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். கேசவ் மகராஜ் சுழற்பந்துவீச்சில் நெதர்லாந்து பேட்டர்கள் திணறுவது தெரிந்தவுடன், பகுதி நேர சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் மார்க்கிரமுக்கு ஓவரை கேப்டன் பவுமா வழங்கியிருக்கலாம்.

ஆனால், மார்க்கிரமுக்கு பந்துவீச வாய்ப்பை கேப்டன் பவுமா வழங்கவில்லை. கூடுதலாக வேகப்பந்துவீச்சாளரைச் சேர்த்தது, ஷாம்சியை எடுக்காது, மார்க்கிரமுக்கு ஓவர்களை வழங்காதது போன்ற தவறுகள் நெதர்லாந்துக்கு சாதகமாக அமைந்தன.

ஆட்டத்தின் திருப்புமுனை

தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, நெதர்லாந்து அணியின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து, 175 ரன்களுக்குள் ஆட்டம் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், கேப்டன் எட்வார்ட்ஸ் (78) டெய்ல் என்டர்களை வைத்துக் கொண்டு, கடைசிவரை போராடி 100 ரன்களைச் சேர்த்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

ஏழு விக்கெட்டுகள் வீழ்ந்தபின், 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது என்பது, ஆடவர் ஒருநாள் போட்டியில் இது 2வது முறை. உலகக்கோப்பையில் இதுபோன்று நடந்தது 9வது முறை.

 
நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நெதர்லாந்து அணி கடைசி 10 ஓவர்களில் சேர்த்த ரன்கள்தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

டெத் ஓவரில் விளாசிய நெதர்லாந்து

நெதர்லாந்து அணி கடைசி 10 ஓவர்களில் சேர்த்த ரன்கள்தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அதேநேரம், டெத் ஓவர்களை ரபாடா, இங்கிடி, கூட்ஸி மூவரும் படுமோசமாக வீசி ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு முக்கியக் காரணம்.

கடைசி 9.1 ஓவர்களில் மட்டுமே நெதர்லாந்து அணி 105 ரன்களை சேர்த்தது. ஆடவர் ஒருநாள் போட்டியில் ஒரு அணிக்கு 7 விக்கெட்டுகள் சரிந்த பிறகு, 100க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்தது என்பது, மிகவும் அதிகபட்சம்.

ஏறக்குறைய ஓவருக்கு 11 ரன்ரேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக ஹாங்காங் அணி 11 ரன்ரேட்டில் சேர்த்தது அதன்பின் இது அதிகபட்சம்.

நெதர்லாந்து 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, இன்னும் 20 ரன்களில் ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நெதர்லாந்து 245 ரன்களை சேர்த்ததாக இறுதியில் தெரிந்தபின், தென் ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது.

 
நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நெதர்லாந்து 140 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, இன்னும் 20 ரன்களில் ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ரபாடா, இங்கிடிக்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிடி, ரபாடாவின் பந்துவீச்சு துல்லியத்தன்மை மாறாமல், பழைய தென் ஆப்பிரிக்க அணியைப் பார்த்த உணர்வு இருந்தது.

ஆனால், நேற்றைய பந்துவீச்சில் ஒருவிதமான மெத்தனப் போக்கு, நெதர்லாந்துதானே என்ற அசட்டை, அந்த அணியைக் குறைத்து மதிப்பிடும் தன்மை தெளிவாகத் தெரிந்தது. இங்கிடி வீசிய பெரும்பாலான பந்துகள் லைன், லெந்தில் இல்லை, மாறாக, ஓவர் பிட்சாக இருந்தது, பேட்டர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

ரபாடாவின் பந்துவீச்சில் நேற்று துல்லியத்தன்மையும், நெருக்கடி தரும் ஸ்விங்கும் இல்லை. காலநிலை ஸ்விங் செய்யச் சாதகமாக இருந்தும், பந்துவீச்சில் ரபாடா ஏன் இப்படிச் செயல்பட்டார் என்பது வியப்புதான்.

ஏன் முதலில் சேஸிங் செய்தனர்?

தரம்ஷலாவில் பகலிரவு போட்டியில், இரவில் பெய்யும் பனிப்பொழிவு, சூழலையை மாற்றிவிடும். இதனால் ஆடுகளத்தில் ஈரப்பதம் சேர்ந்து, பந்துகள் பேட்டரை நோக்கி மெதுவாக, தாழ்வாக வரும்.

இதனால் பேட்டர்கள் பந்தைக் கணித்து ஆடுவது சிரமமாக இருக்கும். இது தெரிந்தும், கேப்டன் பவுமா டாஸ் வென்று சேஸிங்கை தேர்ந்தெடுத்து தோல்விக்குக் காரணமாகிவிட்டார்.

 

ஃபீல்டிங் மோசம், உதிரிகள் அதிகம்

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தென் ஆப்பிரிக்காவின் நேற்றைய பந்துவீச்சில் ஒருவிதமான மெத்தனப் போக்கு, நெதர்லாந்துதானே என்ற அசட்டை, அந்த அணியைக் குறைத்து மதிப்பிடும் தன்மை தெளிவாகத் தெரிந்தது.

தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சு மட்டுமல்லாமல் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் ஆகியவையும் நேற்று மோசமாக இருந்தது. ஒரு காலத்தில் தென் ஆப்பிரிக்கா என்றாலே ஃபீல்டிங்தான் நினைவுக்கு வரும்.

ஜான்டி ரோட்ஸ், கல்லினன், கிப்ஸ், குரோனியே, ரூட்ஸ் எனத் தேர்ந்த ஃபீல்டர்கள் இருந்த அணியிலா இப்படி ஃபீல்டிங் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்த ஆட்டத்தில் மட்டும் தென் ஆப்பிரிக்க அணி 32 ரன்களை உதிரிகளாக வழங்கியுள்ளது. 21 வைடுகள், 10 லெக்பை, ஒரு நோபால் வழங்கியுள்ளது. இந்த உதரிகள் எண்ணிக்கையை தென் ஆப்பிரிக்க அணி குறைத்திருந்தாலே, 200 ரன்களுக்குள் நெதர்லாந்தை சுருட்டி இருக்கலாம்.

தென் ஆப்பிரிக்க அணி 32 ரன்கள் உதரிகளாக வழங்கியதே, இதுவரை நடந்த உலகக்கோப்பைத் தொடரில் அந்த அணி வழங்கிய அதிகபட்ச உதரி ரன்களாகும். இதற்கு முன் 2015ஆம் ஆண்டு யு.ஏ.இ அணிக்கு எதிராக 29 ரன்களை உதரிகளை தென் ஆப்பிரிக்கா வழங்கியிருந்தது. அதை முறியடித்துவிட்டது.

சுழற்பந்துவீச்சைப் பார்த்து பயம்

நெதர்லாந்து அணியைக் குறைத்து மதிப்பிட்டதும், அவர்களின் சுழற்பந்துவீச்சை கவனத்தில் கொள்ளாமல் இருந்ததும், சுழற்பந்துவீச்சை ஆடத் திறமையில்லாத பேட்ஸ்மேன்கள் இருந்ததும் தென் ஆப்பிரிக்கத் தோல்விக்கு காரணம்.

ஏனென்றால், தென் ஆப்பிரிக்க அணி, நேற்று தனது முதல் விக்கெட்டை 36 ரன்களில் இழந்தது. அடுத்த 8 ரன்களுக்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதாவது 44 ரன்களில் 4வது விக்கெட்டைப் பறிகொடுத்தது. கடந்த 1999ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டன் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 13 ரன்களுக்கு முதல் 4 பேட்டர்களும் ஆட்டமிழந்திருந்தனர். அந்த ரன்களை விடக் குறைவாக இந்த ஆட்டத்தில் டாப்-4 பேட்டர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

 

‘பந்துவீச்சில் கோட்டைவிட்டோம்’

நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், “நெதர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் இருந்தபோதே நாங்கள் சுருட்டியிருக்க வேண்டும் 200 ரன்களை கடக்க விட்டிருக்ககூடாது. பந்துவீச்சில் கோட்டைவிட்டோம். ஆனால், சேஸிங்கில் சிறப்பாகச் செயல்படுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பார்த்தது போன்று பேட்டிங் அமையவில்லை.

ஆஸ்திரேலியாவிடம் சிறப்பாகச் செயல்பட்ட நாங்கள் இங்கு ஏன் இப்படிச் செயல்பட்டோம் என்பது விவாதத்துக்குரியது. உதிரி ரன்களை கட்டுப்படுத்தவில்லை. ஃபீல்டிங் உலகத் தரத்துக்கு இல்லை.

வீரர்களிடம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடியபோது இருந்த துடிப்பு, உற்சாகம் இந்த ஆட்டத்தில் இல்லை. இது குறித்து வீரர்களிடம் பேச வேண்டும். இந்தத் தோல்வி எங்களைப் பாதித்துள்ளது. இந்தத் தோல்வி நெருக்கடியையும் எங்களுக்கு அளித்துள்ளது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cyj1gp03pk0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபில் தேவின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த நெதர்லாந்து கெப்டன்

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் நேற்றைய 15 ஆவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பெட்டிங் செய்த நெதர்லாந்து 245 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நெகிடி, மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவரிலேயே 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

9-2.jpg

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து சாதனை படைத்தது. அத்துடன் 2007-க்குப்பின் 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து அசத்தியது.

இந்த சரித்திர வெற்றிக்கு 78* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கெப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

7 ஆவது இடத்தில் களமிறங்கிய அவர் 10 பெளண்டரி 1 சிக்சருடன் 78* (69) ரன்கள் குவித்து வெற்றி பெற உதவினார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் 7 ஆவது இடத்தில் களமிறங்கிய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கெப்டன் என்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன் 36 வருடங்களுக்கு முன் நடைபெற்ற 1987 உலகக்கோப்பையில் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் 7 ஆவது இடத்தில் களமிறங்கி 72* (58) ரன்கள் அடித்து அந்த சாதனையைப் படைத்து இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

அந்தப் பட்டியல்:

1. ஸ்காட் எட்வார்டஸ் : 78*, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*

2. கபில் தேவ் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 1987

3. ஹெத் ஸ்ட்ரீக் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 2003

4. தசுன் சனாக்கா : 68, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக , 2023

https://thinakkural.lk/article/277523

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.