Jump to content

Recommended Posts

Posted

தென்னாபிரிக்காவின் பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை குறைவால் தோல்வியை தளுவினார்கள்.

  • Replies 546
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எப்படி மற்றைய போட்டிகளில் வெற்றி பெற்றார்கள்?

 

50 ஓவர் விளையாட்டு தரப்படுத்தலில் தென்னாபிரிக்கா இப்போது முதலாம் இடம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோஹித்தை விட சிறந்த கேப்டன் யாரும் இருக்க முடியாது என பாண்டிங் ஏன் நம்புகிறார்?

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வங்கதேசத்துடனான காலிறுதிக்கு முன்பு, பாண்டிங் தனது பேட்டியில் ரோஹித்துக்கு ஒரு சதம் மட்டுமல்ல, அதற்கும் மேல் அவர் ரன்கள் எடுப்பார் எனக் கணித்திருந்தார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விமல் குமார்
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தக் கட்டுரையில் அதற்கு மேல் குறிப்பிட விரும்பவில்லை.

ஆனால், வாசகர்களை 2015 உலகக் கோப்பை போட்டியைப் பற்றி நினைவு கூற விரும்புகிறோம். அந்த உலகக் கோப்பையின்போது, நான் பாண்டிங்கை மெல்பர்னில் சந்தித்தேன்.

உண்மையில், பாண்டிங் அந்த உலகக் கோப்பையின் போது பல சந்தர்ப்பங்களில் நேர்காணல் செய்யும் வாய்ப்பை பெற்றேன்.

ஏனெனில் அவர் அந்த நேரத்தில் நான் பணியாற்றிய நிறுவனத்தின் தொடர்புடைய ஒரு தனியார் சேனலுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

வங்கதேசத்துடனான காலிறுதிக்கு சற்று முன்பு, பாண்டிங் தனது பேட்டியில் ரோஹித்துக்கு ஒரு சதம் மட்டுமல்ல, அதற்கும் மேல் அவர் ரன்கள் எடுப்பார் எனக் கணித்திருந்தார்.

அவர் தனது கணிப்பில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், அவர் என்னுடன் பந்தயம் கட்டவும் தயாராக இருந்தார்!

புத்திசாலித்தனமாக நான் பாண்டிங்குடன் பந்தயம் கட்டவில்லை, ஆனால் 2013 இல், பாண்டிங் மிகவும் சாதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை விட்டு வெளியேறி ரோஹித் சர்மாவை வருங்காலத் தலைவராகத் தயார்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

 
ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரிக்கி பாண்டிங்குடன் ரோஹித் சர்மா

'ரோஹித்தை விட சிறந்த கேப்டன் யாரும் இருக்க முடியாது'

பாண்டிங் மற்றும் ரோஹித் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் மதிக்கிறார்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் புல் ஷாட்டின் மிகப்பெரிய ரசிகர்கள்.

சமீபத்தில், இந்திய கேப்டனை நேர்காணல் செய்தபோது, அவர் இதை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், அதை பாண்டிங் 2015ல் என்னிடம் கூறியிருந்தார்.

இன்று நாம் பேசுவது 2015 இல் ரோஹித் சர்மாவைப் பற்றி அல்ல, 2023 கேப்டன்-பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாவைப் பற்றி.

அவர் தனது ஆக்ரோஷமான பாணி மற்றும் சிறந்த கேப்டன்ஷிப்பால் 2023 உலகக் கோப்பையின் முதல் மூன்று போட்டிகளில் இந்தியா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

ஐசிசி உடனான உரையாடலில், பாண்டிங், இந்த உலகக் கோப்பையின் போது இந்தியா மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும் என்றும், இந்த அழுத்தத்தைத் தாங்குவதற்கு ரோஹித்தை விட வேறு எந்தத் தலைவரும் இருந்திருக்க முடியாது என்றும், ஏனெனில் அவர் மிகவும் நிதானமாகவும் எளிதாகவும் வாழ்கிறார், எனக் கூறியிருந்தார்.

 
ரோகித் ஷர்மா

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

2023 இல் அவர் 116.51 ஸ்ட்ரைக் ரேட்டிலிருந்து அவர் பேட்டிங் செய்யும் ஆபத்தான விதம் தெளிவாகிறது.

 

ரோஹித்தின் பேட்டிங் முன்பை விட ஆக்ரோஷமாக உள்ளது

ரோஹித்தின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் மென்மையானது மற்றும் இயற்கையானது. ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட்டைப் பார்த்தால், அவரது பேட்டிங்கில் ஆக்ரோஷம் தெரியும்.

இதுவரை, உலகக் கோப்பையின் மூன்று போட்டிகளில், ரோஹித் 72 க்கும் அதிகமான சராசரியுடன் 217 ரன்கள் எடுத்துள்ளார் மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 142 ஆக உள்ளது. ஆனால், உலகக் கோப்பையில் இதெல்லாம் திடீரென நடந்ததில்லை.

2023 இல் அவர் 116.51 ஸ்ட்ரைக் ரேட்டிலிருந்து அவர் பேட்டிங் செய்யும் ஆபத்தான விதம் தெளிவாகிறது.

ரோஹித் 2019 முதல் 2021 வரை 95 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினார், ஆனால் 2022 இல் அது 115 ஆக உயர்ந்தது.

ரோஹித் இந்த பாய்ச்சலால், அவரால், தனிப்பட்ட முறையில் அதிக ரன் எடுக்க முடியவில்லை, ஆனால், கேப்டன் என்ற பொறுப்பில் அணியை வேகமாக விளையாட ஊக்கப்படுத்தியதற்காக பாராட்டப்பட வேண்டும்.

ரோஹித்தின் இந்த ஸ்டைல் ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல டி20யிலும் அப்படியே இருந்தது.

2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று இந்திய அணி வெளியேறியது. ஆனால் அந்த போட்டியிலும், ரோஹித் ஒரு தொடக்க ஆட்டக்காரராக ஆக்ரோஷமான அணுகுமுறையைத் வெளிப்படுத்தியிருந்தார்.

 
ரோகித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைலும் கடந்த சில வருடங்களில் முற்றிலும் மாறிவிட்டது.

தற்போதைய காலகட்டத்தின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் ரோஹித்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் டாப் ஆர்டர் விமர்சிக்கப்பட்டது. ஏனெனில், ரோஹித், விராட் மற்றும் ஷிகர் தவான் அல்லது கே.எல் ராகுல் ஆகியோரின் பேட்டிங் ஸ்டைல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. ஆரம்பத்தில் எச்சரிக்கையுடன் விளையாடி பின்னர் பெரிய இன்னிங்ஸ்களை விளையாடி ஸ்ட்ரைக் அதிகரித்தது.

ஆம், இந்த மூவரில் இருந்து இரண்டு பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாத போதெல்லாம், இந்திய அணி மெதுவான தொடக்கத்தை இழந்து தவித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரோஹித் கேப்டன் பொறுப்பைப் பெற்றபோது, இந்த சிக்கலைப் புறக்கணிக்காமல், தனது முறைகளை மாற்றி அணிக்கு வேறு புதிய திசையைக் கொடுக்க முயன்றார்.

ஆனால், இதைச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.

கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் அரிதாகவே ஒரு கேப்டன் அணியை ஆக்ரோஷமாக வழிநடத்துவதைக் காணலாம். பிரண்டன் மெக்கல்லம் 2015 இல் நியூசிலாந்துக்கு விதிவிலக்காக இருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஸ்டைலும் கடந்த சில வருடங்களில் முற்றிலும் மாறிவிட்டது.

இப்போது அவர் மிகவும் நுட்பமாக கவனித்து பந்துகளை மிகவும் துல்லியமாக விளையாடுகிறார், அவர் தற்போது சிறந்த தொடக்க வீரராகக் கருதப்படுகிறார்.

கடந்த சில ஆண்டுகளில் தொடக்க ஆட்டக்காரராக அவரது டெஸ்ட் புள்ளிவிவரங்களும் இதற்கு சாட்சியமளிக்கின்றன.

 
ரோகித் ஷர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அணியின் பேட்டிங்கின் அடிப்படையில் உலகக் கோப்பையில் வெற்றிப் பாதைக்கு செல்வதில் வித்தியாசம் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் ரோகித் கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் ரோஹித்தின் திறமையை யாரும் சந்தேகிக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்தாலும், மற்ற வீரர்களை விட அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்ததற்கு காரணம், இத்தகைய திறமையான வீரர், நிச்சயம் சிறப்பான ஒரு அணியை இப்போதில்லை என்றாலும், ஒரு நாள் கட்டமைப்பார் என அனைவரும் நம்பினர்.

ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து, ஒவ்வொரு தொடரிலும் அவருக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் இடையிலான ஒருங்கிணைப்பை உன்னிப்பாகக் கவனித்தேன்.

குறிப்பாக, ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது, உலகக் கோப்பைக்கான வியூகங்களை, கேப்டனும், பயிற்சியாளரும் வகுத்த விதம், அதை அப்போது விளையாடிய போட்டியில் செயல்படுத்த முயன்றது வியக்கத்தக்கது. அவர்கள் இருவரும், இந்தியாவில் விமர்சிக்கப்படுவதை பொருட்படுத்தவில்லை.

தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் எவ்வளவு வலுவாக இருந்தாலும், அணியின் பேட்டிங்கின் அடிப்படையில் உலகக் கோப்பையில் வெற்றிப் பாதைக்கு செல்வதில் வித்தியாசம் இருப்பதாக பல சந்தர்ப்பங்களில் ரோகித் கூறியிருக்கிறார்.

கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். அதனால், நவம்பர் 19 ஆம் தேதி உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவும் சிறப்பாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c72reyrxz0po

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு நியூசிலாந்து விடுக்கும் 'எச்சரிக்கை'

நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 18 அக்டோபர் 2023, 18:39 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

8 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் அணி, உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் எளிதாக சரண் அடைந்தது.

மிகப்பெரிய வெற்றி

சென்னையில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை இந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி பதிவு செய்தது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. 289 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 34.4 ஓவர்களில் 139 ரன்களில் சரணடைந்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

காத்திருக்கும் சவால்கள்

நியூசிலாந்து அணி பேட்டிங்கில் இக்கட்டான நிலையில் இருந்தபோது தூண்போல் நின்று காத்து, ரன்கள் சேர்த்த கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன், 1.923 நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.

நியூசிலாந்து அணிக்கு அடுத்துவரும் ஆட்டங்கள் அனைத்தும் சவாலாக இருக்கக் கூடியதாக இருக்கும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நியூசிலாந்து திறமைக்கு நிச்சயமாக உரைகல்லாக அமையும்.

எதிர்பார்ப்பு பொய்யானது

கடந்த திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை மண்ணைக் கவ்வ வைத்து அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்து இன்று சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் அனைத்தும் சராசரிக்கும் குறைந்துவிட்டது.

 

5 கேட்சு வாய்ப்பு வீண்

ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிலும் ஆப்கானிஸ்தான் பீல்டிங் இன்றைய ஆட்டத்தில் மிகுந்த மோசமாக இருந்தது. 5 கேட்சுகளை கோட்டைவிட்டனர், ஒரு ரன் அவுட்டை கோட்டைவிட்டு, ஏறக்குறைய நியூசிலாந்து பேட்டர்களுக்கு கடைசி நேரத்தில் ரன் சேர்க்க உதவி செய்தனர். கேட்சுகளை மட்டும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பிடித்திருந்தால், நியூசிலாந்து அணி 200 ரன்களைக்கூட கடந்திருக்காது.

நியூசிலாந்து பேட்டர் யங்கிற்கு பரூக்கி ஒரு கேட்ச்சை தவறவிட்டார், ரவீந்திராவுக்கு முஜிப்பூர் ரஹ்மான் கேட்ச்சை பிடிக்கத் தவறினார், ரவீந்திராவுக்கு ரஷித்கான் ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார், கேப்டன் லாதமிற்கு ரஷீத் கான் கேச்சை தவறவிட்டார். லாதமிற்கு 2வது வாய்ப்பை ரஷித் கான் மீண்டும் தவறவிட்டார். கிளென் பிலிப்ஸ்கு நவீன் உல் ஹக் கேட்சை தவறவிட்டார். இந்தப் போட்டியில் கிடைத்த 6 வாய்ப்புகளை தவறவிட்ட ஆப்கானிஸ்தான் எப்படி வெல்லும் என எதிர்பார்க்கலாம்.

கேப்டனின் தவறான முடிவு

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து செய்த தவறுகளை நினைத்துப் பார்த்தாவது, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்திருக்கலாம்.

அவ்வாறு பேட் செய்து 250 ரன்களை எட்டியிருந்தால், நிச்சயம் நியூசிலாந்துக்கு சவாலாக இருந்திருக்கும், நியூசிலாந்து தோல்வி அடைந்திருந்தாலும் வியப்புக்குரியது இல்லை.

டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த ஹஸ்மத்துல்லா, திட்டமிட்டபடி அணியை வழிநடத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரின் எண்ணப்படி எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

நியூசிலாந்து தடுமாற்றம்

சென்னை ஆடுகளத்தைப் பற்றி் தெரிந்தும், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்போதே ஏதோ சொதப்பல் தொடங்கிவிட்டது போல் தெரிந்தது.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முதலில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி நியூசிலாந்து பேட்டர்களைத் திணறவிட்டனர். 109 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த நியூசிலாந்து அணி, திடீரென 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த “ நல்ல சந்தர்பத்தை” ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தங்களுக்கு சாதகமாக திருப்பத் தவறிவிட்டனர். ஆனால், கேப்டன் டாம் லாதம், கிளென் பிலிப்ஸ் இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடத் தொடங்கி பின்னர் பெரிய ஸ்கோரை சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் டாம் லாதம்(68), கிளென் பில்ப்ஸ்(71) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுக்கோப்பு

21 ஓவர்கள் முதல் 30வது ஓவர்கள் வரை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகத்தான் பந்துவீசினர், வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர், 2பவுண்டரிகளை அடிக்கவிட்டு, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

“கேட்ச் லாஸ் மேட்ச் லாஸ்”

ஆனால், டாம் லாதம், பிலிப்ஸ் இருவரும் தேநீர் இடைவேளைக்குப்பின் தாக்குதல் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த இருவரை மட்டும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வெளியேற்றி இருந்தால், ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும், நியூசிலாந்து அணி 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருக்கும். 40வது ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள்தான் சேர்த்து தடுமாறி வந்தது.

இரு கேட்சுகளை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தவறவிட்டதுதான், ஆட்டத்தின் வெற்றியையும் சேர்த்து கோட்டைவிட்டனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி 105 ரன்களைச் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு நகர்ந்தது.ஆப்கானிஸ்தான பந்துவீச்சை லாதம், பிலிப்ஸ் இருவரும் வெளுத்துக் கட்டி அரைசதம் அடித்துப் பிரிந்தனர்.

ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

மோசமான பேட்டிங்

ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கிலும் படுமோசமாகச் செயல்பட்டது. அந்த அணி, தனது கடைசி 5 விக்கெட்டுகளை 24 பந்துகளில் வெறும் 14 ரன்களுக்குப் பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தானில் எந்த பேட்டரும் பொறுப்புடன் பேட் செய்யவில்லை. அந்த அணியில் அதிகபட்சமே, ரஹ்மத் ஷா சேர்த்த 36 ரன்கள்தான். மற்ற பேட்ஸ்மேன்களான குர்பாஸ்(11), ஜாத்ரன்(14), ஓமர்ஜாய்(27) என சொற்ப ரன்களில் வெளியேறினர். 97 ரன்கள்வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

சான்ட்னர் 100வது விக்கெட்

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் மிட்ஷெல் சான்ட்னர் இடம் பெற்றிருந்ததால் சென்னை ஆடுகளம் குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார். இதனால், எந்த இடத்தில் பந்து எப்படி டர்ன் ஆகும் என்பதை தெரிந்து, அறித்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.

7.4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மிட்ஷெல் சான்ட்னர் 98 போட்டிகளில் பங்கேற்று தனது 100-வது ஒருநாள் விக்கெட்டை இந்த ஆட்டத்தில் வீழ்த்தினார். சான்ட்னர், ரவீந்திரா, பிலிப்ஸ் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சென்னை ஆடுகளத்தின் தன்மையை நன்குப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசையை ஆணிவேரை ஆட்டிப் பார்த்தனர்.

இந்த 3 பேரும் சேர்ந்து 15 ஓவர்கள்தான் பந்துவீசினர். அதில், 42 பந்துகள் டாட் பந்துகளாகும். அதாவது, 90 பந்துகளில் 42 பந்துகளில் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் எந்த ரன்னும் எடுக்கவில்லை.

பெர்குஷன் 7 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன், 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரன்ட் போல்ட் 7 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் Vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா கூறுகையில் “ கேட்சுகளை தவறவிட்டதால் வெற்றி வாய்பையும் தவறவிட்டோம், மற்றவகையில் அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும். கடைசி 6 ஓவர்களில் அதிகமான ரன்களை வழங்கிவிட்டோம். இரு கேட்சுகளையும் தவறவிட்டோம். இதனால்தான் நியூசிலாந்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

டாஸ் வென்றபி்ன் ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும், ஆடுகளத்தில் பந்து மெதுவாக வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், நடந்தது வேறு, இன்னும் அதிகமான போட்டிகள் உள்ளன, அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறோம், வலுவாக திரும்பி வர முயல்வோம்” எனத் தெரிவித்தார்

இந்தியாவுக்கு நியூசிலாந்தின் 'எச்சரிக்கை'

இந்தியாவுடன் நியூசிலாந்து அணி வரும் ஞாயிற்றுக்கிழமை மோத இருக்கிறது. தரம்சாலா மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

இப்போது முதல் இரு இடங்களில் இருக்கும் இரு அணிகள் மோதப் போகின்றன என்பதால் இந்தப் போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எந்தப் போட்டியிலும் தோல்வியடையாத நியூசிலாந்து இந்தியாவுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்தியா இந்தத் தடையை உடைக்கும்பட்சத்தில் அதன் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் லாதம், "இதே வேகத்தில் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் சந்திப்போம்" என்று கூறினார்.

தற்போது புள்ளிப் பட்டியிலின் முதல் நான்கு இடங்களில் நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இருக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/c0j94xne585o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோழி சாத்தி தள்ளுகின்றார்.  இந்த உலக கோப்பையுடன் 50 ஒரு நாள் போட்டி சதங்கள் அடிப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விராட் கோலியால் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தர முடியுமா?

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

“ உலகக் கிரிக்கெட்டில் நான் பார்த்தவரை மிகச்சிறந்த பேட்டர்களில் விராட் கோலியும் ஒருவர். சேஸிங் என்று வந்துவிட்டால் இவரின் பக்கத்தில் எந்த பேட்டரும் வர முடியாது. அதிலும் 50 ஓவர்கள் போட்டியி்ல் விராட் கோலி ஒரு அடையாளம், கிங் கோலிதான் உண்மையில் கிங்”

இந்த வார்த்தையை தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணி வீரருமான தினேஷ் கார்த்திக் கூறியது. அது மட்டுமல்லாமல் “சேஸிங் கிங்” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைனும் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

 

சேஸிங் கிங் என்பதை நிரூபிக்கும் கோலி

ஒரு நாள் போட்டிகளில் சேஸிங் என வந்துவிட்டாலே விராட் கோலி அதை சவாலாக எடுத்துக்கொண்டு களத்தை ஆட்சி செய்துவிடுவார் என்பதை பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதில் இருந்து இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் மோதி 4 வெற்றிகளைப் பெற்று 2வது இடத்தில் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்த 4 போட்டிகளிலும் விராட் கோலியின் சேஸிங் முத்தாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக சேஸிங்கில் அரைசதமும், வங்கதேசத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்தும் “சேஸிங்கில் கிங்” என்று நிரூபித்துள்ளார்.

 
சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி உலகக் கோப்பையா?

2011ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் இந்திய அணி பல்வேறு வகைகளில் நிறைவான அணியாக உருவெடுத்து உலகக் கோப்பையையில் விளையாடி வருகிறது. உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் இந்தியாவும் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சர்களும், முன்னாள் வீரர்களும் கணித்துள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பைத் தொடர், உள்நாட்டு ரசிகர்கள், மைதானம் ஆகியவை சாதகமாக இருந்தாலும், விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஷமி ஆகிய சீனியர் வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பையாகக் கூட இருக்கலாம். ஆதலால், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட 4 பேரும் தங்களால் முடித்த அளவு முயற்சிகளை, திறமைகளை வெளிப்படுத்தி, கோப்பையை வெல்ல உழைக்கலாம்.

 
சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

"வெற்றிகரமான கேப்டனாக இல்லை"

இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி, பல்வேறு போட்டிகளில் கோப்பையை அணிக்கு பெற்றுக் கொடுத்திருந்தாலும், ஐசிசி நடத்தும் போட்டித் தொடர்களில் எந்த கோப்பையைும் பெற்றுக் கொடுத்தது இல்லை. இதனால்தான், இன்றளவும் மகேந்திர சிங் தோனி, வெற்றிகரமான கேப்டனாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.

இந்திய அணிக்குள் ஒரு வீரராக சிறப்பாகச் செயல்பட்ட விராட் கோலி, கேப்டனாக பொறுப்பேற்றபோது வெற்றிகளை அளித்தாலும், அது ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்லும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.

ஆதலால், விராட் கோலி, இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு அவரால் முடிந்த அனைத்துப் பணிகளையும் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3 ஆட்டங்களில் இந்திய அணி சேஸிங்கில் வெல்ல கோலியின் பேட்டிங் முக்கியமாக இருந்தது என்பதே போதுமானதாகும்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேஸிங் ஏன் சவாலானது?

கிரிக்கெட்டில் மிகவும் சவாலான விஷயம் என்பது வெற்றிகரமாக ரன்களை சேஸிங் செய்வதுதான். கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்யும் அணியைவிட, சேஸிங் செய்யும் அணிக்குத்தான் அழுத்தம், நெருக்கடி அதிகமாக இருக்கும். சேஸிங் என்று வந்துவிட்டாலே பேட்டிங் செய்யும் அணி வீரர்களுக்கு அழுத்தம் இருக்கும், அதிலும் பெரியஸ்கோர் என்றால் இன்னும் சவாலாகவும், சுமையாகவும் வீரர்களுக்கு மாறும்.

சேஸிங் என்று வந்துவி்ட்டாலே பெரும்பாலான அணிகள் அழுத்தத்தை தாங்க முடியாமல் விக்கெட்டை பறிகொடுக்கும். தனிப்பட்ட ரீதியில் பல சாதனைகளைப் படைத்த பேட்டர்கள்கூட சேஸிங் என்றவுடன் மிகப்பெரிய ஸ்கோரை விரட்டும்போது, விக்கெட்டுகளை இழந்துவிடுவதும் உண்டு.

அதிலும் குறிப்பாக உலகக் கோப்பை போன்ற சர்வதேச முக்கியத்துவம் கொண்ட தொடர்களில் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி போன்ற நாக்அவுட் சுற்றுகளில் பெரும்பாலும் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்யும்.

"சேஸிங் செய்து அழுத்தத்தை தாங்கமுடியாமல், நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பேட்டர்கள் ஆட்டமிழந்தால் வெற்றியை இழந்துவிடுவோம் என்று எண்ணி பெரும்பாலும் நாக்அவுட் சுற்றுகளில் முதலில் பேட்டிங் செய்வதையே விரும்புவர்." என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிலும் சேஸிங்கின் போது களத்தில் விளையாடும் பேட்டருக்கு ஸ்கோர்கார்டில் மாறும் ரன்கள், தேவைப்படும் ரன்களைப் பார்க்கும்போது, மனதுக்குள் படபடப்பு எகிறும், இந்த பதற்றம் பல நேரங்களில் பேட்டர்கள் தவறு செய்து ஆட்டமிழந்து, போட்டியை கைமாற்றிவிடும் காரணியாகவும் செயல்பட்டுள்ளது.

ஆனால், எந்தவிதமான அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு, எத்தகைய சூழலிலும் விளையாடி, ஸ்கோர்கார்டில் எப்படி எழுதினாலும், தேவைப்படும் ரன்களைப் பார்த்தாலும் பதற்றமே இல்லாமல் சேஸிங்கை வெற்றியாக மாற்றும் வீரர்கள் சிலர்தான்.

அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன், தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி வீரர் ஏபிடி, இந்தியாவின் எம்எஸ் தோனி, விராட் கோலி, பாகிஸ்தானி்ன் மிஸ்பா உல்ஹக் ஆகியோர் வருவார்கள். இவர்கள் அனைவரும் பலமுறை, பல போட்டிகளில் வெற்றிகரமாக தங்களின் அணியை சேஸிங்கில் கரை சேர்த்துள்ளனர்.

மாஸ்டர் ஆஃப் சேஸிங்

இந்த வீரர்கள் வரிசையில் தற்போது சேஸிங்கில் முக்கியமான வீரராகப் பார்க்கப்படுபவர் விராட் கோலி. சேஸிங்கில் சிறப்பாக இருந்த பிற வீரர்கள் அனைவரும் கிரி்க்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் கோலி மட்டுமே சர்வதேச கிரிக்கெட் களத்தில் முன்னணியில் இருக்கிறார்.

இப்போதுள்ள கிரிக்கெட்டில் சேஸிங்கில் சிறந்த பேட்டர், வீரராக யாரை எடுக்கலாம் என்ற கேள்விக்கு பலநாட்டு முன்னாள் வீரர்களும், பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் கூறிய பெயர் சேஸிங் கிங் விராட் கோலிதான்.

விராட் கோலி சேஸிங்கில் மட்டும் 158 போட்டிகளில் 151 இன்னிங்ஸ்களில் 7,699 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 27 சதங்களும், 39 அரைசதங்களும் அடங்கும். சேஸிங்கில் மட்டும் விராட் கோலி 65.35 சராசரி வைத்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் 93.67 என்று உயர்ந்து நிற்கிறார்.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் சேஸிங்கில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்தான் முதலிடத்தில் இருக்கிறார். 232 இன்னிங்ஸ்களில் சச்சின் 8720 ரன்கள் சேர்த்துள்ளார், அதில் 17 சதங்கள் அடங்கும், 42 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். ஆனால், சச்சினைவிட கோலி கூடுதலாக சதத்தையும், சராசரியையும், ஸ்ட்ரைக் ரேட்டையும் குறைவான போட்டிகளில்தான் வைத்துள்ளார் .

இப்போதுள்ள நவீனகால கிரிக்கெட்டிலும் சரி, உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் சரி 50 ஓவர்கள் போட்டி என்றாலே சேஸிங்கில் கிங், “மாஸ்டர் ஆஃப் சேஸ்” என்றால் அது விராட் கோலிதான் என்ற கருத்து உள்ளது.

சேஸிங்கின் போது அதிக சதம் அடித்த பேட்டரும் விராட் கோலிதான், சேஸிங்கின்போது 33 முறை நாட்அவுட்டாகவும் இருந்துள்ளார், புள்ளிவிவரங்கள் அனைத்தும் கோலிக்கே சாதகமாக உள்ளன.

கிரேட் ஃபினிஷர் முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான சேஸிங் என்ற வகையில் பார்த்தால், தோனிக்கு அடுத்ததாக விராட் கோலி இருக்கிறார். சேஸிங்கின்போது அணியை வெற்றி பெற வைத்தவகையில் தோனி 75 இன்னிங்ஸ்களில் 2,876 ரன்கள் குவித்து 33 முறை நாட்அவுட்டாக இருந்துள்ளார், 102.71 சராசரியாக தோனி வைத்துள்ளார். விராட் கோலி, 99 போட்டிகளில் 90 சராசரி வைத்துள்ளார், ஏறக்குறைய 6ஆயிரம் ரன்கள் சேர்த்துள்ளார், 33 முறை நாட்அவுட்டாகவும் இருந்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஃபினிஷிங் மற்றும் சேஸிங் என இரண்டுமே வேறுபட்டவை. அதில் ஆட்டத்தை ஃபினிஷிங் செய்வதில் வல்லவர் என்று பெயரெடுத்தவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. சேஸிங் செய்வதில் அத்தகைய பெருமை கோலிக்கு கிடைத்திருக்கிறது.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கோலியின் பங்களிப்பு

ஆட்டத்தை ஃபினிஷ் செய்வது என்பது பொறுப்பேற்று பேட்டிங் செய்வதாகும். சேஸிங் அல்லது ஃபினிஷிங் என்றாலே திட்டமிடலைத்தான் குறிக்கிறது, ஒவ்வொரு பந்தையும் எப்படி அணுகுவது என்பதை மனதுக்குள் வைத்துக் கொண்டு களமாட வேண்டும். அந்த வகையில் கிரேட் ஃபினிஷர் தோனிக்குப்பின் அந்த இடத்தை நிரப்ப யாருமில்லை, அதேபோல சேஸிங்கில் கிங் எனப்படும் விராட் கோலிக்கு இணையாகவும் யாருமில்லை.

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மோதிய 4 ஆட்டங்களிலும் சேஸிங்கில் விராட் கோலியின் பங்களிப்பு என்ன என்பது தெரி்ந்திருக்கும். அடுத்தவரும் போட்டிகளில் சேஸிங் என்றாலே, எதிரணிகளுக்கு சிம்மசொப்னாக இருக்கப் போவதும் விராட் கோலி என்பதில் சந்தேகமில்லை.

இந்திய அணி இந்த முறை உலகக் கோப்பையை வெல்வதற்கும் விராட் கோலியின் பங்களிப்பும், சேஸிங்கில் விராட் கோலியின் ரன் குவிப்பும் முக்கியக் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சேஸிங் கிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பிற அணிகளுக்கு சவாலாக இருக்கும் கோலியின் ஆட்டம்

அடுத்துவரும் போட்டிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள்தான் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். இதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் விராட் கோலி, 83 போட்டிகளில் விளையாடி 3,970 ரன்கள் குவித்துள்ளார், இதில் 8 சதங்கள், 23 அரைசதங்கள் அடங்கும்.

அதேபோல, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 57 ஒருநாள் போட்டிகளில் ஆடிய கோலி, 2957 ரன்கள் குவித்துள்ளார், இதில் 7 சதங்கள், 14 அரைசதங்களும் அடித்து 54 சராசரி வைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2610 ரன்களும், 48 சராசரி வைத்துள்ளார் விராட் கோலி. இதில் 8 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். ஆதலால், எதிர்வரும் 3 அணிகளுக்கு எதிராகவும் கோலியின் கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது தெரிகிறது. விராட் கோலியின் ஆட்டம் இந்த 3 அணிகளுக்கும் நிச்சயம் பெரிய தலைவலியாகவும், சவாலாகவும் இருக்கும்.

இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு ஒரு பேட்டராகவும், முன்னாள் கேப்டனாகவும், விராட் கோலியின் பங்களிப்பு பல்வேறு வகைகளில் இருக்கும் என்று நம்பலாம்.

https://www.bbc.com/tamil/articles/cjj8zz9g107o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராகுல் விட்டுக்கொடுப்புடன் சதம் குவித்தார் கோஹ்லி; இந்தியா 7 விக்கெட்களால் பங்களாதேஷை வென்றது !

19 OCT, 2023 | 11:13 PM
image
(இந்தியாவிலிருந்து நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக பூனே மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற உலகக் கிண்ண 17ஆவது லீக் போட்டியில் விராத் கோஹ்லி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்களால் இந்தியா இலகுவாக வெற்றிபெற்றது.

கே. எல். ராகுல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன்  விளையாடி கோஹ்லி சதம் குவிப்பதை உறுதி செய்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் விராத் கோஹ்லி குவித்த 3ஆவது சதம் இதுவாகும். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பெற்ற 48ஆவது சதம் இதுவாகும்.

இந்தியாவின் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கோஹ்லி 73 ஓட்டங்களுடனும் ராகுல் 33 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தனர்.

அந்த சந்தர்ப்பத்திலிருந்து கோஹ்லி சதம் குவிப்பதை விரும்பிய ராகுல் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் துடுப்பெடுத்தாடி ஒரு ஓட்டத்தை மாத்திரமே மேலதிகமாக பெற்றார். ஒரு வைட் நீங்கலாக 30 ஓட்டங்களை விளாசிய கோஹ்லி அபார சதம் குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா ஈட்டிய 4ஆவது தொடர்ச்சியான வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியை அடுத்து இந்தியாவும் நியூஸிலாந்தும் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. எனினும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் நியூஸிலாந்து முதலாம் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

இதுவரை உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வி அடையாமல் இருக்கும் இந்த இரண்டு அணிகளும் தரம்சாலாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளன.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 257 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 41.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.

முன்வரிசை வீரர்கள் மூவரும் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கி இந்திய அணிக்கு பலத்தை சேர்த்துக்கொடுத்தனர்.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ரோஹித் ஷர்மா 40 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் புகுந்த விராத் கோஹ்லி 2ஆவது விக்கெட்டில் கில்லுடன் 44 ஓட்டங்களையும் 3ஆவது  விக்கெட்டில்  ஷ்ரேயாஸ் ஐயருடன் 46 ஓட்டங்களையும் பகிர்ந்து இந்திய அணியை மேலும் பலப்படுத்தினார்.

ஷுப்மான் கில் 53 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் விராத் கோஹ்லியும் கே. எல். ராகுலும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 74 பந்துகளில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

விராத் கோஹ்லி 97 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 103 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.

தன்சித் ஹசனும் லிட்டன் தாஸும் 88 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தன்ஸித் ஹசன் 43 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து பதில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (8), மெஹிதி ஹசன் மிராஸ் (3) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். (129 - 3 விக்.)

வழமையான அணித் தலைவர் ஷக்கிப் அல் ஹசன் உபாதைக்குள்ளாகி இருப்பதால் அவருக்குப் பதிலாக ஷன்டோ தலைவராக விளையாடினார்.

மொத்த எண்ணிக்கை 137 ஓட்டங்களாக இருந்ததுபோது லிட்டன் தாஸ் 66 ஓட்டங்களுடன் களம்விட்டு வெளியேறினார்.

தௌஹித் ரிதோய் (16), முஷ்பிக்குர் ரஹிம் (38) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

முஷ்பிக்குர் ரஹிம் அடித்த பந்தை நோக்கி வலப்புறமாகத் தாவிய ரவிந்த்ர ஜடேஜா மிகவும் அற்புதமாக பிடித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர் மஹ்முதுல்லா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 36 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 46 ஓட்டங்களைப் பெற்றார்.

14 ஓட்டங்களைப் பெற்ற நசும் அஹ்மத்துடன் 7ஆவது விக்கெட்டில் மஹ்முதுல்லா 32 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடிபோது 9ஆவது ஓவரின் 3ஆவது பந்தை வீசிய ஹார்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அரங்கை விட்டு கடும் வலியுடன் வெளியேளினார்.

லிட்டன் தாஸ் அடித்த பந்தை தடுத்து நிறுத்துவதற்காக ஹார்திக் பாண்டியா வலது காலை நீட்டியபோது அவரது கணுக்காலில் பிறழ்வு ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியாமல் போனது.

பாண்டியாவுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் அவர் நொண்டியவாறு ஓய்வறைக்குத் திரும்பினார்.

அவரது ஓவரில் எஞ்சியிருந்த 3 பந்துகளை விராத் கோஹ்லி வீசி முடித்தார்.

பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/167317

Posted
On 18/10/2023 at 16:22, நியாயம் said:

எப்படி மற்றைய போட்டிகளில் வெற்றி பெற்றார்கள்?

 

50 ஓவர் விளையாட்டு தரப்படுத்தலில் தென்னாபிரிக்கா இப்போது முதலாம் இடம் அல்லவா?

அவர்களின் மட்டை அடியால் வெற்றி பெற்றார்கள். 5 ப்ந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்திருந்த கடைசி போட்டியில் ஒராளுக்கு 10 ஓவர் வீசப்படும். நல்ல பந்து வீச்சாளர்களின் ஓவர்கள் முதலே  முடிக்கப்பட்டதால் இறுதியில் வந்த எதிர் மட்டை அடியாளார்கள் ( டச் தலைவர்) விளாசி தள்ளி வெற்றியை தனதாக்கி கொண்டார் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை: பாகிஸ்தானை பிழிந்தெடுத்த வார்னர், மார்ஷ் - 368 ரன்கள் இலக்கு

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் இருவரும் அதிரடியாக சதம் அடித்து, வலுவான ஸ்கோரை நோக்கி ஆஸ்திரேலிய அணியை நகர்த்தியுள்ளனர்.

வார்னர், மார்ஷ் அதிரடியைச் சமாளிக்க முடியாமல், இருவரின் பேட்டிங்கிற்கும் கடிவாளம் போட முடியாமல், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துக்கொண்டே பந்துவீசினார்கள் என்றால் அது மிகையல்ல.

அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 39 பந்துகளில் அரைச்சதத்தையும், 85 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். அதேபோன்று மார்ஷ் 40 பந்துகளில் அரைச்சதத்தையும், 100 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்து பாகிஸ்தானை பிழிந்தெடுத்துவிட்டனர்.

பாபர் ஆசம் இப்படி முடிவெடுக்கலாமா?

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என வர்ணிக்கப்படுவது உண்டு.

வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் என்னதான் உயிரைக் கொடுத்து பந்துவீசினாலும், பந்து ஸ்விங் ஆகாமல், நேராக பேட்டுக்கே வரும். பேட்டர்களுக்கு அடித்து ஆடுவதற்கு சிரமமில்லாத ஆடுகளம் பெங்களூரு சின்னசாமி மைதானம்.

இப்படிப்பட்ட ஆடுகளத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் டாஸ் வென்று ஏன் முதலில் பேட் செய்யாமல், பந்துவீச்சைத் தேர்வு செய்தார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. முதலில் பேட் செய்யாமல் சேஸிங் செய்யலாம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் எடுத்த முடிவு தற்கொலைக்குச் சமமானது.

 

சேஸிங் சாத்தியமா?

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதுவரை உலகக்கோப்பைப் போட்டிகளில் சேஸிங்கில் பாகிஸ்தான் எப்படி செயல்பட்டுள்ளது என்பதைத் தெரியாமல், பேட்டர்கள் கடைசி நேரத்தில் நெருக்கடியைத் தாங்கிக்கொண்டு பேட் செய்வார்களா எனத் தெரியாமல் சேஸிங் செய்ய முடிவெடுத்தது மிகப்பெரிய தவறு என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சைச் சமாளித்து, பாகிஸ்தான் அணியால் 368 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்துவிட முடியுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது.

முதலில் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய அழைத்ததே, இதுபோன்ற ஆடுகளத்தில் வெற்றியைத் தட்டில் வைத்து பாகிஸ்தான் தாரை வார்த்ததைப் போன்றது.

பேட்டிங் பயிற்சி

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், மார்ஷ் இருவரும் ஃபார்மின்றி தவித்து வந்தனர். பெரிதாக எந்தப் போட்டியிலும் ஸ்கோர் செய்ய முடியாமல் தடுமாறினர். இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் பல்லைக் காட்டியது.

பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணியினர் ஃபார்மை தொலைத்துவிட்டனர் என்ற விமர்சனத்துக்கு வார்னர், மார்ஷ் இருவரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

அவர்கள் பதிலடி கொடுத்தனர் என்பதைவிட, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் பேட்டிங் பயிற்சி அளித்தனர் என்றுதான் கூற வேண்டும்.

வார்னரும், மார்ஷும் தொடக்கத்தில் இருந்தே ஓவருக்கு பவுண்டர், சிக்ஸரை விளாசித் தள்ளினர். ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் தொடக்கத்தில் இருந்தே ராக்கெட் வேகத்தில் புறப்பட்டது. பவர்ப்ளே ஓவரில் 83 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தது.

 

வார்னருக்கு கேட்ச் வாய்ப்பு “மிஸ்ஸிங்”

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

டேவிட் வார்னர் 10 ரன்கள் சேர்த்திருந்தபோது, அஃப்ரிடி பந்துவீச்சில் அடித்த ஷாட்டை உசாமா மிர் கேட்ச் பிடிக்காமல் கோட்டைவிட்டார்.

வார்னர் போன்ற ஆபத்தான பேட்டர்களுக்கு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டால் என்ன ஆகும் என்பதை பாகிஸ்தான் அணி பின்னர் உணர்ந்தது.

ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்

கிரிக்கெட் உலகில் அதிவேக வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சை மார்ஷ் உருட்டி எடுத்துவிட்டார்.

ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் ஓவரிலேயே 24 ரன்களை குவித்து பிழிந்துவிட்டார். 4 ஓவர்களை வீசிய ராஃப் 59 ரன்களை வாரி வழங்கினார். ஓவருக்கு 15 ரன்ரேட் என்பது கொடுமை.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் யார் பந்து வீசினாலும் மார்ஷ், வார்னர் இருவரும் பவுண்டரி, சிக்ஸர்களாக துவம்சம் செய்தனர்.

ஆஸ்திரேலிய அணி 12.3 ஓவர்களில் 100 ரன்களையும், 20.2 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 29.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை எட்டியது.

 

பாகிஸ்தானுக்கு வார்னர் கொடுத்த தண்டனை

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடியாக பேட் செய்த வார்னர் 85 பந்துகளில் தனது 18வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக வார்னர் தொடர்ச்சியாக அடிக்கும் 4வது சதம் இது. வார்னருக்கு 10 ரன்னில் கேட்ச் பிடிக்கத் தவறியதற்காக பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுத்ததைப் போன்று இது இருந்தது.

வரலாற்றுத் தொடக்கம்

மார்ஷ், வார்னர் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்தனர்.

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் அதிகபட்சம் 2011 உலகக்கோப்பையில் கனடா அணிக்கு எதிராகச் சேர்த்த 183 ரன்கள்தான். இதை இருவரும் முறியடித்து புதிய வரலாறு படைத்தனர்.

 

மார்ஷ் பிறந்தநாள் பரிசளித்த பாகிஸ்தான்

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மார்ஷுக்கு இன்று 32வது பிறந்தநாள். தனது பிறந்தநாளில் மார்ஷ் மறக்க முடியாத போட்டியாக மாற்றி அமைத்து தனது 2வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.

மார்ஷ் 10 ரன்களில் இருந்தபோது, கிடைத்த கேட்ச் வாய்ப்பை உஸ்மா மிர் தவறவிட்டார். இரு முக்கிய கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டதற்கு இரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் சதம் அடிக்க வைத்துப் பெரிய விலை கொடுத்தனர்.

அதிலும் பிறந்தநாளான இன்று மார்ஷுக்கு பரிசாக ஒரு கேட்ச் வாய்ப்பையும் பாகிஸ்தான் வீரர் தவறவிட்டு சதம் அடிக்க உதவினார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். அஃப்ரிடி வீசிய 34வது ஓவரில் உசாமா மிர்ரிடம் கேட்ச் கொடுத்து 121 ரன்னில் மார்ஷ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 சிக்ஸர், 10 பவுண்டரி அடங்கும்.

 

விக்கெட் சரிவு

வார்னர், மார்ஷ் அதிரடி சதம்: பாகிஸ்தானை பிழியும் ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்து வந்த மேக்ஸ்வெல் வந்த வேகத்திலேயே மிட்ஆன் திசையில் பாபர் ஆசமிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் நிலைக்கவில்லை. 7 ரன்கள் சேர்த்த ஸ்மித், உசாமி மிர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

விக்கெட் இழப்பின்றி 259 ரன்கள் வரை பயணித்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 25 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

டேவிட் வார்னர் 124 பந்துகளில் 163 ரன்கள் அடித்து பிறகு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இவரின் கணக்கில் 9 சிக்ஸர், 14 பவுண்டரிகள் அடங்கும்.

மார்ஷ், வார்னர் இருவரும் சேர்ந்து இதுவரை 18 சிக்ஸர்கள் அதாவது 102 ரன்களையும், 24 பவுண்டரிகள் அதாவது 96 ரன்களையும் என மொத்தம் 198 ரன்களை பவுண்டரி, சிக்ஸர் வாயிலாகவே சேர்த்தனர்.

தற்போது 368 என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்யவுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/ckv01wg94q7o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை: பாகிஸ்தானை வென்றாலும் பட்டவர்த்தமான ஆஸ்திரேலியா அணியின் பலவீனம்

பாகிஸ்தானை வென்றாலும் ஆஸ்திரேலிய அணியை ஆட்டிப்படைக்கும் கவலைகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் வைத்திருந்த ரன்ரேட் கடைசி வரை சென்றிருந்தால் இதைவிட மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம்.

2 மணி நேரங்களுக்கு முன்னர்

பெங்களுரூவில் நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் வைத்திருந்த ரன்ரேட் கடைசிவரை சென்றிருந்தால் இதைவிட மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கலாம், பெரிய ஸ்கோரை அடித்திருக்கலாம்.

அப்படியிருக்கும்போது 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு இது முழுமையான வெற்றியா என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெங்களூரு மைதானத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 4 ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. ஐபிஎல் டி20 தொடரில் மட்டுமே பெரும்பாலான ஆட்டங்கள் நடக்கின்றன. பெங்களூரு மைதானம் இயல்பாகவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது என்பதால் டேவிட் வார்னர், மிஷெல் மார்ஷ் இருவரும் சதம் அடித்தனர்.

 

வார்னர், மார்ஷ் சாதனைகள்

ஆஸ்திரேலியா அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டேவிட் வார்னர், மிஷெல் மார்ஷ் ஜோடி நேற்றைய ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்தனர்.

டேவிட் வார்னர் 163 ரன்களையும், மார்ஷ் 123 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு மிகப்பெரிய காரணியாக அமைந்தனர். ஆனால், இருவரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை மற்ற பேட்டர்கள் அதாவது நடுவரிசை மற்றும் கீழ் வரிசை பேட்டர்கள் பயன்படுத்தினார்களா என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

டேவிட் வார்னர், மிஷெல் மார்ஷ் ஜோடி நேற்றைய ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளைச் செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுதான் முதல்முறை. இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 1992இல் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பிரையன் லாரா, ஹெயின்ஸ் ஜோடி 172 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று ஆஸ்திரேலிய அணி சேர்த்த 367 ரன்கள்தான் 2வது அதிபட்சமாகும். இதற்கு முன் பாகிஸ்தானுக்கு எதிராக 2017ஆம் ஆண்டு அடிலெய்டில் 369 ரன்கள் சேர்த்திருந்தது ஆஸ்திரேலிய அணி.

அது மட்டுமல்லாமல் டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4வது முறையாக சதம் அடித்துள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக வார்னர் அடித்த 2வது சதம் இது.

அது மட்டுமல்லாமல் ஒருநாள் உலகக்கோப்பையில் வார்னர் 3வது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். வேறு எந்த நாட்டு அணி வீரரும் 3 முறை 150 ரன்களை சேர்க்கவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மொத்தம் 19 சிக்ஸர்களை விளாசி ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற பெருமையைப் பெற்றது. இதில் வார்னர், மார்ஷ் மட்டுமே 18 சிக்ஸர்களை விளாசியுள்ளனர். தொடக்க வீரர்கள் இருவரும் அதிக சிக்ஸர்கள் அடித்தது இதுதான் முதல்முறை.

ஆஸ்திரேலியா அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

நடுவரிசை பேட்டர்கள் ஏமாற்றம்

ஆஸ்திரேலியா அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இதுவரை ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைப் போட்டிகளில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் முழுவதும் டேவிட் வார்னர், மார்ஷ் இருவரைச் சுற்றித்தான் இருந்தது. ஆஸ்திரேலிய அணியில் இருந்த மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஷ், ஸ்மித், லாபுஷேன் ஆகிய நடுவரிசை பேட்டர்கள் எந்தவிதமான குறிப்பிட்ட பங்களிப்பையும் செய்யாமல் ஏமாற்றம் அளித்தனர்.

இதுவரை ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைப் போட்டிகளில் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில் மேக்ஸ்வெல் இதுவரை ஒரு அரைசதம்கூட அடிக்கவில்லை, லாபுஷேன், ஸ்டாய்னிஷ், ஸ்மித், இங்கிலிஸ் ஆகியோரும் எந்தவிதமான குறிப்பிட்ட பங்களிப்பையும் அளிக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் இவர்களை நம்பித்தான் ஒவ்வொரு போட்டியிலும் நகர்ந்து வருகிறது. ஆனால், இதுவரை இந்த 4 பேட்டர்களும் பெரிதாக எந்தப் பங்களிப்பும் செய்தாததால்தான் ஆஸ்திரேலிய அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்றது.

 

7 விக்கெட்டுக்கு 58 ரன்கள்தான்...

ஆஸ்திரேலியா அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய அணி கடைசி 7 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவின் நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டிங் பலவீனம் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

வார்னர், மார்ஷ் இருவரும் சேர்ந்து 284 ரன்கள் ஸ்கோர் செய்தனர், உதிரிகள் 25 ரன்கள். இதைத் தவிர்த்துவிட்டுப் பாரத்தால் மற்ற பேட்டர்களின் பங்களிப்பு வெறும் 58 ரன்கள்தான். அதாவது ஆஸ்திரேலிய அணி கடைசி 7 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் மட்டுமே சேர்த்தது என்று அர்த்தம் கொள்ளலாம். அதிலும் கடைசி 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெறும் 29 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்டர்கள் 18 சிக்ஸர்களை அடித்துவிட்டது சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், இன்னும் பேட்டர்கள் டி20 மனநிலையில் இருந்து வெளியே வரவில்லை என்பது தெரிகிறது.

ஒருநாள் போட்டிகள் என்றாலே 50 ஓவர்களை நிலைத்து ஆட வேண்டும், விக்கெட்டுகளுக்கு இடையே ரன்களை ஓடிச் சேர்க்க வேண்டும் என்ற எந்த அவதானிப்பும் ஆஸ்திரேலிய பேட்டர்களிடம் நேற்று இல்லை.

அதனால்தான் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் ஆஸ்திரேலிய அணி 152 டாட் பந்துகளை ரன் சேர்க்காமல் விட்டுள்ளது. அதாவது 50 ஓவர்களில் 25 ஓவர்களில் எந்த ரன்களும் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிக்ஸர், பவுண்டரியில் மட்டும் ரன்களை சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஆஸ்திரேலிய பேட்டர்களின் மனநிலை மிகவும் ஆபத்தானது.

 

ஓடி ரன் சேர்ப்பது அவசியம்

ஆஸ்திரேலியா அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி இதுபோன்று பலவீனமான நிலையில் உலகக்கோப்பையை இதுவரை சந்தித்ததே இல்லை என கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெங்களூரு போன்ற பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான மைதானத்தில் சிக்ஸர், பவுண்டரிகளை வெளுத்து ரன்களை சேர்த்தனர். ஆனால், பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விக்கெட்டுகளை ரொட்டேட் செய்து ரன்களை சேர்ப்பது அத்தியாவசிம்.

ஆனால், ஓடி ரன்களை சேர்ப்பதையே வார்னரும், மார்ஷும் நேற்று குறைத்துக் கொண்டனர், மற்ற பேட்டர்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை.

அதுமட்டுமல்லாமல் மார்ஷ், வார்னர் இருவரைத் தவிர மற்ற 7 பேட்டர்களின் பங்களிப்பு என்பது வெறும் 58 ரன்கள்தான் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

குறிப்பாக 5 முறை சாம்பியன் பட்டம்வென்ற ஆஸ்திரேலிய அணி இதுபோன்று பலவீனமான நிலையில் உலகக் கோப்பையை இதுவரை சந்தித்ததே இல்லை என கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

ஸ்மித், மேக்ஸ்வெல், லாபுஷேன் மீது பாயும் கேள்வி

ஆஸ்திரேலியா அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த 3 போட்டிகளாக வார்னர் தடுமாறினாலும், நேற்றை ஆட்டத்தில்தான் வார்னர் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடக் கூடிய லாபுஷேனை ஒருநாள் போட்டிகளுக்கு ஏன் எடுத்தார்கள் என்ற கேள்வியை இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்களும் எழுப்பத் தொடங்கிவிட்டன. கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் காரே போன்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்களை ஏன் பரிசீலிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

ஆல்ரவுண்டர் என்று சொல்லப்படும் மேக்ஸ்வெல் இதுவரை 4 போட்டிகளிலும் சேர்த்து 50 ரன்கள் கூட சேர்க்கவில்லை. மேக்ஸ்வெல் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக இருப்பதால் மட்டுமே தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். ஆல்ரவுண்டர் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ற வகையில் இதுவரை 4 போட்டிகளில் எதிலுமே மேக்ஸ்வெல் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை.

அனுபவம் மிக்க பேட்டராகவும், முன்னாள் கேப்டனாகவும் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தும் இந்த உலகக்கோப்பைத் தொடரில் மோசமாக பேட் செய்து வருகிறார். இதுவரை ஒரு அரைசதம்கூட ஸ்மித் அடிக்கவில்லை என்பது அவரது பேட்டிங் திறமை மீது எழும் மிகப்பெரிய சம்மட்டி அடி.

கடந்த 3 போட்டிகளாக வார்னர் தடுமாறினாலும், நேற்றைய ஆட்டத்தில்தான் வார்னர் பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். ஐபிஎல் தொடர் விளையாடிய அனுபவம், பெங்களூரு மைதானத்தைப் பற்றி வார்னரால் நன்கு அறிய முடிந்ததால், அவர் ஸ்கோர் செய்ய ஏதுவாக இருந்தது. ஷான் மார்ஷ் முதல் இரு போட்டிகளிலும் தடுமாறினாலும், இலங்கைக்கு எதிராக அரைசதம், பாகிஸ்தானுக்கு எதிராக சதம் கண்டு தன்னை நிலைப்படுத்தியுள்ளார்.

ஆனால், மற்ற பேட்டர்களான மேக்ஸ்வெல், ஸ்மித், லாபுஷேன், இங்கிலிஸ் நிலைமை 4 போட்டிகளிலும் நிலவிய அதே மோசமான பேட்டிங் தொடர்ந்து வருகிறது. உலகக்கோப்பை போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஒரு அணி குறிப்பிட்ட சில வீரர்களின் தோள்மீது மட்டும் அமர்ந்து பயணிப்பது பேரழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.

 

ஆஸ்திரேலியாவின் பரிதாபம்

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரி 23.83 என கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் நடுவரிசை மோசாக இருந்தாலும், கீழ் வரிசையில் கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஆடம் ஸம்பா, ஸ்டார்க் என ஆல்ரவுண்டர்கள், ஓரளவுக்கு விளையாடக்கூடிய பேட்டர்கள் யாரும் இல்லை என்பது கவலைக்குரிய அம்சம்.

இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள், கடைசி வரிசை வரை பேட்டர்களை கொண்டு வருவதற்காக கூடுதல் ஆல்ரவுண்டர்களை சேர்க்க முயன்று வரும்நிலையில் ஆஸ்திரேலிய அணி அதுகுறித்து எந்த மாற்றமும் செய்யாதது வியப்பாக இருக்கிறது.

கேமரூன் க்ரீன் தேவையின்றி பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார், லாபுஷேனுக்கு பதிலாக கேமரூன் கிரீனை களமிறக்கினால் கூடுதல் பந்துவீச்சாளரும், பேட்டரும் கிடைப்பார்.

இந்த ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரியிலும் ஆஸ்திரேலிய அணி மோசமான இடத்தில்தான் இருந்து வருகிறது. முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் நடுவரிசை பேட்டர்கள் 44.51 ரன்கள் சராசரி வைத்துள்ளனர்.

அடுத்ததாக பாகிஸ்தான் நடுவரிசை பேட்டர்கள் 40.26 சராசரியும், இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரி 38.61 ஆகவும் இருக்கிறது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் சராசரி 23.83 என கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

 

கடைசி இடத்தில் ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் அணி வீரர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐசிசி வழங்கிய புள்ளிவிவரங்கள்படி, தென் ஆப்பிரிக்க அணி ஒவருக்கு 6.62 ரன்களை அதிகபட்சமாகச் சேர்த்துள்ளது

இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவருக்கு சேர்க்கக்கூடிய ரன்களும் மோசமாகக் குறைந்துவிட்டது. அந்த அணியின் பேட்டிங் மோசமானதே இதற்கு முக்கியக் காரணம்.

ஐசிசி வழங்கிய புள்ளிவிவரங்கள்படி, தென் ஆப்பிரிக்க அணி ஒவருக்கு 6.62 ரன்களை அதிகபட்சமாகச் சேர்த்துள்ளது. அடுத்ததாக, நியூசிலாந்து ஓவருக்கு 6.60, மூன்றாவதாக இலங்கை அணி ஓவருக்கு 6.35 ரன்கள், நான்காவதாக இந்திய அணி ஓவருக்கு 6.23 ரன்கள் எனச் சேர்த்துள்ளன.

ஆனால், ஆப்கானிஸ்தான்(5.19) நெதர்லாந்து(5.15), வங்கதேசம்(4.73) ஆகிய அணிகளுக்கும் மோசமாக ஆஸ்திரேலிய அணி ஓவருக்கு 4.70 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. அதாவது, ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி சேர்க்கிறது.

வார்னர், மார்ஷ் இருவரும் சதம் அடித்துவிட்ட காரணத்தால் மட்டும் ஆஸ்திரேலிய பேட்டிங் பலம் பொருந்தியதாக, வலிமையாக மாறிவிட்டதாக அர்த்தம் கொண்டால், இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் பொய்யாகிவிடும்.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஷ், வார்னர் அடுத்துவரும் போட்டிகளில் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் அந்த அணியின் உண்மையான பேட்டிங் பலம் என்னவென்று அதன் பிறகு தெரியவரும்.

 

நடுவரிசை கவலைக்கிடம்

பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் பல வீரர்கள் அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் நிச்சயமாக விளையாட மாட்டார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஆல்ரவுண்டருமான பிரன்டென் ஜூலியன் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “1999ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரிய பேட்டர்கள் இன்னும் ஃபார்முக்கு வராதது அந்த அணிக்குப் பின்னடைவுதான். அரையிறுதிக்குள் செல்ல வேண்டுமென்றால், இரு வீரர்கள் மட்டுமே பங்களிப்பு செய்தால் போதாது. முக்கிய வீரர்கள் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பங்களிக்க வேண்டும்.

இப்போது ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் பல வீரர்கள் அடுத்த உலகக்கோப்பைத் தொடரில் நிச்சயமாக விளையாட மாட்டார்கள். அப்படி இருக்கும்போது தங்களின் ஆகச் சிறந்த பங்களிப்பை இப்போது வழங்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங் ஓராண்டுக்கும் மேலாக மோசமாக இருந்து வருகிறது.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மற்றும் இந்தியத் தொடர்கள் அனைத்திலும், வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகிய தொடக்க வீரர்கள்தான் பெரும்பகுதி பங்களிப்பு செய்துள்ளனர் என்பதையும் மறக்க முடியாது.

நடுவரிசை, கீழ்வரிசை பேட்டிங் நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலிய அணியில் நடுவரிசை பேட்டர் ஒருவர் மட்டுமே சதம் அடித்துள்ளது என்பது மிகவும் கவலைக்குரியது.

நடுவரிசை பேட்டிங் குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. நடுவரிசை பேட்டர்களின் சராசரி 23 ரன்கள் என்பது உலகக்கோப்பை விளையாடும் நாடுகளிலேயே மோசமானது. நடுவரிசை பேட்டர்கள் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதுதான் அரையிறுதிக்குக் கொண்டு செல்லும்,” என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cz488egqqv3o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சதீர சமரவிக்ரம அபார துடுப்பாட்டம்; இலங்கை முதல் வெற்றியை சுவைத்தது

21 OCT, 2023 | 07:23 PM
image

(லக்னோவிலிருந்து நெவில் அன்தனி)

நெதர்லாந்துக்கு எதிராக லக்னோ, பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) நடைபெற்ற உலகக் கிண்ண 19ஆவது லீக் போட்டியில் இலங்கை 5 விக்கெட்களால் தனது முதலாவது வெற்றியை ஈட்டியது.

மிகவும் நெருக்கடியான நிலைமையில் சதீர சமரவிக்ர  திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்ததுடன் 3 இணைப்பாட்டங்களில் பங்காற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

அத்துடன் டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றிக்கு அடிகோலியிருந்தன.

தென் ஆபிரிக்கா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் தொடர்ச்சியாக 3 தோல்விகளைத் தழுவிய இலங்கைக்கு இந்த வெற்றி மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

மேலும் உலகக் கிண்ணப் போட்டியில் நெதர்லாந்தை சந்தித்த முதல் சந்தர்ப்பத்திலேயே வெற்றியை இலங்கை தனதாக்கிக்கொண்டது.

அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை சந்தித்த 6 சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றியைத் தனதாக்கிக்கொண்டுள்ளது. எனினும் இன்றைய உலகக் கிண்ண வெற்றி இலங்கைக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது.

நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

குசல் பெரேரா (5), அணித் தலைவர் குசல் மெண்டிஸ் (11) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தமை இலங்கைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

எனினும் பெத்தும் நிஸ்ஸன்க (54), சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிய அளவில் தெம்பூட்டினர்.

பெத்தும் நிஸ்ஸன்க இப் போட்டிவரை தொடர்ச்சியாக 3 அரைச் சதங்களைப் பெற்ற போதிலும் அவற்றை பெரிய எண்ணிக்கையாக அவர் ஆக்கத் தவறுவது அவரிடம் ஏதோ குறை இருப்பதை உணர்த்துகிறது. அவர் மூன்று இன்னிங்ஸ்களிலும் கவனக்குறைவான அடிகளினாலேயே ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சதீர சமரவிக்ரமவும் சரித் அசலன்கவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஒரளவு ஆறுதலைக் கொடுத்தனர்.

சரித் அசலன்க 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அநாவசியமாக பந்தை சுழற்றி அடிக்க முயற்சித்து போல்ட் ஆனார்.

இந் நிலையில் ஜோடி சேர்ந்த சதீர சமரவிக்ரமவும் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு வெற்றியை அண்மிக்க உதவினர்.

சிக்ஸ் மூலம் வெற்றி ஓட்டங்களைப் பெற முயற்சித்த தனஞ்சய டி சில்வா 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

எனினும் சதீர சமரவிக்ரம, துஷான் ஹேமன்த ஆகிய இருவரும் இலங்கையின் வெற்றியை உறுதிசெய்ததுடன் சதீர சமரவிக்ரம 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

107 பந்துகளை எதிர்கொண்ட சமரவிக்ரம 7 பவுண்டறிகளை அடித்தார்.

துஷன்த ஹேமன்த ஆட்டம் இழக்காமல் 4 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஆரியன் டட் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது.

 

கசுன் ராஜித்த, டில்ஷான் மதுஷான் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி நெதர்லாந்தின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தனர்.

22ஆவது ஓவரில் நெதர்லாந்தின் 6ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டபோது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 96 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச், லோகன் வென் பீக் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் உலகக் கிண்ணத்திற்கான சாதனைமிகு 130 ஓட்டங்களைப் பகிர்ந்து நெதர்லாந்தை பலப்படுத்தினர்.

ரவிந்த்ர ஜடேஜா, தோனி ஆகிய இருவரும் நியூஸிலாந்துக்கு எதிராக மென்செஸ்டரில் 2019இல் பகிர்ந்த 116 ஓட்டங்களே உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இதற்கு முன்னர் 7ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச் 70 ஓட்டங்களையும் லோகன் வென் பீக் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

5 அபராத ஓட்டங்கள் (களத்தில் இருந்த ஹெல்மெட்டில் பந்து பட்டதால்) உட்பட 33 உதிரிகள் நெதர்லாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தது.

நெதர்லாந்தின் முன்வரிசையில் கொலின் அக்கமன் 29 ஓட்டங்களையும் மெக்ஸ் ஓ'டவ்ட் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கசுன் ராஜித்த 50ட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/167461

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை: தென் ஆப்ரிக்கா வெற்றியை உறுதி செய்த அந்த '10 ஓவர்கள்' - இங்கிலாந்துக்கு சிக்கல்

தென் ஆப்ரிக்கா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

21 அக்டோபர் 2023

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க அணி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், எதிரணியான நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்க வீரர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் இங்கிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்திவிட்டார்கள்.

தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து பலப்பரீட்சை

மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின் 20-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த தோல்வி இருந்து மீள 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வதம் செய்தது. எனினும், முந்தைய ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டிருந்தது.

அதேநேரத்தில், முதலிரு ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எளிதில் வீழ்த்தி கம்பீரமாக வலம் வந்த தென் ஆப்ரிக்கா அணி கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியுற்றது. இதனால், இரு அணிகளுமே வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கின.

இங்கிலாந்து அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்

தென் ஆப்ரிக்க அணியில் உடல்நலக்குறைவு காரணமாக கேப்டன் பவுமா விளையாடததால், மார்க்ரம் கேப்டன் பொறுப்பை கவனித்தார். இங்கிலாந்து அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம் பெற்றார்.

கடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வெல்ல பேருதவி புரிந்த அவர், பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் கைகொடுத்து, இங்கிலாந்து அணிக்கு ஆபாத்பாந்தவனாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சாம் கரண் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக டேவிட் வில்லி மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

தென் ஆப்ரிக்கா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹென்ரிக்ஸ் - வான் டெர் டுஸென் ஜோடி அபாரம்

பேட்டிங்கிற்கு சாதகமான மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி களமிறங்கினர்.

முதலிரு போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்து கலக்கிய குயின்டன் டி காக் முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரிலே ரீஸ் டாப்லே பந்தில் இங்கிலாந்து கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரிடம் அவர் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் களத்தில் இருந்த ஹென்ட்ரிக்ஸ் உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார்.

இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். ஹென்ரிக்ஸ் தான் எதிர்கொண்ட 13-வது ஓவரில்தான் ரன் கணக்கையே தொடங்கினார். களத்தில் நிலைத்துவிட்ட பிறகும் இருவருமே அதிரடி காட்டி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.

தென் ஆப்ரிக்கா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷித் வீசிய கூக்ளியில் வீழ்ந்த ஹென்ரிக்ஸ்

வான்டெர் டுசென் 61 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 60 ரன்கள் சேர்த்த நிலையில் அடில் ரஷித் பந்து வீச்சில் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 121 ரன்கள் குவித்தது.

சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவுட்டானார். 75 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்தார். அடில் ரஷித் வீசிய கூக்ளியை சரியாக கணிக்கத் தவறிய ஹென்ட்ரிக்ஸ் தனது ஸ்டம்புகளை சிதறவிட்டார்.

அடுத்து வந்த கேப்டன் மார்க் ரம் 4 பவுண்டரிகளை விரட்டி 42 ரன் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் டேவிட் மில்லர் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசெனுடன் மார்கோ ஜான்சன் ஜோடி சேர்ந்தார். 40 ஓவர்கள் வரை அதிரடி கலந்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோடி அதற்கு பிறகு மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தென் ஆப்ரிக்கா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி 10 ஓவர்களில் 143 ரன்கள்

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இருவருமே மாறிமாறி சிக்ஸர் மழை பொழிந்தனர். ஹென்ரிச் கிளாசென் 61 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். 67 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் கிளாசென் 109 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த ஜெரால்ட் கோட்ஸி 3 ரன்னுக்கு அவுட் ஆனார். கடைசி வரை களத்தில் இருந்த மார்கோ ஜான்சன் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்திருந்தார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்க அணி 399 ரன்கள் சேர்த்தது.

ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பிறகு கடைசி 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 143 ரன்கள் குவித்துள்ளது.

தென் ஆப்ரிக்கா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்துக்கு தொடக்கமே தடுமாற்றம்

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் மலான் 6 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோ ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 24 ரன்களுக்குள் முதல் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி அதன்பிறகு சரிவில் இருந்து மீளவே இல்லை. அந்த அணி வீரர்கள் வருவதும், ஆட்டமிழந்து வெளியேறுவதுமாகவே இருந்தனர்.

ஆபாத்பாந்தவனாக கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹாரி புரூக் 17 ரன்களும், கேப்டன் பட்லர் 15 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.

அடுத்தபடியாக டேவிட் வில்லி 12 ரன்களிலும், ஆடல் ரஷித் 10 ரன்களிலும் அவுட்டாயினர். இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டும் போதே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டிருந்தது.

தென் ஆப்ரிக்கா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசிக் கட்டத்தில் 9-வது விக்கெட் ஜோடி போராட்டம்

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக 9-வது விக்கெட்டுக்கு இணைந்த அட்கின்சன் - மார்க் வுட் ஜோடி கடைசிகட்டத்தில் போராடியது. இருவரும் வந்தவரை லாபம் என்கிற ரீதியில் அதிரடியில் இறங்கியதால், இங்கிலாந்து அணி சற்று நிமிர்ந்தது. இதில குறிப்பாக ரபாடா வீசிய 21 ஓவரின் முதல் பந்தில் மார்க் வுட் 2 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 பந்துகளை சந்தித்த அட்கின்சன் 4 பவுண்டரிகள் விளாசி அசத்தினார். இதனால் இஙிலாந்து அணியின் ரன் வேகம் அதிகரித்தது.

இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில், அட்கின்சன் 21 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு காயம் காரணமாக ரிசி டோப்ளி களமிறங்காததால், 9-வது விக்கெட் வீழந்தவுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டிருந்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி 229 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

தென் ஆப்ரிக்கா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தென் ஆப்ரிக்கா சாதனை துளிகள்

  • இந்த போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலமாக தென் ஆப்ரிக்கா தொடர்ந்து 6ஆவது முறையாக முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
  • இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா குவித்த 399 ரன்களே, இங்கிலாந்திற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் எடுத்திருந்தது.
  • கிளாசென் 61 பந்துகளில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் சதம் விளாசினார். இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஹெண்ட்ரிச் கிளாசென் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

புள்ளிப் பட்டியலில் மாற்றம் என்ன?

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூலம் புள்ளி பட்டியலில் தென் ஆப்ரிக்க அணியின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தலா 4 வெற்றிகளுடன் முதலிரு இடங்களில் நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் தொடர தென் ஆப்ரிக்க அணி 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள், ஒரே ஒரு வெற்றியுடன் 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட்டும் மிக மோசமாக இருப்பதால் நடப்புச் சாம்பியனான அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c6p44v21zzqo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை: இந்தியாவை துரத்தும் 20 ஆண்டுக்கால கொடுங்கனவு - நியூசிலாந்தை இன்று வீழ்த்துமா?

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நடப்பு உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்ஷாலாவில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.

இந்த உலகக்கோப்பை தொடங்கியது முதலே தொடர்ச்சியாக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இரு அணிகளும் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

நடப்புத் தொடரில் இரு அணிகளுமே இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை என்பதால் இன்றைய போட்டியில் எந்த அணி தோல்வியுற்றாலும் அது அந்த அணிக்கு முதல் தோல்வியாக இருக்கும்.

முதுகெலும்பாகத் திகழும் ரோஹித் - கோலி

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் என அனைவரும் சிறப்பான ஃபார்மில் அசத்தி வருகின்றன.

இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சொல்லப் போனால், இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாகவே அவர்கள் இருவரும் திகழ்கின்றனர். பேட்டிங்கில் வலுவான அணியாக இந்தியா திகழ்வதால் கேப்டன் ரோகித் தொடக்கத்தில் களமிறங்கி அச்சமின்றி அடித்தாட முடிகிறது.

 
இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

நான்கு போட்டிகளில் ரோஹித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 265 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 137.30. நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ரோஹித் இருக்கிறார்.

அதுபோலவே, விராட் கோலி 4 போட்டிகளில் ஒரு சதம் 2 அரைசதங்களுடன் 259 ரன்களை சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 90.24. நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கோலி இருக்கிறார்.

வலு சேர்க்கும் கே.எல்.ராகுல் எழுச்சி

கடந்த ஓராண்டில் தொடக்க இடத்தை இழந்த ராகுல், மிடில் ஆர்டரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அந்த விஷயத்தில் அவர் யாரையும் ஏமாற்றவில்லை.

இந்த உலகக்கோப்பை போட்டியின் மூன்று இன்னிங்ஸ்களில் ராகுல் 150 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது சராசரியை இன்னும் கணக்கிட முடியாது. ஏனென்றால் இதுவரை அவர் ஒருமுறைகூட அவுட் ஆகவில்லை.

சில காலம் முன்பு வரை அவர் இந்திய அணியில் விளையாடுவாரா இல்லையா என்று முடிவு செய்யப்படாத நிலையில் தற்போது இந்திய மிடில் ஆர்டரின் முதுகெலும்பாக மாறிவிட்டார்.

இந்திய அணிக்கு இதுவொரு நல்ல செய்தி. ஏனென்றால் ரோஹித், ஷுப்மான், கோலி ஆகியோரின் முதல் கனமான தொடக்க வரிசைக்குப் பிறகு, இந்திய பேட்டிங் ஆர்டர் சற்று பலவீனமாக இருந்தது. அதை இப்போது ராகுல் சிறப்பாகச் சரிசெய்துள்ளார்.

 
இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கே.எல்.ராகுல் பேட்டிங் செய்யும்போது மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இதுவரை நான்கு போட்டிகளில் 5 கேட்ச்களை பிடித்துள்ளார். இதில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு அற்புதமான கேட்சுகளும் அடங்கும்.

வங்கதேச வீரர் மிராஜின் கையுறைகளைத் தொட்டு ராகுலின் இடது பக்கம் பந்து சென்றபோது, அது வெகு தொலைவில் இருந்தது. ஆனால் ராகுல் ஓர் அற்புதமான டைவ் செய்து அதை கேட்ச் பிடித்தார். இதைப் பார்த்த வர்ணனையாளர், "என்ன அற்புதமான கேட்ச்!" என்று சிலாகித்தார்.

இதைத் தொடர்ந்து, நசும் அகமதுவின் கேட்சை எடுத்த ராகுல், இந்த உலகக்கோப்பைப் போட்டியில் எல்லோரையும்விட அவரது கீப்பிங் எந்த விதத்திலும் குறைவாக இல்லை என்று கூறினார்.

மேலும் ராகுலின் கீப்பிங் இந்திய பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் தருகிறது என்பதும் போனஸாக அமைந்துள்ளது.

 

அஸ்வின் இடம் பெறுவாரா?

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

மறுபக்கம் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பேட்டர்களுக்கு கடும சவாலாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளதால் அவரால் இப்போட்டியில் விளையாட முடியாது என்பது இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதேநேரம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரும் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருடைய இடமும் சிக்கலாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் முகமது ஷமி அல்லது ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் சூர்யகுமார் யாதவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 
இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசுர பலத்துடன் நியூசிலாந்து

டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டிலிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

அந்த அணி பேட்டிங்கில் டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலீப்ஸ், டெரில் மிட்செல், டாம் லேதம் என மிக நீண்ட வரிசையைக் கொண்டுள்ளது.

டெவான் கான்வே அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் ரிஸ்வான், ரோஹித், கோலிக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் நியூசிலாந்து அணி பலம் மிக்கதாக வலம் வருகிறது.

 
இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

அத்துடன், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி போன்ற திறமையான சுழற்பந்துவீச்சாளர்களும் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் இந்திய ஆடுகளங்களில் நல்ல அனுபவம் பெற்ற சாண்ட்னர் சுழற்பந்துவீச்சில் கலக்குகிறார்.

தற்போதைய நிலையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் வரிசையில் அவரே முதலிடம் வகிக்கிறார். இதுவரை ஆடியுள்ள நான்கு போட்டிகளில் அவர் 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக விளையாட முடியாதது அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆனாலும், அதையும் சமாளித்து நியூசிலாந்து அணி நடப்புத் தொடரில் வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வருகிறது.

 

தரம்ஷாலா ஆடுகளம் எப்படி?

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரம்ஷாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கு குளிரான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்பதால் ஸ்விங் பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே சூழ்நிலைகளை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினால் எளிதாக பெரிய ரன்களையும் குவிக்கலாம்.

அதே நேரம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நடப்பு உலகக்கோப்பையில் இரு அணிகளுமே இதுவரை தோல்வி எதையும் சந்திக்காமல் வலம் வருவதால், இன்றைய போட்டியில் தோற்கும் அணிக்கு அது முதல் தோல்வியாக இருக்கும். அதேநேரத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெறும்.

 

இரு அணிகளும் இதுவரை

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • நேருக்கு நேர்
  • மோதிய போட்டிகள் – 116
  • இந்தியா - 58
  • நியூசிலாந்து - 50
  • முடிவில்லை - 08
  • ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து அணி 9 முறை நேருக்கு நேர் மோதிய்ஹள்ளன. அதில் நியூசிலாந்து அணி 5 முறையும், இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.
  • கடந்த 1987ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துடன் மோதிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியிருந்தது.
  • 2007, 2011, 2015 ஆகிய உலகக்கோப்பைகளில் சந்தித்துக் கொள்ளாத இரு அணிகளும் கடந்த உலகக்கோப்பையில் இருமுறை மோதிக்கொண்டன. லீக் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போக, அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியாவுக்கு கொடுங்கனவாகத் திகழும் நியூசிலாந்து

ஐ.சி.சி. தொடர்களைப் பொருத்தவரை 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியே வில்லனாகத் திகழ்ந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ஐ.சி.சி. போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக 9 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. அதுவும் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கிடைத்தது.

இருபது ஓவர் உலகக்கோப்பையில் 3 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு முறையும் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c8744mnx54ko

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடப்பு சம்பியன் இங்கிலாந்தை நையப்புடைத்த தென் ஆபிரிக்கா

22 OCT, 2023 | 05:55 AM
image

(லக்னோவிலிருந்து நெவில் அன்தனி)

மும்பை வான்கடே விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) நடைபெற்ற நடப்பு சம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண 20ஆவது லீக் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய தென் ஆபிரிக்கா 229 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அடைந்த மிகப் பெரிய தோல்வி இதுவாகும்.

ஹென்றிச் க்ளாசென் குவித்த அதிரடி சதம், மாக்கோ ஜென்சென் விளாசிய அதிரடி அரைச் சதம், ஒட்டுமொத்த கட்டுப்பாடான பந்துவீச்சு என்பன தென் ஆபிரிக்காவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 399 ஓட்டங்களைக் குவித்தது.

முதலாவது ஓவரில் குவின்டன் டி கொக் (4) ஆட்டம் இழந்தபோதிலும் அடுத்த நால்வரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை நையப்புடைத்து ஓட்டங்களை இலகுவாக குவித்தனர்.

ரீஸா ஹென்றிக்ஸ் 75 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களையும் ரெசி வென் டேர் டுசெல் 8 பவுண்டறிகளுடன் 60 ஓட்டங்களையும் பெற்றதுடன் 2ஆவது விக்கெட்டில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தபின்னர் பதில் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், ஹென்றிச் க்ளாசென் ஆகிய இருவரும் 69 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

மார்க்ராம் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

துடுப்பாட்டத்தில் அசத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் இந்தப் போட்டியில் 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். (243 - 5 விக்.)

இந் நிலையில் ஹென்றிச் க்ளாசென், மாக்கோ ஜென்சென் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 76 பந்துகளில் 151 ஓட்டங்களைப் பகிர்ந்து தென்  ஆபிரிக்காவை   பலமான நிலையில் இட்டனர்.

ஹென்றிச் க்ளாசென் 67 பந்துகளில் 12 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 109 ஓட்டங்களை விளாசினார்.

மாக்கோ ஜென்சென் 42 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 75 ஓட்டங்களைக் குவித்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ரீஸ் டொப்லே 88 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

400 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 22 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

வெற்றி இலக்கு பெரிதாக இருந்ததால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்து விக்கெட்களைத் தாரைவார்த்தனர்.

கடைநிலை வீரர்களான கஸ் அட்கின்சன், மார்க் வூட் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் இதனை விட மோசமான தோல்வியை இங்கிலாந்து தழுவியிருக்கும்.

கஸ் அட்கின்சன் 21 பந்துகளில் 7 பவுண்டறிகளுடன் 35 ஓட்டங்களையும் மார்க் வூட் 17 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

கடைசி துடுப்பாட்ட வீரர் ரீஸ் டொப்லே உபாதை காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை.

பந்துவீச்சில் ஜெரால்ட் கோட்ஸீ 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லுங்கி ங்கிடி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சென் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஹென்றிச் க்ளாசென்

https://www.virakesari.lk/article/167465

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம‌லை போல் இருந்த‌ இங்லாந் அணிக்கு என்ன‌ ஆச்சு

 

இல‌ங்கையின் இர‌ண்டு தோல்விக்கும் ப‌ந்து வீச்சு தான் கார‌ண‌ம்............

 

இந்தியா சிம்பிலா கோப்பைய‌ தூக்க‌ போகுது 😁🙈

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூசிலாந்து வெல்லவேண்டும் என விரும்பினேன். இந்தியா வெற்றி பெற்றால் கோழி 100 அடிக்க வேண்டும் என விரும்பினேன். இரண்டும் நடக்கவில்லை. 

இனி இங்கிலாந்து இந்தியாவை வெற்றி பெறவேண்டும் என எதிர்பார்ப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நியாயம் said:

கோழி 100 அடிக்க வேண்டும் என விரும்பினேன்

இந்தியா வென்றதுதானே! நூறு கோழி 🐔🐔🐔 அடித்து விருந்து வைக்கத்தான் வேண்டும்!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து ஆட்டத்திலாவது கோழி நூறு அடிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக்கோப்பை: 'சேஸிங் கிங்' கோலி சாதனைமேல் சாதனை படைத்தாலும் இப்படி செய்யலாமா?

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

22 அக்டோபர் 2023

2023 உலகக் கோப்பையில், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்தியா- நியூசிலாந்து இடையிலான லீக் போட்டி தரம்சாலாவில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே - வில் யங் ஜோடி களமிறங்கியது. இந்தியா சார்பில் வழக்கம் போல் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா - முகமது சிராஜ் ஆகியோர் தாக்குதலைத் தொடுத்தனர்.

ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசி முதல் ஓவரை மெய்டனாக வீசினார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேயால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.

நியூசிலாந்து அணி வீரர்கள் ரன் சேர்ப்பதை கட்டுப்படுத்தி தொடக்க விக்கெட்டுகளை சிறிது நேரத்திலேயே வீழ்த்தி அந்த அணிக்கு இருவரும் நெருக்கடி கொடுத்தனர்.

நியூசிலாந்து அணிக்காக நடப்புத் தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள டெவோன் கான்வே, நான்காவது ஓவரில் முகமது சிராஜ் பந்தில் ரன் ஏதும் எடுக்கா நிலையிலேயே ஆட்டமிழந்துவெளியேறினார். நியூசிலாந்து அணி 9 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

நியூசிலாந்து 273 ரன்களில் ஆட்டமிழந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கான்வே ரன் எடுக்காமலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

பும்ரா, சிராஜ் பந்துகளில் ரன் சேர்க்க நியூசிலாந்து வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், முதல் 4 ஓவர்களில் 19 பந்துகளில் நியூசிலாந்து அணி ரன் ஏதும் எடுக்கவில்லை.

பும்ராவும் சிராஜும் தொடர்ந்து மிகத் துல்லியமாக பந்துவீச, நியூசிலாந்து அணி முதல் 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.

எட்டாவது ஓவரை வீச வந்த முகமது ஷமி, தன் பங்கிற்கு தொடக்க வீரர் வில் யங்கை ஆட்டமிழக்கச் செய்தார். யங் 27 பந்துகளில் 17 ரன்களை எடுத்தார். 10 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

 
இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டேரல் மிட்செல் 130 ரன்களை எடுத்தார்.

ரச்சின் ரவீந்திரா கேட்சை தவறவிட்ட ஜடேஜா

11வது ஓவரில், ரச்சின் ரவீந்திரா ஷமியின் 'அருமையான' பந்தை பேக்வர்ட் பாயிண்டில் ஆட, பந்து நேராக அங்கு நின்றிருந்த இந்தியாவின் மிகச்சிறந்த பீல்டர் ரவீந்திர ஜடேஜாவின் கைகளுக்குச் சென்றது. ஆனால் அவரால் அதைப் பிடிக்க முடியவில்லை. ரச்சின் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்.

டேரல் மிட்செல் - ரவீந்திரா ஜோடி களத்தில் நன்றாக நிலைத்துவிட்ட பிறகு தங்களது ஆட்டத்தில் வேகத்தை படிப்படியாக அதிகரித்தனர். 21 ஓவரில்தான் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை கடந்தது.

8 வது ஓவரில் 2 வது விக்கெட்டை எடுத்த இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ரச்சின் ரவீந்திரா - மிட்செல் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிவிட்டனர்.

 
நியூசிலாந்து 273 ரன்களில் ஆட்டமிழந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஷமியின் அருமையான பந்தை ரச்சின் ரவீந்திரா சிறப்பாகக் கையாண்டார்.

ஆட்டத்தின் 23வது ஓவரில் ரச்சின் ரவீந்திரன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 6 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் அரைசதம் அடித்தார். 25-வது ஓவரில் இந்த ஜோடி சதம் அடித்தது.

நிதானமாக ஆடிய டேரல் மிட்செல் 27வது ஓவரில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். 60 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் அவர் இந்த ரன்களை சேர்த்தார்.

இந்திய பந்துவீச்சாளர்களை கலங்கடித்து, நியூசிலாந்து அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்ற ரச்சின் ரவீந்திரா - மிட்செல் ஜோடியை ஒருவழியாக முகமது ஷமி பிரித்தார். அவர் வீசிய ஆட்டத்தின் 34-வது ஓவரில், லாக் ஆனில் ஷுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். அவர், 87 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ரச்சின் ரவீந்திரா - மிட்செல் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. இதனால் நியூசிலாந்து அணி வலுவான நிலையை எட்டியது.

 
நியூசிலாந்து 273 ரன்களில் ஆட்டமிழந்தது

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகக்கோப்பையில் மிட்செல் முதல் சதம்

37வது ஓவரில் நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதமை எல்பிடபிள்யூ முறையில் குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார். குல்தீப் ஒருநாள் போட்டியில் மூன்றாவது முறையாக லதாமின் விக்கெட்டை வீழ்த்தினார். ஏழு பந்துகளை சந்தித்த அவர் 5 ரன்கள் எடுத்தார்.

மறுபுறம் தொடர்ந்து அபாரமாக ஆடிக் கொண்டிருந்த மிட்செல் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்த உலகக் கோப்பையில் டேரன் மிட்செல் தனது முதல் சதத்தை 41வது ஓவரில் அடித்தார். 42 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்ததால் அந்த அணி 300 ரன்களுக்கும் மேலாக குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

முகமது ஷமி அபாரம்

ஆனால், கடைசிக் கட்டத்தில் நியூசிலாந்து அணியால் எதிர்பார்க்கப்பட்டபடி ரன்களை குவிக்க முடியவில்லை. இந்திய வீரர்கள் சிறப்பான பந்துவீச்சால் அவர்களை கட்டிப் போட்டனர். குறிப்பாக முகமது ஷமி தனது துல்லியமான பந்துவீச்சால் நியூசிலாந்து வீரர்களை ஸ்டம்புகளை எகிறச் செய்தார்.

அவரது பந்துவீச்சில் சாண்ட்னர், ஹென்றி ஆகியோர் அடுத்தடுத்து கிளீன் போல்டாயினர். டெரில் மிட்செலையும் அவரே காலி செய்தார். மிட்செல் 127 பந்துகளில் 9 பவுண்டரிகள் 5 சிக்ர்களுடன் 130 ரன்களைக் குவித்தார்.

நியூசிலாந்து அணி சரியாக 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி

274 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. நல்ல பார்மில் இருந்த கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர்.

ரோகித் வாண வேடிக்கை காட்ட, சுப்மான் கில் பவுண்டரிகளை விளாசினார். இதனால், இந்திய அணியின் ரன் ரேட் ஓவருக்கு 6 ரன் என்ற விகிதத்திற்கு மேலேயே தொடர்ந்து இருந்தது.

எட்டாவது ஓவரில் ஹென்றி வீசிய பந்தில் பவுண்டரி அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் புதிய மைல்கல்லை சுப்மான் கில் தொட்டார். அதாவது, குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இருவரும் தொடர்ந்து அதிரடி காட்டியதால் இந்திய அணி 11 ஓவர்களிலேயே 71 ரன்னை தொட்டது. அப்போதுதான், இந்திய அணி முதல் விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா 40 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் வீசிய பந்தில் அவுட்டானார்.

இதையடுத்து, சேஸிங் கிங் என்று வர்ணிக்கப்படும் நட்சத்திர வீரர் விராட் கோலி ரசிகர்களின் கரகோஷங்களுக்கு இடையே களமிறங்கினார். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே மற்றொரு தொடக்க வீரர் சுப்மான் கில்லும் வீழ்ந்தார். பெர்குசன் வீசிய அடுத்த ஓவரில் அப்பர் கட் ஆடி தேர்ட் மேன் திசையில் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார். அவர் 31 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

பனிமூட்டத்தால் ஆட்டத்தில் பாதிப்பு - கோலி, ஸ்ரேயாஸ் அதிரடி

இதையடுத்து, கோலியுடன் ஸ்ரேயாஸ் இணைந்தார். இருவரும் நிலைத்து ஆடியதுடன் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். இதனால், 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. 16-வது ஓவரில் இந்திய அணி ஃ100 ரன்களை எட்டிய நிலையில் பனி மூட்டத்தால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

கோலி - ஸ்ரேயாஸ் ஆகிய இருவருமே துரிதமாக ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தியதால், இந்திய அணி 20 ஓவர்கலேயே121 ரன்களை கடந்துவிட்டது. முதல் 20 ஓவர்களில் இந்திய அணி 21 பவுண்டரிகளை விளாசியிருந்தது.

ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் அவுட் ஆனார். அவர் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்தபடியாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு கைகொடுத்த கே.எல்.ராகுல் களமிறங்கி கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சற்று நிதானம் காட்ட 25 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 140 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிக்கலின்றி முன்னேறிய இந்தியா

மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடிய கோலி - ராகுல் ஜோடி இந்திய அணியின் ரன் ரேட்டையும் தேவையான அளவுக்கும் மேல் தொடர்ந்து பராமரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தது. இதனால், இந்திய அணிக்கு சிக்கல் எழவே இல்லை. இந்திய அணி வெற்றியை நோக்கி சீராக முன்னேறிக் கொண்டிருந்த வேளையில் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

ராகுலுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களம் காண, மறுபுறம் விராட் கோலி அரைசதம் அடித்தார். 60 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் அவர் இந்த ரன்களை எட்டினார். முதல் 47 பந்துகளில் 28 ரன்களை மட்டுமே எடுத்த கோலி அடுத்த 13 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 4 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்வசமாக ரன் அவுட் ஆனார். ஆனால், கோலி களத்தில் இருந்ததால் இந்திய அணி நெருக்கடி எதையும் எதிர்கொள்ளவில்லை.

35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. அடுத்த 15 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 82 ரன்கள் தேவைப்பட்டன. களத்தில் கோலி - ரவீந்திர ஜடேஜா ஜோடி இருந்தது. 36-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ஜடேஜா அசத்தினார்.

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 71 ரன்களும் ஜடேஜா 17 ரனகளுடனும் களத்தில் நின்றனர்.

இருவரும் களத்தில் நிலைத்து அதேநேரத்தில், அதிரடியாகவும் விளையாடியதால் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடைசி 4 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 15 ரன்களே தேவைப்பட்டன. விராட் கோலி 82 மற்றும் ஜடேஜா 35 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இதனால், விராட் கோலி மீண்டும் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சதத்தை எட்ட முடியால் கோலி ஏமாற்றம்

விராட் கோலி 90 ரன்கள் கடந்த உடன் வெற்றிக்கான இலக்கு ஏழு ரன்கள் இருந்தது. அப்போது ஆட்டத்தின் 47வது ஓவரில் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அடித்தாட முற்படாமல் பந்தை தடுத்துவிட்டார். அந்த பந்தில் பவுண்டரியோ இல்லை சிங்கிளோ எடுத்திருந்தால் இந்தியாவின் வெற்றி இன்னும் விரைவில் கிடைத்திருக்கும். ஆனால் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக அவர் ரன்களை ஓடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தியாவின் வெற்றிக்கும் கோலியின் சதத்திற்கும் ஏழு ரன்கள் தான் இருந்தது. இதன் பிறகு 48வது ஓவர் தொடக்கத்தில் விராட் கோலி இரண்டு ரன்கள் அடித்தார். இரண்டாவது பந்து ரன் எதும் எடுக்கவில்லை. மூன்றாவது ஓவரில் பந்து பவுண்டரிக்கு அருகே சென்றபோதும் விராட் கோலி ரன் ஓடாமல் நின்று விட்டார். கடைசியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக 95 ரன்கள் இருந்த போது தூக்கி அடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார். இதனால், வங்கதேசத்திற்கு எதிரான முநதைய போட்டியில் செய்ததைப் போல சதம் அடிக்க வேண்டும் என்ற கோலியின் எண்ணம் ஈடேறவில்லை.

அடுத்து முகமது ஷமி களமிறங்க, இந்திய அணி அந்த ஓவரின் கடைசிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. ஷமி ஒரு ரன்னுடனும், ஜடேஜா 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலி - ஜடேஜா செயல் நியாயமா?

கோலி 90 ரன்களை எட்டிய பிறகு அவரும் ஜடேஜாவும் ஆடிய விதம் அணியின் வெற்றியை விட தனிநபர் சாதனைகளே முக்கியமானதாக மாறிவிட்டதோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரில் சதத்தை விட அணியின் அணியின் வெற்றியும் ரன் ரேட்டும் தான் முக்கியம் என்பதை எந்த ஒரு வீரர்களும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களா என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

கோலியின் இந்த செயல் நியாயமா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இருவரும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் இந்திய அணியின் வெற்றி சற்று முன்னதாகவே கிடைத்திருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோலி எட்டிய மைல்கற்கள்

  • நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. 5 ஆட்டங்களில் 313 ரன்கள் எடுத்து அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.
  • ஐசிசி 50 ஓவர் போட்டிகளில் 3,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். நடப்புத் தொடரில் 4 போட்டிகளில் அரை சதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில் புதிய சாதனை

சுப்மான் கில் 14 ரன்களை எட்டிய போது ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதாவது, தனது 38-வது இன்னிங்சில் அவர் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். தென் ஆப்ரிக்க வீரர் ஹாஷிம் ஆம்லா 40 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் எட்டியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்பம் தந்த ஷமி

இந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முகமது ஷமி, இந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிகரமான பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். அவரது பந்து வீச்சில் மீண்டும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு (செப்டம்பர் 22, 2023 அன்று), அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது மூன்றாவது முறையாகும்.

95வது ஒருநாள் போட்டியில் விளையாடிய முகமது ஷமி 176 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த இன்னிங்ஸின் போது, ஒரு நாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளை இர்பான் பதானின் சாதனையை ஷமி விட்டுச் சென்றார்.

தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் 9வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷமி பெற்றுள்ளார். அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

https://www.bbc.com/tamil/articles/cqejpllrmq2o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அணியில் 'புறக்கணிக்கப்பட்டது' பற்றி என்ன சொன்னார் முகமது ஷமி?

முகமது ஷமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியவர் முகமது ஷமி மட்டும்தான்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவுக்காக முக்கியமான வெற்றிகளில் பங்களித்தவர்; ஒரு நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை அதிகமுறை வீழ்த்திய வீரர்களுள் ஒருவர், உலகக் கோப்பைகளில் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முன்னிலை வகிப்பவர். ஆயினும் முகமது ஷமி இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிப்பது அரிதாகவே இருக்கிறது என்ற விமர்சனம் பொதுவாக உண்டு.

இந்த உலகக் கோப்பையின் முதல் 4 ஆட்டங்களில் அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அணியில் வேறு வழியில்லாத காரணத்தாலேயே நியூசிலாந்துடனான போட்டியில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆயினும் அதை அவர் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நியூசிலாந்து அணியின் முக்கியமான விக்கெட்டுகள் அனைத்தையும் வீழ்த்தி அந்த அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார். அந்த அணி கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தாலும் இந்தியாவுக்கு வெற்றி கடினமானதாக இருந்திருக்கும்.

இந்த வெற்றிக்காக இந்தியா கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்தது. இறுதியாக நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மாவின் அணி இந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்தியா, நியூசிலாந்து, ஷமி, ரோகொத், ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐசிசி போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணி பெற்ற ஐந்தாவது வெற்றி இதுவாகும். இதன் மூலம் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டியை விட, OTTயில் அதிகமான பார்வையாளர்கள் இந்தப் போட்டியைப் பார்த்திருப்பதில் இருந்தே இந்தப் போட்டி எவ்வளவு முக்கியமானது என்பதை அறியலாம்.

மேலும், அதிக ரன்களை எடுத்ததன் அடிப்படையில், விராட் கோலி (354) மற்றும் ரோஹித் ஷர்மா (311) இப்போது இந்தப் போட்டியின் முதல் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆனார்கள்.

விராட் கோலி 95 ரன்களில் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாடினார். இந்தத் தொடரில் முதல்முறையாக பேட்டிங் செய்ய வந்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை ஆடுகளத்தில் இருந்தார், வெற்றிகரமாகவும் விளையாடினார்.

ஆனாலும், அதிகம் பாராட்டப்பட வேண்டியது முகமது ஷமிதான்.

 

ஷமியின் அபாரமான பந்துவீச்சு

ஷமிக்கு இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆட்டத்தில் அவர் பந்துவீசிய விதம் இனிமேல் அவரைப் புறக்கணிப்பது கடினம் என்று காட்டியது.

அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

ஷமி 10 ஓவர்களில் 5.4 என்ற வீதத்தில் பந்துவீசி ஐந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பினார். பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நியூசிலாந்து அணி 273 ரன்களில் தோற்றது ஷமியின் அற்புதமான பந்துவீச்சால் தான்.

ஷமி இடது கை மற்றும் வலது கை பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார்.

அவர் தனது ஃபுல் லெங்த் பந்தில் இரண்டு விக்கெட்டுகளையும், குட் லெங்த் பந்தில் ஒரு விக்கெட்டையும், ஷார்ட் ஆஃப் குட் லெங்த் பந்தில் ஒரு விக்கெட்டையும் எடுத்தார், அதே நேரத்தில் அவர் ஒரு பேட்ஸ்மேனை யார்க்கர் பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்தியா, நியூசிலாந்து, ஷமி, ரோகொத், ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஷமி இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை நேற்று பெற்றார்

அணியில் இல்லாததுபற்றி ஷமி என்ன சொன்னார்?

ஷமி இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை நேற்று பெற்றார். அதேசமயம் இந்த போட்டிக்கு முன்பு, அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அணியில் சேர்க்கப்படாதது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஷமி பதிலளிக்கையில், "அணி நன்றாக விளையாடினால், வெளியே இருப்பது கடினம் அல்ல. உங்கள் சகாக்கள் சிறப்பாகச் செயல்பட்டால் நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். அணி சிறப்பாகச் செயல்படுவதுதான் முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

அவரது செயல்பாடு மற்றும் அணிக்கு திரும்பியது குறித்து ஷமி கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பும் போது ஒருவர் தன்னம்பிக்கை பெற வேண்டும். முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பது தன்னம்பிக்கை அளிக்க்கும் விஷயம். இந்தப் போட்டி எனக்கும் அதைக் கொடுத்தது," என்றார்.

ஆட்டத்திற்குப் பிறகு, கேப்டன் ரோஹித் சர்மாவும் ஷமியின் பந்துவீச்சையும் அனுபவத்தையும் பாராட்டினார். மேலும் "ஷமி இங்குள்ள சூழ்நிலைகளை நன்றாகப் பயன்படுத்தினார்," என்று கூறினார். மேலும், தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தின் கொண்டார், என்றார்.

இர்ஃபான் பதான் தனது x சமூக வலைதளப் பக்கத்தில், “முகமது ஷமி ஃபெராரி காரைப் போன்றவர். அதை எப்போது கேரேஜிலிருந்து வெளியே எடுத்தாலும், அதே வேகத்தையும், சிலிர்ப்பையும், மகிழ்ச்சியையும் தரும்,” என்று பதிவிட்டுருக்கிறார்.

 
இந்தியா, நியூசிலாந்து, ஷமி, ரோகொத், ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஆடுகளத்தில் இருந்தவரை ரன் ரேட் ஆறுக்கு மேல் இருந்தது

வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரோகித் சர்மா என்ன சொன்னார்?

போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மா பேசுகையில், போட்டித்தொடர் சிறப்பாகத் தொடங்கியிருந்தாலும், பாதி கிணற்றை மட்டுமே தாண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

நடு ஓவர்களில் நியூசிலாந்தின் பேட்டிங் குறித்துப் பேசிய ரோகித், "ஒரு கட்டத்தில் அவர்கள் 300 ரன்களுக்கு மேல் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். மிட்செல் மற்றும் ரச்சின் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பில் பேட்டிங் செய்தனர். பனி பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தது. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக மறுபிரவேசம் செய்தார்கள். அவர்கள் ஸ்கோரை 273 ரன்களுக்குள் நிறுத்தியது பெரிய செயல்,” என்றார்.

இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஆடுகளத்தில் இருந்தவரை ரன் ரேட் ஆறுக்கு மேல் இருந்தது.

சுப்மான் கில்லுடன் இன்னிங்ஸின் வலுவான தொடக்கத்தைப் பற்றிப் பேசிய ரோகித், "கில்லுடன் பேட்டிங் செய்வதை நான் ரசிக்கிறேன். நாங்கள் இருவரும் இருவேறு வகையான ஆட்டக்காரர்கள். எங்கள் விளையாட்டு முறைகளும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவை. நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பிரியமானவர்கள். எங்களால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாவிட்டாலும், அணி வெற்றி பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி," என்றார்.

இந்தியா, நியூசிலாந்து, ஷமி, ரோகொத், ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஃபீல்டிங்கில் இந்திய அணி இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்

இந்திய அணி எதில் கவனம் செலுத்த வேண்டும்?

இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அணி நிர்வாகம் குறித்த சில விஷயங்கள் சீர்படுத்தப்பட வேண்டியுள்ளன.

உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் சிறந்த ஃபீல்டிங்கிற்காக பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. களத்தில் காணக்கூடிய ஃபீல்டிங்கில் அணி மிகவும் கடினமாக உழைத்துள்ளதாக ஆரம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னர் ரோகித் சர்மாவே கூறியிருந்தார்.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில், சில கேட்சுகளை இந்தியா தவறவிட்டது. இதைப் போட்டியின் பின்னர் ரோகித் குறிப்பிட்டார். ஒரு முக்கியமான தருணத்தில் கேட்சைத் தவறவிட்டால் போட்டியை இழக்க நேரிடும்.

போட்டிக்குப் பின் ரோகித் கூறுகையில், "கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா போன்ற உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவர் கேட்சைத் தவறவிட்டார். கேட்சைத் தவறவிடுவது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால் எதிர்வரும் போட்டிகளில் பீல்டிங் மிகவும் முக்கியமானதாக இருக்கும்," என்றார்.

எனவே ஃபீல்டிங்கில் இந்திய அணி இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

இப்போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஜோடி வேகமான தொடக்கத்தை கொடுத்தது. அப்போது ஒரு முனையில் கடந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்கள் உடனிருந்தனர்.

அதாவது இந்த போட்டியில் இந்திய அணியின் பிடி வலுவாக இருந்தது. இருந்த போதிலும், கே. எல். ராகுலுக்குப் பதில் எடுக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறினார்.

அரையிறுதி போன்ற எதிர்வரும் போட்டிகளில் மிடில் ஆர்டரின் தவறு பேட்டிங் வரிசையை வலுவிழக்கச் செய்யும் என்பதால் இந்திய அணி இதில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும்.

 
இந்தியா, நியூசிலாந்து, ஷமி, ரோகொத், ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஸ்ரேயாஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ரன்களை எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் நீண்ட காலமாக அவர் இவற்றால் அடிக்கடி ஆட்டமிழக்கிறார்

ஷார்ட் பிட்ச் பந்துகள் ஸ்ரேயாஸின் பலவீனமா?

நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். புல், ஃபிளிக், கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ் போன்ற சிறப்பான ஷாட்களில் 6 பவுண்டரிகளை அடித்தார்.

இருப்பினும், டிரென்ட் போல்ட்டின் ஷார்ட் பிட்ச் பந்தை விளையாட முயன்ற போது அவுட் ஆனார்.

இந்தப் போட்டியில் இதுவரை, அவர் ஆட்டமிழக்காமல் 25 (ஆப்கானிஸ்தான்), 53 (பாகிஸ்தான்), 19 (பங்களாதேஷ்) மற்றும் 33 (நியூசிலாந்து) எடுத்துள்ளார். ஆனால் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவரது பலவீனம் மீண்டும் நியூசீலாந்து உடனான போட்டியில் தெளிவாகத் தெரிந்தது.

ஸ்ரேயாஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ரன்களை எடுக்க முயற்சிக்கிறார், ஆனால் நீண்ட காலமாக அவர் இவற்றால் அடிக்கடி ஆட்டமிழக்கிறார்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே, ஸ்ரேயாஸ் வலைகளில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் பயிற்சி செய்வதைக் காண முடிந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஷார்ட் பிட்ச் பந்தில் பலியாகி, இரண்டாவது போட்டியில் 38 ரன்கள் எடுத்தபோது, தனது பலவீனத்தைப் பற்றிப் பேசியிருந்தார்.

இந்தியா, நியூசிலாந்து, ஷமி, ரோகொத், ஸ்ரேயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கேப்டன் ரோகித் தொடர்ந்து ஸ்ரேயாஸ் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தாலும், அடுத்த போட்டிக்கு முன் இந்த பலவீனத்தை சரி செய்ய வேண்டும்

‘மனநிலையில் மாற்றம் தேவை’

அப்போது ஸ்ரேயாஸ் கூறுகையில், "முதல் ஒருநாள் போட்டியில் ஷார்ட் பால் வரும் என்று தெரிந்தது. ஆனால் குழப்பத்தில் இருந்தேன். இரண்டாவது போட்டியில் பந்தைப் பார்த்து எனது ஷாட்டைப் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தேன்," என்றார்.

அப்போது அவர், “இது மனநிலையுடன் தொடர்புடையது என்று நினைக்கிறேன். அதில் கொஞ்சம் மாற்றம் தேவை. இது நீங்கள் எப்படி விக்கெட்டில் நிற்கிறீர்கள் என்பது பற்றியது. சற்று குனிந்து நிற்காமல் நேராக நிற்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஷார்ட் பால் விளையாடுவது எளிதானது," என்றார்.

அப்போதிருந்து, ஸ்ரேயாஸ் வெஸ்ட் இண்டீஸின் வேகமான ஆடுகளங்களில் சராசரியாக 53 ஆகவும், நியூசிலாந்து மண்ணில் 64 சராசரியாகவும் பேட்டிங் செய்தார். இந்தியாவில் இருந்தபோது, அவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 191 சராசரியில் விளையாடினார், மேலும் இந்த உலகக் கோப்பைக்கு சற்று முன்பு, அவர் ஆஸ்திரேலியாவுடன் 52 சராசரியில் பேட்டிங் செய்தார்.

இந்த காலகட்டத்தில், அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார்.

கேப்டன் ரோகித் தொடர்ந்து ஸ்ரேயாஸ் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தாலும், அடுத்த போட்டிக்கு முன் இந்த பலவீனத்தை சரி செய்ய வேண்டும். ஏனெனில் டக் அவுட்டில் அமர்ந்திருக்கும் இஷான் கிஷனும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

இப்போது, நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது மட்டுமல்லாமல், பேட்டிங், பந்துவீச்சு உள்ளிட்ட அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளது.

எனவே இந்திய அணி இந்த வெற்றியைத் தக்கவைக்க வேண்டும். இந்தியா அடுத்து இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து போன்ற அணிகளுடன் விளையாட உள்ளது.

அடுத்த போட்டி அக்டோபர் 29-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரானது. அதாவது, ஆறு நாட்கள் இடைவேளையின் முதல் நாளில், இந்திய அணி தான் தொடர்ந்து பெற்ற ஐந்து வெற்றிகளை நிதானமாகக் கொண்டாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cl7xp8e91gxo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Pakistan FlagPakistan         282/7
Afghanistan FlagAfghanistan     (30.6/50 ov, T:283) 183/1

Afghanistan need 100 runs from 19 overs.

Current RR: 5.90 • Required RR: 5.26 • Last 5 ov (RR): 28/0 (5.60)

Win Probability:AFG 86.06%  PAK 13.94%

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வெல்லும் போல!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Pakistan FlagPakistan                                 282/7
Afghanistan FlagAfghanistan                     (49/50 ov, T:283) 286/2

Afghanistan won by 8 wickets (with 6 balls remaining)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாக்கிஸ்தானை வென்ற‌து அப்கானிஸ்தான்

 

ப‌ல‌மான‌ இர‌ண்டு அணிக‌ளை வென்று விட்டின‌ம்...........இப்ப‌டியே போனால்  சிமி பின‌லுக்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு 

Edited by பையன்26
  • Like 1
Posted

பாகிஸ்தானுக்கு இந்த சாத்து சாத்தி விட்டாங்கள் ஆப்கான் குழு. ஆனாப்பட்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வென்றவர்களுக்கு சிறிலங்காவை வெல்வது அவ்வளவு கஸ்டமில்லை.
ஆவுஸ்திரேலியா முதல் நாலு பேருக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nunavilan said:

பாகிஸ்தானுக்கு இந்த சாத்து சாத்தி விட்டாங்கள் ஆப்கான் குழு. ஆனாப்பட்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வென்றவர்களுக்கு சிறிலங்காவை வெல்வது அவ்வளவு கஸ்டமில்லை.
ஆவுஸ்திரேலியா முதல் நாலு பேருக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்னும் 4 ம‌ச் மீத‌ம் இருக்கு
இந்தியா கூட‌ வெல்வ‌து சிர‌ம‌ம்
ம‌ற்ற‌ அணிக‌ளை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

ப‌ங்க‌ளாதேஸ் கூட‌ ப‌டு தோல்வி அடைஞ்ச‌து தான் ஏமாற்ற‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி இங்லாந்தை பாக்கிஸ்தானை வென்ற‌து ம‌கிழ்ச்சி




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.