Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவலிங்கம் ஆரூரனுக்கு விடுதலை


image.jpeg

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல சந்தி பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். 

2009 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, புதிய மெகசின் சிறையில் அடைக்கப்பட்டார். 

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க அவரை விடுதலை செய்தார். 

கொலைக்கு சதி செய்ததாக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்ததுடன், பிரதிவாதிக்கு எதிராக 6 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

43 வயதான ஆரூரன், 2004 ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கற்கும் போது கைது செய்யப்பட்டார். 

சிறைவாசத்துக்குப் பிறகு தனது எழுத்துத் திறனை வளர்த்துக் கொண்ட ஆரூரன், தமிழில் 7 படைப்புகளையும் ஆங்கிலத்தில் ஒரு படைப்பையும் எழுதியுள்ளார். 

இந்நிலையில், சிவலிங்கம் ஆரூரன் எழுதிய ´ஆதுரசாலை´ என்ற தமிழ் நாவலுக்கு 65 ஆவது அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=173408

 
  • கருத்துக்கள உறவுகள்
image

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவை படுகொலை செய்ய முயற்சித்த வழக்கின் பிரதிவாதியான சிவலிங்கம் ஆரூரனை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மூலம் இந்த கொலை  முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரதிவாதி வழங்கிய வாக்குமூலம் விருப்பத்துக்கு மாறானது என நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தீர்ப்பை வழங்குகையில் குறிப்பிட்டார். 

இதன் விளைவாக, அந்த வாக்குமூலத்தின் பொருத்தத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

கோட்டாபய கொலை முயற்சி வழக்கு : சிவலிங்கம் ஆரூரன் விடுதலை! | Virakesari.lk

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

ditorial   / 2023 மே 17 , மு.ப. 11:32 - 0      - 128

image_ff49eaf7e7.jpg

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் என்பவரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, என்பவரால், நேற்று (16) விடுவிக்கப்பட்டார்.

இந்த பொறியியலாளர் உதவி பொலிஸ் அதிகாரி சிசில் டி சில்வாவிடம் வாக்குமூலம் அளித்ததை தவிர எந்தவொரு சாட்சியமும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.

இதுதொடர்பில் முறைபாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்ட ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததை கவனத்தில் கொண்டு, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் விடுவிக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ, பயணித்த வாகன தொடரணியின் மீது கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து, 2006 டிசெம்பர் 1ஆம் திகதி காலை 1.30 மணியளவில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் சாதாரண பொதுமக்கள் ஏழு பேரும் அடங்கியிருந்தனர்.

Tamilmirror Online || கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

வில்லங்கத்துக்கு…  முதுமானி படிப்பு படித்துக் கொண்டிருந்த இந்தப் பொறியியலாளரை…
கோத்தா குண்டுத் தாக்குதலில் சேர்த்துள்ளார்கள்.
இப்படி எத்தனை தமிழர்கள் தம் இளமையை சிறையில் கழித்து விட்டார்கள்.
இவர்களின்… இழந்த வாழ்க்கையை, சிங்களம் திரும்பக்  கொடுக்குமா.

Edited by தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

வில்லங்கத்துக்கு…  முதுமானி படிப்பு படித்துக் கொண்டிருந்த இந்தப் பொறியியலாளரை…
கோத்தா குண்டுத் தாக்குதலில் சேர்த்துள்ளார்கள்.
இப்படி எத்தனை தமிழர்கள் தம் இளமையை சிறையில் கழித்து விட்டார்கள்.
இவர்களின்… இழந்த வாழ்க்கையை, சிங்களம் திரும்பக்  கொடுக்குமா.

கோத்தா மீதான தற்கொலைத்தாக்குதலே ஒரு நாடகம் என்பது தெளிவாகின்றது. போரை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாக இதுவும் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கோத்தா மீதான தற்கொலைத்தாக்குதலே ஒரு நாடகம் என்பது தெளிவாகின்றது. போரை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாக இதுவும் இருந்தது. 

 

Piththala junction bomb was orchestrated by Gota ' More evidence surface in  support of Fonseka's statement | SRI LANKA

LTTE's abortive attempt to assassinate Gotabaya Rajapaksa | Daily FT

கோத்தபாய மீதான தற்கொலைக் குண்டு ...

TamilNet: 01.12.06 Gotabaya Rajapakse narrowly escapes Bomb blast

LTTE's abortive attempt to assassinate Gotabaya Rajapaksa | Daily FT

குண்டுத் தாக்குதல் நடைபெற்ற இடத்தின்... சூழ்நிலையை வைத்து, 
பலர் இது ஒரு நாடகம் என்றே தெரிவித்து இருந்தார்கள்.
முக்கியமாக... அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த 
சரத் பொன்சேகாவும் நாடகம் என்றே குறிப்பிட்டார்.

குண்டுத் தாக்குதலை எவரும் 25 மீற்றர் தொலைவில் இருந்து 
வெடிக்க வைக்க மாட்டார்கள் என்றும், குண்டு துளைக்காத வாகனத்தின் மீது
குண்டுத்தாக்குதல் நடத்தும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை என்றும் 
சரத் பொன்சேகா கூறி  இருந்தார்.

அத்துடன் குண்டுத் தாக்குதல் இடம் பெற்றவுடன்... வாகனத்தில் இருந்த கோத்தபாயா..
இரத்தம் (தக்காளி  சட்னி) தோய்ந்த உடையுடன் நேரே வைத்தியசாலை செல்லாமல்,
அலரி மாளிகையில் இருந்த அண்ணன் மகிந்த ராஜபக்சவை சந்தித்து...
போட்டோ  சூட்டிங் நடத்தி, பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக வர வைத்தமை 
பல சந்தேகங்களை இந்தத் தாக்குதல் மீது எழுப்பி இருந்தது.

http://www.kalpitiyavoice.com/2016/05/blog-post_67.html

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நடிக்க வெளிக்கிட்டவருக்கு அந்த பாத்திரத்தின் சூழ்நிலை புரியவில்லை, தன் உயிரை பணயம் வைக்கப் பயம்.  ஓய்வு பெற இருந்த சரத் பொன்சேகா, அதற்காக புலிகளை பழிவாங்க தன் சேவைக்காலத்தை நீடித்திருந்தார். அந்த தாக்குதலாலேயே கோத்தா புலிகளை அழிக்க சபதமெடுத்தார் என்று கூறப்பட்டது. பின்னாளில் சரத் பொன்சேகா ராஜபக்ச கும்பலால் பழிவாங்கப்படும்போது, இது ஒரு நாடக குண்டுத்தாக்குதல் என்றும், தன்னை இலக்கு வைத்து கோத்தா நடத்தியிருந்ததாகவும் கூறியிருந்தார். எதுவாக இருந்தபோதும், ஒரு தமிழனின் கல்வி, எதிர்காலம், இளமை, முயற்சி, லட்சியம், உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பழிவாங்கலாம் எங்களை செய்யாத குற்றத்தை சாட்டி ஆனால் நாமோ வாய் பொத்தி அனுபவிக்க வேண்டும். முடிந்தால் சுமந்திரன், தன் சட்ட, வாதத்திறமையினால் இவர்களுக்கு நட்ட ஈட்டை பெற்றுக்கொடுத்து, இவ்வாறு மீண்டும் நடைபெறாமல் தடுக்கட்டும் பாப்போம்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆதுரசாலை நாவலுக்காக தேசிய இலக்கிய விருது வென்ற சிவலிங்கம் ஆரூரன் மீது, கோட்டாபய ராஜபக்சவைக் கொல்ல முயன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான ஒரே ஆதாரமான ஒப்புதல் வாக்குமூலத்திற்காக பயங்கரவாத சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்ற சித்திரவதை அனுபவத்தை பகிர்கிறார்.

 

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச்சேர்ந்த சி.ஆரூரன் என்பவர் 2008 ஆம் ஆண்டு அரசியல் கைதியாக சிறைச்சாலைக்கு சென்று 15 வருடங்களுக்கு பின்னர் இந்த வருடம் வைகாசி மாதம் விடுதலை செய்யப்பட்டார். பொறியியலாளராகிய இவர் தனது 28 வயதில் சிறைக்கு சென்று இளமைக் காலத்தினை சிறையிலேயே அனுபவித்துள்ளார். அவரின் சிறை வாழ்க்கை தொடர்பான காணொளியே இது.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.