Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”எனக்கு சரித்திரம் கற்றுத்தர முயற்சிக்கிறீர்களா? ஜனாதிபதி தொல்லியல் துறை அதிகாரியிடம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?”

ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி தெரிவித்த போது, அது மகா விகாரையை விட பெரியதா என ஜனாதிபதி அவரிடம் கேட்டுள்ளார்.

“உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் தேவை? இது மகாவிகாரையை விடப் பெரியதா? மகா விகாரை, ஜேதவனாராமயம் மற்றும் அபயகிரி மூன்றுமே 100 ஏக்கரை எடுக்காது,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/258035

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி விவகாரம்: தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகினார்

ஜனாதிபதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சில நாட்களுக்குப் பின்னர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது. பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் இடமொன்றுக்கு காணிகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பணிப்பாளர் நாயகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

ஜனாதிபதி அவரிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?” என ஜனாதிபதி இதன் போது அவரிடம் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/258042

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா ? தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பினார் ஜனாதிபதி

Published By: VISHNU

12 JUN, 2023 | 05:01 PM
image
 

(எம்.மனோசித்ரா)

வரலாற்று முக்கியத்துவம் மிக்க விகாரைகள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக பொது மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது. தேசிய கொள்கைகளை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செயற்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , 'நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று  கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? ' என்று அதிகாரிடம் கடுந்தொனியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் காணப்படும் 229 ஏக்கர் காணியை விடுப்பதற்கான கடிதத்தை ஜூன் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான பதில் வழங்கப்படவில்லை என வடக்கு பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பணிப்பாளர் நாயகம் , 'எனக்கு அந்த விடுவிப்பதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.' எனக் குறிப்பிட்டார்.

எனினும் அது அமைச்சரவையின் கொள்கை என்றும், அதனை தொல்பொருள் திணைக்களம் பின்பற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுந்தொனியில் தெரிவித்ததோடு, அடுத்த முறை இவ்வாறு தேசிய கொள்கையை பின்பற்றாமைக்கு காரணங்களை முன்வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி எச்சரித்தார்.

விகாரையொன்றை அமைப்பதற்கு 275 ஏக்கர் நிலப்பரப்பை எடுத்தால் அது மகா விகாரையை விடவும் பெரியதாகிவிடும். மகா விகாரை, தியதவனாராமய மற்றும் அபய கிரி உள்ளிட்ட அனைத்து விகாரைகளை இணைத்தால் 100 ஏக்கர் காணப்படும்.

அவ்வாறெனில் இவற்றை விட பாரிய விகாரையை அமைப்பதற்காகவா நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு வரலாற்று  கற்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்களா? என்று ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்காக ஒரு விகாரைக்கு 220 ஏக்கர் நிலப்பரப்பு உரித்துடையதாகக் காணப்படும் என்று நான் நினைக்கவில்லை. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொது மக்களின் 3000 ஏக்கர் காணியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. பனாமுரே திலகவன்ச என்ற தேரரே தற்போது அந்த காணியை ஆக்கிரமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன் போது சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் நியமிக்கப்பட்டிருந்த கிழக்கு தொல்பொருள் பாதுகாப்பு செயலணியின் உறுப்பினராக அந்த தேரர் செயற்பட்டதாக அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி , 'அந்த செயலணி தற்போது செயற்பாட்டில் இல்லையல்லவா? அத்தோடு அந்த செயலணிக்கு அரசாங்கத்தின் காணியையோ அல்லது தனியாரின் காணியையோ ஆக்கிரமிக்க முடியாது. இதில் என்ன சட்ட முறைமை காணப்படுகிறது? வனப்பகுதிகள் உங்களுக்கு உரித்தானதில்லையல்லவா?

திரியாயவுக்கு எதற்காக 3000 ஏக்கர் காணி தேவைப்படுகிறது? திரியாய என்பது விகாரையல்ல. முன்னயை காலங்களில் அது துறைமுக மையமாகும். படகின் மூலம் திரியாயவிலிருந்து ஹொரவபொத்தான வரை செல்ல முடியும். பின் ஹொரவபொத்தானையிலிருந்து அநுராதபுரத்துக்கும், அங்கிருந்து மல்வத்து ஓயாவுக்கும் , அங்கிருந்து மன்னாருக்கும் செல்ல முடியும்.

அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது பணிப்புரை விடுத்தார்.

https://www.virakesari.lk/article/157562

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையையும் நுள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

பிள்ளையையும் நுள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டுகிறார்.

நரி  அரசியல் என்றால், சும்மாவா. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

அந்தப் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து கோவிலொன்றும் காணப்பட்டது. எனவே அங்கு தேரர்களால் வைக்கப்பட்டுள்ள கற்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி

கற்களை நீக்குகிறார்களா என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

கற்களை நீக்குகிறார்களா என பார்க்கலாம்.

கொஞ்ச நாள்ல கோபுரம் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது. பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்தை சொல்வது? களவெடுப்போருக்கு அங்கு அதற்கான சூழ்நிலை என்றால் அங்கு எதற்கு இருக்கவேண்டும்? ஒன்று அந்த தொழிலில், இடத்தில இருந்து விலக வேண்டும் அல்லது ஒத்துழையாத தலைவனை மாற்றவேண்டும், இவர்களை கையாளும் தலைவனிடம் போய் முறையிட வேண்டும். பொறுத்திருந்து பாப்போம் அடுத்து என்ன நடக்கிறதென்று?

அடப்பாவியள்! 3000 ஏக்கர் காணியை விழுங்க இவனுகளுக்கு மனச்சாட்சியேஇல்லையா? அதுவும் விகாரை, எல்லாம் துறந்த புத்தனுக்கு தமிழரின் நிலம்மேல் ஆசை வந்திருக்கு. இனி காணி பிடிக்கும் பிக்குகள் சும்மா இருக்குங்களா? தமிழரிடம்; இனத்தின் பேரால்  கொள்ளை, மதத்தின் பேரால் கொள்ளை, அரசின்பேரால் கொள்ளை, கட்சியின் பேரால் கொள்ளை. எப்படிதப்பிப்பிழைப்பது? இதில புலம்பெயர்ந்தோரும் வந்து கொட்டுங்கோ தமிழீழம் தருவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

பிள்ளையையும் நுள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டுகிறார்.

நீங்கள் சொல்லுவது உண்மை. ரணில் ஒரு பழுத்த தந்திரமான அரசியல்வாதி.

இருந்தாலும் இந்த இடத்தில இது அவருக்கு ஒரு பிரச்சினையான விடயமாகி விட்ட்து. கோத்தாவால் நியமிக்கப்பட்ட்துதான் இந்த இனவாத குழு. இவர்கள் வடக்கு கிழக்கு காணிகளை அபகரித்து விகாரைகளை கட்டி சிங்கள வாக்குகளை கட்டி காப்பதட்காகவும், தமிழர் பிரதேசம் என்று ஒன்று இல்லை என்பதை காண்பிப்பதட்காகவும் உருவாக்கப்பட்ட்து.

ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கு ஆதரவு தேவைப்படுகின்றது. விசேடமாக தமிழர்களின் வாக்கு தேவைப்படுகின்றது. நிச்சயமாக இது அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேட்பை கொடுக்கும்.

ராஜபக்சேகைளின் ஆட்கள் இவரின் கருத்தை எதிர்த்தாலும் சஜித், ஜேவிபி இதனை எதிர்க்க மாடடார்கள். அவர்களுக்கும் தமிழ் வாக்குகள் தேவை.

ரணில், சஜித், அனுரா, ராஜபக்சே எல்லோருமே போட்டியிடுவதால் சிங்கள வாக்குகள் சிதறும். எனவே தமிழ் வாக்குகள்தான் தீர்மானிக்கும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டே ரணில் காய் நகர்த்துகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சுயநல அரசியலுக்காக இனவாதத்தையும் வன்முறைகளையும் தூண்டி சுயலாபம் பெற்றார்கள். யார், எதை,  எந்த அரசியலுக்காக வளர்த்தார்களோ அவர்களே  அதை அழித்தே அரசியல் செய்ய வேண்டிய காலம் வரும். அது இலகுவானதல்ல. நீண்ட பரந்த மரமாக வளர்த்துவிட்டதை அழிக்க வெளிக்கிட்டால் அதை வளர்த்தவர்களே அதற்கு பலியாகலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

நீங்கள் சொல்லுவது உண்மை. ரணில் ஒரு பழுத்த தந்திரமான அரசியல்வாதி.

இருந்தாலும் இந்த இடத்தில இது அவருக்கு ஒரு பிரச்சினையான விடயமாகி விட்ட்து. கோத்தாவால் நியமிக்கப்பட்ட்துதான் இந்த இனவாத குழு. இவர்கள் வடக்கு கிழக்கு காணிகளை அபகரித்து விகாரைகளை கட்டி சிங்கள வாக்குகளை கட்டி காப்பதட்காகவும், தமிழர் பிரதேசம் என்று ஒன்று இல்லை என்பதை காண்பிப்பதட்காகவும் உருவாக்கப்பட்ட்து.

ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கு ஆதரவு தேவைப்படுகின்றது. விசேடமாக தமிழர்களின் வாக்கு தேவைப்படுகின்றது. நிச்சயமாக இது அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேட்பை கொடுக்கும்.

ராஜபக்சேகைளின் ஆட்கள் இவரின் கருத்தை எதிர்த்தாலும் சஜித், ஜேவிபி இதனை எதிர்க்க மாடடார்கள். அவர்களுக்கும் தமிழ் வாக்குகள் தேவை.

ரணில், சஜித், அனுரா, ராஜபக்சே எல்லோருமே போட்டியிடுவதால் சிங்கள வாக்குகள் சிதறும். எனவே தமிழ் வாக்குகள்தான் தீர்மானிக்கும். இதை எல்லாம் கவனத்தில் கொண்டே ரணில் காய் நகர்த்துகிறார். 

உங்கள் கணிப்பும் சரியே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text that says 'I know the history better than anyone..! Jaffna Library Good! Then tell us who burnt our history down! Sata'

 

 

May be an image of one or more people and text that says 'இண்டைக்கு வரலாறு படிப்பம் சரியே? தொல்பொருள் திணைக்களம் നുല 14.06/2023 1'

இண்டைக்கு வரலாறு படிப்பம் சரியே...

  • கருத்துக்கள உறவுகள்

 

மஹா விகாரை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்தில் எந்த உண்மையும் இல்லை : குருந்து விஹாரை தலைமை தேரர் கலிகமுவே சந்தபோதி தேரர்

image
 

(எம்.ஆர்.எம்.வசீம்)

மஹா விகாரையின் காணி பரப்பளவு தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திந்த கருத்து உண்மைக்கு புரம்பானது. அதேநேரம் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம் குருந்து விஹாரை தொடர்பாக எந்த அறிவும் இல்லாமலேயே ஜனாதிபதியுடன் கலந்துரையாடலுக்கு சென்றிருக்கிறார் என குருந்து விகாரை தலைமை தேரர் தெரிவித்தார்.

குருந்து விகாரை காணி தொடர்பாகவும் அங்கு தொல்பொருள் திணைக்களம் கைப்பற்றி இருக்கும் இடங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மற்றும் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹாவிகாரையை விட குருந்து விகாரை விசாலமானதா என ஜனாதிபதியின் கேள்விக்கு ஆணையாளருக்கு பதில் சொல்ல தெரியாமல் இருந்திருக்கிறது. 

அவர் குருந்து விகாரை பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் இருந்து இந்த விகாரையின் பரப்பளவு தொடர்பாகவோ இங்குள்ள பிரச்சினை தொடர்பாகவோ சரியாக ஆராய்ந்து பார்க்கவில்லை.

குருந்து விகாரைக்கு அவர் வரும்போது தமி்ழ் மக்கள் பிரச்சினைப்படுத்துவார்களோ என அச்சத்துடனே இங்கு வந்து அவசரமாக சென்று விடுவார். 

அதனால் இந்த விகாரையின் காணி தொடர்பில் அவர் எந்த தயார் நிலையும் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு சென்றிருக்கிறார்.

குருந்து விகாரையின் காணி தொடர்பில் தெரிவிப்பதாக இருந்தால், 1933இல் வெள்ளையர் காலத்தில் குருந்து விகாரை தொல்பொருள் பாதுகாப்பு பிரதேசமாக 78ஏக்கர் நிலப்பரப்பாக அளவிட்டிருந்தது. 

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் பின்னர் இன்னும் பல தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியா தொல்பொருள் காரியாலயத்தினால் தொடர்ந்து பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் பின்னரே புதிய தொல்பொருள் இருக்கும் பிரதேசங்களை கண்டுபிடிக்கப்பட்டு எல்லை தூண்கள் நாட்டப்பட்டதால் அந்த பிரதேசத்திவ் 229 ஏக்கர் இருப்பதாக அறிந்துகொள்ள முடிந்தது. அதன் பிரகாரம் மொத்தமாக தற்போது சுமார் 310 ஏக்கர் காணிப்பரப்பு குருந்து விகாரைக்கு இருக்கிறது.

அப்படியானால் ஜனாதிபதி தெரிவிப்பதுபோல் மஹா விகாரை 100ஏக்கரும் இல்லையா? ருவன்வெலிசாய, தூபாராமய, தேத்தவனாராமய, ஸ்ரீமா போதி இந்த பகுதிகளை எடுத்துக்கொண்டாலும் 500ஏக்கருக்கும் அதிகமாகும். 

அபயகிரி மற்றும் மற்ற இடங்களை எடுத்துக்கொண்டால் மஹா விகாரைக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணி இருக்கிறது. அதனால் ஜனாதிபதிக்கு இதுதொடர்பாக வாசிக்கவும் தெரியாது. அதனை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்கு தொல்பொருள் ஆணையாளர் நாயகத்துக்கும் தெரியாது. 

மேலும் அந்த பிரதேசத்தில் 100வருடங்களுக்கும் அதிக காலம் வயல் வேலை செய்ததாக சுமதந்திரன் எம்,பி தெரிவித்திருந்தார். 

அது அப்பட்டமான பொய் யுத்தத்துக்கு பின்னர் குருந்து விகாரையை சுற்றியுள்ள 50 ஏக்கருக்கும் அதிக காணியில் காடு அழிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று அண்மை காலத்தில் அந்த பிரதேசத்தில் காடு அழிக்கப்பட்டு வயல் வேலை செய்யப்பட்டு வந்தது. அந்த பிரதேசத்தை வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் தடை செய்திருந்தது. தடையை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. 

அத்துடன் தமிழ் மக்களுக்கு விவசாயம் செய்ய அந்த பிரதேசத்தில் காணி வழங்கவேண்டும் என்றிருந்தால், தொல்பொருள் இல்லாத இன்னும் 6 ஆயிரம் ஏக்கர் காணி அந்த இடத்தில் இருக்கிறது. அதில் இருந்து வழங்க முடியும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் தொல்பொருள் இருக்கும் இடங்களை வழங்க அனுமதிக்க முடியாது என்றார்.

மஹா விகாரை தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்தில் எந்த உண்மையும் இல்லை : குருந்து விஹாரை தலைமை தேரர் கலிகமுவே சந்தபோதி தேரர் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் மரபுரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் செயற்பாட்டை பொதுஜன பெரமுன ஏற்குமா ? - கம்மன்பில

Published By: DIGITAL DESK 3

14 JUN, 2023 | 01:13 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

சிங்கள பௌத்த தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வார்களா ? ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுனவினர் பொறுப்புக் கூற வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்கவின் சட்டவிரோத கட்டளையை ஏற்க மறுத்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க தற்துணிவுடன் பதவி விலகியுள்ளார். 

அமைச்சரவை தீர்மானத்தை மாத்திரம் செயற்படுத்த வேண்டிய தேவை தொல்பொருள் திணைக்களத்துக்கு கிடையாது.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் விடயதானங்களுக்கு அமையவே தொல்பொருள் திணைக்களம் செயற்பட வேண்டும். அதனை விடுத்து ஜனாதிபதியின் கட்டளைக்கு அமைய செயற்பட முடியாது. குறுந்தூர் மலைக்கு  275 ஏக்கர் நிலப்பரப்பு காணி அவசியமற்றது.

நிலப்பரப்பை குறைக்குமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையை தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மறுத்துள்ளார்.

'வரலாற்றை நீங்கள் எனக்கு குறிப்பிடுகின்றீர்களா அல்லது நான் உங்களுக்கு வரலாற்றை கற்பிக்கவா,' என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை நோக்கி குறிப்பிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரிமாற்றப்படுகிறது.

தவறான வரலாற்றை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும் வடக்கில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

ஆனால் குறுந்தூர் விகாரை கி.மு. 110-103 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள அரசனால் நிர்மாணிக்கப்பட்டது என தொல்பொருள் சான்றாதாரங்கள் குறிப்பிடுகின்றன.

மகா விகாரையை காட்டிலும் குறுந்தூர் விகாரையின் நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டிய தேவை இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். மகா விகாரையின் நில அளவை மற்றும் தொல்பொருள் மரபுரிமைகள் அளவீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஆகவே, அநுராதபுரம் மகாவிகாரையுடன் குறுந்தூர் விகாரையை ஒப்பிட முடியாது. குறுந்தூர் மலையில் தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நிலையில் நாட்டப்பட்ட நில அளவை தூண்களை அகற்றுமாறு ஜனாதிபதி கட்டளை பிறப்பித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் அரசியல்வாதிகளின் கட்டளைக்கு அமைய ஜனாதிபதி செயற்படுகிறார். அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு அமைய தொல்பொருள் மரபுரிமைகள் தொடர்பில் தீர்மானம் எடுத்தால் 1979 ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் அழிக்கப்பட்ட கிரிவெட்டி விகாரைக்கு நேர்ந்த கதியே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு நேரிடும்.

பௌத்த சிங்கள தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கம் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வார்களா? ஜனாதிபதியின் செயற்பாடுகள் பொதுஜன பெரமுனவுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/157687

  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் தொல்பொருள் என்றால்; மக்கள் எங்கே வாழ்ந்தார்கள்? அப்போதைய சனத்தொகையையும் விகாரைகளின் எண்ணிக்கையையும் கணித்து இவரின் கூற்று எவ்வளவு பொய்யானது என்பதை நிறுவுவது தமிழ் தொல்பொருளாட்சியாளர்களின் கடமை.

6 hours ago, ஏராளன் said:

குறுந்தூர் விகாரை கி.மு. 110-103 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள அரசனால் நிர்மாணிக்கப்பட்டது என தொல்பொருள் சான்றாதாரங்கள் குறிப்பிடுகின்றன.

விவாதிப்போம்  வாருங்கள், விக்கினேஸ்வரன் அழைத்திருந்தார். அப்போவெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போ சரித்திரம் பேசுகிறார். மக்களுக்காக மதமா?மதத்துக்காக மக்களா? முட்டாள்களின் செயல் இப்படிப்பட்டதே. மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள், இவர்களுக்கு விகாரை வேண்டுமாம் அதுவும் தமிழனின் பிரதேசத்தில் சிங்கள அரசன் விகாரை கட்டினாராம். அந்த அரசனின் பெயரை குறிப்பிட  மறந்து விட்டாரா அல்லது பெயர்  இல்லாத அரசனா?

போகிற போக்கைப்பதால் ஜனாதிபதி தனது பதவியை துறந்து, சொன்ன சொல்லை  வாபஸ் பெற்று. விகாரையில் வரலாறு படிப்பார் போலுள்ளது. பிக்குகளை சமாளிக்க முடியாவிட்டால் தமிழரை தாக்குவது, இதுவே வழமை. பிக்குகளை பிச்சை எடுத்து சாப்பிட விட்டால் பௌத்தம் தானாக தர்மத்தோடு வளரும். இதுகள் சொல்வது பொய், செய்வது அடாவடியும் களவும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

சிங்கள பௌத்த தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த பொதுஜன பெரமுனவினர் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொள்வார்களா ?

போர்க்கதாநாயகர்களாக வாகனங்களில் வலம் வந்தவர்கள், விகாரைகளில், காவியில் மீண்டும்!

அவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களே விரட்டியடித்துவிட்டார்கள், அதை தடுக்க முடியாதவர் அவர்களின் தீர்மானங்களை காப்பாற்றட்டாம் எங்களின் வரலாறுகளை அழித்து, எரித்து புது வரலாறு திரிக்கிறார்கள் பிக்குகள். புலம்பெயர்ந்தோரே, உங்களிடம் ஒரு வேண்டுகோள்!  உங்கள் நாடுகளில் தமிழர் வரலாற்று நூல்களை சேகரித்து வையுங்கள் முடிந்தால்  எங்கள் பழைய வரலாறுகளையும் தேடி எடுத்து. விஜயன் இலங்கைக்கு வந்து இறங்கியதை நினைவுகூரும் விதமாக இலங்கை அரசால் வெளியிட்டு வாபஸ் பெறப்பட்ட அஞ்சல் தலையையும் பகிரங்கமாக வெளிப்படுத்துங்கள், இவர்களின் திரிவுபடுத்தப்படும் வரலாறை முறியடிக்க எம்மால் என்ன முடியுமோ அவற்றையெல்லாம் சான்றோடு இணைய மூலம் அறிவிக்க வேண்டும். எங்களது போர் இவர்களின் பிழையான பிரச்சாரங்களை முறியடிப்பதற்காக, திணறடிப்பதாக அமையவேண்டும்! எங்களின் அழிவுகள், அழித்தவர்கள், துணைபோனவர்கள் எல்லாம் சன்றாகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இன வாதிகளுக்கு எதாவது ஒரு செய்தி தேவைப்படுகின்றது. அதாவது இன , மத சம்பந்தமாக யாரவது எதையாவது கூறினால் அவர்களுக்கு மிகவும் சந்தோசம். இதை இங்கு நன்றாகவே விற்கலாம் என்றும், இதை வைத்தே காலத்தை ஒட்டி விடலாம் என்றும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மற்றப்படி இவர்களுக்கு நாடடைபற்றியோ , மக்களைப்பற்றியோ எந்த கவலையும் இல்லை. இனியும் கவலைப்பட போவதில்லை.


நேற்று தம்புள்ள விகாராதிபதி (இவர் ஒரு முக்கியமான தேரர்) ஒரு கருத்தை கூறி இருந்தார். விகாரைகள்பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்காமல் இத்தெட்க்கென்று ஒரு குழுவை அமைக்கும்படியும் அங்கு தமிழ் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்று கூறி இருந்தார். முக்கியமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறையினர் உள்ளடக்கப்பட வேண்டுமென்று கூறி இருந்தார்.

அப்படி ஒரு இணக்கப்பாட்டுடன் இதட்கு ஒரு முடிவு காட்டினாள் இந்த பிரச்சினை தீர்க்கப்படலாம் என்று எண்ணுகிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை : ஜனாதிபதி செயலகம்

15 JUN, 2023 | 07:35 PM
image
 

குருந்தூர் மலை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் தொல்பொருளியல் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரருக்கு இதனை அறிவித்துள்ளார். 

குருந்தூர் மலை நிலம் என்பது அரசநிலம் என தெரிவித்துள்ள அவர் இதனை எவருக்கும் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/157815

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.