Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் மூவரின் சடலங்கள் மீட்பு, வேன் ஒன்றினால் மோதப்பட்ட மேலும் மூவர் காயம்! நகரம் முடக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

13 JUN, 2023 | 04:14 PM
image
 
இங்கிலாந்தின் நோட்டிங்ஹாம் நகரில் இன்று அதிகாலை மூவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, அந்நகரில் வேன் ஒன்றினால் மோதப்பட்ட மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, நோட்டிங்ஹாம் நகரம் முடக்கப்பட்டுள்ளதுடன் அந்நகர வீதிகளில்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.00 மணியளவில் இல்கேஸ்டன் வீதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு இருவரின் சடலங்களை பொலிஸார் கண்டனர்.  மெக்தலா வீpதியிலும் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன்பின்,   மில்டன் வீதிக்க பொலிஸார் அழைக்கப்பட்டனர். அங்கு வேறு மூவரை வேன் ஒன்று மோதி காயப்படுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Nottingham-England-incident---a.jpg

இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என தாம் கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நோட்டிங்ஹாம் நகரின் பல வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் தெரிவித்துள்ளார்.

இல்கேஸ்டன் வீதியில் ஓர் இளைஞனும் யுவதிம் கத்தியால் குத்தப்பட்டதை தான் கண்டதாக தன்னை அடையாளம் காட்டவிரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/157625

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் கோர விபத்து! யாழ்.தமிழர்கள் மூவர் பலி

JaffnaLondonCanadaAccident
 2 மணி நேரம் முன்
 
விளம்பரம்
 
இங்கிலாந்தின் தென் கிழக்கு பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

A285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் சனிக்கிழமை மாலை இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

மூவர் உயிரிழப்பு

கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, ஏராளன் said:

15 minutes ago, alvayan said:

Karte von West Sussex nach Nottingham

இரண்டும் வெவ்வேறு சம்பவங்களா, அல்லது ஒரே சம்பவமா.
திருமண வீட்டிற்கு சென்றவர்கள், விபத்தில் இறந்தது சோகம்.
இறந்தவர்களுக்கு அனுதாபங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Karte von West Sussex nach Nottingham

இரண்டும் வெவ்வேறு சம்பவங்களா, அல்லது ஒரே சம்பவமா.
திருமண வீட்டிற்கு சென்றவர்கள், விபத்தில் இறந்தது சோகம்.
இறந்தவர்களுக்கு அனுதாபங்கள்.

இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் அண்ணா.

நன்றி மீரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை கத்தியால் குத்திவிட்டு அவரின் வாகனத்தை எடுத்துச்சென்று பொதுமக்கள் மீது மோதிய நபர் – நொட்டிங்காமில் பயங்கரம்

Published By: RAJEEBAN

14 JUN, 2023 | 06:05 AM
image
 
இங்கிலாந்தின் நொட்டிங்காமை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள தொடர்கொலைகளில்  பலியானவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

19 மாணவர்கள் இருவரும் 50 வயது நபர்ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50வயது நபரை கத்தியால் குத்திய பின்னர் அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்ற சந்தேகநபர் மூவரை கத்தியால் குத்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

skynews-nottingham-major-incident_618582

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பார்னமி வெபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்- பயங்கரவாத தடுப்பு பிரிவுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் இந்த சம்பவத்தை திறந்த மனதுடன் அணுகுவதாக தெரிவித்துள்ளனர்.

31 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பயங்கரமானது துயரமானது என தெரிவித்துள்ள பொலிஸார் விசாரணையுடன் தொடர்புடைய எவரையாவது தேடுவதாக தெரிவித்துள்ளனர்.

இல்கெஸ்டன் வீதியில் இருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் தகவல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மில்டன் வீதியிலிருந்து தகவல் வந்தது அங்கு வாகனமொன்றை திருடிய நபர் அந்த வாகனத்தால் மூவரை இடித்துக்கொல்ல முயன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வான் மேப்பில்ஸ் வீதியில் நிறுத்தப்பட்டது அதிலிருந்தவர் கைதுசெய்யப்பட்டார்.

FyipXMJWwAMqwvU.jpg

மக்டலா வீதியில் 50 வயது நபர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் அந்த தருணத்தில் சந்தேகநபர் வாகனத்தை திருடி மில்டன்வீதிக்கு கொண்டு சென்று பலர் மீது மோதியுள்ளார் என நாங்கள் கருதினோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்திற்கான காரணம் என்பது குறித்து உறுதியான முடிவுகளிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மனநலப்பபாதிப்புள்ளவர் என்பது தெரியவருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/157650

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பிள்ளைகள் எங்களிடமிருந்து இளவயதில் பறிக்கப்பட்டுள்ளனர் -இது எவருக்கும் நடக்ககூடாது- பிரிட்டனில் கத்திக்குத்து சம்பவத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர்

Published By: RAJEEBAN

15 JUN, 2023 | 10:41 AM
image
 
பிரிட்டனின் நொட்டிங்காமில் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் பெற்றோர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வில் கண்ணீர்மல்க உரையாற்றியுள்ளனர்.

584712.jpg

செவ்வாய்கிழமை நொட்டிங்காமில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பார்னபிவெபரும்,கிரேஸ் ஓமலே குமாரும் கொல்லப்பட்டனர்.65வயது நபரும் உயிரிழந்தார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் 31வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

நொட்டிங்காம் பல்கலைகழகத்தில் நேற்று   அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட இரு மாணவர்களினதும் தந்தைமார் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படாத சந்தர்ப்பத்தில் அவர்கள் உரையாற்றியுள்ளனர்.

பெருந்துயரத்துடன் அவர்கள் உரையாற்றினர்.

352848707_1677337759444545_4228921466804

அங்கு காணப்பட்டவர்கள் மத்தியில் உரையாற்றிய ஓமலே குமாரின் தந்தை சஞ்சோய் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளவேண்டும், என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரேசும் அவரது நண்பனும் ஒன்றாக உயிரிழந்தனர்,நீங்கள் அனைவருடனும் நண்பர்களாகயிருக்கவேண்டும்,நீங்கள் அனைவரையும் நேசிக்கவேண்டும் என அவர் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவள் இந்த பல்கலைகழகத்திலிருப்பதை விரும்பினால்  உங்கள்அனைவரையும் நேசித்தால் அவள் உங்களை பற்றி பல கதைகளை தெரிவித்தார்,நீங்கள் அவளது வாழ்க்கையை நீங்கள் தொட்டீர்கள் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

FynfsyXXsAAW_OZ.jpg

எங்கள் பிள்ளைகள் எங்களிடமிருந்து இளவயதில் பறிக்கப்பட்டுள்ளனர் -இது எவருக்கும் நடக்ககூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நான் எனது வார்த்தைகளை இழந்துவிட்டேன் எனது பேபிபோயை இழந்துவிட்டேன் இதனை நான் எவ்வாறு தாங்கிக்கொள்ளப்போகின்றேன்என்பது தெரியவில்லை என வெப்பரின் தந்தை டேவிட் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

notingam_vigil.jpg

நொட்டிங்காம் பல்கலைகழகத்திற்குள் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வு மிகவும் உணர்ச்சிகரமானதாக காணப்பட்டது.கலந்துகொண்டவர்களில் அனேகமானவர்கள் கண்ணீருடன் காணப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/157749

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.