Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் கூலிப்படையின் தலைவர் விமானவிபத்தில் உயிரிழந்துவிட்டார் – உறுதி செய்தது ரஸ்யா

28 AUG, 2023 | 06:36 AM
image
 

ரஸ்யாவின் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளதை மரபணுபரிசோதனைகளின் பின்னர் ரஸ்யா உறுதி செய்துள்ளது.

பத்து உடல்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன, அவை விமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர்  விபரங்களோடு ஒத்துப்போகின்றன என விசாரணை குழு தெரிவித்துள்ளது. மூலக்கூறு மரபியல் சோதனைகள் இடம்பெற்றன, அதனடிப்படையில் உயிரிழந்த பத்துபேரினதும் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன  என ரஸ்யா தெரிவித்துள்ளது.

விபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/163313

  • Replies 231
  • Views 15.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2023 at 05:13, goshan_che said:

ஒரு குட்டி ஸ்டோரி 

1. புட்டின் சனி காலை நிகழ்த்திய உரையிலும், நேற்றைய உரையிலும்…பிரிகோசினை ரஸ்யாவை முதுகில் குத்திய துரோகி என்றார்

2. நேற்றைய உரையில், இந்த கலகத்தின் தலைவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்

3. இந்த கலகத்தால் ரஸ்யா விமானங்கள், விமானிகளை இழந்தது என்பதை ஏற்று கொண்டார்.

இன்று…..

4. பிரிகோசின் மீதான தேச துரோக வழக்குகள் கைவிடப்படுள்ளன

5. பிரிகோசினின் தனியார் ஜெட், ரோஸ்டோவ் வில் இருந்து பெலரூஸ் போயுள்ளது. அதில் பிரிகோசின், வாக்னர் கூட்டாளிகள், குடும்பம் அடக்கமாம்

முடிவு?

1. தான் ரஸ்யாவின் துரோகி என நேற்று சொன்னவரை…

2. தான் கட்டாயம் தண்டிக்கப்படுவார் என நேற்றிரவு சொன்னவரை…

இன்று தண்டிக்காமல், தப்பி போக விட வேண்டிய கையாலாகாத நிலையில் இருக்கிறார் புட்டின்.

புட்டினின் அதிகாரம், ஆளுமை, சுக்கல் சுக்கலால உடைந்து விட்டது.

இனி பிரிகோசனை கொன்றால் மட்டுமே புட்டிகள் இதை ஓரளவுக்கு திரும்பி பெற முடியும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

 

பிரிகோசனை புட்டினால் கடைசி வரை தொட கூட முடியவில்லை.

அவரை கைது செய்யவோ…

சிறையில் அடைக்கவோ…

ஏன்…வழக்கு போடவோ கூட புட்டினால் முடியவில்லை.

கேவலமாக, பிரிகோசனை கிரெம்ளின் அழைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, அதுவும் வெளியில் வந்து…அவமானப்பட்டு போனார் புட்டின்.

கலகம் முடிந்து 2 மாதங்களின் பின், பேடித்தனமாக, விமானத்தில் குண்டு வைத்துத்தான் பிரிகோசனை புட்டினால் அகற்ற முடிந்துள்ளது.

இது மேலும் மேலும் புட்டினின் இரும்பு மனிதன் இமேஜை சுக்கலாகிறதே ஒழிய நிமிர்த்தவில்லை.

புட்டின் கலகம் தொடங்கிய உடனேயே பிரிகோசனை பரலோகம் அனுப்பி இருக்க வேண்டும்.  அதை விடுத்து, இவ்வளவு காலம் எடுத்து, சொந்த நாட்டில், நாட்டின் துரோகியை கொல்ல இப்படி மினகெட்டது - அவருக்கு ரஸ்யாவுக்குள்ளேயே டப்பா டான்ஸ் ஆடுகிறது என்பதையே காட்டுகிறது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உக்ரேன் விடயத்தில் ரஷ்யாவால் முடியாது......தோல்வி.....தோல்வியடைகின்றது என்றால் ஏன் மேற்குலகு இன்னும் நவீன ஆயுதங்களையும் போர் விமானங்களையும் கொடுக்க வேண்டும்?

அமெரிக்கா கூட இன்று உக்ரேனுக்கு புதிய மில்லியன் கணக்கான போர் நிதிகளை அறிவித்துள்ளது? ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உக்ரேன் விடயத்தில் ரஷ்யாவால் முடியாது......தோல்வி.....தோல்வியடைகின்றது என்றால் ஏன் மேற்குலகு இன்னும் நவீன ஆயுதங்களையும் போர் விமானங்களையும் கொடுக்க வேண்டும்?

அமெரிக்கா கூட இன்று உக்ரேனுக்கு புதிய மில்லியன் கணக்கான போர் நிதிகளை அறிவித்துள்ளது? ஏன்?

சிறிய பாம்பு என்றாலும் பெரிய தடியை தானே பாவிக்க வேண்டும்??? ரசியா மலைப்பாம்பு?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

உக்ரேன் விடயத்தில் ரஷ்யாவால் முடியாது......தோல்வி.....தோல்வியடைகின்றது என்றால் ஏன் மேற்குலகு இன்னும் நவீன ஆயுதங்களையும் போர் விமானங்களையும் கொடுக்க வேண்டும்?

அமெரிக்கா கூட இன்று உக்ரேனுக்கு புதிய மில்லியன் கணக்கான போர் நிதிகளை அறிவித்துள்ளது? ஏன்?

நீங்கள்தானே அண்ணை சொன்னனியள் - அமெரிக்கா ஆயுதங்களை பரீட்சித்து பார்க்கிறது என?

பின்ன உக்ரேனுக்கு அதை கொடுக்காமல் என்னெண்டு அண்ணை பரீட்சித்து பார்க்க முடியும்?

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வாக்னர் கூலிப்படை தலைவர் கொல்லப்பட்டது இவ்வாறு தான்! மறைமுக கருத்தை வெளியிட்ட புடின்

ரஷ்யாவிற்கு சார்பாக செயற்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான விளக்கம் ஒன்றை ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி, வாக்னர் கூலிப்படைத் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 10 பேர் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்புதான் பிரிகோஜின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.


ஆக, பிரிகோஜின் புடினுடைய உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாகவும், அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் பரவின.

புடினின் அறிவிப்பு

 

இந்நிலையில், நேற்றிரவு ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் புடின், பிரிகோஜின் மரணம் தொடர்பில் சில புதிய தகவல்களை வெளியிட்டார்.

பிரிகோஜின் மற்றும் அந்த விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் கையெறிகுண்டுகளின் துகள்கள் இருந்தது தெரியவந்துள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.

வாக்னர் கூலிப்படை தலைவர் கொல்லப்பட்டது இவ்வாறு தான்! மறைமுக கருத்தை வெளியிட்ட புடின் | Wagner Mercenary Leader Killed Putin Explanation

அத்துடன், செயின்ட் பீற்றர்ஸ்பர்கிலுள்ள Prigozhin உடைய அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில், 10 பில்லியன் ரூபிள்கள் ரொக்கமும், 5 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருளும் கிடைத்ததாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

போதையில் பிரிகோஜின்

 

அப்படிப்பட்ட சூழலில், விமான விபத்தில் கொல்லப்பட்டவர்கள் உடலில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் இருந்ததா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், அந்த சோதனை நடத்தப்படவில்லை என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

வாக்னர் கூலிப்படை தலைவர் கொல்லப்பட்டது இவ்வாறு தான்! மறைமுக கருத்தை வெளியிட்ட புடின் | Wagner Mercenary Leader Killed Putin Explanation

 

அதாவது, விமானத்தில் பயணித்த Prigozhinம் மற்றவர்களும் போதையில், கையெறிகுண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம், அதுவே விமானம் வெடித்துச் சிதறக்காரணமாக அமைந்திருக்கலாம் என மறைமுகமாக புடின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விமானம் வெளியிலிருந்து தாக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என தான் ஏற்கனவே தெரிவித்திருந்ததையும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://ibctamil.com/article/wagner-mercenary-leader-killed-putin-explanation-1696575631

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.