Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்முனை நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை நோக்கி பயணித்த பேருந்து மன்னம்பிட்டி பாலத்தில் கவிழ்ந்து விபத்து - 9 பேர் பலி

Published By: RAJEEBAN

09 JUL, 2023 | 09:40 PM
image
 

கதுருவலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் மன்னப்பிட்டி பாலத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 

காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றனர். 

மீட்பு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன

358069353_10159423875068513_184687565217

359735856_10159423878483513_873467052626

356179864_130070383455668_13261875067736

356337244_515080367435073_86294155392165

https://www.virakesari.lk/article/159613

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னம்பிட்டிபாலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு – காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம்

09 JUL, 2023 | 10:39 PM
image
 

கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று  மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

358654179_692231336251366_46100349162484

இந்தப் பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது பாலத்திலிருந்து  கவிழ்ந்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இருள் சூழ்ந்ததால் காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/159614

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கிடை நானும் இந்த பஸ்ஸில மட்டக்களப்பிலுருந்து கல்முனைக்கு வருவது  கல்லடி பாலத்துல கவுக்கல  10 பேர் ஆகிவிட்டது பலி எண்ணிக்கை தனியார் பேருந்துகள் லாபத்துக்கென ஓடுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இடைக்கிடை நானும் இந்த பஸ்ஸில மட்டக்களப்பிலுருந்து கல்முனைக்கு வருவது  கல்லடி பாலத்துல கவுக்கல  10 பேர் ஆகிவிட்டது பலி எண்ணிக்கை தனியார் பேருந்துகள் லாபத்துக்கென ஓடுவதால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை

இலங்கையின் பஸ் பயணமே... ஊர் போய் சேர்ந்த பின் தான், உயிருக்கு உத்தரவாதம் போலுள்ளது.
மூன்று மணித்தியாலத்திற்கு ஒருவர், விபத்தில் இறப்பதாக அண்மைய செய்தி ஒன்றில் பார்த்தேன்.
இது... மிக மிக அதிகம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையின் பஸ் பயணமே... ஊர் போய் சேர்ந்த பின் தான், உயிருக்கு உத்தரவாதம் போலுள்ளது.
மூன்று மணித்தியாலத்திற்கு ஒருவர், விபத்தில் இறப்பதாக அண்மைய செய்தி ஒன்றில் பார்த்தேன்.
இது... மிக மிக அதிகம்.  

காலையில் விபத்தை பார்க்காமல் சில நாட் களில் பயணித்ததில்லை அண்ண 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

காலையில் விபத்தை பார்க்காமல் சில நாட் களில் பயணித்ததில்லை அண்ண 

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் விடயத்திலும், 
சாரதிகளின் பணி நேரத்தையும்.. கண்டிப்பாக சோதனை செய்தாலே...
பாதி விபத்துகள் குறைந்து விடும்.
ஒரு உயிரின் பெறுமதியை... அரசு, மலிவாக எடுக்கின்றது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னம்பிட்டிய பஸ் விபத்து குறித்து கிழக்கு ஆளுநர் அறிக்கை கோரல்!

பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மன்னம்பிட்டிய பகுதியில் நேற்று இரவு விபத்திற்குள்ளாகியது.

குறித்த விபத்தில் 11 பேர்வரை உயிரிழந்துள்ளதுடன் 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு,ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/மன்னம்பிட்டிய-பஸ்-விபத்த/

 

  • கருத்துக்கள உறவுகள்

விபத்துக்குள்ளான பேருந்திற்கு போக்குவரத்து சபையின் அனுமதிப் பத்திரம் இல்லை : போக்குவரத்து ஆணைக்குழு!

விபத்துக்குள்ளான பேருந்திற்கு போக்குவரத்து சபையின் அனுமதிப் பத்திரம் இல்லை : போக்குவரத்து ஆணைக்குழு!

பொலன்னறுவை மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள கொட்டலீய பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டிக்கு தேசிய போக்குவரத்து சபையின் அனுமதிப் பத்திரம் இல்லை என்று ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்;திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்முடைய வீதி ஒழுங்குமுறை சட்ட விதிகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஒழுங்கு விதிமுறைகளை மீறி பயணிக்கும் பேருந்துகளுக்கு மிக அதிகளவிலான தண்டப்பணம் அறவிடும் வகையில் தற்போது சட்டம் ஒழுங்கமைக்கப்படுகின்றது.

அதற்கமைவாக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். நேற்று இரவு விபத்துக்குள்ளான பஸ் மற்றும் அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறான பஸ்கள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் நடமாடும் பரிசோதனை குழுக்களை உட்படுத்தி நாங்கள் பஸ் வண்டிகளில் பரிசோதனைகளை முன்னெடுப்போம்.

அவ்வாறு பஸ்களின் தகவல்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் அதனை நிதிமன்றத்தில் சமப்ர்பித்து தண்டனை பெற்றுக்கொடுத்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1338468

  • கருத்துக்கள உறவுகள்

11 உயிர்களைப் பறித்த பேருந்து விபத்து; 3 வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்ட பேஸ்புக் பதிவால் பரபரப்பு

11 உயிர்களைப் பறித்த பேருந்து விபத்து; 3 வருடங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்ட பேஸ்புக் பதிவால் பரபரப்பு

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப்  பயணித்த பேருந்தொன்று நேற்றைய தினம் மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 11 பேர்  பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

மேலும் 40 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் பொலன்னறுவையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்து இடம்பெறுவதற்கு 3 வருடங்களுக்கு முன்னரே அதாவது 2020 ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி  குறித்த பேருந்தின் செயற்பாடு குறித்து ஒருவர் அதிருப்தி தெரிவித்து  தனது பேஸ்புக் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்பதிவில் ” குறித்த பேருந்தானது  பயணிகளின் உயிரைக் கருத்தில் கொள்ளாது மிகவும் வேகமாகப் பயணிப்பதாகவும்,  எதிர் திசையில் வாகனம் வந்தாலும் அவற்றுக்கு இடம்கொடுக்காமல் முந்திச்செல்வதாகவும், எனவே விரைவில் மக்களின் உயிரை அப்பேருந்தானது  காவுவாங்கப்போகின்றது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பதிவானது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.  குறித்த நபர் எச்சரித்ததைப் போன்றே நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இதனை கருத்தில் கொண்டிருந்தாலோ அல்லது அப்பேருந்தின் சாரதி மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலோ இக்கொடூர சம்பவம்  இடம்பெற்றிருக்காது எனப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இலங்கையில் இடம்பெறும்  வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பொறுப்புடன் செயற்படுவதின்  மூலமே  விபத்தின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

3f.jpg

https://athavannews.com/2023/1338405

  • கருத்துக்கள உறவுகள்

வேக கமறாவை பொருத்தி வீதி ஒழுங்கை கடைப்பிடிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: ஆற்றில் பேருந்து விழுந்து 10 பேர் உயிரிழப்பு - ஜன்னல் வழியே வெளியேறியவர் கண்டது என்ன?

இலங்கை விபத்து
 
படக்குறிப்பு,

கதுருவெல பகுதியிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட இந்த பேரூந்து, 7.45 மணியளவில் விபத்துக்குள்ளானதாக, அதில் பயணித்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் கூறினார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், மப்றூக்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆறு ஒன்றில் பேரூந்து ஒன்று வீழ்ந்து - நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணமடைந்தனர்.

பொலநறுவை மாவட்டம் - கதுருவெல பிரதேசத்திலிருந்து கல்முனை நகரம் நோக்கிப் புறப்பட்ட குறித்த பேரூந்து, மன்னம்பிட்டி 'கொட்டலிய' பாலத்திலிருந்து விலகி ஆற்றில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

கதுருவெல பகுதியிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட இந்த பேரூந்து, 7.45 மணியளவில் விபத்துக்குள்ளானதாக, அதில் பயணித்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் கூறினார். பேரூந்து புறப்பட்டு 15 நிமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆற்றில் பேரூந்து வீழ்ந்தவுடன் - தானே முதலில் தப்பித்ததாகவும், பேரூந்தின் ஜன்னல் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்து தான் பயணித்தமையினால், தன்னால் பேரூந்தினுள் இருந்து வெளியேற முடிந்ததாகவும் மேற்படி இளைஞர் கூறினார்.

இலங்கை பேருந்து

பேரூந்து விபத்துக்குள்ளானதை அடுத்து - கிராமத்திலுள்ளோர் ஆற்றில் இறங்கி பேரூந்தினுள் சிக்கியவர்களைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆயினும் பயணிகளில் 10 பேர் மரணமடைந்துள்ளதாக பிபிசி தமிழிடம் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். காப்பாற்றப்பட்ட 41 பேர் பொலநறுவை மற்றும் மன்னம்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்னர் எனவும் பொலிஸார் கூறினார்.

இந்த நிலையில் குறித்த பேரூந்து சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். . இதேவேளை மேற்படி பேரூந்தினுல் 60 பேர் வரை பயணித்திருக்கலாம் என தாம் நம்புவதாக தெரிவித்த மன்னம்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரியொருவர், ஆற்றில் இன்னும் தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாகக் கூறினார்.

பல விபத்துகள் நடந்த இடம்

விபத்தில் சிக்கியவர்

மன்னம்பிட்டி - கொட்டலிய பாலம் அமைந்துள்ள ஆற்றில் வாகனங்கள் வீழ்ந்து இதற்கு முன்னரும் பல தடவை விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

2011ஆம் ஆண்டு 07 பேருடன் பயணித்த வேன் ஒன்று, மேற்படி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 06 பேர் பலியாகினர். அதன்போது வாகனத்தை செலுத்தியவர் மட்டும் உயிர் பிழைத்தார். அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்தவர்களே அந்த விபத்தில் அப்போது உயிரிழந்தனர்.

குறித்த பாலம் அகலம் குறைந்ததாகவும், பாலத்தின் இரு பக்கத்திலும் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்படாமையுமே, அங்கு அடிக்கடி விபத்துகள் நிகழக் காரணம் என, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார். குறித்த பாலத்தின் வழியாக ஒரு திசையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் சென்ற பின்னரே, மறுதிசையிலிருந்து வரும் வாகனங்கள் பயணிக்க முடியும் வகையில், அந்தப் பாலம் மிகவும் குறுகலாக அமைந்துள்ளதாகவும் அந்த ஊடகவியலாளர் கூறுகின்றார்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான முழு விபரங்கள் இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும் குறித்த பஸ்ஸில் பயணித்த அம்பாறை மாவட்டம் - ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய முஹம்மட் இஜாஸ் என்பவர் மரணமடைந்துள்ளார் என, அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவரின் அனுபவம்

கண்டியில் நடைபெற்ற ஊடக செயலமர்வொன்றில் கலந்து கொண்டு - மேற்படி பேரூந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சில இளைஞர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளனர்.

அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் வீடு திரும்பியுள்ளதாக அந்த பேரூந்தில் பயணித்த மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எம். பவித்திரன் பிபிசி தமிழிடம் கூறினார். அவர் இன்று (10) அதிகாலை வீடு திரும்பினார்.

”அந்தப் பேரூந்து இருக்கைகள் அனைத்திலும் பயணிகள் இருந்தனர். பலர் நின்றுகொண்டு பயணித்தனர். விபத்து நடந்தபோது மிகவும் வேகமாக பேரூந்து பயணித்தது. அப்போது பாலத்தில் பேரூந்து மோதும் சத்தம் 'சட சட' வென தொடர்ச்சியாக் கேட்டது. என்ன என்று யோசிக்கும் போதே ஆற்றினுள் பஸ் விழுந்து புரண்டது. நானும் எனது அருகில் இருந்த ஊடகவியலாளர் ஒருவரும் பஸ் ஜன்னல் வழியாக வெளியேறினோம். அப்போது மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பிள்ளையை காப்பாற்றி வீதிக்கு கொண்டு வந்தோம். எனக்கும் உடல் முழுக்க பலமான 'அடி' விழுந்திருந்தது. விபத்து நடந்த உடனேயே அந்தக் கிராம மக்கள் அங்கு வந்து, பேரூந்தில் இருந்தவர்களை காப்பாற்றத் தொடங்கினார்கள். அந்த இருளில் அவர்கள் எப்படி அவ்வளவு சீக்கிரம் வந்தார்கள் என்று தெரியவில்லை" என, அந்த விபத்து அனுபவத்தை பிபிசியுடன் பவித்திரன் பகிர்ந்து கொண்டார்.

இதனையடுத்து தான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அங்கு சிசிக்சை பெற்றுக் கொள்ளாமல் வீடு திரும்பியதாகவும் பவித்திரன் தெரிவித்தார்.

பவித்திரன்
 
படக்குறிப்பு,

விபத்தில் தப்பிய பவித்திரன்

அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவு

இது இவ்வாறிருக்க, இந்த விபத்து தொடர்பில் உடனடி அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார் என, ஆளுநர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாகிய பேரூந்தில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அதிகமானோர் பயணித்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்துக்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரை ஆளுநர் பணித்துள்ளார்.

விபத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்ததுடன், இவ்விபத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்துமாறும் கூறியுள்ளதாக, ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cn0jyg845y2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னம்பிட்டி விபத்து : அனுமதிப்பத்திரத்தை பெறாமலேயே பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் பந்துல

12 JUL, 2023 | 09:46 AM
image
 

(எம்.மனோசித்ரா)

மன்னம்பிட்டிய பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற விபத்து தொடர்பில் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் குறித்த பஸ் உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

எனவே இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (11)  இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மன்னம்பிட்டிய விபத்தில் உயிரிழந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட ஏனையோரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் அரசாங்கத்தின் சார்பில் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களிள் அடிப்படையில் பேரூந்து சாரதியின் கவனயீனமே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ND7804 இலக்கம் கொண்ட குறித்த பஸ் , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமிருந்து உரிய முறையில் அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்கவில்லை.

கிழக்கு மாகாண சபையால் , 2018ஆம் ஆண்டு குறித்த பேரூந்துக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றத்தில் 10000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை செலுத்திய பின்னரும் அவர் இவ்வாறான தவறை இழைத்துள்ளார்.

இவ்வாறான தவறுகள் பல சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமையால் 10000 ரூபா அபராத தொகையை 5 இலட்சம் வரை அதிகரித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முச்சகரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிப்பதற்கான அதிகாரத்தையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறும் திருத்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பாலான பேரூந்துகள் அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன. இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார். 

https://www.virakesari.lk/article/159786

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.