Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்க மருத்துவமனைகளில் பெரும்பாலான சிடி ஸ்கானர்கள் முற்றாக செயல் இழந்த நிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

12 JUL, 2023 | 10:15 AM
image
 

அரசாங்க மருத்துவமனைகளில் பெரும்பாலான சிடி ஸ்கானர்கள் செயல் இழந்துவிட்டன என மருத்துவதுறை சார்நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்க மருத்துவமனைகளில் 44 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12  சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன, குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை,  ஹொரன தேசிய பல்வைத்தியசாலை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மாத்தறை ஆகிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் இயங்கவில்லை என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது.

சில மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள்  பல மாதங்களாக இயங்கவில்லை

இதனால் வறியமக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் அவர்களால் தனியார் மருத்துவமனைகளிற்கு செல்ல முடியாது. இதன் காரணமாக அரசாங்கம் இந்த இயந்திரங்களை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த இயந்திரங்கள் இயங்க மறுத்துள்ளதால் சில நோய்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்களும்  சிரமங்களை எதிர்கொள்கின்றனர் இதனால்  குழப்பங்கள் ஏற்படுகின்றன  என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159793

  • கருத்துக்கள உறவுகள்

அரச வைத்திய சாலைகளில் உள்ள விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை…. அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைகள்,   சில  ஊழியர்களுக்கு பணம் கொடுத்து வேண்டுமென்றே  பழுதாக்கி விடுவதாக @பெருமாள் முன்பு ஒரு திரியில் குறிப்பிட்டு இருந்தார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அரச வைத்திய சாலைகளில் உள்ள விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை…. அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைகள்,   சில  ஊழியர்களுக்கு பணம் கொடுத்து வேண்டுமென்றே  பழுதாக்கி விடுவதாக @பெருமாள் முன்பு ஒரு திரியில் குறிப்பிட்டு இருந்தார்.

மருந்துகள் கூட தரமற்றவையே என புகாரும் எழுந்துள்ளது. மக்கள் மக்குகளை தெரிவு செய்வதால் இதை அனுபவிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

மருந்துகள் கூட தரமற்றவையே என புகாரும் எழுந்துள்ளது. மக்கள் மக்குகளை தெரிவு செய்வதால் இதை அனுபவிக்க வேண்டும்

தரம் குறைந்த  மயக்க மருந்து ஒன்றினாலும்... சிலர் இருந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

மருந்துகள் தரமற்றவை, வைத்திய உபகரணங்களை பாதுகாக்கும் திறமை இல்லை, 
மருத்துவர்கள், தாதிகள் நாட்டை விட்டு வெளியேறுதல் என்று..
அரசியல்வாதிகளின் செயல் பாடுகள்,  முகத்தை சுழிக்க வைக்கின்றன.

பிக்குகளின் சொற்படி நடக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

தரம் குறைந்த  மயக்க மருந்து ஒன்றினாலும்... சிலர் இருந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

மருந்துகள் தரமற்றவை, வைத்திய உபகரணங்களை பாதுகாக்கும் திறமை இல்லை, 
மருத்துவர்கள், தாதிகள் நாட்டை விட்டு வெளியேறுதல் என்று..
அரசியல்வாதிகளின் செயல் பாடுகள்,  முகத்தை சுழிக்க வைக்கின்றன.

பிக்குகளின் சொற்படி நடக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும்.

அதுதானே தற்போது தாதியர் முதல் வைத்தியர் வரை குறைந்து கொண்டே போகிறது

  • கருத்துக்கள உறவுகள்

பூஞ்சைத் தொற்று காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புத் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

பூஞ்சைத் தொற்று காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புத் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளர்கள் கடந்த காலங்களில் பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் ஆராய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, சுகாதாரத்துறையின் தற்போதைய நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலை தொடர்பில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அங்கு மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1338786

@தனிக்காட்டு ராஜா

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்-சுகாதார அமைச்சு!

மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்-சுகாதார அமைச்சு!

சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் குறித்த மயக்க மருந்தினைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சில பெண்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2023/1338747

@தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அரச வைத்திய சாலைகளில் உள்ள விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை…. அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைகள்,   சில  ஊழியர்களுக்கு பணம் கொடுத்து வேண்டுமென்றே  பழுதாக்கி விடுவதாக @பெருமாள் முன்பு ஒரு திரியில் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த செய்தி உள்ளூர் செய்தி ஊடகத்தில் வந்ததையே இங்கு பதிந்தேன் ஆனால் அந்த தனியார் வைத்திய சாலைகளின் மறைமுக கைகள் இங்கு யாழில் கூட இருக்கின்றது .

எப்படிஎன்றால் எதிர் கருத்து வைக்க முடியாதவர்களின் கடைசி தஞ்சம் சதி கோட்பாடுகளை உருவாக்கும் செய்திகளை காவுபவர்கள் .😀

அரச வைத்திய சாலைகளில் இருந்து 5மைல் சுற்றளவுக்குள் தனியார் வைத்திய சாலைகள் இல்லாது தடை செய்யபடுதல் வேன்றும் அப்படி இல்லாவிட்டால் இங்கிருந்து எவ்வளவு சிலவழித்து தானமாய் உபகரனம்கள்  கொடுத்தாலும் பிரியோசனம் இல்லை . ஆற்றில் பணத்தை போடுவதுக்கு சமம் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்-சுகாதார அமைச்சு!

மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்-சுகாதார அமைச்சு!

சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் குறித்த மயக்க மருந்தினைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சில பெண்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2023/1338747

@தனிக்காட்டு ராஜா

தரம் குறைந்த மருந்து என கூறப்பட்டது இப்ப அது பழுதடைந்த  மருந்து பட்டியலில் சேர்ந்துள்ளது  இதுதான் நம்ம நாட்டு டிசைன்

  • கருத்துக்கள உறவுகள்

பேராதனை யவதியின் மரணத்திற்காண காரணம்

பேராதனை யவதியின் மரணத்திற்காண காரணம்

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காதது பேராதனை வைத்தியசாலையில் யுவதிஉயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச். எம். பி. எஸ். மடிவத்த இன்று தெரிவித்தார்.

யுவதிக்கு செலுத்தப்பட்ட மருந்தை 10 மில்லி சிரிஞ்சில் கரைத்து செலுத்த வேண்டும் என்றாலும், பேராதனை வைத்தியசாலையில் மட்டுமன்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 10 மில்லி சிரிஞ்ச்கள் இல்லை.இதனால் தாதி இரண்டு 5 மில்லி சிரிஞ்ச்களில் இரண்டு முறை ஊசி போட்டிருக்க கூடும் .

குறித்த 5 மில்லி சிரிஞ்சில் நீர்த்திருந்தால், அது அதிக செறிவூட்டலில் பெற்றிருக்கலாம் என்றும், அரசு மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்காததே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ள மருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து என்றும், செவிலியர் மீது எந்த தவறும் இல்லை என்றும், சரியான முறையில் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, தரம் குறைந்த மருந்து மிஷன் அல்லது வேறு காரணங்களுக்காக பெறப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
செவிலியர்களாகிய தாங்கள் நோயாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மருந்துகளையே வழங்க வேண்டியுள்ளது என தெரிவித்த அவர், மருந்தின் தரத்தை கையாளும் திறன் செவிலியர்களுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1339293

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதம் எனது தந்தைக்கு மீண்டும் நெஞ்சுவலி (காட் அட்டாக்) கதிர்காமம் நடந்து சென்றவர்.  வந்தது அவரது தம்பி இறந்த செயதியை அறிந்து கதிர்காம ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அங்கு அந்த மருத்துவ வசதி இல்லை மீண்டும் திஸ்ஸமகாராம எனும் ஊரில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்று 7 நாட்களின் பின்னர் ஊசி எல்லாம் போட்ட பிறகே அவரை கொண்டு வந்தோம் அடுத்த செக்கப் இருக்கிறது அதன் பின்னரே தெரியும் முடிவு என வைத்தியர் அருள்நிதி சொன்னவர் மட்டக்களப்பு.

@தமிழ் சிறி அண்ண

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடந்த மாதம் எனது தந்தைக்கு மீண்டும் நெஞ்சுவலி (காட் அட்டாக்) கதிர்காமம் நடந்து சென்றவர்.  வந்தது அவரது தம்பி இறந்த செயதியை அறிந்து கதிர்காம ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அங்கு அந்த மருத்துவ வசதி இல்லை மீண்டும் திஸ்ஸமகாராம எனும் ஊரில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்று 7 நாட்களின் பின்னர் ஊசி எல்லாம் போட்ட பிறகே அவரை கொண்டு வந்தோம் அடுத்த செக்கப் இருக்கிறது அதன் பின்னரே தெரியும் முடிவு என வைத்தியர் அருள்நிதி சொன்னவர் மட்டக்களப்பு.

@தமிழ் சிறி அண்ண

அட... கதிர்காமம் பாத யாத்திரை போன இடத்தில்...
இப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது பெரிய அலைக்கழிவை தந்திருக்கும்.
உங்கள் அப்பாவின் உடல் நிலையை... கருத்தில் கொண்டு,
அடுத்த ஆண்டு கதிர்காம பாத யாத்திரை செல்வது அவ்வஅளவு நல்லதல்ல.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சில முதியவர்களும், உடல் உபாதையால் 
அவதிப் பட்டதை செய்திகள் மூலமாக அறிந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2023 at 12:04, பெருமாள் said:

அரச வைத்திய சாலைகளில் இருந்து 5மைல் சுற்றளவுக்குள் தனியார் வைத்திய சாலைகள் இல்லாது தடை செய்யபடுதல் வேன்றும் அப்படி இல்லாவிட்டால் இங்கிருந்து எவ்வளவு சிலவழித்து தானமாய் உபகரனம்கள்  கொடுத்தாலும் பிரியோசனம் இல்லை . ஆற்றில் பணத்தை போடுவதுக்கு சமம்

இது நல்லதொரு யோசனை அப்படி அனுமதிக்கபடும் தனியார் வைத்தியசாலைகள் கடுமையான கண்காணிப்பில் வைத்திருக்கபட வேண்டும்.மக்களும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று அவர்களை ஊக்குவிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அட... கதிர்காமம் பாத யாத்திரை போன இடத்தில்...
இப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது பெரிய அலைக்கழிவை தந்திருக்கும்.
உங்கள் அப்பாவின் உடல் நிலையை... கருத்தில் கொண்டு,
அடுத்த ஆண்டு கதிர்காம பாத யாத்திரை செல்வது அவ்வஅளவு நல்லதல்ல.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சில முதியவர்களும், உடல் உபாதையால் 
அவதிப் பட்டதை செய்திகள் மூலமாக அறிந்தோம்.

இந்த வருடம் இருவர் இறந்து போனார்கள்  ஒருவருக்கு யானை அடித்து இறந்து போனார் மற்றவருக்கு பாம்பு கடித்து இறந்து போனார் நான் எதற்க்காக சொல்ல முனைகிறேன் என்றால் அந்த பெரிய வைத்திய சாலையில் கூட மருந்துகள் தட்டுப்பாடு நிலவியதை 

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்- ஐ.ம.ச.

சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்- ஐ.ம.ச.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மருந்து ஒவ்வாமைக் காரணமாக நாட்டில் இன்று பலர் உயிரிழந்துள்ளார்கள்.

இதுதொடர்பாக அரசாங்கத்திடம் வினவினால், இது சாதாரண ஒரு நிகழ்வு என்று சுகாதார அமைச்சர் பதில் வழங்குகிறார்.

மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு, அமைச்சராக உள்ள இவரின் இந்த பதிலை ஏற்றுக் கொள்ள முடியுமா?
தனது உறவினர்கள் ஊடாகவே, இவர் நாட்டுக்கு மருந்துகளைக் கொண்டுவருகிறார் என்று பலராலும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ராஜபக்ஷக்கள் எவ்வாறு தங்களின் உறவினர்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்களோ, அதேபோன்றுதான் சுகாதார அமைச்சரும் தற்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்க முடியாவிட்டால், சுகாதார அமைச்சர் உடனடியாக பதவிலியிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

அப்படி செய்யாவிட்டால், எதிர்க்கட்சியினராகிய நாம் சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை நாடாளுமன்றுக்கு கொண்டுவந்து, அவரை பதவியிலிருந்து வெளியேற்றுவோம்.

நாட்டில் வைத்தியர்களின் பற்றாகுறை நிலவுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலைகள் மீதான நம்பிக்கை குறைவடைந்துக் கொண்டும் செல்கிறது.

இவையணுத்துக்கும் சுகாதார அமைச்சர் பொறுப்புக்கூற வேண்டும்.

இதனை அவர் மேற்கொள்ள தவறுவாறாயின், கோட்டாபய ராஜபக்ஷவை மக்கள் எவ்வாறு விரட்டியடித்தார்களோ, அதே நிலைமைதான் இவருக்கும் ஏற்படும்.

அதற்கு முன்னர், எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து வெளியேற்றும்.” என்றார்

https://athavannews.com/2023/1339480

  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சரின் ஊழலால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர் : சாணக்கியன்.

இன்று டெங்கு நோயால் மக்கள் இறக்க கூடாது என டெங்கு ஊழியர்கள் மாவட்ட ரீதியாக செயற்படும் போது சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாக தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்த விடயங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

மக்களை காப்பாறி கொண்டிருக்கின்ற டெங்கு ஊழியர்களுக்கு  நீதி கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன் இன்று வெள்ளிக்கிழமை (14) டெங்கு ஒழிப்பு ஊழியர்களை நிரந்தர நியமனம் செய்யுமாறு கோரி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரா.சாணக்கின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

IMG_6154__1_.JPG

நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரம் டெங்கு ஒழிப்பு உதவியாளரர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றனர்.

இவர்கள் அரசாங்கம் இக்கட்டான நிலையில் முகம் கொடுத்த காலப்பகுதி மற்றும் கொரோனா காலப்பகுதியில் உயிரை பணயம் வைத்து இந்த நாட்டிலே மக்களின் பாதுகாப்புக்காக மிக குறைந்த சம்பளமான ஒரு நாளைக்கு 700 ரூபா சம்பளத்திற்கு கடமையாற்றி வருகின்றனர்.

இந்த நாட்டில் டெங்கு நோய் அதிகரித்துள்ள போது இவர்களது பணி இல்லாவிட்டால் எத்தனையோ பேர் மரணித்து இருப்பார்கள். எனவே இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தடைவ பேசியுள்ளோன்.

நாடாளுமன்றம் சென்று  வீரமாக பேசி வருவதை விட இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சர்களுடைய ஆலோசனைகுழு கூட்டத்தில் பேசவேண்டும்.

அதற்கமைய பவித்திரா வன்னியாராச்சி அமைச்சராக இருந்தபோது அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளேன் அதனை தொடர்ந்து ஹெலிய ரம்புக்வெல அமைச்சராக இருக்கும் வரை பேசியுள்ளேன்.

ஆளும் கட்சியில் 2020 ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு இன்று இராஜாங்க அமைச்சராக இருப்பர் கூட இந்த டெங்கு ஊழியர்களுக்கு நிரந்தரமான நியமனம் வழங்க கூடாது வேலையில் இருந்து நிறுத்தவேண்டும். இது தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி  போன்ற கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு நல்லாட்சி காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்களை நிறுத்திவிட்டு தங்களின் ஆதரவாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்பதில் இந்த ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது இதில் சிலர் இலஞ்சம் கொடுத்தனர்.

IMG_6156__1_.JPG

இந்த ஒரு இலட்சம் பேரை நிரந்தரமாக்கும் போது இவர்களையும் நிரந்தரமாக்கவும் என கோரினோம். மட்டக்களப்பில் இவ்வாறு கஸ்டப்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். 

இன்று டெங்கு நோயால் மக்கள் இறக்க கூடாது என டெங்கு ஊழியர்கள் மாவட்ட ரீதியாக செயற்படும் போது அமைச்சர் தரம் குறைந்த ஊசிகளை கொண்டுவந்ததன் காரணத்தால்  பேராதனையில் இளம் யுவதி இறந்துள்ளார்.

அதற்கான காரணம் 10 மில்லி மீற்றர் ஊசியை பயன்படுத்த வேண்டியதற்கு பெரிய ஊசியை பயன்படுத்தியமையால் இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாம். பேராதனை வைத்தியசாலை இலங்கையில் இருக்கும் 2 வது வைத்தியசாலை அந்த வைத்தியசாலையில் 10 எம் எம் ஊசி இல்லை என்றால் எமது கிராமப்புற வைத்தியசாலைகளில் அந்த ஊசி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. 

எங்கள் ஊரில் வைத்தியசாலையில் சிலர் இறந்தால் பேய் அடித்து இறந்தார்கள் என சொல்வார்கள் உண்மையில் பேய் அடித்து சாகவில்லை பிழையான ஊசியை போட்டு சாகடித்திருப்பார்கள் உண்மையில் இங்கு பேயும் அடிக்கவில்லை பிசாசும் அடிக்கவில்லை சுகாதார அமைச்சரின் ஊழல் காரணத்தால் தரம் குறைந்த ஊசி மருந்துக்களை கொண்டுவந்ததால் தான் இறப்பு இடம்பெற்றுள்ளது.

அமைச்சரின் ஊழலால் நாற்றுக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த டெங்கு ஊழியர்கள் மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர் இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

ஜனாதிபதியின் பிரதமராக காலப்பகுதியில் தான் இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது  அவர் இன்று மொட்டுகட்சியின் அரசியல் கைதியாக இருந்தாலும் கூட நீதியை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு பொறுப்பு இருக்கின்றது என்றார்.

சுகாதார அமைச்சரின் ஊழலால் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர் : சாணக்கியன் | Virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.