Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துரும்பான உடல் இரும்பாக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4234.jpg
தொழில்ரீதியாக உங்கள் உடற்
கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமானால், Anabole பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது”   இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு உடற் பயிற்சிக் கூடப் பயிற்சியாளர் ஒருவர்.

 Anaboleஐ பயன்படுத்தினால், தங்களின் வாழ்க்கையை அது  சிதைத்துவிடும் என்பதை கண்கூடாகக் கண்டும்  சிலர் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து அந்தத் தவறை செய்கிறார்கள்

உடற்பயிற்சியின் போது தசைக் கட்டமைப்பை (muscle building)வளர்த்துக்கொள்ள Anabole Steroide  ஊக்கமருந்தைப் பயன்படுத்துவார்கள். Jo Lindnerம் அதற்கு விதிவிலக்கானவரல்ல.

IMG-4232.jpg

உடற்கட்டமைப்பில், யேர்மனியின் மிக பெரிய நட்சத்திரமாக இருந்தவர் Jo Lindner. அவர் தனது 30ஆவது வயதில் (30.06.2023) மரணிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருக்கு Instagramஇல் ஒன்பது மில்லியன் பயணியர்கள் இருந்தார்கள்.அதிலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் தாய்லாந்திலும் அமெரிக்காவிலும் இருந்திருக்கிறார்கள். அவருடைய மரணம், இரத்த நாளங்களில் ஏற்பட்ட வீக்கத்தில் ஏற்பட்ட இரத்தக் கசிவாலேயே(Aneurysma)  நடந்தது எனச் சொல்லப்பட்டாலும் அதிகாரபூர்வமான மருத்துவ அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை.

“தனக்கு, கொஞ்ச நாட்களாக கழுத்தில் ஒரு வலி இருப்பதாகச் சொன்னான். அன்று மாலை அவன் என்னுடன்தான் இருந்தான். நான்கு மணிக்கு உடற் பயிற்சி செய்யும்  நண்பன் ஒருவனைச் சந்திக்க வேண்டும் என்று புறப்பட ஆயத்தமானான். திடீரென என் கையில் சாய்ந்தான். போய்விட்டான். எல்லாமே ஒரு கணத்தில் முடிந்து விட்டதுஎன்கிறாள் Jo Lindnerஇன் பெண் நண்பியான தாய்லாந்தைச் சேர்ந்த  Nicha.

மூன்று வருடங்களுக்கு முன்னர் Jo Lindner, தசைக் கட்டமைப்பை வளர்த்துக் கொள்ள மலிவான ஊக்கமருந்தை முதலில் பாவித்ததாகவும் பின்னர்  தவறான முறையில்  Anabole பயன்படுத்தி மார்பகத்தின் முலையில் தனக்கு வலி ஏற்பட்டதாகவும் ஆண்குறியில் தளர்வான நிலையை தான் உணர்ந்ததாகவும் YouTube-Videoவில் குறிப்பிட்டிருக்கிறார்.   
 IMG-4237.jpg



“என்னுடைய தலையைவிட எனது கை பெரிதாக இருக்க வேண்டும்இப்படிச் சொன்னவர் Rich Piana (†46). 2017 இல் மயங்கி விழுந்து, இரண்டு கிழமைகள் கோமாவில் இருந்து இறந்து போனார்.

IMG-4236.jpg

 

Liver King என்று அழைக்கப்பட்டவர் Brian Johnson (45). பச்சையாக ஈரலைச் சாப்பிடுவது போல் புகைப்படங்களில் தன்னைக் காட்டிக் கொண்டவர். தனது உடற்கட்டமைப்புக்கு ஒரு விலங்கின் மூக்கில் இருந்து வால்வரை உண்ணுகிறேன் என்றெல்லாம் ஊடகங்களுக்குக் கதை விட்டவர். முடிவில் எல்லாமே பொய் என்று ஆகிவிட்டது. மாதம் ஒன்றுக்கு 11,000 டொலர் கொடுத்து அவர் ஊக்கமருந்து வாங்கியதற்கான பற்றுச் சீட்டு வெளியாகி Johnson வருடக் கணக்காக  ஊக்கமருந்தை உட்கொண்டார்  என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

IMG-4235.jpg

ரஸ்ஸியாவைச் சேர்ந்த Tereshin (26), Anabole பயன்படுத்தவில்லை என்கிறார். Bazooka arms என்று பெருமையாக அவர் சொல்லும் தனது கைகளுக்கு வஸலீனை (Vaseline) ஊசி மூலமாகச் செலுத்திக் கொண்டதாகச் சொல்கிறார். இப்படியே போனால் இவர் தனது இரு கைகளையும் இழக்கலாம் அல்லது உயிரைக் கூட விட்டு விடலாம் என்கிறார்கள் அவரது நலன் விரும்பிகள்.

IMG-4238.jpg
 

Ronnie Coleman (59) தான்  Anabole உட்கொண்டதை ஒப்புக் கொள்கிறார். எட்டு வருடங்கள் ஒலிம்பிக் போட்டியில் வென்றவருக்கு இப்பொழுது  நடமாட ஒரு சக்கர நாற்காலி தேவைப்படுகிறது. குத்துச் சண்டை வீரர் முகமது அலி (†74)யின் இறுதி வாழ்க்கையும் சோகமாகத்தான் போனது.

ஈழத்திலும் உடற்பயிற்சி செய்பவர்கள் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும்  ஒரு சாண்டோ நிச்சயமாக இருப்பார். எனது ஊரான பருத்தித்துறையில் ஏகப்பட்ட சாண்டோக்கள் இருந்தார்கள். வருடம்தோறும் கடற்கரையில்  மேடை அமைத்து ஆணழகன் போட்டி நடத்துவார்கள். ஆண்களின் கட்டான உடல்கள் எண்ணையில் குளித்து மின் வெளிச்சத்தில் ஜொலிக்கும்.. அவர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க கதிர்காமத்தம்பி மாஸ்ரர், சாண்டோ மணியம், சாண்டோ துரைரத்தினம்,சாண்டோ சிங்கப்பூர் சர்வானந்தம், சாண்டோ துரைசிங்கம் என ஆசான்கள் இருந்தார்கள். பயிற்சி பெற வந்தவர்களில் வசதி உள்ளவர்கள் முட்டை பால் இறைச்சி எனச் சாப்பிட்டார்கள். ஆனால் பொதுவாக பயிற்சி பெற வந்தவர்கள் எல்லோரையும்இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர்  கட்டாயமாக கடலையை  தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதை பச்சையாகச் சாப்பிடச் சொன்னார்கள்

இயற்கையாகக் கிடைப்பதை எல்லாம் விட்டு விட்டு  தொலைதூரம் வந்துவிட்டோம்.

 

 

 

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

கடின வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு இயற்கையாகவே வயிற்றில் ஆறு பெட்டி(six pack) இருப்பதை பார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

கடின வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு இயற்கையாகவே வயிற்றில் ஆறு பெட்டி(six pack) இருப்பதை பார்த்திருக்கிறேன்.

அடுத்த முறை நேரில் சந்திக்கும் போது எனது Six Packs ளையும் காட்டுகின்றேன்😁

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கு மாறாக போனால் விளைவு இப்படித்தான் இருக்கும். இயற்கையாக கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சியும் செய்ய உடம்பு ஜம் என்று இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.