Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட போட்டித் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

FIFA மகளிர் உலகக்கோப்பை 2023: வரலாறு படைத்த மொராக்கோ பெண்கள் அணி!

23 மணி நேரம் முன்

 

FIFA மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக மொராக்கோ ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வரலாறு படைத்த மொராக்கோ பெண்கள் அணி

உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஜேர்மனியிடம் தோல்வியடைந்த மொராக்கோ அணி கொலம்பியாவை வீழ்த்தி மீண்டும் ஒரு பாரிய மீட்சியைக் கண்டது.

கொலம்பியா ஆதிக்கம் செலுத்திய இந்த ஆட்டத்தில், முதல் பாதியின் 49வது நிமிடத்தில் மொராக்கோவின் சிஸ்லான் செபக்கின் பெனால்டியை கொலம்பிய கோல் கீப்பர் காப்பாற்றினார். ஆனால் ரீபவுண்டை கோலாக மாற்றிய அனிசா லஹ்மரி (Anissa Lahmari) மொராக்கோவின் நாயகி ஆனார்.

 

23-64ccd5ac31168.webp

Getty Images

மொராக்கோ கோல் கீப்பரும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார், இரண்டாவது பாதியில் கொலம்பிய அணியை முந்நீர் விடாமல் பாதுகாத்தார்.

பெண்கள் உலகக் கோப்பையில் மொராக்கோ நாக் அவுட் கட்டத்தை எட்டியது இதுவே முதல் முறையாகும்.

கடைசிவரை கோல் அடிக்க திணறிய கொலம்பியா

59வது நிமிடத்தில் கொலம்பியாவிற்காக டானிலா மொன்டோயா கோஅல் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் மொராக்கோ கீப்பர் கதிஜா எர்மிச்சி அவரது முயற்சியைத் தடுத்தார். அடுத்த 20 நிமிடங்களில் கொலம்பியாவுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தாலும் கோல் அடிக்க முடியவில்லை.

 

23-64ccd5abc407c.webp

FoxSports

தோல்வியுற்ற போதிலும், கொலம்பியா குரூப் எச் பிரிவில் முதலிடம் பிடித்து 16வது இடத்தைப் பிடித்தது.

Round Of 16-ல் கொலம்பியா ஜமைக்காவையும், மொராக்கோ பிரான்சையும் எதிர்கொள்கிறது.

 

வரலாற்றில் முதல்முறையாக மூன்று ஆப்பிரிக்க நாடுகள்

இதனிடையே, FIFA மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நைஜீரியா, மொராக்கோ, தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் ரவுண்டு ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.  

https://news.lankasri.com/article/morocco-round-of-16-first-time-in-womens-world-cup-1691145641

  • Replies 85
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை; வெளியேறியது ஜேர்மன் அணி

19 மணி நேரம் முன்

 

2023 மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியிலிருந்து ஜேர்மனி வெளியேறியது.

மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக குரூப் சுற்றிலேயே ஜேர்மன் அணி வெளியேறியது.

முன்னதாக, அர்ஜென்டினா, பிரேசில், இத்தாலி, கனடா போன்ற பெரிய அணிகள் குரூப் ஸ்டேஜில் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டத்தில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த ஜேர்மனி தனது வரலாற்றில் முதல் முறையாக இரண்டாவது சுற்றில் (Round of 16) இருந்து வெளியேறியது.

 

23-64cd0f13ab601.webpEPA

குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் முதல் போட்டியில் மொராக்கோவை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜேர்மனி, இரண்டாவது போட்டியில் கொலம்பியாவுக்கு எதிராக தோல்வியுற்றது.

இதனால், மூன்றாவது போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக சிறந்த வெற்றி தேவைப்பட்டது. ஆனால் ஆறாவது நிமிடத்தில் லீ யங்கின் பாஸில் சோ ஹியூன் சோ கோல் அடிக்க ஜேர்மனி பின்தங்கியது. முதல் பாதியின் இறுதி நிமிடங்களில், ஹுத்தின் பாஸில் அலெக்ஸாண்ட்ரா பாப் ஜேர்மனிக்கு கோல் அடித்து சமன் செய்தார்.

23-64cd0f13533a4.webpGetty Images

இரண்டாவது பாதியில் ஜேர்மனியை மீண்டும் ஒருமுறை முன்னிலையில் வைத்தார் பாப். ஆனால் வார் கோலை ஆஃப்சைட் என்று அழைத்தவுடன் ஜெர்மனியின் கொண்டாட்டங்கள் முடிந்தன. அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி ஜேர்மனி முயற்சித்தது, ஆனால் தென்கொரிய தற்காப்பு அணி அசையவில்லை.

https://news.lankasri.com/article/germany-eliminated-fifa-womens-world-cup-2023-1691160338

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோல் மழை பொழிந்து சுவிஸை பந்தாடிய ஸ்பெயின்! முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி

58 நிமிடங்கள் முன்

 

மகளிர் உலகக்கோப்பையில் ஸ்பெயின் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

ஸ்பெயின் அதிரடி ஆட்டம்

ஈடன் பார்க் அவுடர் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே ஸ்பெயின் வீராங்கனை அயிட்டன பொன்மட்டி மிரட்டலாக கோல் அடித்தார். 

women-spain-team-qualify-first-time-in-wc-2023 AP Photo/Andrew Cornaga

அந்த அணியின் மற்றொரு வீராங்கனையான லையா கொடினா, 11வது நிமிடத்தில் பந்தை கோல் கீப்பருக்கு கடத்த முயன்றார். ஆனால், கோல் கீப்பர் நீண்ட தூரம் முன்னேறி வந்ததால் அந்த பந்தை தவற விட்டுவிட்டார். இதனால் Own Goal ஆக மாறியது.

அற்புதமான கோல்

அதன் பின்னர் ஸ்பெயின் வீராங்கனைகள் அதகளம் செய்தனர். 17வது நிமிடத்தில் அல்பா ரேடோண்டோ தலையால் முட்டி கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து அயிட்டன கால்களில் வித்தை காட்டி தனது இரண்டாவது கோலை (36வது நிமிடம்) அடித்தார். 

women-spain-team-qualify-first-time-in-wc-2023 Reuters

உலகக்கோப்பைக்கு தகுதி

45வது நிமிடத்தில் லையா மிரட்டலாக கோல் அடித்து தனது Own Goal தவறை திருத்திக் கொண்டார். 

women-spain-team-qualify-first-time-in-wc-2023AP

ஜெனிபர் ஹெர்மொசோ 70வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடிக்க ஸ்பெயின் 5-1 என்ற கோல் கணக்கில் சுவிஸை வீழ்த்தியது.

இதன்மூலம் முதல் முறையாக மகளிர் உலகக்கோப்பையில் காலிறுதிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றது.   

women-spain-team-qualify-first-time-in-wc-2023 

AP Photo/Abbie Parr

https://news.lankasri.com/article/women-spain-team-qualify-first-time-in-wc-2023-1691228392

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி ஹிஜாப் அணியை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடன் மயிரிழையில் அமெரிக்காவை வென்றது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 8 குழுக்களில் ஸ்பெயின்  நெதர்லாந்துடனும், சுவீடன் ஜப்பானுடனும் விளையாடவுள்ளன.
இன்னும் 4 குழுக்கள் தெரியப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2023 at 06:30, ஏராளன் said:

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டம் ஆரம்பம்

Published By: SETHU

20 JUL, 2023 | 06:30 AM
image
 

(ஆர்.சேது­ராமன்)

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டச் சுற்­றுப்­போட்டி இன்று ஆரம்­ப­மா­­கின்­றது. சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம் 9ஆவது தட­வை­யாக நடத்தும் இப்­போட்­டி­களை அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்­து­கின்­றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் திகதி சிட்னி நகரில் நடை­பெ­ற­வுள்­ளது.

இம்­முறை முதல் தட­வை­யாக 32 அணிகள் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. இதற்­கு முன் அதி­க­பட்­ச­மாக 24 அணி­களே பங்­கு­பற்­றின. 

முத­லா­வது போட்­டியில் நியூ­ஸி­லாந்து, நோர்வே அணிகள் மோத­வுள்­ளன. இலங்கை நேரப்­படி இன்று பிற்­பகல் 12.30 மணிக்கு நியூ­ஸி­லாந்தின் ஆக்­லாந்து நக­ரி­லுள்ள ஈடன் பார்க் அரங்கில் இப்­போட்டி ஆரம்­ப­மாகும். அதற்கு முன் இதே அரங்கில் ஆரம்ப விழா நடை­பெ­ற­வுள்­ளது. இன்று பிற்பகல் 3,30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 2ஆவது போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா, அயர்­லாந்து அணிகள் மோத­வுள்­ளன.

மகளிர் கால்­பந்­தாட்­டத்­துக்குத் தடை

முத­லா­வது சர்­வ­தேச மகளிர் கால்­பந்­தாட்டப் போட்டி 1881ஆம் ஆண்டு ஸ்கொட்­லாந்தில் நடை­பெற்­றது. ஸ்கொட்­லாந்து, இங்­கி­லாந்து அணிகள் அப்­போட்­டியில் மோதின.

எனினும், 1921ஆம் ஆண்டு முதல் 1970 ஜன­வரி வரை இங்­கி­லாந்து கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம், பெண்­க­ளுக்­கான போட்­டி­க­ளுக்கு தடை விதித்­தி­ருந்­தது. ஜேர்­மனி, பிரான்ஸ், பிரேஸில் போன்ற நாடு­க­ளிலும் மகளிர் கால்­பந்­தாட்­டத்­துக்கு பல தசாப்­தங்கள் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது.Womens-World-Cup-2.jpg

1970ஆம் ஆண்டு சுயா­தீன ஐரோப்­ பிய மகளிர் கால்­பந்­தாட்டச் சம்­மே­ளனம் எனும் அமைப்­பால், இத்­தா­லியில் முத­லா­வது மகளிர் உலக சம்­பி­யன்ஷிப் எனும் பெயரில் சுற்­றுப்­போட்­டி­யொன்று நடத்­தப்­பட்­டது. அதன் இறு­திப்­போட்­டியில் இத்­தா­லியை வென்று டென்மார்க் சம்­பி­ய­னா­கி­யது.

1971ஆம் ஆண்டு மெக்­ஸி­கோ­விலும் இதே அமைப்­பால் மற்­றொரு உலக சுற்­றுப்­போட்டி நடத்­தப்­பட்­டது. அதன் இறு­திப்­போட்­டியில் மெக்­ஸி­கோவை வென்று டென்மார்க் சம்­பி­ய­னா­கி­யது.  

பீபா ஏற்­பாட்டில்...

சர்­வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ள­னத்தின்(பீபா) ஏற்­பாட்டில் முத­லா­வது மகளிர் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி 1991ஆம் ஆண்டு சீனாவில் நடை­பெற்­றது. 12 அணிகள் அச்­சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்­றின. அமெ­ரிக்கா முத­லா­வது சம்­பி­ய­னா­கி­யது. இது­வரை நடை­பெற்ற 8 போட்­டி­களில் 36 அணிகள் குறைந்­த­பட்சம் ஒரு சுற்­றுப்­போட்­டி­யி­லா­வது பங்­கு­பற்­றி­யுள்­ளன. 

இவற்றில் அமெ­ரிக்கா 4 தட­வைகள் சம்­பி­ய­னா­கி­யுள்­ளது. ஜேர்­மனி 2 தட­வை­களும், நோர்வே, ஜப்பான், ஆகி­ யன தலா ஒரு தட­வையும் சம்­பி­ய­னா­கி­யுள்­ளன. இறுதியாக 2015ஆம் ஆண்­டில் நடை­ பெற்ற 2 சுற்­றுப்­போட்டிக­ளி லும் அமெ­ரிக்­காவே சம்பிய­னா­கி­யது. மகளிர் கால்­பந்­தாட்­ டத்தில் அமெ­ரிக்கா, ஜேர்மனி, நோர்வே, ஜப்பான், சீனா, சுவீ டன், பிரேஸில், நெதர்­லாந்து, இங்­கி­லாந்து, கனடா, அவுஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ், டென்மார்க் முத­லான அணிகள் ஆதிக்கம் செலுத்தி வரு­கின்­றன.

FiFA-2023-worrl-cup-Players.jpg

முதன்­மு­றை­யாக

இம்­முறை முதல் தட­வை­யாக இரு நாடு­களில் மகளிர் உலகக் கிண்ண சுற்­றுப்­போட்டி நடை­பெ­று­கி­றது. நியூ­ஸி­லாந்தின் ஆக்­லாந்து, டனடின், ஹமில்டன், வெலிங்டன் ஆகிய 4 நக­ரங்­க­ளிலும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்பேர்ன், பேர்த், சிட்னி ஆகிய 5 நக­ரங்­க­ளிலும் இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. 

போர்த்­துக்கல், அயர்­லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஹெய்ட்டி, பனாமா, ஸாம்­பியா, மொரோக்கோ ஆகி­யன முதல் தட­வை­யாக இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­று­கின்­றன. 

பணப் ­ப­ரிசு

இச்­சுற்­றுப்­ போட்­டியில் சம்­பி­ய­னாகும் நாட்டின் கால்­பந்­தாட்டச் சங்­கத்­துக்கு சம்­பியன் கிண்­ணத்­துடன் 4,290,000 அமெ­ரிக்க டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் அக்­கு­ழா­மி­லுள்ள ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 270,000  டொலர் வழங்­கப்­படும். அதா­வது முத­லிடம் பெறும் நாட்­டுக்கு மொத்­த­மாக 10,500,000 டொலர் வழங்­கப்­படும். 

2ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 3,015,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 195,000 டொலர் வழங்­கப்­படும். 3ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 2,610,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 180,000 டொலர் வழங்­கப்­படும். 

4ஆம் இடம்­பெறும் நாட்டின் சங்­கத்­துக்கு 2,455,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 165,000 டொலர் வழங்­கப்­படும்.  கால் இறு­தி ­வரை முன்­னேறும் நாடு­களின் சங்­கங்­க­ளுக்கு தலா 2,180,000 டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 90,000 டொலர் வழங்­கப்­படும். 

2023-FIFA-women-world-cup-logo.jpg

9 முதல் 16ஆவது இடங்­களைப் பெறும் நாடு­களின் சங்­கங்­க­ளுக்கு தலா 1,870,000  டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 60,000 டொலர் வழங்­கப்­படும்.  17 முதல் 32 வரை­யான இடங்­களைப்  பெறும் நாடு­களின்  சங்­கங்­க­ளுக்கு தலா 1,560,000  டொலர் வழங்­கப்­படும். அத்­துடன் ஒவ்­வொரு வீராங்­க­னைக்கும் தலா 30,000 டொலர் வழங்­கப்­படும். 

அணிகள் விபரம்:

குழு ஏ: நியூஸிலாந்து, நோர்வே, பிலிப்பைன்ஸ். சுவிட்ஸர்லாந்து,

குழு பி:  அவுஸ்திரேலியா, அயர்லாந்து, நைஜீரியா, கனடா. 

குழு சி: ஸ்பெய்ன், கொஸ்டாரிக்கா, ஸாம்பியா, ஜப்பான், .

குழு டி: இங்கிலாந்து, ஹெய்ட்டி, டென்மார்க், சீனா. 

குழு ஈ: அமெரிக்கா, வியட்நாம், நெதர்லாந்து, போர்த்துக்கல்,

குழு எவ்: பிரான்ஸ், ஜமெய்க்கா, பிரேஸில், பனாமா. 

குழு ஜி: சுவீடன், தென் ஆபிரிக்கா, இத்தாலி, ஆர்ஜென்டீனா,

குழு எச்: ஜேர்மனி, மொரோக்கோ, கொலம்பியா, தென் கொரியா.

https://www.virakesari.lk/article/160440

 

பீப்பா கிண்ணமா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

பீப்பா கிண்ணமா? 

ஏனய்யா ஏதும் எழுத்துப் பிழையோ?! இல்லை படத்தைப்பார்க்க உடம்பு கூடியதாக இருக்கோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கோப்பையில் நெதர்லாந்து காலிறுதிக்கு தகுதி! தலையால் முட்டி கோல்..வீராங்கனை சாதனை

1 நாள் முன்

 

மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

ஜில் ரூர்ட் சாதனை

Allianz மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நெதர்லாந்து வீராங்கனைகள் துடுப்புடன் செயல்பட்டனர்.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஜில் ரூர்ட் தலையால் முட்டி கோல் அடித்தார். இதன்மூலம் ஒரே உலகக்கோப்பையில் 4 கோல்கள் அடித்த முதல் டச்சு வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். 

ned-qualify-to-quater-final-wc-2023  Twitter (FIFAWWC)

இதற்கு பதிலடியாக தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் நெதர்லாந்து கோல் கீப்பர் டொம்செலார் அவர்களது முயற்சிகளை தவிடு பொடியாக்கினார்.

இதற்கிடையில் 68வது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு லினெத் மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது.

ned-qualify-to-quater-final-wc-2023  Twitter (FIFAWWC)

காலிறுதியில் நெதர்லாந்து

தென் ஆப்பிரிக்க கோல் கீப்பரின் தவறினால் இந்த கோல் சாத்தியமானது. அதன் பின்னர் இறுதிவரை தென் ஆப்பிரிக்காவால் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. தோல்வியால் தென் ஆப்பிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியது. 

ned-qualify-to-quater-final-wc-2023  Getty Images

11ஆம் திகதி நடக்க உள்ள முதல் காலிறுதியில் நெதர்லாந்து அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நொடி கோல் அறிவிப்பால் திரில் வெற்றி பெற்ற ஸ்வீடன்! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய அமெரிக்கா

1 நாள் முன்

 

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

கடைசிவரை விழாத கோல்

மெல்போர்ன் ரெக்டாங்குலர் மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. 

 

 

 

இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கடைசி வரை கோல் எதுவும் விழவில்லை. இதனால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இரு அணி வீராங்கனைகளும் அடித்த ஷாட்கள் கோல் வலைக்குள் செல்லவில்லை. 

sweden-qualify-wc-quater-finalTwitter

கோல் அறிவிப்பு

இந்நிலையில் ஸ்வீடன் வீராங்கனை ஹர்டிங் அடித்த ஷாட்டை அமெரிக்க கோல் கீப்பர் தடுத்தார். ஆனால் மூன்றாம் நடுவர் Check செய்தபோது பந்து வலைக்குள் விழுந்திருக்கும் என்பதாலும், கோல் கீப்பர் கோட்டினை தொட்டு பந்தை தடுத்ததாலும் அது கோல் என அறிவிக்கப்பட்டது. 

sweden-qualify-wc-quater-final Twitter

இதனால் ஸ்வீடன் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து 11ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது ஸ்வீடன்.

தோல்வியுற்றதால் அமெரிக்க அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் அமெரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது இது தான் முதல் முறை ஆகும்.   

sweden-qualify-wc-quater-final 

Twitter

https://news.lankasri.com/article/sweden-qualify-wc-quater-final-1691326721

  • கருத்துக்கள உறவுகள்

மதவாத ஹிஜாப் அணிந்து விளையாட்டிற்கும் பெண்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்திய மொரோக்கோ அணி பிரான்ஸ் அணியிடம்  4 - 0  தோல்வியடைந்த வீடு போவது மகிழ்ச்சி. பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2023 at 01:21, ஏராளன் said:

ஏனய்யா ஏதும் எழுத்துப் பிழையோ?! இல்லை படத்தைப்பார்க்க உடம்பு கூடியதாக இருக்கோ?

 

ஊடகம், ஊடகவியலாளார் என்று கூறிக்கொண்டு இப்போது தனிப்பட்டவர்களின் விடயங்களை எல்லாம் சந்திக்கு கொண்டு வந்து நாறடிக்கின்றார்கள். ஆனால் என்னவோ இவர்களுக்கு தமிழ் மட்டும் ஒழுங்காக எழுத தெரியவில்லை. 

வீரகேசரி இலங்கையின் பழமை வாய்ந்த முன்னணி நாளிதழ். இவர்களே தமிழில் தடக்குப்படுகின்றார்கள் என்றால் மிகுதி ஊடக அவியல்களின் நிலமை எப்படி காணப்படும்?

FIFA என எழுதலாம் அல்லது சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம்/ காற்பந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு என விரிவுபடுத்தி தமிழில் விளங்கும்படி எழுதி பிரசு செய்யலாம்.

FIFA இற்கு பீபா நிகரான தமிழா?

யார் வீட்டுக்குள் போய் யார் படுக்கின்றார்கள், யார் யாரை காதலிக்கின்றார்கள், யார் வீட்டு கோடிக்குள் யார் வீட்டு நாய் நிற்கின்றது என செய்திகள் பிரசுரம் செய்யும் ஆர்வத்தை சிறிதளவு தமிழை ஒழுங்காக எழுதுவதில் செய்யலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

வீரகேசரி இலங்கையின் பழமை வாய்ந்த முன்னணி நாளிதழ். இவர்களே தமிழில் தடக்குப்படுகின்றார்கள் என்றால் மிகுதி ஊடக அவியல்களின் நிலமை எப்படி காணப்படும்?

இது லங்காசிறியின் விளையாட்டுச் செய்திகள்.

ஆனாலும் நீங்கள் கூறுவதில் உண்மையுண்டு, நான் இணைக்கும் செய்திகளை ஓரளவு சரி பார்த்தே இணைப்பதுண்டு. எழுத்துப்பிழை, இடைவெளி, சிலவற்றில் கருத்துப் பிழை போன்றவற்றை சரி பார்ப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கோப்பையில் வீராங்கனையின் படுமோசமான செயல்! கடுமையாக விளாசும் ரசிகர்கள்

1 நாள் முன்

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் Round of 16 சுற்றில் இங்கிலாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதி வருகின்றன. 

இங்கிலாந்து வீராங்கனை வெளியேற்றம்

பரபரப்பான இந்த போட்டியின் 87வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரென் ஜேம்ஸின் செயல் பலருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

நைஜீரிய வீராங்கனை மிச்செல்லே அலோஸி மீது அவர் மீதே விழுந்த லாரென் ஜேம்ஸ், எழுந்து செல்லும்போது வேண்டுமென்றே காலால் அலோஸியின் முதுகில் மிதித்துவிட்டு சென்றார். 

இது கமெராவில் தெளிவாக தெரிந்ததைத் தொடர்ந்து, களநடுவர் உடனடியாக லாரென் ஜேம்ஸுக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினார்.

இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி 

இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களில் லாரென் ஜேம்ஸ் செயலை கடுமையாக ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.   

லாரென் ஜேம்ஸ்/Lauren James

Twitter (@livescore)

லாரென் ஜேம்ஸ்/Lauren JamesTwitter (@brfootball)

இதற்கிடையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையிலும் இரு அணிகளின் தரப்பிலும் கோல்கள் விழாததால் பெனால்டிஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.   

மிச்செல்லே அலோஸி/Michelle Alozie

https://news.lankasri.com/article/lauren-james-worst-behaviour-on-nigerian-player-wc-1691404008

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கோப்பை காலிறுதியில் நுழைந்த அவுஸ்திரேலியா! நடையைக் கட்டிய டென்மார்க்

1 நாள் முன்

 

டென்மார்க் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது.

புயல்வேகத்தில் கோல் அடித்த வீராங்கனை

அவுஸ்திரேலியா - டென்மார்க் அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி Stadium Australia-யில் நடந்தது.

அவுஸ்திரேலியாவின் கெய்ட்லின் ஃபூர்ட் புயல் வேகத்தில் செயல்பட்டு கோல் அடித்தார் (29வது நிமிடம்).

அதனைத் தொடர்ந்து 70வது நிமிடத்தில் ஹேலே ரஸோவின் மிரட்டலான கோல் மூலம் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகித்தது. 

aus-qualify-2023-wc-quater-final

Twitter (@FIFAWWC)

காலிறுதியில் நுழைந்த அவுஸ்திரேலியா

டென்மார்க் அணியால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

இதுவரை 6 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன. நாளை நடைபெற உள்ள கொலம்பியா - ஜமைக்கா, பிரான்ஸ் - மொராக்கோ போட்டிகளில் வெற்றி பெறும் எஞ்சியுள்ள இரு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.   

aus-qualify-2023-wc-quater-final

Getty Images 

aus-qualify-2023-wc-quater-final

Twitter(FIFAWWC)

https://news.lankasri.com/article/aus-qualify-to-wc-2023-quater-final-1691415585

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கோப்பையில் முதல் முறை! காலிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா

17 மணி நேரம் முன்

 

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியா அணி முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

வெற்றி கோல்

மெல்போர்ன் ரெக்டாங்குலர் மைதானத்தில் போட்டியில் கொலம்பியா மற்றும் ஜமைக்கா அணிகள் மோதின. 

colombia-qualify-quarter-final-wc-first-time Hannah McKay/Reuters

பரபரப்பான இந்தப் போட்டியில் கொலம்பியா அணியின் கடலினா உஸ்மே 51வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து இருபுறமும் நடந்த கோல் முயற்சிகள் தோல்வி அடைந்தன. 

colombia-qualify-quarter-final-wc-first-time 

hamish blair/Associated Press

காலிறுதிக்கு முன்னேற்றம்

இதனால் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொலம்பியா அணி முதல் முறையாக உலகக்கோப்பை காலிறுதிக்கு தகுதி பெற்றது.

1999, 2003, 2007 உலகக்கோப்பைகளுக்கு தகுதி பெற தவறிய கொலம்பிய அணி, 2011ஆம் ஆண்டில் Group Stage உடன் வெளியேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டில் ரவுண்டு ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் தான் காலிறுதிக்கு தகுதி பெற்று இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.  

colombia-qualify-quarter-final-wc-first-time 

Hannah McKay/Reuters

colombia-qualify-quarter-final-wc-first-time 

WILLIAM WEST / AFP

https://news.lankasri.com/article/colombia-qualify-quarter-final-wc-first-time-1691497666

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக்கோப்பையில் பிரான்ஸ் மிரட்டல் வெற்றி..இரண்டு கோல்கள் அடித்த வீராங்கனை

19 மணி நேரம் முன்

 

2023 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் அதிரடி ஆட்டம்

Hindmarsh மைதானத்தில் நடந்த போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸை, முதல் முறையாக ரவுண்டு ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ அணி எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மொராக்கோ தடுமாறியது.

france-enters-quarter-final-wc-2023 FRANCK FIFE

 

15வது நிமிடத்தில் பிரான்ஸின் டையானி ஒரு கோலும், கேன்ச டாலி 20வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

இதனைத் தொடர்ந்து 23வது நிமிடத்தில் ஐகேனியே அபாரமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 3-0 என முன்னிலை வகித்தது. 

france-enters-quarter-final-wc-2023 

மொராக்கோ வெளியேற்றம்

மொராக்கோ அணி இரண்டாம் பாதியில் பிரான்ஸின் கோல் மழைக்கு முட்டுக்கட்டை போட்டாலும், அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 

france-enters-quarter-final-wc-2023

Getty Images

ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் ஐகேனியே தனது இரண்டாவது கோலை அடித்தார். இறுதியில் பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

12ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் பிரான்ஸ் அணி காலிறுதியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. 

france-enters-quarter-final-wc-2023 

Getty Images

https://news.lankasri.com/article/france-enters-to-quarter-final-wc-2023-1691506118

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை வெளி ஏற்றியாச்சு

ஜ‌ப்பான் ம‌க‌ளிர் அணி கோப்பை தூக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்.........................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

அமெரிக்காவை வெளி ஏற்றியாச்சு

ஜ‌ப்பான் ம‌க‌ளிர் அணி கோப்பை தூக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்.........................

யப்பான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் போல உள்ளது. அருமையான நைஜீரியா குழு துரதிஸ்டமாக வெளியேறியது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

யப்பான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் போல உள்ளது. அருமையான நைஜீரியா குழு துரதிஸ்டமாக வெளியேறியது.

ஓம் அண்ணா

இங்லாந் ம‌க‌ளிர் அணிக்கு சிவ‌ப்பு அட்டை கிடைக்க‌ 

நைஜீரியா ம‌க‌ளிர் அணி வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து

க‌ட‌சியில் ப‌னாட்டியில் தோல்வி அடைந்து வெளிய‌ போட்டின‌ம்...............நினைத்து பார்த்தா சிறு க‌வ‌லை தான் விளையாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம் தானே வெற்றி தோல்வி🙏.......................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் கடந்த காலங்களில் யப்பானும் யேர்மனி அமெரிக்கா மாதிரி சம்பியன் கோப்பையை தூக்கிவிட்டனர். அதை இம்முறை எடுப்பதற்கு அல்லது இறுதி ஆட்டத்திற்கு வருவதற்கோ போராடி கொண்டிருப்பவர்கள் அவுஸ்ரேலியா, பிரான்ஸ் இங்கிலாந்து, கொலம்பியா. ஏற்கெனவே இறுதி ஆட்டத்திற்கு சுவீடன், ஸ்பெயினும் , நெதர்லண்டும் வந்தவர்கள்.  தங்களை இறுதி ஆட்டத்தில்  வெற்றிபெற்று தான் யாரும் கோப்பையை தூக்க முடியும் என்பதில் அவுஸ்ரேலிய வீராங்கனைகள் உறுதியுடன் இருக்கின்றனராம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயி ன்  நெதர்லண்டை 2 - 1 வெற்றி கொண்டு, சுவீடன்  யப்பானை 2 - 1 வெற்றி கொண்டு அரை அறுதி ஆட்டத்தில் ஸ்பெயினும் சுவீடனும் மோதபோகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த ஸ்பெயின்! கூடுதல் நேரத்தில் விழுந்த கோல்

4 மணி நேரம் முன்

 

மகளிர் உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என நெதர்லாந்தை வீழ்த்தியது.

பெனால்டியில் முதல் கோல்

ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி வெல்லிங்டன் ரீஜினல் மைதானத்தில் நடந்தது. 

spain-beat-ned-and-enters-semi-final-wc-2023 

Marty MELVILLE / AFP

ஆட்டம் தொடங்கி 80 நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 81வது நிமிடத்தில் நெதர்லாந்து வீராங்கனையின் கையில் பந்து பட்டதால் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மரியோனா கால்டெண்டே அடித்த ஷாட் கோல் போஸ்ட் கம்பத்தில் பட்டு கோல் ஆனது.

ஸ்பெயின் வெற்றி

அதன் பின்னர் நெதர்லாந்து அணி வீராங்கனை 90+1வது நிமிடத்தில் ஸ்டெபானி கோல் அடித்தார். 90 நிமிடங்கள் முடிந்தபோது 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்தது. 

spain-beat-ned-and-enters-semi-final-wc-2023

Twitter (FIFAWWC)

பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (111வது நிமிடம்) ஸ்பெயினின் சல்மா செலஸ்டி வெற்றி கோல் அடித்தார்.

இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.   

spain-beat-ned-and-enters-semi-final-wc-2023

Getty

https://news.lankasri.com/article/spain-beat-ned-and-enters-to-semi-final-wc-2023-1691735619

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 14:33, nunavilan said:

யப்பான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் போல உள்ளது. அருமையான நைஜீரியா குழு துரதிஸ்டமாக வெளியேறியது.

ஜ‌ப்பானும் நெத‌ர்லாந்தும் வெளிய‌

 

ஜ‌ப்பான் ம‌க‌ளிர் அணிக்கு ப‌னாட்டி கிடைச்ச‌து அத‌ கோலுக்கு அடிக்க‌ த‌வ‌றிட்டின‌ம்............சிவிட‌ன் உள்ள‌😯................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

 

எங்கடை ஜேர்மன் பிள்ளையள் ஒரு சொட்டிலை தோத்துப்போச்சினம். இல்லையெண்டால் இப்ப நடக்கிற கதையே வேறை......:cool: :rolling_on_the_floor_laughing:

3:0 in Türkei: DFB-Frauen lösen WM-Ticket :: DFB - Deutscher Fußball-Bund  e.V.

அவுஸ்ரேலிய கண்டம் கலங்கியிருக்கும் :beaming_face_with_smiling_eyes:

Edited by குமாரசாமி
பட மாற்றம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.