Jump to content

தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

 
படக்குறிப்பு,

இந்திய பிரதமர் மோதியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 21 ஜூலை 2023, 11:22 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

புதுடெல்லியிலுள்ள பிரதமரின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில், இந்த விஜயமானது மிகவும் முக்கியத்துவமானதாக கருதப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் ஐந்து புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்தியா - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் கால்நடை பராமரிப்புத்துறையில் கூட்டு நோக்கத்தின் பிரகடனம், இந்தியா மற்றும் இலங்கை இடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, திருகோணமலை மாவட்ட திட்டங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கைக்குள் யூ.பி.ஐ டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் முறையை மேம்படுத்தல் மற்றும் சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்திற்கான எரிசக்தி அனுமதிப் பத்திரம் இலங்கையிடம் கையளிப்பு போன்ற உடன்படிக்கைகள் கைமாற்றப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது அதிகாரபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பாராட்டியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடந்த ஆண்டுகளில் எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா வழங்கிய ஆதரவுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்
 
படக்குறிப்பு,

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க

இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி பேச்சு

இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிடுகின்றது.

இலங்கை பொருளாதார சீர்திருத்தங்களை சீராக அமல்படுத்தி வருவதாகவும், இந்தியப் பிரதமருடனான தூதுக்குழு மட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான சாதகமான பெறுபெறுகளை வெளிப்படுத்தி வருவதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தம்மால் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மூலம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வழிவகுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கப்பல், விமான சேவைகளை அதிகரிக்க முடிவு

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பொருளாதார உறவுகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் எதிர்கால இந்திய - இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

பொருளாதாரப் பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நவீன இணைப்பு முக்கியப் பங்காற்றுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி, அண்மையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சென்னை மற்றும் யாழ்ப்பாண விமானச் சேவைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான இணைப்பில் ஒரு முக்கிய மைல்கல் என்று சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளையும், கப்பல் சேவைகளையும் மேம்படுத்த உடன்பாடு காணப்படுவதாகவும், அது சுற்றுலா மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

இந்தியா- இலங்கை இடையே பாலம் சாத்தியமா?

சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை மீண்டும் தொடங்குதல் , ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட பிற இடங்களுக்கு இடையே படகு சேவைகளை விரைவாக மீண்டும் தொடங்குவது தொடர்பாக பணியாற்றுவது குறித்து பேசப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம் மக்களிடையே உறவுகள் மேம்படுத்துள்ளது. எனவே, இந்த விமான சேவையை கொழும்பு வரை விரிவுப்படுத்துவது குறித்தும் சென்னை மற்றும் திருகோணமலை, மட்டக்களிப்பு மற்றும் இலங்கையின் பிற இடங்களுக்கு இடையே விமான சேவையை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வது குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டது.

இதேபோல் இந்தியாவின் ரூபாயில் வர்த்தகம் செய்வது, யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வது போன்றவற்றுக்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கான நில அணுகலை மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பல்லாண்டு பழமையான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துதல் குறித்து பேசப்பட்டது. அத்தகைய இணைப்புக்கான சாத்தியக்கூறு ஆய்வு விரைவில் நடத்தப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

தமிழ்நாடு - இலங்கை இடையே மின்கம்பி வட இணைப்புத் திட்டம்

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம், இரு தரப்பு நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதையும், இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிக திறன் கொண்ட மின் கட்டமைப்பு, ஒன்றோடொன்று இணைக்கப்படுவதால், தடையற்ற இருவழி மின்சார வர்த்தகத்தை எளிதாக்குகிறது. அத்துடன், இது பிராந்தியத்தில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நிலையான வளர்ச்சியையையும் ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையை மின்சக்தி மையமாக மாற்றுவது பற்றி பேச்சு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், தனது இந்திய விஜயம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போட்டிமிகு உலகில் பரஸ்பர சுபீட்சத்தை நோக்கமாகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான புவியியல் மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக புதிய உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் நாகபட்டினம் - காங்கேசன்துறை இடையேயான படகுச் சேவைகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழிப் போக்குவரத்தை மேலும் பலப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஏனைய தொடர்புகளையும் ஆராய்வது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மேலும் ஊக்கமளிக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை மின்சக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு மின்சக்தி வளங்களை, குறைந்த விலையிலும், நம்பகமான விநியோகத்தை உறுதி செய்யவும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு குழாய்களை அமைப்பதற்கும் இதன்மூலம் மின்சக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் கலந்துரையாடப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க இந்தியா பயணம்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

 
படக்குறிப்பு,

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க.

இந்திய வெளியுறவு அமைச்சருடன் ரணில் சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெயசங்கரிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு, வெளிவிவகார அமைச்சர் வரவேற்பளித்ததுடன், அவருடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் நேற்றைய தினம் நடத்தியிருந்தார்.

இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதானியுடன் ரணில் சந்திப்பு

அத்துடன், அதானி குழுமத்தின் ஸ்தாபகத் தலைவர் கௌத்தம் அதானியுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இலங்கையில் அதானி குழுமத்தின் முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி, காற்றாலை மின் உற்பத்தி திட்டம் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இலங்கை முதலீடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

https://www.bbc.com/tamil/articles/c2x512501djo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்குநீரிணை ஊடாக நில இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் - இந்திய இலங்கை தலைவர்கள் சந்திப்பின் பின்னர் தகவல்

Published By: RAJEEBAN

22 JUL, 2023 | 06:20 AM
image
 

(AFP)

இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நில இணைப்பை உருவாக்குவது குறித்து ஆராய்வதற்கு வெள்ளிக்கிழமை இணங்கியுள்ளன.

இந்தியாவும் இலங்கையும் தங்களுக்கிடையில் நிலதொடர்பை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன.

இலங்கை ஜனாதிபதியின் பிராந்திய வல்லரசிற்கான விஜயத்தின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்குநீரிணை ஊடாக நில இணைப்பை ஏற்படுத்துவது திருகோணமலை  கொழும்பு போன்றவற்றை இந்தியா சென்றடைவதை இலகுவாக்கலாம் மில்லேனியம் வருட உறவுகளை வலுப்படுத்தலாம் என இரண்டு தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள மூலோபாய  ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் மற்றும் பெட்ரோலிய குழாய்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகள் இடம்பெறும் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தைகளின் பின்னர் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிவகித்தவர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க ஒருவருடகாலத்தின் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உணவு எரிபொருள் மருந்துபோன்றவற்றிற்கான தட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை கடந்த வருடம் நாளாந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டது,இலங்கை தனது 4.6 பில்லியன் டொலர் கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட போதிலும் இந்தியா 4 பில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியது.

இலங்கை கடந்தவருடம் பல சவால்களை எதிர்கொண்டது ஆனால் நாங்கள் இலங்கை மக்களுடன்  நெருங்கிய நண்பனை போல தோளோடு தோள் நின்றது என மோடி தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவின் பிரசன்னம் குறித்த கரிசனையும் வெளியிடப்பட்டது என இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.

இந்தியா இலங்கையை தனது கொல்லைப்புறமாக கருதுவதுடன் இலங்கையிலும் பிராந்தியத்திலும் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்திய அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனா காணப்படுகின்றது - இலங்கையால் மிகப்பெரிய கடனை சீனாவிற்கு திருப்பி செலுத்த முடியாத நிலையேற்பட்டதை தொடர்ந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் 99 வருட குத்தகைக்கு எடுத்தது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 1.4 பில்லியன் டொலர் திட்டத்தினை சீனா முன்னெடுத்துள்ளது-இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடு இது – சீனா இதனை தனது வேவுநடவடிக்கைகளிற்கு பயன்படுத்தலாம் என இந்தியா அச்சமடைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/160621

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலத்தின் மர்மங்கள் குறித்து ஆய்வுசெய்ய இந்திய அரசு ஒப்புதல் |  Virakesari.lk

இவர்கள்... கனவில் கட்டப் போகும் பாலத்தால்... 
இராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படும் என்று, 
தூங்கிக் கொண்டிருந்த  சுப்பிரமணிய சாமியிலிருந்து...
காவி கோஷ்டிகள் கிளம்பி வரப் போகுது.

கொஞ்சக்  காலம், பத்திரிகைகளில் இதுவே... பேசு பொருளாக இருந்து அரசியல் செய்து, 
பின் தானாகவே அமுங்கிவிடும்.

தம்மை... முன் நிறுத்துவதற்ககாக... இந்த அரசியல்வாதிகள் செய்யும் 
சித்து விளையாட்டுக்கள் ஆயிரம். அதில் இந்தப்  பாலமும் ஒன்று. அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர் இருப்புக்கு பயன் படும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தால் 'ராமர் பாலம்' சேதமடையுமா?

இந்தியா, இலங்கை, ராமர் பாலம், மோதி, ரணில்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 ஜூலை 2023, 02:40 GMT

இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த விஷயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை அமைப்பது உண்மையில் சாத்தியமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைப்பதால் 'ராமர் பாலம்' என்று நம்பப்படும் சுண்ணாம்புத் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

அரசியல்ரீதியாக இந்தப் பாலம் அமைக்கும் திட்டம் என்ன மாதிரியான தாக்கத்தை சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும்? பாஜக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமா? அப்படிச் செய்வதால் இந்தியாவுக்கு என்ன பயன்?

இவை குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

 

இரண்டு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்தாலோசித்துள்ளார்.

குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவையை மீள ஆரம்பித்தல், விமான சேவைகளை விஸ்தரித்தல், குழாய் மின் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

இதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கைக்கு இடையே பாலம் அமைக்கும் திட்டம்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்த பாலத்தை அமைப்பது தொடர்பில் 2015ஆம் ஆண்டு பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

தனுஷ்கோடி, தலைமன்னார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு வந்ததாக அந்த காலப் பகுதியில் இந்திய ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அப்போது கலந்தாலோசிக்கப்பட்டிருந்தது.

இந்தியா, இலங்கை, ராமர் பாலம், மோதி, ரணில்

பட மூலாதாரம்,PMD SRI LANKA

 
படக்குறிப்பு,

தெற்காசியப் பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையில் 2015ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட தருணத்தில் பிரதமர் நரேந்திர மோதி இந்த விடயம் குறித்து அப்போதும் கலந்துரையாடியுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருந்தது என இந்தியாவின் அப்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அப்போது தெரிவித்திருந்தார்.

தெற்காசிய பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், அதற்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதியால் முன்வைக்கப்பட்ட அதே திட்டத்தை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரும், நரேந்திர மோதி முன்வைத்துள்ளார்.

‘ராமர் பாலம்’ என்று அழைக்கப்படும் திட்டுக்கள்

இந்தியா, இலங்கை, ராமர் பாலம், மோதி, ரணில்

பட மூலாதாரம்,NASA

 
படக்குறிப்பு,

ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது

இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இயற்கையான வடிவங்கள் ‘இராமர் பாலம்’ அல்லது ‘ஆதாமின் பாலம்’ என அழைக்கப்படுகின்றது.

ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் கட்டப்படும் என்றால், இந்தப் பாலத்தைச் சார்ந்து அமைக்கப்படுமா அல்லது வேறு விதமாக அமைக்கப்படுமா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

நிலவியல் ரீதியாக பாலம் அமைப்பது சாத்தியமா?

இந்தியா, இலங்கை, ராமர் பாலம், மோதி, ரணில்

பட மூலாதாரம்,UNIVERSITY OF COLOMBO

 
படக்குறிப்பு,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியானது, மிகவும் ஆழம் குறைந்த பகுதி என்பதால் எளிதாகப் பாலம் அமைக்க முடியும் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்.

நிலவியல் ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியம்தான் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசியரான இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலுள்ள கடல் பகுதி மிகவும் ஆழம் குறைவானது என்பதால் மிக எளிதாகப் பாலம் அமைக்க முடியும் என்றார்.

சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுக்காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், அதிலுள்ள நடைமுறை சவால்களைப் போல் இந்தத் திட்டத்தில் ஏதேனும் சவால்கள் உள்ளனவா எனக் கேட்டபோது "இதில் அப்படியான சவால் ஏதும் இல்லை" என்கிறார் எஸ்.ஏ.நோபர்.

 

சேது சமுத்திர திட்டம் சாத்தியமில்லை என்ற போதிலும், இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

''இந்தப் பாலம் அமைப்பது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதி ஆழம் குறைவானது.

அந்த ஆழம் குறைவான பகுதிகளின் ஊடாக காங்க்ரீட் தூண்களை நிறுத்தி, பாலம் அமைக்க முடியும். இதில் ஒரு பிரச்னையும் கிடையாது. அது பாலம் அமைப்பதற்குச் சாத்தியமான பகுதிதான்,” என்றார் நோபர்ட்.

ஆனால், இது புவியியல் ரீதியாக இலங்கையைப் படிப்படியாகத் தங்களுடைய பிரதேசமாக்குவதற்கான இந்தியாவின் முதல் படி என்றும் கூறினார்.

இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைப்பது சாத்தியமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

"தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும்," என்று விளக்குகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட்

“பாலம் ஒன்று அமைக்கப்படும்போது, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் தங்களுடைய கைக்குள் வந்துவிடும். சீனா உள்ளிட்ட பல நாடுகள் கடலுக்குள் பாலங்களை அமைத்துள்ளன.

ஆகவே, தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளின் மூலம் இது சாத்தியப்படக்கூடிய விஷயம்தான்," என்கிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட்.

''தனுஷ்கோடியிலிருந்து பாதை அமைப்பது இலகுவானது. அவ்வளவு தூரம் கிடையாது. தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் நிரம்பியுள்ளன. அந்தச் சுண்ணாம்புக் கற்களில்தான் தூண்களை இறக்கி பாலம் அமைப்பார்கள். தனுஷ்கோடியிலுள்ள ரயில் பாலத்தைப் போன்றதொரு பாலத்தை அமைப்பார்கள்," என்று அவர் விளக்கினார்.

சுண்ணாம்புக் கற்கள் சேதமாகுமா?

இந்தப் பாலம் அமைக்கப்படும்போது, பாக் நீரிணையில் உள்ள சுண்ணாம்புக் கற்களுக்கு சேதங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதா?

என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்டிடம் வினவினோம்.

இதுகுறித்து விளக்கமளித்த நோபர்ட், "அது மிகப்பெரிய சுண்ணாம்புத் திட்டு" என்றும் பாலம் அமைப்பதால் அதில் எந்தவித சேதமும் ஏற்படாது எனவும் கூறினார்.

இந்திய - இலங்கை பாலம் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்துமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாக சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார்.

இந்திய - இலங்கை பாலம் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்துமா?

இந்தியா, இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்படாது என சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.

''உண்மையில் பாலம் அமைக்கமாட்டார்கள். இதுவரை படகு சேவைகூட ஆரம்பிக்கப்படவில்லை. ஏப்ரல் 28ஆம் தேதி படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனச் சொல்லியிருந்தார்கள். சிங்கப்பூரிலுள்ள ஒரு இலங்கை தமிழருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இந்திய அரசாங்கம் அதைத் தடுத்தது. மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையில் சிக்கல் இருக்கின்றது. இந்த அகண்ட பாரத கோட்பாடு, தேசிய கோட்பாடுகள் இருப்பதால், இதில் முரண்பாடுகள் இருக்கின்றன,” என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கும், இந்தியாவிற்குமான எந்தவொரு தொடர்பும், இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தோடு இணையக்கூடிய ஒரு தொடர்பாகத்தான் இருக்கும் எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார்.

இந்திய - இலங்கை பாலம் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்துமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பாலம் அமைத்தாலும் கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்புபடுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர்.

பாலம் அமைத்தாலும்கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்பு படுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர்.

அது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு சிக்கல் எனக் கூறும் சதீஷ், “இலங்கை நிறைய திட்டங்களைச் சொல்லியிருக்கின்றது. தலை மன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும இடையில் ரயில் பாலம் இருந்தது. கப்பல் சேவை இருந்தது எனச் சொன்னார்கள்.

காங்கேசன்துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான படகு சேவை என இறுதியாகச் சொன்னார்கள். ஆனால், இன்று வரை அனுமதி வழங்கப்படவில்லை. எல்லா அனுமதியும் கிடைத்த பின்னர் இந்திய கப்பல்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

இப்போதும் நாம் நடக்காத விஷயத்தைத்தான் பேசுகிறோம். பாலம் அமைப்பதற்கு இந்திய அரசு விடவே விடாது," எனக் கூறுகிறார் சதீஷ் கிருஸ்ணபிள்ளை.

பாஜக அரசுக்கு இந்தப் பாலம் அமைக்க விருப்பமில்லையா?

பாஜக அரசுக்கு இந்தப் பாலம் அமைக்க விருப்பமில்லையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார்.

'இந்த மாதிரியான பாலங்கள் அமைப்பது என்பது மிகப்பெரிய அரசியல். பிரான்சுக்கும், பிரட்டனுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டது. ஏதோவொரு தொழில்நுட்பத்தின் ஊடாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும், இன்று எல்லைக் கட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது.

பிரான்ஸில் உள்ள சட்டவிரோத அகதிகள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்கின்றார்கள். அது பிரான்ஸ் அரசாங்கத்திற்கும், பிரிட்டன் அரசாங்கத்திற்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது,” என்று அவர் விவரித்தார்.

ஐரோப்பிய யூனியனை எடுத்துக்கொண்டால், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இல்லை. அப்படியில்லாத சந்தர்ப்பத்தில் அவர்களின் விசா தயார்படுத்தலை எப்படிச் செய்வது என்ற சிக்கல் இருக்கின்றது.

இந்நிலையில், “உச்ச சக்தி கொண்ட நாடான இந்தியா, பாலம் அமைத்து நாம் அங்கு இலவசமாகச் செல்வதைப் பெரிதாக விரும்பாது. குறிப்பாக பாஜக அரசாங்கம் அதைச் செய்யாது," என்று செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/cv2p4v0ngqvo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2023 at 03:54, சுவைப்பிரியன் said:

இலங்கையில் தமிழர் இருப்புக்கு பயன் படும்.

நான் இரும்புக்கு பயன்படும் என்று வாசித்துவிட்டேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் குறித்து இவ்வாரம் முக்கிய பேச்சு - புதன்கிழமை டெல்லி செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

24 MAR, 2024 | 10:57 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்கு செல்கிறார். இரு நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க அந்நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாலத்தை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. 

இதன் பிரகாரம் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து, இந்தியாவின் இராமேஸ்வரம் வரையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளது. வாகன போக்குவரத்துக்கு மாத்திரமன்றி, இரு வழி புகையிரத பாதையும் இந்த பாலத்தின் ஊடாக நிர்மானிக்கப்பட உள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உத்தேச பாலத்தின் ஊடான நில இணைப்பை மையப்படுத்தி, தலைமன்னார் தொடக்கம் திருகோணமலை ஊடாக கொழும்பு வரையிலான விசேட நேரடி நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமன்னாரிலிருந்து திருகோணமலை துறைமுகம் வரையிலான வீதி கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம், இந்தியாவுக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இந்த பாலம் ஊடாக இரு நாட்டு பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த முடியும் என்று இருதரப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த பாலத்தை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/179559

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்தியா இடையே தரைவழிப் பாலம் நிர்மாணிப்பதற்கான பிரதிநிதிகள் குழுவை நியமிக்க அரசு இணக்கம் 

31 MAR, 2024 | 06:06 PM
image

நமது நிருபர்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரியமைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா தலைமையிலான குழுவினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் புதுடில்லியில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்கண்டவாறு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கும் இடையில் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப்பாலம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சுமார் ஒரு தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுக்களை நடத்தியபோது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு பற்றிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலமானது 23 கிலோ மீற்றர் நீளத்தினை கொண்டுள்ளதாகும். இதில் வீதி மற்றும் ரயில் பாதை என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180085

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இலங்கை - இந்தியா இடையே தரைவழிப் பாலம் நிர்மாணிப்பதற்கான பிரதிநிதிகள் குழுவை நியமிக்க அரசு இணக்கம் 

31 MAR, 2024 | 06:06 PM
image

நமது நிருபர்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா இலங்கையிடம் கோரியமைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா தலைமையிலான குழுவினருக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் கடந்த 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் புதுடில்லியில் கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்கண்டவாறு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கும் இடையில் தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் தரைவழிப்பாலம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சுமார் ஒரு தசாப்த காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுக்களை நடத்தியபோது மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு பற்றிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலமானது 23 கிலோ மீற்றர் நீளத்தினை கொண்டுள்ளதாகும். இதில் வீதி மற்றும் ரயில் பாதை என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/180085

நேற்று பாண்டிச்சேரியில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாண்டிச்சேரியை ஒரு மாநிலமாக மாற்றுவோம் என்ற வாக்கு கொடுத்து வாக்குகள் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரண்டு புதிய மாநிலங்கள் இந்தியாவில் வரப் போகுது போல தெரியுதே......😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நேற்று பாண்டிச்சேரியில் நடந்த ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாண்டிச்சேரியை ஒரு மாநிலமாக மாற்றுவோம் என்ற வாக்கு கொடுத்து வாக்குகள் சேகரித்துக் கொண்டிருந்தனர். இரண்டு புதிய மாநிலங்கள் இந்தியாவில் வரப் போகுது போல தெரியுதே......😀

தென் பகுதியைச் சேர்த்துச் சொல்லவில்லைத்தானே ? 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தென் பகுதியைச் சேர்த்துச் சொல்லவில்லைத்தானே ? 

😁

😀...........

அவர்களுக்கும் ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு பாலம் போட்டு, இன்னுமொரு தனி மாநிலம் ஆக்குவமோ? ஒடிசாவிலிருந்து எப்படி அவ்வளவு நீளமான பாலம் போடுகிறது என்று எலான் மஸ்க்கை தான் கேட்க வேண்டும்....அவர் தான் இங்கே நிலத்திற்கு கீழால், மேலால், வானத்தில் என்று புது வழிகள் கண்டு பிடித்துக் கொண்டிருக்கின்றார்...😀  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினைகள் – பேராயர் கர்தினால்!

download-1-1.jpg

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச பாலத்தின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பாலம் அமைப்பதன் ஊடாக 2,000 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட சுதந்திரம் இல்லாமல் போகக்கூடும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாலத்தை அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும்.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த பாலம் அமைக்கும் திட்டத்தை தாம் முற்றிலும் எதிர்ப்பதாகவும் இந்தியர்களும் இதனை எதிர்க்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/304362

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச பாலம் - மல்வத்த பீடாதிபதி கவலை

21 AUG, 2024 | 11:53 AM
image
 

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் விதத்தில் உத்தேச பாலத்தை அமைப்பது குறித்து மல்வத்த பீடத்தின்மகாநாயக்க தேரர்  திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர்  கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது உத்தேச பாலம் குறித்த கரிசனையை வெளியிட்டுள்ள அவர் பாலத்தை அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தேச பாலத்தினால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள்இபோதைபொருள் கடத்தல் அதிகரிப்பு குறித்தும்  திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கருத்து தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191604

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்திய தரை வழி அவசியம்: வலியுறுத்திய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்

இலங்கை - இந்தியா இடையே சாலைவழி வணிகம் அவசியம் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்  கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறிபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் சிறிவெங்கடேஸ்வரா பல்கலை கழகம் ஆகியன இணைந்து நடத்திய பொருளாதாரம் குறித்த கருத்தரங்கில் பேசும்போதே கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான அமிர்தலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்

இந்தியாவுக்கும்; இலங்கைக்கும் இடையே சாலைவழி வணிகம் அவசியம். இதற்காக ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு 30 கிலோமீற்றர் வரை பாலம் அமைத்திட வேண்டும்.

இதன் முலம், தொழில் மற்றும் சுற்றுலா துறைகள் மேம்படும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நிலைமை

இலங்கையில் 30 ஆண்டுகள் வரை இடம்பெற்ற உள்நாட்டு போர் மற்றும் சமீபத்திய பொருளாதார சீர்கேடுகளால் இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.

இலங்கை - இந்திய தரை வழி அவசியம்: வலியுறுத்திய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் | Sri Lanka India Road Route

ஏற்கனவே ஆழிப்பேரலை இயற்கை பேரிடர் வந்தபோதும் கப்பல்களை அனுப்பி இந்தியா இலங்கை மக்களை காப்பாற்றியது. கொரோனா என்கிற மிகக் கொடிய தொற்று பரவிய போது இந்தியா தடுப்பூசிகளை வழங்கி காப்பாற்றியது.

இதனை தொடர்ந்து, பொருளாதார சீர்கேடு ஏற்பட்ட போது இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது உணவு, பால், மருந்து வகைகளை அனுப்பி, கை கொடுத்து உதவியது.

ஆதலால், எப்போதுமே இலங்கையர்களுக்கு இந்தியாவும் ஒரு தாய் நாடே என்று அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சி

தம்மைச் சுற்றிலும் உள்ள இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் பொருளாதார வீழ்ச்சி அடைந்த போதும் இந்தியா மட்டுமே தொடர்ந்து 6 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறது.

இலங்கை - இந்திய தரை வழி அவசியம்: வலியுறுத்திய கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் | Sri Lanka India Road Route

இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் நிலைத்தன்மை மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துபோகும் தன்மையும் முக்கிய காரணமாகும்.

பிரதமர் மோடி இஸ்ரேல், ரஸ்யா, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகள் போன்றவற்றின் அரசியல் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளதால், இந்தியாவின் பொருளாதாரமும் நிலையாக உள்ளதாக பேராசியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.  

https://tamilwin.com/article/sri-lanka-india-road-route-1724913191

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.