Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில். வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி சடலமாக மீட்பு

adminJuly 23, 2023
21-1.jpg?fit=1170%2C658&ssl=1

வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சிறுமி பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டின் உரிமையாளர்கள் சிறுமிக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து , சிறுமியை மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வந்ததாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளை சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட போது , சிறுமியின் முழங்கால்கள் மடிந்து நிலத்தில் முட்டியவாறே காணப்பட்டமையால் , சிறுமியின் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமி   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி , வட்டுக்கோட்டை முதலி கோவிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17), என்றும் அவர் குறித்த வீட்டில் தங்கியிருந்து கடந்த நான்கு மாத காலமாக பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளதாகவும் காவல்துறையினா்  தெரிவித்தனர்.

சிறுமி குடும்ப வறுமை காரணமாக குறித்த வீட்டில் தங்கியிருந்து , பணிப்பெண்ணாக வேலை செய்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அந்த வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ளார்.

வேலைக்கு வந்த சிறுமியை வெளிநபர்கள் வந்து பார்க்க கூடாது என்பதுடன்   ,சிறுமியின் வீட்டாருடன் சிறுமி மாதத்தில் ஒரு நாளில் ஒரு சில நிமிடங்கள் மாத்திரமே தொலைபேசியில் உரையாடவும் அனுமதித்துள்ளனர்.

அத்துடன் சிறுமிக்கு அளவுக்கு அதிகமான வேலையையும் கொடுத்துள்ளனர். அதனால் சிறுமி கடுமையான வேலை பளு மற்றும் மன அழுத்தம் என்பவற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாண  காவல்துறையினர் , சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

spacer.png

https://globaltamilnews.net/2023/193248/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஏழ்மை காரணமாக…. கல்வியை துறந்து, வேலைக்கு வந்த சிறுமியை….
இப்படியா நடத்துவது? 😡
முதலில் அந்த வீட்டுக்காரரை… சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றத்தில்…. கைது பண்ணி சிறையில் அடைத்து, மிகுதியை விசாரியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறுமி சடலமாக மீட்பு ; உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் உத்தரவு

Published By: DIGITAL DESK 3

25 JUL, 2023 | 09:41 AM
image
 
யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட விடயம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்ட வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் கூறியுள்ளார்.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடமும் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடமும் இது தொடர்பாக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான உண்மை என்ன என்பதையும் தீர்க்கமாக விசாரிக்குமாறு கூறியுள்ளார்.

மேலும், ஆளுநர் செயலக அலுவலர்கள் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு பூரண அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளார்.

பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருப்பது தமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறிய ஆளுநர் இது தொடர்பாக கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் செயற்பாடுகளை தடுக்கும் வேலைத்திட்டங்களையும் வேகமாக முன்னெடுக்குமாறு ஆளுநர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குற்றச் செயலாக அமைந்திருப்பின் அது தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை ஆளுநர் செயலகம் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்துவதோடு, இவ்வாறான சம்பவங்கள் இனியும் தொடராதிருக்கத் தேவையான காத்திரமான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள் எடுப்பதையும் செயலகம் உன்னிப்பாக அவதானிக்கும் என்றார். 

அத்துடன் பொதுமக்களும் இது தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

https://www.virakesari.lk/article/160843

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வீடொன்றில் உயிரிழந்த சிறுமியின் சம்பளம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Screenshot-2023-07-27-at-7.49.12-AM.png

யாழ்ப்பாணம் மாவட்டம், கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றில் உயிரிழந்த 17 வயதான சிறுமிக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

யாழில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த வட்டுக்கோட்டை, முதலி கோவிலடியை சேர்ந்த 17 வயதான கேதீஸ்வரன் தர்மிகா எனும் சிறுமி, வேலை பார்த்து வந்த வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியின் உடற்கூற்று பரிசோதனை முடிவடைந்து, மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு உடற்கூற்று மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கையில்,

சிறுமியின் குடும்பம் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்பட்டது பொருளாதார நெருக்கடியினால், சிறுமி தனது பாடசாலை கல்வியை இடை நிறுத்திய நிலையில் சிறுமியின் தாயார் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று வேலை செய்வதற்கு பணிப்பெண்ணாக சிறுமியை வேலைக்கு சேர்த்துள்ளார்.

வேலைக்கு சிறுமியை எடுக்கும்போது, சம்பளமாக 25 ஆயிரம் ரூபாய் தருவதாக வீட்டார் தாயாருக்கு உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், சிறுமி வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் சிறுமியை தாயார் சந்திக்க முடியாது என தடை ஏற்படுத்தினார்.

தொலைபேசியில் தாயாருடன் மாதத்தில் ஒரு தடவை மாத்திரம், சில நிமிடங்கள் உரையாட அனுமதிக்க முடியும் என அனுமதித்தனர்.

சிறுமியிடம் தொலைபேசி இல்லாத அதேவேளை, தாயாரிடமும் தொலைபேசி இல்லை. வீட்டின் உரிமையாளர் சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தாயாரை தொடர்பு கொண்டு சிறுமியை சில நிமிடம் பேச அனுமதிப்பார்.

சிறுமி தாயுடன் பேசும் போது, வீட்டின் உரிமையாளர் அருகில் நிற்பார். சில நிமிட உரையாடலுடன், தொலைபேசியை சிறுமியிடம் பறித்து விடுவார்கள். இவ்வாறாக சிறுமியை மனரீதியாக துன்புறுத்தி வந்ததுடன், சிறுமிக்கு அதிகளவான வேலைகளையும் வழங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு மாத காலம் கழிய சிறுமியின் சம்பளம் என 5 ஆயிரம் ரூபாயே வழங்கியுள்ளனர். மிகுதி 20 ஆயிரம் ரூபாயை வழங்கவில்லை.

இது தொடர்பில் சிறுமியின் தாய் கேட்ட போது,

முழு சம்பளத்தையும் தந்தால் சிறுமி வேலையை விட்டு போய்விடுவா, அதனால் 20,000 ரூபாயை பிடித்து வைத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதமும் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கி 20 ஆயிரம் ரூபாயை பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக நான்கு மாத சம்பளத்தை வழங்கவில்லை. இது தொடர்பில் நாம் மரண விசாரணை அதிகாரியிடம் மரண விசாரணையின் போது தெரிவித்தோம்.

மரண விசாரணை அதிகாரி, 20 ஆயிரம் ரூபா வீதம் 3 மாத காலமாக பிடித்து வைத்திருந்த 60 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 4 அவது மாத சம்பளம் 25 ஆயிரம் ரூபா என 85 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று தந்தார்.

சிறுமியை வீட்டில் வேலைக்கு சேர்ந்து விட்ட பிறகு நான்கு மாத காலமாக சிறுமியை தாயார் பார்க்க கூட அனுமதிக்கவில்லை. வேலைக்கு சேர்த்து விட்ட பின்னர் சிறுமியை நான்கு மாதம் கழித்து தாயார் சடலாமாகவே சிறுமியை பார்த்துள்ளார்.

சிறுமியின் மரணத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. மன ரீதியாக வீட்டு உரிமையாளர்கள் துன்புறுத்தி, அதிக வேலைகளை வழங்கி மன அழுத்தத்தை சிறுமிக்கு ஏற்படுத்தியுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்கள் கல்வி கற்ற, சமூக செல்வாக்கு மிக்கவர்களாகவும், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி சிறுமியின் மரணத்தை மூடி மறைத்து தாம் தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில் வடமாகாண ஆளுநர், சிறுமியின் மரணம் தொடர்பான பூரண விசாரணை அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்குமாறு, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு பணித்துள்ளமை எமக்கு ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.

சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகளை இனி வரும் காலங்களில் அடிமைகளாக பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு பாடமாக அமைய வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்வோர் துன்புறுத்தப்படுவதாகவும் அவர்களை காக்க வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

https://akkinikkunchu.com/?p=251386

  • கருத்துக்கள உறவுகள்

நிலுவைச் சம்பளத்தை பெற்றுக் கொடுத்ததிலிருந்தே தெரிகிறது விசாரணை திசை திருப்பப்படும்.

ஏழைகளுக்குச் சட்டம் இன்றும் ஓர் இருட்டறை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறுமி உயிர்மாய்ப்பு ; இரு பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணையில்

28 JUL, 2023 | 03:17 PM
image
 
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/161116

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

வீட்டின் உரிமையாளர்கள் கல்வி கற்ற, சமூக செல்வாக்கு மிக்கவர்களாகவும், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி சிறுமியின் மரணத்தை மூடி மறைத்து தாம் தப்பிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

கேட்டால்…நாங்கள் ஜப்னா…படிச்ச சமூகம் என கொலரை வேறு தூக்கி விட்டுகொள்வார்கள்…வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.

10 hours ago, MEERA said:

நிலுவைச் சம்பளத்தை பெற்றுக் கொடுத்ததிலிருந்தே தெரிகிறது விசாரணை திசை திருப்பப்படும்.

ஏழைகளுக்குச் சட்டம் இன்றும் ஓர் இருட்டறை தான்.

ம்ம்ம்…அதிகாரிகள் மட்டுமே…வீட்டுக்காரர் பெயரை கூட வெளியிடாமல், வீதியின் பெயரை கூட சொல்லாமல், அவர்கள் தொழில் எதையும் சொல்லாமல் - ஊடகங்கள் கூட நல்லாவே மூடி மறைக்கிறன.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமியின் மரணத்திற்கு யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் காரணமா..!

10 மணி நேரம் முன்

யாழ்ப்பாணத்தில் 16 வயதான சிறுமியை வேலைக்கு அமர்த்தி, சிறுமியின் மர்ம மரணத்திற்குக் காரணமான யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பிரித்தானியாவில் வாழும் இலங்கைத் தமிழர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க, பெண்களையும் இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தல் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை இரவு வேலைக்கு அமர்த்தியது குற்றம்.

16- 18 வயதுக்குட்பட்டவரைத் தொழிலுக்கு அமர்த்தியது தொடர்பாகத் தொழில் திணைக்கள ஆணையாளருக்கு முறைப்படி அறிவிக்காதது குற்றம்.

தொழிலுக்கு அமர்த்திய நபருக்கு போதிய ஓய்வு அளிக்கத் தவறியது குற்றம் என கூறியுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,  

https://tamilwin.com/article/16-year-old-girl-dies-in-jaffna-1690788700

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

அவரது பெயர் என்னவாம்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அவரது பெயர் என்னவாம்?

தெரியவில்லை அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2023 at 11:06, MEERA said:

நிலுவைச் சம்பளத்தை பெற்றுக் கொடுத்ததிலிருந்தே தெரிகிறது விசாரணை திசை திருப்பப்படும்.

ஏழைகளுக்குச் சட்டம் இன்றும் ஓர் இருட்டறை தான்.

On 24/7/2023 at 06:59, தமிழ் சிறி said:

ஏழ்மை காரணமாக…. கல்வியை துறந்து, வேலைக்கு வந்த சிறுமியை….
இப்படியா நடத்துவது? 😡
முதலில் அந்த வீட்டுக்காரரை… சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றத்தில்…. கைது பண்ணி சிறையில் அடைத்து, மிகுதியை விசாரியுங்கள்.

பெரிய இடம் போல அதான் மெதுவாக மறைக்கப்பார்க்கிறார்கள் சிறுமி துன்புறுத்தப்பட்டட்காக சொல்லப்படுகிறது பாலியல் ரீதியாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.