Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


 

இவ் ஆவணத் திரட்டில், மார்ச் 26, 2007 அன்று தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" - இன்  முதலாவது அலுவல்சார் வான்தாக்குதல் பறப்பிற்கு முன்னர் அவர்கள் வானில் பறந்த போதும் குறித்த திகதிக்குப் பின்னர் அலுவல்சாரல்லாமல் பறந்த போதும் மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவலைத் திரட்டி காலக்கோட்டின் அடிப்படையில் பதிவிட்டுள்ளேன்.

முதன் முதலாக சிறிலங்கா வான்படையின் அனுமதியின்றி சமர்ப் பரப்பில் அடையாளம் தெரியாத கன்னைக்குச் சொந்தமான ஓர் மரும வானூர்தி பறந்தது பதிவாகியிருப்பது 1994ம் ஆண்டிலே ஆகும். 

பலாலி கூட்டுப்படைத்தளத்திற்கு மேலாக வடக்கு நோக்கி சிறிலங்கா படைத்துறையின் அனுமதியின்றி ஒரு மரும வானூர்தி பறந்து சென்றதாகவும் அந்த வானூர்தியை பலாலி வான்கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிங்கள அதிகாரிகள் தொடர்புகொள்வதற்காக குறிகைகள் (ஸிக்னல்) அனுப்பி முயற்சித்த போது வானூர்தியிலிருந்து பகர குறிகைகள் எதுவும் அனுப்பாததால் அவ் வானூர்தி குறித்து உசாவல் செய்யுமாறு வான்படை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்ததாக 'திவயின' என்ற சிங்கள இனவாத நாளேடு செய்தி வெளியிட்டிருந்ததாக 'உதயன்' நாளேடு 19/09/1994 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உசாவலின் முடிவுகள் எதுவும் வெளியிடப்பட்டதாக என்னால் அறியமுடியவில்லை.

ஈழத்தீவை விட்டு 'இந்திய அமைதி காக்கும் படை' என்ற பெயரில் வந்த இந்தியப் படையினர் வெளியேறிய பின்னர், ஈழப்போர் வரலாற்றில், சிங்கள அரசின் அனுமதியின்றி சிங்கள வான்படை தவிர்ந்த வானூர்தி ஒன்று சமர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த பரப்பின் மேல் பறந்து சென்ற முதன் நிகழ்வு இதுவேயாகும்.

இது இவ்வாறு இருக்க, இச்செய்தி வெளியாகி சில மாதங்களுக்குப் பின்னர், அதாவது 1994 நவம்பர் 21ம் திகதி, உதயன் நாளேடு பூரிப்புச் செய்தியொன்றை தமிழீழ மக்களுக்கு வெளியிட்டது. வான்புலிகள் என்ற படைத்துறைக் கிளையை தொடங்கப் புலிகள் ஆயத்தமாகிவிட்டனர் என்றும் சுமார் 20 வானோடிகள் மேற்கத்திய நாடுகளில் அடிபாட்டு வானூர்திகளை ஓட்டப் பயிற்சி எடுத்துவிட்டதோடு புலிகள் ஐந்து வானூர்திகளை தருவித்துள்ளனர் அல்லது அது அவர்களுக்கு கிடைக்கப்பெறும் சூழ்நிலை எழுந்துள்ளது என்று சிங்களச் சார்பு நாளேடான 'சன்டே ஐலண்ட்' செய்தி வெளியிட்டிருக்கிறது என்பதுவே அதுவாகும்.

இதுவே முதன் முதலாக பெரும்பாலான தமிழீழ மக்கள் "வான்புலிகள்" என்ற பிடாரச்சொல்லைக் கேள்விப்பட்ட தருணம். இதிலிருந்து நான் ஊகிப்பது என்னவெனில், "வான்புலிகள்" என்ற கிளையானது  புலிப் போராளிகள் சிலரது நடுவணில் தவிபு ஆல் அலுவல்சாராக நவம்பர் மாத மட்டில் அறிவிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பொதுமக்கள் நடுவணிலன்று, என்பதாகும்.

அடுத்தடுத்த இரு மறுமொழிப்பெட்டிகளுக்கும் புலிகளின் அலுவல்சாரல்லாத வான்பறப்புகள் தொடர்பான காலக்கோட்டினைக் காணலாம்.

 

ஆக்கம் & வெளியீடு 
நன்னிச் சோழன்

 

*****

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to வான்புலிகளின் அலுவல்சாரல்லாத பறப்புகள் | திரட்டு
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இம்மறுமொழிப் பெட்டியினுள் மார்ச் 26, 2007ற்கு முன்னர் தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" வானில் பறந்த போது மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவல் உள்ளன.

 

காலக்கோடு:

 

  • ஜூன் 4-10, 1995 - முல்லைத்தீவு மணலாற்றுக் காட்டுப் பரப்பில் பறந்த வானூர்தி ஒன்று தரைப்படையினரால் காணப்பட்டது. இதுவே வரலாற்றில் பதிவு செய்யப்படாது அலுவல்சாரல்லாமல் சிங்களத்தால் அறிக்கையிடப்பட்ட புலிகளின் முதலாவது பறப்பாகும். கிடைத்த படிமங்கள் மற்றும் நிகழ்படம் மூலம் அற்றை நாளில் ஆக குறைந்தது இரு பறப்புகளாவது மேற்கொள்ளப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கொச்சு இலகு கீழிதை ஒன்று பறப்பில் ஈடுபட்டிருந்தது. | ஆதாரம்:
  1. உதயன் 14/06/1995
  2. கொச்சு இலகு கீழிதை (Microlight Glider) முதலாவது பறப்பின் போது
  3. கொச்சு இலகு கீழிதை (Microlight Glider) இரண்டாவது பறப்பின் போது,

 

  • ஓகஸ்ட் 17, 1995 - இரணைமடுவில் உள்ள 1 கிமீ நீளமான புலிகளின் ஓடுபாதை என்று சந்தேகிக்கப்படும் பரப்பு மீது சிங்கள வான்படையினர் வான்குண்டு வீச்சு நடத்தினராம் | ஆதாரம்:
  1. உதயன்: 18/08/1995

 

  • செப்டெம்பர் 18, 1998 - முதலாவது பறப்பிற்குப் பின்னர் வேறு பறப்புகள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் இருந்தாலும், அப்படி நிகழ்ந்து தென்பட்டதற்கான அறிக்கைகள் ஏதும் கிடைக்கபெறாததால், இதுவே இரண்டாவது பறப்பாக என்னால் கொள்ளப்படுகிறது. இதில் பக்கவாட்டு இருக்கைகள் கொண்ட தற்சுழல்பறனை ஒன்று பறப்பில் ஈடுபட்டிருந்தது. | ஆதாரம்:

  1. ஒட்டுசுட்டானில் வான்புலிகளின் தற்சுழல்பறனை (Gyroplane) பறப்பின் போது
  2. அச்சுதன் மற்றும் குசந்தன் - ன் படிமங்கள்

 

  • செப்டெம்பர் 19, 1998 - தவிபு-வினர் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிறிய வகை வானூர்தி மூலம் பரக்குடையிலிருந்து குதித்துப் பயிற்சிகளில் ஈடுபடுவதாக தமிழ்க் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு தமிழ் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாக 1/12/1998 அன்று உதயன் செய்தி வெளியிட்டது. இது தொடர்பாக பல நாட்களுக்கு முன்னர் நான் தேடிய போது வான்புலிகளின் வானோடியும் முதலாவது வான்கரும்புலியுமான ''நீலப்புலி" கேணல் ரூபன் பரக்குடையில் குதித்து எழும்பும் சிங்களப் படைத்துறையால் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட படிமம் ஒன்று எனக்குக் கிடைத்துள்ளது. அந்தப் படிமத்தில் 19/09/1998 என்று வலது மூலையில் திகதி அச்சிடப்பட்டுள்ளது. அதாவது தற்சுழல்பறனை பறந்த 18/09/1998 இற்கு அடுத்த நாள் இது நடந்திருப்பதால் அதே வானூர்தியிலேயே வான்புலிகள் பறந்து பரக்குடையில் குதித்திருக்கலாம் என்று ஊகிக்கிறேன். | ஆதாரம்:
  1. உதயன் 1/12/1998

main-qimg-a3a3faf236b2494d6c121c1217a77255

வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன் பரக்குடையில்(parachute) குதித்து எழுந்த போது. | படிமப்புரவு: புலிகளிடமிருந்து சிங்களவரால் (Rajarata, Flickr) கைப்பற்றப்பட்டு வெளியிடப்பட்டது

 

  • செப்டெம்பர் 26, 1998 - முல்லைத்தீவிற்கு மேலே ஏதோ ஒன்று பறப்பதை அம்மாவட்டக் கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிங்களக் கடற்படை பதிவுசெய்து அத்தகவலை வெளியிட்டிருந்தது. இதுவே வான்புலிகளின் பறப்புத் தொடர்பாக முதன்முறையாக முற்றாக பதிவு செய்யப்பட்டு அறிக்கையிடப்பட்டு சிங்களத்தால் அலுவல்சாராக வெளியிடப்பட்ட தகவல் ஆகும். | ஆதாரம்:

  1. உதயன் 14/10/1998

 

  • ஒக்டோபர் 11, 1998 - கிளிநொச்சிப் பரப்பில் இனந்தெரியாத உலங்குவானூர்தி ஒன்று பறப்பதாக சிங்களக் காவல்துறையினருக்குக் கிடைத்த கமுக்கத் தகவலை அடுத்து தரைப்படையினரையும் வான்படையினரையும் காவல்துறையினர் விழிப்படையச் செய்ததாக சிங்களப் படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன் தெரிவித்தார். எழுதருகையாக (warning) சிங்கள வான்படையின் உலங்குவானூர்திகள் எல்லாம் பறப்பெதிலும் ஈடுபடாமல் தரையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். | ஆதாரம்:
  1. உதயன் 14/10/1998

 

  • ஒக்டோபர் 1998 - சிறிலங்காவின் முன்னணி வலுவெதிர்ப்பு பகுப்பாய்வாளரான இக்பால் அத்தாஸ் அவர்கள், ஒக்டோபர் 4, 1998 அன்று வெளியான சன்டே ரைம்ஸின் பாதுகாப்புப் பத்தியில், ஆளில்லா வேவு வானூர்தி மூலம் எடுக்கப்பட்ட வேவுப் படிமங்கள் மூலம் விடுதலைப்புலிகளிடம் உலங்குவானூர்தி அ உலங்குவானூர்திகள் இருப்பதை சிறிலங்காப் புலனாய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். | ஆதாரம்:
  1. சன்டே ரைம்ஸ் ஒக்டோபர் 4, 1998
  2. உதயன் 03/11/1998

 

  • நவம்பர் 3, 1998 - மட்டக்களப்பில் இருந்து 20 கிலோமீற்றர் தென்மேற்கே உள்ள உட்சிற்றூரான தாந்தாமலையில் விடுதலைப் புலிகள் பறப்பித்த உலங்குவானூர்தி தரையிறங்குவது தொடர்பில் மட்டக்களப்புக்கு தெற்கே அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம்களுக்கு இன்று பிற்பகல் எழுதருகை விடுக்கப்பட்டுள்ளதாக டெலோவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதே வேளை கஞ்சிக்குடிச்சாறு பரப்பில் கால்நடை மேய்ப்பவர்களிடம் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட குறுக்கு உசாவலில் அவர்கள் உட்பகுதியில் உலங்குவானூர்தி ஒன்று தரையிறங்கும் ஓசையைக் கேட்டதாகவும் ஆனால் அது சிங்களப் படையினருடையதாக இருக்கலாம் என்று எண்ணியதால் தாம் அதில் அக்கறைகாட்டவில்லை என்றும் தெரிவித்தனர். | ஆதாரம்:
  1. தமிழ்நெற் நவம்பர் 3, 1998 (Tiger helicopter flying in the East?)

 

  • நவம்பர் 11 & 12, 1998 - குறித்த திகதிகளில் சிவப்பு நிற விளக்கை விட்டுவிட்டு ஒளிர்ப்பித்தபடி வான்புலிகளின் வானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டதைக் காணமுடிந்ததாக சிறிலங்கா படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் தென்னக்கோன் தெரிவித்தார்| ஆதாரம்:
  1. தமிழ்நெற் நவம்பர் 19, 1998 (Tiger aircraft sighted again?)
  2. உதயன் 23/11/1998

 

  • நவம்பர் 17, 1998 - யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிப் பரப்பில் சிவப்பு நிற விளக்கை விட்டுவிட்டு ஒளிர்ப்பித்தபடி வான்புலிகளின் இனந்தெரியா வானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டதாகவும் அதன் மீது பருத்தித்துறைக் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிங்களக் கடற்படையினர் சுட்டதாகவும் கடற்படை வட்டாரங்கள் தமிழ்நெற்றிடம் தெரிவித்தன. | ஆதாரம்:
  1. தமிழ்நெற் நவம்பர் 19, 1998 (Tiger aircraft sighted again?)
  2. உதயன் 19/11/1998
  3. உதயன் 23/11/1998

 

  • நவம்பர் 27, 1998 - முள்ளியவளை துயிலுமில்லத்தின் மீது வான்புலிகளின் "வானூர்திகள்'' பறப்பில் ஈடுபட்டு மலர்தூவியதாக புலிகளின் குரல் வானொலி செய்தி வெளியிட்டது. இதுவே புலிகள் தமது வானூர்தி ஒன்று வானில் பறந்ததை முதன் முதலில் வெளியுலகிற்கு அறிவித்த செய்தியாகும். | ஆதாரம்:
  1. தமிழ்நெற் நவம்பர் 28, 1998 (Tiger Air Wing participates in celebrations - VoT)

 

  • 1998 - அறியில்லா திகதியில் வான்புலிகளின் முன்-பின் இருக்கைகள் கொண்ட ஒரு தற்சுழல்பறனை ஒன்று பறப்பில் ஈடுபட்டது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள திகதிகள் ஏதேனும் ஒன்றில் தான் இது பறந்ததா அல்லது அவற்றில் இருந்து வேறுபட்ட திகதிகள் எதிலாவது பறந்ததா என்பது பற்றி நானறியேன். | ஆதாரம்: குறித்த ஆண்டில் படம்பிடிக்கப்பட்ட படிமங்கள்.

.Tamileelam Air Force pilots - Achchuthan and one more.jpg

தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) தற்சுழல்பறனையோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்.

 

Tamileelam Air Force pilot.jpg

தமிழீழ வானோடி ஒருவர் தற்சுழல்பறனைக்கு முன்னால் நின்றபடி நிழற்படத்திற்கு பொதிக்கின்றார் (pose)

 

  • 2000 - இரண்டாயிரமாம் ஆண்டு "வான்புலிகள் ஆண்டு" ஆக விடுதலைப்புலிகளின் தலைவரால் அலுவல்சாராக சாற்றாணைப்படுத்தப்பட்டது.

 

  • ஏப்பிரல் 03, 2005: வன்னியில் அறியில்லா இடமொன்றில் அமைந்திருந்த புலிகளின் வான்பொல்லம் (airstrip) ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் பல முக்கிய கட்டளையாளர்கள் முன்னிலையில் குண்டுதாரியாக மாற்றப்படாத புலிகளின் இலகு வானூர்தி ஒன்று பறப்பில் ஈடுபட்டது. இந்தத் திகதியை மூலப் படிமத்தில் இருந்த திகதி மூலம் அறிந்துகொண்டதோடு இத் திகதியை தமிழ்நெட்டில் வெளிவந்த செய்திகளில் உள்ள திகதிகள் மற்றும் அச்செய்திகள் மூலம் தோராயமாகவும் உறுதிப்படுத்தியுள்ளேன். கிடைத்த படிமங்கள் மற்றும் நிகழ்படம் மூலம் அற்றை நாளில் இரு வானூர்திகள் பறந்திருந்தன என்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிலின் சி-143 வகையைச் சேர்ந்த இலகு வானூர்திகள் இரண்டு பறப்பில் ஈடுபட்டன. | ஆதாரம்:
  1. சிலின் 143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது
  2. தமிழ்நெற் மே 10, 2005 (LTTE ‘no threat to India’ - Thamilchelvan)
  3. தமிழ்நெற் மே 27, 2005 (Sri Lanka can arm but LTTE cannot – SLMM chief)

 

  • ஒக்டோபர் 19, 2005: வவுனியா ஜோசப் கூட்டுப்படைத்தளத்தில் இருந்து வேவு நடவடிக்கைக்காக ஏவப்பட்ட சேர்ச்சர் விதம் 2 (Searcher Mark-II) வகை வண்டு (ஆளில்லா வான்கலம்) ஒன்று வவுனியா விஞ்ஞானகுளத்தில் 9ம் கட்டைக்கும் கரப்புக்குத்திக்கும் இடைப்பட்ட இடத்தில் விழுந்தது. இதனை வான்புலிகள் வான்வழித் தாக்குதல் மூலம் விழுத்தினர் என்று ஒரு சாராரும் கதுவீ ஆற்றுப்படுத்தும் சுடுகலன் மூலம் விழுத்தினர் என்று இன்னொரு சாராரும் ஊகம் தெரிவித்தனர். ஆனால் சிறிலங்கா வான்படை அலுவலகர்களோ, "பொறி செயலிழப்பு, மின்பிறப்பாக்கி செயலிழப்பு மற்றும் தகவல் தொடர்பு செயலிழப்பு எச்சரிக்கை செய்திகள் தரைக் கட்டுப்பாட்டில் ஒரே நேரத்தில் தோன்றியது பகைவரின் நடவடிக்கையால் வண்டு திடீரென அழிக்கப்படுவதைக் குறிக்கிறது." என்றனர். இவ்வாறு வண்டு ஒன்று போர்நிறுத்தக் காலத்தில் பிற கன்னையின் கட்டுப்பாட்டுப் பரப்பு மீது பறப்பது அமைதி உடன்படிக்கையை மீறும் செயலாகும். ஆதாரம்:
  1. தமிழ்நெற் ஒக்டோபர் 19, 2005 (Sri Lankan UAV comes down in Vanni)
  2. தமிழ்நெற் ஒக்டோபர் 24, 2005 (Media speculation on cause of UAV crash rebuffed)

 

  • சூலை 23, 2006 மாலை 8:30 மணியளவில் - வவுனியா சிறிலங்காப் படையக் கட்டுப்பாட்டுப் பரப்பின் மீது வான்புலிகளின் சிலின் வகை வானூர்திகள் பறந்தது சிங்கள கதுவீகளில் தெரிந்ததாக சிறிலங்கா படைத்தரப்பு செய்தி வெளியிட்டது. அதே நேரம் இனந்தெரியா வானூர்தி ஒன்றினது ஓசையை அப்பகுதி சிங்களக் காவல்துறையினரும் கேட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். | ஆதாரம்:
  1. உதயன் 24/07/2006

 

  • சூலை ??, 2006  - வான்புலிகள் பரக்குடையிலிருந்து குதித்துப் பயிற்சியில் ஈடுபட்டதாக சிறிலங்காப் புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்ததாம். | ஆதாரம்:
  1. உதயன் 24/07/2006

 

  • ஓகஸ்ட் 11, 2006 மாலை 9:30 மணியளவில் - குறித்த மாதத்தில் (11-19 வரை) யாழ் குடாநாட்டை மீட்பதற்காக புலிகள் நடாத்திய ஒரு வலிதாக்குதல் நடவடிக்கையின் போது பலாலி படைத்தளம் மீது வான்புலிகளின் வானூர்தி ஒன்று உந்துகணைத் தாக்குதல் மேற்கொண்டது தொடர்பாக தவிபு படைத்துறைப் பேச்சாளர் மாவீரர் மார்சல் எ இராசையா இளந்திரையன் அவர்கள் தெரிவிக்கையில், "எம் மக்களையும், தாயகத்தையும் பாதுகாக்க, எமது படைவீரர்கள், கடற்கலமர், வான்கலமர் மற்றும் ஈரூடகப்படையினரைப் பயன்படுத்துவோம்." என்று கூறி வான்தாக்குதலை சூசகமாக உறுதிப்படுத்தினார். இந்நடவடிக்கையில் 372 போராளிகள் வீரச்சாவடைந்ததோடு ஏறக்குறைய 500 வரையானோர் காயப்பட்டனர். இவ் வலிதாக்குதலும் தோல்வியில் முடிந்தது. | ஆதாரம்:
  1. தமிழ்நெற் ஓகஸ்ட் 11, 2006 (Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna)

 

  • ஏப்பிரல் 16, 2007 அந்தி - புலிகளின் வானூர்தி என்று ஐயப்படும் வானூர்தி ஒன்று யாழ்ப்பாண நகர மையத்திலும் வடமரமாட்சி வடக்குக் கோட்டம் மற்றும் வலிகாமம் பிரிவிலும் தாழ்வாகப் பறந்து கடந்தது. பொதுமக்களும் சிங்களப் படையினரும் புலிகளின் வானூர்தி என்று கூறி ஐயுற்றனர். எனினும் இது சிங்கள வான்படையின் வானூர்தி இல்லையென்று சிறிலங்கா வான்படை பின்னாளில் அறிவித்தது.  | ஆதாரம்:
  1. தமிழ்நெற் ஏப்பிரல் 16, 2007 (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=21903)

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இம்மறுமொழிப் பெட்டியினுள் மார்ச் 26, 2007ற்குப் பின்னர் தமிழீழ வான்படையான "விடுதலைப்புலிகளின் வான்புலிகள்" வானில் பறந்த போது மனிதக் கண்கள் மற்றும் கதுவீகளில் (RADAR) தென்பட்ட மற்றும் கிடைத்த படிமங்கள் மூலம் என்னால் அறியப்பட்ட பறப்புகள் தொடர்பான தகவல் உள்ளன.

 

 

காலக்கோடு:

 

  • சனவரி 20, 2009: முல்லைத்தீவின் சாளைப் பரப்பை நோக்கி ஒரு மரும வானூர்தி மாலை 8:25 மணியளவில் சென்று கொண்டிருப்பது முல்லைக் கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்காக் கடற்படையால் காணப்பட்டது. ஆனால் அது உடனே மறைந்துவிட்டது. பின்னர் சாளையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது மீண்டும் சிங்களக் கடற்படையினரால் காணப்பட்டு டோறாவிலிருந்து நீண்டதூர சுடுகலன்களால் சுடப்பட்டது என்றும் ஆனால் அது தப்பி மறைந்துவிட்டது என்றும் சிறிலங்காப் படைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக உதயன் செய்தி வெளியிட்டிருந்தது. | ஆதாரம்:
  1. உதயன் 22/01/2009

 

  • நான் சின்ன வயதில் வட தமிழீழத்தில் வசிக்கும் போது செவிமடுத்த விசயமொன்றினை இங்கே பதிவிட விரும்புகிறேன். இது 2007/2008 இல் நடந்ததென்று நினைக்கிறேன். ஒரு நண்பகல் வேளையில் கொழும்பு வான்பரப்பில் மரும வானூர்தி ஒன்று கதுவீயில் சில நிமிடங்களுக்கு தென்பட்டதாகவும் உடனே நகர் முழுவதும் விழிப்படையப்பட்டு சிங்கள வான் வலுவெதிர்ப்பு முறைமைகளும் செயலுறுத்தப்பட்டன என்பதுவே அதுவாகும். ஆனால், சில நிமிடங்களிலையே அவ்வானூர்தி கதுவீயின் கண்ணிலிருந்து மறைந்துவிட்டதாம். இச்செய்தி வெளிவந்த திகதி எனக்கு ஞாபகமில்லை. இச்செய்தியை புலிகளின் குரலில் கேட்டனான்.

 

(ஏனைய பறப்புகள் தொடர்பில் தகவல் கிடைக்கும் போது சேர்த்துவிடுகிறேன்.)

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to வான்புலி வானூர்திகளின் அலுவல்சாரல்லாத பறப்புகள் | திரட்டு
  • நன்னிச் சோழன் changed the title to வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள் | திரட்டு


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கள்ளச் சாராயத்தை மட்டும் செந்தமிழன் அண்ணாவின் கண்ணிலை காட்டீடாதேயுங்கோ அப்புறம் அதையும் அடிச்சுப்போட்டு சகலை எண்டுடுவாப்பில!😂
    • அடுத்த வாரமே தன்னைப்  பிரபாகரனின் பேரன் என்பார்.  இந்த உறவு முறை எல்லாம் அண்ணன் அன்றைக்கு  அடிக்கிற (B)பிராண்டை  பொறுத்து மாறுபடலாம். 😂
    • அவர்கள் நம்பிக்கை படி தீர்ப்பு நாளில் இவரை மீள எழுப்பி, சுவன தீர்ப்பு எழுத முடியாமல் போகும். அல்லா தனக்குரிய exceptional powers ஐ பாவித்து ஏரிக்கப்பட்ட இவரை மீள எழுப்ப வேண்டும்.  
    • 12 DEC, 2024 | 03:42 PM ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh) ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  ஊழல் மற்றும் மோசடியை ஒழிப்பது தொடர்பில் கனடா அரசாங்கத்தின் அனுபவங்களை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம் என சுட்டிக்காட்டிய கனடிய உயர்ஸ்தானிகர், தற்போதைய அரசாங்கம் அந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.  இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் (அரசியல்) பெட்ரிக் பிகரிங் (Patrick Pickering) அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.  https://www.virakesari.lk/article/201089
    • ஐசிசியிடம் எழுத்துபூர்வமான உத்தரவாதம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சலசலப்பு இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், ஐசிசியிடமிருந்து எழுத்துபூர்வமான உத்தரவாதத்தை கோரியுள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதியிலிருந்து மார்ச் 9 ஆம் திகதி வரை சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் ஏற்று நடத்துகிறது. ஆனால் இந்த தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ மறுத்து வருகிறது. மேலும், இந்திய அணிக்கான போட்டிகளை, ‘ஹைபிரிட்’ மாடலில் வேறு நாட்டில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியிருந்தது. இந்த கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும், ஐசிசி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை ‘ஹைபிரிட்’ மாடலிலேயே நடத்த வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை ஐசிசி எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. ஐசிசி இதை கொடுக்கும் பட்சத்தில், இனி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி தொடர்கள் என்றுமே ஹைபிரிட் மாடலில் தான் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஹெரிபை சந்தித்து பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசின் வழிமுறைகளை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் பின்பற்றும் என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் கூறியது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை, துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/313493
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.