Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

AI சூழ் உலகு: உத்தம வில்லனின் தரமான செய்கை - ஏஐ கருவிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AI சூழ் உலகு 2: உத்தம வில்லனின் தரமான செய்கை - ஏஐ கருவிகள்!

1088314.jpg  
 

செயற்கை நுண்ணறிவுத் (AI) திறனின் பரவல் காட்டுத் தீயை விட அதிவேகமாக உள்ளது. மனிதர்கள் அதன் மீது காட்டி வரும் ஆர்வம் அதற்கு காரணம். அதனால், நாள்தோறும் ஏஐ சார்ந்த புதுப்புது வினோதங்களை கண்ணெதிரே பார்த்து வருகிறோம்.

ஏஐ தொழில்நுட்பத்தை கையாளும் மக்களுக்கும், அதனால் வேலையை இழக்கும் மக்களுக்கும் இடையே பனிப்போர் தொடங்கி உள்ளது. அநேகமாக இதன் அடுத்த கட்டம் மனிதர்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கும் இடையிலான யுத்தமாக கூட இருக்கலாம். இப்போதைக்கு நாம் ஓரளவுக்கு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம். ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில் வீடு, கல்விக் கூடம், அலுவலகம் என எங்கும் எதிலும் ஏஐ கண்டுபிடிப்புகள் நம்மை சூழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதை நாம் சற்றே விழிப்புடன் கடக்க வேண்டியுள்ளது. வரும் நாட்களில் பல்வேறு கண்டுபிடிப்புகள், கருவிகள் வழியில் நம் வாழ்வில் ஆச்சரியங்களையும், அதே நேரத்தில் அதிர்ச்சியையும் ஏஐ அள்ளி தரலாம். அப்படி என்னென்ன செய்யும் என்பதை பார்ப்போம்.

ஏஐ Body ஸ்கேனிங்: இந்த வகை தொழில்நுட்பம் மனிதர்களின் உடலை அப்படியே விரிவாக ஸ்கேன் செய்து டிஜிட்டல் குளோனை உருவாக்க நிறுவனங்களுக்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. இது ராணுவம் மற்றும் திரைத்துறையில் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நடிகர்களின் வயதை குறைத்துக் காட்ட, ரியலிஸ்டிக் அனிமேஷன் பேக்ரவுண்டை உருவாக்க, நடிகர்களின் நடிப்பை ரீ-ஷூட் செய்யாமல் மேம்படுத்த உதவும் எனத் தெரிகிறது.

 

16915941733068.jpeg

ஏஐ கண் கண்ணாடி: எதிரில் இருப்பவர்கள் சொல்வது மெய்யா என்பதை அறியலாம் - ஏஐ தொழில்நுட்பத்தின் துணையுடன் இது சாத்தியம் என்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் டெவின் லிடெல். கண்ணாடியில் கட்டமைக்கப்பட்ட கணினி பார்வையின் ஊடாக எதிரில் இருக்கும் மன ஓட்டத்தை அவர்கள் கண்கள் வழியில் அடையாளம் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார். இது விரைவில் கூட மனித பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஃபேஸ் டிடெக்‌ஷன் போலவே இது இயங்கும் சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவில் ஏர்டெல் டெலிகாம் நிறுவன சிம் கார்டை வாங்க வேண்டுமென்றால், அதை விற்பனை செய்யும் இடத்துக்கு நேரில் சென்று, போட்டோ எடுக்கும் போது கண்களை மூடி திறந்தால் மட்டுமே சிம் கார்டு பெற முடியும். இது தொழில்நுட்பத்தின் உதவியால் சாத்தியமாகி உள்ளது. அது போல வரும் நாட்களில் ஏஐ திறன் பெற்ற கண்ணாடி பயன்பாட்டுக்கு வரலாம். இது ஒரு சூப்பர் பவர் என லிடெல் சொல்கிறார்.

ஏஐ ரோபோ ஃபிஷ்: ஆழ்கடல் சூழலை அங்கு வாழும் உயிரினங்களுக்கு எந்தவித தீங்கும் இல்லாமல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய உதவுகிறது ‘Belle’ எனும் ஏஐ ரோபோ ஃபிஷ். ஏஐ துணையுடன் இது வழி நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஆழ்கடலில் புதைந்து இருக்கும் டிஎன்ஏ மாதிரி மின்னணு முறையில் சேகரிக்கப்படுகிறது. இதனை சுவிட்சர்லாந்து நாட்டு பொறியியல் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ஏஐ எந்திரம்: சோமேட்டிக் எனும் வணிக நோக்கில் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ஏஐ எந்திரத்தை வடிவமைத்துள்ளது. உயர் தரமான சுத்தத்துக்கு இந்த பாட் உத்தரவாதம் தருகிறது. இதற்கான கட்டணம் மாதத்துக்கு 82,000 ரூபாய். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் அல்லது வாரத்துக்கு 40 மணி நேரம் வீதம் வேலை செய்யுமாம். இது போல கழிவுநீர் தொட்டிகளில் மனித கழிவுகளை சுத்தம் செய்யவும் ஏஐ எந்திரம் வேண்டும்.

ஏஐ மைக்ரோ சிப்: துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் தனது கைக்குள் சிப் ஒன்று வைத்து கொள்வார். அதுபோல ஏஐ திறன் கொண்ட மைக்ரோ சிப் ஒன்றை நம் உடலுக்குள் பொருத்திக் கொண்டு, அதன் வழியே பேமென்ட் செலுத்த உதவுகிறது Walletmor எனும் பிரட்டன்-போலந்து நிறுவனம். பயோ பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சிப், அரிசி மணியை விட சற்றே பெரிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ட்ரெண்ட் ஜப்பான் நாட்டில் தொடக்க நிலையில் இருப்பதாக தகவல். வரும் நாட்களில் வீட்டு சாவி, கார் சாவி என பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த சிப்கள் வடிவமைக்கப்படலாம்.

ஏஐ துணை கொண்டு இயங்கும் மின்சார காலணி: மனிதர்கள் இயல்பை காட்டிலும் வேகமாக நடக்க மூன்வாக்கர் எனும் மின்சார காலணியை ஷிப்ட் எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் இயல்பான நடை வேகத்தை விடவும் 2.5x வேகத்தில் நடக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக் மோட் மற்றும் ஷிப்ட் மோட் என இரண்டு மோட் இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏஐ மூலம் இயங்குகிறதாம்.

இதே போல விவசாயிகளுக்கு உதவும் ஏஐ திறன் கொண்ட களை அறுக்கும் கருவி, நீர் தெளிக்கும் கருவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏஐ விலங்கு ஹைபிரிட் சிப்பாய், ஏஐ மூளை ட்ரேக்கர், ஏஐ Brain Extension என பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.AI சூழ் உலகு 2:

உத்தம வில்லனின் தரமான செய்கை - ஏஐ கருவிகள்! | AI universe series chapter 2 Super Hero Villain Classic inventions - hindutamil.in

1 hour ago, பிழம்பு said:

 

ஏஐ கண் கண்ணாடி: எதிரில் இருப்பவர்கள் சொல்வது மெய்யா என்பதை அறியலாம் - ஏஐ தொழில்நுட்பத்தின் துணையுடன் இது சாத்தியம் என்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் டெவின் லிடெல். கண்ணாடியில் கட்டமைக்கப்பட்ட கணினி பார்வையின் ஊடாக எதிரில் இருக்கும் மன ஓட்டத்தை அவர்கள் கண்கள் வழியில் அடையாளம் காணலாம் என அவர் தெரிவித்துள்ளார். இது விரைவில் கூட மனித பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஃபேஸ் டிடெக்‌ஷன் போலவே இது இயங்கும் சொல்லப்படுகிறது. இப்போது இந்தியாவில் ஏர்டெல் டெலிகாம் நிறுவன சிம் கார்டை வாங்க வேண்டுமென்றால், அதை விற்பனை செய்யும் இடத்துக்கு நேரில் சென்று, போட்டோ எடுக்கும் போது கண்களை மூடி திறந்தால் மட்டுமே சிம் கார்டு பெற முடியும். இது தொழில்நுட்பத்தின் உதவியால் சாத்தியமாகி உள்ளது. அது போல வரும் நாட்களில் ஏஐ திறன் பெற்ற கண்ணாடி பயன்பாட்டுக்கு வரலாம். இது ஒரு சூப்பர் பவர் என லிடெல் சொல்கிறார்.

 

இது மட்டும் என் மனைவியின் கையில் கிடைத்து விடக் கூடாது.... 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

இது மட்டும் என் மனைவியின் கையில் கிடைத்து விடக் கூடாது.... 

நிழலி இதே மாதிரி ஒவ்வொருதரும் நினைப்பார்களே?

என்ன செய்யலாம்?

1 hour ago, ஈழப்பிரியன் said:

நிழலி இதே மாதிரி ஒவ்வொருதரும் நினைப்பார்களே?

என்ன செய்யலாம்?

AI யை புறக்கணிப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

AI யை புறக்கணிப்போம் 

கரம் கோர்ப்போம் 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2033-ல் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் எப்படி இருக்கும்? - சாட்பாட் பதில்!

இன்றைய எந்திர லோகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் குறித்த பேச்சு அதிக அளவில் பேசப்படுகிறது. இந்த சூழலில் 2033-ல் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஏஐ-யின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளது ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

 

20-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கியது ஏஐ-யின் பயணம். தொடக்கத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அதனை பயன்படுத்தி வந்தனர். 21-ம் நூற்றாண்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான ஏஐ கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தன. அங்கிருந்து தனது பயணத்தை தொடங்கிய ஏஐ, அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. நமது அன்றாட வாழ்வில் நமக்கே தெரியாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏஐ இரண்டறக் கலந்துள்ளது.

இந்த சூழலில் 2033-ல் ஏஐ தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் எதார்த்த உலகில் மனித வாழ்வில் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள ஆர்வம் வர அதற்கான கேள்வியை ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன கூகுள் ‘பார்ட்’ வசம் கேட்டோம். அது தனித்தனியாக பல்வேறு பதில்களை தந்தது.

இந்த சூழலில் 2033-ல் ஏஐ தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் எதார்த்த உலகில் மனித வாழ்வில் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள ஆர்வம் வர அதற்கான கேள்வியை ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன கூகுள் ‘பார்ட்’ வசம் கேட்டோம். அது தனித்தனியாக பல்வேறு பதில்களை தந்தது.

 

 

16927792863068.jpg

எல்லாம் குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் மயம்: குவாண்டம் கணினியியல் என்பது குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் புது வகை கம்யூட்டர். இது தற்போது பயன்பாட்டில் உள்ள கம்ப்யூட்டர் கணினிகளை காட்டிலும் திறன் வாய்ந்தவை. இது ஏஐ உட்பட பலவற்றில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2033-ல் குவாண்டம் கம்யூட்டர்கள் வணிகம் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் பயன்படுத்தலாம். இது புதிய ஏஐ அமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும். அது அதி திறன் வாய்ந்தவையாக இருக்கும். இதன் வளர்ச்சி தொடங்கி இருக்கும்.

AGI: Artificial General Intelligence (ஏஜிஐ) பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது இது சார்ந்த ஆய்வுகள் தொடக்க நிலையில் உள்ளன. ஏஐ ஆராய்ச்சி பணிகளில் ஏஜிஐ முக்கிய இலக்காக உள்ளது. மனிதர்களுக்கு நிகரான நுண்ணறிவு திறன் அல்லது அதற்கும் மேலான திறன் கொண்ட வகையில் இது இருக்கும். அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

கம்ப்யூட்டர் விஷன்: எந்திரங்களுக்கு பார்வை கொடுப்பதன் மூலம் தன்னை சுற்றியுள்ள உலகம் குறித்த புரிதலை அது பெறும். இந்த வகை எந்திரங்கள் பல்வேறு பணிகள் செய்யும் வல்லமையை கொண்டிருக்கும். கிட்டத்தட்ட எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ, கார் ஓட்டும், மருத்துவம் பார்க்கும், முகத்தை அடையாளம் காணும். அதுபோல கம்ப்யூட்டர் விஷன் பெற்ற எந்திரங்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். 2033-ல் இந்த வகை ரோபோக்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும்.

ரோபோட்டிக்ஸ் துறை தற்போது உள்ளதை காட்டிலும் மேம்பாடு கண்டு இருக்கும் என தெரிகிறது. அதேபோல கல்வியிலும் ஏஐ பயன்பாடு தனித்துவமிக்கதாக இருக்கும் என தெரிகிறது.

வீடுகள் மற்றும் பணியிடங்கள் ஏஐ ஊடாக ஸ்மார்ட் ஆக மாற்றம் கண்டிருக்கும். இந்த இடங்களில் எனர்ஜி பயன்பாட்டை கண்காணிப்பது, பாதுகாப்பு வழங்குவது போன்ற பணிகளை ஏஐ எந்திரங்கள் செய்யும். மருத்துவம், உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறையில் ஏஐ மேம்பட்டிருக்கும் எனவும் ‘பார்ட்’ தெரிவித்துள்ளது.

மேலும், எந்திரங்களின் கற்றல் சார்ந்த அல்காரிதங்கள் மேம்பட்டிருக்கும். அது மனிதர்களை போலவே டேட்டாக்களை அறிந்து கொள்ள ஏஐ சிஸ்டங்களுக்கு வழிவகுக்கும்.

ஏஐ சார்ந்த நெறிமுறைகளில் வளர்ச்சி: வெளிப்படையான மற்றும் பொறுப்பு ஏற்கக்கூடிய நெறிமுறைகளை கொண்டுள்ள ஏஐ அமைப்புகளை கட்டமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் ஏஐ சார்ந்த பணிகளில் நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதே போல பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் நவீனம் கண்டிருக்கும்.

இப்படியாக ஏஐ-யின் எதிர்கால செயல்பாடு நம்மை அசர செய்கிறது. இருப்பினும் அதன் அச்சுறுத்தலையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனை ஆக்கப்பூர்வமான வகையில் குறைப்பது குறித்து சிந்திப்பதும் அவசியம். அதன் வழியே ஏஐ பயன்பாட்டை மனித நலனுக்கானதானதாக உறுதி செய்யலாம்.

https://www.hindutamil.in/news/technology/1105287-ai-universe-series-artificial-intelligence-dominance-in-2033-a-chatbot-reply-3.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.