Jump to content

புகலிடக் கோரிக்கையாளர்களை சர்ச்சைக்குரிய கப்பலுக்கு இடம்மாற்றுகிறது பிரிட்டன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: SETHU

10 AUG, 2023 | 10:30 AM
image
 

(ஆர்.சேதுராமன்)

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை சர்ச்சைக்குரிய கப்பலில் தங்கவைக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

'பிபி ஸ்டொக்ஹோம்' எனும் இக்கப்பலுக்கு முதல் கட்டமாக 15 பேர் கடந்த திங்கட்கிழமை அனுப்பப்பட்டனர்.  பிபி ஸ்டோக்ஹோம் ஆனது ஒரு பாரிய தெப்பம் (barge) ஆகும். 222 அறைகள் இதில் உள்ளன. 500 ஆண்களை இதில் தங்க வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு எதிர்க்கட்சியினரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆதரவான குழுக்களும் சட்டத்தரணிகளும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இதை மிதக்கும் சிறைச்சாலை என வர்ணிக்கின்றனர்.

சிறிய படகுகள் மூலம், ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சட்டவிரோதமாக பிரிட்டனுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் அதைரியப்படுத்துவதற்காகவும்,  புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல் அறைகளில் தங்க தங்க வைப்பதற்கு ஏற்படும் குறைப்பதற்காகவும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் 1976 ஆம் ஆண்டு பிபி ஸ்டொக்ஹோம்  நிர்மாணிக்கப்பட்டது. 3 அடுக்குகளைக் கொண்ட இக்கப்பலில் சமையலறை, உணவு மண்டபம், சலவை வசதிகள் ஆகியனவும் உள்ளன.

Bibby-Stockholm---2.jpg

ஏற்கெனவே, நெதர்லாந்து, ஜேர்மனி உட்பட பல நாடுகள் இக்கப்பலை பயன்படுத்தியுள்ளன. பொதுவாக தொழிலாளர்களை தங்க வைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டது. அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்கள், மற்றும் வீடற்றவர்களை தங்க வைப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது,  இங்கிலாந்தின் தென்பகுதியிலுள்ள போர்ட்லண்ட் துறைமுகத்தில் பிபி ஸ்டோக்ஹோம் தரித்து நிற்கிறது.  

இக்கப்பலின் பாதுகாப்பு குறித்து பல குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. ஒடுங்கிய நடைபாதைகளைக் கொண்ட இக்கப்பல் ஒரு 'மரணப் பொறி' என பிரித்தானிய தீயணைப்புப் படையினரின் சங்கம் விமர்சித்துள்ளது.  

 'அங்கு 222 பேருக்கே இடவசதி உள்ளது, அரசாங்கம் விரும்புவதைப் போன்று 500 பேருக்கு அல்ல' என அச்சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் பென் செல்பி கூறியுள்ளார்.

அங்கு தொற்றுநோய்கள் வேகமாக பரவக்கூடிய சூழல் குறித்து பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெனி ஹரீஸ் எச்சரித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் 45755 பேர் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சென்றுள்ளனர்  என அந்நாட்டு அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் முதல் 6 மாதத்தில் 11,500 பேர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருட முதல் 6 மாதத்தில் கடந்தவர்களின் எண்ணிக்கையைவிட 10 சதவீதம் குறைவாகும். எனினும், கடந்த வருட 2 ஆவது அரைப்பகுதியிலேயே அதிகமானோர் இவ்வாறு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

50,000 இற்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்போது ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குடியேறுபவர்களை ஹோட்டல்களில் தங்க வைப்பதற்காக பிரித்தானிய அரசாங்கம் தினமும் 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை செலவிடுவதாக பிரிட்டனின் துணைப் பிரதமர் ஒலிவர் டோடன் தெரிவித்துள்ளர். பாதுகாப்புக் கரிசனைகளை அரசாங்கம் கருத்திற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Bibby-Stockholm--33-AFP..jpg

தெப்பங்கள் தவிர, முன்னாள் இராணுவத்  தளங்கள் மற்றும் கூடாரங்களிலும் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கு பிரித்தானிய அரசாங்கம் முன்னர் திட்மிட்டது. எனினும், அது சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றமொன்று கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில்,  அகதிகளை பிபி ஸ்டொக்ஹோமுக்கு இடம்மாற்றுவது மன உளைச்சலை ஏற்படுத்தும் என கெயார்4கெலாசிஸ் எனும் அகதிகள் நலன்புரி அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் ஸ்மித் கடந்த திங்கட்கிழமை கூறியுள்ளார்.

பிபி ஸ்டொக்ஹோம் போன்ற 'மிதக்கும் சிறைச்சாலையில்' மனிதர்களை தங்கவைப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இவ்வாறு செய்வது முற்றிலும் மனிதாபிமானமற்றது என அவர் கூறியுள்ளார்.

எனினும்,   இக்கப்பல் ஒரு மிதக்கும் சிறைச்சாலை அல்ல என பிரித்தானிய உள்துறை அமைச்சின்,  புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட வசதிகளுக்கான பிரதிப் பணிப்பாளர் லியான் பாக் கூறியுள்ளார்.

அதேவேளை, "ஐக்கிய இராச்சியத்துக்கு அனுமதியற்ற வகையில்  வருபவர்கள் அடிப்படையான ஆனால், முறையான தங்குமிடத்தையே கொண்டிருக்க வேண்டும். அவர்கள் 4 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு எதிர்பார்க்க முடியாது" என பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் சாரா டைன்ஸ் கூறியுள்ளார். 

https://www.virakesari.lk/article/162013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கடல் மிதவை மேல் கட்டப்பட்டு பார்ப்பதற்கு ஒரு கப்பல் போல நீரில் மிதந்துகொண்டிருக்கும் இந்த விடுதி தரையில் உள்ள இதை ஒத்த ஒரு கட்டிடத்தைவிடக் கூடுதலான பாதுகாப்பு உபகரணங்களை கொண்டிருத்தாலன்றி மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற இடமாக இதைக்  கருதமுடியாது.  முக்கியமாக  அவசரகால கதவுகள் (emergency exit),  தப்பி ஓடும் பாதைகள் (escape route) படிக்கட்டுகள் என்பன விடுதியின் அனைத்து பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

Edited by vanangaamudi
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச தளத்தில், அகதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன படிகள், வசதிகள் கிடைக்கும் என்று விலாவாரியாக போட்டுள்ளனர்.

இதை வாசித்துக் காட்டிய வெள்ளைகாரி ஒருவர், அய்யோ நம்ம வரி எப்படி செலவாகுதென்னு பாருங்க மக்களே, இப்படி விபரமாக போட்டால், வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன ரிஸ்க் எடுத்தாவது வரத்தானே முணைவர் என்கிறார்.

அவரது வீடியோ வைரலாக பரவுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

21 minutes ago, Nathamuni said:

அரச தளத்தில், அகதிகளாக வருபவர்களுக்கு என்னென்ன படிகள், வசதிகள் கிடைக்கும் என்று விலாவாரியாக போட்டுள்ளனர்.

இதை வாசித்துக் காட்டிய வெள்ளைகாரி ஒருவர், அய்யோ நம்ம வரி எப்படி செலவாகுதென்னு பாருங்க மக்களே, இப்படி விபரமாக போட்டால், வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன ரிஸ்க் எடுத்தாவது வரத்தானே முணைவர் என்கிறார்.

அவரது வீடியோ வைரலாக பரவுது.

ரிஸி சுணக் அசப்பில் ஒரு இந்தியர் அவர் ஈழத்து அகதிகளை இந்தியா எப்படி நடத்துகிறதோ அதே போன்றதொரு சல்லிசான யோசனைகளைத்தான் கொண்டிருப்பார் என்பதற்குச் சிறந்த உதாரணம்.
மனைவியின் இந்திய வருவாய்க்கு வரிகட்டாது தப்பியது, கொரோணா காலத்தில் நீச்சல்குளம் கட்டியது இவைகள் வளிவந்த உண்மைகள்.

இங்கிருக்கும் ஒரு தொலைக்காட்சி ஊடகம் தனது செய்தியில் எதிர்வரும் தேர்தலில் பழைமைவாதக்கட்சி ஆட்சியைப்பிடிக்காது என எதிர்வுகூறுவதாகக் கூறியது.

இவரது பெற்றோர் அப்போது வரும் புகலிடக்கோரிக்கையாளர்களைப் போலவே சிறந்த எதிர்காலத்திற்காக ஆப்பிரிக்க நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அவர்கள் அந்த நாடிலிருந்து வெளியேற நினைக்கையில் அவர்களது தாய் நாட்டுக்குச் செல்ல விரும்பவில்லை.

ஆனால் அதே சூழலைக்கொண்ட சிறந்த எதிர்காலம் தேடி வரும் புலம்பெயரிகளை காலால் எட்டி உதைக்கிறார். 

Edited by Elugnajiru
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Elugnajiru said:

 

ரிஸி சுணக் அசப்பில் ஒரு இந்தியர் அவர் ஈழத்து அகதிகளை இந்தியா எப்படி நடத்துகிறதோ அதே போன்றதொரு சல்லிசான யோசனைகளைத்தான் கொண்டிருப்பார் என்பதற்குச் சிறந்த உதாரணம்.
மனைவியின் இந்திய வருவாய்க்கு வரிகட்டாது தப்பியது, கொரோணா காலத்தில் நீச்சல்குளம் கட்டியது இவைகள் வளிவந்த உண்மைகள்.

இங்கிருக்கும் ஒரு தொலைக்காட்சி ஊடகம் தனது செய்தியில் எதிர்வரும் தேர்தலில் பழைமைவாதக்கட்சி ஆட்சியைப்பிடிக்காது என எதிர்வுகூறுவதாகக் கூறியது.

இவரது பெற்றோர் அப்போது வரும் புகலிடக்கோரிக்கையாளர்களைப் போலவே சிறந்த எதிர்காலத்திற்காக ஆப்பிரிக்க நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அவர்கள் அந்த நாடிலிருந்து வெளியேற நினைக்கையில் அவர்களது தாய் நாட்டுக்குச் செல்ல விரும்பவில்லை.

ஆனால் அதே சூழலைக்கொண்ட சிறந்த எதிர்காலம் தேடி வரும் புலம்பெயரிகளை காலால் எட்டி உதைக்கிறார். 

ஈழத்து அகதிகளா?

வந்தவர்களில் பெரும்பான்மை அல்லாட காவலோடவந்தவர்கள். குறிப்பாக அல்பானியர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில் ஏற்றப்பட்டவர்கள் மீண்டும் இறக்கப்பட்டு விட்டார்கள். காரணம் ஒரு வகை பக்ரீரியா (லிஸ்ரிரீயா) பரவல். 

வயதான உள்ளூர் சமூகத்தைப் பிரயீடு செய்ய.. இந்த இளம் புலம்பெயரிகளை பாவிக்கலாம். ஆனால்.. நடப்பு பிரிட்டன் அரசுகள்.. இது விடயத்தில் நடந்து கொள்வது.. நாட்டுக்கு தான் பாதிப்பு.. நீண்ட கால நோக்கில்.!

இந்த அகதிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் எங்கட ஆக்கள் மண்ணுக்கும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

கப்பலில் ஏற்றப்பட்டவர்கள் மீண்டும் இறக்கப்பட்டு விட்டார்கள். காரணம் ஒரு வகை பக்ரீரியா (லிஸ்ரிரீயா) பரவல். 

வயதான உள்ளூர் சமூகத்தைப் பிரயீடு செய்ய.. இந்த இளம் புலம்பெயரிகளை பாவிக்கலாம். ஆனால்.. நடப்பு பிரிட்டன் அரசுகள்.. இது விடயத்தில் நடந்து கொள்வது.. நாட்டுக்கு தான் பாதிப்பு.. நீண்ட கால நோக்கில்.!

இந்த அகதிகளுக்கு ஆதரவான போராட்டங்களில் எங்கட ஆக்கள் மண்ணுக்கும் இல்லை. 

#நாட்டுக்கு தான் பாதிப்பு.. நீண்ட கால நோக்கில்.!#

உங்க பக்கத்து வீட்டில வாடகைக்கெடுத்தது ஒரு ரொமேனியன் குடும்பம். இப்ப 4 குடும்பம் இருக்குது! 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.