Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி - அகில இலங்கை இந்து மாமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 AUG, 2023 | 01:35 PM
image
 

வரலாற்றுச் சிறப்புமிக்கதும் சைவ மக்களின் முக்கியமான சமய சம்பிரதாயங்களோடு தொடர்புடையதுமான கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் மன்றத்தினர் கூறுகையில், 

ஒவ்வொரு சைவ ஆதாரங்களையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த நினைப்பதும், அதற்கான கண்டனங்கள் வெளிநாடுகள் வரை சென்று எதிரொலிக்கும்போது தமது செயற்பாடுகளிலிருந்து திணைக்களம் தற்காலிகமாக பின்வாங்குவதும் என்று சைவ மக்கள் தமது அடையாளங்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்துவரும் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் செல்வது மிகவும் கவலைக்குரியது. 

இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். இப்படியான சமிக்ஞைகளால் அரசாங்கம் சைவத் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அதன் முயற்சிகளில் பாரியளவில் பாதிப்பு ஏற்படும்.

கீரிமலை கேணி, தமது நீத்த உறவினர்களின் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற வெளிநாடுகளிலிருந்தும் சைவமக்கள் வந்து செல்கின்ற இடம். 

ஈழத்தில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான நகுலேஸ்வரத்தின் அருகில் அமைந்துள்ள இந்த கேணி பல நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது. இது ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வலி.வடக்கு பிரதேச சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகிற இடம்.

சைவத் தமிழ் மன்னன் இராவணனோடும் இராமாயணத்தோடும் தொடர்புடைய திருக்கோணேஸ்வர ஆலய சுற்றாடலில் வெளியார் ஆக்கிரமிப்பு, கன்னியா வெந்நீரூற்று தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடு, அண்மையில் பறளாய் முருகன் கோவிலில் உள்ள ஒரு அரச மரத்தைப் பற்றிய சர்ச்சை, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமை, பின்னர் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சர்ச்சைகள் என சைவ மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்கின்றன.

எனவே, இத்தகைய அநீதியான செயலைத் தடுத்து நிறுத்துவதோடு, சிறுபான்மை மக்களின் மத வழிபாடுகளை தடுக்கின்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். ஆனால், எமது மத வழிபாட்டை தடை செய்ய எவருக்கும் உரிமையில்லை. அத்தகைய செயற்பாடுகளை தடுக்க வேண்டும் என மாண்புமிகு ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக் கொள்கின்றோம் என்கின்றனர். 

https://www.virakesari.lk/article/162119

  • கருத்துக்கள உறவுகள்

அட தமிழ்த்தேசியம் பேசிகொண்டு திரியும் சுத்துமாத்துகளே (எல்லாக் கட்சியினரையும்தான் சொல்லுறன்) நீங்கள் ஈழம் ப்டிச்சுத் தரவேண்டாம் உரிமை எடுத்தும் தரவேண்டாம் அன்றாடம் தமிழர் எதிர்கொள்ளும் போதை குடி விபச்சாரம் இவைகளுக்கு எதிராகவும் இப்படி எமது வாழ்விடங்களை கபளீகரம் செய்யும் முயற்சிகளையும் தடுக்குமாப்போல எல்லாக் கட்சிகளும் சேர்ந்து ஒருமித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே.

ஆனால் இவங்கள் செய்ய மாட்டாங்கள் காரணம் செய்து சிங்கிளவனுக்குக் கோவம் வந்தால் என்ன செய்கிறது

சில வேளை சரிவந்திட்டால் மறுக்கா மறுக்க போராட்டம் செய்யச்சொல்லிக் யாராவது கேட்டால் பொழுதண்ணைக்கும் தெருவில எல்லோ நாங்கள் நிக்க வேணும்.

நோ நோ எங்களுக்கு இது சரிவராது.

அதை சிங்களவந்தான் செய்யத் தகுதி இருக்கு உதாரணம் கொத்தா கோகம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை சந்தர்ப்பமாக வைத்து சிங்கள இனவாதம் தமிழ்பகுதியின் முக்கிய இடங்களை எவ்வளவிற்கு வேகமாக  தமது கட்டுப்பாடுக்குள் கொண்டு வர முடியுமோ அவ்வளவு வேகமாக செய்கின்றது.

உலக அரசியல் மாற்றங்கள் இன்று போல் நாளை இல்லை என்பது சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Elugnajiru said:

அட தமிழ்த்தேசியம் பேசிகொண்டு திரியும் சுத்துமாத்துகளே (எல்லாக் கட்சியினரையும்தான் சொல்லுறன்) நீங்கள் ஈழம் ப்டிச்சுத் தரவேண்டாம் உரிமை எடுத்தும் தரவேண்டாம் அன்றாடம் தமிழர் எதிர்கொள்ளும் போதை குடி விபச்சாரம் இவைகளுக்கு எதிராகவும் இப்படி எமது வாழ்விடங்களை கபளீகரம் செய்யும் முயற்சிகளையும் தடுக்குமாப்போல எல்லாக் கட்சிகளும் சேர்ந்து ஒருமித்து காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே.

 

இதைத்தான் பிச்சை வேணாம் நாயை பிடி என்பதோ?  சிங்களத்துக்கு உலக வரலாறு, அவர்களின் எண்ணங்கள், ஐக்கிய நாடு அவர்களின் பாம்மாத்து விளையாட்டு எல்லாமே நன்றாக தெரியும். எனவே அவர்களது திடடப்படி (Road Map ) இன் படி எல்லாவற்றையுமே செய்து கொண்டு போகிறார்கள். நாங்கள் எது செய்தாலும் அவற்றிட்கு பெரிதாக பலன் கிடைக்குமா என்பது சந்தேகமே. முயட்சிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

இவ்வாறான செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.

வளர்ந்து ஆலமரமாகி தறிக்க முடியாத கைக்கெட்டாத விருட்ஷமாக  நிக்குது, இதிலே ? எங்கே முளை இருக்கு கிள்ளியெறிய?

14 hours ago, ஏராளன் said:

சைவத் தமிழ் மன்னன் இராவணனோடும் இராமாயணத்தோடும் தொடர்புடைய திருக்கோணேஸ்வர ஆலய சுற்றாடலில் வெளியார் ஆக்கிரமிப்பு,

இராவணனை சரத் வீர சேகர சொந்தமாக்கி விட்டார் தெரியாதோ?

14 hours ago, ஏராளன் said:

இப்படியான சமிக்ஞைகளால் அரசாங்கம் சைவத் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கான அதன் முயற்சிகளில் பாரியளவில் பாதிப்பு ஏற்படும்.

சச்சியர் அவர்களோடு இணைந்து பலகாலமாச்சு. சைவம், நம்பிக்கை இதெல்லாம் தேவையற்றது. கோவிலே தேவையில்லை சைவருக்கு என்று அடித்துச்சொல்லி விகாரையில் வழிபட்டும் காட்டிவிட்டாரே சைவம் வளர்த்து காத்த உங்கள்  சைவத்தின் காவலன். சைவத்தை காட்டிக்கொடுத்தவருக்கு விழா எடுத்து சிறப்பளிக்கும் இவர்களை என்ன சொல்வது? நாளைக்கு நாடாளுமன்றத்தில் சச்சியரும் பௌத்த சிங்களவன் என்று கூறி விழா எடுக்காமல் தற்காத்துக்கொள்ளுங்கள். அவர் இப்போ கோவணத்தோடு அலையிறார், அதையும் எப்போ கழட்டிக்கொடுப்பார் என்பது சைவத்துக்கே தெரியாது. அவரை நீங்கள் உங்கள் உறவிலிருந்து தலை முழுகி விடுவதே சைவத்துக்கு மரியாதை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

வளர்ந்து ஆலமரமாகி தறிக்க முடியாத கைக்கெட்டாத விருட்ஷமாக  நிக்குது, இதிலே ? எங்கே முளை இருக்கு கிள்ளியெறிய?

இராவணனை சரத் வீர சேகர சொந்தமாக்கி விட்டார் தெரியாதோ?

சச்சியர் அவர்களோடு இணைந்து பலகாலமாச்சு. சைவம், நம்பிக்கை இதெல்லாம் தேவையற்றது. கோவிலே தேவையில்லை சைவருக்கு என்று அடித்துச்சொல்லி விகாரையில் வழிபட்டும் காட்டிவிட்டாரே சைவம் வளர்த்து காத்த உங்கள்  சைவத்தின் காவலன். சைவத்தை காட்டிக்கொடுத்தவருக்கு விழா எடுத்து சிறப்பளிக்கும் இவர்களை என்ன சொல்வது? நாளைக்கு நாடாளுமன்றத்தில் சச்சியரும் பௌத்த சிங்களவன் என்று கூறி விழா எடுக்காமல் தற்காத்துக்கொள்ளுங்கள். அவர் இப்போ கோவணத்தோடு அலையிறார், அதையும் எப்போ கழட்டிக்கொடுப்பார் என்பது சைவத்துக்கே தெரியாது. அவரை நீங்கள் உங்கள் உறவிலிருந்து தலை முழுகி விடுவதே சைவத்துக்கு மரியாதை. 

தாயகத்தில் வாழும் உறவுகள் மிகவும் மன அழுத்ததில் வாழ்கிறார்கள் என்பது எனது கணிப்பு, எதைத் திண்டால் பித்தம் தணியும் என்பதுபோல் அவர்களது செயற்பாடு, 
இது மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு உளவியல் ரீதியாக எப்படித் தாக்குதல் செய்தால் ஒரு மனிதன் அல்லது சமுகம் நிலைகுலைந்து போகுமோ அதற்காகத் திட்டமிட்டு நடாத்தப்படும் ஒரு இனத்துக்கு எதிரான உளவியல் தாக்குதல்.

இந்த நாடு எங்களதா எனும் கேள்வியை தமிழர்கள் தங்களுக்குள்ளேயெ வினவும் ஒரு நிலைக்குப் படிப்படியாகக் கொண்டுவருவதே அவர்களது திட்டம்.

ஒரு இனம் எதற்கெல்லாம் போராடுவது கோரிக்கை வைப்பது ஊர்வலம்போவது!

முக்கியமான பிரச்சனைய மறந்துவிட்டு கேணிக்கும் கிணறுக்கும் தெருவுக்கும் சண்டைபிடி இறுதியில் எல்லாவற்றையும் மழுங்கடிக்குமாப்போல் நான் ஒரு இளயோர் சமுதாயத்தைத் திட்டமிட்டெ உருவாக்குகிறேன். அதன் பின்பு போராட்டமாவது புண்ணாக்காவது என்பதே அவர்களது நோக்கம்.

இவற்றுக்கு ஏற்றரற்போல் எமது அரசியல் தலைமை எனச்சொல்லிக்கொள்ளும் பலர்.

அயலுலகம் மேற்குலகம் அனைத்து உலகத்தின் கண்ணியவாஙள் எனச்சொல்லப்படுபவர்களுக்கு இவை அனைத்தும் தெரியும்.

வாக்களிதாயிற்று மிச்ச வேலைய அவர்கள் கவனிப்பார்கள் என சோம்பலாக இருக்கும் நாம். தமிழர்களது உரிமையை அல்லது நாட்டை பெற்றுக்கொள்ளமட்டுமே நாம் அரசியல் செய்கிறோம் அதுக்குத்தான் நீங்கள் எமக்கு வாக்களித்தீர்கள் மற்றப்படி அண்ராடம் நடக்கும் ஒழுங்கீனங்கள் சட்டவிரோதங்கள் இளையோரை பாதிக்கும் விடையங்கள் புலம்பெயர் தேசங்களிலிருந்து விடுமுறையில் போவோரது வக்கிரங்களை நிவர்த்திசெய்யும் விதத்தில் அவர்களது நடத்தைகளைத் தடுப்பது, போதைப்பழக்கத்தை இல்லாதொழிப்பது அதன் வியாபாரிகளை இல்லாதொழிப்பது இதுபோன்ற விடையங்களில் இந்த அரசியல் வியாதிகள் ஈடுபடாது. மக்களும் அவர்களைப் பொதுவெளியில் கண்டால் வினவுவதில்லை. 

தலையாய பிரச்சனைகள் தொடக்கம் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாதுவிட்டாலும். எமக்கான  பாராளுமன்றப் பிரதிநிது எனும் கோதாவில் சமூக அக்கறையுடன் யாராவது செயற்படுகிறார்களா?

நாடு பிரிக்கும் மட்டும் அல்லது எமக்கான அனைத்து உரிமைகளும் அடங்கிய நிர்வாக அலகு கிடைக்கும்வரைக்கும் சிறீலங்கா எனும் அரசின் ஆளுகைக்குள்தான் நாம் உள்ளடக்கப்பட்டுள்ளோம் அன்றாட வாழ்வில் நாம் செலுத்தும் வரி உட்பட்ட அனைத்தையும் அவதற்குத்தான் கொடுக்கிறோம் அப்போ எமது நலனில் குறைகள் மற்றும் சாதாரண வாழ்வில் இடைஞ்சல்கள் வந்தால் அதற்கு அரசும் அதன் அதிகாரிகலும் அவர்களை ஒழுங்குபடுத்தும் அரசியல்வாதிகளும்தான் பொறுப்பு இங்கே அனைவரும் ஊதியமாகப் பெற்றுக்கொள்வது மக்கள் வரிப்பணத்தைத்தான். பற்றாக்குறையாகக் கடன் பெறறாலும் நாம் தான் அதைத் திருப்பிக்கொடுக்கவேண்டும் இந்த எதுவித அறிவும் இல்லாது செயற்படும் எமது இனத்துக்கான சாபக்கேடுகளை என்ன செய்யவேண்டுமெனச் சொல்லுகிறீர்கள்?

ராவணன் சிங்களவன் அவர் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவன் என ஒருவன் சொல்னால் அப்படியா வச்சுக்கோ அதுக்கு என்ன இப்போ எனது பிரச்சனை வேறு அதுக்குப்பதில் சொல்லு எனச் சொல்லும் திராணி உள்ள யாராவது எமது பிரதிநிதிகள் எம்மத்தியில் இருக்கிறார்களா?

இன்னும் சிறிது காலத்தில் தாயகத்தின் அனைத்துத் தரப்பும் அவ்வப்போது வசதிப்படும் புலம்பெயர் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து 
தமிழினமே வேர்கள் அற்றுப்போய் வாழும்  

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Elugnajiru said:

ஒரு இனம் எதற்கெல்லாம் போராடுவது கோரிக்கை வைப்பது ஊர்வலம்போவது!

பிரதான காரணத்தை மழுங்கடித்து வேறொன்றுக்கு போராட வைத்து, பிரதான காரணத்தை இலகுவாக பெறுவது, அதேநேரம் திசை திருப்பப்பாவித்த காரணிகளையும் தொடந்து கைப்பற்றுவது இப்படியே மக்களை போராட்டத்தில் வைத்து ஒன்றை மழுங்கடித்து மற்றதை பெறுவது எனும் உத்தியில் எல்லாவற்றையும் பெற்றுவிட்டது சிங்களம், நாம் சோர்ந்து விட்டோம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.