Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

1090525.jpg

1976ஆம் ஆண்டுக்கு பின்னர் நிலவை நோக்கி ரஷ்யா லூனா-25 என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

இந்த விண்கலம் இந்தியாவின் இஸ்ரோ அண்மையில் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் முன்னரே தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி அலெக்ஸாண்டர் ப்ளோகின் கூறுகையில்,
லூனா-25 விண்கலம் இன்னும் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன் பின்னர் 7 நட்கள் நிலவு சுற்றுப்பாதையில் பயணித்து சரியான இலக்கை தேர்வு செய்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது. ஒகஸ்ட் 21 ஆம் திகதி இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ரொக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதை, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்காஸ்மோஸ் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே உறுதிப்படுத்தியது.

நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர், ஒகஸ்ட் 5ஆம் திகதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 நுழைந்தது. ஒகஸ்ட் 23ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் மெதுவாக விண்கலம் தரையிறக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/267828

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திட்டம் ஏலவே கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது. அறிவித்தப்படியே ரஷ்சியா அனுப்பி உள்ளது.

இதில் ஹிந்தியா சந்தியில் சிந்து பாடுவது ஏனோ?

ரஷ்சியாவின் விண்வெளி வெற்றிகள்.. பயணங்கள்.. என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. அமெரிக்காவையும் விட முந்தையது. 

Posted

47 ஆண்டுக்கு பிறகு நிலவுக்கு லூனா-25 விண்கலத்தை அனுப்பிய ரஷ்யா – சந்திரயானுக்கு முன்னதாக தரையிறங்கும் என தகவல்

ரஷ்யாவின் விண்வெளி முகமை, லூனா-25 என்ற விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. இது இந்தியாவின் சந்திரயானுக்கு முன்னதாக தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. இது வரும் 23ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ரொக்கெட் மூலம் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. கடந்த 1976ஆம் ஆண்டு ரஷ்யாவை உள்ளடக்கிய சோவியத் யூனியன் சார்பில் நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டது. அதன் பிறகு 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

1091669.jpg

லூனா-25 விண்கலம் வரும் 16ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதையை சுற்றி வரும் லூனா-25, வரும் 23ஆம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் சந்திரயான் விண்கலத்துக்கு முன்னதாகவே தரையிறங்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஸ்காஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில்,
“நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் திறன் ரஷ்யாவுக்கு உள்ளது என்பதை பறைசாற்றவும் நிலவின் தரைப்பரப்பில் ரஷ்யாவாலும் கால்பதிக்க முடியும் என்பதை உறுதி செய்யவுமே லூனா-25 அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் விண்வெளி விஞ்ஞானி விட்டலி இகோரோவ் கூறும்போது,
“நிலவில் தண்ணீர் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் ஜனாதிபதி புதினைப் பொருத்தவரை நிலவை ஆய்வு செய்ய வேண்டும் என்பது இலக்கு அல்ல. விண்வெளி ஆய்வில் சிறந்து விளங்குவதாக சீனாவும் அமெரிக்காவும் கூறிக்கொள்கின்றன. வேறு சில நாடுகளும் இந்த சாதனையை எட்ட முயற்சிக்கின்றன. எனவேதான் ரஷ்யா இந்த விண்கலத்தை அனுப்பி உள்ளது. இதன்மூலம் சோவியத் யூனியனின் நிபுணத்துவத்தை மீட்க வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்றார்.

https://thinakkural.lk/article/267963

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவில் மோதியது ஏன்? சந்திரயான்-3 சரித்திரம் படைக்குமா?

20 ஆகஸ்ட் 2023, 11:45 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் ரஷ்யாவின் லூனா-25 திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இதனால், இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்திற்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷ்யாவின் முயற்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ரஷ்யா தவறவிட்டதை சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது.

சோவியத் ஒன்றியம் - அமெரிக்கா விண்வெளிப் போட்டி

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகின் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்த அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் சர்வதேச அரசியல், ராணுவ, பொருளாதார அரங்கில் மட்டுமின்றி விண்வெளியிலும் போட்டியிட்டன. சோவியத் ஒன்றியம் 1955இல் சோவியத் விண்வெளித் திட்டத்தைத் தொடங்க, பதிலடியாக அமெரிக்கா 1958-ம் ஆண்டு தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் ஏஜென்சியான நாசாவை அறிமுகப்படுத்தியது. இந்த போட்டி ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள் அறிமுகத்துடன் தொடங்கியது.

நிலாதான் சூரியனுக்கு மிக அருகில் உள்ள வான்பொருள் என்பதால் அதன் மீது அந்த இரு வல்லரசுகளின் பார்வையும் விழுந்தது. லூனா என்ற லத்தீன் சொல்லுக்கு நிலா என்று பொருள். ஆகவே, நிலவை ஆய்வு செய்யும் தனது திட்டத்திற்கு லூனா என்று பெயர் சூட்டிய சோவியத் ஒன்றியம், லூனா வரிசையில் அடுத்தடுத்து விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியது.

லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம்,INSTITUTE FOR SPACE RESEARCH OF THE RUSSIAN ACADEMY OF SCIENCES

 
படக்குறிப்பு,

லூனா-25 விண்கலம்

1959ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனில் தரையிறங்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக லூனா-2 வரலாறு படைத்தது. லூனா 2 நிலவில் இறங்கிய பிறகு, அது நிலவின் மேற்பரப்பு, கதிர்வீச்சு மற்றும் காந்தவீச்சுகளைப் பற்றிய தகவல்களை வழங்கியது. இந்த வரலாற்று சாதனை, நிலவில் மேலும் பல ஆராய்ச்சிகளை முன்னெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வெற்றி நிலவில் மேலும் பல ஆய்வுகளுக்காக மனிதர்களை அனுப்புவதற்கும் வழி வகுத்தது.

 

விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர், சந்திரனில் தடம் பதித்த முதல் நாடு, லைகா என்ற நாயை அனுப்பியதன் மூலம் சந்திரனுக்கு விலங்கை அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வந்த நாடு என்று சோவியத் ஒன்றியம் அடுத்தடுத்து பல பெருமைகளை தனதாக்கியது. இதன் அடுத்தக்கட்டமாக நிலவுக்கு மனிதர்களை யார் அனுப்புவது என்று அமெரிக்கா - சோவியத் ஒன்றியம் இடையே போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டியில், 1969-ம் ஆண்டு அப்போலோ 11 விண்கலத்தின் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதராக புகழ் பெற, அமெரிக்கா முந்திக் கொண்டது.

1976-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் அனுப்பிய லூனா-24 விண்கலம் தான் நிலவுக்கு அந்த நாடு அனுப்பிய கடைசி விண்கலம் ஆகும். நிலா மட்டுமின்றி செவ்வாய், வெள்ளி மற்றும் வேற்று கிரக ஆய்வுகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்கள் என அந்த முயற்சிகளும், போட்டிகளும் அடுத்தடுத்த கட்டத்தைத் தொட்டன.

லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அப்போலோ-11 விண்கலம் மூலமாக நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்

விண்வெளி ஆராய்ச்சியில் மீண்டும் ரஷ்யா

1990-களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்ட இடர்பாடுகளில் இருந்து மீண்டு வர ரஷ்யாவுக்கு சற்று காலம் பிடித்தது. பொருளாதார பிரச்னைகளால் ரஷ்யாவால் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த கால கட்டத்தில் சோவியத் ஒன்றியம் விண்ணில் நிறுவியிருந்த மிர் விண்வெளி நிலையம் செயலிழந்து போனது.

சுமார் 20 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக சற்று நிமிர்ந்த பின்னர் ரஷ்யா மீண்டும் விண்வெளி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த இடைவெளியில் 2008-ம் ஆண்டு நவம்பர் 18, சந்திரயான்-1 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் மோதச் செய்து இந்தியா ஆய்வு செய்தது. சந்திராஸ் ஆல்டிடியூட் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர்(Chandras Altitute Composition Explorer) மூலம் சந்திரனின் தாக்க ஆய்வு செய்த இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று நிலவில் தண்ணீர் இருப்பதாக அறிவித்தது.

நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு இந்தியாதான். சந்திரயான்-2 விண்கலத்தை நிலவில் தரையிறக்க இந்தியா மேற்கொண்ட முயற்சி கடைசி நேரத்தில் தோல்வியடைந்தது. அதன் தொடர்ச்சியாக சந்திரயான்-3 என்ற பெயரில் அதே முயற்சியை இந்தியா மீண்டும் செய்கிறது.

அதேநேரத்தில், மீண்டும் விண்வெளி ஆய்வில் கவனத்தை குவித்த ரஷ்யாவின் பார்வை, சோவியத் ஒன்றியத்தைப் போலவே நிலவின் மீதே முதலில் பட்டது. ரஷ்யாவும் நிலவின் துருவப் பகுதிகளை ஆய்வு செய்ய தீர்மானித்தது. அதற்காக லூனா-25 விண்கலத்தை நிலவுக்கு செலுத்த திட்டமிட்ட ரஷ்யா, மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல முறை தள்ளிவைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தாமதமானது. அன்றைய தினம் அந்த விண்கலம் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

 
லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம்,REUTERS

லூனா-25 விண்கலத்தின் திட்டம் என்ன?

லூனா-25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியிருந்தால், அங்கே தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமை கிடைத்திருக்கும். நிலவின் தென் துருவத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத ஆழமான பள்ளங்களில் தண்ணீர் உறைந்த நிலையில் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்ய ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

விண்வெளி ஆய்வாளர்கள் கருதுவது போல, நிலவின் தென் துருவத்தில் மதிப்பு வாய்ந்த தனிமங்கள் இருக்கின்றனவா என்பதை லூனா-25 விண்கலத்தின் மூலம் உறுதி செய்யவும் ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

நிலவை நெருங்கியதும், லூனா-25 விண்கலத்தில் இருந்து முதல் கட்ட தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து வருவதாகவும் ரோஸ்காஸ்மோஸ் கூறியிருந்தது. அந்த விண்கலம் எடுத்த, நிலவின் 'ஸீமன்' பள்ளத்தின் புகைப்படத்தையும் அந்த அமைப்பு சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தது.

'அது நிலவின் தென் கோளத்தில் உள்ள மூன்றாவது ஆழமான பள்ளம், அதன் விட்டம் 190 கி.மீ., ஆழம் 5 கி.மீ.' என்றும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்திருந்தது. லூனா-25 விண்கலத்தை நாளை அல்லது நாளை மறுநாள் விண்கலத்தில் தரையிறக்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது.

 
லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம்,REUTERS

 
படக்குறிப்பு,

லூனா-25 விண்கலம் அனுப்பிய நிலவின் மேற்பரப்புப் படம்.

லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு

இந்தியா அனுப்பியுள்ள சந்திராயன்-3 விண்கலத்திற்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

"லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதையில் செலுத்த தயாரான போது அசாதாரண சூழல் ஏற்பட்டது" என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

"அந்த செயல்பாட்டின் போது, தானியங்கி நிலையத்தில் அசாதாரண சூழல் எழுந்தது. இதனால், திட்டமிட்டப்படி குறிப்பிட்ட அளவில் அந்த செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை" என்று ரோஸ்காஸ்மோஸ் தனது அறிவிக்கையில் கூறியுள்ளது.

விஞ்ஞானிகள் நிலைமையை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ள ரோஸ்காஸ்மோஸ், கூடுதல் விவரங்களை அளிக்கவில்லை.

லூனா-25 நிலவில் மோதிவிட்டதாக ரஷ்யா தகவல்

தொழில்நுட்பக் கோளாறால் லூனா-25 விண்கலம் என்ன ஆனது என்ற எதிர்பார்ப்பு நிலவி வேளையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், லூனா-25 விண்கலத்துடனான தொடர்பு சனிக்கிழமை முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டதாக ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்தது.

"லூனா-25 விண்கலம் கணிக்க முடியாத சுற்றுவட்டப் பாதையில் பயணித்து, நிலவின் மேற்பரப்பில் மோதியதால் அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டது" என்று அதன் அறிக்கை கூறுகிறது. லூனா-25 திட்டம் தோல்வியில் முடிவடைந்தது ஏன் என்பது குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லூனா-25 விண்கலம் நிலவில் மோதியது ஏன்?

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியது ஏன் என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம். அவர் பேசுகையில், "நிலவின் மேற்பரப்பை நெருங்குகையில் இந்த விபரீதம் நேரிட்டிருக்கிறது. லூனா-25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்காக அளிக்கப்பட்ட உந்து விசை தேவையைக் காட்டிலும் கூடுதலாக தரப்பட்டதே இதற்குக் காரணமான இருக்கலாம். அதிக உந்துவிசை காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் மோதியிருக்கலாம்" என்றார்.

"லூனா-25 விண்கலத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆங்காங்கே துளையிட்டு, உறைநிலையில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய ரஷ்யா திட்டமிட்டிருந்தது. தற்போது அந்த விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டதன் மூலம் ரஷ்யாவின் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

லூனா-25 தோல்வியின் மூலம் இஸ்ரோ பாடம் கற்றுக் கொள்ள ஏதாவது உள்ளதா என்று கேட்ட போது, "அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஏனெனில் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் பயன்படுத்திய தொழில்நுட்பத்திற்கும், இஸ்ரோ பயன்படுத்தும் தொழில்நுட்பமும் முற்றிலும் வெவ்வேறானவை. சந்திரயான்-2 விண்கலத்தை விட இன்னும் முன்னதாகவே, அதாவது நிலவின் மேற்பரப்புக்கு இன்னும் அதிக உயரத்தில் லூனா-25 தொடர்பை இழந்துள்ளது. ஆனால், இரண்டின் தோல்விக்குமே தேவைக்கு அதிகமாக கொடுக்கப்பட்ட உந்துவிசையே காரணமாக அமைந்தது.

சந்திரயா-2 திட்டத்தின் தோல்வி மூலம் இஸ்ரோ ஏற்கனவே பாடம் கற்றுக் கொண்டுள்ளது. அந்த தவறுகளை களைய என்ன செய்வது என்பதில் ஏற்கனவே இஸ்ரோ முழு கவனம் செலுத்தியுள்ளது. ஆகவே, சந்திரயான்-3 விண்கலம் தனது இலக்கை அடையும் என்று நம்பலாம்" என்று முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவது ஏன் கடினம்?

நாசாவால் ஏவப்பட்ட பெரும்பாலான அப்பல்லோ பயணங்கள், மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணங்கள் மற்றும் ரஷ்யா மேற்கொண்ட லூனா பயணங்கள் ஆகியவை நிலவின் மத்திய ரேகைக்கு (Equator) அருகில் மட்டுமே தரையிறங்கின. ஏனெனில் அங்கே தரையிறங்குவது மிகவும் எளிது.

தொழில்நுட்ப அதிர்வுகள் மற்றும் செயல்படத் தேவையான பிற உபகரணங்கள் நேரடியாக சூரிய ஒளியைப் பெறுகின்றன. இங்குள்ள வெளிச்சம் இரவு நேரத்திலும் தெளிவாகத் தெரியும்.

சந்திரனின் சுழலும் அச்சு சூரியனுக்கு கிட்டத்தட்ட சரியான கோணத்தில் இருப்பதால், துருவப் பகுதிகளில் சூரியக் கதிர்கள் பட்டாலும் அங்குள்ள பள்ளங்களின் ஆழத்தை அவை அடையாது. இதனால், சந்திரனின் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்கள் சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாமல் மிகவும் குளிரான நிலையில் உள்ளன. அத்தகைய இடங்களில் தரையிறங்குவது மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்துவது மிகவும் கடினம்.

 
லூனா-25 நிலவில் மோதியது ஏன்?

பட மூலாதாரம்,TWITTER/ISRO

 
படக்குறிப்பு,

சந்திரயான்-3 விண்கலம்

நிலவில் இந்தியா புதிய சரித்திரம் படைக்குமா?

லூனா-25 திட்டம் தோல்வியடைந்துவிட்ட நிலையில், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற முத்திரையைப் பதிக்க இஸ்ரோ முயற்சி செய்து வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் தற்போது நிலவிலிருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., அதிகபட்சம் 134 கி.மீ. என்ற தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரத்தை இஸ்ரோ மாற்றியுள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்குப் பதிலாக சற்று தாமதமாக மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவுக்கு மனிதர்களே சென்ற பிறகு இந்த ஆய்வின் முக்கியத்துவம் என்ன?

தென் துருவத்தில் உறைந்த மண்ணில் நீரின் தடயங்களை சந்திரயான்-3 கண்டறிந்தால், அது எதிர்கால சோதனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிலவில் உள்ள தண்ணீரைக் கண்டறிந்தால், அதில் இருந்து ஆக்ஸிஜனையும் உருவாக்கலாம். அங்கு மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கும்.

அது மட்டுமின்றி, ஆக்சிஜனை விண்வெளிப் பரிசோதனைகள் மற்றும் சந்திரனில் நடக்கும் பிற சோதனைகளுக்கு உந்துசக்தியாகவும் பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

https://www.bbc.com/tamil/articles/c4njpev1e7xo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் மோதியது லூனா-25

கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் மோதியது லூனா-25

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரனில் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

50 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவுப் பயணம் இதுவாகும்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் ஆளில்லா விண்கலம் இதுவாகும். ஆனால் இது தரையிறங்குவதற்கு சுற்றுப்பாதையில் சென்ற நிலையில் கட்டுபாட்டை இழந்துள்ளது.

சந்திரனின் ஒரு பகுதியை ஆராய்வதற்காக கடந்த 11 ஆம் திகதி ரஷ்யாவின்  Vostochny Cosmodrome ல் இருந்து லூனா-25; விண்ணிற்கு அனுப்பட்டிருந்தது.

லூனா -25 உடனான தொடர்பு நேற்று மாலை முதல் இழக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் மாநில விண்வெளி நிறுவனமான Roscosmos, தெரிவித்துள்ளது.

இதேவேளை சந்திரயான்-3 விண்கலம் அடுத்த வாரம் தரையிறங்கவுள்ள இந்தியாவுக்கு எதிராக நிலவின் தென் துருவத்தை நோக்கி ரஷ்யாவின் லூனா -25 ஏவப்பட்டது.

https://athavannews.com/2023/1345961

##############     ####################   ###################

On 11/8/2023 at 23:40, nedukkalapoovan said:

இந்த திட்டம் ஏலவே கடந்த வருடமே அறிவிக்கப்பட்டு விட்டது. அறிவித்தப்படியே ரஷ்சியா அனுப்பி உள்ளது.

இதில் ஹிந்தியா சந்தியில் சிந்து பாடுவது ஏனோ?

ரஷ்சியாவின் விண்வெளி வெற்றிகள்.. பயணங்கள்.. என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. அமெரிக்காவையும் விட முந்தையது. 

😂  🤣

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீற்றர் அகலத்தில் பள்ளம்

1116757.jpg


நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீற்றர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியைஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது போல், ரஷ்யா லூனா -25 விண்கலத்தை அனுப்பியது.

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்தரையிறங்குவதற்கு முன்பாக, லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விண்வெளி நிறுவனம் ராஸ்காஸ்மாஸ் தீவிரமாக செயல்பட்டது.

புவி மற்றும் நிலவின் சுற்றுவட்டபாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை, தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19ஆம் திகதி நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழேவிழுந்து நொறுங்கியது.

இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை, நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) படம் பிடித்துள்ளது.

லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என எல்ஆர்ஓ குழு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய பள்ளம், 10 மீற்றர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/271436



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.