Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புலம் பெயர் ஈழத் தமிழர்களின் இரண்டாம் சந்ததியின் கல்வி வளர்ச்சி
-பா.உதயன்

கல்வி என்பது கடலைப் போல் 
அங்கு மூழ்கித் தான் 
முத்து எடுக்க முடியும்.

புலம் பெயர் தமிழர் வாழும் நோர்வே நாட்டிலும் எம் தமிழ் பிள்ளைகள் கல்வியில் காட்டி வரும் ஊக்கத்தால் இம் முறையும் பலர் உயர் கல்வி படிப்புக்கு தெரிவாகியுள்ளார்கள். இதனால் நோர்வீய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கத் தக்கவர்களாகவும் போற்றத் தக்கவர்களாகவும் பார்க்கப்படுகின்றோம். அத்தோடு கடினமான உழைப்பாளிகளாகவும் எந்த வித அரச சமூகக் கொடுப்பனவுகளிலும் தங்கி  இல்லாதவர்களாகவும் எல்லாத் துறைகளிலும் வேலை செய்பவர்களாக வாழ்ந்து வருவது பெருமை தான். இதே போலவே இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா ஐக்கிய அமெரிக்க உட்பட தமிழன் பெருமை சேர்த்து வருகிறான். 

அண்மையில் கனடாவில் ஈழத் தமிழன் ஒருவன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வரையில் இந்தியர்களே பல பலம் மிக்க நாடுகளில் அதி உயர் பதவியை வகித்து வந்தனர். இப்பொது ஈழத் தமிழரின் இண்டாம் தலை முறையினரும் பல கெளரமான அந்தந்த நாடுகளில் மதிப்பு மிக்க தொழிலை செய்து வருகிறார்கள். அந்த நாடுகளின் அரச தலைவர்கள் கூட தமிழர் சமய பண்பாட்டுக் கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதும் தமிழர் பெருமை பற்றி அவர்கள் பேசுவதும் பெருமை தான்.

நாங்கள் விழுந்து விட்டோம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நாங்கள் மெல்ல எழுந்து வருவோம் என்று சொல்பவர்களாக இருக்க வேண்டும். வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி (Rise and fall are part of life) புதைத்து விட்டோம் என்று தான் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் புதைத்ததெல்லாம் விதை என்பதை மறந்து விட்டார்கள். ( “They tried to bury us, they didn’t know we were seeds.” ). நாங்கள் நினைத்தது விரும்பியது கிடைக்கவில்லையே என்று நாம் கவலை கொள்ளக் கூடாது வெற்றியும் தோல்வியும் மனித வாழ்வில் ஒரு அங்கமே ஆதலால் மீண்டும் முயற்சி திருவினையாக்கும் இறுதியில் உங்கள் இலக்கை அடைவீர்கள். கடுமையான உழைப்பும் உன் இலக்கை இறுதியில் அடைவேன் என்ற நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்.

நாங்கள் வல்லமை படைத்த இனமாக எழுந்து வர வேண்டும். ஆகவே நாங்கள் எல்லாக் கல்வியையும் கற்க வேண்டும் சர்வதேச தொடர்பு (International relations), பொருளாதாரம், (Economics) சமூகவியல், (Sociology) ஐரோப்பிய தத்துவம், (European Philosophy) உலக சரித்திரம், (World History) அரசியல் விஞ்ஞானம், (Political Science) உளவியல், (psychology) ஊடகத் துறை, (journalism ) மானிடவியல்(Social Anthropology) போன்ற கற்கை நெறிகளிலும் கூடிய கவனம் செலுத்தி அதில் ஆழமான தேடலோடு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும் பெரும் உலகக் கூட்டு ஸ்தாபானங்களில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக நாம் மாற முயற்சிக்க வேண்டும். இராஜதந்திர ரீதியாக பலம் பெற்றவர்களாக உங்கள் இனத்தின் விடுதலைக்காக உங்கள் அடையாளம் தொலைந்து போகாமல் உழைக்க வேண்டும். உலகில் போற்றக் தக்க தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டு உலகெல்லாம் தமிழன் பெருமை சேர்த்து வருகின்றான் இருந்தும் தனக்கென ஒரு தாய் நாடு இல்லாதது பெரும் துயரே.

எதையும் ஆளமாக பேசவும் எழுதவும் விவாதம் செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள். எழுத்தும் பேச்சும் இல்லாவிடில் இந்த உலகம் மெளனமாகிவிடும். ஆதலால் எபோதும் எழுதுங்கள் பேசுங்கள். எழுதுவதும் சிந்திப்பதும் உங்கள் மனதில் ஒரு பார்வையை உருவாக்குகிறது, சிந்திக்க வைக்கிறது, கருத்துக்களை உருவாக்குகிறது. தொலைநோக்கு பார்வையாளர்கள் தான் உலகை மாற்றுகிறார்கள். எதையும் தேடாமல் விளங்காமல் எதையும் கடக்க முடியாது. 

 தமிழ்ப் புலவன் வள்ளுவன் சொல்லுவது போல் “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”கற்றிருந்தால் மட்டும் போதாது கற்றபடி நடக்க வேண்டும். எப்பொழுதும் மனிதர்களை மதித்து நடக்க வேண்டும். பண்பான வார்த்தைகளை எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்கள் சுய நலன்களுக்காகவும் தனியவே தமது பெருமைக்காகவும் இருந்து வாழாமல் உண்மை மனிதர்களாக வாழப் பழகுங்கள் உங்களுக்காகவே பல தியாகங்கள் செய்து உங்கள் உயர்வுக்காக பாடு பட்ட பெற்றோர்களையும் மதித்து அன்பும் கருணையும் கொண்டவர்களாக நாங்கள் இருக்க வேண்டும். அவர்களின் அவிலாசைகளையும் நீங்கள் இயன்றளவு பூர்த்தி செய்பவர்களாக இருக்கவேண்டும். வேர்கள் இல்லையேல் மரங்கள் இல்லை.

பா.உதயன்✍️

  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, uthayakumar said:

வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி (Rise and fall are part of life) புதைத்து விட்டோம் என்று தான் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் புதைத்ததெல்லாம் விதை என்பதை மறந்து விட்டார்கள். ( “They tried to bury us, they didn’t know we were seeds.” ). நாங்கள் நினைத்தது விரும்பியது கிடைக்கவில்லையே என்று நாம் கவலை கொள்ளக் கூடாது வெற்றியும் தோல்வியும் மனித வாழ்வில் ஒரு அங்கமே ஆதலால் மீண்டும் முயற்சி திருவினையாக்கும் இறுதியில் உங்கள் இலக்கை அடைவீர்கள். கடுமையான உழைப்பும் உன் இலக்கை இறுதியில் அடைவேன் என்ற நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்.

நாங்கள் வல்லமை படைத்த இனமாக எழுந்து வர வேண்டும். ஆகவே நாங்கள் எல்லாக் கல்வியையும் கற்க வேண்டும் சர்வதேச தொடர்பு (International relations), பொருளாதாரம், (Economics) சமூகவியல், (Sociology) ஐரோப்பிய தத்துவம், (European Philosophy) உலக சரித்திரம், (World History) அரசியல் விஞ்ஞானம், (Political Science) உளவியல், (psychology) ஊடகத் துறை, (journalism ) மானிடவியல்(Social Anthropology) போன்ற கற்கை நெறிகளிலும் கூடிய கவனம் செலுத்தி அதில் ஆழமான தேடலோடு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும் பெரும் உலகக் கூட்டு ஸ்தாபானங்களில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக நாம் மாற முயற்சிக்க வேண்டும். இராஜதந்திர ரீதியாக பலம் பெற்றவர்களாக உங்கள் இனத்தின் விடுதலைக்காக உங்கள் அடையாளம் தொலைந்து போகாமல் உழைக்க வேண்டும். உலகில் போற்றக் தக்க தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டு உலகெல்லாம் தமிழன் பெருமை சேர்த்து வருகின்றான் இருந்தும் தனக்கென ஒரு தாய் நாடு இல்லாதது பெரும் துயரே.

பிரயோசனமான... நல்ல ஒரு கட்டுரை. பகிர்விற்கு நன்றி உதயன். 👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு விடயம் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் பெற்றோருக்கு கல்வி ஒரு முக்கிய செல்வம். அதைக்   காலகாலமாக பேணி வருகிறார்கள். இடைக்காலத்தில் சூழ்நிலை காரணமாக பிள்ளைகள்   திசை திருப்தி விடப்பட்டு விடடார்கள்  .  கலாச்சர   சீர்கேடு  போதை பெரியவர்களை மதியா மை போன்றவிடயங்கள். இவை கண்டிப்பாக மீள கட்டியெழுப்ப   வேண்டும். 
பூனைகளுக்கு மணிக்கட்டுவது யார்.? 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பகிர்வுக்கும் நேரத்திற்கும்

தமிழன் உயரணும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர்ந்தவர்களின் அடுத்து வரும் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக  விரிவாக சொல்லியிருக்கின்றீர்கள்.

9 hours ago, uthayakumar said:

நாங்கள் விழுந்து விட்டோம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நாங்கள் மெல்ல எழுந்து வருவோம் என்று சொல்பவர்களாக இருக்க வேண்டும். வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி (Rise and fall are part of life) புதைத்து விட்டோம் என்று தான் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் புதைத்ததெல்லாம் விதை என்பதை மறந்து விட்டார்கள். ( “They tried to bury us, they didn’t know we were seeds.” ). நாங்கள் நினைத்தது விரும்பியது கிடைக்கவில்லையே என்று நாம் கவலை கொள்ளக் கூடாது வெற்றியும் தோல்வியும் மனித வாழ்வில் ஒரு அங்கமே ஆதலால் மீண்டும் முயற்சி திருவினையாக்கும் இறுதியில் உங்கள் இலக்கை அடைவீர்கள். கடுமையான உழைப்பும் உன் இலக்கை இறுதியில் அடைவேன் என்ற நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்.

30 வருட போராட்டம் நடந்தும் அதன் பின்னரான சிங்கள அரசின் எமாற்று வேலைகளை கண்டும் நமக்கென்ன என திரியும் ஜாம்பவான்கள் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.