Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2023 at 17:09, Justin said:

அப்படி  சாதிப் பாகுபாட்டை எதிர்த்து எழுதிய டானியலுக்கும், அவரது மகனுக்கும் இன்னொரு திரியில் விழும் பூசையை நீங்கள் பார்க்கவில்லையா இன்னும்?😂

நன்றி, அங்கும் எனது கருத்துகளை எழுதியுள்ளேன். 
  யாரும் எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமை இருக்கிறது. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், ஈழத்திலே சைவம் தவிர்ந்த அனைத்து மதங்களும் மதமாற்ற அல்லது தமது மதமே நன்மையானது, சிறந்தது மற்றும் சொர்க்கத்துக்குச் செல்லக்கூடியது வாருங்கள் என்ற செயற்பாட்டையும் பரப்புரையையும் தமிழரிடையே தீவிரமாகச் செய்கின்றன. மக்களையும் மதம் மாற்றிவருகின்றன.  இங்கே பௌத்த மதமாற்றத்தின் ஊடாக ஒரு இனக்கலப்பு ஏற்படுவதோடு இனஅழிவையும் ஏற்படுத்தும் என்பதே பலரது ஆதங்கம். அதற்கான ஏதுநிலைகளையும் விளக்கியுள்ளனர் என்றே எண்ணுகின்றேன். சிங்களத்தை திணிக்க முயன்று,சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்படுத்தியதன் ஊடாகப் பெற்ற அனுபவம் மற்றும் வெளியுலகால் ஏற்படக்கூடிய தாக்கம் என்பவற்றைக் கருத்திலே கொண்டு ஈழத்தீவு முழுவதும் பௌத்தத்தை நிறுவி அதனூடாகச் சிங்களத் திணிப்பிற்கான ஏதுநிலையை ஏற்படுத்த முனைகிறது. அரசியல் அமைப்பின் ஊடாகப் பௌத்தத்தை அரசமதமாகப் பிரகடணப்படுத்தி அதற்கு முன்னுரிமையைக் கொடுத்துத் தடையற்ற அதிகாரங்களைப் பௌத்த சங்கங்களுக்கு வழங்கியுள்ளது.  அவற்றுக்கு மேலதிகமாக நிதியாதரவு, படைய ஆதரவு என்று பாதுகாப்பையும் வழங்கித் தடையற்ற அதிகார மதமாகிப் பொளத்தம் தமிழினத்தை அழிக்கும் சக்தியாகத் துரத்தும்போது தமிழினம் எதிர்வினையாற்றாது மௌனித்திருக்க வேண்டுமா? தேவநம்பியதீசன் காலத்தில் வந்த புத்தமதத்தையோ அதன் பின்னான காலத்தில் வந்த ஏனைய மதங்களையோ தமிழர்கள் தழுவியமை நிதர்சனமாது. இலங்கையில் தமிழ்ப் பௌத்தம் நிலவியது வரலாறு. ஆனால் இங்கே தமிழர்கள் ஏன் பௌத்தத்தை இன்றைய காலகட்டத்தில் எதிர்க்க வேண்டியுள்ளதெனில் அதனது ஆக்கிரமிப்பின் ஊடான தமிழின அழிப்புக் கோட்பாடே. பௌத்த தம்மத்திற் சொல்லப்பட்டுள்ள பொய், திருட்டு, காமம், மது மற்றும் கொலை என்பவற்றைச் செய்யாதே என்ற புத்தனெங்கே. சிங்கள பௌத்தரெங்கே. மேற்குறித்த ஐந்து விடயங்களையும், அவையென்றால் என்னவென்று கேட்டுப் பின்பற்றாத ஒருவகைக் காட்டுமிராண்டித் தனமான பௌத்தமே ஈழத்தீவிலே கோலோச்சுகிறது. சமகாலத்தில் தமிழினம் விழிப்புநிலையில் நின்று நோக்குவதே காலப்பொருத்தமாகும். அதேவேளை சைவர்கள் மட்டும் பெரிய புனிதர்கள் சம நோக்குடையவர்கள் என்றும் கூறமுடியாது. ஏனென்றால், சிங்களப் படைகளையோ அல்லது பாரநகர்த்திப் பொறியினைக் கொண்டோ தேரிழுக்கும் பிற்போக்குநிலை தோன்றியிராது. பௌத்தமே இருவேறு பிரிவுகளாவே உள்ளது. அதேவேளை சிங்கள பௌத்தத்தில் சாதியற்ற சமநிலையா இருக்கிறது. எடுத்துக்காட்டிற்காப் பிரேமதாசவை எத்தனைபேர் ஐ.தே.கட்சியில் ஏற்றிருந்தனர்.
இதைவிட இன்னொன்று என்ற தெரிவு இங்கு எவளவுதூரம் நன்மைபயக்கும். இதனால் எமது சந்ததிக்கு பலமா? அல்லது பலவீனமா? என உற்றுநோக்க வேண்டாமா? களைய வேண்டிய பிற்போக்குத் தனங்களைக் களைந்து உரியதிசை நோக்கித் தமிழ்த் தேசியமாக நகர்வதற்கான செயற்பாடுகளை விடுத்து இந்தமதம் எம்மைத் தாழ்த்துகிறது அதனால் அடுத்த மதத்துக்குப் போவோம் என்ற தெளிவற்ற பார்வையில் இருந்து விடுபடுவதே தமிழித்திற்குப் பலமாகும். அகவெளியுலகில் இருந்து முதலில் மனிதம் தன்னை விடுவித்துக் கொள்ளாதவரை எந்த மதத்துக்கு மாறியும் பயனில்லை. 
நன்றி   

  • Replies 55
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2023 at 01:09, Justin said:

இந்து, சைவ மதங்களில் இருக்கும் சாதிப் பாகுபாட்டின் பங்கு, மதமாற்றங்களில் வகிக்கும் பங்கு

கிறிஸ்த்தவ மதத்தில் சாதிப்பாகுபாடு இல்லையோ ஜஸ்டின்? குறைந்த சாதியென்பதற்காக ஆலயத்தின் வாயிலுக்கு வெளியே நிற்கவேண்டும், ஆலய சுற்றுப்பிரகாரங்களில் சிலைகளைத் தூக்கிச் செல்வதை அனுமதிக்க முடியாது, வாசகம் , மன்றாட்டு வாசிக்க முடியாது, வெள்ளாளர் இல்லாத சுவாமியென்றால் அவரின் பிரசங்கம் நடக்கும்போது ஆலயத்திற்கு வெளியே சென்றுவிடுவோம், என்னதான் படித்தாலும், இவர்களை எங்களுக்குத் தெரியாதா? உவன் கோவியன், பள்ளன், நளவன்........இவை எல்லாமே வெள்ளாள கிறீஸ்த்தவர்களின் வாய்களில் இருந்து வந்தவைதானே? கரவெட்டியில் பெரிய வெள்ளாள கிறீஸ்த்தவச் சமூகம் ஒன்றிருக்கிறது. சில ஆலயங்களில் அவர்களின் ஆதிக்கம் அப்பட்டமாகத் தெரியும். 80 களில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த பலர் படிப்பில் முன்னோக்கிச் செல்ல, அவர்களில் பலர் அரச தொழில்கள், குருமார்கள், கன்னியாஸ்த்திரிகள் என்று நல்ல நிலைக்கு வந்துகொண்டிருந்தார்கள். இதைப்பொறுக்க முடியாத வெள்ளாளக் கிறீஸ்த்தவர்கள் இவர்களை அழைக்கும் போது இவர்களின் சாதிப்பெயரைச் சொல்லியே அழைத்தார்கள். இந்த வக்கிரம் எவ்வளவு தூரத்திற்குச் சென்றதென்றால் பலர் கூடிநின்ற புகையிரத நிலையமொன்றில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த கணக்காளர் ஒருவரை, "கோவியப் பூரணத்தின்ர மகன் எல்லோ நீர்?" என்று அழைத்தார்கள். அங்கு நின்ற மக்கள் கூட்டம் அவரைப் பார்த்த விதம்பற்றி இன்றும் அவர் கவலையுடன் பேசுவார். 

சைவ‌மதம் சாதி வேற்றுமை பார்க்கிறது என்று குறைகூறிவிட்டு, கிறீஸ்த்தவர்களாக மதம் மாறியபின் அங்குவந்தும் அதையேதான் செய்கிறோம். அப்படியிருக்க ஏன் சைவமதம் மட்டுமே சாதிவேற்றுமை பார்க்கிறது என்று கருத்தியலை முன்வைக்கிறோம்? 

தமிழரின் எல்லா மதத்திலும் சாதிவேற்றுமை இருக்கிறது. இன்று நேற்றல்ல, பல்லாண்டுகளாக அது இருக்கிறது. மதவேற்றுமைகள், சாதிவேற்றுமைகள், பிரதேச வேற்றுமைகள் என்று அனைத்தையும் தகர்த்தெறிந்தே தலைவர் உன்னதமான விடுதலைப் போராட்டம் ஒன்றினை நடத்தினார். இன்று சாதிய வேற்றுமைகளைக் களைந்துவிட்டுத்தான் அரசியல் பேசமுடியும் என்றாலோ அல்லது விடுதலை குறித்து செயற்படலாம் என்றாலோ அது நடக்கப்போவதில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் சாதியத்தைக் களைவதைத்தவிர அதற்கு மாற்று வழியில்லை. சாதியக் களைவும், விடுதலைக்கான போராட்டமும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரஞ்சித் said:

 ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் சாதியத்தைக் களைவதைத்தவிர அதற்கு மாற்று வழியில்லை. சாதியக் களைவும், விடுதலைக்கான போராட்டமும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். 

இன்றையதேவையும் அதுவாகவே உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களாகவே அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய யாராலும் வெளியேற்ற முடியாது. ஆனால் சாதீயம் என்று எதை வகைப்படுத்துகிறோம் என்பது கேள்வியே? சாதி என்பதை தூக்கிப்பிடித்து அதை அழியாமல் தூபம் போட்டு வளர்ப்பதும் நாமே. அதற்கு தண்ணீர் ஊற்றாமல் விட்டால் அது தானே கருகிவிடும். 

56 minutes ago, ரஞ்சித் said:

வெள்ளாளக் கிறீஸ்த்தவர்கள் இவர்களை அழைக்கும் போது இவர்களின் சாதிப்பெயரைச் சொல்லியே அழைத்தார்கள்.

இது சாதியத்தில் மட்டுமல்ல, வேளாளரில் வறுமையில் இருந்து உயர்ந்தாலும் இப்படி சொல்லி அவர்களின் உயர்வை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் சொல்லும் வியிற்றெரிச்சல்.   

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

வெள்ளாளர் இல்லாத சுவாமியென்றால் அவரின் பிரசங்கம் நடக்கும்போது ஆலயத்திற்கு வெளியே சென்றுவிடுவோம்,

அங்கே கூறப்படும் அறிவுரைகள் நெஞ்சிலே அம்புபோல் குத்துவதால் தாங்க முடியாமல் எழுந்து போகிறீர்களோ என்னவோ? உண்மையில் அவர் சாதிதான் காரணம் என்றால்; ஆலயத்துக்கே போகாமல் விடலாமே!

5 hours ago, ரஞ்சித் said:

இந்த வக்கிரம் எவ்வளவு தூரத்திற்குச் சென்றதென்றால் பலர் கூடிநின்ற புகையிரத நிலையமொன்றில் வேற்றுச் சாதியைச் சேர்ந்த கணக்காளர் ஒருவரை, "கோவியப் பூரணத்தின்ர மகன் எல்லோ நீர்?" என்று அழைத்தார்கள். அங்கு நின்ற மக்கள் கூட்டம் அவரைப் பார்த்த விதம்பற்றி இன்றும் அவர் கவலையுடன் பேசுவார். 

இயேசு வாழ்ந்த காலத்திலும், இவரை நமக்குத்தெரியாதா? இவர் தச்சர் மகனல்லவா இவர்களை நாமறிவோம் என்று பேசிக்கொண்டனர். அதற்காக, அவரை பின்தொடர்ந்தவர்கள்  அவரை விட்டு விலகவில்லையே, அவரும் கலைப்பட்டு ஒதுங்கவில்லையே, அவர்களை பழிவாங்கவுமில்லை. தான் செய்ய வேண்டிய காரியத்தில் நிலையாய் இருந்து செய்து முடித்தாரே.   

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2023 at 03:05, Cruso said:

இலங்கையில் அதுதான் நடக்குது

இலங்கையில் மட்டுமல்ல மற்றய நாடுகளிலும் நடைபெறுவது தான். வெள்ளைக்காரரோ, யப்பான்காரரோ வட கொரியகாரரோ தமிழனாக மாறுவதற்காக தமிழ் கதைப்பதில்லை. எங்களை மகிழ்விப்பதற்காக மட்டுமே எப்படி சுகமாக இருக்கிறீர்களா  - வணக்கம் என்று சொல்லி கொள்வார்கள். தமிழர்கள் மனதார விரும்பி இன்னொரு இனத்தவராக மாறி கொள்கின்றனர். மதம் மாறுவது போன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.