Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ளவேண்டாம்”

”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்”

”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக்  கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில்  இன்றையதினம்  இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான  ஊடக சந்திப்பில் ”அரசியல்வாதிகள் இன முரண்பாட்டை தூண்டுகின்றனர்” என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்த  கூற்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பைத்தியக்காரர்கள் அவ்வாறுதான்பேசுவார்கள். அவர்கள் தொடர்பில் கவலைகொள்ள  வேண்டாம். அவ்வாறானவர்கள் இங்கும் உள்ளார்கள் அங்கும் உள்ளார்கள்.

இவர்கள் தேர்தல் வரும்போது மாத்திரமே இது குறித்துப்  பேசுவார்கள். எனவே அந்த பைத்தியக்காரர்கள் குறித்துக் கருத்திற் கொள்ளத் தேவையில்லை ”எனத்  தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1346185

 

##############################    #############################   ###################

 

”விடுதலைப்புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”

”விடுதலைப் புலிகள் பெளத்தத்திற்கு பாதுகாப்பையே வழங்கியிருந்தனர்”

”விடுதலைப்புலிகளின்  காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்

வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில்  இன்றைய தினம்  இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான  ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மத தலைவர்கள் ” குருந்தூர் மலை விடயமானது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது.  இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது. சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா..?

அவ்வாறு இருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள்  எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது சிங்கள பெளத்த என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர்.  இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப் பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இச் சந்திப்பில்  வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன், கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

https://athavannews.com/2023/1346178

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

குருந்தூர் மலையில் சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பது முரணானது : தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதுவே உண்மை - சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர்

Published By: VISHNU

21 AUG, 2023 | 08:04 PM
image
 

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது, அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

IMG-4570.jpg

தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பானது வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் திங்கட்கிழமை (21) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

IMG-4562.jpg

இச்சந்திப்பின் மேலும் கருத்து தெரிவித்த மத தலைவர்கள்,

குருந்தூர் மலை விடயமானது தொல்பொருள் திணைக்களத்திற்குரியது, இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது.

சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்திற்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து தங்கள் தளம் எனகூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா..? அவ்வாறிருக்கும் போது தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில் பெளத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால் தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள்  எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது சிங்கள பெளத்தம் என்றில்லாமல் நாங்கள் இலங்கையர்கள் யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்.

மேலும் ஒரு சிலர் இவ்விடயத்தினை அரசியலாக்கி இனங்களுக்கிடையிலான முறுகலினை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர்.

இவ்வாறான தொல்பொருள் பகுதிக்கான இடத்தின் முழுப்பொறுப்பினையும் தொல்பொருள் திணைக்களம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் இதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக்கூடாது என்று தெரிவித்திருந்தனர்.

இச் சந்திப்பில்  வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமசாரநாயக்க தேரர், நாகதீப ரஜமகா விகாரை விகாராதிபதி பூஜ்ய தவத கல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், மடுக்கந்தை விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர், உலுக்குளம் விகாராதிபதி பெரிய உலுக்குளம சுமணதிஸ்ஸ தேரர், தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன்,கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ. முகுந்தன்சர்மா ஆகியோரும் கலந்துகொண்டன்.

https://www.virakesari.lk/article/162883

Edited by ஏராளன்
தலையங்கம் சேர்க்கப்பட்டது
Posted
7 minutes ago, தமிழ் சிறி said:

இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை

சரியான  கருத்து.
கம்பன்பில மகாவம்சத்தை உதாரணம் காட்டும் பொய்யன், இனவாதி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, ஏராளன் said:

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது, அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

உண்மை தான். புத்த துறவிகள்.. நயினாதீவு வரை சென்று வழிபட.. யாழுக்கு விஜயம் செய்ய எல்லாம் புலிகள் உதவினார்கள். அந்த புத்த துறவிகளும்.. சிங்கள பெளத்த மேலாதிக்கம் பற்றிச் சிந்திக்காமல்.. மிதவாதமாக செயற்பட்டார்கள். விஜயங்களோடு..  விவகாரங்கள் ஓய்ந்தன.

ஆனால்.. இப்போது அதுவல்ல நடக்கிறது. புத்த பிக்குகள் ஆளாளாளுக்கு விகாரதிபதி ஆகும் ஆசையில்.. சிங்கள பெளத்த இராணுவ ஆக்கிரமிப்பை மையப்படுத்தி கட்டாய சிங்கள பெளத்த சின்னங்களை தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நிர்மாணித்து வருவதோடு.. தொல்பொருள் திணைக்களம்.. வனப்பாதுகாப்பு திணைக்களம்.. காணிப் பதிவு திணைக்களம் மற்றும் பிற்போக்குவாத சிங்கள பெளத்த பேரினவாத அரசியல்வாதிகளையும் சிங்கள பெளத்த முப்படை மற்றும் பொலிஸ் தமிழ் இனப்படுகொலை வெறியர்களையும் இதற்கு பயன்படுத்தி வருவது.. புலிகள் காலத்தில் பெரிதும்..நிகழாத ஒன்று. 

Edited by nedukkalapoovan


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.