Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிட்டும் தேங்காய்ப்பூவும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிட்டும் தேங்காய்ப்பூவும்.!

ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும் அடையாள அரசியல்…!

  — அழகு குணசீலன்— 
 
spacer.png

கிழக்கில் நீறுபூத்த நெருப்பாய் கிடந்த தமிழ்- முஸ்லீம் இனவாதம் மீண்டும் கொழுந்துவிட்டு எரிகிறது. சாம்பலைத்தட்டி தணலாக்கி எரியவைத்தவர் தமிழரசு எம்.பி.சாணக்கியன் இராசமாணிக்கம் என்று அவர் மீது  முஸ்லீம்கள் பழியைப் போட்டாலும் ஒட்டுமொத்த பழி தமிழர்கள் தலையில் கட்டப்பட்டுள்ளது.

“பிட்டும் தேங்காய்ப்பூவும்” கதை கேட்டுக் கேட்டு , எழுதி எழுதி புளித்துப்போன ஒன்றுதான். ஆனாலும் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியலில் அது இன்னும் பேசப்பட வேண்டிய ஒன்றாக இருப்பதே அதன் சமூக- அரசியல் விஞ்ஞான முக்கியத்துவம்.கிழக்கின் தனித்துவ சமூகக்கட்டமைப்பின் அடையாளம்.

மட்டக்களப்பில் கடந்த வாரம்தான் மாமாங்கம் திருவிழா முடிந்திருக்கிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் மாமாங்கம் திருவிழா குறித்து  இலக்கிய படைப்பாளி எஸ்.எல்.எம். கனிபா தனது முகப்புத்தகத்தில் இட்ட பதிவு இது.

” நடுச்சாமம் தாண்டி மாமாங்கம் கோயில் வீதியில் சுடச்சுட குழல் பிட்டும் , வழுதிலங்காய் பால்கறியும் உண்டு களித்த அவரின் நினைவுகள்  அவை”. வாசகர்கள் அணிந்துள்ள”கண்ணாடியை ” பொறுத்து இது என்ன பிட்டு தின்ற கதை …. என்று நினைக்கலாம். 

இது  கிழக்கின் வரலாற்று ரீதியான  தமிழ் – முஸ்லீம் உறவுப்பாலத்தின் அடித்தளம். தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான தனித்துவ உறவின் உச்சம். கிழக்கிற்கே  உரித்தான தனித்துவ வாழ்வியல் பாணி- LIFESTYLE .இதனால்தான்  எஸ்.எல்.எம் .இன் பிட்டு தின்ற கதை இன்றைய சூழலில் மறுவாசிப்பு செய்யவேண்டிய ஒன்று.

கிழக்கில் பூதாகாரமாக இருந்து வருகின்ற காணிப்பங்கீட்டு பிரச்சினை, நாவலடி விவகாரம் மூலம் மீண்டும் உரத்து ஒலிக்கின்றது. எனினும் இன்றைய நாவலடி விவகாரம் , மட்டக்களப்பு மாவட்டத்தின் சமகால ஒட்டு மொத்த காணிப்பிரச்சினையின் ஒரு துளி மட்டுமே.

நாவலடியில் அரசகாணி முஸ்லீம் தனியாட்களால் கையகப்படுத்தப்படுகிறது என்ற செய்தி அறிந்து களவிஜயம் செய்த  சாணக்கியன் பா.உ.  செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே கட்டிய   வீடுகள் புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டதாக முஸ்லீம் மக்கள் கூறுகின்றனர்.அதை கண்டித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

” அரச காணி அரசுக்கு சொந்தமானது. சட்டத்திற்கு முரணாக தமிழ்பேசும் மக்கள் என்றாலும், சிங்களவர்கள் என்றாலும் காணிப்பிடிப்பில் யார் ஈடுபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்பது சாணக்கியனின் வாதம். இங்கு சாணக்கியன் குறிப்பிட்டுள்ள ” தமிழ்பேசும் மக்கள்” என்ற வார்த்தை பிரயோகம் திட்ட மிட்டு தமிழர்களைத்தவிர்க்க அவர் பயன்படுத்தினாரா ? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

மட்டக்களப்பின் குருக்கள் மடம், குறுமண்வெளி துறைகளைக்கடக்க கட்டணம் அறவிடப்படுவதை “நீங்கள் ஏன் அரசாங்கத்திற்கு காசு உழைத்துக்கொடுக்கிறீர்கள் என்று கேட்ட சாணக்கியன் இப்போது மட்டும் என்ன அரசாங்கத்திற்கு காணிபிடித்து கொடுக்கிறாரா? என்றும் எதிரணியினர் கேட்கிறார்கள்.

 இது சாணக்கியன் மீது முஸ்லீம்கள் கொண்டிருந்த நம்பிக்கையை சிதறடித்திருக்கிறது. அவரின் முஸ்லிம் ஆதரவு முகமூடியை கிழித்திருக்கிறது என்று முஸ்லீம் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இது சாணக்கியனின் ஓடிப்பிடித்து ஒழித்து விளையாடும் அடையாள அரசியலை அம்பலமாக்கி இருக்கிறது . 

உண்மையில் நாவலடி சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் இடையிலான மோதல். சாணக்கியன்  இது விடயத்தில் சர்வதேச சட்டங்கள் பற்றி பேசியிருக்கிறார். சம்மந்தப்பட்ட மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காது, கால அவகாசம் வழங்கப்படாது மேற்கொள்ளப்பட்ட இந்த குடியிருப்பு அழிப்பு ஜனநாயக மறுப்பும், மனித உரிமைகள் மீறலுமாகும் என்பது மனித உரிமையாளர்கள் கருத்து.

 இந்த மக்கள் மற்றோரு சகோதர இனத்தின் தனியார் காணிகளை அடாத்தாகப்பிடிக்கவில்லை மாறாக குடியிருப்பு காணிப்பஞ்சம் காரணமாக அரச- மகாவலி அபிவிருத்தி ஒதுக்கீட்டுக்குரிய காணியில் குடியேறினார்கள். இவர்கள் குடியிருப்பு காணி இல்லாதவர்களா? அல்லது காணி மாபியாக்களா? என்பதை முறையாக அதிகாரிகள் ஆராய்ந்து ஒரு மாற்று நடவடிக்கையை முன் மொழிந்திருக்கமுடியும். அது நடக்கவில்லை . 

இங்கு காணி நிர்வாகத்தை விடவும் அரசியல் அதிகம் விளையாடியிருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்புகிறார்கள். அரச காணியில் மக்கள் சட்டரீதியற்றவகையில் குடியேறுவதும் பின்னர் இருக்கின்ற ஏதாவது ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி சட்டரீதியாக்கப்படுவதும் இலங்கையில் – மட்டக்களப்பில் நடக்காத ஒன்று அல்ல. 

இந்த பின்னணியில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களில் இருந்து ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் தொடர்ந்தும் இடப்பட்டு வருகின்றன. ஒட்டு மொத்தத்தில் இவை யாவும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகின்றனவாக உள்ளன.

தமிழ் -முஸ்லீம் உறவை தகர்த்த காரணிகள் எவை?

——————————————————————————–

(*) கண்டிக்கலகம் முதற்கொண்டு சேர்.பொன். இராமநாதனின் யாழ். மேலாதிக்க சிந்தனை.

(*) தனித்தமிழ் ஈழம் பிரகடனம் செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம்.

(*) முஸ்லீம் காங்கிரஸ் அமைக்கப்பட்டமை.

(*) 13வது திருத்தம் .

(*) புலிகளும், மற்றைய தமிழ் ஆயுத அமைப்புக்களும் முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள். பள்ளிவாசல்கள்,  முஸ்லீம் கிராமங்கள் மீதான தாக்குதல்களும் சொத்து பறிப்புக்களும்.

(*) ஜிகாத், மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினர் சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட படுகொலைகள்.

(*) வடக்கு முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் சொத்து அபகரிப்பும்.

(*) வடக்கு -கிழக்கு இணைப்பை முஸ்லீம்கள் எதிர்ப்பதும், கிழக்கில் தங்கள் தனித்துவத்தை கோருவதும்.

(*)    கிழக்கு மாகாண ஆளுநர் , தமிழ் அரசாங்க அதிகாரிகள் மீதான முஸ்லீம் அரசியல் வாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள்.

(*) தமிழர்கள் வாழும் சில பிரதேசங்களுக்கு முஸ்லீம்கள்  தொழில் சார்ந்து இன்னும் சுதந்திரமாக செல்லமுடியாமை.

இந்த காரணங்கள் அண்மையில் தமிழ், முஸ்லீம் இருதரப்பினராலும்

முகப்புத்தகத்தில் ஏட்டிக்குப் போட்டியாக இட்ட பதிவுகளில்  மௌன உடைவுகள் போட்ட தூண்டிலில் சிக்கியவை. அந்த சமூகத்தினரின் உள்ளக்கிடக்கையை பிரதிபலிப்பவை.

ஒழித்து விளையாடும் அரசியல் …..!

————————————————————–

அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அம்பாறை- திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஸாமில் கிழக்கிற்கே உரித்தான நாட்டுப்புற வார்த்தைகளில் இதை இப்படிச்சொன்னார். முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் “சேலைக்கு மேலால் சொறிகிறார்”

என்பதே அது. இந்த தொப்பி  கிழக்கிலங்கை அரசியலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருத்தமானது.

கிழக்கில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடியை சேலைக்கு மேலால் சொறிந்து தீர்க்கமுடியாது. எங்கு கடிக்கின்றதோ அந்த இடத்தில் சேலையை தூக்கி சொறியவேண்டும். அப்போதுதான் “கடிக்கு” கொஞ்சமாவது- தற்காலிகமாகவது  நிவாரணம் கிடைக்கும். எங்கவோ கடிக்க எங்கவோ சொறிந்து என்ன பயன்?  

இதற்கு   தமிழ் -முஸ்லீம் அரசியல் சேலைக்கு மேலே சொறிகின்ற பல “கடிகளை” இங்கு பட்டியலிடலாம். 

1. தமிழ்த்தேசியம் வடக்கு- கிழக்கு இணைப்பை கோருகிறது. கிழக்கின் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் இணைப்பை நிராகரிக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ்த்தேசியத்தின் வெளிப்படையான பதில் என்ன? மாற்றுத்திட்டம் என்ன?

2. மாற்று திட்டமாக  இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம் கோருகின்ற நிலத்தொடர்பற்ற தனி முஸ்லீம் அலகை அல்லது அம்பாறையில் கரையோர நிர்வாக மாவட்டம் ஒன்றுக்கு இணங்கிப்போக தமிழர் அரசியல் தயாரா?

3. கிழக்கு மாகாணத்தில் – குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிப்பங்கீடு மூன்று சமூகங்களின் சுமூகவாழ்வுக்கு முக்கியமானது.

அரசியல் கட்சிகளின் காணிக்கொள்கை என்ன? நஸீர் அகமட் கோருகின்ற இனவிகிதாசாரப்பங்கீடு சாத்தியமா? இல்லையேல் தமிழ்தரப்பின் மாற்றுயோசனை என்ன?

4. கல்முனை வடக்கு  தமிழ் பிரதேச செயலகத்தினை முஸ்லீம் அரசியல் ஏற்றுக்கொள்கிறதா இல்லையா? 

5.  மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் சனத்தொகையில் ஏற்படும் அதிகரிப்பு தமிழர்களின் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைத்துவிடும் , மற்றும் மகாவலி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் மூலம் மட்டக்களப்பின் ஒருபகுதி நிலப்பரப்பு பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

இந்த பின்னணியில் தமிழ் -முஸ்லீம் அரசியலும் -உறவும் தொடர்ந்தும் சந்தேகங்கள் நிறைந்த “பிடிகொடாத” அரசியலுக்கு ஊடாக  வாய்மை அற்ற வாக்கு அரசியலாகநகர்தப்படுகிறது. இதில் இருந்து விடுபட்டு வெளிப்படையான அரசியலுக்கு இருதரப்பும் முன்வரவேண்டும். இரு தரப்பினரும்  நண்பர்கள் போன்று பாசாங்கு செய்து கொண்டு புடவைக்கு மேலால் சொறிதல் “கடிக்கு” மருந்தல்ல.

நாவலடி எதிரொலி…..!

————————-

தமிழ் மக்களின் கடந்த 75 ஆண்டுகால அகிம்சை,ஆயுத போராட்டங்களை முஸ்லீம்கள் அறியாமல் இருக்க நியாயமில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் ஒன்றாக ஓடிய அரசியல் நதிதான் இடையில் இரண்டாகப்பிரிந்தது. இந்த இரு போராட்ட வழிமுறைகளிலும் இரு தரப்புக்கும் இழப்புக்கள் உண்டு. இழப்புக்களை சந்தித்துள்ள இருதரப்பும் இணைந்து அதற்கான காரணங்களை இனம்கண்டு எதிர்காலச்சந்ததிக்கு வழிகாட்டுவதே கிழக்கின் இன்றைய அரசியல் தேவை.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிங்கள அரசாங்க அதிபரை நியமியுங்கள், கிழக்குமாகாணத்தின் தமிழ் ஆளுனரை மாற்றுங்கள், 13 வேண்டாம், தமிழ் அதிகாரிகள் -பிரதேச செயலர்கள் வேண்டாம் என்ற கோரிக்கைகள்  இனவாதம் கொண்டவையும், தனி ஒரு தரப்பின் நலனுக்காக மற்றோரு தரப்பின் நலனை நிராகரிப்பவையுமாகும். இவை பேசித்தீர்க்கப்படவேண்டியவையே அன்றி மோதிக் தீர்க்கபடமுடியாதவை.

முஸ்லீம் -தமிழ் உறவில் உறுதியாக இருந்ததற்காக முஸ்லீம் ஊர்காவல்படையினரால் கொலை செய்யப்பட்டவர் அகமட்லெப்பை. அலிஸாகிர் மௌலானா, அசாத் மௌலானா போன்றவர்கள் புலிகள் பிளவுபட்டபோது செயற்பட்ட மனிதாபிமான அணுகுமுறையை கிழக்கு நன்றியுடன் திரும்பிப்பார்க்க வேண்டும். முஸ்லீம் காங்கிரசுக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் பதவியை நிபந்தனையின்றி விட்டுக்கொடுத்ததற்காக சம்பந்தர் ஐயா மீதான அர்ச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

அஷ்ரப் முஸ்லீம் காங்கிரஸை அமைத்ததுதான் இனவாதம் என்றால், தமிழ்க்காங்கிரஸ், தமிழரசுக்கட்சிகள் அமைக்கப்பட்டதை என்ன என்று சொல்வது.கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸ் அமைக்கப்டது போன்று தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அமைக்கப்பட்டதை என்ன என்று சொல்வது. இரண்டினதும் தோற்றறப்பாட்டில் ஒரு பொதுத்தன்மை உண்டு. ஒன்று கொழும்பு முஸ்லீம் தலைமைத்துவத்தை நிராகரிக்கிறது மற்றையது யாழ்ப்பாண தமிழ்த் தலைமைத்துவத்தை நிராகரிக்கிறது.

ஹிஸ்புல்லா ஆளுநராக இருந்த போது எத்தனை பிரச்சினைகள் இருந்தபோதும் அவரை நீக்கக்கோரி தமிழ்மக்கள் கேட்கவில்லை. மட்டக்களப்பு நீதிமன்ற. முஸ்லீம் நீதிபதியை, கிழக்குமாகாண முஸ்லீம் கல்விப்பணிப்பாளரை நீக்கக்கோரி கேட்கவில்லை. இவை அரசியலுக்கு அப்பால் நிர்வாகம், நீதித்துறை சார்ந்தவை ஒரு ஜனநாயகத்தில் சுயேட்சையாக செயற்படவேண்டியவை.

தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான பொருளாதார, கல்வி, தொழில், கட்சி அரசியல், ஒரு இனத்தை மற்றொரு இனம் கட்டி ஆளவேண்டும் என்ற உளவியல்சார் பொறாமை மனப்பான்மையே இவற்றிற்கான அடிப்படை.  இவை ஆரோக்கியமான சமூகத்திற்கும், அரசியலுக்கும் எதிரிகள். 

 அகப்பையில் அள்ளி பானையை நிறைக்க……!

——————————————————————————-

” THEY CAME FIRST FOR THE COMMUNISTS  AND I DON’T SPEACK UP 

  BECAUSE  I WASN’T A COMMUNIST.

  THEN THEY CAME  FOR THE JEWS AND  I DIDN’T SPEACK UP

 BECAUSE I WASN’T A JEW .

THEN THEY CAME FOR THE TRADEUNIST AND I DIDN’T SPEACK UP

BECAUSE I WASN’T A TRADEUNIST.

THEN THEY CAME FOR THE CATHOLICS AND I DIDN’T SPEACK UP

BECAUSE I WAS PROTESTANT.

THEN THEY CAME FOR ME AND BY THAT TIME NO ONE WAS LEFT TO SPEACK UP “

யூத இனப்படுகொலை குறித்து பாஸ்டர் மார்ட்டின் நிமொல்லர் எழுதிய கவிதை.

இந்தக் கவிதை வரிகளில்  இருதந்தாவது தனித்தமிழ் ஈழவிடுதலைப்போராட்டம் எமக்கு விட்டுச்சென்ற எச்சத்தை தேடுவோம்….!

அன்று ஊமைகளாய் இருந்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சமூகப் பெரியார்கள், புத்திஜீவிகள், கல்வியாளர்கள்,  மதத்தலைவர்கள்… இப்போது சமாதானம் செய்ய புறப்பட்டிருக்கிறார்கள் என்ன யோக்கியதை…..?  

இன்னொரு பகுதியினர் வாய்  விழுங்குவதற்கு மட்டும் என்று நினைத்து மனிதத்தையும்  சேர்த்து விழுங்கினார்கள்  அல்லது எஜமானுக்காக அவருக்கு பிடித்ததை வாந்தி எடுத்தார்கள் …. இவர்களுக்கு தியாகிகளாக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது……!

கடந்த கால தவறை உணர்ந்து கிழக்கின் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து சமூகநீதிக்காக குரல்கொடுக்க வேண்டும்.

தட்டப்படுவது அயல்வீட்டு கதவுதானே என்று தூங்குவோமாயின்….

உங்கள் வீட்டுக்கதவு தட்டப்படும்போது …. உங்களுக்காக பேச எவரும் இருக்கமாட்டார்கள்….!

  • கருத்துக்கள உறவுகள்+
37 minutes ago, கிருபன் said:

இந்த அழகு குணசீலன் என்ற பிரதேசவாதியால் கிழக்கின் தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கு இணைப்பை நிராகிக்கின்றனர் என்று இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது எவ்வளவு தொலைவு மெய்?

//அலிஸாகிர் மௌலானா, அசாத் மௌலானா போன்றவர்கள் புலிகள் பிளவுபட்டபோது செயற்பட்ட மனிதாபிமான அணுகுமுறையை கிழக்கு நன்றியுடன் திரும்பிப்பார்க்க வேண்டும்.//

தான் ஒரு வாழைப்பழத்தில் ஊசியேற்றும் சரியான பிரதேசவாதி என்பதை மீண்டுமொரு முறை நிருபித்திருக்கிறார். 

இந்த மாதிரியான கிழடுகள் மண்டையைப் போடும் வரைக்கும் பிரதேசவாத ஓடிக்கொண்டேயிருக்கும்.

இந்த அலிசாகிர் மௌலானா தான் அண்டைக்கு கருணாவை காப்பாற்றினவன். தன்ர வாகனத்திலை கருணாவைக் கொண்டுபோனவன். இதைத் தலைவர் மாமா ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிச்சவர். ஆனால் இந்தப் பிரதேசவாதக் கிழடு சொல்லுது, இந்த சோனி மனிதநேயம் புரிந்தவன் என்று. இதன் மூலம், இந்தக் கட்டுரையாளர் பிரதேசவாதத்தை மீண்டும் விதைக்கிறார். 

No photo description available.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

உள்முரண்படுகளை வெளிப்படையாக பேசி தீர்ப்பதன் மூலமே உறுதியான பலமான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும். 

அந்த வகையில் அழகு குணசீலனின் கட்டுரையில் பல உண்மைகள் நிதர்சனங்கள் எடுத்து கூறப்பட்டிருக்கின்றன.  அதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முற்றாக நிராகரிக்க பட கூடிய கட்டுரை அல்ல. எமது தோல்விக்கான பல அரசியல் விடயங்களை தனது கட்டுரையில் அவரது பார்வையில் சுட்டி காட்டியுள்ளார்

எமக்கு பிடிக்காத கருத்துகளை கூறுபவரை மண்டையைப் போடவேண்டும் என்று பொது வெளியில் கூறும் அநாகரிக கலாச்சாரம் எமது பண்பாட்டுக்கு எதிரானது.  ஏற்கனவே எமது தவறுகளை சுட்டி காட்டுபவர்களை மண்டையில் போட்டதால் நாம் இழந்தவைகள் அதிகம்.  

ஆகவே இவ்வாறான பலதரப்பு கருத்துகளை வெளிப்படையாக பேசும் கட்டுரைகள் தமிழ் தேசிய அரசியலை அறிவு பூர்வமாக கொண்டு செல்ல முற்படும் தலைமைகளுக்கு அவசியமானது.   கடந்த கால தவறுகளை எல்லாதரப்புகளும்  மறந்து அவற்றை நிவர்திப்பதன்  மூலமே உறுதியான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும். அதுவே இன்றைய அவசரத் தேவை.   வெறும் உணர்சசிகளுக்கு அடிமையாகி தமிழ் தேசியத்தை காவு கொடுத்த நாம் அறிவு பூர்வமாக தமிழ் தேசியத்தை வெற்றி  நடை போக வைக்கும் பக்குவத்தை அடைய இவ்வாறான அரசியல் கட்டுரைகள் தேவை. 

இக்கட்டுரையை  இணைத்த @கிருபன் என்ற உறவுக்கு நன்றி.  

Edited by island

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

தமிழ்த்தேசியம் வடக்கு- கிழக்கு இணைப்பை கோருகிறது. கிழக்கின் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் இணைப்பை நிராகரிக்கிறார்கள்.

13 hours ago, நன்னிச் சோழன் said:

இந்த அழகு குணசீலன் என்ற பிரதேசவாதியால் கிழக்கின் தமிழ் மக்கள் வடக்கு-கிழக்கு இணைப்பை நிராகிக்கின்றனர் என்று இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது எவ்வளவு தொலைவு மெய்?

வாக்கெடுப்பு நடத்தாமல் சொல்லமுடியாது. எனினும் கிழக்கில் வாழும் சிங்களவர்களும், முஸ்லிம்களும், பிள்ளையானை மட்டக்களப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெறச் செய்த தமிழர்களும் வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரிக்கமாட்டார்கள் என்று எதிர்வுகூறலாம். இதுவே பெரும்பானமையாக இருக்கும் என்பதால், சிங்களவர்களைத் தவிர்த்தாலும், கிழக்கில் வாழும் முஸ்லிம்களினதும்,  தமிழர்களினதும் ஒருமித்த ஆதரவு இல்லாமல் வடக்கு-கிழக்கு இணையமுடியாது. இனி இணையவும் சாத்தியக்கூறுகள் மிக அரிதாகத்தான் உள்ளன.
 
13 hours ago, நன்னிச் சோழன் said:

இந்த மாதிரியான கிழடுகள் மண்டையைப் போடும் வரைக்கும் பிரதேசவாத ஓடிக்கொண்டேயிருக்கும்.

இல்லை. இளைஞர்படைகள் பிள்ளையான், வியாழேந்திரன் பின்னால் திரளும்வரை தொடர்ந்தும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, island said:

உள்முரண்படுகளை வெளிப்படையாக பேசி தீர்ப்பதன் மூலமே உறுதியான பலமான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும். 

அந்த வகையில் அழகு குணசீலனின் கட்டுரையில் பல உண்மைகள் நிதர்சனங்கள் எடுத்து கூறப்பட்டிருக்கின்றன.  அதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முற்றாக நிராகரிக்க பட கூடிய கட்டுரை அல்ல. எமது தோல்விக்கான பல அரசியல் விடயங்களை தனது கட்டுரையில் அவரது பார்வையில் சுட்டி காட்டியுள்ளார்

எமக்கு பிடிக்காத கருத்துகளை கூறுபவரை மண்டையைப் போடவேண்டும் என்று பொது வெளியில் கூறும் அநாகரிக கலாச்சாரம் எமது பண்பாட்டுக்கு எதிரானது.  ஏற்கனவே எமது தவறுகளை சுட்டி காட்டுபவர்களை மண்டையில் போட்டதால் நாம் இழந்தவைகள் அதிகம்.  

ஆகவே இவ்வாறான பலதரப்பு கருத்துகளை வெளிப்படையாக பேசும் கட்டுரைகள் தமிழ் தேசிய அரசியலை அறிவு பூர்வமாக கொண்டு செல்ல முற்படும் தலைமைகளுக்கு அவசியமானது.   கடந்த கால தவறுகளை எல்லாதரப்புகளும்  மறந்து அவற்றை நிவர்திப்பதன்  மூலமே உறுதியான தேசியத்தை கட்டி எழுப்ப முடியும். அதுவே இன்றைய அவசரத் தேவை.   வெறும் உணர்சசிகளுக்கு அடிமையாகி தமிழ் தேசியத்தை காவு கொடுத்த நாம் அறிவு பூர்வமாக தமிழ் தேசியத்தை வெற்றி  நடை போக வைக்கும் பக்குவத்தை அடைய இவ்வாறான அரசியல் கட்டுரைகள் தேவை. 

இக்கட்டுரையை  இணைத்த @கிருபன் என்ற உறவுக்கு நன்றி.  

இக்கட்டுரையில் தேவையான ஆணிகளும் உள்ளன. தேவையற்ற ஆணிகளும் உள்ளன. ஆனால், அந்தத் தேவையற்ற ஆணி விசம் தடவப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது; பிரதேசவாதம் வளர்க்கப்பட்டுள்ளது, அறுக்கப்படவில்லை! 

நான் உள் முரண்பாடுகளை பேசித் தீர்பதற்கு எதிரானவன் அன்று... பிரதேசவாதம் இருப்பதை இவர் வெறுமனே ஓமென்றிருந்தால் ஓமென்றிருப்பேன். மாறாக அந்த பிரதேசவாதத்தை தனது கட்டுரை மூலம் எண்ணெய் ஊற்றி வளர்க்கிறார்; மறைமுகமாக, கருணாவைத் தப்பிக்க வைத்தது சரியென்கிறார், அதை செய்த அலிசாகிர் மௌலானாவைப் போற்றுகிறார்; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 

அடுத்தது, நான் அவரைக் கொல்ல வேண்டுமென்று சொல்லவில்லை. மாறாக, கழிவிரக்கமற்ற இயற்கை மரணத்தையே அப்படிக் குறித்தேன்; "மண்டையைப் போட வேண்டும்". இது சென்னை வட்டார வழக்கு. https://en.bab.la/dictionary/tamil/மண்டையைப்-போடு 

4 hours ago, கிருபன் said:

வாக்கெடுப்பு நடத்தாமல் சொல்லமுடியாது. எனினும் கிழக்கில் வாழும் சிங்களவர்களும், முஸ்லிம்களும், பிள்ளையானை மட்டக்களப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெறச் செய்த தமிழர்களும் வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரிக்கமாட்டார்கள் என்று எதிர்வுகூறலாம். இதுவே பெரும்பானமையாக இருக்கும் என்பதால், சிங்களவர்களைத் தவிர்த்தாலும், கிழக்கில் வாழும் முஸ்லிம்களினதும்,  தமிழர்களினதும் ஒருமித்த ஆதரவு இல்லாமல் வடக்கு-கிழக்கு இணையமுடியாது. இனி இணையவும் சாத்தியக்கூறுகள் மிக அரிதாகத்தான் உள்ளன.
 
இல்லை. இளைஞர்படைகள் பிள்ளையான், வியாழேந்திரன் பின்னால் திரளும்வரை தொடர்ந்தும் இருக்கும்.

ம்ம்ம்...

அப்ப அது தொடர்ந்திருக்கும் என்கிறீர்கள்?!

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் -முஸ்லீம் உறவு!கல்விச்சமூகம் கண்மூடியிருப்பது சமூகத்துரோகம்!

  —- அழகு குணசீலன் —-

கிழக்கிலங்கையின் சமூகங்களுக்கு இடையிலான உறவு நகரும் திசை கவலையளிப்பதாக இருக்கிறது. இது பற்றி பேசுவதற்கு கல்விச்சமூகம் தயங்குகின்றது. இவர்களில் ஒரு பகுதியினர் தங்கள் மீது “முத்திரை” குத்தப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்கள். சூழலின் கைதியாக தங்களுக்கு தாங்களே விலங்கிட்டுக்கொள்கிறார்கள். இன்னும் மறுபகுதியினர் கலங்கிய குளத்தில் “வலை” வீச நினைக்கிறார்கள். சொந்த இனம், மதங்களைக்கடந்து மனிதத்தை தேட இவர்களின் மனசு குறுகியது. ஆனால் தங்களுக்கு தாங்களே முகப்புத்தகத்தில் சால்வை போடுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

தமிழகத்தில் சட்ட சபையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு கருத்துப் பரிமாற்றம் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டு கோயில் ஒன்றில் இருந்து கோயில் யானை ஒன்று தனக்கு கட்டப்பட்டிருந்த கால் விலங்கை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டது. சட்ட சபையில்  பலரும் “கோயில் யானைக்கு மதம் பிடித்து அது சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடி விட்டது” என்று பேசினார்கள். அப்போது அமைதியாக எழுந்த கலைஞர் கருணாநிதி “இல்லை…. இல்லை….கோயில் யானைக்கு மதத்தை பிடிக்கவில்லை  ஆதலால் கோயிலை விட்டு ஓடியிருக்கிறது”  என்று வழமையான அவரது பாணியில் பதிலளித்திருந்தார்.

கிழக்கின் இன்றைய சமூக உறவில் ஏற்பட்டு வரும் பிளவுக்கு மதங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைகின்றன. சகல சமூகங்களிலும் ஒரு பிரிவினர் மதம் பிடித்து வெறிகொண்டு அலைகிறார்கள். இவர்கள் பௌத்த பிக்குகள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்துசாமிகள், இஸ்ஸாமிய இமாம்கள். ஆனால் கல்விச்சமூகத்தினரோ இந்தச் சமயமும், சண்டையும்  தமக்கு பிடிக்கவில்லை, நமக்கு ஏன் வீண்வம்பு? என்று சமூகக்கடமையை மறந்து தூரவிலகி வாளாவிருக்கிறார்கள்.

ஆனால் இராமன் யார்? இராவணன் யார்? என்றால் இல்லாத இந்த இருவருக்காகவும் உரிமைகோரி புராண, இதிகாசங்களையும், வேதங்களையும் தூசி தட்டி வெளியே எடுத்து இராமன் சார்பாகவும், இராவணன் சார்பாகவும் , தமிழன்சார்பாகவும், சிங்களவன் சார்பாகவும், முஸ்லீம்கள் சார்பாகவும்  உரிமை கோரி மர்ம நாவல் எழுதுகிறார்கள். வரலாற்று சட்டத்தரணிகளாக ஆஜராகிறார்கள். ஆனால் சாதாரண மக்களுக்கோ இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? கூட வந்த குரங்கு ஆண்டால் என்ன ? என்ற நிலை. இன உறவுக்காக ஏங்கும்  இந்த சாதாரண மக்கள் “எறிகின்றவன் கையில் பொல் இல்லாதவர்களாக” பெருமூச்சு விடும் நிலை மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் இதுவரை “பூனைக்கு மணி கட்டியவர்கள்” மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இவர்கள் யார் என்று திரும்பி பார்த்தோமாயின் அவர்கள் மதத்தலைவர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்கள் என்று  காட்டிக்கொள்கின்ற வர்த்தகர்கள், தர்மகர்த்தாக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கோயில் நிர்வாகிகள், மத அமைப்புக்களின் பிரதிநிதிகள்….., சமாதான நீதிவான்கள் என்று பட்டியல் இடலாம்.மொத்தத்தில் மதங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற  இந்த சாமிகளால் இதுவரை எதையும் சாதிக்க முடியவில்லை.

அகிம்சை அரசியலிலும் சரி, ஆயுத புரட்சிகர அரசியலிலும் சரி முதலாளித்துவம் எவ்வாறு மார்க்சியத்திற்கு எதிராக தன்னை எப்போதும் அடையாளப்படுத்துகின்றதோ அவ்வாறே மதங்கள் “சமூகநீதி” பற்றி அதிகம் பேசினாலும் நடைமுறையில்  முதலாளித்துவ அரசியலோடு கைகோர்த்து சமூகநீதியற்ற அரசியலுக்கு பங்களிப்பு செய்கின்றன. இதற்கு காரணம் மக்கள் மத்தியில் மதங்கள் பற்றிய ஏற்படுகின்ற விழிப்புணர்வு மதங்களை கேள்விக்குட்படுத்திவிடும், அதில் ஏற்படும் சரிவு தங்களின் அதிகார இருப்பை சாய்த்து விடும் என்பதைத்தவிர வேறில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்களும் தங்களை கல்விச்சமூகமாக போர்த்துக்கொண்டே வீதிவலம் வருகின்றனர்.

சமகால முதலாளித்துவ உலகமயமாக்க சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் தொழிலாளர் நலன்பற்றி முதலாளித்துவம் அதிகம்  பேசுகின்றது. அப்போதுதான் அது தப்பிப்பிழைக்க முடியும். அதற்கான கட்டாயத்தை – அழுத்தத்தை அதற்கு வழங்கியது மார்க்சியம்.

அதுபோன்று சமூகநீதி பற்றி பேசவேண்டிய கட்டாயத்தையும், அழுத்தத்தையும் மடாலயங்களுக்கும், சாமிகளுக்கும் வழங்கியிருப்பதும் மார்க்சிய புரட்சிகர சிந்தனைகளே. அதை அவர்கள் பேசாவிட்டால் அவர்கள் தாமாகவே காணாமல் போய்விடுவார்கள்.

 இதனால்தான் இனங்களுக்கு இடையிலான “காயத்தை”  ஆற்றுவதற்கான  நிரந்தர வழியைத்தேடாது அப்படியே வைத்து மந்திரம், செபம், ஓதல் , பூசை , பலி என்று மக்களை பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 யுத்தகாலத்திலும், யுத்தத்திற்கு பின்னரும் இவர்களின் சமாதான அணுகுமுறைகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை. யுத்தகாலத்தில்  தாம் சார்ந்த சமூகம் சாய்ந்து சகல ஆயுத வன்முறைகளையும் தமது இருப்புக்காகவும், விருப்புக்காகவும் நியாயப்படுத்தியவர்கள். இவர்கள்  நடுநிலையாளர்கள் என்ற தகுதியை இழந்தவர்கள். இவர்களை இன்னும் நம்புவதற்கு மக்கள் தயாரில்லை .

காலத்திற்கு காலம் தமிழ் ஆயர்கள் அமைப்பு, P2P ,  அரசியல் கட்சிகளை திருத்தும்  மக்கள் அமைப்பு, சர்வமத அமைப்பு , இந்து சம்மேளனம் என்று கூறிக்கொண்டு படம்காட்டும் இந்த சாமிகள் பலவீனமானவர்கள்.  அதிகாரம் அற்றவர்கள். அங்கீகாரம் அற்றவர்கள். அரசியல் பலம் அற்றவர்கள். அனுபவம், துறைசார் நிபுணத்துவம் அற்றவர்கள். இவர்கள் பூசைக்கு மட்டுமே பொருத்தமானவர்கள்.இவர்களிடம் ஒரு நீதியான சமாதானத்தை எதிர்பார்க்கமுடியாது. இது வரலாறு.

எனவேதான் இவர்களும் ஆயுத அரசியல் வன்முறைகளுக்கு ஒத்து ஊதி , ஒத்து ஓடி  தகர்த்த கிழக்கின்  சமூக உறவைக் மீளக்கட்டி எழுப்ப புதியவர்களும், புதிய நிறுவனங்களும்,  புதிய அணுகுமுறைகளும்  இன்றைய தேவையாகவுள்ளது. இதற்கு கிழக்கின் பல்கலைக்கழகங்களின் சமூகமும், கல்விச்சமூகமும் பெரும் பங்களிப்பை செய்ய முடியும். உடைந்த உறவுகளை புதிய முயற்சிகளின் ஊடாக கட்டி எழுப்ப முடியும் என்று நம்பப்படுகிறது. ஒரு நிபந்தனை மதத்தலைவர்களும், அரசியல்வாதிகளும் இந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்கக்கூடாது.

இது போன்ற  விடுதலைப்போராட்ட அரசியலை நெறிப்படுத்தும் பணியை ஆரம்பத்தில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் செய்திருந்தது. எனினும்  ஆயுத அரசியல் இதனை நீடிக்க விடவில்லை. எனினும் உயிரைப் பணயம் வைத்து மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக  ஆசிரியர்கள் அமைப்பு  இயன்றவரை செயலாற்றியது. இன்று  வரை அந்த அமைப்பினரால் ஆவணப்படுத்தப்பட்ட  மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவுகளே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.   காரணம் ஒரு தரப்பினரால் இருட்டடிப்புசெய்யப்பட்ட  பதிவுகள் இவை. இறுதியில் விஜிதரன், செல்வி, ……., சிவரமணி  வரிசையில் ஆயுத அராஜகத்தை எதிர்த்து நின்ற ரரஜினியும்  சுட்டுவீழ்த்தப்பட்டார். “முறிந்தபனையை ” எமக்கு பாடமாக விட்டுச்சென்றார்.அந்த கடந்தகாலத்தில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டாமா…..?

இதனால் கிழக்கில்  இன, மத , அரசியல் வாதிகளுக்கு எதிராக   செயலாற்ற கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களும், திருகோணமலை வளாகமும் முன்வரவேண்டும் .  இதன் மூலமே பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்ற  மதவாதிகளிடமும் , அரசியல்வாதிகளிடமும்  சிக்கி இருக்கின்ற கிழக்கின் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாட்டை சீராக்கமுடியும்.

இன்று முப்பது வயதை எட்டி  இருக்கின்ற கிழக்கின் தமிழ், முஸ்லீம், சிங்கள இளம் சந்ததியினர் 1990 களில் இடம்பெற்ற பாரிய தமிழ் – முஸ்லீம் வன்முறைகளை நேரடியாக அனுபவித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அந்த கசப்பான வரலாற்று நஞ்சு ஊட்டப்படுகிறது. இது 1983 கறுப்பு யூலை பற்றி இன்றைய இளைஞர்களுக்கு ஊட்டப்படுவதற்கு சமமானது. இதன் அர்த்தம் வரலாறு மறைக்கப்படவேண்டும் என்பதல்ல .

 சிங்களவர் தமிழர்களைக்கொன்றார்கள் , தமிழர்கள் முஸ்லீம்களைக் கொன்றார்கள், முஸ்லீம்கள் தமிழர்களைக்கொன்றார்கள், தமிழர்கள் சிங்களவர்களைக் கொன்றார்கள் என்ற வெறும் “கொலைப்பட்டியலுக்கு” அப்பால் சமூகவிஞ்ஞான அரசியல் ஆய்வுக்கான ஆய்வுப் பொருளாக இந்த வரலாறு  அமையவேண்டும். இதை பல்கலைக்கழகங்களும் , கல்விச்சமூகமுமே  செய்யமுடியும். இன்றைய இளையதலைமுறை இவை ஏன் நடந்தன?  எதிர்காலத்தில் இவை நடைபெறாது தடுப்பது எப்படி? அதற்காக செய்யவேண்டியவை எவை?  போன்ற கேள்விகளுக்கு பதில்தேடவேண்டும். வாழைப்பழத்தை உரித்து கொடுப்பதுபோல் கொலைப்பட்டியலை ஊட்டாது, இன்றைய தலைமுறையினரின் தேடலுக்கு வழிவகுக்கவேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் -முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான உறவு மிக, மிக நெருக்கமானதாக இருந்தது. இந்த உறவில் சாதாரண விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள்… போன்றோரின் பங்கு முக்கியமானது. பாடசாலையில், சந்தையில், கடலில், வயலில், வீதியில், கடையில், துறையடியில் , கோவிலடியில், பள்ளியடியில் எல்லாம் உயிராய் இருந்த உறவை  யார் அழித்தார்கள் என்பது எங்கள் இருபகுதியினருக்கும் தெரியும்.  இன்றைய இளம் சந்ததியினருக்கு இந்த வாய்ப்பு  இல்லாமல் போய்விட்டது .இப்போது அந்த உறவை மீள உயிர்ப்பிக்கும் கட்டாயம் இரு சமூகங்களுக்கும் உண்டு. ஏனெனில் அதுதான் கிழக்கின் வாழ்வியல். ஒன்றில்லாமல் ஒன்றில்லை.

கிழக்கின் பல்கலைக்கழகங்களுக்கும் , கல்விச்சமூகத்திற்கும் அதற்கான வசதிகள் உண்டு. அனுபவமும், துறைசார் நிபுணத்துவமும் உண்டு. உலகின் பல நாடுகளில் இன, மத முரண்பாடுகளை தீர்ப்பதில் – இனங்களுக்கு இடையேயான வெறுப்பை, காழ்ப்புணர்ச்சியை வெறும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்காது  கையாளுவதில் கல்விச்சமூகம் வெற்றி கண்டுள்ளது.  நாளாந்தம் குண்டு வெடித்துக்கொண்டிருக்கின்ற  இஸ்ரேல்- பாலஸ்தீனத்தில் இருதரப்பு  அடிப்படை வாதத்திற்கும் எதிராக  இரு தரப்பு  கல்விச்சமூகங்களும் களத்தில் நிற்கின்றன. இந்த சமாதான முயற்சிகளுக்கு சர்வதேசம் ஆதரவளிக்கின்றது.

பல்கலைக்கழகங்கள்  கள ஆய்வுகளை மட்டும் அன்றி , கலை கலாச்சார வடிவங்கள் ஊடாகவும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். சமகால  சமூக முரண்பாடுகளை அடையாளப்படுத்தி கலை கலாச்சார வடிவங்கள் ஊடாக விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்யமுடியும்.   ரோம் எரிந்து கொண்டிருக்கும் போது பிடில் வாசித்த கதையாக இன்னும் எத்தனை காலத்திற்கு இராமனையும், இராவணனையும் கூத்தாடப்போகிறோம். கண்முன்னே ஆயிரம் கருப்பொருள்கள் இருக்கையில்…..!

வாழ்ந்தாலும் சரி…. மடிந்தாலும் சரி…   சிங்கள, முஸ்லீம், தமிழ் சமூகங்கள் இணைந்ததே  கிழக்கின் வாழ்வியல். இது கிழக்கின் தத்துவவியலாளர் சுவாமி விபுலாநந்தர் காட்டிய நெறியும் வழியும்.

அந்த நெறியில்…. வழியில்…. பயணிக்க வேண்டிய பொறுப்பு கிழக்கின் பல்கலைக்கழகங்களுக்கும் கல்விச்சமூகத்திற்கும் உண்டு. 

இல்லையேல்…..

கிழக்கில் சுவாமி விபுலாநந்தர் தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கு திறந்து விட்ட கல்விக்கண்ணின் பலன் என்ன ….? 

https://arangamnews.com/?p=9910

  • கருத்துக்கள உறவுகள்

😭

Edited by பகிடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.