Jump to content

20க்கும் மேற்பட்ட அமெரிக்க மரைன் படைப் பிரிவினருடன் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியது - அவுஸ்திரேலியாவில் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
27 AUG, 2023 | 11:20 AM
image
 

அமெரிக்காவின் மரைன் படைப்பிரிவை சேர்ந்த 20 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிக்கொப்டர் ஒன்று அவுஸ்திரேலியாவில் விழுந்து நொருங்கியுள்ளது.

பயிற்சியின் போது ரிவி தீவுகளுக்கு மேல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்வினிலிருந்து 60 கிலோமீற்றர் வடக்காக உள்ள மெல்விலே தீவில்  ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியுள்ளது.

ஹெலிக்கொப்டர் ஒன்று அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறையினர் விரைந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் சிலர் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.

23 பேர் ஹெலிக்கொப்டரில் பயணித்தனர் அவர்கள் அமெரிக்க இராணுவத்தை சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலிய படையினர் எவரும் அதில் பயணிக்கவில்லை என தகவல்கள்வெளியாகியுள்ளன.

உயிரிழப்புகள் குறித்து இதுவரை விபரங்கள் வெளியாகவில்லை.

https://www.virakesari.lk/article/163261

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியதில் அமெரிக்க மரைன் பிரிவினர் மூவர் பலி

28 AUG, 2023 | 01:43 PM
image
 

அவுஸ்திரேலியாவில் நேற்று பயிற்சியின் போது 23 பேருடன் ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் 3 அமெரிக்க மரைன்பிரிவினர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் நேற்று இடம்பெற்ற ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கிய அமெரிக்க மரைன் படைப்பிரிவினரில் மூவர் தொடர்ந்தும்   மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

டார்வினின் மெல்விலே தீவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பயிற்சியின் போது டிவிதீவில் எம்வி22பி ஒஸ்பிரே ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கியதில் மூன்று மரைப்படைப்பிரிவினர் உயிரிழந்தனர்.

இந்த உலங்குவானூர்தியில் 22 பேர் பயணம் செய்தனர்.

ரோயல் டார்வின் மருத்துவமனையில் மூன்று மரைன்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மரைன்களில் ஐவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு தங்கள் தளத்திற்கு திரும்பியுள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்றுவரும் மரைன்படைபிரிவினரில் ஒருவர் தீவிரகிசிச்சை பிரிவில் உள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிக்கொப்டர் தீப்பிடித்தது என்பதை கருத்தில் கொள்ளாதது  மேலும் பலர் உயிரிழக்காதது அதிஸ்டமே என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஹெலிக்கொப்டர் விழுந்து நொருங்கி 20 மரைன் படைப்பிரிவினர் உயிர்தப்புவது என்பது ஆச்சரியமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/163340

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்..ஒஸ்பிறே (Osprey) ஹெலிகொப்ரர்.

மேலெழும் போது உலங்கு வானூர்தி போல எழுந்து, பறக்கும் போது ப்றொபெல்லர் விமானம் போல பறக்கும் ஒரு வானூர்தி. இந்த வானூர்தி வகையால் ஏற்பட்ட விபத்துக்களால் இதற்கு widow maker என்ற செல்லப் பெயர் கூட உண்டு. உற்பத்தியை நிறுத்தி விட்டார்கள், ஆனால் இன்னும் சில பாவனையில் இருக்கின்றன போல!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதேமாதிரியான விபத்து 2017 இலும்  நடந்தது . அப்போதும் மூவர் கொல்லப்பட்டிருந்தனர்.

Edited by ரஞ்சித்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது… ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது… @புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். @வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣. ————-  கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣. பிகு சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.
    • உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋
    • ஊர் எல்லாம் எலிகாச்சல் வந்து சனம் சாகுது உங்கட ஆளுக்கு இன்னமும் தொற்ற வில்லையோ?😄
    • அப்படி பெரிய அழகனா @Nathamuni நாதம்ஸ்?🤣
    • என்னையா இது? அடிப்பொடி தன் தலைவனை பில்டப் பண்ணி ஒரு செய்தியை போட்டால் - அதற்கு அடுத்த பின்னூட்டத்தில் வந்து இப்படி ஒரு ஓவியத்தால் அத்தனையையும் கிழித்து தொங்க விடுவீர்கள்களா 🤣. இது முறையா? தர்மம்தானா?🤣 பார்ப்போம் இவரும் சும் சாணக்ஸ் போல போய் பாலிமெண்ட்டுக்கு வெளிய நிண்டு போட்டோ எடுத்து போடுறாரா என.   சந்திப்பு நடந்தால் இருதரப்பு அறிக்கை, படம் வரும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.