Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூளைக்காய்ச்சல் நோய் சமூக பரவல் தொடர்பில் அவதானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் எட்டு மாதக் கைக்குழந்தையின் துயர மரணத்தைத் தொடர்ந்து, மூளைக்காய்ச்சல் நோய் சமூகத்தில் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் எழுந்துள்ளன.

சமீபத்தில் காலி சிறைச்சாலையில் இந்த நோய் முதலில் கண்டறியப்பட்டது. மூளைக்காய்ச்சல் நோய் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட சிசு, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளது.

காலி சிறைச்சாலைக்குள் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நோயினால் மரணம் நேரிட்டதா என சுகாதார அதிகாரிகள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த மரணம் மூளைக்காய்ச்சல் நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கும் அதே வேளையில், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் கோனார சோமரத்ன தெரிவித்துள்ளார்.

உடல் மாதிரிகள் மேலதிக விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காய்ச்சல், சளி, சோர்வு, வாந்தி அல்லது குளிர்ந்த கைகள் மற்றும் கால்கள் போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் தனிநபர்களை வலியுறுத்தியுள்ளன.

மூளைக்காய்ச்சல் நோயினால் இரண்டு கைதிகள் அண்மையில் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டு மரணங்களும் மூளைக்காய்ச்சல் நோயினால் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/270577

  • கருத்துக்கள உறவுகள்

"மூளைக்காய்ச்சல்" என்பது மூளை அழற்சியா (encephalitis) அல்லது மூளை மென்சவ்வு அழற்சியா (meningitis) என்பதை முதலில் தெளிவாகக் கண்டறிய வேண்டும். இரண்டும் ஒரேயளவு ஆபத்தானவையானாலும் காரணிகள் வேறு, சிகிச்சைகளும் வேறு.

அனேகமாக, சிறு குழந்தைகளில்  அல்லது இட நெருக்கடி மிகுந்த சிறைகளில் வாழும் சிறைக்கைதிகளில் வருவது பக்ரீரியாத் தொற்றினால் ஏற்படும் மூளை மென்சவ்வழற்சி (bacterial meningitis). மருத்துவமனைகளில் தொற்று நீக்கம் சிறப்பாக இல்லா விட்டால் இது அதிகரிக்கும்.  தொற்று நீக்கம் வேலை செய்கிறதா என்ற மீளாய்வு தான் முதற்படி.

இலங்கையில் இருக்கும் மூளை அழற்சி JEV வைரசினால் வரும் ஜப்பானிய மூளை அழற்சி (Japanese encephalitis). நுளம்பும், பன்றிகளும் இது பரவக் காரணம். இதுவாக இருக்காதென ஊகிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

இவை இரெண்டுக்கும் தடுப்பூசி உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இவை இரெண்டுக்கும் தடுப்பூசி உண்டா?

ஆம்,

JE வைரசினால் வரும் ஜப்பானிய மூளை அழற்சிக்கு தடுப்பூசி உண்டு. வட அரைக்கோள நாடுகளில் இந்த தொற்று இல்லாமையால் இந்த நாடுகளில் வசிப்போருக்கு இது வழங்கப் படுவதில்லை. தென்னாசியாவிற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வோர் மருத்துவருக்குச் சொன்னால் தடுப்பூசியை பயணம் செய்வதற்கு முன்னர் வழங்குவர்.

https://www.cdc.gov/japaneseencephalitis/vaccine/index.html

பக்ரீரிய மூளை மென்சவ்வழற்சி பெரும்பாலும் இரு வகையான பக்ரீரியாக்களால் ஏற்படுகின்றது.  இவையிரண்டிற்குமெதிராக இரு தடுப்பூசிகள் மேற்கு நாடுகளில் இருக்கின்றன. 16 வயதில்  அல்லது கல்லூரி செல்லும் போது இவற்றை வழங்குவர். அமெரிக்காவில் இது வழமை. 

https://www.cdc.gov/vaccines/vpd/mening/public/index.html

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

"மூளைக்காய்ச்சல்" என்பது மூளை அழற்சியா (encephalitis) அல்லது மூளை மென்சவ்வு அழற்சியா (meningitis) என்பதை முதலில் தெளிவாகக் கண்டறிய வேண்டும். இரண்டும் ஒரேயளவு ஆபத்தானவையானாலும் காரணிகள் வேறு, சிகிச்சைகளும் வேறு.

அனேகமாக, சிறு குழந்தைகளில்  அல்லது இட நெருக்கடி மிகுந்த சிறைகளில் வாழும் சிறைக்கைதிகளில் வருவது பக்ரீரியாத் தொற்றினால் ஏற்படும் மூளை மென்சவ்வழற்சி (bacterial meningitis). மருத்துவமனைகளில் தொற்று நீக்கம் சிறப்பாக இல்லா விட்டால் இது அதிகரிக்கும்.  தொற்று நீக்கம் வேலை செய்கிறதா என்ற மீளாய்வு தான் முதற்படி.

இலங்கையில் இருக்கும் மூளை அழற்சி JEV வைரசினால் வரும் ஜப்பானிய மூளை அழற்சி (Japanese encephalitis). நுளம்பும், பன்றிகளும் இது பரவக் காரணம். இதுவாக இருக்காதென ஊகிக்கிறேன்.

ஆனால் இப்ப இலங்கையில் இள வயது மரணங்கள் அதிகமாக அதிகரித்து வருகிறது சிலர் கொரானா ஊசி  தான் காரணமென்று சொல்கிறார்கள் . இப்ப மூளைக்காய்ச்சல் என சொல்லுறங்கள் எல்லாமே மர்மமாக இருக்கிறது ஒரு பக்கம் மருத்துவ மாபியாக்களின் தரம் குறைந்த மருந்துகளாலும் நடக்கிறது ஒரே மர்மமாக இருக்கு இங்க

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

ஆம்,

JE வைரசினால் வரும் ஜப்பானிய மூளை அழற்சிக்கு தடுப்பூசி உண்டு. வட அரைக்கோள நாடுகளில் இந்த தொற்று இல்லாமையால் இந்த நாடுகளில் வசிப்போருக்கு இது வழங்கப் படுவதில்லை. தென்னாசியாவிற்கு பிள்ளைகளை அழைத்துச் செல்வோர் மருத்துவருக்குச் சொன்னால் தடுப்பூசியை பயணம் செய்வதற்கு முன்னர் வழங்குவர்.

https://www.cdc.gov/japaneseencephalitis/vaccine/index.html

பக்ரீரிய மூளை மென்சவ்வழற்சி பெரும்பாலும் இரு வகையான பக்ரீரியாக்களால் ஏற்படுகின்றது.  இவையிரண்டிற்குமெதிராக இரு தடுப்பூசிகள் மேற்கு நாடுகளில் இருக்கின்றன. 16 வயதில்  அல்லது கல்லூரி செல்லும் போது இவற்றை வழங்குவர். அமெரிக்காவில் இது வழமை. 

https://www.cdc.gov/vaccines/vpd/mening/public/index.html

நன்றி… அடுத்த பயணத்திற்கு முன் மகனுக்கு ஏத்திகொண்டு போவம்.

எனக்கு தேவையில்ல்லை (🧠 இருந்தால்தானே மூளைகாய்ச்சல் வரும் 🤣).

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

நன்றி… அடுத்த பயணத்திற்கு முன் மகனுக்கு ஏத்திகொண்டு போவம்.

எனக்கு தேவையில்ல்லை (🧠 இருந்தால்தானே மூளைகாய்ச்சல் வரும் 🤣).

https://www.cdc.gov/japaneseencephalitis/transmission/index.html

நானும் பிள்ளைக்கு மட்டும் தான் தடுப்பூசி கேட்டேன். எனக்கும், மனைவிக்கும் நீங்கள் சொன்ன காரணத்தினால் எடுத்துக் கொள்ளவில்லை 😂 (சீரியசாக: குழந்தைகளுக்குத் தான் கவனமாக இருக்க வேண்டும், பெரியவர்களுக்கு ஆபத்துக் குறைவு).

போகும் காலப் பகுதியையும் கவனிக்க வேண்டும். கீழே உள்ள இணைப்பின் படி இலங்கையில் நுளம்பு சீசன், மழைக்காலம் தான் அதிக தொற்றுக்கள் வரும் காலம் போல தெரிகிறது.

https://www.cdc.gov/japaneseencephalitis/transmission/index.html

எனவே, ஊசி எடுக்காமல் போனாலும் நுளம்புக் கடியைத் தவிர்க்கும் முயற்சிகளை எடுத்தாலும் தடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் இப்ப இலங்கையில் இள வயது மரணங்கள் அதிகமாக அதிகரித்து வருகிறது சிலர் கொரானா ஊசி  தான் காரணமென்று சொல்கிறார்கள் . இப்ப மூளைக்காய்ச்சல் என சொல்லுறங்கள் எல்லாமே மர்மமாக இருக்கிறது ஒரு பக்கம் மருத்துவ மாபியாக்களின் தரம் குறைந்த மருந்துகளாலும் நடக்கிறது ஒரே மர்மமாக இருக்கு இங்க

தனி, "தகவல்கள் இல்லாத வெற்றிடத்தை வதந்திகள் நிரப்பி விடும்" என்பார்கள். அப்படி ஒரு நிலை தான் என நினைக்கிறேன். முறைப்படி, ஊடகங்கள் இப்படி பகுதியளவு தகவல்களைத் தருவதை விட, அரச சுகாதாரத் திணைக்களம் நேரடியாக மக்களுக்குத் தகவல்களைத் தந்தால் வதந்தி, அச்சம் என்பன நீங்கும்! இலங்கையில் எல்லாம் சீரழிந்து வருவதால் இது நடக்காதென நினைக்கிறேன்.

உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு அவசியமான தகவல்களை தேடியறிந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு ஒரு குடும்ப வைத்தியரை வைத்திருங்கள். இயலுமானால், இரண்டாவது ஒரு மருத்துவரை நட்பு வட்டத்தில் கொண்டிருங்கள், அவரிடம் கேள்விகளைக் கேட்டு உறுதி செய்து கொள்ள வசதியாக இருக்கும். உங்களுக்கு தரப்படும் மருந்துகளின் பெயர் என்ன,  ஏன் தரப்படுகின்றன, போன்ற தகவல்களை தவறாமல் தேடியறியுங்கள்.

ஒரு படத்தில் செந்தில் சொன்னது போல "தரவுகள் தான் செல்வம்" 👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

https://www.cdc.gov/japaneseencephalitis/transmission/index.html

நானும் பிள்ளைக்கு மட்டும் தான் தடுப்பூசி கேட்டேன். எனக்கும், மனைவிக்கும் நீங்கள் சொன்ன காரணத்தினால் எடுத்துக் கொள்ளவில்லை 😂 (சீரியசாக: குழந்தைகளுக்குத் தான் கவனமாக இருக்க வேண்டும், பெரியவர்களுக்கு ஆபத்துக் குறைவு).

போகும் காலப் பகுதியையும் கவனிக்க வேண்டும். கீழே உள்ள இணைப்பின் படி இலங்கையில் நுளம்பு சீசன், மழைக்காலம் தான் அதிக தொற்றுக்கள் வரும் காலம் போல தெரிகிறது.

https://www.cdc.gov/japaneseencephalitis/transmission/index.html

எனவே, ஊசி எடுக்காமல் போனாலும் நுளம்புக் கடியைத் தவிர்க்கும் முயற்சிகளை எடுத்தாலும் தடுக்கலாம்!

நுளம்பு கடிக்கு சில spray கொண்டு போறனான்…அடிச்சால் நுளம்பு அண்டாது. 

 நுளம்பு கடிக்காது ஆனால் ஸ்கின் கான்சர் வரப்போது எண்டு வீட்டம்மா சொல்லுவா🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலிசிறையில் பரவும் நோய் 8 மாத குழந்தைக்கு எப்படி தொற்றியது – குழப்பத்தில் சுகாதார அதிகாரிகள்

Published By: RAJEEBAN

30 AUG, 2023 | 08:32 AM
image
 
மெனின்கோகோல் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படும் 8 மாத குழந்தைக்கும்  காலிசிறையில் அந்த நோயால் உயிரிழந்த கைதிகள் இருவருக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் உயிரிழப்பின் பின்னர் பக்டிரீயா சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்ற கவலை உருவாகியுள்ளது.

குழந்தை கராப்பிட்டிய மருத்துவமனையில் மெனின்கோகோல் நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. மாதிரிகள் இன்னமும் ஆராயப்பட்டு வருவதால் மரணத்திற்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.

எனினும் அந்த குழந்தைக்கும் காலிச்சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை  என பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் கொனரா சோமரட்ண தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளதாகவும் குழந்தையின் குடும்பத்தவர்களுக்கும் உயிரிழந்த கைதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து அன்டிபயோட்டிக் ஊசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவராவது நோய் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டால் உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/163469

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2023 at 22:17, goshan_che said:

நன்றி… அடுத்த பயணத்திற்கு முன் மகனுக்கு ஏத்திகொண்டு போவம்.

எனக்கு தேவையில்ல்லை (🧠 இருந்தால்தானே மூளைகாய்ச்சல் வரும் 🤣).

ஹா ஹ்ஹ..... மகனுக்கு அது இருக்கிறதா என்று நிட்சயப்படுத்திக்கொள்ளுங்கள், ஏத்துவதற்கு முன்!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

ஹா ஹ்ஹ..... மகனுக்கு அது இருக்கிறதா என்று நிட்சயப்படுத்திக்கொள்ளுங்கள், ஏத்துவதற்கு முன்!

யாழில் சேர்த்து விடலாம் என்று இருக்கிறேன்.

3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கருத்தாடினார் என்றால் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

யாழில் சேர்த்து விடலாம் என்று இருக்கிறேன்.

3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கருத்தாடினார் என்றால் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்🤣

ம்ம்.... மூன்று நாளுக்குமேல் யாழில் கருத்தாடுபவர்களெல்லாம் மூளையில்லாதவர்கள்  என்று கண்டுபிடித்தவர்கள் மூளை உள்ளவர்களா? இல்லாதவர்களா?

"யான் பெற்ற இன்பம் பெறுக என் மகனும்." எதற்கும் அவரை யாழில் சேர்ப்பதற்கு முன் வீட்டுக்கார அம்மாவையும் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள், இருவரை வீட்டில் வைத்து சமாளிக்க முடியுமா அவரால் என.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ம்ம்.... மூன்று நாளுக்குமேல் யாழில் கருத்தாடுபவர்களெல்லாம் மூளையில்லாதவர்கள்  என்று கண்டுபிடித்தவர்கள் மூளை உள்ளவர்களா? இல்லாதவர்களா?

எல்லாரும் வக்சீன் தேவைபடாத கேசுகள்தான்.

1 hour ago, satan said:

யான் பெற்ற இன்பம் பெறுக என் மகனும்." எதற்கும் அவரை யாழில் சேர்ப்பதற்கு முன் வீட்டுக்கார அம்மாவையும் ஒரு வார்த்தை கேட்டு விடுங்கள், இருவரை வீட்டில் வைத்து சமாளிக்க முடியுமா அவரால் என.

நான் ஆறுமாதமா யாழுக்கு வரவில்லை - எண்டுதான் வீட்டில சொல்லி வச்சிருக்கிறன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எல்லாரும் வக்சீன் தேவைபடாத கேசுகள்தான்.

நான் ஆறுமாதமா யாழுக்கு வரவில்லை - எண்டுதான் வீட்டில சொல்லி வச்சிருக்கிறன்🤣

சரியான அப்பாவியா இருப்பா போல!

  • கருத்துக்கள உறவுகள்

கண் சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள் சிலர் பார்வையை இழந்து இருக்கிறார்கள் இந்தியாவின் கண்  மருந்தை தடை செய்து உள்ளார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.