Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹொலன் இலங்கை வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 AUG, 2023 | 01:06 PM
image
 

அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலன் (Senator Chris Van Hollen) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில்,

அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலனை நான் வரவேற்று கௌரவித்தேன். இவர் இலங்கையின் மிக நீண்டகால நண்பராவார்.

இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த கடுமையாக உழைத்தவர்.

இந்த வாரம், செனட்டர் கிறிஸ் வன் ஹோலனும் நானும் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆராயவுள்ளோம்.

அத்துடன் மேம்பட்ட பங்காளித்துவத்திற்கான வழிகளைப் பற்றி கலந்தாலோசிப்போம், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை ஆழமாக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செனட்டர் கிறிஸ் வன் ஹோலனின் தந்தையார் 1972 முதல் 1976 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்துள்மை இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கான 75 வருடகால கூட்டாண்மையை மேலும் வலுவாக்குகின்றது.

https://www.virakesari.lk/article/163422

  • கருத்துக்கள உறவுகள்

செனட்டர் ஹொலன் அமெரிக்க செனட்டின் வெளியுறவுக் (Foreign Relations) கொமிற்றி , மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கும் Appropriation sub-committee on State and Foreign Operations ஆகியவற்றின் உறுப்பினர். செனட், நீலக்கட்சியின் கைகளில் இருக்கும் அமெரிக்க காங்கிரசின் பிரிவு.

எங்கள் தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எங்கள் தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

நிச்சயம் தமக்கு வேண்டிய ஆரும் ஓரிருவருக்கு Fulbright எடுத்து கொடுக்க பயன்படுத்தி கொள்வார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நிச்சயம் தமக்கு வேண்டிய ஆரும் ஓரிருவருக்கு Fulbright எடுத்து கொடுக்க பயன்படுத்தி கொள்வார்கள்🤣.

 

போகும் போதே அமெரிக்கரிடம் நாம எதைக்கேட்டு வாங்கலாம்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியைச் சந்தித்தார் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன்

30 AUG, 2023 | 09:12 PM
image
 

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் ஜனாதிபதியைச் சந்தித்தார். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen)  இன்று புதன்கிழமை (30) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung)  ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2023-08-30_at_19.56.39.jp

WhatsApp_Image_2023-08-30_at_19.56.40.jp

https://www.virakesari.lk/article/163536

  • கருத்துக்கள உறவுகள்

அழுதும் பிள்ளை அவளேதான் பெறவேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே நிலையான சமாதானத்தை அடைவதற்கான வழி என்கிறது அமெரிக்கா

31 AUG, 2023 | 10:44 AM
image
 

(நா.தனுஜா) 

இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்தகால வடுக்களை ஆற்றுவதற்கும், நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. 

இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான நேற்று புதன்கிழமை (30) கொழும்பில் நடைபெற்றது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் தொடர்பான பதிவொன்றும் இடப்பட்டுள்ளது.

'சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உண்மை, நீதிக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் அவர்களது குடும்பத்தாருடனான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம்' என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தினமும் ஒரு சுமையுடன் வாழ்வதாக அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கத்தூதரகம், 'இலங்கையைப் பொறுத்தமட்டில் இதனைக் கடந்து செல்வதற்கும், நீடித்த சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும்' என்று வலியுறுத்தியுள்ளது. 

373076756_3432706240350362_7351848543226

373050214_1363624397561694_2287558229612

372338696_135832346263663_13535259906633

https://www.virakesari.lk/article/163545

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக முறையில் எப்படி சொன்னாலும் சிறிலங்காவுக்கு ஏறாது. ஒன்றில் எள்ளி நகையாடுவார்கள் அல்லது பாராமுகமாக விட்டு விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

ஜனநாயக முறையில் எப்படி சொன்னாலும் சிறிலங்காவுக்கு ஏறாது. ஒன்றில் எள்ளி நகையாடுவார்கள் அல்லது பாராமுகமாக விட்டு விடுவார்கள்.

அல்லது பொய் வாக்குறுதிகளை குடுத்து பாராட்டு வாங்குவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள், நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிப்பதன் மூலமே ஜனநாயக செயன்முறையில் இலங்கையர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தமுடியும் - கிறிஸ் வான் ஹொலென்

03 SEP, 2023 | 10:06 AM
image
 

(நா.தனுஜா)

இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்று அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க செனெட் சபையின் செல்வாக்குமிக்க உறுப்பினரும், இலங்கை - அமெரிக்க உறவுகளைப் பலப்படுத்துவதை முன்னிறுத்தி செயலாற்றியவருமான கிறிஸ் வான் ஹொலென் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.      

இவ்விஜயத்தின்போது அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதுவர் இல்லத்தில் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் பல்வேறு அரசியல்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஜீ.எல்.பீரிஸ், மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைவரம், தேர்தல்களை நடாத்துவதில் தொடர் தாமதம், புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளில் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை கிறிஸ் வான் ஹொலென், அமெரிக்க செனெட் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் பிரதிநிதிகளுடன் சிறந்த தொடர்பைப் பேணிவருவதாகவும், எனவே இவ்விடயங்கள் தொடர்பில் அங்கு ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இது இவ்வாறிருக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலெனின் இலங்கை விஜயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கத்தூதரகம், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதே அவரது வருகையின் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறைசார் ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல், பொருளாதாரத்தொடர்புகளை மேம்படுத்தல், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களைக் கையாள்வதற்குக் கூட்டிணைந்த செயற்திட்டங்களை உருவாக்கல், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்தல் என்பனவும் கிறிஸ் வான் ஹொலெனின் விஜயத்தின் ஏனைய நோக்கங்கள் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்கான விஜயம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கிறிஸ் வான் ஹொலென், 'நாம் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்புகளின் 75 ஆவது வருடப்பூர்த்தியை இவ்வாண்டு கொண்டாடுகின்றோம். இந்த பல தசாப்தகால நட்புறவைக் கொண்டாடும் அதேவேளை, இனிவரவிருக்கும் தசாப்தங்களுக்கான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் நாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை மீளுறுதிப்படுத்துகின்றோம். இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதிலும் பொருளாதாரம், கடற்பிராந்தியப்பாதுகாப்பு, காலநிலைமாற்ற சவால்கள் போன்ற பல்வேறு விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் இவ்விஜயம் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. அதேவேளை இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/163731

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.