Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news-01.jpg

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர்.

தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப் பெறுவதாகவும், மணரநிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.

அத்துடன் தமது பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிற்பதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

https://thinakkural.lk/article/271346

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸ் இல்லையா? மக்களுக்கு உதவ சமூக சேவையாளர்களும், அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாவிட்டால் இராணுவம்தானே உதவவேண்டும்!

முன்னர் கற்கோவளத்தில் போராட்டம் நடந்தபோது யாழ் களத்தில் தேசியப் பொங்கல் நடந்தது நினைவுக்கு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

news-01.jpg

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் சிலர் இன்றைய தினம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55 ஆவது படைப்பிரிவின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பில் ஈடுபட்டனர்.

தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினையும் இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப் பெறுவதாகவும், மணரநிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.

அத்துடன் தமது பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிற்பதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே அப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

https://thinakkural.lk/article/271346

தினக்குரலின் proofreader மீது ஆனை விழ!🤣

#ஆனைவிழுந்தான்

1 hour ago, கிருபன் said:

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸ் இல்லையா? மக்களுக்கு உதவ சமூக சேவையாளர்களும், அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இல்லாவிட்டால் இராணுவம்தானே உதவவேண்டும்!

முன்னர் கற்கோவளத்தில் போராட்டம் நடந்தபோது யாழ் களத்தில் தேசியப் பொங்கல் நடந்தது நினைவுக்கு வருகின்றது.

எல்லாம் அறிந்த எங்கள் ஆலிமு நீங்களே இப்படி எழுதலாமா?

எமது சிவில் நிர்வாகத்தை - உரிய அதிகாரத்துடன் எம்மிடம் தந்தால் - நாம் ஏன் இராணுவத்தை எதிர்பார்த்து நிற்கப்போகிறோம்?

அடிப்படை வசதிகள் தேவை என்றால் இராணுவ முகாம் அந்த பகுதியில் இருக்க வேண்டும் என்ற நிலை ஏன் சிங்கள பகுதியில் இல்லை?

இது திட்டமிட்ட நகர்வு என்பது புரியவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தினக்குரலின் proofreader மீது ஆனை விழ!🤣

#ஆனைவிழுந்தான்

எல்லாம் அறிந்த எங்கள் ஆலிமு நீங்களே இப்படி எழுதலாமா?

எமது சிவில் நிர்வாகத்தை - உரிய அதிகாரத்துடன் எம்மிடம் தந்தால் - நாம் ஏன் இராணுவத்தை எதிர்பார்த்து நிற்கப்போகிறோம்?

அடிப்படை வசதிகள் தேவை என்றால் இராணுவ முகாம் அந்த பகுதியில் இருக்க வேண்டும் என்ற நிலை ஏன் சிங்கள பகுதியில் இல்லை?

இது திட்டமிட்ட நகர்வு என்பது புரியவில்லையா?

மக்களை கையேந்தும் சங்கடமான நிலையில் வைத்து காட்டப்படும் நாடகங்களை கடந்து செல்வதே சிறந்தது. அந்த மக்களுக்கு நாம் செய்யும் ஆகக் குறைந்த நன்மையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

மக்களை கையேந்தும் சங்கடமான நிலையில் வைத்து காட்டப்படும் நாடகங்களை கடந்து செல்வதே சிறந்தது. அந்த மக்களுக்கு நாம் செய்யும் ஆகக் குறைந்த நன்மையாகும்.

அந்த மக்களை வைவதில் எனக்கு உடன்பாடில்லை.

ஆனால் தமிழ் சிங்கள பகுதிகளில் இருக்கும் வேறுபாட்டை - நிச்சயம் மேற்கின் தூதர்களுக்கு எடுத்து சொல்லலாம்.

அடிப்படை வசதிகள், பாதுகாப்பு இல்லாமல் இருக்கப்போகிறீர்களா அல்லது இராணுவ மயத்தின் கீழ் இருக்க போகிறீர்களா என இரெண்டு போலி தெரிவுகளுக்குள் (false dichotomy) இந்த மக்களை வைத்துள்ளது இலங்கை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப் பெறுவதாகவும், மணரநிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.

தேர் இழுப்பதை குறிப்பிட மறந்து விட்டார்கள். பயமுறுத்தி அழைத்து வரப்பட்டார்களா கவர்ச்சிகாட்டி அழைத்து வரப்பட்டார்களா எனத் தெரியவில்லை. மரண நிகழ்வுகளில் இராணுவம் பங்களிப்பு செய்ய வேண்டிய தேவை ஏன் எங்கிருந்து யாரால் வந்தது என்பதை அறியாத முட்டாள்களா? சோம்பேறிகளா நாம்? எமது வேலைகளை நாம் பிறரிடம் ஒப்படைத்து பெருமை கொள்வோமானால் கடைசியில் ஒன்றும் மிஞ்சாது. இ வர்களின் வேலையை இராணுவம் செய்கிறதென்றால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? இதற்காகவா இவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டு சம்பளம் கொடுக்கிறார்கள்? இனியென்ன அடுத்து திருமணத்தையும், குழந்தைபேற்றையும் சேர்த்து பட்டியலிடுவார்கள். இன்னும் இருபது வருடத்தில் சிங்களம், முஸ்லீம், தமிழ் என்று மூன்றும் சேர்ந்து இன்னொரு இனம் வடக்கில் உருவாக்கப்பட்டு இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

குடியிருந்த வீட்டை குண்டு போட்டு அழித்தார்கள் என்று கோபம் வருவதில்லை, வீடு கட்டி தருகிறார்கள் என்று பெருமை, உறவுகளை கொன்றவர்கள் மரண நிகழ்வுகளில் இழவு காக்கிறார்கள் என்று மகிழ்ச்சி, அடித்து விரட்டிவிட்டான் எங்கள் நிலத்திலிருந்து என்று கவலையில்லை அடைக்கலம் தருகிறான் என்று பூரிப்பு, உறவுகளை அழித்து விட்டான் என்று துயரம் இல்லை, கூட இருக்கிறான் என்கிற திடம். போதைபொருள் எங்கிருந்து யாரால் வந்தது என்கிற கேள்வியில்லை ஆனால் அவர்கள் ஒழிக்கிறார்களாம் என்று தைரியம். மொத்தத்தில் எல்லாவற்றிற்கும் கையேந்தும், மற்றவரை எதிர்பாக்கும் மந்தைகளாகிவிட்டோம் அல்லது ஆக்கப்பட்டுவிட்டோம். 

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு உள்ளூர் ரவுடிகளின் வளர்ச்சியும் ஒரு காரணம் 

காணி விலை ஏற்றம் ... பொருட்கள் விலை என்பதின் பிரதிபலன் 
வெளிநாட்டு காரர்களுக்கு எதிரான ஒரு மன நிலையை உள்ளூர் மக்களிடம் 
ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது 

இன்னும் ஒரு 5-10 வருடத்தில் இராணுவத்தின் உதவியுடன் 
அங்கு செல்லும் வெளிநாட்டு தமிழர்களுக்கு அடி விழவும் 
கொள்ளைக்கு இலக்காகவும் சாத்தியம் உண்டு 

வெளிநாட்டு காரர் வீட்டில் கொலை பின்பு கொள்ளை 
என்பதை மிகவும் சரியான வேலையாக அங்கிருக்கும் மக்கள் 
ஏற்றுக்கொள்ளும் மனநிலை வருவத்துக்கு நிறைய சாத்தியம் உண்டு.

ஆயுத போரை வெல்வது இலகு 
உளவியல் போரை வெல்வது மிக கடினம் 

  • nunavilan changed the title to இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – ஆனைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் !
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்காரரை முதலீடு என உள்ளிழுத்து, வாயை கட்டி வெளிநாட்டில் இலங்கைக்கெதிராக எழும் குரலை அடக்குவது, புலம்பெயர் தாயக உறவுகளை எதிராக்குவது அதாவது புலம்பெயரின் கோரிக்கைகளை தாயக மக்களை கொண்டு தடுப்பது, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்ல வைப்பது, அரவமில்லாமல் அழிப்பது. சிங்களம் நினைத்ததை சாதித்தே வருகிறது. புலிகளின் வீழ்ச்சிக்குப்பின் புலம்பெயர் தமிழரின் பலமே இருந்தது, அதை சமாளிக்க முடியாமல் தடுமாறியது,  கெஞ்சியது, புலம்பியது சிங்களம். இப்போ, ஓரிரு உதிரிகளை கொண்டு அந்தபலமும் அடித்து வீழ்த்தப்படுள்ளது. இது, தமிழினத்தின் குறைபாட்டை நன்றாக அறிந்து சரியாக சிங்களம் பயன்படுத்துகிறது. இயங்காத இனம் சோரம்போவதைத்தவிர வேறு வழியில்லை. பறித்ததை மீட்க வழி தெரியாவிட்டால் இருப்பதையும் பறிப்பதே  எதிரிக்கு இலக்கு, இலகு என்பதை நடைமுறையில் கண்டும் தடுக்க முடியாமல் இருக்கிறோம். கண்டவன், சோரம்போனவன் எல்லாம் தலைவன், யோசனை சொல்லுமளவுக்கு நம் இனம் வந்து நிக்குது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.