Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்தறிவால் பகுத்தரிய வேண்டிய பகுத்தறிவு.

Featured Replies

பெரியாரின் எதிரிகள் தமிழீழத்தின் எதிரிகள்

பெரியாரின் ஆதரவாளர்கள் தமிழீழத்தின் ஆதரவாளர்கள்

இந்தக் கூற்றை தவறு என்று நிரூபிக்க முடியுமா?

பெரியாரை எதிர்த்துக் கொண்டு தமிழீழத்தையும் விடுதலைப் புலிகளையும் ஏற்கின்ற ஒரு இந்தியரைக் காட்டுங்கள்!

பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, ஆனால் தமிழீழத்தையும் விடுதலைப்புலிகளையும் எதிர்க்கின்ற ஒரு இந்தியரைக் காட்டுங்கள்!

இதை சவாலாகக் கேட்கிறேன்

Edited by சபேசன்

  • Replies 67
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் எதிரிகள் தமிழீழத்தின் எதிரிகள்

பெரியாரின் ஆதரவாளர்கள் தமிழீழத்தின் ஆதரவாளர்கள்

இந்தக் கூற்றை தவறு என்று நிரூபிக்க முடியுமா?

பெரியாரை எதிர்த்துக் கொண்டு தமிழீழத்தையும் விடுதலைப் புலிகளையும் ஏற்கின்ற ஒரு இந்தியரைக் காட்டுங்கள்!

பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, ஆனால் தமிழீழத்தையும் விடுதலைப்புலிகளையும் எதிர்க்கின்ற ஒரு இந்தியரைக் காட்டுங்கள்!

இதை சவாலாகக் கேட்கிறேன்

ஜோர்ஸ் பெர்னாண்டஸ். இவருக்கும்.. ஈ வெ ராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ( அண்மையில் கூட தமிழர் கூட்டமைப்பினரை தனது இல்லத்துக்கு அழைத்துப் பேச்சுக்களில் ஈடுபட்டவர்)

கருணாநிதி. இவர் ஆரம்பத்தில் இருந்தே தனது அரசியல் போட்டியாளர்களின் தொடர்புகள் கருதி புலிகளை ஓரங்கட்ட நினைத்தவர். இன்றும் கூட வெளிப்படை ஆதரவை கூட்டணிக்காக கைவிட்டவர். இவர் நினைத்திருந்தால்.. முழுத் தமிழக சட்டசபை ஆதரவைப் பெற்று தமிழீழப் பிரகடனத்தை தீர்மானமா இயற்றி.. உலகுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் சிறீலங்காவுக்கும்.. பிரச்சனை தீர அழுத்தம் கொடுத்திருக்கலாம். கருணாநிதி.. வார்த்தை அளவில்.. சிலரை சமாளிக்க.. எதிர்ப்பு இல்லாதது போல.. நடிக்கிறாரே தவிர.. அவர் அவரிருக்கும் பதவிக்கேற்ப செய்யக் கூடியதில் எதையும் செய்யேல்ல. இதை நெடுமாறன் ஐயாவே சுட்டிக்காட்டி இருக்கிறார். போதுமா... ஈ வெ ராவின் வாரிசுகளிடம் உள்ள ஈ வெ ராவின் கபடத்தனம்.

தமிழகத் தலைவர்கள் என்று தமிழ் தேசிய உணர்வாளர்களாக மாறுகிறார்களோ.. அன்று ஈ வெ ரா தூக்கி எறியப்பட்டு.. தமிழர்களுக்குள் ஒற்றுமையும்.. பலமும்.. உருவாகும். சமூக விடுதலையும் கிட்ட வழிபிறக்கும். அதுவரை ஈ வெ ரா சாபமாக தமிழர்களைப் பிளவுபடுத்திக் கொண்டே இருப்பார்.

Edited by nedukkalapoovan

நீங்கள் நான் சொன்னதை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை.

விளக்கமாகச் சொல்கிறேன்.

இந்தியாவில்...

பெரியாரை கடுமையாக வெறுக்கின்ற, நிந்திக்கின்ற அனைவரும் தமிழீழத்தையும், விடுதலைப் புலிகளையும் வெறுப்பவர்களாகவும் நிந்திக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.

தமிழீழத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்கின்ற அனைவரும் பெரியாரை நேசிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

இதுதான் என்னுடைய கூற்று. இது முற்றிலும் உண்மை. இதை ஆராய்ந்து பார்த்தால் விளங்கும்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் பெரியார் மீது நன்மதிப்பு வைத்திருக்கின்ற ஒருவர்தான். அவர் இந்துத்துவத்தையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து போராடுகின்ற ஒரு தலைவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னது சரியா விளங்கித்தான் பதிலளிக்கப்பட்டிருக்கு.

உங்களுக்கு உங்களுக்கு ஏற்ற வடிவில பதில் அமையாட்டி.. திருப்தி வராது என்பது எல்லோரும் அறிஞ்சதுதான்.

ஈ வெ ரா.. என்ன நேரு... சோனியா என்று ஒரு அரசியல்வாதி என்ற வகைல எல்லாரும் அவர்களுக்கு ஒரு மதிப்பளிப்பர். டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தான் அளிக்கின்றனர். அதற்காக அவரின் கொள்கைகளை வரிஞ்சு கட்டிட்டு நிற்கல்ல.. ஜோர்ஸ் பெர்னாண்டஸும் அந்த வகைதான்.

கருணாநிதி வெளிப்படையாகவே ஈ வெ ராவின் வாரிசு என்றவர். அப்படிப்பட்டவர் ஈழத்தமிழர்களுக்கு செய்ய சந்தர்ப்பம் இருந்தும்.. செய்தது.. மெளனம் காத்தல். சிங்களப் படைக்குப் பயிற்சியும் ஆயுதமும் சப்பிளை செய்தல். போதாக்குறைக்கு தமிழர்களைப் பிடிச்சு.. சிங்களவனிடம் கொடுப்பது. இப்படிப்பட்ட ஆக்கள் தான்.. ஈ வெ ராவின் வாரிசுகளாக உள்ளனர்..!

இதில நீங்கள் கேட்டது ஒரு கேள்வி.. அதை நுணுக்கமா ஆராய்ஞ்சு அதுக்கு பதில் வேற எழுதி.. ஈ வெ ராவுக்கு கோவிலில பூசை நடத்தவும் சொல்வீர்கள் போல இருக்கே..! நீங்கள் உண்கையான தமிழ் தேசிய உணர்வாளன் என்றால் ஈ வெ ராவை தூக்கி எறியுங்கள் இன்றே இப்போ...!

ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களும் பெரியார் மீது நன்மதிப்பு வைத்திருக்கின்ற ஒருவர்தான். அவர் இந்துத்துவத்தையும் பார்ப்பனியத்தையும் எதிர்த்து போராடுகின்ற ஒரு தலைவர்

அடிடா சைக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம். ஜோர்ஸ் பெர்னாண்டஸ் பி ஜே பி கூட இணைந்திருந்து செயற்பட்டவர். அதன் அரசில் தான் அமைச்சராகவும் இருந்தவர். அவர் கூட்டணி அமைச்சது.. பி ஜே பி கூட. ஏன் கருணாநிதி கூட இந்துத்துவவாதிகள் என்று தானே மூச்சிக்கு 300 தடவை சொல்லும் பி ஜே பி கூட கூட்டணி போட்டவர் தான். இந்த இந்துத்துவவாதம் எல்லாம் அரசியலுக்கு மட்டும் தான் அதுவும் எதிரணியில் இருக்கேக்க மட்டும் தான். ஆனால் அப்படி ஒன்றில்லை மக்களிடத்தில். அதை நீங்க புரிஞ்சுக்குங்க. ஈ வெ ரா வாரிசுகள் போலத்தான் ஈ வெ ராவும்.. தன்னை தக்க வைக்க பேசியதுதான்.. இந்த மத எதிர்ப்பும்.. சாதி ஒழிப்பும். சாதிச்சது தமிழர்கள் தமிழ் தேசிய உணர்வால் ஒற்றுமைப்படுவதை தகர்த்ததுதான் வேறு எதுவுமில்ல.

Edited by nedukkalapoovan

கூட்டரசில் இணைதிருப்பதால் ஒருவர் பிஜேபி அல்லது இந்துவாக்கொள்கை உடையவாராகி விட முடியுமா?

ஜோர்ன் fராண்டஸ் ஒரு தொழிற்சங்கவாதி.ஜனதா தாள் கட்சியின் ஒரு அமைச்சராக இருந்தவர்.

அத்வாணியையும் வாஜ்பாய்யும் கடுமையாக எதிர்த்தவர்.அவர்கள் ஆர் ஆர் எஸ் என்னும் இந்து வெறியர்களின் அமைப்பில் தொடர்பும் அங்கதுவமும் வைதிருப்பதால் அவர்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொன்னவர்.அவர் ஒரு சோசலிஸ்ட்.

அம்மன் கோவில் புக்கை எண்டா இப்படித் தான் இருக்கும். ;)

George Fernandes (born 3 June 1930) is a member of the 14th Lok Sabha of India. He is renowned in India as a defender of Indian liberties and a champion of workers' rights. He represents the Muzaffarpur constituency of Bihar and is a member of the Janata Dal (United) party.

Fernandes is a trade union activist and was a defence minister in the National Democratic Alliance Government (1998-2004).

//He continued to be uncomfortable with certain elements of the broad-based Janata coalition, especially some former Congress Party members, like Jagjivan Ram, but especially with the leaders of the erstwhile Hindu nationalist Bharatiya Jan Sangh in the Union Cabinet, Atal Behari Vajpayee and Lal Krishna Advani. In a dramatic debate preceding a vote of confidence two years into the government's tenure, he spoke out against the practice of permitting Vajpayee and Advani to retain connections to the Rashtriya Swayamsevak Sangh while being in the ministry; the issue of "dual membership" caused Morarji Desai to lose the vote of confidence, and Charan Singh formed a government, supported from outside by the Congress Party./

In spite of being a committed socialist, who had previously always opposed the Sangh Parivar - so much so that he had been willing to end Morarji Desai's government on the question of Atal Behari Vajpayee and LK Advani's "dual membership" of the Janata Party and the Rashtriya Swayamsevak Sangh - his party became a key ally of the BJP within the National Democratic Alliance. The alliance, consisting of 24-parties, won a slender majority in the 1998 election. Fernandes was named as the Minister for Communications in the 13-day ministry.

http://en.wikipedia.org/wiki/George_Fernandes

:D:lol::lol::D:D

Edited by narathar

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மட்டும் அல்ல, நிறையக் கட்சிகள் பிஜேபியோடு கூட்டணி வைத்தன. பெரியாரின் பெயர் சொல்லி ஆரம்பித்த மாயவதியின் கட்சியும் பிஜேபியோடு கூட்டணி வைத்தன. வைகோவும் பிஜேபியோடு கூட்டணி வைத்தன.

அரசியல் கட்டாயத்தில் பிஜேபியுடன் நிறையக் கட்சிகள் கூட்டணி வைத்துவிட்டன.

அதற்காக அவைகள் மதவாதக் கட்சிகள் என்று அர்த்தம் தெரியவில்லை.

உங்களுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸின் வரலாறு தெரியவில்லை என்பது புரிகிறது.

பெரியார் மீது அனைவரும் மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்று யார் சொன்னது?

துக்ளக் சோ மதிப்பு வைத்திருக்கிறாரா? இந்து ராம் மதிப்பு வைத்திருக்கிறாரா?

நான் சொன்னதை சரியாக கவனியுங்கள்!

பெரியாரை தமது முழு மனதாலும் கடுமையாக வெறுக்கின்ற கூட்டம் இந்தியாவில் உண்டு. இவர்கள் அனைவரும் அப்படியே தமிழீழத்தையும், விடுதலைப் புலிகளையும் வெறுக்கிறார்கள்.

பெரியாரின் கொள்கைகளில் இருந்து வழுவாது, அரசியலில் ஈடுபடாது பெரியாரின் பணியை தொடர்ந்து செய்து வருகின்ற ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ்நாட்டில் உண்டு. இவர்கள் அனைவரும் தமிழீழத்தையும் விடுதலைப் புலிகளையும் உளமார நேசிக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கின்ற கட்சிகள், அமைப்புக்கள் நிறைய உண்டு. அவைகள் அப்படியே பெரியாரையும் நேசிக்கிறார்கள். பெரியாரின் பெயருக்கு களங்கம் வரும்போது முன்னால் வந்து போராடுவார்கள்

மொத்தத்தில்

இந்தியாவில் பெரியாரை வெறுப்பவர்கள் தமிழீழத்தை வெறுக்கிறார்கள்

பெரியாரை நேசிப்பவர்கள் தமிழீழத்தை நேசிக்கிறார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மட்டும் அல்ல, நிறையக் கட்சிகள் பிஜேபியோடு கூட்டணி வைத்தன. பெரியாரின் பெயர் சொல்லி ஆரம்பித்த மாயவதியின் கட்சியும் பிஜேபியோடு கூட்டணி வைத்தன. வைகோவும் பிஜேபியோடு கூட்டணி வைத்தன.

அரசியல் கட்டாயத்தில் பிஜேபியுடன் நிறையக் கட்சிகள் கூட்டணி வைத்துவிட்டன.

கூட்டணி வைக்கிற அளவுக்கு பி ஜே பி மதவாதத்தைத் திணிக்கவில்லை என்பது புலனாகிறது.

நீங்கள் ஜோர்ஸ் பர்னாண்டைசைப் பற்றி அதிகம் அறிந்திருப்பின்.. அவரின் கூட்டணி.. மற்றும்.. பி ஜே பி கூட்டணியில் அமைச்சர் பதவி வகுத்தமை.. அதற்கேற்ப பி ஜே பி யின் கொள்கைகள் சார்ந்து செயற்பட்டமை.. அதுவும் பாதுகாப்பு அமைச்சராக.. எல்லாம்.. பி ஜே பி மீது நம்பிக்கை வைக்காததாலா...???!

***

சோ.. ஈ வெ ராவை மதிக்கவில்லை என்றால்.. அவரை ஒரு பொருட்டாக கருதுவதையும்.. அவரின் கருத்துக்களை விமர்சனம் செய்வதையுமே தவிர்த்திருப்பார். ஒரு அரசியல் வாதியாக அவரை எல்லோரும் மதிப்பர். கொள்கை ரீதியா வெறுப்பவர்கள் பலர். காரணம்.. ஈ வெ ரா.. தமிழ் தேசிய உணர்வை மழுங்கடிக்க முன்னின்று செயற்பட்ட ஒரு கன்னடர்.

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

"மதிப்பவர்கள்" என்பதற்கு நீங்கள் கொண்டுள்ள விளக்கம் வேறாக இருக்கிறது.

நீங்கள் சொன்ன "வெறுப்பவர்கள்" என்பதற்கு வருகிறேன்: பெரியாரை வெறுப்பவர்கள் பற்றித்தான் நானும் சொல்கிறேன்.

பெரியாரை வெறுப்பவர்கள் தமிழீழத்தை வெறுக்கிறார்கள்

பெரியாரை நேசிப்பவர்கள் தமிழீழத்தை நேசிக்கிறார்கள்

"மதிப்பவர்கள்" என்பதற்கு நீங்கள் கொண்டுள்ள விளக்கம் வேறாக இருக்கிறது.

நீங்கள் சொன்ன "வெறுப்பவர்கள்" என்பதற்கு வருகிறேன்: பெரியாரை வெறுப்பவர்கள் பற்றித்தான் நானும் சொல்கிறேன்.

பெரியாரை வெறுப்பவர்கள் தமிழீழத்தை வெறுக்கிறார்கள்

பெரியாரை நேசிப்பவர்கள் தமிழீழத்தை நேசிக்கிறார்கள்

அப்பிடி எண்டால் தமிழீழம் பெரியாரின் சிந்தனையில்தான் கட்டி எழுப்ப படுகிறதோ... சும்மா பெரியாரையும் தமிழீழத்தையும் முடிச்சு போடுகிற வேலையை விடுங்கள்...

பெண்களுக்கான தனித்துவம் மிக்க நாடாக தமிழீழம் திகள்கிறது... ஆனால் மணியம்மையை கூட திருமணம் செய்த பெரியார், யாரையும் நம்ப முடியவில்லை ஆகவே நம்பிக்கையான இவரை தனக்கு உதவியாளராக வைத்து கொள்ளத்தான் எண்று அறிக்கை விடுகிறார்.... (உண்மையை சொல்ல பயமாக கூட இருக்கலாம்) அதாவது சம்பளம் இல்லாத வேலைக்காறி... அப்படி சொந்த கௌரவம் என்பது பெரியாருக்கு முக்கியமானது... போராளிகள் திருமணம் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் தங்களுக்கு( போராட்டத்துக்கு) உதவியாளை தேடி அல்ல...

ஈழத்தில் சாதி எதிர்ப்பு இருந்தது.. அது அங்கு உடைக்க பட்டு நீண்ட காலம்.. ஆனால் பார்ப்பணர் என்னும் பிராமணர் இப்போதும் அங்கு வாழுகிறார்கள்... ஆனால் பிராமணர்களுக்கு எதிராக அவர்களை கொல்வொம் எண்று ஈழத்தில் யாரும் உளறியது இல்லை...

கூலி தொழிலுக்கு போய் அண்றாட வருமானதை நம்பிய மக்களுக்கு தொழில் கல்வியை அளிப்பதில் தமிழீழம் பின் நிக்க வில்லை... சொந்தமாக தொழில் நடத்தி வருமானம் காண்பதால் தாழ்த்த பட்டவர் என்பவர்கள், அங்கு யாரையும் கையேந்தும் நிலையிலும் இல்லை... உயர்சாதியினரின் கையிலும் அவர்கள் தங்கி இல்லை, அதோடு தேசதையும் உயர்த்துகிறார்கள்...

போராளிகள் குடும்பங்கள் மாவீரர் குடும்பங்கள் ஒரே குடையின் கீழ் நடத்த படுகிறார்கள், இட ஒதுக்கீடு எனும் பேச்சுக்கே இடம் இல்லை.... எங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்னும் குரல்கள் தமிழீழத்தில் இல்லவே இல்லை...

இப்படி சும்மா பார்ப்பான் பணியாரம் எண்டு சொல்லி கொண்டு எதையும் செய்யாது இருந்த பெரியார், தென்னக மக்கள் பிரிவினையை ஊதி வழர்த்து விட்ட பெரியார்.. தமிழீழ தலைமையின் கால்களா எழும்பும் தூசுக்கு கூட சமன் அல்ல...

Edited by தயா

தயா!

பெரியாரின் திருமணம் பற்றி சர்ச்சை கிளப்புவர்கள் இருக்கிறார்கள். தேசியத் தலைவரின் திருமணம் பற்றி சர்ச்சை கிளப்புபவர்கள் இருக்கிறார்கள்.

நான் இவைகளை; இரண்டையுமே புறம்தள்ளி விடுகிறேன்.

தந்தை பெரியாருடைய கொள்கைகள் பற்றி இங்கே சர்ச்சை கிளப்பப்படுகின்ற போது நான் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அவருடைய திருமணம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவைகளை வைத்து விவாதிப்பவர்கள் சிந்தனை வறட்சி உள்ளவர்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.

அடுத்தது நான் இங்கே தெரிவித்துக் கொண்டிருக்கும் கருத்துக்கள், இந்தியத் துணைக் கண்டத்திலே இருப்பவர்கள் பற்றி. தமிழீழத்தில் இருப்பவர்கள் பற்றி அல்ல.

இந்தியத் துணைக் கண்டத்திலே.....

பெரியாரை உளமாற வெறுக்கின்ற அனைவரும் தமிழீழத்தையும் விடுதலைப் புலிகளையும் உளமாற வெறுக்கின்றனர்.

பெரியாரின் கொள்கைவழி நடப்பவர்கள் தமிழீழத்தையும் விடுதலைப் புலிகளையும் நேசிக்கின்றனர்.

உதாரணமாக பெரியாரை வெறுக்கின்ற துக்ளக் சோ, இந்து ராம் போன்றவர்கள் விடுதலைப் புலிகளையும் வெறுக்கின்றனர்

பெரியாரை நேசிக்கின்ற வீரமணி, கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்கள் விடுதலைப் புலிகளையும் நேசிக்கின்றனர்.

இங்கே ஒன்றைச் சொல்கின்றேன். சில தலைவர்களுக்கு பெரியார் குறித்து சில விமர்சனங்கள் உண்டு. அது எனக்கும் உண்டு. அதற்காக அந்தத் தலைவர்கள் பெரியார்களை வெறுக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. நான் பேசுவது பெரியாரை மிகக் கடுமையாக வெறுக்கின்ற கூட்டம் பற்றித்தான்.

தலைவரின் திருமணம் அவருக்கு உதவியாளரை தேடி தருவதுக்காக இருக்க வில்லை... அதுக்கான சரியான விளக்கத்தையும் தேசத்தின் குரல் பாலா அண்ணா சொல்லி இருக்கிறார்... இருவரும் காதலித்து மணம் முடித்து கொண்டனர்... அதை சொல்லாமல் மறைப்பதுக்கு தேசியமோ இல்லை தலைவரோ கோழைகள் அல்ல..

ஆனால் திருமணம் செய்தேன் அது என் சுய விருப்பம் எண்று பெரியார் சொல்ல வில்லை... ஒரு வேலைக்கு ஆள் வைத்து இருக்கிறேன் எண்றுதான் சொன்னார்... என்பதுதான் என் வாதம்.. ஆகவே பெண்களை கேவலபடுத்தும் செயல் அது... அதை கூட நீங்கள் தமிழீழத்தில் காண முடியாது... திருமணம் என்பது வேலைக்கு ஆள் பிடிக்கும் செயல் எண்று கொள்ளலாமா...?? அந்த பந்தத்தை கூட கேவலப்படுத்தியவர் பெரியார்... அதைத்தான் சொல்லி இருக்கிறேன்..

மற்றது பெரியாரில் மதிப்பு வைத்து இருப்பவர்கள் (எல்லாம் இல்லை) தமிழீழத்தில் மதிப்பு வைத்து இருக்கிறார்கள்... ஆகவே பெரியாரை மதிக்காதோர் அல்லது விரும்பாதோர் தமிழீழத்தில் மதிப்பு வைக்க வில்லை என்கிறீர்கள்...

என்ன சமன் பாடு இது..?? உந்த கோண கணிதம் எனக்கு புரிய வில்லை...

பெரியாரில் மதிப்பு வைத்து இருக்கும் கலைஞர் தமிழீழ அனுதாபில் அல்ல, ஜெயலலிதா அனிதாபி அல்ல, ஓ பன்னீர் செல்வம், இப்படி இன்னும் பலர்.... அனுதாபி அல்ல, ஆகவே பெரியாரை விரும்பும் பெரியவர்கள் ( மக்களாதரவு பெற்ற ) ஒருவரும் தமிழீழத்துக்கு ஆதரவாக இல்லை... ஆகவே பெரியாரை மதிக்கும் யாரும் தமிழீழதை விரும்ப வில்லை எண்று ஒரு சமன் பாட்டை நான் சொல்லவா..>??

Edited by தயா

"மதிப்பது" என்பதற்கு இங்கே சிலர் வேறு ஒரு அர்த்தம் கொடுத்ததால்தான் நான் விளக்கமாக மீண்டும் எழுதியிருக்கிறேன்.

பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் தாம் பெரியாரை மதிப்பதாகத்தான் சொல்வார்கள். நெற்றியில் பட்டையோடு நேற்றுக் கட்சி ஆரம்பித்த விஜயகாந்தும் பெரியார் படத்தை மேடையில் போட்டுத்தான் கட்சி தொடங்கினார். யாகம் செய்கின்ற ஜெயலலிதாவும் பெரியார் நினைவு தினத்தில் பெரியாருக்கு மாலை போடுவார்.

பெரியார் தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்பதை இது காட்டினாலும், பெரியாரின் பெயரை உச்சரிக்கின்ற அனைவரும், உண்மையிலேயே பெரியார் மீது பற்றுள்ளவர்கள் அல்ல.

கலைஞரிடம் பெரியார் மீது பற்று இருக்கிறது. அவருக்கு தமிழீழத்தின் மீதும் பற்று இருக்கிறது. ஆனால் அரசியல் காரணங்களால் இரண்டையுமே பல வேளைகளில் மறந்து விடுவார். இதனால்தான் நாம் அவரை அடிக்கடி கண்டிப்பது உண்டு.

நீங்கள் அரசியலுக்காக நான்கு விதமாக பேசுபவர்களை உதாரணம் எடுத்திருக்கிறீர்கள். அது தவறு. நான் கூறியது அதுவும் அல்ல.

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்!

பெரியாரை கடுமையாக வெறுக்கின்ற, ஆனால் விடுதலைப் புலிகளை நேசிப்பவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிறார்களா? அவர்கள் யார்?

விடுதலைப் புலிகளை நேசிக்கின்ற, ஆனால் பெரியாரை வெறுப்பவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கின்றார்களா? அவர்கள் யார்?

இந்தக் கேள்விக்கு பதிலை ஆராய்ந்தீர்கள் என்றால் நான் சொல்வது புரியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கேள்விக்கு ஏற்கனவே நான் பதில் சொல்லியிருக்கேன். மற்றய எந்த சமுதாயத்திலும் இருந்து தமிழனுக்கு ஆதரவு தராமல் ஒண்டிக்கட்டையாகப் போக வைத்தவர் இந்தப் பெரியார். அவர் திராவிடம், ஆரியம் கதைச்சதால் தான் தமிழனை மற்றய சமுதாயங்கள் வெறுக்க வெளிக்கிட்டவை. அதிலும் பாருங்கோ அவர் சார்;ந்த கன்னடர்களுக்கும், வடக்கில் உள்ளவர்களுக்கும் பிரச்சனையே இல்லை. அவை நல்ல ஒற்றுமை. ஆனால் தமிழனும், வடக்கில் உள்ளவர்களுக்கும் தான் அடிபடுகினம். இண்டைக்கு தமிழன் இப்படித் தனித்து, அநாதையாகப் போனதற்கு இந்தப் பெரியார் எண்டவர் செய்த சூழ்ச்சி தான் காரணம் பாருங்கோ!

இப்படி ஒரு நிலமை இருக்கேக்க, மற்றவை உதவி செய்யல்லை என்று நீங்கள் கவலைப்படுவியள் என்றால் அதற்கான பதில் உங்கட திராவிடத் தலைவர் செய்த சதி தான் காரணம் என்பதை உணருவியள்.

இப்படியான ஒரு நிலமையில் நீங்கள் சொல்லுற ஆட்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ, ஆதரவு தரவேண்டிய தேவை ஒண்டு இருக்கு கண்டியளோ!

அதை விடத் தங்களைத் திராவிட வாதிகள் என்று சொல்லுறவை, இப்போ நெடுமாறனைக் கண்டபாட்டுக்குத் திட்டி எழுதுகினம். என்ன காரணம் எண்டு தான் புரியவில்லை.

தேசியத் தலைவர் தன்னை ஒரு மதப் பற்றாளராகக் காட்டிக் கொண்ட சம்பவங்கள் தான் அதிகமே தவிர, தன்னைத் திராவிடவாதியாக ஒருபோதும் காட்டிக் கொண்டதில்லை. அந்தச் சகதிக்குள் அவர் ஒரு போதும் இறங்க மாட்டார் என்றே நினைக்கின்றன். ஆனால் தலைவர் அப்படி, தலைவர் இப்படி எண்டு கருத்தெழுதுறவை தான் புலிகள் ஊடகப் பேச்சாளர்களோ எண்டதை விடுதலைப்புலிகளிட்ட விளக்கம் கேட்கணும்.

ஆரியம், திராவிடம் என்று பெரியார் கதைத்ததால்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் பாகுபாடு வந்தது என்று நீங்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

;ஆரியர் திராவிடர் வேறுபாடு பல நூற்றாண்டுகளாக இருந்தது. அதைப் பற்றி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். பாரதி ஆரியார்களைக் கண்டித்திருக்கிறார்.

ஆரியர்கள் திராவிடர்களை ஒடுக்குவதற்கு எதிராக நிறையப் போராட்டங்கள் நிறைய நடந்துள்ளன:

பெரியாh அதைப் பெரும் வீச்சோடு நடத்தினார்.

ஈழத்தில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்குவதற்கு எதிராகவும் பல போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் எமது தேசியத் தலைவர்தான் அதை பெரும் வீச்சோடு நடத்துகிறார்.

எங்களிலும் சிலர் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததால்தான் இவ்வளவு அழிவும் என்று பேசுவார்கள். விடுதலைப் புலிகள் கண்ணிவெடி வைப்பதால்தான், ஆமிக்காரன் மக்களை சுடுகிறான் என்று பேசுவார்கள்.

அப்படித்தான் நீங்களும் பேசுகிறீhகள். ஈழத்திலே தமிழர்கள் அடக்கப்படுவதை விட, தமிழ்நாட்டில் மக்கள் ஆரியத்தாலும், பார்ப்பனியத்தாலும் மிகக் கடுமையாக அடக்கப்பட்டனர்.

பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த இந்த அடக்குமுறையில் இருந்து மக்களை விடுவிக்கப் போராடியவர் தந்தை பெரியார்.

விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெரியார் பிறப்பதற்கு முன்பே ஆரிய, திராவிட வேறுபாடு இருந்தது. பல நூற்றாண்டுகளாக அடக்குமுறை இருந்தது.

விடுதலைப் புலிகளால் தமிழீழத்தில் பிரச்சனை உருவாகவில்லை. பெரியாரால் ஆரிய, திராவிட பிரச்சனை உருவாகவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகள்தான் ஈழப் பிரச்சனைக்கு காரணம் என்று சொல்கின்ற முட்டாள்கள் இருக்கின்றார்கள். அதே போன்று பெரியார்தான் ஆரிய, திராவிட பிரச்சனைக்கு காரணம் என்று நம்புகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் தம்பி

நீங்கள் அடிக்கடி பெரியாரையும் தேசியத் தலைவரையும் ஒண்டாக்க காட்டி அதனால் பெரியார் எண்டவரை ஈழத்தமிழர் மத்தியில் சேர்க்கலாம் எண்டு முயற்சி செய்கின்றியள் போலக் கிடக்கு. இது புரிஞ்சு கொள்ளமுடியாத அளவுக்கு எங்கட மக்கள் முட்டாள் இல்லை என்பதைச் சொல்லி வைக்க முயலுகின்றேன். எனவே இந்த முறையை மாத்தி வேற முயற்சி செய்யுங்கோ.

தேசியத் தலைவருக்கும் பெரியாருக்கும் எட்டப் பொருத்தம் என்பதை நீங்கள் என்ன தான் பூசி மொழுகினாலும் இணைக்க முடியாது. யாரோ சொன்னது மாதிரி கொள்கை இல்லாதவைக்குத் தான், இப்படியான இணைத்துப் பேசுதல் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்த வேண்டிய தேவை இருக்குது கண்டியளோ. உங்களுக்கே தெரியும், திராவிடக் கொள்கை எண்டதைத் தூக்கி வைந்து எங்கட மக்களிட்ட கதைச்சால் அது எடுபடமாட்டாது என்று. அதை சில மக்கிச சிந்தாந்தம் கதைக்கின்றவை தான் ஐல்ரா போடுவினம். மற்றவைக்கு ஒரு போதும் அது பிடிக்காது.

நீங்கள் ஒழுங்கான விவாதி எண்டால் முதல்ல தலைவரோட பெரியாரை இணைச்சுக் கதைச்சு, சமன்பாடு போடுறதை நிறுத்துங்கோ.

ஆரிய- திராவிடப் பிரச்சனை எண்டது முதல்ல இருக்கேல்ல. அது வெள்ளைகள் வந்த பின்னர் ஏற்பட்ட ஒண்டு. முதல்ல சாதி வாதம் இருந்திருக்கலாமே தவிர, ஆரிய-திராவிட வாத் எண்டு இல்லை. ஆரியருக்குள்ளும் தலித் இருக்கினம் தான், திராவிடருக்குள் பார்ப்பானி இருக்கினம். அதை விட முந்தி ஒவ்வொரு சமுதாயமும் ஒவ்வொரு அரசனுக்குள் கீழ் இருந்தவையே தவிர, ஒன்றுபட்ட சமுதாயமாக இருந்ததில்லை.

சோழர்களோ, பாண்டியர்களோ அண்டைக்கு இந்தியா முழுக்கப் பிரல்யமாக இருந்தவை. மகாபாரதத்தில் வாற விதுரன்(??) தமிழ் அரசன் எண்டு சொல்லுகினம்.

திருப்பியும் உங்களுக்குச் சொல்லுறது என்ன வெண்டால் தமிழ் சமூகத்தை மற்றவர்களோடு அன்னியப்பட வைச்சது பெரியார் செய்த சூது.

பெரியாரின் செயல்முறைகள் வேறு. தேசியத் தலைவரின் செயல் முறைகள் வேறு. தேசியத் தலைவரின் முதன்iயான நோக்கம் ஈழத் தமிழர்களின் விடுதலை. பெரியாரின் முதன்மையான நோக்கம் சமூக விடுதலை.

பெரியாரின் போராட்ட வடிவம் வேறு. தேசியத் தலைவரின் போராட்ட வடிவம் வேறு.

ஆனால் இருவருமே மக்களின் விடுதலை பற்றி சிந்திப்பவர்கள்.

பெரியார் அவருடைய காலத்தில் தமிழ்நாட்டு மக்களால் பெரும் தலைவராக கருதப்பட்டார்.

தேசியத் தலைவர் அவருடைய காலத்தில் பெரும் தலைவராக அவருடைய மக்களால் கருதப்படுகிறார்.

இரண்டு தலைவர்களுக்கு எதிராகவும் அவர்களுடைய எதிரிகள் அவதூறுகளை பரப்பினார்கள்.

குறிப்பாக ஏற்கனவே இருந்த அடக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடுகின்ற போது, அந்த அடக்குமுறையே அவர்களால்தான் வந்தது போன்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருவருக்கும் வேறுபாடுகளும் உண்டு. ஒற்றுமைகளும் உண்டு.

தமிழீழத்திற்கு பெரியார் தேவை இல்லை. அங்கே எங்கள் தேசியத் தலைவர் உண்டு.

அங்கே பெரியாரைக் கொண்டு போக வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் நீங்கள் பெரியார் பற்றி செய்கின்ற பரப்புரைகள், இன்றைக்கு எங்கள் தேசியத் தலைவர் பற்றி எதிரிகள் செய்கின்ற பரப்புரைகளோடு ஒற்றுமைகளை கொண்டிருப்பது என்னுடைய குற்றம் அல்ல.

தேசியத் தலைவருக்கு எதிராக செய்யப்படுகின்ற அதே பரப்புரைகளை பெரியாருக்கு எதிராகவும் செய்கின்ற போது, ஒப்பீடு தவிர்க்க முடியாதது ஆகின்றது.

கண்ணிவெடி வைப்பதால்தான் ஆமிக்காரன் மக்களை சுடுகிறான் என்று திரும்பித் திரும்பி சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

பெரியாரின் சிந்தனைகள் பற்றிய உங்கள் கருத்தை முன்வையுங்கள். நாமும் அதற்கு பதில் கருத்தை வைக்கிறோம். உங்களுடையதும் என்னுடையதும் சிந்தனைகளும் அறிவும் வளர்வதற்கு அது உதவியாக இருக்கும்

பெரியாரை கடுமையாக வெறுக்கின்ற, ஆனால் விடுதலைப் புலிகளை நேசிப்பவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிறார்களா? அவர்கள் யார்?

விடுதலைப் புலிகளை நேசிக்கின்ற, ஆனால் பெரியாரை வெறுப்பவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கின்றார்களா? அவர்கள் யார்?

இந்தக் கேள்விக்கு பதிலை ஆராய்ந்தீர்கள் என்றால் நான் சொல்வது புரியும்

***

பெரியாரை மதித்து போற்றும் ஒருவர் விடுதலை புலிகளை எதிர்க்கிறாரா..?? இருக்கிறார் அவரின் பெயர் நடிகர் கமல்காசன்.... இன்னும் இருக்கிறார்கள்...

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

***

வீணாக எதற்கு கமல்ஹாசன் மீது தவறான குற்றச்சாட்டைத் தெரிவிக்கிறீர்கள்? அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிர் என்று யார் சொன்னது? அவர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக என்ன செய்தார்?

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.