Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8d33912d-b34c-48ca-80b1-a6862507b912.jpg

சண்டையடி சண்டை...
விடிஞ்சால் பொழுது பட்டால் சண்டை சண்டை🌟


காலமை விடிய வெள்ளன கிளீனிங் வேலைக்கு போனால்
கக்கூஸ் கிளீன் இல்லை எண்டு சண்டை பிடிக்கிறான்
ஓகே எண்டு போட்டு அவசர அவசரமாய் கழுவித்துடைச்சு போட்டு
அடுத்த வேலைக்கு அதர பதர  ஓடிப்போனால்
குறுக்காலை வந்த கார்க்காரன்
உனக்கு கண்ணில்லையோ எண்டு சண்டை பிடிக்கிறான்
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அடுத்த வேலைக்கு போனால்
அடிக்கடி அஞ்சு நிமிசம் பிந்தி வாறாய்
சம்பளத்திலை பிடிக்கப்போறன் எண்டு 
அடுத்த முதலாளி சண்டை பிடிக்கிறான்

சரி பொடாங் எண்டு மனசுக்குள் திட்டிப்போட்டு
வீட்டுக்கு வந்தால் பாண் வாங்கிக்கொண்டு வாங்கோ
எண்டு சொன்னனானெல்லே எண்டு மனிசி சண்டை
அவசரப்பட்டு பேக்கரிக்கு போய் பாண் வாங்க
நான் இஞ்சை வரிசையிலை நிக்கிறன்
நீ என்னெண்டு முன்னுக்கு போய் வாங்கினனீ
எண்டு அடுத்த சண்டை
சொறி சொல்லிப்போட்டு
வீடு வந்து....ஒரு காகக் குளியல் போட்டு
அமைதியாக சோபாவில் அமர்ந்து
தொல்லைக்காட்சி ரிமோட் பட்டனை அமத்தினேன்
பள்ளி மாணவன் சக மாணவனுக்கு கத்தியால் குத்தினான்
என பிரேக்கிங் நியூஸ்
அடுத்தது நல்ல செய்தியாக இருக்கும் என காத்திருந்த
என் கண்களுக்கு....
பாலியல் கொலை என அடுத்த செய்திவர
மனமுடைந்து அடுத்த தொலைக்காட்சிக்கு 
மாறினேன்...
சண்டையில் உக்ரேன் முன்னேறுவதாக அறிவிப்பாளர்
புழகாங்கிதம் அடைய
அடுத்த சனலுக்கு தட்ட...
 அவனோ ஹமாஸ் இஸ்ரேல் என அலறினான்

சரி போகட்டும் என பேசாமல்
தமிழ் தொலைக்காட்சிகளை நாடினேன்
ஆகம சனனில் இராவண இராம சண்டைகளை
அமைதியாக விளக்கிக்கொண்டிருந்தார் மஞ்சள் நிற ஆன்மீகவாதி
வேண்டாமென அடுத்த தொலைக்காட்சிக்கு மாற
மாமியார் மருமகளுக்கு நஞ்சு வைத்து
கொல்லும் காட்சி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது.
ஒன்றுமே வேண்டாம் என நினைத்து
இயற்கை விவரண காணொளிகளை
பார்க்க அடுத்த  தொலைக்கட்சிகளை தேடினேன்
காற்று மாசுபட்டுவிட்டது என்கிறார்கள்
உலகம் வெப்பமாகின்றது என்கிறார்கள்
சூறாவளி என்கிறார்கள்
நில நடுக்கம் என்கிறார்கள்.
எரிமலை வெடிக்கின்றது என்கிறார்கள்
தண்ணீர் பஞ்சம் என்கிறார்கள்.....

அப்படியே அடுத்த சனலுக்கு நகர

ஒநாய்கள் சிறு மான்குட்டியை வேட்டையாடும்
காட்சியை தத்துவரூபமாக காட்டிக்கொண்டிருக்கின்றோம்
என  ஒருவர் வர்ணனை செய்து கொண்டிருந்தார்

என் கஷ்ரம் கவலை சொல்லவே மூச்சு வாங்குதடி
தலையை மூடிக்கொண்டு படுக்கிறேன்
எதுவுமே தெரிய வேண்டாமென........
vd4bjkpdyey.jpg

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1407a117-7286-4869-833c-c3000dcf990b-d7f

நான்
தேடியெடுத்த
தேன் கனி
நீயடி....
ஆதியும் 
அந்தமும்
இல்லாத
இவ் பிரபஞ்சத்தில்
எனது 
முற்றுப்புள்ளி நீயடி..💞
 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

எனது 
முற்றுப்புள்ளி நீயடி

ஆக முடிவு அவளால்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GDuzhy6a-AAANZYm.jpg

நீ பார்த்ததால்
தானடி
சூடானது
மார்கழி---🔥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image_750x_62e7cd2a31b32.jpg

குங்குமம் ஏன் சூடினாய்
கோல முத்தத்தில் கலையத்தான்
கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய்
ஊடல் பொழுதில் கசங்கத்தான்
உன் கூந்தலில் 
மலர்கள் எதற்கு
கட்டில் மேலே நசுங்கத்தான்
தீபங்கள் அணைப்பது ஏன்
புதிய பொருள்கள்
நாங்கள் தேடத்தான்......😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

F-YSiLJa4AA4-12?format=jpg&name=small

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே...💞

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2024 at 01:27, குமாரசாமி said:

நீ பார்த்ததால்
தானடி
சூடானது
மார்கழி

உனைப் பார்த்ததால்

சூடானவன் நானடி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

F-YSiLJa4AA4-12?format=jpg&name=small

கூவாத குயில் ஆடாத மயில் நானாக இருந்தேனே
பூவோடு வரும் காற்றாக எனை நீ சேரத் தெளிந்தேனே
ஆதாரம் அந்த தேவன் ஆணை சேர்ந்தாய் இந்த மானை
நாவார ருசித்தேனே தேனை தேர்ந்தேன் இன்று நானே
வந்தத் துணையே வந்து அணையே
அந்த முல்ல சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே
முத்துமணியே பட்டுத்துணியே
ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே
சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும் வாழும் இந்த அன்புக் கதையே...💞

விதையில் முளைத்து விழுது விட்ட ஆல்போல் கவிதைகள் பறந்து பறந்து வருகுது........!  👍

நன்றி கு.சா.......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/1/2024 at 09:01, suvy said:

விதையில் முளைத்து விழுது விட்ட ஆல்போல் கவிதைகள் பறந்து பறந்து வருகுது........!  👍

நன்றி கு.சா.......!

உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன.....😂
ஒரு சிலதுகள் சினிமாப்பாட்டுக்களிலை இருந்து இடையால உருவினதுகள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு சொல்லுறதுக்கு என்ன.....😂
ஒரு சிலதுகள் சினிமாப்பாட்டுக்களிலை இருந்து இடையால உருவினதுகள். 😎

அது பிரச்சினையில்லை.......அதுக்கும் கூட ஞாபகசக்தியும் அதை சரியாகப் பொருத்துகின்ற இடங்களும் தெரிய வேண்டும்.....அது எல்லோருக்கும் கைகூடாது......உங்களுக்கு கைகூடி வருது.......தொடருங்கள்......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0000child_labour.jpg?w=768&dpr=1.0

தந்தை தவறு செய்தான்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டேன்
வாழத் தெரியவில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

f4b422a0c1f0a7e4dc0b030ef824f254.jpg

நீ என் கைக்கு
விலங்கிடுவாய் என்றால்
ஆயுளுக்கும் நான்
குற்றவாளியாக தயார்....
😍

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GIo-TBtnbo-AA5-O80.jpg

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே
நம் காதல் வாழ்கவே
சொல்லாது சோலைக்கிளி
சொல்லைக் கடந்த காதல் இது
கண் மூலம் காதல் பேசுதே...❤️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xyb.jpg

எண் சாண் உடம்படியோ..
ஏழிரண்டு வாயிலடி..
பஞ்சாயக் காரரைவர்..
பட்டணமும் தானிரெண்டு..
அஞ்சாமற் பேசுகிறாய்..
ஆக்கினைகுத் தான் பயந்து..
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா..
நிலை கடந்து வாடுறண்டி.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

IMG-2543.jpg

கப்பலில் வருகின்ற கனவான்களின் 
நடிப்பை  கணிப்புடனே  
சொல்கின்றேன் கவனமாய் 
கேள் தங்கமே
கருணை எனும் மிகப்பெரிய 
கடலை தாண்டி புகழ் சேர்க்க 
வருவாரடி புலம்பெயர் 
செல்வச் சீமான்கள்.

Edited by குமாரசாமி
மெருகூட்டப்பட்டுள்ளது 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GE20JCkbEAA9zfJ?format=jpg&name=large

கொல்லன் உலை போலக் கொதிக்குதடி என் வயிறு
நில்லென்று சொன்னால் நிலை நிறுத்த சுடுவதில்லை
நில்லென்று சொல்லியெல்லோ  நிலை நிறுத்த 
வல்லார்குக்
கொல்லென்று வந்தநமன்  என் கண்ணம்மா
குடியோடிப் போகானோ..

  • கருத்துக்கள உறவுகள்

நாலுவரிகளில் நறுக்கென்று சுட்டும் கவிதைகள் .......தொடருங்கள்......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

கள்ள பெண்ணே...
என் கண்ணை கேட்கும் கண்ணே...


என் கற்பை திருடும் முன்னே...
நான் தப்பை விட்டு தப்பி வந்தேன்...


மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்...
என் நெஞ்சை கொத்தி தின்றாய்...


எனக்கு உன்னை நினைவில்லையே...
பூங்காவில் மழை வந்ததும்...


புதர் ஒன்று குடை ஆனதும்...
மழை வந்து நனைக்காமலே...
மடி மட்டும் நனைந்தாய்....
மறந்தது என்ன கதை?

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GO-0-Gme-WIAAH6y9.jpg

படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி
மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே...

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GT8-Dkx-Kag-AAwz-Y.jpg

நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா ..

முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GTJ0-VC2b-AAAWubo.jpg

உறங்கும் முன் ஒவ்வொரு 
நாளும் உன் பெயரையே 
உச்சரிக்கிறேன்
ஏன் தெரியுமா?
நீ வருவாய் என
💞 

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gh-VRGGTa-AAAd2-Hi.jpg

கடலிலே தனிமையில் போனாலும்..
கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்..
அலைகளில் தத்தளித்தாலும்..
உன் நினைவில் முக்குளிப்பேனே..
அடியே அமுதே இதுவே போதும்..
சிட்டு  நீ... காதோரம் சேர்க்காதோ காத்து..
நித்தம் உனை காணாது..
நித்திரையும் தோணாது..
சித்திரமே முத்து ரதமே..
எட்டி எட்டி போனாலும்..
கெட்டு மனம் போகாது..
அற்புதமே அன்னக்கிளியே..

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

G3-G1-EAzak-AA6v-E4.jpg

பெண்கள் சிலருடன் பேசத்தொடங்கினேன்.

கண்களை கவனி காமம் என்றனர்.

வைரமுத்து-

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rai-lakshmi-2.jpg

ஆடைகள் இல்லாமல் பிறந்தது உயிரினங்கள்.

அதில் ஆறறிவுள்ள இனமும் அடக்கம்.

இருந்தும் ஆடைகளிலிருந்து

தப்பிக்கவே

இந்த ஆறறிவுள்ள

மனிதமும் போராடுகின்றது.

அரைகுறை ஆடைகளுடன் ஒரு தவனம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.