Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை நீக்க கையெழுத்து வேட்டை!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்துகளை திரட்டும் நடவடிக்கை ஐக்கிய சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் கையெழுத்துகள் இதில் திரட்டப்பட உள்ளன.

திருகோணமலை -நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் கடந்த 28ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த விகாரை நிர்மாணிப்பதால் காணப்படும் பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசமாகும். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறானதொரு செயற்பாடுகளை முன்னெடுப்பார்களானால் அதற்கு நீங்களே ஒரு முன்னுதாரணமாக செயற்படுவீர்கள் என ஆளுநர் செந்தில் தொண்டமான் இதன்போது தெரிவித்திருந்தார்.

பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப்பணிகளும் முன்னெடுக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், ஆளுநரை பதவி விலக்க வேண்டுமென வலியுறுத்தியே ஒரு இலட்சம் கையெழுத்தை திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய சங்கம் ஆரம்பித்துள்ளது.

http://www.samakalam.com/கிழக்கு-ஆளுநர்-செந்தில்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2500 வருடங்களாகியும் திருந்தாத இந்த காவிகள் இனியும் திருந்துவதட்கு வாய்ப்பில்லை. எனவே இந்த இந வாதம் தொடரத்தான் போகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையவா போகின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Cruso said:

2500 வருடங்களாகியும் திருந்தாத இந்த காவிகள் இனியும் திருந்துவதட்கு வாய்ப்பில்லை. எனவே இந்த இந வாதம் தொடரத்தான் போகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையவா போகின்றது?

Don't worry இந்தியா காப்பாற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, Cruso said:

2500 வருடங்களாகியும் திருந்தாத இந்த காவிகள் இனியும் திருந்துவதட்கு வாய்ப்பில்லை. எனவே இந்த இந வாதம் தொடரத்தான் போகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையவா போகின்றது?

இயற்கைக் குணம் மாறாது. ஏதோ ஒன்றின் வாலை நிமிர்த்த முடியாது என்பார்களே, அது..... இதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களவன் கிழக்கு மாகாணத்தில் தனக்கு சாதகமில்லாத ஆளுநரை மாற்ற முடியும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும்.. சிங்கள இராணுவ மற்றும் சிங்கள பேரினவாதிகள் அவர் தம் ஆதரவாளர்கள் ஆளுநரான போது அவர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. சம் சும் கும்பலோடு எல்லாக் கும்பலும் ஆமாப் போட்டன தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, nedukkalapoovan said:

சிங்களவன் கிழக்கு மாகாணத்தில் தனக்கு சாதகமில்லாத ஆளுநரை மாற்ற முடியும் என்றால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும்.. சிங்கள இராணுவ மற்றும் சிங்கள பேரினவாதிகள் அவர் தம் ஆதரவாளர்கள் ஆளுநரான போது அவர்களை மாற்ற முயற்சிக்கவில்லை. சம் சும் கும்பலோடு எல்லாக் கும்பலும் ஆமாப் போட்டன தானே. 

எல்லா  கட்சிகளும் ஒரு உள்நோக்குடன்தான் செயல்படுகின்றன. அதாவது அடுத்த தேர்தலில் எப்படி வெல்லலாம் என்பதுதான் அவர்களது கணக்கு. மக்களின் பிரச்சினை தீர்ந்ததா இல்லையா என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரைக்கும் மூவினத்தவரும் சரி சமமாக வாழ்கிறார்கள். எனவே சிங்களவனுக்கு, சோனவனும் தமிழ் ஆளுநரை எதிர்க்கும்போது அது கவனத்தில் கொள்ளப்படும். அவர்கள் Head count ஐதான் பார்ப்பார்கள். எனவே தமிழ் ஆளுநர் மாற்றப்படுவதட்கான சந்தர்ப்பம் அதிகம். 

23 hours ago, ஈழப்பிரியன் said:

Don't worry இந்தியா காப்பாற்றும்.

இந்தியாவில் உள்ள தமிழனே தனது உரிமைகளை பாதுகாக்க அந்த சங்கிகளுடன் போராட வேண்டி உள்ளது. நம்மளும் அவங்களை நம்பினால் இலவு காத்த கிளியின் கதைதான். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.