Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

தாஜ் ஹொட்லில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்றைய தினம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பாக சனல் 4 கருத்து வெளியிடும்முன்னரே நாம், தான் பின்னணியில் உள்ளவர்கள் யார், மூலக்காரணம் என்ன என்பது தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டிருந்தோம்.

மலல்கொட அறிக்கையை அரசாங்கம் ஒழித்துக் கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக தான் இது வெளியே வந்தது.தெரிவுக்குழுவின் அறிக்கையில் பகுதி ஒன்றை மட்டும்தான் எமக்கு பார்க்க முடியும். இரண்டாம் பாகத்தைப் பார்க்க வேண்டுமெனில் நாடாளுமன்ற நூலத்திற்கு செல்ல வேண்டும்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமன்றில், ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு உள்ள ஓர் அரசாங்கமாக இருந்தால், மலல்கொட அறிக்கை, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதி தெரிவுக்குழுவின் அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்றிக் காட்டுங்கள்.

தாஜ் ஹொட்லில் தாக்குதல் நடத்த வந்த ஜமீல் எனும் பயங்கரவாதி, தனது பையுடன் முச்சக்கரவண்டியொன்றில் ஏறி, தெஹிவலை, ரொப்பிக்கல் இன் எனும் ஹொட்டலுக்கு செல்கிறார். அங்கு அவர் கொண்டுவந்த பையை வைத்துவிட்டு, அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு செல்கிறார்.

பள்ளிவாசலில் வைத்து, அங்குள்ள முன்னாள் பொலிஸாரான பாதுகாப்பு அதிகாரி, ஜமிலிடம் விசாரணை செய்கிறார்.
இதன்போது, தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளதாகவும், சமயக்கிரியைகளில் ஈடுபடவே பள்ளிக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

வேண்டுமெனில் மனைவிடம் தொலைபேசியில் கேட்டுமாறும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அதிகாரியும், ஜமீலின் மனைவியுடன் பேசியபோதும், ஆம் எனது கணவர் சண்டையிட்டுக் கொண்டுதான் வந்துள்ளார் என்றும் தற்போது வீட்டுக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர், ஜமீல் தொடர்பான சந்தேகம் இல்லாமல் போனமையால், அவரை விடுவித்த பாதுகாப்பு அதிகாரி, தானும் தனது கடமைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிலையில், 10 நிமிடங்கள் கழித்து ஜமீலின் மனைவியின் வீட்டுக்கு வந்த, பாதுகாப்பு அதிகாரிகள் எனக்கூறுவோர், குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, தாங்கள் வரும்வரை ஜமீலை அனுப்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.

ஆனால், ஜமீலை தான் அனுப்பி விட்டதாக பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரொப்பிக்கல் இன் ஹொட்டலுக்கு சென்ற ஜமீல், அங்கே குண்டை வெடிக்க வைத்து உயிரிழக்கிறார். இந்தச் சம்பவம் 1.30 மணியளவில் நடக்கிறது. 3.30 மணியளவில் மீண்டும் குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு தொலைப்பேசியில் அழைப்பு விடுத்த பொலிஸார், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார்கள்.

அவரும் 5 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றபோது, ஜமீலின் வீட்டில் இருந்ததாகக் கூறப்படும் அந்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு இருந்துள்ளனர். இதன்போது, முன்னாள் பொலிஸ் அதிகாரியான குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு, அங்கிருப்பது புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என தெரிய வந்துள்ளது.

ஜமீல் குண்டை வெடிக்க வைக்கும் முன்னர், ஜமீலின் மனைவியின் வீட்டுக்கு எப்படி இந்த இராணுவப்புலனாய்வுப் பிரிவினர் சென்றார்கள்? அத்தோடு, குறித்த புலனாய்வுப் பிரிவினர் கதைத் தொலைப்பேசி இலக்கமானது, சிலோன் சிப்பிங் எலைன்ஸ் எனும் நிறுவனத்தினால் பதியப்பட்டுள்ளது. இலக்கம் 83, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 3 எனும் பொய்யான விலாசத்தில் தான் இந்த சிம் காட் பதியப்பட்டுள்ளது.

அதாவது, திருட்டுத்தனமாகத்தான் இந்த சிம் காட்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த சிம் காட்டை பயன்படுத்திதான் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீத் நொயால், பிரகீத் ஹெக்நெலிகொட, உபாலி தென்னகோன் உள்ளிட்டவர்களை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் காட்களும், இந்த பொய்யான விலாசத்தில்தான் பதியப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் விசாரணையில் தெரியவந்த உண்மைகளாகும்.

இதனால்தான் சாட்சிகள் அடங்கிய அறிக்கையை நாடாளுமன்ற நூலகத்தில் இவர்கள் ஒழித்து வைத்துள்ளார்கள்.
இதனை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இனியும் மக்களிடமிருந்து மறைத்து வைத்திருக்க முடியாது.
நான் இங்கு கூறுவது உண்மையா- பொய்யா என்பது தொடர்பாக விசாரணை நடத்துங்கள்.

பயங்கரவாதி சஹ்ரானுக்கு மேலாக ஒருவர் உள்ளார். அபு ஹிம் என்பவர் தொடர்பாக நிச்சயமாக விசாரணை நடத்த வேண்டும்.
சஹ்ரானுக்கு மேலாக இருப்பவர் நௌபர் மௌலவி என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு நௌபர் மௌலவியை அழைத்து விசாரணை செய்யவில்லை?
அத்தோடு, சாரா ஜஸ்மின் தொடர்பாக 3 டி.என்.ஏ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் இரண்டிலும் டி.என்.ஏ. ஒத்துப்போகாத நிலையில், வருடங்கள் சென்று மேற்கொள்ளப்பட்ட மூன்றாது டி.என்.ஏ. பரிசோதனையில் தான் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டது. ஆனால், சாய்ந்தமருது குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் அவரது உடல் இருக்கவில்லை. யாரை ஏமாற்ற இவ்வாறு செய்ய வேண்டும்?

கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதியாகி, 22 ஆம் திகதி தான் பிரதமரை நியமிக்கிறார்.
எனினும், பிரதமரை நியமிக்கும் முன்னரே ஷானி அபேசேகரவை அவர் மாற்றுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த 31 அதிகாரிகளையும் கோட்டாபய ராஜபக்ஷ மாற்றியுள்ளார்.

700 சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இது அனைத்தும் உண்மையான தகவலாகும்.
ஏன், கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு செய்ய வேண்டும்? இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவர வேண்டும்.

https://athavannews.com/2023/1350796

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பள்ளிவாசலில் வைத்து, அங்குள்ள முன்னாள் பொலிஸாரான பாதுகாப்பு அதிகாரி, ஜமிலிடம் விசாரணை செய்கிறார்.
இதன்போது, தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளதாகவும், சமயக்கிரியைகளில் ஈடுபடவே பள்ளிக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர், ஷிரானி அபயசேர? நிஷாந்த டீ சில்வா? குண்டு வெடிக்கவைத்து, தானும் அழிந்து மற்றவர்களையும் சிதற வைக்கமுன் ஆசி பெற சென்றிருப்பாரோ.... பாவம் கழுவச்சென்றிருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய உத்தரவுகளை விசாரணை செய்ய வேண்டுமென சஜித் வலியுறுத்தல்

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வழங்கிய சில உத்தரவுகளை விசாரணை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) 31அதிகாரிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புடைய குறைந்தது 700 அதிகாரிகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

இந்த உத்தரவுகள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் உள்நாட்டு முயற்சிகள் ஊழல் நிறைந்ததாக இருப்பதால், இது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை.

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயற்பட்ட சஹாரான் அரச புலனாய்வு அதிகாரி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அதிகாரியை விசாரிக்க வேண்டாம் என உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

https://thinakkural.lk/article/274195

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி அபூ ஹிந் யார் என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர்

Published By: DIGITAL DESK 3

22 SEP, 2023 | 06:42 PM
image
 

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் உண்மை என்ற தீர்மானத்துக்கு நாங்கள்  வரவில்லை. 

ஆனால் இந்த விடயங்களின் உண்மை தன்மை தொடர்பாக பூரண விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணையை தாமதப்படுத்தும் அனைவரது கரங்களிலும் இதன் இரத்தம் படிந்திருக்கிறது. தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அபூஹிந். ஆனால் அவர் யார் என கண்டறியப்பட வேண்டும். 

அத்துடன் இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதிமொழியை தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு வழங்குகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (22) இரண்டாவது நாளாக இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை முழுமையாக எங்கள் யாருக்கும் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் செப்டெம்பர் 11 அமெரிக்க பெண்டகன் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை பூரணமாக எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும். அரசாங்கம் ஏன் மக்களுக்கு இதனை மறைக்க வேண்டும்.

இந்த தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்துவதில் எமக்கு இணங்க முடியாது. அவ்வாறு தெரிவுக்குழு அமைப்பதாக இருந்தால் அதன் எண்ணிக்கை ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சமமாக இருக்க வேண்டும். பெண்டகன் விசாரணை குழுவில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமமாக நியமிக்கப்பட்டதனாலே அவர்களுக்கு உண்மையை தெரிந்துகொள்ள முடியுமாகியது.

அத்துடன்  தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் சஹ்ரானை புலனாய்வு அதிகாரிகள் நாடு பூராகவும் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால்  ஐ.பி. முகவரியில் சஹ்ரானுடன் அதிகமாக தொலைபேசியில் உரையாடி இருப்பது புலனாய்வு அதிகாரி ஒருவர் என அமெரிக்காவின் எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த விடயத்தின் உண்மை என்ன என்பதை அரசாங்கம் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.

அதேபோன்று மாத்தளை பொடி சஹ்ரான் சொனிக் சொனிக்குடன் தொலைபேசியில் உரையாடி இருப்பது வெளிப்பட்டபோது அந்த சிம்காட்  புலனாய்வு ஒருவரிடம் இருப்பது தெரியவந்துள்ளது. குறித்த புலனாய்வு அதிகாரி, இந்த தாக்குதலை ஐ.எஸ். ஏன் இன்னும் பொறுப்பேற்காமல் இருக்கிறது? விரைவாக பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இதன்போது, பொடி சஹ்ரான் இந்துனேசியாவுடன் தொடர்புகொண்டு கேட்டடபோது அவர் இன்னும் பைஅத் (உறுதிமொழி) செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 23 ஆம் திகதி இந்தியாவில் இருந்து உறுதிமொழி காணொளி இணையத்தளத்துக்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்த சொனிக் சொனிக் விடயத்தை விசாரணை நடத்தவேண்டும்.

அதேபோன்று குண்டுதாரி ஜெமீல் குண்டை வெடிக்கவைக்க முன்னர் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் 2 பேர் ஜெமீலின் வீட்டுக்கு சென்றுள்ளர். இது எவ்வாறு முடியும். அதேபோன்று குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உரையாடிய தொலைபேசி இலக்கத்தை தேடிப்பார்க்கும்போது அது பிழையான முகவரியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த சிம்காட்டை பயன்படுத்திக்கொண்டே லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

கீத் நொயர், பிரகீத் எக்னெலிகொட, உபாலி தென்னகோன் ஆகியோரை கடத்துவதற்கு பயன்படுத்தி இருப்பதும் இந்த சிம்காட்டை பயன்படுத்தியாகும் என்பது விசாரணைகளில் வெளிவந்திருக்கிறது. அதனால் குண்டுதாரி ஜெமீலை புலனாய்வு அதிகாரிகள் எவ்வாறு தெரிந்துகொண்டிருந்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்.

மேலும், சஹ்ரானுக்கு மேலால் ஒருவர் இருந்தார். அவரின் கட்டளைக்கமையவே அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது. அவர்தான் அபூஹிந். அபூஹிந்த என்பது அவரின் புனைப்பெயர். அதனால் இந்த தாக்குதலின் சூத்திரதாரி அபூஹிந். அவர் யார் என்பதை விசாரணை நடத்தவேண்டும்.  அதேபோன்று சாரா ஜெஸ்மின் தொடர்பாக டீ.என்.ஏ. பரிசோதனை 3 நடத்தியுள்ளது. முதலாவது இரண்டிலும் சாரா உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது 3ஆவதில் அவர் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாய்ந்தமருதில் குண்டு வெடித்த வீட்டில் குண்டு வெடித்த பின்னர் சாராவின் குரல் ஓசை கேட்டதாக சஹ்ரானின் மனைவி தெரிவித்திருக்கிறார். அதனால் இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு, அமைச்சரவை மற்றும் பிரதமரை நியமிக்க முன்னர் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மேற்கொண்டுவந்த புலனாய்வு அதிகாரிகள் சானி அபேசேகர உட்பட 31 பேரை மாற்றினார். ஏன் அவர் அவ்வாறு செய்தார். இதன் உண்மையை நாங்கள் அறிந்துகொள்ள வேண்டும். 

அத்துடன், பேராயர் கர்த்தினால் இந்த தாக்குதலை அறிந்திருந்ததாகவும் அவருக்கு இது தொடர்பாக புலனாய்வு பிரிவு அறிவித்திருந்ததாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் இந்த சபையில் தெரிவித்திருந்தார். ஆனால்  தாக்குதலுக்கு பின்னரே பேராயர் கர்த்தினாலுக்கு  பாதுகாப்பு வழங்கப்பட்டது. பேராயர் கர்த்தினாலுக்கு புலனாய்வு பிரிவு வழங்கிய தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, ஈஸ்டர் தாக்குதலுக்கு நான் உட்பட அனைவரும் பொறுப்புக்கூறவேண்டும். அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும். அதனால் எமது அரசாங்கத்தில் தாக்குதலின் உண்மை சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்போம்.  இந்த உறுதிமொழியை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/165215

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

கொலையாளியிடமே கொலையை துலக்குமாறு கேட்கப்படுள்ளது. 

ம்ம்.... இவ்வளவுபேருக்கு விஷயம் தெரிந்திருந்தும், அப்பாவி மக்களை காப்பாற்றத் தவறிவிட்டார்கள். மல்க்கம் விழுந்து விழுந்து நீலிக்கண்ணீர் வடிப்பது, தனது பதவியை தக்க வைப்பதற்கே! 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

அவர், ஷிரானி அபயசேர? நிஷாந்த டீ சில்வா? குண்டு வெடிக்கவைத்து, தானும் அழிந்து மற்றவர்களையும் சிதற வைக்கமுன் ஆசி பெற சென்றிருப்பாரோ.... பாவம் கழுவச்சென்றிருப்பாரோ?

நீங்கள் கூறிய இருவருமே நேர்மையான அதிகாரிகள். கோத்த வந்தவுடன் ஷானியை பதவியிறக்கம் செய்து சிறைக்குள் தள்ளினார். மற்றவர் இவருக்கு தப்பி வெளி நாட்டுக்கு ஓடிவிடடார். நிச்சயமாக இவர்கள் அந்த அதிகாரிகளாக இருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் இருவரும் பதவியில் இருந்துள்ளனர். கோத்தாவை நிசாந்த டீ சில்வா விசாரணைக்கும் அழைத்துள்ளார். அதன் பிற்பாடே தப்பியோடினார். ஷிரானி அபய சேகரவும் தப்ப முயன்றார் ஆனால் காலந்தாழ்ந்து விட்டது. நிசாந்த தப்பியதனால் சுதாகரித்துக்கொண்ட கோத்தா இவரை மடக்கிவிட்டார், இது மிகுந்த வெற்றி அவர்களுக்கு. இருந்தாலும் அவரை போட்டுத்தள்ளாமல் விட்டதே பெரிய ஆறுதல். ஆனால் அவரின் உயிருக்கு உத்தரவாதமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரிதான்.

செல்லும், செல்லாததுக்கு செட்டியார் என்பது போல....

அதாவுல்லா, ரிசாத்.... எல்லா காக்காமாரும் பிள்ளையானை போட்டுத் தாக்கினம்.

இஸ்லாத்தில் தற்கொலையே இல்லையாமே, அத்தாவுல்லா சொல்லாறு!!

சகரான் கோஸ்டிகள் சொர்கத்திலோ???

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இஸ்லாத்தில் தற்கொலையே இல்லையாமே, அத்தாவுல்லா சொல்லாறு!!

அப்போ .... காணொளி வெளியிட்டது, சுற்றிவளைப்பில் தற்கொலை செய்துகொண்டதெல்லாம் யாராயிருக்கும்? கைது செய்யப்பட்ட பெண் யாரது மனைவி? சொன்னவர்கள் துப்பு துலக்கலாமே! ஒருவேளை, தற்கொலை செ ய்வது இல்லாமல் மற்றவர்களை கொலைசெய்வது உண்டோ மார்க்கத்தில்? இவ்வளவு காலமும் மௌனம் காத்தவர்கள் இப்போ ஆளாளுக்கு விளக்கம் கொடுப்பதும் விசாரணை செய்வதும் தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சி, காலந்தாழ்த்திய செயற்பாடேயன்றி வேறொன்றுமில்லை. இதற்குமேலும் தங்களை நிருபிக்க முயற்சித்தால் பொல்லைகொடுத்து அடி வாங்குவது போலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

எல்லாம் சரிதான்.

செல்லும், செல்லாததுக்கு செட்டியார் என்பது போல....

அதாவுல்லா, ரிசாத்.... எல்லா காக்காமாரும் பிள்ளையானை போட்டுத் தாக்கினம்.

இஸ்லாத்தில் தற்கொலையே இல்லையாமே, அத்தாவுல்லா சொல்லாறு!!

சகரான் கோஸ்டிகள் சொர்கத்திலோ???

றிசாத், ஹிஸ்புல்லா , அதாஉல்லா எல்லோருக்குமே இவர்களது நடவடிக்கைகளை அறிந்திருந்தார்கள். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளில் இவர்களுக்கும்  பங்கு உள்ளது. அரசியல் காரணங்களுக்காக இவர்கள்சுதந்தரமாக திரிகிறார்கள். அண்மையில் பட்டிகளோ காம்பஸ் ஹிஸ்புல்லாவிடம் கொடுக்கப்பட்ட்தும் வருகிற ஜனாதிபதி தேர்தலுக்காகவே. 


இவர்களது குரானில் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் , காபிர்களையும் (ஏனைய மதத்தை சேர்ந்தவர்கள்) கொலை செய்யும்படி எழுதி இருக்கிறது. ஸஹ்ரான் தனது இறுதி வீடியோவில் கூறி இருப்பது இதைத்தான். எனவே அதாஉல்லா என்னதான் கூறினாலும் இதுதான் உண்மை.

இப்படி செய்தால் சொர்க்கத்தில் கன்னி பெண்கள் கிடைப்பதும் அதில் எழுதப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் முஹம்மது எழுதி வைத்து இவர்களை கொலை காரர்களாக மாற்றி இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவெறி, அடாவடி இவற்றை தூண்டும் செயற்பாடுகளை மதம் என்று கூறிக்கொண்டு திரிவோர், பின்பற்றுவோர் அதை வைத்து மக்களை ஏமாற்றி, வதைத்து வயிறு வளர்ப்போரே! 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Nathamuni said:

எல்லாம் சரிதான்.

செல்லும், செல்லாததுக்கு செட்டியார் என்பது போல....

அதாவுல்லா, ரிசாத்.... எல்லா காக்காமாரும் பிள்ளையானை போட்டுத் தாக்கினம்.

இஸ்லாத்தில் தற்கொலையே இல்லையாமே, அத்தாவுல்லா சொல்லாறு!!

சகரான் கோஸ்டிகள் சொர்கத்திலோ???

 

5 hours ago, Cruso said:

இவர்களது குரானில் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் , காபிர்களையும் (ஏனைய மதத்தை சேர்ந்தவர்கள்) கொலை செய்யும்படி எழுதி இருக்கிறது. ஸஹ்ரான் தனது இறுதி வீடியோவில் கூறி இருப்பது இதைத்தான். எனவே அதாஉல்லா என்னதான் கூறினாலும் இதுதான் உண்மை.

இப்படி செய்தால் சொர்க்கத்தில் கன்னி பெண்கள் கிடைப்பதும் அதில் எழுதப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் முஹம்மது எழுதி வைத்து இவர்களை கொலை காரர்களாக மாற்றி இருக்கிறார்கள்.

நாதமுனியின் சரியான கேள்விகள் குருஸ்சோவின் உண்மையான பதில்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.