Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை எதிர்கொள்கின்றனர் - துருக்கியின் 123 கல்விமான்கள் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

27 SEP, 2023 | 12:11 PM
image
 

நகர்னோ கரபாக்கில்  ஆர்மேனிய இனத்தவர்கள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பை எதிர்கொள்கின்றனர் என துருக்கியின் 123 கல்விமான்கள் எச்சரித்துள்ளனர்.

சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக இருப்பதற்கு பதில் புதிய மனித துயரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நகர்னோ கரபாக்கை 9 மாதங்களாக   தன்னுடைய முற்றுகையின் கீழ் வைத்திருந்த அஜர்பைஜான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடர் இடம்பெறும் காலப்பகுதியில் அந்த பகுதி மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டது என கல்விமான்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

முழு உலகமும் என்ன நடக்கின்றது என்பதை மௌனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க  துருக்கி மற்றும் இஸ்ரேலின் வெளிப்படையான ஆதரவுடனேயே அஜர்பைஜான் இந்த தாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள துருக்கியின் கல்விமான்கள் இனச்சுத்திகரிப்பு இனப்படுகொலைக்கான வாய்ப்புகள் உள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்தது உண்மையாகின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நகர்னோகரபாக் மீதான முற்றுகையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் விடுத்த வேண்டுகோளை அஜர்பைஜான் புறக்கணித்துள்ளது என தெரிவித்துள்ள துருக்கி கல்விமான்கள் மோதல்களை நிறுத்துமாறு விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அஜர்பைஜான் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

அஜர்பைஜான் நகர்னோ கரபாக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டுவர முயல்கின்றது. பல நூறு வருடங்களாக ஆர்மேனியர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ள அவர்கள் அதனை எதிர்த்தால் ஆர்மேனியர்கள் கொல்லப்படும் ஆபத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வாதிகார அஜர்பைஜானின் குறிக்கோள்  ஆர்மேனியர்களின் இருப்பை வலுக்கட்டாயமாக முடிவிற்கு கொண்டுவருவதே எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/165551

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிகாவை நம்பிய குர்தீக்களை அமெரிக்கா கைவிட்டது போல், ஆர்மேனியர்களை ரஸ்யா கைவிட்டுள்ளது.

இவர்களை அண்மையில் அமரிக்காவும் அணைப்பது போல் போய் இப்போ கைவிட்டுள்ளது.

சகல வல்லுறு அரசுகளும் ஒன்றுதான்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், வல்லரசு நாடுகளின் பிடியில் சிக்கி மடியும் மக்கள். முதலாவதாக துருக்கியினால் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்படடார்கள். இது இரண்டாவதான இந படுகொலை அசர்பையானால் செய்யப்படுகின்றது.

அசர்பைஜான் ஈரானுக்கு எதிரான நாடாகையால் அமெரிக்கா அவர்களை ஆதரிக்கிறது. ருசியா இரு நாடுகளதும் நேச நாடு ஆகையால் ஆர்மீனியர்களுக்கு உதவி செய்வதில்லை.

உலக நாடுகள் கோடு போட்டு நாடுகளை பிரித்து கொடுத்ததால் உருவாக்கிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2023 at 08:04, goshan_che said:

அமெரிகாவை நம்பிய குர்தீக்களை அமெரிக்கா கைவிட்டது போல், ஆர்மேனியர்களை ரஸ்யா கைவிட்டுள்ளது.

இவர்களை அண்மையில் அமரிக்காவும் அணைப்பது போல் போய் இப்போ கைவிட்டுள்ளது.

சகல வல்லுறு அரசுகளும் ஒன்றுதான்.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

ஆர்மேனியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையேயான இராஜதந்திர உறவுநிலை அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கிடையேயான உறவுநிலைக்கு ஒப்பானதாக கூறப்படுகிறது.

பொதுவாக தமது சொந்த காலில் நிற்காமல் எந்த ஒரு நாடு வேறு ஒருவரினை நம்பி செல்கிறார்களோ அப்போதோ அவர்களின் தோல்வி உறுதியாகிவிடும்.

அனைத்து நாடுகளாலும் இந்தியாவினை போல இரண்டு சக்திகளுகூடாக தனது நலனை மட்டும் முதன்மைபடுத்தி இராஜதந்திர நகர்வினை மேற்கொள்ளமுடியாது.

ஆர்மேனியா சிறிது காலமாக தனது இராஜதந்திர ரீதியிலான நகர்வினை மேற்கு நோக்கி திருப்பி இரஸ்சியாவிற்கு நெருக்கடி கொடுத்தது (அதற்கான நம்பிக்கையினை அமெரிக்கா ஏற்படுத்தியிருந்தாலும்).

அமெரிக்கா நினைத்தது போலவே இரஸ்சியா நடந்து கொண்டது, இரஸ்சியாவின் இராஜதந்திர தோல்வி(ஆர்மேனியாவினை கைவிட்டது).

தற்போது ஆர்மேனியாவின் நிலை அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்மேனியா 1992 இல் இருந்தே நேட்டோவோடு தொடர்பிலிருக்கிறது, இது ஒன்றும் புதிதான போக்கு அல்ல. 1997 முதல் ஒரு நேட்டோ சுற்றயல் அமைப்பான Euro-Atlantic Partnership Council என்ற அமைப்பிலும் இருக்கிறது. இதற்குக் காரணம், நேட்டோவில் இணையும் நோக்கமல்ல (துருக்கி அதை அனுமதிக்காது😎!). முதல் உலகப் போர் காலத்தில் துருக்கியர்களால் ஆர்மேனியர்கள் ஒரு மில்லியன் பேர் வரை கொல்லப் பட்டமையை மேற்கு இனப்படுகொலை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக இந்த மேற்கு உறவு பயன்பட்டது. பல தசாப்த முயற்சிக்குப் பின்னர், 2019 இல், அமெரிக்க செனட், ஆர்மேனிய இனப்படுகொலை நிகழ்ந்ததாக ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. 

நேட்டோ, கரபாக் பிரச்சினையில் தலை போடவில்லை, ஏனெனில் ரஷ்ய படைகளின் பிரசன்னம் கரபாக் எல்லையில் இருந்திருக்கிறது, அமைதி காக்கும் படையாக. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

ஆர்மேனியாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையேயான இராஜதந்திர உறவுநிலை அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கிடையேயான உறவுநிலைக்கு ஒப்பானதாக கூறப்படுகிறது.

பொதுவாக தமது சொந்த காலில் நிற்காமல் எந்த ஒரு நாடு வேறு ஒருவரினை நம்பி செல்கிறார்களோ அப்போதோ அவர்களின் தோல்வி உறுதியாகிவிடும்.

அனைத்து நாடுகளாலும் இந்தியாவினை போல இரண்டு சக்திகளுகூடாக தனது நலனை மட்டும் முதன்மைபடுத்தி இராஜதந்திர நகர்வினை மேற்கொள்ளமுடியாது.

ஆர்மேனியா சிறிது காலமாக தனது இராஜதந்திர ரீதியிலான நகர்வினை மேற்கு நோக்கி திருப்பி இரஸ்சியாவிற்கு நெருக்கடி கொடுத்தது (அதற்கான நம்பிக்கையினை அமெரிக்கா ஏற்படுத்தியிருந்தாலும்).

அமெரிக்கா நினைத்தது போலவே இரஸ்சியா நடந்து கொண்டது, இரஸ்சியாவின் இராஜதந்திர தோல்வி(ஆர்மேனியாவினை கைவிட்டது).

தற்போது ஆர்மேனியாவின் நிலை அரசனை நம்பி புருசனை கைவிட்ட நிலைதான்.

கரபாக் பிரச்சனை இப்போ தோன்றியதல்ல. பல காலமாகவே அசர்பைஜானை அதன் போஷகரான துருக்கியை பகைக்க விரும்பாத இரஸ்யா, தனது நலனுக்காக அர்மேனியாவின் நலன்களை பலியிட்டே வந்தது.

இது கிட்டதட்ட ஈழ தமிழர் விடயத்தில் இந்தியா நடக்கும் முறை போன்றது.

இப்போ நாம் சீனாவோடு எமது எம்பிகள் பேச வேண்டும் என நினைப்பதை போலத்தான் - ஆர்மேனியா கொஞ்சம் மேற்குடனும் உறவை வலுப்படுத்த தொடங்கியது. ஆனாலும் இப்போதும் “ரஸ்யாவின் நேட்டோ” என கூறத்தக்க CSTO வில் ஒரு உறுப்பு நாடுதான்.  ஆனால் ராஸ்யா ஒரு உதவியும் செய்யவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.