Jump to content

குரங்குப்பிள்ளையார் சேட்டை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SRI LANKA – CHINA Sri Lanka blocks the export of 100,000 monkeys to China

அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த சீன சுற்றுலாப்பயணி ஒருவரின் பணப்பையை அபயகிரி சேத்தியா அருகே குரங்கு ஒன்று எடுத்துச் சென்ற போது அவருக்கு அதிர்ச்சியான அனுபவம் ஏற்பட்டது. 50,000 ரூபா பணம் மற்றும் அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆவணங்கள் அந்த பையினுள் இருந்தன.

48 வயதான சீன சுற்றுலாப் பயணி யுவான் ஷுவாய் மேலும் இருவருடன் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டார்.

பையை அபயகிரி கோவில் வாசலில் வைத்துவிட்டு சிறிது நேரத்தில் சேத்தியா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பிய போது பையை காணவில்லை.

இது தொடர்பில் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸில் முறைப்பாடு செய்த பின் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்தார்கள். குரங்கு ஒன்று பையை எடுத்துச் சென்று மரத்தில் மேலேறி கடிப்பதைக் கண்டதாக பக்தர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

எனினும், சேத்தவனாராம உத்தியோகபூர்வ குடியிருப்பில் வசிக்கும் ஊழியர் ஒருவர், நேற்று காலை மரத்தடியில் கிடந்த பையை கண்டுபிடித்து, சுற்றுலாப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ் அத்தபத்துவிடம் ஒப்படைத்துள்ளார்.

பையில் ரூ.50,000 ரொக்கம், பாஸ்போர்ட், விமான டிக்கெட், கிரெடிட் கார்டு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சொந்தமான பல ஆவணங்கள் இருந்தன. பை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

புலம்பெயர் தமிழர்கள், அதிகமாக போகும் இடம் என்பதால், கவனமாக இருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கால்குரங்கா

நான்கு கால் குரங்கா

என்பதை கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் குரங்கார் எடுத்துக் கொண்டு போனதினால்தான் அங்கு வசித்த ஊழியரின் நேர்மை வெளிப்பட்டிருக்கு ........இருவருக்கும் பாராட்டுக்கள்......!  😁

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.