Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Cruso said:

இலங்கையே எந்த நாடடையும் மதிப்பதில்லை. அப்போது எவன் இலங்கையை மதிப்பான். 

ம‌ச்சான் நீங்க‌ள் ஒரு காமெடி பீஸ் என்று தெரிந்த‌ விடைய‌ம்😁...............த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் கோமாளியா இருப்ப‌தால் தான் 500க்கு மேல் ப‌ட்ட‌ த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளை சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டை சுட்டு கொன்ற‌து...............முடிந்தால் கேர‌லா மீன‌வ‌னை சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டை சுட‌ட்டும் பாப்போம்.........அப்ப‌டி ந‌ட‌ந்தால் அத‌ற்க்கு பிற‌க்கு தான் இருக்கு உண்மையான‌ கைச்சேரி.............

இல‌ங்கை ஒரு சுன்ட‌க்காய் நாடு...........இந்தியா க‌ழுவி விடாட்டி சிங்க‌ள‌வ‌ன் இப்ப‌வும் ப‌ய‌த்துட‌ன் தான் தூங்க‌ போவான்...............த‌லைவ‌ரின் பெய‌ரை கேட்டாலே துடை ந‌டுங்கும் இதெல்லாம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் உங்க‌ட‌ க‌ண் முன்னே ந‌ட‌ந்த‌து தானே...............உவ‌ள‌வு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ள் இருந்தும் இல‌ங்கை ம‌ற்ற‌ நாடுக‌ளிட‌ம் கையேந்துது என்றால் அந்த‌ நாட்டுக்கு இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு 😁................

கொட்டியாவை அழிச்சா நாடு வ‌ள‌ந்துடும் என்று சொன்னார்க‌ளே 2009க்கு பிற‌க்கு என்ன‌ முன்னேற்ற‌ம் க‌ண்டு இருக்கு ப‌ண‌ வீழ்ச்சி வ‌றுமை கொடுமை எண்ணைக்கு ம‌க்க‌ள் குயுவில் நின்ற‌து................

இல‌ங்கைய‌ நாற‌டிக்க‌ நிறைய‌ இருக்கு இதோட‌ நிப்பாட்டுறேன்😁

ஹமாஸ் என்னை பொறுத்த‌ ம‌ட்டில் அவ‌ர்க‌ள் போராளிக‌ள்............நீங்க‌ள் மேற்க்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் சொல்வ‌தை கேட்டு அவ‌ர்க‌ள் தீவிர‌வாதிக‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்றால் உல‌கில் வாழும் ப‌ல‌ கோடி மக்க‌ள் அத‌ற்கு ஆமாம் போட‌ போவ‌து கிடையாது............எத்த‌னை அர‌வு நாடுக‌ள் ஹ‌மாஸ் தீவிர‌வாத‌ அமைப்பு என்று சொல்லி இருக்கு............எத்த‌னை நாடுக‌ள் ஹ‌மாஸ்சுக்கு ஆத‌ர‌வாய் நிக்குது..............இந்த‌ போரில் இஸ்ரேல் அமெரிக்கா தோத்து விட்ட‌து.............இஸ்ரேலின்ட‌ ஜ‌டோம் ப‌ழைய‌ பொருட்க‌ளுக்கு ஊரில் சொல்லுவின‌மே பேரிச்சம் பழம் அதுக்கு தான் ஜ‌டோம்  லாய்க்கு.............ஜ‌டோம‌ வேண்ட‌ நின்ற‌ நாடுக‌ளை ஹ‌மாஸ் போராளிக‌ள் காப்பாற்றிட்டின‌ம் இல்லையேன் ப‌ல‌ கோடி இதில‌ ச‌ம்பாதிச்சு இருப்பாங்க‌ள் ஹா ஹா...............

  • Replies 1.5k
  • Views 158.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

ம‌ச்சான் நீங்க‌ள் ஒரு காமெடி பீஸ் என்று தெரிந்த‌ விடைய‌ம்😁...............த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் கோமாளியா இருப்ப‌தால் தான் 500க்கு மேல் ப‌ட்ட‌ த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ளை சிங்க‌ள‌ க‌ட‌ல் ப‌டை சுட்டு கொன்ற‌து...............முடிந்தால் கேர‌லா மீன‌வ‌னை சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டை சுட‌ட்டும் பாப்போம்.........அப்ப‌டி ந‌ட‌ந்தால் அத‌ற்க்கு பிற‌க்கு தான் இருக்கு உண்மையான‌ கைச்சேரி.............

இல‌ங்கை ஒரு சுன்ட‌க்காய் நாடு...........இந்தியா க‌ழுவி விடாட்டி சிங்க‌ள‌வ‌ன் இப்ப‌வும் ப‌ய‌த்துட‌ன் தான் தூங்க‌ போவான்...............த‌லைவ‌ரின் பெய‌ரை கேட்டாலே துடை ந‌டுங்கும் இதெல்லாம் க‌ட‌ந்த‌ கால‌த்தில் உங்க‌ட‌ க‌ண் முன்னே ந‌ட‌ந்த‌து தானே...............உவ‌ள‌வு இய‌ற்கை வ‌ள‌ங்க‌ள் இருந்தும் இல‌ங்கை ம‌ற்ற‌ நாடுக‌ளிட‌ம் கையேந்துது என்றால் அந்த‌ நாட்டுக்கு இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு 😁................

கொட்டியாவை அழிச்சா நாடு வ‌ள‌ந்துடும் என்று சொன்னார்க‌ளே 2009க்கு பிற‌க்கு என்ன‌ முன்னேற்ற‌ம் க‌ண்டு இருக்கு ப‌ண‌ வீழ்ச்சி வ‌றுமை கொடுமை எண்ணைக்கு ம‌க்க‌ள் குயுவில் நின்ற‌து................

இல‌ங்கைய‌ நாற‌டிக்க‌ நிறைய‌ இருக்கு இதோட‌ நிப்பாட்டுறேன்😁

ஹமாஸ் என்னை பொறுத்த‌ ம‌ட்டில் அவ‌ர்க‌ள் போராளிக‌ள்............நீங்க‌ள் மேற்க்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் சொல்வ‌தை கேட்டு அவ‌ர்க‌ள் தீவிர‌வாதிக‌ள் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்றால் உல‌கில் வாழும் ப‌ல‌ கோடி மக்க‌ள் அத‌ற்கு ஆமாம் போட‌ போவ‌து கிடையாது............எத்த‌னை அர‌வு நாடுக‌ள் ஹ‌மாஸ் தீவிர‌வாத‌ அமைப்பு என்று சொல்லி இருக்கு............எத்த‌னை நாடுக‌ள் ஹ‌மாஸ்சுக்கு ஆத‌ர‌வாய் நிக்குது..............இந்த‌ போரில் இஸ்ரேல் அமெரிக்கா தோத்து விட்ட‌து.............இஸ்ரேலின்ட‌ ஜ‌டோம் ப‌ழைய‌ பொருட்க‌ளுக்கு ஊரில் சொல்லுவின‌மே பேரிச்சம் பழம் அதுக்கு தான் ஜ‌டோம்  லாய்க்கு.............ஜ‌டோம‌ வேண்ட‌ நின்ற‌ நாடுக‌ளை ஹ‌மாஸ் போராளிக‌ள் காப்பாற்றிட்டின‌ம் இல்லையேன் ப‌ல‌ கோடி இதில‌ ச‌ம்பாதிச்சு இருப்பாங்க‌ள் ஹா ஹா...............

காமெடி என்பதட்கே இப்போதுஅர்த்தம் இல்லாமல் போயிட்டுது. நல்ல கவுண்டன் , செந்தில், வடிவேலு படம் பார்க்கும் கூடடம்போல இருக்குது.   

அதுசரி, இங்கே என்னதான் கிழித்து எழுதினாலும் சரி ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை. நான் அப்படி எழுதும்போது உங்கள் ரத்தம் கொதிக்கலாம். அதட்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. இப்போதைக்கு இவர்கள் அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதிகளே. மற்றைய பயங்கரவாதிகள் அதன் நடவடிக்கைகளை பொறுத்து இஸ்ரேல் பார்த்துக்கொள்ளும். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Cruso said:

உங்க‌ட‌ க‌ள்ள‌ பார்வையில் தான் ஹ‌மாஸ் ப‌ய‌ங்க‌ர‌வாதி...........ப‌ல‌ரின் பார்வையில் அவ‌ர்க‌ள் போராளிக‌ள்.............நீங்க‌ள் இருக்க‌ த‌க்க‌ ஏன் காமெடி ப‌ட‌ம் பார்க்க‌னும்
2005க‌ளுட‌ன் த‌மிழ் திரைப் ப‌ட‌ம் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் ஹா ஹா😁......... 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

அப்படி எல்லாம் நிறுத்தக்கூடாது ராஜா. தொடர்ந்து அந்த படங்களுடன் உலக தமிழின தலைவர் சீமானின் படத்தையும் பாருங்கள்.

அது சரி நீங்கள் முஸ்லிமா? முஸ்லிம்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை முஸ்லீம் என்ற கோணத்தில் ஆதரிக்கிறார்கள். இவ்வளவு தீவிரமாக முஸ்லீம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள்??????

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Cruso said:

நீங்க‌ள் எவ‌ள‌வு கூமுட்டை என்று இப்ப‌ என்னால் புரிந்து கொள்ள‌ முடியுது ம‌ச்சான் ஹா ஹா
என் ம‌த‌ம் சைவ‌ம‌த‌ம்..........என‌து க‌ட‌வுள் முருக‌ன்..........அவ‌தார் ப‌ட‌த்தை பார்த்தும் என் ம‌த‌ம் என்ன‌ என்று கேட்டிங்க‌ள் உண்மையில் நீங்க‌ள் சிற‌ந்த‌ ந‌கைச்சுவையாள‌ர் 😁ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் எவ‌ள‌வு கூமுட்டை என்று இப்ப‌ என்னால் புரிந்து கொள்ள‌ முடியுது ம‌ச்சான் ஹா ஹா
என் ம‌த‌ம் சைவ‌ம‌த‌ம்..........என‌து க‌ட‌வுள் முருக‌ன்..........அவ‌தார் ப‌ட‌த்தை பார்த்தும் என் ம‌த‌ம் என்ன‌ என்று கேட்டிங்க‌ள் உண்மையில் நீங்க‌ள் சிற‌ந்த‌ ந‌கைச்சுவையாள‌ர் 😁ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அப்ப இந்து மதம் இல்லையா? நான் முதலில் நினைத்தேன் நீங்கள் இஸ்லாமியர் என்று. மன்னிக்கவும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் படுகொலைகளை பார்த்தேன் - வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களை பார்த்தேன் - பிரிட்டன் மருத்துவர்

Published By: RAJEEBAN     28 NOV, 2023 | 03:02 PM

image

காசாவில் 43 நாட்கள் தாக்குதல்கள் இடம்பெற்றவேளை படுகொலைகளை பார்த்ததாக பிரிட்டனை சேர்ந்த சத்திரசிகிச்சசை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் சுகாதார கட்டமைப்பை அழிப்பதே இஸ்ரேலின் யுத்தத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அல் அஹ்லி அராப் அல்சிபா மருத்துவமனைகளில் பயங்கரமான சம்பவங்களை பார்த்ததாக தெரிவித்துள்ள அவர் வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

gaza_ceme104.jpg

இந்த படுகொலைகள் இடம்பெறுவதை நான் பார்த்திருக்கின்றேன். வாழத்தகுதியற்ற காசாவை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகயிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் மருத்துவகட்டமைப்பு காணப்படும் நவீன வாழ்க்கையின் அனைத்து கூறுகளையும் அழிப்பதே இஸ்ரேலின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆறு வாரங்கள் காசாவின் மருத்துவமனைகளிற்கு இடையில் மாறிமாறி சென்று கொண்டிருந்த வேளை காயமடைந்தவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது புலனாகியது என அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களின் பின்னர் நாங்கள் பொஸ்பரஸ் காயங்களை பார்த்தோம் என செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள அபுசிட்டா 2009 இல் காசா பள்ளத்தாக்கில் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட  காயங்களிற்கு சிகிச்சை வழங்கியுள்ளேன். இம்முறை நான் பார்த்த காயங்கள் வெள்ளை பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களை ஒத்தவையாக காணப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/170460

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27/11/2023 at 02:50, Cruso said:

அப்ப இந்து மதம் இல்லையா? நான் முதலில் நினைத்தேன் நீங்கள் இஸ்லாமியர் என்று. மன்னிக்கவும். 

ஈழத்தவர்கள் சைவ சமயத்தினர். இந்துசமயம் எனும் போர்வையை போர்த்தி விட்டுள்ளார்கள்.அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அவர் வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதனை செய்பவர்களுக்கு என்ன பெயர்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

ஈழத்தவர்கள் சைவ சமயத்தினர். இந்துசமயம் எனும் போர்வையை போர்த்தி விட்டுள்ளார்கள்.அவ்வளவுதான்.

சைவத்துக்கும், இந்து மதத்துக்கும் முக்கியமான பெரிய வித்தியாசத்தை காண்பிக்க முடியுமா? 

கிறிஸ்தவ  மாதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் பரிசுத்த வேதாகமம் ஒன்றுதான். அதை சிலர் தங்களுக்கு ஏற்றவிதமாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

இதனை செய்பவர்களுக்கு என்ன பெயர்?

அப்படி பொஸ்பரஸ் பயன்படுத்தி இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை சும்மா இருந்திருக்குமா? அந்தோனியோ புட்டராஸ் அறிக்கை  விட்டு பாதுகாப்பு சபையை கூட்டி ராணுவ நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பாரா? அரபு இஸ்லாமிய நாடுகள் சும்மா இருந்திருக்குமா? மற்றவர்கள் சொல்லுவதை எல்லாம் உடனே நம்பி விட முடியாது. 

அப்படி உண்மையாகவே பொஸ்பரஸ் பாவித்த சிறிய ஜனாதிபதி அசாத் இன்றும் அரபு நாடுகளின் தலைவராகத்தான் இருக்கிறார். அவர்கள் அப்படி  பயன்படுத்தி இருந்தால் சிரிய அரசை எப்படி அழைக்கிறோமே அதே பெயரில் அவர்களையும் அழைக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, Cruso said:

சைவத்துக்கும், இந்து மதத்துக்கும் முக்கியமான பெரிய வித்தியாசத்தை காண்பிக்க முடியுமா? 

கிறிஸ்தவ  மாதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் பரிசுத்த வேதாகமம் ஒன்றுதான். அதை சிலர் தங்களுக்கு ஏற்றவிதமாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். 

சைவத்தில் என் கடவுளுக்கு இடைதரகர்கள் இல்லாமல் நானே தீபாரதனை செய்து வழிபடுவேன். அவரவர்க்கென குல தெய்வங்கள் உண்டு. வழ்பாட்டில்  மாமிச உணவுகளும் உண்டு. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து வாழ்பவர்கள் சைவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Cruso said:

அப்படி பொஸ்பரஸ் பயன்படுத்தி இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை சும்மா இருந்திருக்குமா? அந்தோனியோ புட்டராஸ் அறிக்கை  விட்டு பாதுகாப்பு சபையை கூட்டி ராணுவ நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பாரா? அரபு இஸ்லாமிய நாடுகள் சும்மா இருந்திருக்குமா? மற்றவர்கள் சொல்லுவதை எல்லாம் உடனே நம்பி விட முடியாது. 

அப்படி உண்மையாகவே பொஸ்பரஸ் பாவித்த சிறிய ஜனாதிபதி அசாத் இன்றும் அரபு நாடுகளின் தலைவராகத்தான் இருக்கிறார். அவர்கள் அப்படி  பயன்படுத்தி இருந்தால் சிரிய அரசை எப்படி அழைக்கிறோமே அதே பெயரில் அவர்களையும் அழைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

சைவத்தில் என் கடவுளுக்கு இடைதரகர்கள் இல்லாமல் நானே தீபாரதனை செய்து வழிபடுவேன். அவரவர்க்கென குல தெய்வங்கள் உண்டு. வழ்பாட்டில்  மாமிச உணவுகளும் உண்டு. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து வாழ்பவர்கள் சைவர்கள்.

அதாவது இந்து மதத்தில் இடைத்தரகர்கள் மட்டும்தான் உங்கள் பிரச்சினையா? மற்றப்படி கொள்கைகள், வேதாகமங்கள்  எல்லாம் ஒன்றுதானா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Cruso said:

அதாவது இந்து மதத்தில் இடைத்தரகர்கள் மட்டும்தான் உங்கள் பிரச்சினையா? மற்றப்படி கொள்கைகள், வேதாகமங்கள்  எல்லாம் ஒன்றுதானா? 

இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

இது உண்மையாக இருக்குமாக இருந்தால் சிரிய நாட்டிடை, தலைவரை எப்படி அழைக்கிறோமோ அவ்வண்ணமாக இவர்களையும் அழைக்கலாம். 
அது சரி அது எப்படி அல் ஜெஸிராவுக்கு மட்டும் இப்படியான செய்திகள் கிடைக்குது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் செய்திகள் நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு வீடியோவில் ஒரு பாலஸ்தீனி ஹமாஸ் பயங்கரவாதிகளை திட்டும் காட்சி இருக்கிறது. அப்போது இந்த அவரை வீடியோ எடுத்த அல் ஜஃஷீரா செய்தியாளர் அங்கிருந்து  மெதுவாக நகர்ந்து செல்லுகிறார். இதுதான் அவர்களது ஊடக தர்மம். 

Just now, குமாரசாமி said:

இல்லை.

அப்படி என்றால் நிறைய வித்தியாசங்கள் இருக்குது போல. நன்றி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Cruso said:

அப்படி என்றால் நிறைய வித்தியாசங்கள் இருக்குது போல. நன்றி. 

இயற்கையோடு ஒன்றிப்பிணைந்தது தான் சைவம். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

இது உண்மையாக இருக்குமாக இருந்தால் சிரிய நாட்டிடை, தலைவரை எப்படி அழைக்கிறோமோ அவ்வண்ணமாக இவர்களையும் அழைக்கலாம். 
அது சரி அது எப்படி அல் ஜெஸிராவுக்கு மட்டும் இப்படியான செய்திகள் கிடைக்குது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் செய்திகள் நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு வீடியோவில் ஒரு பாலஸ்தீனி ஹமாஸ் பயங்கரவாதிகளை திட்டும் காட்சி இருக்கிறது. அப்போது இந்த அவரை வீடியோ எடுத்த அல் ஜஃஷீரா செய்தியாளர் அங்கிருந்து  மெதுவாக நகர்ந்து செல்லுகிறார். இதுதான் அவர்களது ஊடக தர்மம். 

அப்படி என்றால் நிறைய வித்தியாசங்கள் இருக்குது போல. 

அல்ஜசீராவை இஸ்ரேலை விட்டு கலைத்தது என தெரிந்தால் இப்படியான கேள்விகளை கேட் க மாட்டீர்கள்.

இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகள் என்றால் அழுது விடுவீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிடமிருந்து கிடைக்கும் தகவல்களையும் சந்தேகத்துடன் அணுகுங்கள் - அது பெருமளவு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது -அவுஸ்திரேலியாவின் 270 பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள்

Published By: RAJEEBAN   29 NOV, 2023 | 12:02 PM

image

ஹமாஸ் அமைப்பிடமிருந்து வெளிவரும் தகவல்கள் குறித்து வெளிப்படுத்தும் சந்தேகத்தை இஸ்ரேலிடமிருந்து வரும் தகவல்கள் குறித்தும் வெளிப்படுத்தவேண்டும் என 270 பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்

இஸ்ரேலிய காசா மோதல்களை எவ்வாறு பார்க்கவேண்டடும் என்பது குறித்து 270 பத்திரிகையாளர்கள் தங்கள் சகாக்களுக்கும் அவுஸ்திரேலிய ஊடக நிறுவனங்களுக்கும் பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஊடகநிறுவனங்களின் செய்தியாளர்கள் ஹமாஸின் தகவல்கள் குறித்து வெளிப்படுத்தும் அதே அளவு சந்தேக மனப்பான்மையை இஸ்ரேலின் தகவல்கள் குறித்தும் வெளிப்படுத்தவேண்டும் எனவேண்டுகோள் விடுத்துள்ளனர்

gaza_jou1.jpg

ஹமாஸின் தகவல்கள் குறித்து பயன்படுத்தும் சந்தேகத்தை இஸ்ரேலிய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் உறுதிப்படுத்தப்படாத தகவல்களுக்கும் பயன்படுத்துங்கள் என  அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த மோதலில் இஸ்ரேலிய அரசாங்கமும் ஒரு பகுதி  அது பெருமளவு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்பதற்கான அதிகளவு ஆதாரங்கள் வெளியாகின்றன என தெரிவித்துள்ள பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் பிழையான தவறான தகவல்களை பகிர்கின்றது என்பதற்கான பதிவுசெய்யப்பட்ட ஆதாரங்களும் வரலாறுகளும் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் தகவல்களை உண்மையை ஆராயமல் ஒருபோதும் வெளியிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்கள்  ஒருபத்திரிகையாளர்களாக இது எங்களின் அடிப்படை  கடமை எனவும்தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் பேரழிவை ஏற்படுத்தும் குண்டுவீச்சும் காசாவில் ஊடகங்களை தடுத்துள்ளமையும் முன்னொருபோதும் இல்லாத வகையில் பத்திரிகை சுதந்திரத்திற்கும் செய்தி சேகரிப்பதற்கும்  ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என 270 பத்திரிகையாளர்களும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிருபர்கள் ஆசிரியர்கள் புகைப்படப்பிடிப்பாளர்கள் ஏனைய பணியாளர்கள் என்ற அடிப்படையில் எங்கள் சகாக்களும் அவர்களது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்படுவது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர்கள் இஸ்ரேலிய அரசாங்கம் பத்திரிகையாளர்களை  இலக்குவைப்பது ஜெனீவா பிரகடனத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் என்ற அடிப்படையில் அதிகாரமுள்ளவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதும் உண்மையையும் முழு சூழமைவையும் பொதுமக்களிற்கு தெரிவிப்பதும் அரசியல் அச்சுறுத்தல் இன்றி அதனை செய்வதும் எங்கள் கடமை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/170522

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஏராளன் said:

இஸ்ரேலிடமிருந்து கிடைக்கும் தகவல்களையும் சந்தேகத்துடன் அணுகுங்கள் - அது பெருமளவு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது -அவுஸ்திரேலியாவின் 270 பத்திரிகையாளர்கள் கூட்டாக வேண்டுகோள்

இஸ்ரேல் ஒழுங்காக நடந்திருந்தால் ஹமாஸ் இயக்கம் தோன்றியிருக்காது.அதே போல் சிறிலங்கா சிங்கள இனவாத அரசும் ஒழுங்காக இருந்திருந்தால்......?

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Cruso said:

சைவத்துக்கும், இந்து மதத்துக்கும் முக்கியமான பெரிய வித்தியாசத்தை காண்பிக்க முடியுமா? 

இலங்கை தமிழர்கள் இந்துக்கள். குறிப்பிடத்தக்க சிறப்பு அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் உள்ளனர்.

https://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamils

யாழ்களத்திற்கு விசிட் பண்ணும் போது அவர்களில் சைவ மத பிரிவை சேர்ந்த சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அவர்களில் முஸ்லிம் மதத்தை சோந்தவர்களில் சரி பிழை தேவையில்லை மதம் தான்  எல்லாம் என்பவர்கள் ஹ‌மாஸ் ப‌ய‌ங்க‌ர‌வாதிகளை ஆதரிப்பதை காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

அல்ஜசீராவை இஸ்ரேலை விட்டு கலைத்தது என தெரிந்தால் இப்படியான கேள்விகளை கேட் க மாட்டீர்கள்.

இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகள் என்றால் அழுது விடுவீர்களா?

இல்லை. நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட வேண்டும்.

இஸ்ரேல் சந்திக்காத இழப்புகளா? இத்தேட்கெல்லாம் அழலாமா? இஸ்ரேல் நிச்சயம் பயங்கரவாதிகளை அழித்தே தீரும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் காசா யுத்தம் - கழுதைவண்டியில் பயணம் செய்யும் ஒருவர் ஏற்பட்டுள்ள அழிவுகளை காண்பிக்கின்றார்

Published By: RAJEEBAN   30 NOV, 2023 | 12:37 PM

image

abc

இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் காரணமாக எரிபொருள் முற்றாக தீர்ந்துபோயுள்ள நிலையில் பொதுமக்கள் பணயத்திற்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கும் கழுதை வண்டில்களை பயன்படுத்திவருகின்றனர்.

கான் யூனிசில் இடம்பெற்ற குண்டுவீச்சில் தனது வீட்டை இழந்த முகமட் அல் நஜாரின் பிரதான போக்குவரத்து சாதனமாக கழுதை வண்டி மாறியுள்ளது.

குசா என்ற பகுதியில் அவர் தற்போது வசிக்கின்றார், நடமாடுவது கடினம் இதனால் நாங்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

donkey_cart2.jpg

எனது பகுதியான கான் யூனிசிற்கு கழுதை வண்டியில் செல்வதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் எடுக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கழுதை வண்டி மிகவும் மெதுவாக நகர்வதால் காசாவின் யுத்த அழிவுகளை தெளிவாக பார்க்க முடிகின்றது. அழிக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு கழுதை வண்டி செல்கின்றது.

சில கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன, உடைந்த கொன்கிறீட் அல்லது இரும்பு கம்பிகுவியலாக காணப்படுகின்றன - ஆங்காங்கே சிதறுண்டுகிடக்கும் உடைகளும் பொருட்களும் மாத்திரமே அங்கு காணக்கூடிய வண்ணமயமான பொருட்களாக உள்ளன.

விசித்திரமாண கோணங்களில் வளைந்த நெளிந்த இருப்புதுண்டுகள் தகரங்களை காணமுடிகின்றது எங்கும் குப்பைகளும் இடிபாடுகளும் காணப்படுகின்றன.

வீதியில் வாகனங்கள் எவற்றையும் பார்க்க முடியவில்லை, எப்போதாவது ஸ்கூட்டரை காணமுடிகின்றது - துவிச்சக்கரவண்டிகளே  அதிகளவில் காணப்படுகின்றன.

பல பகுதிகளில் வீதிகளில் இருமருங்கிலும் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/170630

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

இல்லை. நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட வேண்டும்.

இஸ்ரேல் சந்திக்காத இழப்புகளா? இத்தேட்கெல்லாம் அழலாமா? இஸ்ரேல் நிச்சயம் பயங்கரவாதிகளை அழித்தே தீரும். 

இம்முறை  நடக்காது. வேணுமானால் வகை தொகையின்றி பலஸ்தீனிய மக்களை கொன்று  குவிக்கலாம்.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்க போனீங்க.. இங்கயும் வாங்க.. எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்

காசா எல்லை பகுதிக்கு வந்து, இஸ்ரேல் செய்திருக்கும் நாச வேலைகளையும் பாருங்கள் என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

“காசா எல்லைக்கு வந்து, காசா மக்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள அழிப்பு நடவடிக்கைகளை கண்கூடாக பார்த்து தெரிந்து கொள்ள அவரை நாங்கள் அழைக்கிறோம். 50 நாட்களுக்குள் பாதுகாப்பில்லா காசா மக்கள் வீடுகளின் மீது 40 ஆயிரம் தொன் வெடிபொருட்களை இஸ்ரேல் கொட்டித்தீர்த்துள்ளது.”

“மேலும் இஸ்ரேல் உடனான உறவை நீடிப்பது குறித்தும், அவர்களுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலனை செய்ய வேண்டும்,” என ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஒசாமா ஹம்டன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இஸ்ரேலுக்கு சென்றிருந்த எலான் மஸ்க், ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் வெறுப்பு பரவுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

https://thinakkural.lk/article/283002

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.