Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரிய தலைநகரில் இஸ்ரேல் பலத்த எறிகணை தாக்குதலை நடாத்தி உள்ளது. இரு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

  • Replies 1.5k
  • Views 159.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர் நிறுத்தம்: ஐ.நா.வில் அமெரிக்கா செயலால் சீனா, சௌதி மட்டுமின்றி நட்பு நாடுகளே அதிருப்தி

இஸ்ரேல் - காஸா போர்

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆடம் டர்பின்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் உடனடி போர்நிறுத்தம் கோரி ஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலகிற்கு தவறான வழிகாட்டுதலை வழங்குவதாகவும், தொடரும் படுகொலைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவது போல் உள்ளதாகவும் கூறியுள்ளது பெய்ஜிங்.

அல்ஜீரியா முன்மொழிந்த இந்த தீர்மானம் தற்போது நடந்துவரும் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்தைகளுக்கு சிக்கலை விளைவிக்கும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இந்நிலையில், ரஃபாவை ஆக்கிரமிக்க கூடாது என்பது போன்ற எச்சரிக்கைகளை உள்ளடக்கிய, தற்காலிக போர்நிறுத்த தீர்மானத்தை அமெரிக்காவும் முன்மொழிந்துள்ளது.

அமெரிக்கா அல்ஜீரியாவின் தீர்மானத்தை நிராகரித்துள்ளதை பல்வேறு நாடுகளும் கண்டித்துள்ளன. இந்த தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த 15 நாடுகளில் 13 நாடுகள் ஆதரித்திருந்தனர். பிரிட்டன் வாக்களிக்கவில்லை.

அமெரிக்காவின் இந்த செயல் குறித்து பேசியுள்ள ஐநாவுக்கான சீன தூதர் ஜாங் ஜுன், “இந்த தீர்மானம் தற்போது நடந்துவரும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் இடையூறு விளைவிக்கும் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளார்.

மேலும் “தற்போதைய கள நிலவரத்தில், உடனடி போர் நிறுத்தத்தை தொடர்ந்து தவிர்த்து வருவது, தொடர் படுகொலைகளுக்கு பச்சைக்கொடி காட்டுவதே அன்றி, வேறேதும் இல்லை” என்கிறார் அவர்.

இஸ்ரேல் - காஸா போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐநா பாதுகாப்பு கவுன்சில்

அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளே கண்டனம்

அதேபோல், “ இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வருகிறது. இது பெரிய போருக்கான அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் எரிந்து கொண்டிருக்கும் போரின் நெருப்பை அணைப்பதன் மூலம் மட்டுமே, அந்த பிராந்தியம் முழுவதும் போரின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க முடியும் ” அவர் தெரிவித்துள்ளார்.

அல்ஜீரியாவின் உயர்மட்ட ஐ.நாவுக்கான ராஜதந்திரியான அமர் பெண்ட்ஜாமா "பாதுகாப்பு கவுன்சில் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் தோல்வியடைந்து விட்டது " என்று தெரிவித்துள்ளார். "உங்கள் மனசாட்சியை சோதித்து பாருங்கள், வரலாறு உங்களுக்கு தீர்ப்பு வழங்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நட்பு நாடுகளும் அதன் செயலை விமர்சனம் செய்துள்ளன. ஐநாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதர் நிக்கோலஸ் டி ரிவியர் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

ஐநாவுக்கான அமெரிக்க தூதரான லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், "ஹமாசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கும் சூழலில் உடனடி போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர இது சரியான நேரமல்ல" என்று கூறினார்.

பிரிட்டனின் ஐநா தூதுவரான பார்பரா உட்வார்ட், “இந்த தீர்மானத்தால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவே, ஆனால் தற்போதைய பேச்சுவார்த்தைகளை அது ஆபத்தில் தள்ளும்” என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சௌதி அரேபியா கருத்து என்ன?

வீட்டோவை அமல்படுத்தும் அமெரிக்காவின் முடிவு குறித்து சௌதி அரேபியா வருத்தம் தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோவை பயன்படுத்தி ரத்து செய்திருப்பதைக் கண்டு நாங்கள் வருந்துகிறோம்.

இன்று பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் தேவை, அதன் மூலம் அதன் பொறுப்புகளை நிறைவேற்றவும், இரட்டைத் தரம் இல்லாமல் உலக அமைதியைப் பேணவும் முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.

'தற்காலிக போர்நிறுத்தத்திற்கு' முறையீடு செய்த தனது சொந்த தீர்மானத்தை கொண்டு வந்த பிறகு அமெரிக்கா இந்த வீட்டோவைச் செய்தது.

 
இஸ்ரேல் - காஸா போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இஸ்ரேல் - காஸா போரில் கொல்லப்பட்டவர்கள்

காஸாவில் என்ன நடக்கிறது?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 240 பேர் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின்படி, இதில் காஸாவில் 29,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது அமெரிக்கா முன்மொழிந்துள்ள வரைவு தீர்மானத்தின்படி, பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், காஸாவுக்கு செல்லும் மனிதநேய உதவிகளை தடையில்லாமல் அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனைகளோடு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தற்காலிக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான ஐ.நா வாக்கெடுப்புகளின் போது "போர் நிறுத்தம்" என்ற வார்த்தையை வெள்ளை மாளிகை தவிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில், "ரஃபா மீதான நடவடிக்கை மேலும் அதிகமான அப்பாவி மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக மாறும். அவர்கள் கூடுதலான எண்ணிக்கையில் பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயரவும் வழிவகுக்கும்" என்று எகிப்தை அர்த்தப்படுத்தி அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்மானத்தின் மீது பாதுகாப்பு கவுன்சில் வாக்கெடுப்பு நடத்துமா அல்லது எப்போது நடத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் செவ்வாய்க் கிழமை பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, “தங்களது இலக்கை அடையும் வரை போர் தொடரும்” என்றும் எந்த அழுத்தத்தாலும் இந்த முடிவை மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

காஸாவின் மக்கள் தொகையில் பாதி பேர் தற்போது ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். எகிப்தின் எல்லை பகுதியில் உள்ள இந்த நகரத்தில் போருக்கு முன் வெறும் 250,000 மக்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இஸ்ரேல் - காஸா போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஃபாவில் இஸ்ரேல் நடவடிக்கையில் இறங்கினால் அது படுகொலைக்கே வழிவகுக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது

ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் என்ன ஆகும்?

இடம்பெயர்ந்துள்ள மக்களில் பலரும் கூடாரங்கள் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் மோசமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுத்தமான தண்ணீர் அல்லது உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.

இந்நிலையில் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது படுகொலைக்கே வழிவகுக்கும் என்று ஐநா சபை எச்சரித்தது. ஆனால், தாங்கள் ஹமாஸ் இயக்கத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்குவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மார்ச் 10ஆம் தேதிக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யவில்லையெனில், ரஃபாவில் தரைவழித் தாக்குதல் தொடங்கப்படும் என்று இஸ்ரேலிய போர் அமைச்சரவை உறுப்பினரான பென்னி காண்ட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cpw77xg5vj1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற யூதப் பெண்ணின் கடிதம்

Danielle-and-Emilia.jpg?resize=696%2C392

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம்

மீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு… நாம் நாளை பிரிந்து விடுவோம் என்று தோன்றுகிறது. ஆனால் என் மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்கு என் இதயத்தின் அடியாளத்திலிருந்து நன்றி கூறுகிறேன்.

”நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள், அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைகளுக்கு அழைத்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, உண்மையிலேயே அன்பானவர்கள் மற்றும் நல்லவர்கள்” என்று அவள் உணர்கிறாள்.

“நன்றி, நன்றி, அவளுடைய பராமரிப்பாளர்களாக நீங்கள் செலவிட்ட பல மணிநேரங்களுக்கு நன்றி. அவளிடம் பொறுமையாக இருந்ததற்கும், இங்குள்ள சூழலில் கிடைத்தற்கரிய இனிப்புகள், பழங்கள் மற்றும் கிடைக்கும் அனைத்தையும் அவள் மீது பொழிந்ததற்கும் நன்றி.

“குழந்தைகள் சிறைபிடிக்கப்படக்கூடாது. ஆனால் , என் மகள் காசாவில் ஒரு ராணியைப் போல் உணர்ந்ததற்கு உங்களுக்கும், வழியில் நாங்கள் சந்தித்த பிற மக்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். பொதுவாக, அவள் தான் உலகின் மையமாக இருந்ததாக உணர்ந்தாள். எங்கள் நீண்ட பயணத்தில் மென்மையையும் அன்பையும் நேசத்தையும் காட்டாத எவரையும், (அடிமட்ட ஊழியர் முதல் தலைமை வரை) அவள் சந்திக்கவில்லை என்று அவள் உணர்கிறாள்.
“வாழ்நாள் முழுவதும் உளவியல் அதிர்ச்சியுடன் வாழ வேண்டிய நிலையில் அவள் இங்கிருந்து வெளியேறவில்லை. இதற்காக நான் என்றென்றும் உங்களுக்கு நன்றியின் கைதியாக இருப்பேன். காசாவில் நீங்கள் சந்தித்த கடினமான சூழ்நிலையிலும், நீங்கள் சந்தித்த கடுமையான இழப்புகளின் போதும், இங்கு எனக்கு வழங்கப்பட்ட உங்கள் பரிவான நடத்தையை நான் நினைவில் கொள்வேன்.

“இந்த உலகில் நாம் உண்மையிலேயே நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

“உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நான் விரும்புகிறேன்… உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் மற்றும் அன்பு. மிக்க நன்றி.

டேனியல் மற்றும் எமிலியா
Danielle and Emilia

https://www.vinavu.com/2023/11/28/jew-women-hostage-letter-to-hamas/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு சர்வதேச நீதிமன்றம் கோரக்கூடாது - அமெரிக்கா

Published By: RAJEEBAN    22 FEB, 2024 | 05:11 PM

image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் தனது படையினரை விலக்கிக்கொள்ளவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்ககூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மோதல்களிற்கு முடிவு காண்பதற்கான எந்த முயற்சியின் போதும் இஸ்ரேலின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மேற்குகரை காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பான எந்த நடவடிக்கையின் போதும் இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளவேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் ரிச்சர்ட் விசேக் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177068

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலியர்கள் மீது மீண்டும் தாக்குதல் - மர்மநபர்களின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இந்த சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் கிழக்கு ஜெருசலேம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் 3 பேர் காரில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Capture-2-10.jpg

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மர்ம நபர்கள் 2 பேரை பதிலடி தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். மற்றொருவரை மடக்கி பிடித்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரும் இஸ்ரேல் மேற்கு கரையையொட்டியுள்ள பாலஸ்தீன நகரமான பெத்லகேம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காசாவில் சண்டை நடந்து வரும் நிலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.

https://thinakkural.lk/article/292963

  • கருத்துக்கள உறவுகள்

 

INTERACTIVE-Israel-war-on-Gaza-US-vetoes

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தால் கட்டப்படும்  பாரிய மதில்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

எகிப்தால் கட்டப்படும்  பாரிய மதில்கள்

காசா எல்லையில் முஸ்லிம் நாடு எகிப்து பெரிய சிமென்ட் சுவரைக் கட்டுகின்றது.

இது தான் பாலஸ்தீனியர்கள் பற்றிய யதார்த்தம். ஏற்கெனவே பாலஸ்தீனர்களுடன் வேலை செய்த அவர்களை பற்றி சரியாக தெரிவித்த  இலங்கை தமிழர்கள்,  யாழ்கள உறவு கொழும்பான் மற்றும் கோஷான் சே  நினைவுக்கு வருகின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதவியை இராஜினாமா செய்தார் பாலஸ்தீன பிரதமர்

26 FEB, 2024 | 02:57 PM
image
 

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன ஜனாதிபதி பாலஸ்தீன அதிகாரசபையில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அமெரிக்கா அழுத்தங்களை கொடுத்துவருகின்ற நிலையில் இந்த இராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/177338

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் 10 கி.மீ. நீளமுள்ள ஹமாஸ் சுரங்கப்பாதை: நெட்வொர்க்கை இஸ்ரேல் இராணுவம் அழித்தது

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயற்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பாரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

1-22.jpg

காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.

காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.

இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/293307

  • கருத்துக்கள உறவுகள்

பாரிசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இஸ்ரேல்  போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாவும் கமாசிடம்  பேச்சுவார்த்தை பற்றிய பிரதி அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது. 40 பணய கைதிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்படுவார்களாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் உணவு பெற முண்டியடித்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 112 பேர் பலி, 760 பேர் காயம்

Published By: SETHU   01 MAR, 2024 | 11:11 AM

image

பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் குறைந்தபட்சம் 112 பேர் உயிரிந்ததுடன் மேலும் 760 பேர் காயமடைந்துள்ளனர். 

காஸா நகரில் நேற்று (29) இச்சம்பவம் இடம்பெற்றது. 

மக்கள் மீது தனது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை இஸ்ரேலிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கருதி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.

38 உணவு லொறிகளை ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்த நிலையில் 'சனநெரிசல்' ஏற்பட்டதகாவும்,  சிலர் லொறிகளினால் மோதப்பட்டு உயிரிழந்தாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

இச்சம்பவத்தை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு நாடுகளும் தொண்டர் அமைப்புகளும் கண்டித்துள்ளன. 

இதேவேளை? மேற்படி சம்பவத்தை  ஐநா பாதுகாப்புப் சபை கண்டிக்க வேண்டும் என ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் வலியுறுத்தியுள்ளார். 

இச்சம்பவத்தை கண்டிப்பதற்கான பிரேரணையொன்றை ஐநா பாதுகாப்புச் சபைகயிடம் அல்ஜீரியா முன்வைத்தது, எனினும், அமெரிக்கா அப்பிரேரணையை வீட்டோ செய்தது.

'இது குறிதது ஐநாவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர்  ரொபர்ட் வூட் கூறுகையில், இச்சம்பவம் குறித்த அனைத்து தகவல்களும் எம்மிடம் இல்லை. மக்கள் எப்படி இறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது' என்றார்.

https://www.virakesari.lk/article/177651

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவுக்குள் நுழைந்த உணவு வாகனங்களை சூழ்ந்த மக்கள் : துப்பாக்கி பிரயோகம் செய்த இஸ்ரேலிய படையினர் - தப்பியோட முயன்ற வாகனங்களில் மோதுண்டு உயிரிழந்த பலர் - சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிப்பு

Published By: RAJEEBAN   01 MAR, 2024 | 12:40 PM

image

ஹமாஸ் இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இடம்பெற்ற சம்பவங்களில் மிக மோசமான சம்பவம் என குறிப்பிடத்தக்க சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

காசாவில் உணவை பெறுவதற்காக பெருமளவில் திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

gaza_food_trage.jpg

உணவுவாகனங்களை நோக்கி பெருமளவில் திரண்ட பசியின் பிடியில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 117 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முற்றுகைக்குள்ளாகியுள்ள காசா பள்ளத்தாக்கில்  பசியும் பட்டினியும் பெருமளவில் காணப்படும் ஒரு சூழ்நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கு உணவுப்பொருட்களுடன் வாகனங்கள் வருவது குறைவு என்பதால் அவ்வாறான வாகனங்களை பார்த்தவுடன் பட்டினியில் சிக்குண்டுள்ள மக்கள் பதற்றம் ஏற்படுவது வழமை.

எனினும் என்ன நடந்தது என்பது குறித்து இஸ்ரேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்த விடயங்களில் முரண்பாடுகள் உள்ளன.

என்ன நடந்தது?

காசாவின் மேற்குபகுதியில் உள்ள ஹரூன் அல் ரசீட் வீதியில் பெரும் குழப்பங்களிற்கு மத்தியில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வியாழக்கிழமை காலை 18 உணவு வாகனங்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளன. கட்டார், சவுதிஅரேபியா உட்பட பல நாடுகள் அனுப்பிய உணவு வாகனங்களை சுற்றி சுற்றி பசியுடன் காணப்பட்ட பாலஸ்தீனியர்கள் குவிந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

புதிதாக வந்த உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை சுற்றி பொதுமக்கள் குவியத் தொடங்கியதும் இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர் என  நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உதவிப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து தப்பிவெளியேற முயன்றவேளை அவற்றினால் மோதுண்டு பலர் உயிரிழந்தனர் காயமடைந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடிபாடுகள் காரணமாக அம்புலன்ஸ்களால் உடனடியாக அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்பமுயன்ற உணவு வாகனங்கள் மோதியதால் பலர் உயிரிழந்துள்ளனர் என காசா பத்திரிகையாளர் காடெர் அல் ஜனுன் தெரிவித்துள்ளார்.

உணவை பெறுவதற்காக பெருமளவு மக்கள் காத்திருந்தனர் இஸ்ரேலிய படையினர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதும் ஏற்பட்ட குழப்பத்தினால் வாகனங்களால் பொதுமக்கள் மோதப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

gaza_food_tragedy1.jpg

இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட குழப்பத்தினால் தப்பிச்செல்ல முயன்ற வாகனங்களால் மோதுண்டு பொதுமக்கள் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தெரிவித்திருப்பது என்ன?

பாலஸ்தீனியர்கள் உணவு வாகனங்களை கொள்ளையடிக்க முயன்றவேளை தனது படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிகாலையில் காசாவிற்குள் மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் நுழைந்ததும் பொதுமக்கள் அந்த வாகனங்களை சூழ்ந்துகொண்ட பொருட்களை கொள்ளையடிக்க தொடங்கினர், இதன் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் காயமடைந்தனர் என இஸ்ரேல் முதலில் தெரிவித்தது.

பின்னர் உணவுவாகனங்கள் தொடர்பில் இரண்டு சம்பவங்கள் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முதலில் காசாவிற்குள் உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் நுழைந்ததும் மக்கள் அவற்றை நோக்கி பெருமளவில் ஓடினார்கள். அதன்போது அவற்றினால் மோதுண்டு பலர் இறந்தனர். இதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரை நோக்கி சென்றவேளை இஸ்ரேலிய படையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் அந்த டிரக்குகள் வடபகுதியை நோக்கி சென்றன அங்கு தள்ளுமுள்ளு இடம்பெற்றது அதன் பின்னர் படையினருக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்றன எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/177657

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் காசா - உணவு வாகனத் தொடரணி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் - ஐ.நா. தகவல்

Published By: RAJEEBAN   02 MAR, 2024 | 12:29 PM

image

காசாவில் உணவுவாகனத்தை சூழ்ந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை காயமடைந்த பலரின் உடல்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.

காசாவின் அல்ஸிபா மருத்துவமனைக்கு சென்றுள்ள ஐநா அதிகாரிகள் இந்த சம்பவத்தினால் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவரும் 200க்கும் அதிகமானவர்களை பார்வையிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் துப்பாக்கி பிரயோகம் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டன என ஹமாஸ்  குற்றம்சாட்டியுள்ளது. உணவு வாகனங்கள் மோதியதால் இழப்புகள் ஏற்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உலகதலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வியாழக்கிழமை காலையில் இஸ்ரேலின் பாதுகாப்புடன் நுழைந்த உணவுவாகனத்தொடரணியை ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்துகொண்டதை தொடர்ந்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

துப்பாக்கிபிரயோக சத்தங்கள் கேட்பதையும் மக்கள் பதறி ஓடுவதையும் லொறிகள் பின்னால் மறைந்துகொள்வதையும்  காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

112 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 760 பேர் காயமடைந்துள்ளனர் என ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பதற்றமடைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகவே உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வாகனத்தொடரணியை சூழ்ந்துகொண்டதை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து அவர்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய அதிகாரியொருவர்  தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை பாலஸ்தீனியர்கள் தரப்பிலிருந்தே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என  இஸ்ரேலிய பிரதமரின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்றைய தினமே ஐநாவின் பிரதிநிதிகள் அல்சிபா மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டனர். அன்றைய சம்பவத்தில் சிக்கிய பலர் துப்பாக்கி காயங்களால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்தனர் என  ஐநா செயலாளர் நாயகத்தின்  பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177733

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் 112 பேர் பலி: பசிக்கு உணவு தேடி வந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடா? உண்மை என்ன?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் புரெளன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மார்ச் 2024, 11:32 GMT
    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகளைச் சுற்றி பாலத்தீனர்கள் திரண்டதால், குறைந்தது 112 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என காஸாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

இந்த விபத்தில் 760 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸா நகரில் வியாழக்கிழமை காலை நடந்த இந்தச் சம்பவத்தில், நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகள் வந்து கொண்டிருந்த போது, நூற்றுக்கணக்கான மக்கள் லாரிகளைச் சுற்றி திரண்டனர். அப்போது அங்கு இஸ்ரேலிய ராணுவமும் இருந்தது.

இந்தச் சம்பவம் எப்படி நடந்தது, நிவாரணப் பொருட்களை சேகரிக்க வந்த மக்கள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இறந்ததற்கு யார் காரணம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

பிபிசி வெரிஃபை(BBC Verify) இந்த சம்பவம் தொடர்பான முக்கிய உண்மைகளை ஆராய்ந்து, இந்த சம்பவம் எங்கு, எப்படி, எப்போது நடந்தது என்பதை அறிய முயன்றது.

இதற்காக பிபிசி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்ட ட்ரோன் காட்சிகளை ஆய்வு செய்து, என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை நமக்குத் தெரிந்ததை அறிய முயன்றது.

காஸாவில் மக்கள் நிலை என்ன?

பட மூலாதாரம்,REUTERS/KOSAY AL NEMER

நூற்றுக்கணக்கானோர் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்தனர்

பிப்ரவரி 28 அன்று உள்ளூர் நேரப்படி இரவு 11:30 மணிக்கு சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவின் படி, காஸாவில் நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்தனர். அந்த மக்கள் பல்வேறு இடங்களில் தீ மூட்டி அவர்களை சுற்றி ஒரு வட்டம் அமைத்து, மனிதாபிமான உதவி கேட்டு வாகனங்களுக்காக காத்திருந்தனர்.

வடக்கு காஸாவில் உள்ள மக்கள் பட்டினி அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, காஸாவின் இந்தப் பகுதியில் உணவு மற்றும் குடிநீரின்றி சுமார் மூன்று லட்சம் மக்கள் உள்ளனர். சமீப நாட்களாக, இப்பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் குறைவாகவே வந்துள்ளன.

காஸா நகரின் தென்மேற்கே அல்-ரஷித் சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருப்பதை அந்த வீடியோவில் காணலாம். அந்தச் சாலை வடக்கே காசா நகரத்திலிருந்து, மத்திய தரைக்கடல் கடற்கரையை ஒட்டி, தெற்கே எகிப்தை நோக்கிச் செல்கிறது.

சமீப காலமாக, காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க இந்தப் பகுதி பயன்படுத்தப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, பிபிசி ஒரு வீடியோவை ஆய்வு செய்தது. அதில் மக்கள் அந்த பகுதியில் நிவாரணப் பொருட்களை சேகரிக்க கூடினர்.

அந்த இடத்தில் இருந்த பத்திரிகையாளர் மஹ்மூத் அவதேயா பிபிசியிடம், "ஏதாவது உணவுப் பொருட்கள் அல்லது ஒரு மூட்டை மாவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு வந்திருந்த ஏராளமானோர் திரண்டிருந்தனர்" என்றார்.

 
உயிரிழந்த மக்கள்; உண்மை என்ன?

பட மூலாதாரம்,INSTAGRAM

நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட வண்டிகள் வந்தன

பிப்ரவரி 29, வியாழன் அன்று, உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில், எகிப்தியப் பகுதியிலிருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனங்கள் இஸ்ரேலிய ராணுவம் அமைத்த சோதனைச் சாவடியைக் கடந்தன. விசாரணைக்குப் பிறகு, அந்த வாகனத் தொகுதி அல்-ரஷித் சாலையில் மேலும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது.

இது நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 30 டிரக்குகளின் தொகுதி என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. வாகனத் தொகுதியில் 18 வாகனங்கள் அல்லது சற்று குறைவாக இருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், அதிகாலை 4:45 மணியளவில் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகளின் தொகுதி நபுல்சி சந்திப்பை நோக்கி நகர்ந்த போது, மக்கள் வாகனங்களைச் சூழ்ந்து கொண்டனர்.

 

கூட்டம் லாரிகளை சூழ்ந்து கொண்டது

கூட்டம் லாரிகளை சூழ்ந்து கொண்டது

பட மூலாதாரம்,IDF

அகச்சிவப்பு(Infrared) ட்ரோன் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்தக் காட்சிகள் முழுமையான வரிசை அல்ல, ஆனால் நான்கு பாகங்கள் திருத்தப்பட்டு அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதில் இரண்டு இடங்களில் நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன. வீடியோவின் முதல் இரண்டு பகுதிகளில், நபுல்சி சந்திப்பின் தெற்குப் பகுதியில் மக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களைச் சுற்றி வளைத்ததைக் காணலாம்.

கான்வாயைச் சுற்றி என்ன நடந்தது?

வீடியோவின் மற்ற இரண்டு பகுதிகளில், படம் ஐநூறு மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கி காட்டப்பட்டுள்ளது.

இதில் நான்கு வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இங்கும் வாகனங்களை சுற்றி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் வாகனங்களைச் சுற்றிச் செல்வதைக் காணலாம். ஆனால் பலர் செயலற்றவர்களாக தரையில் கிடப்பதையும் காணலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டது. இதில், சிவப்பு வட்டத்தில் காணப்படுவது தரையில் படுத்திருப்பவர்கள்.

படத்தில், இஸ்ரேலிய ராணுவ துப்பாக்கிகளும் மக்களுக்கு அருகில் காணப்படுகின்றன.

இந்த சம்பவத்தின் முழுமையான ட்ரோன் காட்சிகளை வழங்குமாறு பிபிசி வெரிஃபை இஸ்ரேலிய இராணுவத்திடம் கோரியுள்ளது.

 

துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகள்

காஸாவில் மக்களின் நிலை என்ன?

பட மூலாதாரம்,AL JAZEERA

அல் ஜசீரா தொலைக்காட்சியின் பிரத்யேக வீடியோ காட்சிகளை பிபிசி ஆய்வு செய்துள்ளது. இது மற்றொரு இடத்திற்கு அருகில் படமாக்கப்பட்டது. இந்த இரண்டாவது இடம் நபுல்சி சந்திப்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தெற்கே நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட டிரக்குகளுக்குப் பின்னால் உள்ளது.

இந்த வீடியோவில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது மற்றும் மக்கள் வாகனங்களின் மேல் ஏறுவதையோ அல்லது பின்னால் ஒளிந்து கொள்வதையோ காணலாம். சிவப்பு நிற ட்ரேசர்களையும் வானத்தில் காணலாம்.

நிவாரணப் பொருட்கள் வந்த பிறகு, இஸ்ரேலிய வாகனங்கள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பத்திரிகையாளர் மஹ்மூத் அவதேயா பிபிசியிடம் தெரிவித்தார்.

"இஸ்ரேலியர்கள் வேண்டுமென்றே மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மக்கள் மாவு ஏற்றப்பட்ட வாகனங்களை அடைய விரும்பினர். அவர்கள் நேரடியாக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், கொல்லப்பட்டவர்கள் அவர்கள் அருகே வருவதைத் தடுத்தனர்." என்று அவர் கூறினார்.

 

அதன் பிறகு என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இது தவிர, தோட்டாக்கள் வீசப்பட்ட பகுதி தொடர்பான மேலும் சில வீடியோ காட்சிகளையும் பிபிசி ஆய்வு செய்துள்ளது. அதில் இறந்த உடல்களை வாகனங்களில் ஏற்றி நபுல்சி சந்திப்பிலிருந்து வடக்கு நோக்கி எடுத்துச் செல்வதைக் காணலாம்.

இது தவிர, ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இடைக்கால மருத்துவமனை மேலாளர் டாக்டர். முகமது சல்ஹா பிபிசியிடம் பேசுகையில், "காயமடைந்த 176 பேர் அல்-அவ்தா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவற்றில் 142 நோயாளிகளின் உடலில் தோட்டாக் காயங்கள் இருந்தன. இது தவிர, சில சந்தர்ப்பங்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிலரின் கை, கால்கள் உடைந்துள்ளன." என்று கூறினார்.

இஸ்ரேல் என்ன சொல்கிறது?

இஸ்ரேல் ராணுவ செய்தித் தாெடர்பாளர் டேனியல் ஹகாரி

பட மூலாதாரம்,IDF

படக்குறிப்பு,

இஸ்ரேல் ராணுவ செய்தித் தாெடர்பாளர் டேனியல் ஹகாரி

வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி 13:06 மணியளவில், இஸ்ரேலிய ராணுவம் அதன் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில், "இன்று காலை, நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகள் வடக்கு காசா பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, காஸா மக்கள் லாரிகளை சுற்றி வளைத்தனர். விநியோகிப்பதற்கான பொருட்களை அவர்கள் சூறையாடினர். இந்த நேரத்தில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் நெரிசல் காரணமாக, "டஜன்கணக்கான காஸா மக்கள் காயமடைந்தனர்." என குறிப்பிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, 15.35 மணிக்கு (பிற்பகல் 3:35) இஸ்ரேல் இராணுவம் சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ராணுவம் முன்பு கூறிய தகவலை மீண்டும் வலியுறுத்தியது.

இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் பீட்டர் லெர்னர் இங்கிலாந்தின் சேனல் 4 செய்தி நிறுவனத்திடம் இது தொடர்பாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வாகனங்கள் அருகே திரண்டதால், கான்வாய் முன்னோக்கி செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

"பாதுகாவலர்களை அழைத்துச் செல்வதற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள், மக்கள் மத்தியில் பீதி இருப்பதைக் கண்டனர். கூட்டத்தை கலைக்க அவர்கள் சில எச்சரிக்கை குண்டுகளை வீசினர்." என்று கூறினார்.

இதற்குப் பிறகு, இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரியின் வீடியோ அறிக்கை ராணுவத்தின் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், பிற்பகல் 22.35 மணிக்கு (இரவு 10.35) வெளியிடப்பட்டது. அதில் அவர், "நூற்றுக்கணக்கானவர்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரங்களாக மாறியது மற்றும் நிலைமை கட்டுப்பாட்டை மீறியது" என்று கூறினார்.

பொதுமக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில், டாங்கி கமாண்டர் பின்வாங்க முடிவு செய்ததாக அவர் கூறினார். "இராணுவம் எச்சரிக்கையுடன் பின்வாங்கத் தொடங்கியது; அவர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை" என்று அவர் கூறினார்.

முன்னதாக, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிறப்பு ஆலோசகர் மார்க் ரெகேவ் சிஎன்என்- க்கு பேட்டி அளித்திருந்தார் .

இஸ்ரேல் எந்த வகையிலும் நேரடியாக ஈடுபடவில்லை என்று அவர் கூறினார்.

மற்ற சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆனால் அவை நிவாரணப் பொருட்களுடன் தொடர்புடையவை அல்ல என்றும் அவர் கூறினார். இருப்பினும், அவர் தனது கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

மார்க் ரெகெவ் கூறுகையில், "டிரக்கை சுற்றி வளைத்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, ஆனால் அவை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களால் சுடப்பட்டன. அது ஹமாஸ் அல்லது வேறு ஏதேனும் குழுவா என்பது எங்களுக்குத் தெரியாது" என்றார்.

 

என்ன சொல்கிறது ஹமாஸ்?

இஸ்ரேலிய ராணுவத்தின் அந்த அறிக்கையை ஹமாஸ் நிராகரித்துள்ளது. பொதுமக்கள் மீது நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தாரில் நடைபெற்று வரும் விவாதங்கள் ஆபத்தாக இருக்கக்கூடும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பதை கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக செவ்வாயன்று, காஸா பகுதியில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவுப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்திருந்தார். இதற்குப் பிறகு, காஸாவில் மனிதாபிமான நிலைமை குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன.

(அலெக்ஸ் முர்ரே, குமார் மல்ஹோத்ரா, மர்லின் தாமஸ் மற்றும் பிபிசி அரபு சேவை நிருபர்களின் கூடுதல் அறிக்கையுடன்)

https://www.bbc.com/tamil/articles/cpd35r3emx9o

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

காயமடைந்த 176 பேர் அல்-அவ்தா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவற்றில் 142 நோயாளிகளின் உடலில் தோட்டாக் காயங்கள் இருந்தன. இது தவிர, சில சந்தர்ப்பங்களில், நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிலரின் கை, கால்கள் உடைந்துள்ளன." என்று கூறினார்.

இஸ்ரேல் ,  பலஸ்தீன மக்கள் சன நெருக்கடியில் கால்களால் மிதிபட்டு இறந்தார்கள் என  கூறுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியின் 30 வது நிமிடங்களில் இருந்து பாருங்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உடனடி யுத்த நிறுத்தம் - அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள்

Published By: RAJEEBAN    04 MAR, 2024 | 01:22 PM

image

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் காரணமாக உருவாகியுள்ள பிராந்திய பதற்றங்களைத் தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் உடனடியுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அன்டனி அல்பெனிசும் அன்வர் இப்ராஹிமும் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து பேசவிரும்பவில்லை, மாறாக பொது உடன்பாடு காணப்படும் உடனடி யுத்த நிறுத்தம் குறித்து பேசவிரும்புகின்றேன் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

gaza_child22.jpg

மெல்பேர்னில் இடம்பெறும் விசேட ஆசியான் மாநாட்டின்போது இருவரும் சந்தித்துக் கொண்டவேளை இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாநாட்டின் இறுதியில் காசா குறித்த அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனினும் மலேசியாவும் ஹமாசும் கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளன.

எனினும் பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

இதேவேளை ஒக்டோர்பர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் காணப்படும் மோசமான மனிதாபிமான நிலை குறித்து  அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்காத அவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

காசாவிற்கான பாதுகாப்பான தடையற்ற தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/177865

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்பியும் காசாவுக்கு உணவு பொட்டலங்களையும் அனுப்புவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும் ஐ நாவில் போர் நிறுத்தத்துக்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய நாடு எது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடங்களின் பின்னர் பாலஸ்தீன பெண் ஒருவர் இரட்டையர்களிற்கு தாயானார் - இஸ்ரேலின் தாக்குதல் அவர்கள் இருவரையும் கொன்றது

Published By: RAJEEBAN   04 MAR, 2024 | 03:51 PM

image

apnews

ரனியா அபு அன்ஜா கர்ப்பம் தரிப்பதற்கு பத்து வருடங்களும் மூன்று ஐவிஎவ் சிகிச்சைகளும் தேவைப்பட்டன  - ஆனால் அவர் ஐந்து நிமிடங்களில் தனது இரண்டு ஐந்துமாத இரட்டையர்களையும் இழந்துவிட்டார்.

கடந்த சனிக்கிழமை ரபாவில் உள்ள அவரது வீட்டை இஸ்ரேல் தாக்கியவேளை அவரது பிள்ளைகள் கணவர் உறவினர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

ஒன்பது பேர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர், என உயிர்தப்பியவர்களும் மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.

இரவு பத்துமணிக்கு தனது மகனிற்கு பால் ஊட்டுவதற்காக கண்விழித்த அவர் அதன் பின்னர் தனது ஒருகையில் மகனும் ஒரு கையில் மகளுமாக உறங்கச்சென்றார். கணவர் அருகில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அதற்கு ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் அந்த வெடிப்புச்சத்தம் இடம்பெற்றது.

gaza_rafa1.jpg

நான் எனது கணவருக்காகவும் குழந்தைகளிற்காகவும் கதறினேன் என அவர் கண்ணீர் விட்டபடி குழந்தைகளின் போர்வைகளை தனது நெஞ்சில்வைத்து ஆட்டியபடி தெரிவித்தார்.

அவர்களின் அப்பா என்னை தனியாக விட்டுவிட்டு இரண்டு பிள்ளைகளுடனும் போய்சேர்ந்துவிட்டார் என அவர் குறிப்பிட்டார்.

காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இஸ்ரேல் பொதுமக்கள் பெருமளவில் வசிக்கும் வீடுகளை தொடர்ச்சியாக தாக்கிவருகின்றது.

ஒக்டோபரில் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட ரபா தற்போது பெரும் அழிவை ஏற்படுத்தும் தரைவழிதாக்குதலின் அடுத்த இலக்காக காணப்படுகின்றது.

இந்த தாக்குதல்கள் முன்னெச்சரிக்கை இன்றி இடம்பெறுகின்றன - வழமையாக நள்ளிரவில். பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதை தவிர்ப்பதாக தெரிவிக்கும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பே இதற்கு காரணம் என குற்றம்சாட்டுகின்றது.

ஹமாஸ் தனது அமைப்பினரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தியுள்ளது சுரங்கப்பாதைகளை பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று ரொக்கட் லோஞ்சர்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்படுகின்றன என்கின்றது இஸ்ரேல்.

எனினும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லும் தனது தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் எதனையும் தெரிவிப்பதில்லை.

இந்த குறிப்பிட்டதாக்குதல் குறித்து எதனையும் தெரிவிக்காத  இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை பின்பற்றுவதாகவும் பொதுமக்கள் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அபுஅன்சாவின் வீட்டில் கொல்லப்பட்ட 14 பேரில் ஆறுபேர் சிறுவர்கள் நான்கு பேர் பெண்கள் என உடல்கள் கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனையின்  இயக்குநர் வைத்தியர் மர்வன் அல் ஹாம்ஸ் தெரிவித்தார்.

தனது கணவர் பிள்ளைகளை இழந்த ரனியா தனது சகேதாரி கர்ப்பிணியான மற்றுமொரு பெண் உட்பட பல உறவினர்களை இழந்தார்.

தாக்குதல் இடம்பெற்றவேளை வீட்டில் 35 பேர் காணப்பட்டனர் என தெரிவித்த பாரூக், அபு அன்சாவின் உறவினர் இவர்களில் சிலர் வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் சிறுவர்கள் ஆயுதக்குழுக்களை சேர்ந்த எவரும் அங்கு இருக்கவில்லை என தெரிவித்தார்.

ரனியாவிற்கும் கணவருக்கும் 29 வயது கடந்த ஒரு தசாப்தகாலமாக அவர்கள் பிள்ளைக்காக பல தடவை தங்களை மருத்துவ கிசிச்சைகளிற்கு உட்படுத்திக்கொண்டனர்.

இரண்டு தடவை தோல்வியடைந்த ஐவிஎவ் சிகிச்சைக்கு பின்னர்  மூன்றாவது ஐவிஎவ் சிகிச்சையின் பின்னர் கடந்த வருட ஆரம்பத்தில் அவர் கர்ப்பம் தரித்தார்.

ஒக்டோபர் 13ம் திகதி இரட்டையர்கள் பிறந்தனர்.

gaza_-rafa.jpg

கூலித்தொழிலாளியான அவரது கணவர் பெண்பிள்ளைக்கு தாயின் பெயரையே வைக்கவேண்டும் என அடம்பிடித்தார்.

https://www.virakesari.lk/article/177888

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர் கெய்ரோவிலிருந்து வெளியேறினர்

Published By: SETHU   07 MAR, 2024 | 05:47 PM

image

போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து கத்தார், எகிப்து ஏற்பாட்டில், எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்கைள் நடைபெற்றுவந்தன. 

இந்நிலையில், ஹமாஸ் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆலோசனைகளுக்காக ஹமாஸ் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். எனினும் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என எகிப்திய அரசாங்க வட்டாரமொன்று தெரிவித்ததாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, உடன்பாடொன்று ஏற்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 

உடன்பாடொன்றை ஏற்படுத்துவதற்கு மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் தடுத்துவிட்டது என ஹமாஸ் பிரதிநிதி சமி அபு ஸுஹ்ரி கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/178192

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா யுத்தத்துக்கு 5 மாதங்கள் பூர்த்தி: நாகரிகத்துக்கு அவமானம் என்கிறது சீனா

Published By: SETHU   07 MAR, 2024 | 12:52 PM

image

காஸாவில் நடைபெறும் யுத்தமானது நாகரிகத்துக்கு ஓர் அவமானம் என சீனா விமர்சித்துள்ளதுடன், உடனடியாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான யுத்தத்துக்கு இன்றுடன் 5 மாதங்கள் பூர்த்தியாகின்றன. 

இந்நிலையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பெய்ஜிங்கில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் காஸா யுத்தம் குறித்து கூறுகையில், இது மனித குலத்துக்கு ஒரு துயரம் என்பதுடன், இன்றைய நாகரிகத்துக்கு அவமானமாகும் எனக் கூறினார்.

சுர்வதேச சமூகம் அவசரமாக செயற்பட்டு காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதுடன், அவசர மனிதாபிமான உதவிகளை உறுதிப்படுத்துவது தார்மீக பொறுப்பாகும் எனவும் அவர் கூறினார். 

கடந்த ஒக்டோபர் முதல் காஸாவில் யுத்த்தினால் 30700 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

காஸாவில் ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெறுகின்றன. போர்நிறுத்த நிபந்தனைகளை தரப்பினரும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மத்தியஸ்தர்கள் திணறுகின்றனர்.

https://www.virakesari.lk/article/178153

  • கருத்துக்கள உறவுகள்+

பாலஸ்தீன முஸ்லிம்கள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆரவரிக்கும் போது. 

 

 

தனக்கு வந்தால் அரத்தம், அடுத்தவனுக்கு  வந்தால் தக்காளி சட்னியோ.... 

முஸ்லிம் முஸ்லிம் தான்!

 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

 

Will Israel be allowed to continue its Gaza starvation strategy? | The Bottom Line

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.