Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா போர் நிறுத்தத் திட்டம் குறித்து ஹமாஸ் பாதக நிலைப்பாடு: தொடர்ந்து பேச்சுவார்த்தை

maheshMay 3, 2024
16-2.jpg

காசாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், போர் முன்மொழிவு தொடர்பில் தமது நிலைப்பாடு பாதகமாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பான (ஹமாஸ்) அமைப்பின் நிலைப்பாடு பாதகமாகவே இருப்பதாகவும் ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் ஒசாமா ஹம்தான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு நேற்று (02) குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தமது அமைப்பின் நோக்கமாக இருந்து வருகிறது என்று ஹமாஸ் மூத்த அதிகாரி சுஹைல் அல் ஹின்தி ஏ.எப்.பி. இடம் குறிப்பிட்டுள்ளார். இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாட்டுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவின் தெற்கு விளிம்பில் உள்ள ரபாவில் 1.5 மில்லியன் பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அந்தப் பகுதியிக்கு தரைப்படையை அனுப்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக குறிப்பிட்டிருந்தார். 

‘உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நாம் ரபாவுக்குள் நுழைந்து ஹமாஸ் படைப்பிரிவுகளை ஒழிப்போம்’ என்று நெதன்யாகு இந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இரகசிய இடம் ஒன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய ஹமாஸ் அதிகாரி ஹின்தி, ‘எல்லாவற்றையும் அழித்து வரும் பலஸ்தீன மக்கள் மீதான இந்தப் பயங்கரப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் அனைத்து பலஸ்தீன போராட்டக் குழுக்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளன.

ஆனால் அது எந்த விலை கொடுத்ததாகவும் இருக்காது’ என்று குறிப்பிட்டார். ‘எந்த சூழ்நிலையிலும் வெள்ளைக் கொடியை உயர்த்தவோ அல்லது இஸ்ரேலிய எதிரியின் நிபந்தனைகளுக்கு சரணடையவோ முடியாது’ என்று அவர் வலியுறுத்தினார்.

காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்கும்படி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கல் ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி வருகிறார்.

40 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பல பலஸ்தீனர்களுக்காக பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்தை மத்தியஸ்தர்கள் ஹமாஸிடம் முன்வைத்துள்ளனர்.

இந்த முன்மொழிவுக்கு விரைவில் பதிலளிப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

‘ஹமாஸ் ஆம் என்று குறிப்பிட்டு இதனைச் செய்ய வேண்டும்’ என்று ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா போர் வெடித்த பின்னர் ஏழாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன் இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், ‘பலஸ்தீன மக்கள் மீது அக்கறை செலுத்தி அவர்கள் படும் வேதனையை உடன் நீக்கும் உண்மையான நோக்கத்தை ஹமாஸ் கொண்டிருந்தால் இந்த உடன்படிக்கையை அவர்கள் ஏற்பார்கள்’ என்றார்.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கெய்ரோவில் இடம்பெற்று வருகிறது.

உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு தேவையான நெகிழ்வுப் போக்கை அனைத்து தரப்புகளும் காண்பிக்க வேண்டும் என்று எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹசாமிஹ் ஷுக்ரி அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்த முயற்சியாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டபனே செஜோர் கெய்ரோ பயணித்த நிலையில் அவரை சந்தித்தபோதே சுக்ரி இதனைத் தெரிவித்தார்.

எனினும் மற்றொரு தற்காலி போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் உடன்படும் என்பதில் சந்தேகம் நீடிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இஸ்ரேல் தமது படை நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதில் ஹமாஸிடம் இருந்து இன்னும் ஓர் இரு நாட்களில் போர் நிறுத்தம் குறித்து பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கட்டார் மத்தியஸ்தர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் முன்மொழிவில் ‘உண்மையான சலுகைகள்’ இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆரம்ப போர் நிறுத்தத்தை தொடர்ந்து ‘நிலையான அமைதி’ மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றம் ஆகியவை உள்ளடங்குகிறது.

எனினும் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஹமாஸ் நிபந்தனை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 28 பேர் பலி

இந்நிலையில் மத்திய காசாவின் பிராதான சந்தியில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் மீது பலஸ்தீன போராட்டக் குழுக்கள் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த புதன் இரவு தொடக்கம் காசாவில் இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் தீவிரமாக இருந்ததாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றையும் இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளன.

மத்திய காசாவின் அல் சஹ்ரா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. அங்கு குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து மூன்று சிதைந்த உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு நகரான கான் யூனிஸில் கா அல் குரைன் பகுதில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்தாக வபா குறிப்பிட்டது.

அதேபோன்று காசா நகரின் தெற்கில் உள்ள அல் செய்தூன் பகுதியின் இஷ்தைவி குடும்பத்திற்கு சொந்தமான குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய குண்டு மழையில் இருவர் கொல்லப்பட்டதோடு காணாமல்போன பலரும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 28 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 51 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,596 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 77,816 பேர் காயமடைந்துள்ளனர்.

 

https://www.thinakaran.lk/2024/05/03/world/58082/காசா-போர்-நிறுத்தத்-திட்/

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலினால் கைதுசெய்யப்பட்ட காசா மருத்துவர் சிறையில் மரணம்

Published By: RAJEEBAN   04 MAY, 2024 | 11:44 AM

image
 

இஸ்ரேலினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் உயிரிழந்துள்ளார் என பாலஸ்தீன சிறைக்கைதிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

gaza_doc2.jpg

இதேவேளை தேசிய பாதுகாப்பு காரணங்களிற்காக ஒவெர் சிறைச்சாலையில்  தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவர்  மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் என இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை உறுதி செய்துள்ளது.

உயிரிழப்பிற்கான காரணங்களை வெளியிடாத இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் பல தடவைகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்சிபா மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவர் பணியாற்றிவந்தார்.

காசாவின் வடபகுதியில் உள்ள அல்அவாட மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலிய படையினர் அவரை கைதுசெய்தனர்.

gaza_doc1.jpg

இந்த மரணச்செய்தி மனித ஆன்மாவினால் தாங்க முடியாதது என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் மர்வன் அபு சாடா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/182649

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவில் அகதிமுகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் 13 பேர் பலி - பல உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட நிலையில்

Published By: RAJEEBAN    14 MAY, 2024 | 04:08 PM

image
 

காசாவின் மத்திய பகுதியில் நுசைரெத் அகதிமுகாமில்  உள்ள வீடொன்றின்  மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

அவர்களின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக அல் அக்சா தியாகிகள் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 100பேருக்கு அடைக்கலம் அளித்திருந்த காஜா குடும்பத்தின் நான்குமாடி வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

கொல்லப்பட்ட சிறுவர்களின் உடல்களை டெய்ர் அல் பலாலில் உள்ள அக்அக்சா தியாகிகள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள சிஎன்என்னின் ஊடகவியலாளர் ஒருவர் குண்டுவீச்சில் சிக்கியவர்களுடன் தான் உரையாடியவேளை நால்வர் தங்கள் குடும்பங்களை சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளன என தெரிவித்தனர் என குறிப்பிட்;டுள்ளார்.

சிறுவர்கள் உட்பட பலர் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருப்பதையும் மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்க முயல்வதையும்  காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/183532

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவின் ரபா, ஜபலியாவில் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: கடும் மோதல்

உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியர் தீ வைப்பு

maheshMay 15, 2024
24-1.jpg

வடக்கு காசாவின் ஜபலியா நகரில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதோடு தெற்கில் ரபா நகரில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

காசாவின் தெற்கு மற்றும் வடக்கில் மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் காசாவெங்கும் நேற்றும் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தியது.

கடந்த திங்கட்கிழமை (13) நள்ளிரவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மத்திய காசாவின் நுஜைரத் அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட கட்டடத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தக் கட்டத்தில் சுமார் 100 பேர் வரை தங்கி இருந்திருப்பதோடு அண்மையில் ரபாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் இங்கே அடைக்கலம் பெற்றிருந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் அவர்களை காப்பற்ற போதுமான உபகரணங்கள் இல்லை என்று மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜபலியா அகதி முகாம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடும் பலத்துடன் தொடர்ந்து படை நடவடிக்கையை முன்னெடுப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் கவச வாகனங்கள் அங்குள்ள வெளியேற்ற பகுதிகள் மற்றும் தற்காலிக முகாம்களை சுற்றிவளைத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகளே தற்காலிக முகாம்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறைந்தது மூன்று வெளியேற்ற மையங்களை இஸ்ரேலிய டாங்கிகள் சுற்றிவளைத்துள்ளன. அங்கு சிக்கி உள்ள மக்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திடம் உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளனர். ஜபலியா நகரில் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டதாக இஸ்ரேல் பல மாதங்களுக்கு முன்னரே குறிப்பிட்ட நிலையிலேயே அங்கு மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கில் உள்ள காசா நகரின் செய்தூன் பகுதியில், புறநகர் பகுதி ஊடாக டாங்கிகள் செல்வதற்கு புதிய பாதையை அமைக்கும் வகையில் அங்குள்ள வீடுகளை புல்டோசர்கள் தகர்த்து வருகின்றன.

75 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் இந்த பரந்து விரிந்துள்ள ஜபலியாவுக்குள் ஆழ ஊடுருவ முயற்சி மேற்கொள்ளும் இஸ்ரேலியப் படை கடும் செல் தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் கிழக்கு ரபாவுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் ஆழ ஊடுருவி வருவதோடு அந்த டாங்கிகள் அல் ஜினைனா, அல் சலாம் மற்றும் அல் பிராசில் பகுதிகளுக்குள் நுழைந்திருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘இந்த டாங்கிகள் இன்று (14) காலை சலாஹுதீன் வீதியின் மேற்காக பிராசில் மற்றும் ஜினைனா பகுதிகளுக்குள் நுழைந்தன’ என்று குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார். ‘அவை வீதிகளில் நிலைகொண்டிருப்பதோடு மோதல்களும் இடம்பெற்று வருகின்றன’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரம் எகிப்துடனான ரபா எல்லை கடவையை கைப்பற்றி மக்களை வெளியேறும் உத்தரவை பிறப்பித்த நிலையில் இதுவரை சுமார் 450,000 பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘மக்கள் தொடர்ந்து சோர்வு, பசி மற்றும் பயத்தை எதிர்கொள்கின்றனர்’ என்று அந்த ஐ.நா நிறுவனம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது. ‘எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை. உடன் போர் நிறுத்தம் ஒன்றே ஒரே நம்பிக்கையாக உள்ளது’ என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

ரபாவில் இஸ்ரேலின் படை நடவடிக்கை போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் கட்டார் மற்றும் எகிப்து மத்தியஸ்தத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

கிழக்கு அல் சலாம் பகுதியில் அல் யாஸின் 105 ஏவுகணையை பயன்படுத்தி இஸ்ரேலிய வாகனம் ஒன்றை தாக்கி அழித்ததாகவும் சிலர் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதாகவும் ஹமாஸ் ஆயுதப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு இஸ்ரேல் தயாராக வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் முழு அளவில் படையெடுப்பு ஒன்றை ஆரம்பிப்பதற்கு ரபா நகர எல்லையில் இஸ்ரேலிய இராணுவம் போதுமான துருப்புகளை குவித்து வைத்திருப்பதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் இருவர் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ரபா மீது படையெடுத்தால் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்திருக்கும் சூழலில் அவ்வாறான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பதில் உறுதியற்ற சூழல் இருப்பதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை ரபா நகருக்கு அருகில் ஐரோப்பிய மருத்துவமனைக்கு பயணித்த ஐ.நா. வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா. பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்தது தொடக்கம் அங்கு சர்வதேச பணியாளர் ஒருவர் கொல்லப்பட்ட முதல் சம்பவமாக இது இருப்பதோடு இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், முழுமையான விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் போர் வலயத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 234 பேர் காயமடைந்ததாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் 35,173 பேர் கொல்லப்பட்டு மேலும் 79,061 பேர் காயமடைந்திருப்பாக அந்த அமைச்சு கூறியது.

காசாவுக்கான உதவிகளை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை ஊடாக ஜோர்தானில் இருந்து காசாவுக்கு செல்லும் மனிதாபிமான உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

‘ஜோர்தானில் இருந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காசா செல்லும் இந்த வாகனத் தொடரணிகள் தாக்கி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது மூர்க்கத்தனமானது’ என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலிவான் சாடியுள்ளார்.

 

https://www.thinakaran.lk/2024/05/15/world/60567/காசாவின்-ரபா-ஜபலியாவில்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையும் இஸ்ரேலிய படையினரின் முற்றுகையில் - பெரும் அவலம்

Published By: RAJEEBAN   20 MAY, 2024 | 11:56 AM

image
 

காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையையும் இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

அல்அவ்டா மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

மருத்துவமனையை நோக்கி எறிகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் இஸ்ரேலிய படையினர் அந்த மருத்துவமனையை சுற்றிவளைத்துள்ளனர் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதன் காரணமாக  பொதுமக்களும் மருத்துவ சுகாதார பணியாளர்களும் மருத்துவமனைக்குள் நுழைவதற்கு வெளியே செல்வதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது.

சனிக்கிழமை ஜபாலியா அகதிமுகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/184023

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு

பிடியாணையை நிராகரித்தார் நெதன்யாகு

May 22, 2024

 

24-3-1.jpg

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நேற்று ஆழ ஊடுருவியதோடு அந்தக் குடியிருப்பு பகுதியை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் துவம்சம் செய்து வருகின்றன.

தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேலின் உக்கிர தாக்குதல் தொடரும் நிலையில் அங்கு மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் வழக்கு மற்றும் தெற்கு முனையில் சம காலத்தில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பது அங்கு புதிதாக ஆயிரக்கணக்கான மக்களின் வெளியேற்றத்திற்கு காரணமாகியுள்ளது. மறுபுறும் எல்லைக் கடவைகள் மூடப்பட்டிருக்கும் சூழலில் உதவிகள் வருவதும் நிறுத்தப்பட்டு பஞ்சம் தீவிரம் அடையும் அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது வெளியேறிய பலஸ்தீனர்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் புல்டோசர்களை பயன்படுத்தி குடியிருப்புகள் மற்றும் அருகில் இருக்கும் சந்தைப் பகுதியின் கடைகளை தரைமட்டமாக்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கு இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கு முன்னரே தமது படை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

இங்குள்ள ஹமாஸ் அமைப்பை ஒழித்ததாக சில மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல் கூறியிருந்த நிலையிலேயே படைகளை அங்கு மீண்டும் அனுப்பியுள்ளது.

ஜபலியா வீதிகள் மற்றும் இடிபாடுகளில் பல டஜன் உடல்கள் சிதறிக்கிடப்பதாக குறிப்பிட்டிருக்கும் காசா சுகாதார நிர்வாகம் மற்றும் சிவில் அவசர சேவை பிரிவு, மீட்புக் குழுக்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியது.

‘இஸ்ரேல் மக்களுக்கு மேலால் முகாமை அழித்து வருதோடு குண்டு வீசுவது நிறுத்தப்படவில்லை. காசாவுக்கு மேலும் உணவுகள் நுழைய உலகம் அழைப்பு விடுக்கிறது. கூடுதல் உணவை அல்ல, உயிர்களையே காப்பற்ற வேண்டும்’ என்று காசா நகருக்கு அருகில் இடம்பெயர்ந்து வந்த ஜபலியா குடியிருப்பாளரான அபூ எல் நாசர், ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஜபலியாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனையை இஸ்ரேலிய டாங்கிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக முற்றுகையில் வைத்திருப்பதாகவும் அருகில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது சூடு நடத்தி வருவதாகவும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். முற்றுகையில் உள்ள மருத்துவமனையில் 170 நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிக்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

ஜபலியா நகரில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். கான் யூனிஸில் உள்ள வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘எல்லா இடங்களிலும் குண்டு வீசுகிறார்கள். மக்கள் அச்சத்தில் வெளியேறி வருகின்றனர்’ என்று கான் யூனிஸைச் சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் தொலைபேசி ஊடாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

மறுபுறம் எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரிலும் இஸ்ரேலிய படை சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்கு காசாவின் ரபாவில் உள்ள யிப்னா அகதி முகாமில் உள்ள மக்கள் குழுவொன்றை இலக்கு வைத்து நேற்று இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படம் ஒன்றை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டது. அதில் சிறுவர்களின் உடல்கள் சிதறி இருப்பது தெரிகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 85 பேர் கொல்லப்பட்டு மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த எட்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,647 ஆக அதிகரித்திருப்பதோடு 79,852 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இனப் படுகொலை குற்றச்சாட்டு தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு சர்வதேச குற்றவில் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருக்கும் நிலையில் அதனை இரு தரப்பினரும் நிராகரித்துள்ளனர்.

இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஹமாஸுக்கு எதிரான போரை அந்த நீதிமன்றத்தால் தடுத்துவிட முடியாது என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலிய இராணுவம் இன அழிப்பில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியத் தலைவர்களுக்கு எதிரான சர்வதேச நீதிமன்ற நடவடிக்கையை ஆதரிப்பதாகக் கூறிய ஹமாஸ், தனது தலைவர்களுக்கு எதிரான வழக்குத்தொடுநர் கானின் குற்றச்சாட்டை நிராகரித்தது. தாக்குதல் நடத்துபவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சர்வதேச நீதிமன்றம் சமமாய் நடத்த முயல்வதாக ஹமாஸ் சாடியது.

இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகர் மீது இஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின்போது மருத்துவர் ஒருவர், ஆசிரியர் ஒருவர் மற்றும் மாணவர் ஒருவர் உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் குடியேற்றவாசிகளின் தாக்குதல்களில் குறைந்தது 512 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

https://www.thinakaran.lk/2024/05/22/world/62323/காசாவில்-இஸ்ரேலின்-தாக்-2/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை பக்கத்தை அழிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதற்கு சிங்களவரோடு சேர்ந்து ஒத்தூதியவர்களில் சிலர் தீவிர பாலஸ்தீன ஆதரவு முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

முற்றாக துடைத்தழிக்க வேண்டும், பாலஸ்தீன பயங்கரவாதிகளை.
 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

அல்ஜெசீராவின் இந்த ஒற்றைப் பதிவில் (Like Sri Lanka once did, Israel has turned ‘safe zones’ into killing fields) எத்தனை இலங்கைச் சோனிகள் தமிழினப் படுகொலை என்பதற்கு எதிராக நிற்கிறார்கள் என்று பாருங்கள்....

சிங்களவருக்கு அப்படி வக்காலத்து வாங்குகிறார்கள் இந்த சோனிகள்.

 

https://www.instagram.com/aljazeeraenglish/p/C8TlPV6N85w/

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் தாக்குதல் காரணமாக அச்சமடைந்து கதறியவர்களை காப்பாற்ற சென்ற பலர் இரண்டாவது தாக்குதலில் பலி - காசாவில் சர்வதேச செஞ்சிலுவை அருகில் இஸ்ரேல் தாக்குதல்

Published By: RAJEEBAN

22 JUN, 2024 | 12:08 PM
image
 

காசாவில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையலுவலகத்திற்கு அருகில் உள்ள கூடார முகாம்மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 25க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு தடவைகள் தாக்குதல் இடம்பெற்றதாக தாக்குதலில் தனது கணவரை இழந்த பெண்ணொருவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.

முதல் தாக்குதலை தொடர்ந்து பாரிய சத்தம் கேட்டது வெளிச்சம் வெளிவந்தது இதனை தொடர்ந்து என்ன நடக்கின்றது என பார்ப்பதற்காக ஏனையவர்கள் சென்றவேளை இரண்டாவது தாக்குதல் இடம்பெற்றது என மொனா அசூர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் முகாம்களிற்குள் இருந்தோம் அவ்வேளை அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகில் உள்ள கூடாரங்கள் மீது சத்த குண்டுதாக்குதலை மேற்கொண்டனர் அவ்வேளையே எனது கணவர் வெளியே சென்றார் என கான்யூனிஸ் மருத்துவமனைக்கு அருகில் வைத்து அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர்கள் இரண்டாவது தாக்குதலை மேற்கொண்டனர் செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலக வாயிலிற்கு அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் தாக்குதல் காரணமாக பதற்றமடைந்த மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த தனது இரண்டு மகன்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என ஹசான் அல் நஜாய் தெரிவித்துள்ளார்.

பெண்களும் குழந்தைகளும் அலறியதை தொடர்ந்து எனது புதல்வர்கள் அவர்களை காப்பாற்ற விரைந்தனர் என அவர் மருத்துவமனையிலிருந்தவாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் பெண் ஒருவரை காப்பாற்ற சென்றனர் அவ்வேளை இரண்டாவது ஏவுகணை தாக்கியது அவர்கள் தியாகினார்கள் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/186689

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காயமடைந்த பாலஸ்தீனியரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிப்போட்டு கொண்டுசென்ற இஸ்ரேலிய படையினர் - வெளியானது அதிர்ச்சி வீடியோ

Published By: RAJEEBAN   23 JUN, 2024 | 10:11 AM

image
 

ஜெனினில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை இஸ்ரேலிய படையினர் தங்கள் முன்பகுதியில் கட்டிப்போட்டவாறு கொண்டு சென்றதை காண்பிக்கும் படம் வெளியாகியுள்ளது.

வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த காட்சியை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது காயமடைந்த சந்தேக நபரையே இவ்வாறு தங்கள் வாகனத்தில் கட்டிப்போட்டு கொண்டு சென்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

நாங்கள் அம்புலன்சை கொண்டுவருமாறு கேட்டவேளை இஸ்ரேலிய படையினர் அவரை ஜீப்பின் பொனட்டின் கட்டுப்போட்டு கொண்டு சென்றனர் என அந்த நபரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த நபரை இஸ்ரேலிய இராணுவத்தினர் சர்வதேச செம்பிறை சங்கத்திடம் கையளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

முஜாகெட் அஜ்மி என்ற ஒருவரையே இஸ்ரேலிய படையினர் இவ்வாறு கொண்டு சென்றனர் அவர் எந்த அமைப்பையும் சேராதவர்  என பொதுமக்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/186741

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீவிரமாகும் காசா போர்.. 38 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்புகள்.. கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலி

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 37,834 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 86,858 படுகாயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த போரினால் அதிகம் பாதிப்புக்குள்ளானது பெண்களும் குழந்தைகளிலுமே ஆவர்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு, போர் நிறுத்த முன்மொழிவு என உலக நாடுகளும் ஐ.நா சபையும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் அது அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது.

அதை உறுதி செய்யும் வகையில் பாலஸ்தீன நகரங்களான காசா மற்றும் ரஃபாவில் உள்ள பொதுமக்களின் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ரஃபாவில் மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மீது இஸ்ரேல் பொழிந்த குண்டுமழையில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மற்றும் காசா நகரத்தின் பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஏற்படுத்தும் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயாராக உள்ள நிலையில் இஸ்ரேல் அதை மறுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/304875

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை நாளாந்தம் சித்திரவதைகள் - விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்

Published By: RAJEEBAN  02 JUL, 2024 | 12:18 PM

image

அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினர் தன்னை பல மாதங்களாக தடுத்து வைத்திருந்தவேளை கடுமையான சித்திரவதைகளிற்குட்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினரால் ஏழு மாத காலம்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முகமட் அபு சல்மியா இஸ்ரேலிய படையினர் தன்னை மிக மோசமாக சித்திரவதை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை முகமட் அபு சல்மியா உட்பட பல பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்த மருத்துவர் எங்களை இஸ்ரேலிய படையினர் நாளாந்தம் சித்திரவதை செய்தனர் என தெரிவித்துள்ளார்.

தடியால் தாக்கினார்கள் நாய்களை கடிக்கவிட்டார்கள் மருந்துகள் உணவுகளை வழங்கமறுத்தார்கள் என தெரிவித்துள்ள மருத்துவர் உளவியல் உடல்ரீதியான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவருடன் விடுதலை செய்யப்பட்ட ஏனைய சிறைக்கைதிகளும் தாங்கள் துஸ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல மருத்து பணியாளர்கள் சித்திரவதைகள் துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் போதிய மருத்துவகிசிச்சைகளை வழங்காததால் சிலரின் அவயங்களை துண்டிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/187468

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இஸ்லாமிய கமாஸ் பயங்கரவாதிகளின் வெறிச்செயல்

 

 

To watch the full video, click here

https://x.com/IDF/status/1809144566362058938

 

 

 

 

Image

 

Edited by நன்னிச் சோழன்
Posted

கான் ஜூனிஸ் பகுதியில் இள்ரேலிய அரச பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 76. நூற்றுக்கணக்கில் காயமடைந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முள்ளிவாய்க்காலில் பயிற்சி எடுத்த இஸ்ரேல் காசாவில் கச்சிதமாகப் பயன்படுத்துது போல. பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அங்கு மக்களைக் கூட வைச்சுக் கொல்கிறது. இது கமாஸூக்கு எதிரான போராகத் தெரியவில்லை. பலஸ்தீன இன அழிப்பு தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.

என்ன பலஸ்தீனர்கள்.. ஈழத்தமிழர் மீதான சிங்கள... இன அழிப்புப் பற்றி..  எந்த அக்கறறையும் கருசணையும் இன்றி.. கொழும்பு வந்து மகிந்தவுக்கு மாலை போட்டுச் சென்றதையும் தாண்டி.... 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் - 71 பாலஸ்தீனியர்கள் பலி

Published By: RAJEEBAN   13 JUL, 2024 | 04:55 PM

image
 

காசாவின் ஹான் யூனிசில் உள்ள அல்மவாசி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 71 கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாசின் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் பாதுகாப்பு வலயம் என அறிவித்த பகுதியிலேயே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

289 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்த தாக்குதல் குறித்து விசாரணைகைளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற பகுதி பூகம்பம் தாக்கிய பகுதி போல காணப்படுவதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/188374

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசா முகாம்கள் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.. ஒரே நாளில் 39 பேர் பலி!

பாலஸ்தீன நகரமான காசாவின் பல்வேறு இடங்களில் நேற்று [ஜூலை 20] இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன. உயிரிழந்தவர்களில் உள்ளூர் பத்திரிகையாளர் முகமது அபு ஜஸீர் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர்.

இதனால் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று இரவு புலம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த குடியிருப்பு பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

அல்- நஸ்ரேத் அகதி முகாமின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக மற்றொரு முகாம் கட்டிடம் மீது மிஷைல் தாக்குதல் நடந்த நிலையில் 2 பத்திரிகையாளர் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் பீரங்கிகள் தற்போது ரஃபாவின் வடக்கு பகுதிகளை நோக்கி முன்னேறி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 38,798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப்பேச்சுவார்தைகள் தோல்விமுகத்தில் உள்ளன. இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்த வாரம் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/306551

  • கருத்துக்கள உறவுகள்
Posted

02-7.jpg?resize=570,375&ssl=1

காசாவில் 39 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை!

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்றைய(22) நிலவரப்படி, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 39,006 போ் உயிரிழந்துள்ளதாகவும். 89,818 போ் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

கான் யூனிஸ் பகுதியில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நேற்று(22) மட்டும் 70 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் இராணுவம் கடந்த ஒக்டோம்பர் 7 ஆம் திகதி முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393242

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசாவில் உயிரிழப்பு 39,000ஐ தாண்டியது: மக்கள் வெளியேற இஸ்ரேல் புது உத்தரவு

காசாவில் தொடர்ந்து மோதல் நீடிக்கும் நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,000ஐ தாண்டியுள்ளது.

தெற்கு நகரான கான் யூனிஸில் நேற்று இடம்பெற்ற சரமாரித் தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. புதிய போர் நடவடிக்கைகளை முன்னேடுக்கும் வகையில் காசாவின் சில பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கான் யூனிஸின் கிழக்காக உள்ள பனீ சுஹைலா சிறு நகரில் இஸ்ரேலிய டாங்கிகள் நடத்திய சரமாரித் தாக்குதல்களில் குறைந்தது 16 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் வானில் இருந்தும் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பலரும் காயமடைந்திருப்பதாக அது கூறியது.

கொல்லப்பட்ட சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிய ட்ரக் வண்டி ஒன்று கான் யூனிஸில் உள்ள அல் நாசர் மருத்துவமனையை அடைந்திருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பலஸ்தீன போராளிகளின் புதிய தாக்குதல்களை அடுத்து பலஸ்தீனர்களை வெளியேறும்படி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதில் கான் யூனிஸின் கிழக்கில் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் இருந்தும் மக்களை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வெளியேற்ற உத்தரவினால் 400,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வெளியேற்ற உத்தரவுக்கான துண்டுப்பிரசுரம் வீசப்பட்ட விரைவிலேயே மக்கள் வெளியேறுவதற்கு அவகாசம் இன்றி இஸ்ரேல் படை நடவடிக்கை ஆரம்பித்ததாக அங்கிருக்கும் அல் ஜசீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் முன்னணி தளபதிகள் உட்பட போராளிகளை இலக்கு வைத்தே இங்கு தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியபோதும் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் தாக்குதல்களை நியாயப்படுத்த இவ்வாறு கூறுவதாகவும் பலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காசா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அடையாளம் இடப்பட்ட ஐ.நா. வாகன தொடரணி மீது இஸ்ரேலியப் படை தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் தலைவர் பிலிப்பே லசரினி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இடம்பெறும் போர் நிறுத்த முயற்சிகளும் போர் தரப்புகள் இடையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஸ்தம்பித்துள்ளது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரதிநிதிகள் குழுவை வியாழக்கிழமை அனுப்புவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியபோதும் அந்தத் குழு எங்கே அனுப்பப்படுகிறது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உரையாற்றுவதற்காக நெதன்யாகு நேற்று (22) வொஷிங்டன் புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/306685

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 30க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN   27 JUL, 2024 | 08:14 PM

image
 

காசாவின் மத்தியில் உள்ள டெய்ர் அல் பலா நகரின் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் சிறுவர்கள் என்பது வெளியாகும் படங்கள் வீடியோக்கள் மூலம் தெரியவருவதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

gaza_school.jpg

கொல்லப்பட்டவர்களில் சிறுவர்கள் காணப்படுவது ஆராயப்பட்ட வீடியோக்கள் மூலம் உறுதியாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலையே தாக்கப்பட்டது என காசாவின் சிவில் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்கள் நோயாளிகள் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அனேகமானவர்கள் சிறுவர்கள் பெண்கள் என தெரிவித்துள்ள ஹமாஸ் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.

குழப்பநிலை நிலவுவதையும்,இடிபாடுகளுடன் காணப்படும் பகுதியில் மக்கள் ஒடிக்கொண்டிருப்பதையும், இரத்தக்காயங்களுடன் இரண்டு பிள்ளைகளை ஆண்கள் தூக்கிவருவதையும்,பெண் ஒருவர் பிள்ளயை கட்டியணைப்பதையும், காயமடைந்த நபர் ஸ்டிரெச்சரில் கொண்டு செல்லப்படுவதையும், துணியால்போர்த்தப்பட்ட உடலையும் உறுதிப்படுத்தக்கூடிய வீடியோக்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/189560

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

இன்று காலை நல்ல செய்தியோடு விடிந்தது... 

பாலஸ்தீன அரக்க தலைவனின் உயிரை இஸ்ரேலிய மறவர்கள் எடுத்தனராம்.....

ஒரே புழகாங்கிதமாகவுள்ளது!!!🤩🤩🤩😘

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல்: இறந்த ராணுவ வீரர்களின் விந்தணுக்கள் சேகரிப்படுவது ஏன்? இறந்த உடலில் விந்தணுக்கள் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

ரீஃப்
படக்குறிப்பு,"ரீஃப் குழந்தைகளை மிகவும் நேசித்தான்" என்கிறார் அவரது தந்தை அவி ஹருஷ் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மைக்கேல் ஷுவல், ஆயிஷா கைரல்லாஹ்
  • பதவி, பிபிசி அரபு
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய தங்களது மகன்களை இழந்த பெற்றோர், இறந்தவர்களின் உடல்களில் இருந்து விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை உறையவைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதல்களைத் தொடர்ந்து இதற்கான நடைமுறையில் சில விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனால் விந்தணுக்களைப் பெற்று அவற்றை உறைய வைக்க தாங்கள் எதிர்கொள்ளும் நீண்ட சட்ட நடைமுறைகளால் கோபமும் விரக்தியும் அடைந்துள்ளதாக இறந்த இஸ்ரேலிய வீரர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

காஸா பகுதியில், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த போரில் தனது 20 வயது மகன் ரீஃப் கொல்லப்பட்டதை அறிந்த தருணத்தை நினைவுகூரும் போது அவி ஹருஷின் குரல் நடுங்குகிறது.

அன்று, அவரது வீட்டு வாசலுக்கு வந்த இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தனர். “ரீஃபின் விந்தணுவை மீட்டெடுக்க இன்னும் அவகாசம் இருக்கிறது, உங்களுக்கு அதில் சம்மதமா?”.

அவி ஹருஷ் உடனடியாக “ஆம்” என்று பதில் அளித்தார்.

விந்தணுக்கள் பிரித்தெடுக்கும் செயல்முறை

அவி ஹருஷ்
படக்குறிப்பு,அந்தக் குழந்தையின் எதிர்காலம்தான் “எனது வாழ்க்கையின் நோக்கம்" என்று அவி ஹருஷ் கூறுகிறார்

“என் மகன் ரீஃப் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான். அவனது இழப்பை ஈடுசெய்யமுடியாது என்ற போதிலும், நாங்கள் இதைச் செய்ய விரும்புகிறோம்." என்று கூறுகிறார் அவி ஹருஷ்.

"ரீஃப் குழந்தைகளை மிகவும் நேசித்தான், குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினான். எனவே நான் இந்த முடிவைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார்.

ரீஃப்க்கு மனைவியோ காதலியோ இல்லை. ஆனால் அவி ஹருஷ் தனது மகனின் கதையைப் பகிர்ந்த பிறகு, அதைக் கேள்விப்பட்ட பல பெண்கள் ஹருஷைத் தொடர்பு கொண்டு, ரீஃபின் குழந்தையைச் சுமக்க முன்வந்தனர்.

இப்போது அந்தக் குழந்தையின் எதிர்காலம்தான் “எனது வாழ்க்கையின் நோக்கம்" என்று அவர் கூறுகிறார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைக்கு பல இஸ்ரேலியக் குடும்பங்கள் விண்ணப்பிக்கின்றன. அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, காஸாவில் ஒரு பெரிய ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது, இதில் 39,000 க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போரில் சுமார் 400 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 7 முதல், கிட்டத்தட்ட 170 இளைஞர்களின் (பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள்) உடல்களில் இருந்து விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் விகிதத்தை விட தோராயமாக 15 மடங்கு அதிகமாகும்.

இந்த விந்தணுக்கள் பிரித்தெடுக்கும் செயல்முறை என்பது, உடலின் விதைப்பையில் இருந்து ஒரு சிறிய திசுவை எடுப்பதாகும். பின்னர் அதிலிருந்து உயிருள்ள விந்தணுக்கள் பிரிக்கப்பட்டு, ஆய்வகத்தில் உறைய வைக்கப்படும்.

இறந்த உடலில் விந்தணுக்கள் 72 மணிநேரம் வரை உயிர்வாழும் என்றாலும் கூட, 24 மணி நேரத்திற்குள் அவற்றை பிரித்தெடுப்பது சிறந்தது.

இந்த நடைமுறைக்காக பெற்றோர்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும் என்ற விதியை கடந்த அக்டோபரில் நீக்கியது இஸ்ரேலிய சுகாதார அமைச்சகம். சமீப காலங்களில், மகன்களை இழந்த பெற்றோருக்கு இந்த நடைமுறையை எளிதாக்குவதில் அதிக முனைப்பு காட்டுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

விந்தணுவை உறைய வைப்பது சுலபமாகிவிட்டது. ஆனால் அதைப் பயன்படுத்த விரும்பும் கணவனை இழந்த மனைவியோ அல்லது பெற்றோரோ, இறந்த போன நபருக்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இந்த செயல்முறை முழுமையடைய பல ஆண்டுகள் ஆகலாம்.

ரேச்சல்
படக்குறிப்பு,ரேச்சல், இறந்துபோன தனது மகனின் குழந்தையைப் பெற்றெடுக்க தாய் தேவை என விளம்பரம் செய்தார்.

'அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தோம்'

ரேச்சல் மற்றும் யாகோவ் கோஹன், தங்களது இறந்த மகனின் விந்தணுவை உறையவைக்க முன்வந்த இஸ்ரேலின் முதல் பெற்றோர் ஆவார்கள். அவர்களின் மகன் கீவன், 2002இல் காஸா பகுதியில், ஒரு பாலத்தீனிய துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்தது.

இவர்களது பேத்தி ஓஷர், கீவனின் உயிரணுக்களில் இருந்து பிறந்தவர். அவருக்கு இப்போது 10 வயதாகிறது.

“ஆனால் நாங்கள் அதிகமான எதிர்ப்பைச் சந்தித்தோம்” என ரேச்சல் கூறுகிறார்.

நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு, நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதன் பிறகு ரேச்சல் தனது மகனின் குழந்தையைப் பெற்றெடுக்க தாய் தேவை என விளம்பரம் செய்தார்.

 
ஐரிட்
படக்குறிப்பு,ஓஷருக்கு (இடதுபுறம் இருப்பவர்), இரு தரப்பிலிருந்தும் தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக ஐரிட் கூறுகிறார்.

ஐரிட், தனது தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பவில்லை. ரேச்சலின் விளம்பரத்திற்கு பதிலளித்த பெண்களில் அவரும் ஒருவர். கீவனின் குழந்தையைத் பெற்றெடுத்தவர்.

ஐரிட் திருமணம் ஆகாதவர். ஒரு உளவியலாளர் மற்றும் ஒரு சமூக சேவகர் உடனான கலந்தாய்வுக்குப் பிறகு, கருவுறுதல் சிகிச்சையைத் தொடங்க நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.

“நாங்கள் கடவுள் போல என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் கூறுகிறார்.

"தனது தந்தை யார் என்பதை அறிந்த குழந்தைக்கும் விந்தணு தானம் மூலம் கருத்தரிக்கும் குழந்தைக்கும் வித்தியாசம் உள்ளது," என்கிறார் ஐரிட்.

தன் தந்தை கீவன் ராணுவத்தில் கொல்லப்பட்டது குறித்து 10 வயதான ஓஷருக்குத் தெரியும். அவருடைய அறை டால்பின் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கீவன் டால்பின்களை நேசித்தார் என்பது எனக்குத் தெரியும் என்று ஓஷர் கூறுகிறார்.

"என் தந்தையின் உயிரணுக்களை பிரித்தெடுத்து, என்னை இந்த உலகிற்கு கொண்டு வர சரியான தாயைத் தேடினர் என்பதும் எனக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார்.

ஓஷருக்கு, இரு தரப்பிலிருந்தும் தாத்தா, பாட்டி, மாமாக்கள் மற்றும் உறவினர்கள் இருப்பதாக ஐரிட் கூறுகிறார்.

அதே சமயத்தில், “அவளை நாங்கள் ‘உயிருள்ள நினைவுச்சின்னமாகக் கருதி வளர்க்கவில்லை’. ஒரு சாதாரண பிள்ளையைப் போலதான் வளர்த்து வருகிறோம்” என்று அவர் கூறுகிறார்.

ஓஷர்
படக்குறிப்பு,தன் தந்தை கீவன் ராணுவத்தில் கொல்லப்பட்டது 10 வயதான ஓஷருக்குத் தெரியும்

‘குறிப்பிடத்தக்க கலாசார மாற்றம்’

“விந்தணுவைப் பாதுகாப்பது, மகன்களை இழந்த குடும்பங்களுக்கு ‘வாழ்க்கைக்கான அர்த்தத்தை அளிக்கிறது” என்று ஷமீர் மருத்துவ மையத்தின் விந்தணு வங்கியின் இயக்குனர், மருத்துவர் இட்டாய் காட் கூறுகிறார். அவரே இதற்கான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்.

"எதிர்காலத்தில், இனப்பெருக்கம் மற்றும் கருவுறுதல் தொடர்பான மக்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க இதுவே கடைசி வாய்ப்பு," என்று அவர் கூறுகிறார்.

இந்த செயல்முறையை மக்கள் அதிக அளவில் ஏற்றுக்கொள்வதை சுட்டிக்காட்டிய அவர், சமீபத்தில் ‘குறிப்பிடத்தக்க கலாசார மாற்றம்’ ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

“பெரும்பாலும் இந்த நடைமுறைக்கு ‘இறந்தவர்களின் ஒப்புதல்’ பற்றிய தெளிவான பதிவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஏற்கனவே மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் குடும்பங்கள், விரக்தி அடைகின்றனர்” என்கிறார் மருத்துவர் இட்டாய் காட்.

 
மருத்துவர் இட்டாய் காட்
படக்குறிப்பு,“பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவருக்கும், விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும் எந்த தொடர்பும் இருந்திருக்காது" என்கிறார் மருத்துவர் இட்டாய் காட்

“விந்தணுக்களை உறைய வைத்துவிடலாம், ஆனால் அதை கருத்தரிப்பதற்கு பயன்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது” என்கிறார் மருத்துவர் இட்டாய் காட்.

"நாங்கள் இனப்பெருக்கம் பற்றி விவாதிக்கிறோம், ஒரு பையன் அல்லது பெண்ணை உலகிற்கு கொண்டு வருகிறோம். அந்தக் குழந்தை தந்தை இல்லாமல் வளரப் போகிறது என்பதும் எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறுகிறார்.

“பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்தவருக்கும், விந்தணுவைப் பயன்படுத்தி குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும் எந்த தொடர்பும் இருந்திருக்காது” என்று கூறும் இட்டாய் காட், குழந்தையின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பான அனைத்து முடிவுகளும் தாயால் எடுக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இறந்தவர்களின் விந்தணுக்களை உறையவைப்பதை தான் முன்பு எதிர்த்ததாகவும், ஆனால் போரில் இறந்த குடும்பங்களை சந்தித்து பேசிய பிறகு, தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

"இது அவர்களின் வாழ்வை எப்படி அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது, சில சமயங்களில் அது அவர்களுக்கு எப்படி ஆறுதல் அளிக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார்.

கீவன்
படக்குறிப்பு,கீவன், 2002இல் காஸா பகுதியில், ஒரு பாலத்தீனிய துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்

'யூத சட்டத்தின் இரண்டு முக்கியக் கோட்பாடுகள்'

டெல் அவிவில் உள்ள யூத நெறிமுறைகளுக்கான சோஹார் மையத்தை வழிநடத்தும் தாராளவாத, யூத மத ஆசிரியரான ரப்பி யுவல் ஷெர்லோ, “இறந்தவர் இதற்கு முன்பே ஒப்புதல் கொடுத்துள்ளாரா என்பது ஒரு முக்கியமான விஷயம்தான்” என்கிறார்.

ஒரு மனிதனின் வம்சாவளியைத் தொடர்வது மற்றும் அவரது உடலை முழுவதுமாக புதைப்பது என யூத சட்டத்தின் இரண்டு முக்கியக் கோட்பாடுகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் விளக்குகிறார்.

 
இஸ்ரேலியக் குடும்பங்கள்
படக்குறிப்பு,அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, விந்தணுக்களை உறைய வைக்கும் நடைமுறைக்கு பல இஸ்ரேலியக் குடும்பங்கள் விண்ணப்பிக்கின்றன.

இந்த நடைமுறையில் இறப்பதற்கு முன்பாக ஒருவர் கொடுக்கவேண்டிய ஒப்புதல் குறித்தும், ராணுவச் சேவையில் கொல்லப்பட்ட வீரர்களின் குழந்தைகளுக்கு பொதுவாக வழங்கப்படும் பலன்களை இந்தக் குழந்தைகளும் பெறுமா என்பது குறித்தும் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக இதைக் கவனித்து வரும் வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.

உறையவைக்கப்பட்ட விந்தணுக்களைக் கருத்தரிக்க பயன்படுத்த வேண்டுமா கூடாதா என்பதில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன, குறிப்பாக குழந்தை பெற்றுக்கொள்ள அந்த கணவனை இழந்த பெண்கள் விரும்பவில்லை எனும்போது.

அவி ஹருஷைப் பொறுத்தவரை, மகனை இழந்த துக்கத்திலும் அவர் உறுதியாக இருக்கிறார்.

அவர் தனது இறந்த மகனின் டைரிகள், ஆல்பங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் நிரப்பப்பட்ட ஒரு அட்டைப்பெட்டியை பார்க்கிறார்.

ரீஃபுக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கும் வரை தான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்று கூறும் அவர், "அது நடக்கும். அவனுடைய குழந்தைக்கு இந்த பெட்டியைப் பரிசளிப்பேன்." என்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு : இராணுவ பிரிவு தளபதியை கொன்றது இஸ்ரேல்

கடந்த மாதம் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜூலை 13 அன்று கான் யூனிஸ் பகுதியில் உள்ள ஒரு கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் டெய்ஃப் இலக்கு வைக்கப்பட்டார்.

அவரது மரணத்தை ஹமாஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இஸ்மாயில் ஹனியா படுகொலைக்கு பின்னர் வந்த அறிவிப்பு

தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு : இராணுவ பிரிவு தளபதியை கொன்றது இஸ்ரேல் | Hamas Military Chief Killed In Air Strike

 "காசாவின் ஒசாமா பின்லேடன்"

ஹமாஸ் தளபதி முகமது டெய்ஃப் "காசாவின் ஒசாமா பின்லேடன்" என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோ காலன்ட் (Yoav Gallant) தெரிவித்துள்ளார்.

இவரது மரணம் "காசாவில் ஹமாஸை அகற்றும் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்" என்று அவர் குறிப்பிட்டார்.

“ஹமாஸ் அமைப்பினர் சரணடையவேண்டும் அல்லது அவர்கள் ஒழிக்கப்படுவார்கள். கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி படுகொலைக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் ஆகிய இருபகுதியினரையும் ஒழிக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம்” என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/hamas-military-chief-killed-in-air-strike-1722504302

Edited by ஏராளன்
add twitter link
  • கருத்துக்கள உறவுகள்
Posted

453507636_894210059410634_31979315337080

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது.  இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது  பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும்.   குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும். 
    • தலைவரும் கருணா அம்மானின்  தவறுகளை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு என்ன நடந்தது என்று சொன்ன வரலாற்றில் இருந்து படிக்கவேண்டாமா? அதிகாரிகளின், நிறுவனங்களின், மருத்துவமனைகளின் தவறுகளை சும்மா கேள்விமட்டும் கேட்டால் நிறுத்தமுடியாது. சட்டம், நீதிமன்றம் என்று பலவழிகள் இருக்கின்றது. அருச்சுனா மிகவும் மோசமாக ஒருவரை (இன்னும் பலரை) நடத்துவதைப் பார்த்தும் அவருக்கு முண்டுகொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
    • சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் December 14, 2024  01:52 pm http://s7.addthis.com/static/btn/v2/lg-share-en.gif சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்திருந்தார். தனது கல்வித் தகுதி தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக தற்போது அந்தத் தகுதிகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தனது கல்வித்தகுதி தொடர்பாக எந்த பொய்யான தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197284
    • இலங்கையை பொறுத்தவரை அப்படித்தான் சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் மாற்றி வைத்துள்ளார்கள். பிரச்சினைகளின் தீவிரத்தை உணராதவர்கள்தான் ... அது வேறு, இது வேறு என்று "பொய்ச் சமாதானம்" சொல்லிக் கொண்டு திரிகிகிறார்கள். காகம் எல்லாம்... கறுப்பு என்ற மாதிரித்தான், இலங்கையின் புத்தர் சிலையும். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.