Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காசா மோதலின் முதல் 9 மாதங்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை வெளியானதை விட அதிகம் - ஆய்வில் தகவல்

Published By: Rajeeban

12 Jan, 2025 | 01:35 PM
image

இஸ்ரேலிய ஹமாஸ் மோதலின் முதல் 9 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களை விட மிகவும் அதிகம் என லான்செட் மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & ட்ராபிகல் மெடிசின், யேல் பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள கல்வியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம்மூலம் இது தெரியவந்துள்ளது.

2023 முதல் 2024 ஜூன் இறுதிவரை இஸ்ரேலின் தாக்குதல்களில் ஏற்பட்ட புள்ளிவிபரங்கள் குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் 64260 பேர் கடும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 59.1 வீதமானவர்கள் பெண்கள் சிறுவர்கள் 65வயதிற்கு மேற்பட்டவர்கள் என  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் பாலஸ்தீன போராளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

கடந்த வருடம் ஜூன்மாதம் வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37877 என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

gaza_un_school2.jpg

காசாவிற்குள் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் அனுமதிக்காததால் உயிரிழப்பு குறித்த புள்ளிவிபரங்களை  உறுதி செய்வது கடினமாக உள்ளது.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் உயிரிழப்புகள் குறித்த மின்னணு பதிவுகளை பேணும் திறன் இஸ்ரேலின் இராணுவநடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டது என லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இஸ்ரேல் மருத்துவமனைகள் மருத்துவசதிகள் மீது தாக்குல்களை மேற்கொண்டதையும் டிஜிட்டல் தொடர்பாடல்களை குழப்பியதையும் சுட்டிக்காட்டியது.

பாலஸ்தீன சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களையும்,உறவினர்களின் உயிரிழப்புகள் குறித்து அறிவிப்பதற்காக பாலஸ்தீன அமைச்சு முன்னெடுத்த இணையவழி ஆய்வின் முடிவுகளையும்,சமூக ஊடக மரண அறிவித்தல்களையும் அடிப்படையாக வைத்து தமது முடிவை அறிவித்துள்ள ஆய்வாளர்கள்  2023 ஓக்டோபர் முதல் ஜூன் 2024 வரை 55289 முதல் 78535 பேர் கடும் தாக்குதலால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சரியாக மதிப்பிட்டால் 64260 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் காசாவின் சுகாதார அமைச்சு 41வீத உயிரிழப்புகள் குறித்து மாத்திரமே அறிவித்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/203631

 

  • Replies 1.5k
  • Views 157.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தநிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லை - ஒரு சில மணித்தியாலங்களில் 45க்கும் அதிகமானவர்கள் பலி

Published By: RAJEEBAN   16 JAN, 2025 | 03:10 PM

image

இஸ்ரேலும் ஹமாசும் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்த ஒருசில மணித்தியாலங்களில் காசா நகரை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஷேக்ரட்வானிற்கு அருகில் உள்ள குடியிருப்பு தொகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அருகில் உள்ள மற்றுமொரு குடியிருப்பு பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 15பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

gaza_2025_112.jpg

கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதையும், உடல்கள் காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மற்றுமொரு வீடியோவில் காயமடைந்த சிறுவனை மீட்பு பணியாளர்கள் வைத்தியாசாலைக்கு கொண்டு செல்வதையும்,சிறுவர்கள் சிகிச்சை பெறுவதையும் காணமுடிந்துள்ளது.

அல்ரிமாலில் கட்டிடமொன்று இஸ்ரேலின் தாக்குதலில் இடிந்துவிழுந்ததால் 5 கொல்லப்பட்டு;ள்ளனர்.

காயமடைந்த பலர் காசாநகரில் உள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்என மருத்துவமனையின் இயக்குநர் படெல்நைம் தெரிவித்துள்ளார்.

யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரான 70 மணித்தியாலங்களும் காசா மக்களிற்கு மிகவும் வன்முறையானதாகவும் வேதனை மிக்கதாகவும் காணப்படும் காசா மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

gaza_city_2025.jpg

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவது குறித்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள போதிலும், தாக்குதல்கள் தொடர்கின்றன, என தெரிவித்துள்ள அல்அஹ்லி பப்டிஸ்ட் மருத்துவமனையின் இயக்குநர் ஆக்கிரமிப்பாளர்கள் காசா நகரத்தின் மீது தாக்குதல்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர், முடிந்தளவிற்கு சேதத்தை ஏற்படுத்தும் முயற்சி போல இது தோன்றுகின்றதுஎன  குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/203968

  • கருத்துக்கள உறவுகள்+

அப்ப முடியேலை, இன்னும் அடி இருக்கி...

வழித்துத் துடைக்காமல் விட மாட்டார்கள் போலும், இஸ்ரேலிய மறவர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

Gaza Ceasefire: ‘’நரகத்துல இருந்து வந்துட்டேன்’’ - கைதிகள், உறவினர்களின் Emotional Moment

 

  • கருத்துக்கள உறவுகள்+

எப்படியோ அதி பயங்கரவாத கமாஸிடமிருந்து இவர்கள் இவர்கள் உயிர் தப்பி வந்துவிட்டார்கள்...

அதற்கு இஸ்ரேலுக்கு  நன்றி சொல்ல வேண்டும்.🇮🇱🇮🇱

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர்' துயரத்தில் சிக்கியுள்ள காசா மக்கள் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்குண்டுள்ள உடல்களை அகற்ற முயல்கின்றனர்

Published By: RAJEEBAN   23 JAN, 2025 | 10:45 AM

image

ரொய்ட்டர்ஸ்

காசாவில் துப்பாக்கிகள் மரணித்திருக்கலாம், ஆனால் மஹ்மூட் அபு டல்பாவிற்கு அவர் எதிர்கொண்டுள்ள துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை.

யுத்தத்தின் ஆரம்பநாட்கள் முதல் கட்டிட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது மனைவியினதும் ஐந்து பிள்ளைகளினதும் உடல்களை அவர் தேடிவருகின்றார்.

டிசம்பர் 2023 இல் காசாநகரின் செஜய்யா புறநகரில் உள்ள கட்டிடமொன்றில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அவரது மனைவி பிள்ளைகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.

gaza_2025_1157.jpg

குண்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்ததால் 3 உடல்கனை மாத்திரம் மீட்க முடிந்தது.

'எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே இருக்கின்றனர். அவர்களை மீட்க  சிவில் பாதுகாப்பு படையினர் முயன்றனர், ஆனால் அழிவு அளவு காரணமாக அவர்களால் மீட்க முடியவில்லை, தியாகிகளின் உடல்களை வெளியே எடுப்பதற்கான சாதனங்கள் எங்களிடம் இல்லை. மஹ்மூட் அபு டல்பாவிற எக்ஸ்கவேட்டர்களும் தொழில்நுட்ப சாதனங்களும் அவசியம் என மஹ்மூட் அபு டல்பா தெரிவித்தார்.

'எனது மனைவி ஐந்து பிள்ளைகளுடன் கொல்லப்பட்டார் -மூன்று பெண்கள் இரண்டு ஆண்கள் -மூவர் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்" என அவர் தெரிவித்தார்.

முஸ்லீம் அராபிய நாடுகளில் உயிரிழந்து ஒரு சில மணிநேரங்களில் உடல்களை புதைப்பார்கள், உடல்களை மீட்க முடியாவிட்டால் கௌரவமான விதத்தில் இறுதிக்கிரியைகளை நடத்த முடியாவிட்டால் அது குடும்பங்களிற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தும்.

அவர்களை வெளியே கொண்டுவந்து கல்லறையொன்றை ஏற்படுத்த முடியும் என நான் நினைக்கின்றேன், இந்த உலகத்தில் நான் எதிர்பார்ப்பது அதனைதான், இந்த உலகம் எனக்கு வீடு கட்டித்தரவேண்டும் என்றோ அல்லது வேறு எதனையுமோ நான் எதிர்பார்க்கவில்லை, அவர்களை வெளியில் எடுத்து கல்லறையொன்றை உருவாக்கவேண்டும் அவ்வளவுதான் என்கின்றார் அபுடல்பா .

gaza_2025_1158.jpg

ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது முதல் 200 உடல்களை மீட்டுள்ளதாக பாலஸ்தீன சிவில் அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த யுத்த நிறுத்தம் 45000க்கும் அதிகமானவர்களை  பலிகொண்ட 15 மாத யுத்தத்தை நிறுத்தியுள்ளது.

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் தென்பகுதி மீது தாக்குதலை மேற்கொண்டு 1200 பேரை கொலை செய்து 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்துசென்றதை தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பமானது. இது இஸ்ரேலின் புள்ளிவிபரமாகும். 94 பணயக்கைதிகள் இன்னமும் ஹமாசின் பிடியிலேயே உள்ளனர்.

கற்குவியல்களை இடிபாடுகளை அகற்றுவதற்கான பாரிய இயந்திரங்கள் இன்மை,  அவற்றை அகற்றுவதற்கு பெரும் தடையாக உள்ளது என்கின்றார் பாலஸ்தீன சிவில் அவசரசேவை பிரிவின் தலைவர் மஹ்மூட் பாசல். தங்களின் பல வாகனங்களை இஸ்ரேல் அழித்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொலை செய்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.

கொல்லப்பட்ட பத்தாயிரம் பாலஸ்தீனியர்களின் உடல்கள் இன்னமும் மீட்கப்படாமலிருப்பதாக அவர் மதிப்பிடுகின்றார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக 50 மில்லியன் தொன் இடிபாடுகள் காணப்படுவதாக மதிப்பிட்டுள்ள ஐநா, அவற்றை அகற்ற 21 வருடங்கள் எடுக்கும், 1.2 பில்லியன் டொலர்கள் தேவை என  தெரிவித்துள்ளது.

gaza_2025_1159.jpg

அபு டல்பாலை போல காசாவில் 2.3 மில்லியன் சனத்தொகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பாரிய இடிபாடுகளிற்கு இடையில் சிக்குண்டுள்ள அல்லது இஸ்ரேலின் தரை தாக்குதல்களின் போது பாரியமனித புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ள  தங்கள் உறவுகளை தேடிவருகின்றனர்.

68 வயது ரபா அபுலியாஸ் இஸ்ரேலின் தாக்குதலில் தனது மகனை இழந்தவர், தனது மகனிற்கு உரிய கல்லறையை வழங்க விரும்புகின்றார்.

அஷ்ரபினை எங்கு புதைத்துள்ளார்கள் என்பது எனக்குதெரியும், ஆனால் அவரது உடல் ஏனைய பலருரின் உடலுடன் காணப்படுகின்றது, அவருக்கு கல்லறை இல்லை அவரது பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை இல்லை என்கின்றார் அவர்.

நான் அடிக்கடி  அவருடன் பேசுவதற்கு ஏற்ற விதத்தில் அவருக்கு கல்லறையொன்றை உருவாக்க விரும்புகின்றேன் என்கின்றார் அவர்.

gaza_2025_1120.jpg

https://www.virakesari.lk/article/204631

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் நால்வர் இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ்

25 JAN, 2025 | 05:34 PM
image
 

ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர்.

காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலைசெய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/204874

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் மூன்று பணய கைதிகள் இன்று கமாசால் விடுவிக்கப்பட்டனர்.


விடுவிக்கப்பட்ட பலஸ்தீனிய கைதிகளில் சிலர் இஸ்ரேலால் மீண்டும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா எல்லை; சிகிச்சைக்காக செல்லும் பாலத்தீனர்கள்


பல மாதங்களாக மூடப்பட்டிருந்த ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காஸாவில் இருந்து சிறுவர்கள் எகிப்துக்கு அழைத்து செல்லப்படும் காட்சி இது.

கடந்த மே மாதம் எகிப்து- காஸா இடையே உள்ள ஒரே வழியான ரஃபா எல்லையை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றி மூடியது.

அதன் பிறகு, முதன் முறையாக தற்போது இந்த எல்லை திறக்கப்பட்டு 50 நோயாளிகள் சிகிச்சைக்காக எகிப்துக்கு கடந்த சனிக்கிழமை அன்று அழைத்து செல்லப்பட்டனர் அவர்களுள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அடங்குவர் என்று பாலத்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த வழியாக காஸா மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cx2pyl17ej4o

  • கருத்துக்கள உறவுகள்

“கஸ்*ஸாமுக்கு நல்லதே நடக்கும்!” -விடுதலையான அமெரிக்க இஸரேலியர் மனம் திறந்தார்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு காசாவுக்கு திரும்பும்  மக்கள் கூட்டம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

11 FEB, 2025 | 03:20 PM
image
 

ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட 86 வயது இஸ்ரேலியர் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சொலொமோ மன்சுர் என்ற இஸ்ரேலிய பணயக்கைதி உயிரிழந்துவிட்டார் எனஇஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் பிறந்தவரான இவர் இஸ்ரேலின் கிபுட்ஸ் கிஸிபும் பகுதியில்  பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார்.

ஹமாஸ் அமைப்பு முதல்கட்டமாக  விடுதலைசெய்யவுள்ள 33 பணயக்கைதிகளின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை சமீபத்தில் பெறப்பட்ட புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் 86 வயது பணயக்கைதி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/206415

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

21 FEB, 2025 | 12:00 PM

image

இஸ்ரேலில் மூன்று பேருந்துகள் வெடித்துசிதறிய சம்பவத்தின் பின்னர் மேற்குகரையில் இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

GkRbMa_bAAEYUC9.jpg

இந்த பேருந்து வெடிப்புகள் காரணமாக எவரும் காயமடையாத அதேவேளை இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டு பாலஸ்தீன எழுச்சியின் போது இவ்வாறான  பேருந்து குண்டுவெடிப்புகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வேறு இரண்டு பேருந்துகளில் காணப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

GkRa4rHW0AAN8fs.jpg

ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரியானவையாக குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் காணப்பட்டன  என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெல்அவிக்கு வெளியே உள்ள பகுதியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

பயணத்தை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலேயே வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/207277

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-297.jpg?resize=750%2C375&ssl

இஸ்ரேலில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய மூன்று பஸ்கள்!

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் புறநகர்ப் பகுதிகளான பேட் யாம் மற்றும் ஹோலோனில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் மூன்று காலி பஸ்கள் வியாழக்கிழமை (20) இரவு அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

சம்பவங்களில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மேலும், இரண்டு பஸ்களிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புகள் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

காசாவில் இருந்து நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பியனுப்பியதையடுத்து இஸ்ரேல் ஏற்கனவே துக்கத்தில் இருந்த ஒரு நாளில் வெடிப்புகள் நடந்தன.

GkRBq7KWUAAXh31?format=jpg&name=large

பஸ் வெடிப்புகள் 2000 களில் பாலஸ்தீனிய எழுச்சியின் போது குண்டுவெடிப்புகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், காட்சிகளை ஆராய்ந்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில், வெடிகுண்டு சப்பர்கள் அருகில் சந்தேகத்திற்குரிய வேறு ஏதேனும் பொருட்களை தேடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், நிலைமை குறித்து தொடர்ந்து புதுப்பிப்புகளைப் பெற்று வருவதாகவும் வியாழன் இரவு பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்தியதாகவும் கூறியது.

இதையடுத்து, பயங்கரவாத மையங்களுக்கு எதிராக மேற்குக் கரையில் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கு அவர் பிரதமர் அறிவுறுத்தியதாக அறிவித்தது.

https://athavannews.com/2025/1422387

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி காணொளியில் விடுவிக்கப்படாத பணய கைதிகளும் காணப்பட்டனர்.

இஸ்ரேலிய மக்களிடம் தங்களுக்காக போராடும் படி கேட்டுக்கொண்டார்கள்.

போர் ஒரு தீர்வல்ல. நெத்தனியாகு நீ எங்களை கொன்று விட்டாய் போன்ற வசனங்களையும் கூறி இருந்தனர்.

இதனால் கடுப்பான நத்தனியாகு விடப்பட இருந்த பலஸ்தீனிய மக்களை இன்னும் விடுவிக்கவில்லை என அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

54296106406_56e9d7d97c_o-1320x880-1.jpg?

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்! இஸ்ரேல் ஒப்புதல்.

ரமலான் பண்டிகை காலத்தை முன்னிட்டு, காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தினை மேற்கொள்வது தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின்(Steve Witkoff)  முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கம் எனவும்,இக்காலத்தில்   உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் ரமலான் மாதத்தை  வரவேற்கிறார்கள் எனவும், இதன்காரணமாகவே  தற்காலிகப் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியாகும் தருவாயில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1423698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாசின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்கமுடியாது - சமூக ஊடக பதிவில் டிரம்ப் மிரட்டல்

Published By: Rajeeban

06 Mar, 2025 | 08:02 AM

image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸ் அமைப்பிற்கு இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் நான் சொன்னதை செய்யாவிட்டால் ஹமாஸ் அமைப்பின் எந்த உறுப்பினரும் பாதுகாப்பாகயிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் தனது வேலையை முடிப்பதற்காக நான் தேவைiயான அனைத்தையும் அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி நான் சொல்வதை செய்யாவிட்டால் ஹமாசின் ஒரு உறுப்பினர் கூட பாதுகாப்பாகயிருக்கமுடியாது என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படாவிட்டால் நரகத்திற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்யுங்கள், நீங்கள் கொலை செய்தவர்களின் உடல்களை திருப்பிதாருங்கள் இல்லாவிட்டால் உங்கள் கதை முடிவிற்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

காசா பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி காசா மக்களே உங்களிற்கு மிகவும் அழகான எதிர்காலம் காத்திருக்கின்றது, பணயக்கைதிகளை வைத்திருந்தால் நீங்கள் மரணிக்கவேண்டிய நிலையேற்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/208407

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

486724941_1069817525183219_8903504326037

  • கருத்துக்கள உறவுகள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் - 80 பேர் பலி

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+-+80+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 80 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரவு முழுவதும் தொடர்ந்து வரும் நிலையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டு வரும் வைத்தியசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே காசா மீதான இஸ்ரேலின் இதுவரையான தாக்குதல்களில் 50,423 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 114,638 பேர் காயமடைந்ததாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.hirunews.lk/tamil/401948/காசா-மீது-இஸ்ரேல்-தாக்குதல்-80-பேர்-பலி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனியர்கள் மேல் தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என கூறிய துணை விமானபடையினர் நூற்றுக்கணக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது யெமனில் இருந்து ஏவுகணை தாக்குதல்

Published By: DIGITAL DESK 3

04 MAY, 2025 | 05:17 PM

image

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யெமனில் இருந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமான பென் குரின் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஏவுகணை விமான நிலையத்திற்குள் உள்ளே ஓடுதளம் அருகே இருந்த  வீதியில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

இந்த ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து விமான நிலையத்தில் விமான சேவை சில நிமிடங்கள் இரத்து செய்யப்பட்டன. 

தற்போது விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

அதேவேளை, ஹவுத்தி நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7 மடங்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாகவும், பதிலடி கொடுப்பது குறித்தும் பிரதமர்  நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவையை  கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இதன் மூலம் யெமனில் செயல்பட்டு வரும்  ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/213644

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கமசால் ஒரு அமெரிக்க பணயகைதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலி

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலி

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 70 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட நிலையில், இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் வசம் இருந்த இஸ்ரேல் – அமெரிக்க பணயக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/318026

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது - இஸ்ரேலின் முன்னாள் இராணுவ அதிகாரி கடும் சீற்றம்

Published By: RAJEEBAN

21 MAY, 2025 | 02:03 PM

image

இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை கொலை செய்கின்றது என இஸ்ரேலின் முன்னாள்  இராணுவ அதிகாரியொருவர் சாடியுள்ளார்.

ஒரு நல்லறிவு உள்ள நாடு பொதுமக்களிற்கு எதிராக போர்தொடுக்காது, குழந்தைகளை பொழுதுபோக்கிற்காக கொல்லாது, மக்களை மிகப்பெரிய அளவில் இடம்பெயரச்செய்யாது என இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளரும் இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னாள் பிரதி பிரதானியுமான யயிர் கொலான் வானொலி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

golan.jpg

இஸ்ரேலின் நடவடிக்கைகளை நிறவெறிக்காலத்து தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுள்ள அவர் தமது வரலாறு முழுவதும் படுகொலைகளை துன்புறுத்தல்களை சந்தித்த யூதமக்கள், தற்போது முற்றிலும் மனச்சாட்சிக்கு முரணான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்துக்களிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்து இஸ்ரேலின் வீரமிக்க படைவீரர்களிற்கும், எதிரான மூர்க்கத்தனமான தூண்டுதல் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்தக் கருத்துக்களை "எங்கள் வழக்கமான மற்றும் ரிசர்வ் வீரர்களுக்கு எதிரான மோசமான இரத்தக்களரி அவதூறு" என்று அழைத்தார். அதே நேரத்தில் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கோலன் "தெரிந்தே பொய்களைப் பரப்புகிறார் இஸ்ரேலையும் ஐ.டி.எஃப்-ஐயும் உலகின் பார்வையில் அவதூறு செய்கிறார்" என்று கூறினார்.

இதற்கிடையில் முன்னாள் பிரதமர் எகுட் பராக் கோலனை "ஒரு துணிச்சலான நேரடியான மனிதர்" என்று அழைத்தார். மேலும் அவரது கருத்துக்கள் இஸ்ரேலின் அரசியல் தலைவர்களைக் குறிக்கின்றன வீரர்களை அல்ல என்றும் கூறினார்.

https://www.virakesari.lk/article/215323

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.