Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் அல் அவ்டா மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் முற்றுகையிட்டுள்ளனர் - பிபிசி

21 MAY, 2025 | 05:05 PM

image

காசாவின் அல் அவ்டா மருத்துவமனை இஸ்ரேலிய படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார் என பிபிசியின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனை முழுமையான முற்றுகையின் கீழ் உள்ளது, வெளியிலிருந்து நோயாளர்களை உள்ளே எடுக்க முடியாத நிலையில் உள்ளோம் என முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானம் ஒன்று மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளது, டாங்கிகளின் துப்பாக்கி பிரயோகத்தையும் கேட்க முடிகின்றது 400-500 மீற்றர் தொலைவில் இது இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்தார். அதன் பின்னர் அவரின் குரல் துண்டிக்கப்பட்டுவிட்டது என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் பின்னர் அனுப்பிசெய்தியில் நான் பாதுகாப்பாகயிருக்கின்றேன், ஆனால் நிலைமை மிக மோசமாக உள்ளது என அல் அவ்டா மருத்துவமனை இயக்குநர் முகமட் சல்ஹா தெரிவித்துள்ளார்.

தடைகள் காரணமாக மருத்துவ பொருட்கள் போதாமையினால் இந்த மருத்துவமனை இயங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/215345

  • Replies 1.5k
  • Views 157k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

காஸாவில் ஏற்பட்டுள்ள கொடுந்துயர நிலைக்கு மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். காஸா பகுதியின் முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும், காஸாவில் குடியிருக்கும் பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்ததை அடுத்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் காஸாவில் புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதுடன், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

காஸாவில் ஏற்பட்டுள்ள கொடுந்துயர நிலைக்கு மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். காஸா பகுதியின் முழு பொறுப்பையும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்றும், காஸாவில் குடியிருக்கும் பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்ததை அடுத்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் காஸாவில் புதுப்பிக்கப்பட்ட இராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதுடன், நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

  

இந்த நிலையில் சமீபத்திய நாட்களில் இஸ்ரேல் மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. மட்டுமின்றி, காஸா பகுதியை மொத்தமாக கைப்பற்றும் வரையில் ஓய்வதில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், காஸாவில் நடந்தேறும் நெருக்கடிகளின் மத்தியில், இஸ்ரேலுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவளித்ததாக கல்லாஸ் கூறியுள்ளார்.

காஸாவில் நிலைமை பேரழிவின் விளிம்பில் உள்ளது. இஸ்ரேல் அனுமதித்த உதவி நிச்சயமாக வரவேற்கத்தக்கது, ஆனால் அது வெறும் கண் துடைப்பு நாடகம். உதவிகள் உடனடியாக, தடையின்றி, அளவில் அதிகமாக அளிக்கப்பட வேண்டும், ஏனென்றால் இதுதான் தற்போதையத் தேவை என்று கல்லாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையே பாராளுமன்றத்தில் பேசிய பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், ஐரோப்பிய ஒன்றிய முடிவை வரவேற்று, 27 உறுப்பு நாடுகளில் 17 நாடுகள் இந்த நடவடிக்கையை ஆதரித்ததாகக் கூறினார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலுடனான சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை பிரித்தானியா இடைநிறுத்தியதுடன், அதன் தூதரை வரவழைத்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தது.

அத்துடன் மேற்குக் கரை குடியேறிகள் மீது மேலும் தடைகளை அறிவித்தது. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து காஸாவிற்குள் மருத்துவம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகங்கள் நுழைவதை இஸ்ரேல் தடுத்துள்ளது.

இதனால் அடுத்த அடுத்த இரண்டு நாட்களில் 14,000 சிறார்கள் பட்டினியால் இறக்கும் மிக மோசமான சூழல் காஸாவில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி தெரிவிக்கையில், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்பதற்கான வழி தாக்குதல் அல்ல என்றும், உதவித் தடையை இஸ்ரேல் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேலும் இஸ்ரேல் அரசாங்கத்தின் சில பிரிவுகளில் தீவிரவாதம் ஊடுருவியுள்ளதையும் அவர் கண்டித்தார்.

https://seithy.com/breifNews.php?newsID=333582&category=WorldNews&language=tamil

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதல் - 26 பேர் பலி 150க்கும் அதிகமானவர்கள் காயம்

01 JUN, 2025 | 12:50 PM

image

காசாவின் ரஃபாவில் உணவுவிநியோக நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலிய டாங்கிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா ஆதரவுடனான மனிதாபிமான உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும் நிலையத்திற்கு அருகில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உணவுகளை பெறுவதற்காக காத்திருந்தவேளை அந்த பகுதியை நோக்கிவந்த இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலை மேற்கொண்டன என உள்ளுர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

gaza_donkey.jpg

 இறந்தவர்களினது உடல்களையும் காயமடைந்தவர்களையும் கழுதைவண்டிகளில் செஞ்சிலுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

பெருமளவு பாலஸ்தீனியர்கள் அல்அலாம் சுற்றுவட்டத்தில் காணப்பட்டவேளை இஸ்ரேலிய டாங்கிகள் தாக்குதலில் ஈடுபட்டன என கரீப் என்ற உள்ளுர் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் நீண்டநேரம் நிலத்தில் விழுந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்த பகுதிக்கு மீட்புபணியாளர்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக மக்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்தி காயமடைந்தவர்கள் உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

26 கொல்லப்பட்டுள்ளனர் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என செஞ்சிலுவை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/216250

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேலிய படையினர் மீண்டும் தாக்குதல் - 25 பாலஸ்தீனியர்கள் பலி

Published By: RAJEEBAN

03 JUN, 2025 | 12:50 PM

image

காசாவில் உணவுவிநியோக நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவில் அமெரிக்க இஸ்ரேலிய ஆதரவு ஆதரவு அமைப்பு விநியோகிக்கும் உணவுப்பொருட்களை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது  இஸ்ரேலிய படையினர் மீண்டும் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஃபாவின் வடமேற்கே உள்ள அல்-மவாசி பகுதியில் உள்ள அல்-ஆலம் சுற்றுவட்டத்தில் விடியற்காலையில் இருந்து கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் .என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காசாவின் சுகாதார அமைச்சு 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

gaza__june_1_2025.jpg

நாசர் மருத்துவமனையின் இயக்குநரும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்களின் உடல்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சந்தேகநபர்கள் தங்களை நோக்கி வருவதை அவதானித்த பின்னர் இஸ்ரேலிய படையினர் உணவு விநியோக மையத்தை நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

படையினர் முதலில் முன்னெச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தனர். ஆனால் அவர்கள் விலகிச்செல்லவில்லை. பின்னர் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த சந்தேகநபர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

படையினரை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களால் படையினருக்கு ஆபத்து காணப்பட்டது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேபகுதியில் இஸ்ரேலிய படையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில்  30க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/216435

  • கருத்துக்கள உறவுகள்

பணயகைதிகள் இருவர் பிணமாக கான் ஜுனிஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘மொத்த உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது’: Gaza சூழல் குறித்து BBC நேர்காணலில் Red Cross Chief

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மிர்யானா ஸ்போல்யாரிச் Gaza-வில் நிலைமை நரகத்தை விட மோசமாக உள்ளது என எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் உலக தலைவர்களை விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

gaza.jpg?resize=750%2C375&ssl=1

இஸ்ரேல் போர்: காசாவில் 4 லட்சம் பேர் மாயம்!

“காசாவில் கடந்த 2 வருடங்களில் 4 இலட்சம் பேர் மாயமாகியுள்ளனர்” என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காசா மீது கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப்போரினால் இதுவரை காசாவில் சுமார் 60,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தரும்  தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசாவில் 3,77,000 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் காணாமல் போனவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.  அத்துடன் போருக்கு முன்னர் காசாவில் 22 லட்சம் பேர் வசித்து வந்துள்ளனர் எனவும், தற்போது 19 லட்சம் பேர் மாத்திரமே அங்கு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், மனிதாபிமான உதவிகளைத் தடுப்பதும் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் இப் போரின்போது  மக்கள்  இடம்பெயர்ந்திருக்கலாம் அல்லது காணாமற் போய் இருக்கலாம்  என்றாலும் கணிசமான எண்ணிக்கையிலானோர் இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கே வரக் கூடியதாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்” உலக நாடுகள் மற்றும்  மனிதாபிமான அமைப்புகள் காஸா மக்களுக்கு  உதவியை வழங்க முன்வந்தாலும், அதை பெற வரும் மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த மே மாத இறுதியில் இருந்து இன்று வரை,  மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது 450 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 3,500 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437103

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று மாதங்களுக்குப் பிறகு காசா மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்ய எல்லையை திறந்து உள்ளது இஸ்ரேல் ஈரானுக்கு கிடைத்த மிகப்பெரிய 👍....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இந்த குழந்தைகள் இஸ்ரேலிற்கு என்ன செய்தார்கள்?, இவர்கள் செய்த தவறு என்ன"? ; இரண்டு நாட்களில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 75 பேர் பலி

29 JUN, 2025 | 12:25 PM

image

வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் காசாவில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 75 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஹமாசின் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

gaza_2025_june_28.jpg

காசா நகரின் பாலஸ்தீன விளையாட்டு அரங்கிற்கு அருகில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ள ஷிபா மருத்துவமனை வட்டாரங்கள் தங்கள் மருத்துவமனைக்கு இவர்களின் உடல்கள் கொண்டுவரப்பட்டன என தெரிவித்துள்ளன.

நாசெர் மருத்துவமனைக்கு 20க்கும் மேற்பட்ட உடல்கள் கொண்டு செல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவின் கிழக்கு பகுதியில் மதியம் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹான்யூனிசிற்கு அருகில் உள்ள முவாசியில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று பிள்ளைகளும் பெற்றோரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த குழந்தைகள் இஸ்ரேலிற்கு என்ன செய்தார்கள்,? இவர்கள் செய்த தவறு என்னவென அவர்களின் பேத்தியார் சுவட் அபு டெய்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

https://www.virakesari.lk/article/218751

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மழை போல விழும் குண்டுகள்" - வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்கள் தங்கள் இடங்களிலிருந்து வெளியேறுகின்றனர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

இந்த வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜபாலியாவில் (Jabalia) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல் அதிகரித்ததாகவும், பல வீடுகள் சேதமடைந்ததாகவும், குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் வடக்கு காஸா பகுதியிலிருந்து வெளியேறும் போதும் தாக்குதல் தொடர்ந்ததாகத் தெரிவித்தனர்.

அதே சமயம், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவித்ததாக ராயிட்டர்ஸ் செய்தி முகமை கூறியுள்ளது.

இதற்கிடையே காஸாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. தற்போது வரை காஸாவில் 56,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yppe3p2w4o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு காசாவின் பிரபலமான சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் தாக்குதல் - 30க்கும் அதிகமானவர்கள் பலி

01 JUL, 2025 | 11:51 AM

image

மேற்குகாசாவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளுர் மக்கள் அடிக்கடி செல்லும் பிரபல கடற்கரை சிற்றூண்டிச்சாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடற்கரையோரத்தில் கூடாரங்களை கொண்ட அல்பக்சா சிற்றூண்டிச்சாலையில் இருந்து மீட்புக்குழுவினர் 20க்கும் அதிகமான உடல்களை மீட்டுள்ளதுடன் காயமடைந்த பலரை மருத்துவமனைகளிற்கு கொண்டு சென்றுள்ளனர் என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

குண்டுதாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாரிய குழிக்குள் மீட்பு குழுவினர் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.

நான் இணையத்தை பயன்படுத்துவதற்காக அங்கு சென்றுகொண்டிருந்தேன் நான் சில மீற்றர் தொலைவில் இருந்தவேளை பாரிய சத்தம் கேட்டது என உள்ளுர் ஊடகநிறுவனத்தின் கமரா பணியாளர் தெரிவித்துள்ளார்.

நான் உடனடியாக அங்கு ஓடினேன் எனது சகாக்களும் அங்கு இருந்தனர்- நான் நாளாந்தம் சந்திப்பவர்கள் - அங்கு நான் கண்ட காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக காணப்பட்டன- எங்கும் உடல்கள்இ குருதி . அலறல்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் போர்விமானத்திலிருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/218910

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மற்றுமொரு மருத்துவரை இழந்தது : இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் மருத்துவர் மர்வான் சுல்தானும் குடும்பதினரும் பலி 

Published By: RAJEEBAN

03 JUL, 2025 | 08:48 AM

image

காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் காசா இந்தோனேசிய மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மர்வான் சுல்தானும் அவரது குடும்பத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா நகரில் உள்ள தொடர்மாடிதாக்கபபட்டவேளை மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

389902.jpg

அவர்களது உறவினரான அஹமட் சுல்தான் என்பவர் உடல்களை அடையாளம் காண்பித்துள்ளதுடன் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

மருத்துவர் மர்வான் அல் சுல்தானின் உடல் அல்ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவரின் முகம் அடையாளம் காணும் நிலையில் இருக்கவில்லை என மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அபுசல்மியா தெரிவித்துள்ளார்.

காசா நகரில் ஹமாசின் முக்கிய இலக்கொன்றை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/219058

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் வீதியோர குண்டுவெடித்து ஐந்து இஸ்ரேலிய படையினர் பலி

08 JUL, 2025 | 03:16 PM

image

காசாவில் வீதியோர குண்டுவெடிப்பில் ஐந்து இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவின் வடபகுதியில் பெய்ட்ஹனோன் பகுதியில் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இரண்டு குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டதால் சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாங்கள் எங்கள் படையினரை கொலை செய்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக்கூடாது, அவர்களை துண்டுதுண்டாக்கவேண்டும் அல்லது பட்டினி போடவேண்டும் அவர்களிற்கு ஒக்சிசன் வழங்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க கூடாது என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/219489

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் மேலும் மூன்று இஸ்ரேலிய படையினர் பலி

15 JUL, 2025 | 11:27 AM

image

காசாவில் இஸ்ரேலிய படையினரின் டாங்கி குண்டுவெடிப்பொன்றில் சிக்கியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

19 முதல் 20 வயதுடையவர்களே கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசாவின் வடபகுதி நகரனா ஜபாலியாவில் குண்டுவெடிப்பில் சிக்கிய டாங்கியில் இருந்த படையினரே கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் தாக்குதல் காரணமாகவே டாங்கி வெடித்து சிதறியது என முதலில் கருதியதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் எனினும் டாங்கியின் சுழலும் பீரங்கிமேடைக்குள் தவறுதலாக எறிகணை வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளது. 401வது கவசவாகனப்பிரிவை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/220035

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள டெய்ர் அல் பலா - தரை வழிதாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்

Published By: RAJEEBAN

21 JUL, 2025 | 04:12 PM

image

தென்காசாவிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள மத்திய காசாவில் உள்ள டெய்ர் அல் பலா நகரத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் தரை மற்றும் வான்தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் இந்த நகரத்திலேயே உள்ளனர் என ஊகம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கடும் ஆட்டிலறி மற்றும் வான்தாக்குதலின் மத்தியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்கள் இந்த நகரத்தை நோக்கி செல்வதாக உள்ளுர் ஊடகவியலாளர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

டெய்ர் அல் பலா நகரின் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்டுள்ள முதலாவது தரை நடவடிக்கை இது.

கடந்த 21 மாதங்களாக இந்த நகரத்தை இலக்குவைத்து இஸ்ரேல் தரைநடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதமை குறிப்பிடத்தக்கது.

இந்த நகரத்தில் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். மேலும் காசாவின் ஏனைய பகுதிகளை விட இந்த நகரத்தில் கட்டிடங்களிற்கு குறைவான சேதங்களே ஏற்பட்டுள்ளன..

இந்த நகரில் மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஒருவருடத்திற்கு முன்னர் காசா பள்ளத்தாக்கின் தென்பகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்த பின்னர் ஐநாவினது அலுவலங்களும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளின் அலுவலகங்களும் டெய்ர் அல் பலா நகரத்திலேயே இயங்குகின்றன.

https://www.virakesari.lk/article/220550

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா பொதுக்கூட்டத்தில் பலஸ்தீனைத் தனியரசாக பிரான்ஸ் அங்கீகரிப்பதாக அறிவிக்கப் போவதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் காயமடைந்த 2000 பாலஸ்தீனியர்களிற்கு தனித்தீவில் மருத்துவசிகிச்சை - இந்தோனேசியா திட்டம்

07 AUG, 2025 | 05:07 PM

image

காசாவில் உள்ள 2000 நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களிற்கு தனித்தீவொன்றில் வைத்து சிகிச்சையளிக்கவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனேசியா மக்கள் வசிக்காத கலாங் தீவில் உள்ள மருத்துநிலையமொன்றை பாலஸ்தீனியர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக திருத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

யுத்தத்தினால் காயமடைந்த இடிபாடுகளின் கீழ் சிக்குண்டு காயமடைந்த 2000 பாலஸ்தீனியர்களிற்கு இந்தோனேசியா மருத்துவ சிகிச்சையை வழங்கும் என அந்த நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில்லை என தெரிவித்துள்ள அவர் மருத்துவசிகிச்சை முடிந்து காயங்கள் ஆறியதும் அவர்கள் மீண்டும் காசா திரும்புவார்கள் என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த திட்டம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.

https://www.virakesari.lk/article/222072

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவின் கான் யூனிஸில் மனிதாபிமான மண்டலத்தை நிறுவ தீர்மானம்!

Published By: Digital Desk 1

06 Sep, 2025 | 12:28 PM

image

காசாவின் கான் யூனிஸின் அல் - மவாசி பகுதியில் ஒரு மனிதாபிமான மண்டலத்தை நிறுவுவதற்கு தீர்மானித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை (இன்று) அதிகாலை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கள வைத்தியசாலைகள், நீர் குழாய்கள், உப்புநீக்கும் வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற உட்கட்டமைப்புகள் இந்தப் பகுதியில் இருக்கும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. 

காசா குடியிருப்பாளர்கள் அந்தப் பகுதிக்கு வெளியேறுமாறு இராணுவத்தின் செய்தியாசிரியர் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/224359

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் தாக்குதல் தீவிரம்: எக்ஸ் தளத்தில் காணொளியை வெளியிட்ட இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்!

Published By: Digital Desk 1

07 Sep, 2025 | 03:28 PM

image

காசா நகரத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் காசா நகரில் உள்ள  உயரமான கட்டிடத்தை அழித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

"நாங்கள் தொடர்கிறோம்" என்ற தலைப்பில் கட்டிடம் இடிந்து விழும் வீடியோவை இஸ்ரேலின்  பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

காசாவில், நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், சுசி கோபுரத்தை ஹமாஸ் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது.

அதேநேரம், இந்தக் கூற்றை போராளிக் குழு மறுத்துள்ளது.

இதன்போது, உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

https://www.virakesari.lk/article/224417

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 53 பேர் உயிரிழப்பு: பல கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன!

Published By: Digital Desk 1

15 Sep, 2025 | 09:01 AM

image

காசா மீது நேற்றையதினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், பல கட்டடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. 

காசா நகரத்தின் மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சு தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதலிக்போது, மூன்று கோபுரங்கள் உட்பட 16 கட்டிடங்கள் தரைமட்டமாக்கியுள்ளன.

மேலும், இந்த தாக்குதல்களில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு நகர்ப்புற மையத்தைக் கைப்பற்றி அதன் மக்களை இடம்பெயரச் செய்வதற்கான தாக்குதலை இஸ்ரேலியப் படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசா பகுதியில் 53 பாலஸ்தீனியர்களைக் கொல்லப்பட்டுள்ளனர்

இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் பசியிலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா நகரில், இஸ்ரேலிய இராணுவம் தெற்கு ரெமால் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-கவ்தர் கோபுரத்தை இலக்குவைத்து, இரண்டு மணி நேரம்  ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இடைவிடாத குண்டுவீச்சு தாக்குதல்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/225105

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் கடும் தாக்குதலால் காசா மக்கள் வெளியேற வேண்டிய நிலை!

Published By: Digital Desk 1

16 Sep, 2025 | 09:08 AM

image

இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காசா நகர மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

காசாவில் உள்ள மிக உயரமான குடியிருப்பு கட்டிடமான அல்-காஃப்ரி கட்டிடத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்துள்ளது.

காசா நகரத்தின் மீது நேற்று மாலை பாரிய தாக்குதல்களை நடத்தியதால், இலட்சக்கணக்கான குடியிருப்பாளர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விதிவிலக்காக தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் நகரின் வடக்கு மற்றும் மேற்கில் குவிந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் நகரத்தைக் கைப்பற்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் அண்மையில் சுமார் 50 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜெய்டவுனில், ஒகஸ்ட் தொடக்கத்தில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் அதன் 23 மாத இனப்படுகொலைப் போரின் போது குடியிருப்புப் பகுதிகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மீண்டும் தாக்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காசா நகரில் ஆறு வயது இரட்டையர்கள் உட்பட 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/225195

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்: "காசா பற்றி எரிகிறது" என்கிறார் இஸ்ரேல் அமைச்சர்

17 Sep, 2025 | 09:31 AM

image

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "காசா பற்றி எரிகிறது" என்று தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் தெரியவந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர்16) முதல் காசா முழுவதும் இஸ்ரேல் இராணுவம் தீவிர வான்வழி மற்றும் பீரங்கிகள் மூலம் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தாக்குதல்களில் காசா நகரில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், "பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு தாக்குகிறது. பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் ஹமாஸைத் தோற்கடிப்பதற்கும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் துணிச்சலுடன் போராடுகிறார்கள்" என்று தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதால், காசாவில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில், பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு முன்பாகவே, காசா நகரை முழுமையாகக் கைப்பற்றுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களைத் தனது தற்காப்பு நடவடிக்கையாக நியாயப்படுத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன், சர்வதேச அளவில் பதற்றத்தையும் அதிகரித்துள்ளன.

https://www.virakesari.lk/article/225281

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா எல்லையை அடைந்துள்ள மனிதாபிமான உதவிப் பொருட்கள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

எகிப்தின் ஊடாக தெற்கு காசாவின் ரஃபா எல்லையை கடக்கும் பகுதிக்கு இன்று காலை மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய லொறிகள் அடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வௌ்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையில் இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், நாளை (13) காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்நிலையில் மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய பெரும்பாலான லொறிகள் அந்த எல்லைப் பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் சில லொறிகள் மாத்திரமே காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய லொறிகள் எல்லையிலேயே தரித்து நிற்பதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசியுடன் இணைந்து திங்கட்கிழமை எகிப்தில் நடைபெறும் சர்வதேச அமைதி உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

"காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை முயற்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பனவற்றுக்கான புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி பேச்சாளர் தெரிவித்தார்.

அதேநேரம் நாளை நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmgnev0ua00yro29nckb3eii4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா போர் நிறுத்தம் : 7 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் - இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி!

Published By: Digital Desk 3

13 Oct, 2025 | 12:29 PM

image

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 

இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பிடம் சுமார் 20 பிணைக் கைதிகள் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில், 7 பிணைக் கைதிகளை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை (13) விடுவித்துள்ளது.

இந்தப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர்.

இந்தக் பிணைக்கைதிகள் பரிமாற்ற நிகழ்வு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

554213500_1993388597895894_5252816326803

553741922_1107271734902595_8999232215305

https://www.virakesari.lk/article/227597

  • கருத்துக்கள உறவுகள்

568957348_1299366342238109_7657244152277

காசாவில் மீண்டும் தாக்குதல்களை நடத்த தொடங்கியது இஸ்ரேல்!

Sun News Tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.