Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஅமைப்பாளர் இமாம்VS நடிகர் சிவகார்த்திகேயன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இமாம் எனக்கு பிடித்த இசையமைப்பாளரில் ஒருவர்.

அதே மாதிரி சிவகார்த்திகேயனும் தந்தையை இழந்து படிப்படியாக கண்முன்னே முன்னேறிய ஒருவர்.

இப்போ இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனும் போது ஏமாற்றமாக இருக்கிறது.

3-4 வருடங்களாக பிரச்சனை இருக்கும் போல.இப்ப தான் வெளிவரத் தொடங்கியுள்ளது.

ஒருபக்க தகவல் தான் கசிந்திருக்கிறது.

பொறுத்திருப்போம்.

Edited by ஈழப்பிரியன்

  • ஈழப்பிரியன் changed the title to இசைஅமைப்பாளர் இமாம்VS நடிகர் சிவகார்த்திகேயன்.
  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த செய்தி பார்த்தேன். இன்றுவரை இமாம் அவர்களின் இசை மட்டுமே பரீட்சயம். அதுபோலவே சிவகார்த்திகேயனின் நடிப்பு, நகைச்சுவை. 

அவரவர் வாழ்வில் ஆயிரம் பிரச்சனைகள். அதுவும் பிரபலம் என்றால் சொல்லி வேலை இல்லை. 

எனவே தொடர்ந்து இசையை, நடிப்பை கேட்டு, பார்த்து ரசிப்போம். அவர்களுக்கு தங்கள் பிரச்சனைகளை பார்க்க வயசு காணும் தானே. நமக்கேன் இந்த ஆராய்ச்சி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயம் said:

சினிமாதுறைக்கு கொண்டு வந்தவருக்கே துரோகம் செய்வதென்பது வருத்தமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சினிமா உலகில், இன்று பெரும் புயலை கிளப்பி இருக்கும் ஒரு விசயம், இசையமைப்பாளார் இமான் அண்மையில் ஒரு பேட்டியில், தனக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றினை நடிகர் சிவகார்த்திகேயன் செய்துவிட்டார் என்று சொல்லி இருந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த விடயத்தின் விளைவாக, இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து, வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து இருந்தார்.

இங்கே என்ன நடந்திருக்கிறது என்று புரியக் கூடியதாக உள்ளது.

ஒரு தூய கிறஸ்தவரான இமான் (inman), சினிமாவில் பெரிய வாய்ப்பில்லாமல் இருந்த சிவகார்த்திகேயனை, தனது சிபாரிசு மூலமும், சிறப்பான இசை, மட்டும் பாடல்களினால் மிக உயர்ந்த இடத்தினை அடைய உதவினார்.

இது, இவர்களை மிக சிறந்த நண்பர்களாகவும், குடும்ப அளவில் உறவினை உருவாக வழி சமைத்தது. இறுதியில், ஒரு மன்னிக்க முடியாத துரோகத்தினை செய்யவும் வைத்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு, பல பெண் ரசிகர்கள், குறிப்பாக சிறுவர்கள் கூட உள்ளனர். இந்த ரசிகர்களில் பலர், இமானின் குற்றசாட்டினை ஏற்றுக் கொள்ளவோ, ஜீரணிக்கவோ முடியாது, இமான் எரிச்சலில் இப்படி சொல்கிறார். சிவகார்த்திகேயனின் எதிரியான தனுசின் தூண்டுதலில் இப்படி செய்கிறார் என்று சொன்னாலும், உண்மை முகத்தில் அடித்து போல அல்லவா நிக்கிறது.

மனைவியை பற்றி நண்பனிடம் சொல்லாதே. நண்பன் குறித்து மனைவியிடம் சொல்லாதே என்பது, இமானை பொறுத்த வரை, காலம் கடந்த ஒன்று போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் மடக்கி ( அறிவியல் விடயங்கள் அந்த துறையில் தேர்ந்தவர்கள் கதைக்கும்போது கூட ) கவுண்டர் காமடி என்னும் பெயரில் ஜோக் ஆக்கும் ஆணிடமோ பெண்ணிடமோ எதிர்ப்பாலினர் அதிகம் ஈர்க்கப்படுகின்ரனர்.. இது ஒரு உளவியல்.. உதாரணம் முகநூலில் மீம்ஸ்களுக்கு கிடைக்கும் றீச் அறிவு பூர்வமான கட்டுரைகளுக்கு கருத்துகளுக்கு கிடைப்பதில்லை..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Toxic mediaவினால் அதிகம் பாதிக்கப்படப் போவது சிவகார்த்திகேயன்தான். 

சிவகார்த்திகேயன் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இந்தத் துறையில் முன்னேறிய ஒருவர். இவரது வருகை பல வாரிசு நட்சத்திரங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்திருக்காது. அதன் விளைவாகவே இதனை நான் பார்க்கிறேன். 

கொஞ்ச காலத்திற்கு முன் இந்திசினிமாவைச் சேர்ந்த சுஷாந் சிங் ராஜ்புத் கூட தற்கொலை செய்து கொண்டார், அதற்கான காரணம் கூட இந்தி சினிமாவை ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துவதும் அந்த பிரிவினருக்குப் பிடிக்காத கலைஞர்களுக்கு வரும் தடங்களல்கள், தோல்விகளால் பலர் கஷ்டப்படுவதும் பேசுபொருளாக இருந்தது. அதனைப் போலவே இதுவும் இருக்க வாய்ப்புண்டு. 

இமான் கூட உண்மைதான் கூறுகிறார் என எப்படி நம்ப முடியும்?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, P.S.பிரபா said:

இமான் கூட உண்மைதான் கூறுகிறார் என எப்படி நம்ப முடியும்?.

தங்கச்சி

இது தான் எனக்கும் புரியவில்லை.

மூன்று வருடங்களாக ஏன் காத்திருந்தார்?

இந்த இடைப்பட்ட காலத்திலும் இருவரும் ஒன்றாக இருந்துள்ளார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:

57 minutes ago, ஈழப்பிரியன் said:

தங்கச்சி

இது தான் எனக்கும் புரியவில்லை.

மூன்று வருடங்களாக ஏன் காத்திருந்தார்?

இந்த இடைப்பட்ட காலத்திலும் இருவரும் ஒன்றாக இருந்துள்ளார்களே?

நல்ல கேள்வி. பிரபா, சிவகார்த்திகேயன் விசிறி அல்ல என்று நம்புவோம். இங்கே முக்கியமான விடயம், ஆங்கிலத்தில் சொல்வது போல the proof is in the pudding.

இமான், இழந்தது, மனைவியை மட்டுமல்ல, இரண்டு குழந்தைகளின் நெருக்கத்தினை. அந்த குழந்தைகளுக்கு, தந்தையின் அரவணைப்பு இல்லை.

இவர் மீதும் தவறு, இசை, இசை என்று இருந்து, உடம்பும் பெருத்து, மனைவியினை கவனிக்காமல், நீ, இரவு பார்ட்டிகளுக்கு போய் சந்தோசமா இரு, நான் பிசி என்று அனுப்பி இருக்கிறார். அங்கே, மதுவை அருந்திய நிலையில்.... advantage எடுத்திருக்கிறார்கள். 

சிவகார்த்திகேயன் involve பண்ணி இருந்தாரோ, அல்லது தடுத்திருக்க வேண்டிய நிலையில் இருந்து, அவ்வாறு செய்யாமல் இருந்தாரோ தெரியவில்லை. அது அவர் சொன்னால் தான் தெரியும்.

ஆக, இமான் சொல்லும், துரோகத்தின் அர்த்தம் என்ன என்று, சிவகார்த்திகேயன் வாயை திறந்தால் அன்றி, அனுமானமாகவே போகலாம்.

உடல் மெலிந்து, மிக கவலையில் இருந்த இமான், அமேலி என்னும் இன்னுமொரு விவாகரத்து பெண் ஆதரவால், மீண்டு, அவரையே கலியாணம் செய்து, பிள்ளையும் பெற்று மீண்டு இருக்கிறார் போலுள்ளது.

ஆனால் காயங்கள் மாறாதே.

இங்கே பாடம், என்னதான் வேலை பிசியாக இருந்தாலும் குடும்பத்தை கவனியுங்கள். எந்த புற்றில், என்ன பாம்பு இருக்குமோ தெரியாது. நட்பை தூரத்தில் வைத்திருங்கள்.

வெள்ளையர்கள் சொல்வார்கள்: மூன்று விடயத்தில் கவனமெடு என்று: வேலை, வீட்டின் சாவி, பார்ட்னர் (கணவண் அல்லது மணைவி). இழந்தால் துன்பம்!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, P.S.பிரபா said:

Toxic mediaவினால் அதிகம் பாதிக்கப்படப் போவது சிவகார்த்திகேயன்தான். 

சிவகார்த்திகேயன் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் இந்தத் துறையில் முன்னேறிய ஒருவர். இவரது வருகை பல வாரிசு நட்சத்திரங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்திருக்காது. அதன் விளைவாகவே இதனை நான் பார்க்கிறேன். 

கொஞ்ச காலத்திற்கு முன் இந்திசினிமாவைச் சேர்ந்த சுஷாந் சிங் ராஜ்புத் கூட தற்கொலை செய்து கொண்டார், அதற்கான காரணம் கூட இந்தி சினிமாவை ஒரு பிரிவினரே ஆதிக்கம் செலுத்துவதும் அந்த பிரிவினருக்குப் பிடிக்காத கலைஞர்களுக்கு வரும் தடங்களல்கள், தோல்விகளால் பலர் கஷ்டப்படுவதும் பேசுபொருளாக இருந்தது. அதனைப் போலவே இதுவும் இருக்க வாய்ப்புண்டு. 

இமான் கூட உண்மைதான் கூறுகிறார் என எப்படி நம்ப முடியும்?.

1 hour ago, ஈழப்பிரியன் said:

தங்கச்சி

இது தான் எனக்கும் புரியவில்லை.

மூன்று வருடங்களாக ஏன் காத்திருந்தார்?

இந்த இடைப்பட்ட காலத்திலும் இருவரும் ஒன்றாக இருந்துள்ளார்களே?

நீங்கள் இருவரும் நாதர்ஸ் இணைத்த கடைசி வீடியோவைப் பார்க்கவில்லை போலுள்ளது. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

நீங்கள் இருவரும் நாதர்ஸ் இணைத்த கடைசி வீடியோவைப் பார்க்கவில்லை போலுள்ளது. 😁

இமான் ஒரேஒரு ஆளிடம் தான் இது பற்றி பேசினார்.

பின்னர் ஆயிரம் காணொளிகள் வந்துவிட்டன.அதனால் மற்றவைகளை கவனிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இங்கே பாடம், என்னதான் வேலை பிசியாக இருந்தாலும் குடும்பத்தை கவனியுங்கள். எந்த புற்றில், என்ன பாம்பு இருக்குமோ தெரியாது. நட்பை தூரத்தில் வைத்திருங்கள்.

வெள்ளையர்கள் சொல்வார்கள்: மூன்று விடயத்தில் கவனமெடு என்று: வேலை, வீட்டின் சாவி, பார்ட்னர் (கணவண் அல்லது மணைவி). இழந்தால் துன்பம்!!

இது நாம் மிருகங்களை விட கேவலமானவர்கள் என்பதை எனக்கு அடிக்கடி நினைவு படுத்தும் விடயமாக இருக்கிறது.  காமத்தை தீர்க்க எவ்வளவோ வசதிகள் இப்போதைய உலகில் இருந்தும் 
உறவுமுறை தெரியாமல் அலைகிறோம் என்றால் மனிதர்களின் சிந்தனை மூளையின் செயல்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை. 

சினிமா தொலைக்காட்ச்சி போன்றவைகள் நாங்கள் அறியாமலே எங்களை மூளை சலவை செய்து 
உலகில் இந்த வாழ்வில் பார்க்க எவ்வளவோ இருக்க பெண்களையே காட்டி காட்டி ஒரு காம இயந்திரம் ஆக்குகிறார்களோ என்று நான் சிலவேளைகளில் எண்ணுவதுண்டு. 

மனிதன் என்ற இந்த கொடூர மிருகம் உலகில் தோன்றாமலே போயிருக்கலாம் 
பூமியாவது இயற்கையாக இருந்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இமான் ஒரேஒரு ஆளிடம் தான் இது பற்றி பேசினார்.

பின்னர் ஆயிரம் காணொளிகள் வந்துவிட்டன.அதனால் மற்றவைகளை கவனிக்கவில்லை.

அது சரி தலைப்பில் இமாம் என்று போட்டிருக்கிறீர்கள்.

அண்மையில் அவர் கிறிஸ்தவர் என்று தெரியும் வரை, இஸ்லாமியர் என்றே தவறாக நிணைத்துக் கொண்டிருந்தேன். 😎🤣😂

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.