Jump to content

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்.

ஆசியாவில் சீனா தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகவே இலங்கையில், ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டு இருப்பதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இன் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்; கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் இந்தியா தமிழர்களை எதிரியாகவும் சிங்களவர்களை நண்பனாகவும் கொண்டு செயற்படுவது போல இலங்கை தமிழர்களையும் இந்தியாவையும் எதிரியாகவும் சீனாவை நண்பனாகவும் கொண்டு செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே சீனா செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் செயற்பாடுகளை இந்தியா தெளிவாக புரிந்துக் கொள்ளாவிடின் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும் என்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1356129

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கும் இந்தியாவிற்கு இடையில் விரிசலை ஏற்படுத்துவதே சீனாவின் நோக்கம்.

இவருக்கு ஒரு இழவு அரசியலும் விளங்காம இந்தியா எண்டு கொண்டு நிக்கிறார்.

சீனா, முழு சிங்கள எம்பிமாரையும் காசை அடிச்சு வாங்கிப் போட்டார்கள். மாலைதீவிலும் இதுதான் நிலை.

இவரும் சீனா தான் எல்லாம் என்றால், வடிவேலு பேக்கரி டீலிங் மாதிரி காசு பார்க்கலாம். 

சும்மா, தனக்கே உதவாத இந்தியா என்று கொண்டு நிண்டால், வேலைக்காவாது கண்டியளே... 

இந்தியா, தானும் தின்னாது, தள்ளியும் இராது, எம்மையும் தின்ன விடாது எண்டதை 80 களில் இருந்து பார்த்துவருகிறோம். இதுக்கு பிறகும், அதை பத்தி கதைப்பதே நேரவிரயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இவர்களுக்கு... இந்தியா காசு கொடுத்திருக்கலாம் என்பது எனது ஊகம்.
ஏற்கெனவே.. சிலருக்கு, 2009´ம் ஆண்டளவில்  இந்தியாவில் பங்களாக்கள் 
கொடுத்து இருந்ததாக ஒரு கதை அப்போது வெளிவந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

இவர்களுக்கு... இந்தியா காசு கொடுத்திருக்கலாம் என்பது எனது ஊகம்.
ஏற்கெனவே.. சிலருக்கு, 2009´ம் ஆண்டளவில்  இந்தியாவில் பங்களாக்கள் 
கொடுத்து இருந்ததாக ஒரு கதை அப்போது வெளிவந்தது.

என்ன பிச்சைக்கார காசு கொடுத்தியிருப்பினம்...

சீனா மாதிரி டொலரில அள்ளி எறிந்திருப்பினமே?

சீனா எண்டோன்ன, எள் எண்டால் எண்ணெய் மாதிரி உருகி நிக்கினமே, மகிந்தா முதல், ரணில் வரை. ரணில் போனகிழமை தான் சீனா போய் வந்தார். அந்த துணிவிலை தன உங்கண்ட ஊர்ல, டீவில பேசினாரே பார்க்கவில்லையா?

இவையள் மோடிக்கு கடிதம் எழுதவே யோசிக்கினம். சந்திக்க முடியாதே.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

சீனத் தூதுவர்... யாழ்ப்பாணம் வந்தால், 
இவை எல்லாரும் ஓடிப் போய் பங்கருக்குள்ளை ஒழிக்கினம். 
இவையை  தெரிவு செய்து போட்டு, நாங்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
அநியாயத்துக்கு... பிரஷரை ஏத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த முறை வோட்டு கேட்டு வரட்டும், அப்ப இருக்கு கச்சேரி. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

சீனத் தூதுவர்... யாழ்ப்பாணம் வந்தால், 
இவை எல்லாரும் ஓடிப் போய் பங்கருக்குள்ளை ஒழிக்கினம். 
இவையை  தெரிவு செய்து போட்டு, நாங்கள் படுகிற பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
அநியாயத்துக்கு... பிரஷரை ஏத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அடுத்த முறை வோட்டு கேட்டு வரட்டும், அப்ப இருக்கு கச்சேரி. 

நம்ம, சைவ சமய கதைகளில் ஒன்று.

ஒருவர், காசு படைத்தவர். எச்சில் கையால் காகத்தினைக்கூட துரத்த மாட்டார்.

அவருக்கு ஏத்த மணைவி. வெள்ளிக்கிழமை, நல்ல அறுசுவை சமையல், சாப்பிட வீடு வருகிறார். கணவர்.

அந்த நேரம் பார்த்து சிவனடியார் ஒருவரும் வருகிறார் பசியில். மூக்கில் அடித்த சமையல் வாசனையை பிடித்து, வந்து நிக்கிறார் சாப்பாடு கேட்டு.

கணவன், மனைவிக்கோ கொடுக்க விரும்பவில்லை. அடியேய், ஏண்டி சமைக்கவில்லை. பாரு, அடியார் வந்திருக்கிறார். கொடுக்க முடியவில்லையே என்று பெரிய தடியை எடுத்து வந்து அடிக்கிறார்.

மாணவியும், அழுது, குய்யோ, முறையோ என்று அழுகிறார்.

சிறிதுநேரத்தில், வெளியே வந்து பார்த்தால், அடியாரை காணோம்.

உள்ளே போய், போடு இலையை என்று அமர்கிறார்.

ஓயாமல், நானும், அடித்தேனே என்கிறார், சிரித்தபடி....
ஓயாமல் நானும் அழுதேனே என்று மணைவியும் சொல்லி சிரிக்கிறார்.
ஓடாமல் நானும் இருந்தேனே அய்யா என்று, உள்ளே வந்து பக்கத்தில் அமர்கிறார் சிவனடியார்.

வேறென்ன, சோறு போட வேண்டிய நிலைமை தான்.

அந்த சிவனடியார் தான், சீனா. கணவன், மனைவி தான் சிங்களவர்கள், அவர்களும், ஆளும், எதிர்க்கட்சிகளும், அதாவது இந்தியாவுக்கு சீனர்கள் மேல் கஞ்சத்தனம் காட்டுவது போல நடிப்பவர்கள்..

இதில இந்தியா எங்க எண்டு கேட்க்கிறேல்ல.
 
Edited by Nathamuni
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த விதமான கதைகளை / உவமைகளை எல்லா விடயங்களிலும் பரவலாகத் தூவிவிடுவதுதானே...ஏன் கஞ்சத்தனம?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஸா பிரச்சனையில்.. ஹமாஸ் ரஷ்சிய உதவியை நாடி இருக்கிறது. அரபு நாடுகள் இயல்பாக பலஸ்தீன மக்களுக்கு உதவி செய்கின்றனர். ஆனால் எகிப்த்.. ஜோடான் போன்ற அயல்நாடுகள் மெளனம் காக்கின்றன.

நாம் எனியும் ஹிந்தியாவின் வாயை பார்த்துக் கொண்டிருந்தால்.. மீண்டும் ஹிந்தியாவே கதி என்று கிடந்தோமானால்.. எமக்கு விடிவே இல்லை.

நாமும்.. எனி சீனாவை அணுக வேண்டும். சிங்களத்து நிகராக சீனாவோடு ராஜீக உறவுகளை வளர்க்க வேண்டும். இதனை வைச்சு ஹிந்தியாவை நம் சொல்லைக் கேட்க வற்புறுத்தலாம். ஹிந்தியா எம்மை தொடர்ந்து ஏமாற்றுமானால்.. சீனாவை நாம் அதிகம் சாருவோம் என்ற பயம் ஹிந்தியாவுக்கு வராத பட்சத்தில்.. ஹிந்தியா நம்மை தொடர்ந்து துரும்புச் சீட்டாகப் பயன்படுத்துமே தவிர ஹிந்தியாவால் நமக்கு எந்த விமோசனமும் வராது.

சீன அச்சுறுத்தல்.. ஹிந்தியாவின் வடக்கு.. வடகிழக்கு.. வடமேற்கு போல்.. தெற்கிலும் வந்தால் தான் சீனாவை விட இராணுவ பலம் குன்றிய ஹிந்தியாவுக்கு.. தமிழர்களின் அரவணைப்பின் அவசியம் புரியவும் அதனை நோக்கி தமிழர்களை திருப்திப்படுத்தவும் வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை அமெரிக்க.. மேற்குலக ஜாம்பவான்களுக்கும் அவசியம் ஏற்படும்.

ஆகவே தமிழர்கள் சீனச் சார்பு அணுகுமுறைகளையும்.. கையில் எடுத்து.. பூகோள அரசியல் இராணுவ பொருண்மிய மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து காய் நகர்த்தினால் அன்றி.. ஹிந்தியாவை தொடர்ந்து நம்பிக் கொண்டிருந்தால்.. ஹிந்தியாவால்.. ஏமாற்றப்பட்டு நிர்கதியாவதை தவிர படுதோல்விகளை இனப்படுகொலைகளை சந்திப்பதை தவிர வேறு தீர்வு கிடைக்காது. 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.